Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுளை நம்ப முட்டாளே போதும்

Featured Replies

நண்பரே!

உடற் கூறுகளை வெட்டி ஆராய்ந்து கடவுளைத் தேடியவர் என்று உங்கள் அறிவைப் பற்றி விளம்பரம் செய்தவர் நீங்களல்லவா.

சிந்தனை, சுயம் என்பவை எங்கே நடைபெறுகின்றன என்னும் கருத்தாடலிலையே அவை மனித மூளையில் அன்றி வேறெங்கும் நடைபெறவில்லை என்பதை வலியுறுத்த மனித உடலில் இவறிற்கான வேறு உறுப்பு எதுவும் கிடையாது என்பதைச் சொல்லவே உடற்கூற்றை நான் பார்ததைச் சொன்னேன்.

நான் அதிகம் தெரிந்தவனென்று காட்டிக் கொள்வதாகக் கூறுகிறீர்களே. .

உங்கள் கருத்தாடல் நீங்கள் அதிகம் தெரிந்தவர் என்பதை எனக்குக் காட்டவில்லை, அதனை நீங்களே சொல்லிக் கொண்டீர்கள். நீங்கள் சொல்லும் சொற்களுக்கான அர்த்தம் விளங்காது/விளக்க முடீயாது அவற்றைப் பயன்படுதுபவர் என்பதே இது வரை நான் இக் கருதாடலில் கண்டு அறிந்தது.

இறைவனைப் பற்றித் தற்போதைக்கு எனக்கு உங்களைவிட அதிகம் தெரியும். அதைத்தான் அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். எனக்குத் தெரியுமென்று கூறாமல் உங்களுடன் ஒரு முட்டாளாக வாதிடவேண்டு மென்று எதிர்பார்க்கிறீர்களா. அப்படிச்சிலபேர் வருவார்கள் ஜமாய்க்கலாமென்றுதான் இந்த வாதத்ததைத் தொடங்கினீர்களோ. நீங்கள் முட்டாள்களைத்தானே இலகுவாகப் பேய்க்காட்டலாமென்று அப்படியொரு தலைப்பையிட்டு வாதிட அழைத்தீர்கள். இதோ நான் ஓர் முட்டாள் வந்திருக்கிறேன் எனக்கு அதிகம் தெரியுமென்று கூறிக்கொண்டு, மெய்ப் பொருளை முடிந்தால் காணப் பாருங்கள் என்றுதான் நான் வந்தேன்.

இது கருத்துக் களம்.இங்கே தர்க்கமும் உங்கள் கருதுக்களுக்கான விளக்கங்களும் ஆதாரங்களுமே பிரதானமானது.யாரின் கருத்து ஏற்புடையது என்பதை வாசிப்பவர்கள் நீங்கள் எழுதுபன்வற்றில் இருந்து தீர்மனிகிறார்கள். நீங்கள் உங்கள் கருதுக்களை மயக்கம் அற்று தெளிவாக அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் தர்க்க ரீதியாக முன் வைக்கும் போதே மர்றவர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும். நான் சொல்வதற்கு நானே சாட்சி என்னை நம்புங்கள் என்று சொல்லுவதற்க்கு யாகோப்பின் சாட்சிகள் முதல் சாய்பாப வரை பலர் இருக்கிறார்கள்.

மெய்ப்பொருளை அதாவது அறிவை வெறும் சிந்தனையால் காண முடியாது, கண்டதை மற்றவர்களுக்கும் நிரூபிக்க வேண்டும். அறிவு பற்றி இறைவனுக்கு எழுதிய விளக்கத்தைப் பார்க்கவும்.

கடவுளை யுருபி யிலோ கூகிளிலோ தேட முடியாது என்பதால் நான் உள்ளத்தால் உணர்வதை என் சுயசிந்தனையினூடு சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு எவ்வாறு விளக்கலாமென்று.

வெட்டி ஒட்டும் வேலைகளில் எனக்கு விருப்பமில்லை. இல்லாவிட்டால் நானும் எதையாவது வெட்டி ஒட்டியபடியே இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கலாம். இதனையெல்லாம் அறிவியல் ஆய்வுகளென்று எனக்கு ஏற்க முடியவில்லை. நாமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய விடயமல்லவா இது..

நிச்சயமாக நாமகத் தான் சிந்திக்க வேண்டும்.அதற்காகத் தான் உங்கள் கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சொல்பவற்றில் எனக்கு எழும் கேள்விகளைக் கேட்டிருக்கிறேன்.உங்கள் விளக்கத்தை எனது சிந்தையில் ஏற்று அதற்கான பதில்களைச் சொல்லி இருக்கிறேன்.இதில் எது அவர் அவருக்கு நியாயமாகப் படுகிறதோ அதனை அவர் அவரே ஏற்றுக் கொள்கிறார்கள்.அதே போல் தான் இணையத்தில் புத்தகங்களிலிருக்கும் தகவல்கள் எல்லாம்.இதில் எதை எதை ஏற்றுக் கொள்வது விடுவது என்பது அவர் அவரை பொறுத்தது.என்னைப் பொறுத்தவரை அறிவியல் அடிப்படையில் துறை சார் வல்லுனர்களின் ஆய்வுகளை ஒவ்வொரு விடயத்திலும் படிக்கிறேன்.ஏனெனில் எனது அனுபனவத்தில் அறிவியல் முறமை என்பதே இயற்கையை அறியப் பயன் படும் மிகக் கூரிய ஆயுதம்.அதிலும் ஒரு குறிப்பிட்ட துறையில் நெடும் காலமாகச் செயற்படுபவர்கள் அத் துறையில் அறிஞர்கள் என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்வர்கள் அத் துறையில் மற்றவரை விட அதிக அறிவை உடையவர்களாக இருப்பது இயல்பு.எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நான் நினைப்பதே சரி என்னும் மமதை என்னிடம் இல்லை.

என்னிடம் இருப்பது அறிவுத் தேடலே.அவ்வாறு நான் பெற்றவற்றை இங்கே உங்களிடம் பகிர்ந்த்து கொள்கிறேன். ஒரு குறிப்பிட்ட கருதுக்கான மூலத்தை அல்லது ஆதாரத்தை வெட்டி ஒட்டி கருத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் ஆதாரங்களை இடுவதில் எந்தப் பிழையும் இல்லை.அந்த மூல ஆதராம் அத் துறை சார் அறிஞ்ஞருடையதாக் இருக்கும் போது.இணையத்தில் இருக்கும் கண்ட கண்ட குப்பைகளை எல்லாம் ஆதாரம் என்று சொல்லமுடியாது.எந்த ஆதாரமும் அதன் மூலத்தின் நம்பகத் தன்மையிலையே தங்கி இருக்கிறது.

நீங்கள் நினைப்பதுபோல டார்வினின் பரிணாம வாதத்தை எதிர்க்கும் கூட்டததைச் சேர்ந்தலனல்ல நான். அதை முழுக்க முழுக்க ஆதரிப்பவன். கூர்ப்பை ஏற்றுக் கொண்டால் கடவுளை மறுத்தேயாக வேண்டுமென்னும் முட்டாள்தனமான வாதம் என்னிடமில்லை...

அப்படியாயின் வெற்றிவெல் இணைத்த வீடியோவை நீங்கள் பார்த்து விட்டு உங்கல் கருத்தை எழுதவில்லையா?அதில் டார்வினின் பரிணாமக் கொள்கையை மறுத்து அல்லவா முழுப் பிரச்சாரமும் இருந்தது?இதில் இருந்து உங்களைப் பற்றியும் உங்கள் கருதுக்கள் பற்றியும் நாங்கள் என்ன முடிவுக்கு வருவது?

அதேபோல பிரபஞ்சத் தோற்றத்தையும் இல்லாததிலிருந்து இருப்பு வந்ததையும் இருப்பிலிருந்து தன்னுணர்வுள்ள உயிர்கள் உருவாகியதையும் டார்வினின் கூர்ப்பையும் லாமாக்கின் அங்க விருத்திக் கொள்கையையும் மனித இனத்தின் தோற்றத்தையும் மனிதன் கடவுளைச் சிந்தித்துத் தெரிந்து கொண்டதையும். பின்னர் அவரை உள்ளத்தாலேயே உணரவேண்டுமென்று அறிந்துகொண்டதையும். கடவுள் காட்டப்படுபவரல்ல அவர் வெளிப்புடுத்தப்படுபவர் (றிவீல் அவுட்) என்பதையும் அறிவியல் ரீதியாக ஆய்ந்தறிந்து அவற்றை ஏற்றுக் கொண்டுதான் நான் கடவுளை நம்புகிறேனேயொழிய மற்றவர்களைப் போல் ஏதோ கொஞ்சம் தெரிந்தவுடன் ஆஹா கடவுளில்லை என்று கூப்பாடு போடவில்லை.

இதில் நீங்கள் அறிவியல் ரீதியாக ஆராய்ந்ததாகச் சொல்லி உள்ளீர்கள்.இந்தக் கருத்து முன்னர் நீங்கள் எழுதிய கடவுளை அறிவியலின் மூலம் காண முடியாது என்பதற்கு முற்றிலும் முரண்பாடானது என்பதை ஒரு பக்கத்தில் வைத்து விடுவோம்.இந்த உங்களின் அறிவியல் ரீதியான ஆராய்வின் விளக்கங்கலைத் தரும் படியே பல முறை கேட்டு விட்டேன்.உங்கள் சிந்தனையை நீங்கள் எவ்வாறு சரியென நிருபீக்கிறீர்கள் என்பதிலையே அது அறிவியலா கற்பனையா என்பதை நாங்கள் தீர்மானிக்க முடியும்.

கடவுளை நான் உணர்ந்திருக்கிறேன். என் உள்ளத்தில் அவரைக் கண்டிருக்கிறேன். நீங்கள் நினைப்பதுபோல் கற்பனையான தோற்றத்திலல்ல. அவரை நான் அன்பாய்ச் சாந்தியாய் அமைதியாய் நிம்மதியாய் நிர்க்குணனான அந்தப்ப பிரமத்தின் மேலெழும் (தோற்றங்கள் உருவங்களற்ற கடவுள்) இனிமை தரும் பக்தியாய்க் கண்டிருக்கிறேன். இதற்கு நீங்கள் எனக்குப் பைத்தியக்காரப் பட்டங்கொடுத்தால் அதைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் இறைவனிடம் பெறுகின்ற இந்த நிறைவைச் சாந்தியை உங்கள் கஞ்சாவோ அபினோ அல்லது ஓமோன்களோ அல்லது மூளையில் ஏற்படுத்தப்படும் மின்சாரத் தூண்டல்களோ ஏற்படுத்துமானால் ஆஹா இந்த உலகிற்கு உங்கள் சேவை மிகவும் தேவை.

நீங்கள் அனுபவித்த அமைதி அன்பு என்பன எனக்கு கடவுளை நினைக்காமலே வரும். நான் உறங்கும் போது ஒரு அமைதியான சூழலில் கற்பனை செய்யும் போது ஒரு பூங்காவில் நடந்து செல்லும் போது குழந்தைகளுடன் விளையாடும் போது கடற்கரை மணலில் நட்ந்து செல்லும் போது எனப் பல தருணங்களில் வரும்.இது முற்றிலும் எனது சிந்தனை/சூழல் சார்ந்த விடயம்.கடவுள் சார்ந்த விடயம் அல்ல.

நான் பெற்றதைப் பெறுவதை உங்களுக்குக் காட்டவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. காட்டவும் முடியாது உணர்த்தப்பட மட்டும்தான் முடியும். உணரத் தயாராயிருந்தால் மட்டுமே. இது விவாதத்திற்கான பொருளேயல்ல. ஏனென்றால் விவாதித்து அதில் பலன் கிடைக்கப் போவதில்லை. அவரவர் விரும்பி உணர முயலவேண்டிய விடயமிது. விருப்பமில்லாதவர் இதில் ஈடுபடமுடியாது. வேண்டுமானால் எதிர்த்துப் பேசத் தெரியாத அல்லது முடியாதவர்களிடம் அவர்களை முட்டாள்களாக்கி அற்ப சந்தோசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகத் தாம் ஏதோ பெரிய பகுத்தறிவாளர்களென்று காட்டி வாதிட்டு இன்புறலாம். மற்றும்படி இதனால் எந்தப் பயனும் யாருக்கும் வரப்போவதில்லை.

விவாதத்தால் என்ன பயன் என்பதை ஏற்கனவே விளக்கி விட்டேன்.ஒரு பயனும் அற்ற காரியத்தில் ஏன் இறங்கீனீர்கள் என்று விளங்கவில்லை.ஆனால் இந்த விவாததால் உங்கள் மனதிலே சில கேள்விகளை நான் எழுப்பி இருக்கிறேன் என்றே கருதுகிறேன். நாளடைவில் நீங்கள் கேள்வி கேட்க, சிந்திக்கத் தயாரானால் உங்கள் நம்பிக்கைகளை மீள் பரிசீலனை செய்வீர்களென்று நான் நம்புகிறேன்.

இறைவனை ஏற்பவன் அவனின் இருப்பை உணர்ந்து அறிந்து ஏற்றுக் கொள்கிறான். ஆனால் மறுப்பவனோ தான் எவ்வாறு படைக்கப்பட்டேன் தான் தங்கி நிற்கும் இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு உருவாயிற்று என்னும் எந்தவித காரண காரியத் தொடர்புகளையும் ஆராயாது அறியாது குருடடுத்தனமாக முட்டாள்த் தனமாக மறுக்கிறான்.

சும்மா எல்லோரையும் போல சமயத்தெய்வங்களை உபாசித்துக்கொண்டிருப்பவனென

  • Replies 177
  • Views 24.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா!

நீங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறீர்களா? என்னிடம் கேள்விகளையே கேட்டுக்கொண்டு எனது கருத்தில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறிக்கொண்டே எப்படி உங்களால் என்னைச் சிந்திக்க வைக்க முடியும். நான் உங்களைப் போன்றவர்களால் சிந்தனை தூண்டப்படுபவனல்ல. என்னைச் சிந்திக்த்தூண்ட நிறையப் பேர் இருக்கிறார்கள்.

நீங்கள் இங்கே உங்கள் கருத்தாடலுக்கு இலகுவாக முட்டாள்களைத்தானே அழைத்தீர்கள். சிந்திக்கத் தூண்டப்படக்கூடியவர்களையா அழைத்தீர்கள்.

எதையும் விளங்காதவர்போல நடித்து மற்றவரை முட்டாளாக்குவது இலகுவானது.

நான் உயிரைப்பற்றிக் கூறிய விளக்கத்திற்கு முதலில் நான் சொல்ல இருந்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்களென்று நன்றி கூறியவர் நீங்களே. அதை வாசித்துப்பாருங்கள். அதில் உயிர் உயிர்ப்பு, தன்னுணர்வு போன்ற சொற்களைப் பாவித்தே நான் விளக்கியிருக்கிறேன்.

எனக்கு விளங்காதது உங்கள் பிழையா என்பிழையா என்றுவேறு ஒரு தடவை கேட்டீர்கள். விளங்கவில்லை விளங்கவில்லை என்று நீங்கள் ஒரு தடவையென்ன ஆயிரம் தடவையும் கூறலாமல்லவா. உங்களுக்கு விளங்காததையே எனது பிழையாக்க முயற்சிக்கும் நீங்கள் உங்கள் முரண்பாடுகளை ஏற்கவா போகிறீர்கள். நண்பரே! விளங்கக்கூடியவருக்கே விளக்கலாம். விளங்கவில்லையென்றால் அது யாருடைய தவறென்பதை நடுநிலைமையுடைய மூன்றாம் நபரல்லவோ கண்டறியவேண்டும். உங்கள் விருப்பத்திற்கு எனது பிழையென்று கூறுவதே சரியான வாதமில்லையே. ஒரு குழந்தைக்கு எவ்வளவு தான் நுண்கணிதத்தை விளக்கினாலும் அதன் சிறிய மூளையால் அதைப்புரிந்து கொள்ள முடியாததைப்போல உள்ளம் என்ற ஒன்றை (அது மூளையிலிருந்தாலும் அது பற்றி இங்கே பிரச்சனையில்லை) உங்களுக்குத் தெரிந்த கணக்கிற்கும் விஞ்ஞான அறிவுக்கும் வெளியே வேறுபடுத்தி உணர முடியாத உங்களிடம் அதற்கு அப்பால் சென்று அறியுமாறு புரியவைக்கவே முடியாது. இங்கே நீங்கள் செய்வதெல்லாம் நடிப்புத்தான் என்பது வேறுவிடயம்.

இந்த உள்ளம் எத்தனை இடங்களில் தமிழர்களால் பாவிக்கப்படுகின்றது தெரியுமா? நீங்களோ புரியவேயில்லை என்கிறீர்கள். என்னால் புரியவைக்க முடியவில்லையென்று ஒருபக்கச் சார்பாக உங்கள் பாட்டில் என்னை முட்டாளாக்குகிறீர்கள்.

நண்பரே அது மூளையிலிருந்தாலும் வேறு எங்கிருந்தாலும் இருக்கட்டும். அப்படியொன்று இருக்கிறது. அதுதான் முக்கியம். அதிலே நான் என்னும் உணர்வு (சுயம்) ஒவ்வொருவருக்கும் இருக்கிறது அதுதான் முக்கியம். நீங்கள் அதனை மூளையின் அறிவுக்கான செயற்பாடுகளில் ஒன்றாக எப்படியாவது நிறுவிவிடவேண்டுமென்னும் ஆதங்கத்தில் என்னை முட்டாளாக்குவதிலேயே குறியாயிருக்கிறீர்கள். இதனை நீங்கள் செய்ய முடியாது நம்மிருவருக்கும் புறம்பேயுள்ள நடுநிலையாளர்களே செய்தல் வேண்டும்.

சரி உங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என்னாலும் விளங்கப்படுத்த முடியவில்லை. நீங்கள்தான் என்னைச் சிந்திக்கத் தூண்டுபவராயிற்றே இனி நான் கேள்வி கேட்கட்டுமா. எனக்குக் கேட்கத்தான் தெரியுமென்று திருவிளையாடலில் தருமி கூறியவாறு கூறாமல் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவீர்களா.

இந்தப் பிரபஞ்சம் இல்லாததிலிருந்து இருப்பாய் மாறியதே அதற்குக் காரணமென்ன? எப்படி வந்தது என்பது முக்கியமில்லை. அது எனக்கும் தெரியும். ஏன் வந்தது? என்பதுதான் என் கேள்வி.

உயிரினங்களிலே தானெனத் தன்னையுணரும் இயல்புள்ளதே அது உடலின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் கவலையில்லை. அது எப்படி உருவாயிற்று.

கடவுள் (தெய்வங்களையல்ல) இல்லையென்று கூறுவதற்கு நீங்கள் கூறும் அறிவியல் விளக்கமென்ன? தயவு செய்து வெட்டி ஒட்டாதீர்கள்.

இது மூன்றிற்கும் உங்களது பதிலை நான் ஆவலோடு எதிபார்க்கிறேன். இனிமேல தான்; நீங்கள் என்னைச் சிந்திக்க வைக்கவேண்டிய நேரம் வந்திருக்கிறது. நாளை வருகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

Be unbiased, humble and genuinely search, then the truth will unfold its secrets

or be prejudice, arrogant and get confused

வெற்றிவேல் இதைச் செப்பாமலே இருந்திருக்கலாம். :)

இந்தப் பிரபஞ்சம் இல்லாததிலிருந்து இருப்பாய் மாறியதே அதற்குக் காரணமென்ன? எப்படி வந்தது என்பது முக்கியமில்லை. அது எனக்கும் தெரியும். ஏன் வந்தது? என்பதுதான் என் கேள்வி.

இந்தப் பிரபஞ்சம் ஏன் வந்தது என்பதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

உயிரினங்களிலே தானெனத் தன்னையுணரும் இயல்புள்ளதே அது உடலின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் கவலையில்லை. அது எப்படி உருவாயிற்று. .

உயிரிகளின் மூளையும் நரம்புகளும் பரிணாம வளர்ச்சியால் மேம் பட்டது.தான் எனத் தன்னை அதன் அதன் சூழலில் இரிந்து பிரித்து உணருவது அந்தப் பரிணாம வளர்ச்சியால் ஏற்பட்டது.இது ஒவ்வொரு உயிரிக்கும் ஒவ்வொரு படிமுறையில் உருவானது.அதற்குக் காரணம் மூளையின் வளர்ச்சி தான்.முன்னர் சுட்டிக் காட்டிய படு ஒரு கலத்தை உடைய அமீபாவும் ,மனிதனுக்கும் இருக்கும் தன் உணர்வு என்பது வேறுபட்டது. நீங்கள் உயிரிகளின் பரிணாம வளர்ச்சியை ஏற்றுக் கொள்புவர் என முன்னர் எழுதி இருந்தீர்கள்.ஆகவே இது உங்களுக்கு விளங்கும் என்று நம்புகிறேன்.

தன்னுணர்வு என்பதற்கு நிகரான ஆங்கிலப் பதம் என்ன? எனக்கு தன்னுணர்வு என்பதைப் பற்றி மேலும் விளங்கிக் கொள்ள உதவியாக இருக்கும்.

கடவுள் (தெய்வங்களையல்ல) இல்லையென்று கூறுவதற்கு நீங்கள் கூறும் அறிவியல் விளக்கமென்ன? தயவு செய்து வெட்டி ஒட்டாதீர்கள்.

இது மூன்றிற்கும் உங்களது பதிலை நான் ஆவலோடு எதிபார்க்கிறேன். இனிமேல தான்; நீங்கள் என்னைச் சிந்திக்க வைக்கவேண்டிய நேரம் வந்திருக்கிறது. நாளை வருகிறேன்

கடவுள் இருக்கிறார் என்று எவரும் அறிவியல் ரீதியாக நீருபிக்க வில்லை என்பதால் கடவுள் இல்லை என்று நம்புகிறேன்.இல்லாத ஒன்றை , இல்லை என்று நிரூபிக்க வேறு எந்த முறமையும் கிடையாது.

Deleted due to the doubts on the orginality of the contents of the video

**** Vettrivel*****

Edited by vettri-vel

மனித அறிவென்பது எல்லைக்குட்பட்டது. ஏனைய விலங்கினங்களுக்கும் அவ்வாறுதான் பொருந்தும். பரத்தின் அறிவென்பது இயற்கை என்று கருதுவதற்கில்லை. இயற்கையின் இயக்கத்திற்கு உறுதுணையாகவிருக்கும் மூலத்தின் அறிவு. அந்த அறிவு எல்லைகளைக் கடந்தது.

"உரை அற்றது ஒன்றை உரை செய்யும் மூடர்கள்

கரை அற்றது ஒன்றை கரைகாணல் ஆகுமோ,

திரை அற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்கு

புரை அற்று இருந்தான் புரி சடையானே."

மூலப் பொருளை இவ்வாறு கூறுகின்றார் திருமூலர். இதன் கருத்துப் புரியுமென நினைக்கின்றேன். அதற்கு மூளை இருக்கின்றதா? இல்லையா? என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஏனென்றால் நமது அறிவு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று.

தாவரங்கள் ஓரறிவு உடையவையாம். அவற்றிற்கு மூளையுண்டா? அறிவற்ற செயல் என்பது மூளையின் பாற்படாததா? அதுவும் மூளையின் பாற்பட்டதுதான். அதைப் பிழையான செயல் என்றுதான் கூறுதல் பொருந்தும்.

மனிதன் அறிந்ததுதான் அறிவா? தெரிந்து கொள்ளுதலுக்கும் அறிவிற்குமிடையில் நாம் முரண்படுகின்றோம். மனித மூளை தளர்ச்சி, சோர்வு, என்பவைகளுக்காட்படுவது. பரத்தின் அறிவு அவ்வாறானதில்லை. அறியப்பட முடியாத ஒன்று இல்லையென்று ஆகிவிடாது. ஏற்கெனவேயிருக்கும் ஒரு விடயம் தெரிந்து கொள்ளப்பட்டபின், அது மனித அறிவாகிறது, என்பது சரி. தெரிந்து கொள்ளப்படாதது அறிவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இன்று எவ்வளவோ விடயங்கள் தெரிந்து கொள்ளப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவைகள் தெரிந்து கொள்ளப்பட்டபின் மனித அறிவியலாகும்.

தெரிந்து கொள்ளப்படாத விடையம், இல்லை என்ற முடிவிற்கு வருவது முற்றிலும் தவறு.

உலகில் இன்று வாழும் மாபெரும் விஞ்ஞானிகளில் ஒருவராக கணிக்கப்படும் கேம்பிரிஜ் பல்கலைகழகத்தின் Professor Stephen Hawking அவர்களின் நாத்திகம் பற்றிய கருத்து கீழே இணைக்கபட்டுள்ளது.

Professor Stephen Hawking is the living authority of science for black holes and big bang theroy !

நாத்தீகத்தை மறுக்கும் மாபெரும் விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங்

Professor Stephen Hawking dismisses Atheism - interview

Professor Stephen Hawking அவர்களையும் கிறிஸ்தவ தீவிரவாதி என்று யாழ் களத்தில் நாத்தீகம் பேசும் சில நண்பர்கள் கூறப்போகிறார்களா???!! :lol::lol:

வெற்றி வேல் இந்தப் பேட்டியை ஸ்டீபன் எந்த வானொலிக்கு அழித்தார் என்று தெரியுமா? *** இணையத்தில் எவரும் ஸ்டீபனைப் போல் பேசி விடலாம்.அந்தப்பேட்டியில் சொலப்பட்டவை மிகவும் கீழ்ததரமானவை இவற்றை ஸ்டீபன் உண்மையிலையே சொன்னரா என்பதையோ அந்த வீடியோவுகுக் கீழ் எழுதி இருப்பவை பற்றியோ வாசிக்கமால், சிந்திக்காமால் இப்படி இடையில் வந்து வீடியோக்களை இணைத்து கருத்தாடலைக் குழப்புவதை நிப்பாட்டவும்.***

*** சொல்லக் கருதுக்கள் இல்லை என்றால் தயவு செய்து இப்படியான மோசடி வீடியோக்களை இணைப்பதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

//This isn't Steven Hawking... if it was there would be a clicking sound in between everyone sentence or two. He isn't necessarily an Athiest but he basically claims that God has absolutely no value to us nor does he care about us. If anything he was just the big finger that pushed the dominos but holy books and religious individuals are wrong by default. Presenting an unprovable argument has no value and thus its consequences are useless. I cannot disprove god but you cannot disprove ghosts. //

//If Stephen Hawking could move his legs he would kick your ***//

//its fake!! //

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

//its fake!! //

How do you konw it is fake? I found this in you tube. if it is fake i do not have any problem in withdrawing it.

But for sure I konw Prof. Hawking is not an atheist. He is an agonistic.

- - -

Edited by வலைஞன்
நீக்கப்பட்டுள்ளது

மனித அறிவென்பது எல்லைக்குட்பட்டது. ஏனைய விலங்கினங்களுக்கும் அவ்வாறுதான் பொருந்தும். பரத்தின் அறிவென்பது இயற்கை என்று கருதுவதற்கில்லை. இயற்கையின் இயக்கத்திற்கு உறுதுணையாகவிருக்கும் மூலத்தின் அறிவு. அந்த அறிவு எல்லைகளைக் கடந்தது.

பரம் என்றால் என்ன? அதற்கு அறிவு, சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறது ,அது இயற்கைக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதெல்லாவற்றையும் எல்லையுள்ள அறிவுடைய நீங்கள் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள்?

"உரை அற்றது ஒன்றை உரை செய்யும் மூடர்கள்

கரை அற்றது ஒன்றை கரைகாணல் ஆகுமோ,

திரை அற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்கு

புரை அற்று இருந்தான் புரி சடையானே."

மூலப் பொருளை இவ்வாறு கூறுகின்றார் திருமூலர். இதன் கருத்துப் புரியுமென நினைக்கின்றேன். அதற்கு மூளை இருக்கின்றதா? இல்லையா? என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஏனென்றால் நமது அறிவு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று.

உங்கள் அறிவுக்கு எட்டாத ஒன்றைப் பற்றி எவ்வாறு அது எல்லையற்றது, இயற்கைக்கு உறுதுணையாக் இருக்கிறது என்றெல்லாம் சொல்வீர்கள் என்பதே கேள்வி?

தாவரங்கள் ஓரறிவு உடையவையாம். அவற்றிற்கு மூளையுண்டா? அறிவற்ற செயல் என்பது மூளையின் பாற்படாததா? அதுவும் மூளையின் பாற்பட்டதுதான். அதைப் பிழையான செயல் என்றுதான் கூறுதல் பொருந்தும்.

மனிதன் அறிந்ததுதான் அறிவா? தெரிந்து கொள்ளுதலுக்கும் அறிவிற்குமிடையில் நாம் முரண்படுகின்றோம்.

உங்கள் அகராதியின் படி அறிவு என்றால் என்ன?

மனித மூளை தளர்ச்சி, சோர்வு, என்பவைகளுக்காட்படுவது. பரத்தின் அறிவு அவ்வாறானதில்லை.

பரத்தின் அறிவு அவ்வறானது இல்லை என்று எவ்வாறு உங்கள் எல்லையுள்ள அறிவைக் கொண்டு எவ்வாறு அறிந்து கொண்டீர்கள்?

அறியப்பட முடியாத ஒன்று இல்லையென்று ஆகிவிடாது.

அறியப்பட முடியாதது இருக்கிறது என்றும் ஆகிவிடாது.இன்று அது அறியப்படவில்லை அதனால் அது இன்று இல்லை என்றே நான் சொல்கிறேன்.அது நாளை இருக்கிறது என்று அறியப்பட்டால் அதனை இருக்கிறது என்று நாளை சொல்வேன்.

அறியப்படாததை பற்றி இன்றே நான் ஒரு முன் முடிவுக்கு, அது பரம் அதற்கு எல்லா அறிவும் இருக்கிறது என்றெல்லாம் சொல்ல மாட்டேன் என்றே நான் சொல்கிறேன்.

ஏற்கெனவேயிருக்கும் ஒரு விடயம் தெரிந்து கொள்ளப்பட்டபின், அது மனித அறிவாகிறது, என்பது சரி. தெரிந்து கொள்ளப்படாதது அறிவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

தெரிந்து கொள்ளப்படாதது அறிவாக இருக்கிறது என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும்?

இன்று எவ்வளவோ விடயங்கள் தெரிந்து கொள்ளப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவைகள் தெரிந்து கொள்ளப்பட்டபின் மனித அறிவியலாகும்.

தெரிந்து கொள்ளப்படாத விடையம், இல்லை என்ற முடிவிற்கு வருவது முற்றிலும் தவறு.

தெரிந்து கொள்ளப்படாதது இருக்கிறது அதன் பெயர் பரம் அது இயற்கைக்கு அறிவை வழங்குகிறது என்றெல்லாம் முன் முடிபுகளைக் கூறுவதே அபத்தமானது.தெரிந்து கொள்ளப்படாததை தெரிந்து கொள்ளப் படவில்லை என்று கூறுவதே சரியானது.

How do you konw it is fake? I found this in you tube. if it is fake i do not have any problem in withdrawing it.

But for sure I konw Prof. Hawking is not an atheist. He is an agonistic.

- - -

//This is a truly vial degradation of human intelligence. //

//To those who may think this is Stephen Hawking (not Hawkins by the way) I can only say noone in sciece thinks like a chimpanzee..it seems to be a religious person's last resort...to be ignorant and moronic to the end! //

இந்த விடியோவில் சொல்லப்பட்ட விடயங்கள் எல்லாம் கீழத் தரமானவை குரல் பெயர் எல்லாமுமே பொய்யானது இதை பொய்யென நிரூபிக்க வேறு என்ன வேண்டும்.அந்த வீடியியோவைப் பற்றி சொல்லப்பட்ட கருத்துகளையே இங்கே வெட்டி ஒட்டி உள்ளேன்.விடியியோவில் கடவுளை மறுப்பவர்கள் பற்றி கீழ்த்தரமான் வாசகங்கள் வருகின்றன. ***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

கருத்தாடும் உறவுகளுக்கு,

கருத்தாடல் இதுவரை எப்படி பண்பான முறையில் நகர்த்தப்பட்டதோ, அதுபோன்று தொடரவும். ஒருவர் பற்றி ஒருவர் சொல்லும் கருத்துக்களையும், பிற தலைப்புக்கள் தொடர்பான கருத்துக்களை இத்தலைப்பில் எழுதுவதையும் தவிர்த்துக்கொள்ளவும். ஒரு பிழையான தகவல் இணைக்கப்பட்டால் அதை நட்போடு சுட்டிக்காட்டுங்கள்.

நன்றி

இந்த விடியோவில் குரல் பெயர் எல்லாமுமே பொய்யானது இதை பொய்யென நிரூபிக்க வேறு என்ன வேண்டும்.அந்த வீடியியோவைப் பற்றி சொல்லப்பட்ட கருத்துகளையே இங்கே வெட்டி ஒட்டி உள்ளேன்.விடியியோவில் கடவுளை மறுப்பவர்கள் பற்றி கீழ்த்தரமான் வாசகங்கள் வருகின்றன. ***

இந்த வீடியோ சம்பந்தப்பட்ட கருத்துக்களை இப்போது தான் வாசித்தேன். இது போலியாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது போலவே தோன்றுகிறது. ஆகவே இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. தவறுக்கு வருந்துகிறேன்

உங்கள் ஆட்சேபனைக்கு நன்றி!!!

தவறுகள் திருத்தப்படவேண்டியவை

அதை செய்வதில் தயக்கம் என்றும் இருந்ததில்லை!!!

Edited by vettri-vel

இந்த வீடியோ சம்பந்தப்பட்ட கருத்துக்களை இப்போது தான் வாசித்தேன். இது போலியாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது போலவே தோன்றுகிறது. ஆகவே இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. தவறுக்கு வருந்துகிறேன்

உங்கள் ஆட்சேபனைக்கு நன்றி!!!

தவறுகள் திருத்தப்படவேண்டியவை

அதை செய்வதில் தயக்கம் என்றும் இருந்ததில்லை!!!

தவறை உணர்ந்து திருத்தியமைக்கு நன்றிகள்.

இனியாகிலும் அவசரப்பட்டு இணைப்புக்களை இடுமுன் அவற்றின் நம்பகத் தன்மை பற்றி சிந்திப்பீர்கள் எனவும் கருத்தாடலில் பங்களிப்பைச் செய்யும் வண்ணம் பண்பாகவும் கண்ணியமகவும் நடந்து கொண்டு ஒத்துழைபீர்கள் என்றும் எதிர் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரே!

இந்தப் பிரபஞ்சம் ஏன் வந்தது என்பதற்கான காரணம் அறியப்படவில்லை. இது உங்கள் பதில்

எனது உள்ளம் என்ன சொல்கிறது தெரியுமா? இந்தப் பிரபஞ்சம் என்னால் வந்தது. என்முன்னே தோற்றம் பெற்றிருக்கும் இதனை நானே உருவாக்கினேன். அதுபோல அது உங்களாலும் வந்தது. நீங்களோ நானோ செத்துப் போனால் யார் சாகிறாரோ அவருடன் அவரது பிரபஞ்சமும் அழிந்துவிடும். அதனால் நமக்கு உயிர் வந்ததால் அதிலே தன்னைத் தானேயுணரும் உணர்வு வந்ததால் பிரபஞ்சம் வந்தது. கனவில்லாத ஒரு நீண்ட தூக்கத்தில் அல்லது மயக்க நிலையில் நீங்கள் கூறுவது போல மூளையின் செயற்பாடுகளின் உறங்கு நிலையில் நமக்குப் பிரபஞ்சம் இருப்பதில்லை. அவ்வாறே நிரந்தர இறப்பிலும் அது அழிந்து போய்விடுகிறது. என்று ஓர் உயிர் இவ்வுலகில் தோன்றுகின்றதோ அன்றே தன்னை வேறுபடுத்தி அவ்வுயிர் .இப்பிரபஞ்சத்தை உணர்கிறது.

அடுத்த உங்கள் பதில் தன்னுணர்வு பற்றியது. நான் மேலே குறிப்பிட்டபடி தன்னுணர்வு உருவாகக் காரணம் இந்தப் பிரபஞ்சம். பிரபஞ்சமில்லாவிடில் சார்பு நிலையில்லை. அதனால் உயிர் தன்னைத் தானே உணராது. வெறும் சூன்யத்தையே உணரும். அதனால் நீங்கள் கூறுவதுபோல தன்னுணர்வுக்குப் பெரிய பரிணாம வளர்ச்சி தேவையில்லை. மூளை வளர்ச்சியடைந்தாலும் வளர்ச்சியடையாவிட்டாலும் உயிரின் பிரபஞ்ச வயப்பட்ட சார்பு நிலையால் தன்னுணர்வு உருவாகிறது.

இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் ஓருயிரில் உருவாகும் தன்னுணர்வு மாறாதிருக்க அதைச் சுற்றியே மூளையென்னும் அறிவுக் காரணி வளர்ச்சி பெறுகிறது. ஆக மூளையின் பரிணாமத்திற்குத் தன்னுணர்வே காரணம். தன்னுணர்வே அடிப்படை. தன்னுணர்வை மூளை விருத்தி செய்கிறதே ஒழிய உருவாக்கவில்லை. இதை நீங்கள் ஏற்கிறீர்களா.

நானிங்கே எந்த மூடநம்பிக்கையையும் விதைக்கவில்லை. எந்தவொரு சமயப் பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை. நீங்கள் புரியவில்லை புரியவில்லை என்பதால் புரியவைக்க என்னால் முடிந்தவரை முயல்கிறேன். உங்கள் விடைகளைக் கொண்டு.

அடுத்ததாக நீங்கள் கடவுள் உண்டென்று யாரும் அறிவியல் ரீதியாக நிறுவவில்லை ஆகவே இல்லையென்கிறீர்கள். நானோ அறிவியல் இல்லையென்று நிறுவாததால் உண்டென்கிறேன். எனக்கும் உங்களுக்குமிடையே லொஜிக்கில் மட்டுமே வேறுபாடு. ஆனால் உண்மை அப்படியே இருக்கிறது. நீங்கள் அறியும் வரை.

தன்னுணர்வுக்கு நீங்கள் ஆங்கிலச் சொல் கேட்கிறீர்கள். செல்ப் கொண்சியஸ்னெஸ்(Self Consciousness) என்று அதற்குச் சொல்லலாமென்று நினைக்கிறேன். ஆனாலும் அதற்கு நீங்கள் வேறு பொருளைக் கொள்ளக் கூடாது. ஒரு உயிரியின் மூளை வளர்ச்சியடைந்தாலென்ன வளர்ச்சியடையாவிட்டாலென்ன அது முக்கியமில்லை. உங்களுக்குப் பொருந்தாத கருத்தெனில் உங்கள் பாணியில் விளக்குங்கள். தெரியவில்லை புரியிவில்லையென்ற தயவு செய்து சொல்லாதீர்கள்.

தவறை உணர்ந்து திருத்தியமைக்கு நன்றிகள்.

இனியாகிலும் அவசரப்பட்டு இணைப்புக்களை இடுமுன் அவற்றின் நம்பகத் தன்மை பற்றி சிந்திப்பீர்கள் எனவும் கருத்தாடலில் பங்களிப்பைச் செய்யும் வண்ணம் பண்பாகவும் கண்ணியமகவும் நடந்து கொண்டு ஒத்துழைபீர்கள் என்றும் எதிர் பார்க்கிறேன்.

ஆனால் தலைப்பில் பண்பு இல்லையே!

'கடவுளை மதிக்காத மடையரே கேளும்!' என ஒரு ததலைப்பு போட்டால் அதையும் பண்பான தலைப்பென யாழ்் நிர்வாகம் அனுமதிக்கும் என நினைக்கிறேன்!

Edited by sOliyAn

மனித சக்தி என்பது எல்லைக்குட்பட்டதுதான். மனிதனால் முற்றாக அறியப்பட முடியாதிருக்கின்ற ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி இந்த அண்டங்களை இயக்குகின்றது. அந்த சக்திக்குரிய மூலமே பரம் எனப் பெயரிடப்படுகிறது. அறிவு என்பது தானாக இயங்கும் சக்தி கொண்டதல்ல. அதனை இயக்கும் மூலம் பரமாகும்.

அண்டங்களின் தோற்றத்திலிருந்து இன்று வரை அது தொடர்து இயங்கிக் கொண்டிருக்கின்ற வகையில் பரம் எல்லையற்ற ஆற்றலைக் கொண்டது என்பதை உணர முடியும். அதன் ஒரு பகுதி இயக்கத்தையாகிலும் மாற்றத்திற்குள்ளாக்க முடியாதிருக்கின்ற மனித அறிவு எல்லைகளுக்குட்பட்டதுதான் என்பது நிருபணமாக்கக் கூடியது.

அறிவென்பது என்ன? அறிவென்பது அண்டங்களின் தோற்றம் அதன் இயங்கு நிலை, அதனை இயக்கும் சக்தி என்பவைதான். அதிலிருந்து மனிதன் ஒருசிலவற்றைத் தெரிந்து கொண்டிருக்கிறான். அதனைத் தனது அறிவென்று கூறுகிறான்.

அறிவிற்கு எட்டாத ஒன்றை, இல்லை என எவ்வாறு கூறமுடியும். அந்த நிலைதான் எல்லைக்குட்பட்ட அறிவு. இல்லை என முடிவெடுத்தலுக்கும் ஆதாரங்கள் தேவை. காணமுடியவில்லை, உணர முடியவில்லை, தெரிந்து கொள்ள முடியவில்லை, அறிய முடியவில்லை என்பதெல்லாம் ஆதாரமாகாது.

பரத்தைத் உங்களுக்குத் தெரிக்கக் கூடிய அறிவு எனக்கில்லை. ஒவ்வொரு மனிதனும் தனித்துத்தான் இறைவனை அறிய முயல வேண்டும். முயன்று பாருங்கள்.

நாரதரே!

இந்தப் பிரபஞ்சம் ஏன் வந்தது என்பதற்கான காரணம் அறியப்படவில்லை. இது உங்கள் பதில்

எனது உள்ளம் என்ன சொல்கிறது தெரியுமா? இந்தப் பிரபஞ்சம் என்னால் வந்தது.

உங்கள் உள்ளம் , சிந்தனை ,யூகம் இவையெல்லாம் சரியானது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?ஆதராம் இன்றி நானும் பல யூகங்களைப் பதிலாகச் சொல்லலாம்.

என்முன்னே தோற்றம் பெற்றிருக்கும் இதனை நானே உருவாக்கினேன். அதுபோல அது உங்களாலும் வந்தது. நீங்களோ நானோ செத்துப் போனால் யார் சாகிறாரோ அவருடன் அவரது பிரபஞ்சமும் அழிந்துவிடும்.

யார் செத்தாலும் அவர் அவரின் நினைவுகள் தான் அழிந்து விடுகின்றனவே தவிர பிரபஞ்சமே அழிந்து விடுவதில்லை.

அதனால் நமக்கு உயிர் வந்ததால் அதிலே தன்னைத் தானேயுணரும் உணர்வு வந்ததால் பிரபஞ்சம் வந்தது.

மேலே சொல்லியதன் படி உங்களின் நினைவுகள் பிரபஞ்சம் அல்ல, ஆகவே உங்கள் நினைவுகளின் இருந்து பிரபஞ்சம் வரவில்லை.

கனவில்லாத ஒரு நீண்ட தூக்கத்தில் அல்லது மயக்க நிலையில் நீங்கள் கூறுவது போல மூளையின் செயற்பாடுகளின் உறங்கு நிலையில் நமக்குப் பிரபஞ்சம் இருப்பதில்லை. அவ்வாறே நிரந்தர இறப்பிலும் அது அழிந்து போய்விடுகிறது. என்று ஓர் உயிர் இவ்வுலகில் தோன்றுகின்றதோ அன்றே தன்னை வேறுபடுத்தி அவ்வுயிர் .இப்பிரபஞ்சத்தை உணர்கிறது.

வெளி உலகு பற்றிய நினைவு என்பது அவர் அவர் உணர்வது.அது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட நினைவு.அந்த நினைவு என்பது எவ்வாறு பிரபஞ்சம் ஆகும்? ஒரு உயிர் இறப்பதால் அதன் நினைவுகள் இல்லாமல் போவதால் இந்தப் பிரபஞ்சம் அழிந்து விடுவதில்லை.ஆகவே வெறும் நினைவையும் , வெளிச் சூழலையும் ஒன்றென்று நீங்கள் சொல்வது அறிவற்ற சிந்தனையாக எனக்குப்படுகிறது.

அடுத்த உங்கள் பதில் தன்னுணர்வு பற்றியது. நான் மேலே குறிப்பிட்டபடி தன்னுணர்வு உருவாகக் காரணம் இந்தப் பிரபஞ்சம். .

//தன்னைத் தானேயுணரும் உணர்வு வந்ததால் பிரபஞ்சம் வந்தது[/color//

//தன்னுணர்வு உருவாகக் காரணம் இந்தப் பிரபஞ்சம். //

தன்னுணர்வில் இருந்து தான் பிரபஞ்சம் உருவானதாக் மேலே சொன்னீர்கள்,பின்னர் பிரபஞ்சத்தில் இருந்து தன்னுணர்வு உருவானதாக் கூறுகிறீர்கள்.உங்கள் குழப்பமான முரணான சிந்தனை எப்படித் தொழிற்படுகிறது என்பதற்கு இன்னொரு உதாரணம்.

பிரபஞ்சமில்லாவிடில் சார்பு நிலையில்லை.

சார்பு நிலை என்றால் என்ன?

அதனால் உயிர் தன்னைத் தானே உணராது. வெறும் சூன்யத்தையே உணரும்.

சூனியம் என்றால் என்ன? உயிர் தன்னைத் தான் உணராது சூனியதைத் தான் உணரும் என்பதற்கான அர்த்தம், நிரூபணம் என்ன? உயிர் எப்போது தன்னைத் தான் உணராது நீங்கள் கூறும் சூனியத்தை உணரும்?

அதனால் நீங்கள் கூறுவதுபோல தன்னுணர்வுக்குப் பெரிய பரிணாம வளர்ச்சி தேவையில்லை. மூளை வளர்ச்சியடைந்தாலும் வளர்ச்சியடையாவிட்டாலும் உயிரின் பிரபஞ்ச வயப்பட்ட சார்பு நிலையால் தன்னுணர்வு உருவாகிறது.

தன்னுணர்வுக்கு பெரிய பரிணாம வளர்ச்சி தேவை இல்லை என்னும் முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?

இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் ஓருயிரில் உருவாகும் தன்னுணர்வு மாறாதிருக்க அதைச் சுற்றியே மூளையென்னும் அறிவுக் காரணி வளர்ச்சி பெறுகிறது. ஆக மூளையின் பரிணாமத்திற்குத் தன்னுணர்வே காரணம். தன்னுணர்வே அடிப்படை. தன்னுணர்வை மூளை விருத்தி செய்கிறதே ஒழிய உருவாக்கவில்லை. இதை நீங்கள் ஏற்கிறீர்களா.

தன் உணர்வு என்று நீங்கள் சொல்வது மூளை விருத்திக்கு அடிப்படையானது என்று நீங்கள் சொல்வதற்கான ஆதாரம் என்ன?

அடுத்ததாக நீங்கள் கடவுள் உண்டென்று யாரும் அறிவியல் ரீதியாக நிறுவவில்லை ஆகவே இல்லையென்கிறீர்கள். நானோ அறிவியல் இல்லையென்று நிறுவாததால் உண்டென்கிறேன். எனக்கும் உங்களுக்குமிடையே லொஜிக்கில் மட்டுமே வேறுபாடு. ஆனால் உண்மை அப்படியே இருக்கிறது. நீங்கள் அறியும் வரை.

தன்னுணர்வுக்கு நீங்கள் ஆங்கிலச் சொல் கேட்கிறீர்கள். செல்ப் கொண்சியஸ்னெஸ்(Self Consciousness) என்று அதற்குச் சொல்லலாமென்று நினைக்கிறேன். ஆனாலும் அதற்கு நீங்கள் வேறு பொருளைக் கொள்ளக் கூடாது. ஒரு உயிரியின் மூளை வளர்ச்சியடைந்தாலென்ன வளர்ச்சியடையாவிட்டாலென்ன அது முக்கியமில்லை. உங்களுக்குப் பொருந்தாத கருத்தெனில் உங்கள் பாணியில் விளக்குங்கள். தெரியவில்லை புரியிவில்லையென்ற தயவு செய்து சொல்லாதீர்கள்.

தர்க்கத்தின் அடிப்படை இல்லாததை இல்லை என்று நிரூபிக்க முடியாது என்பதே.அறிவியல் உண்டென்று நிறுவாததை இருப்பதாக ஏற்றுக்கொள்ளும் நீங்கள் அறிவியல் ரீதியாகச் சிந்திக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

உங்கள் சிந்தனை முழுவதுமே உங்கள் யூகங்கள் உங்கள் கற்பனைகளால் ஆனது.இதற்கு எந்த ஆதரமோ,தர்க்கமோ, நிரூபிப்பிபோ கிடையாது.இதனையே அறிவற்ற சிந்தனை அல்லது முட்டாள்த் தனமான சிந்தனை என்று சொல்கிறோம்.

Self Consciousness என்றால் என்ன என்பது பற்றியே பல்வேறு விதமான நிலைப்பாடுகள் இருக்கின்றன. self awarenes, cognition,perception என்பவற்றிக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் எவை? நீங்கள் சொல்லும் தன்னுணர்வு என்பதற்கும் இவறிற்குமான தொடர்பு என்ன?

Edited by narathar

ஆனால் தலைப்பில் பண்பு இல்லையே!

'கடவுளை மதிக்காத மடையரே கேளும்!' என ஒரு ததலைப்பு போட்டால் அதையும் பண்பான தலைப்பென யாழ்் நிர்வாகம் அனுமதிக்கும் என நினைக்கிறேன்!

அறிவியல் ரீதியாகச் சிந்திக்காமால் உணர்வு ரீதியாகச் சிந்திப்பது மடமை என்னும் அர்த்ததிலையே தலைப்பு,கடவுளை நம்ப முட்டாளே போதும் என்று சொல்கிறது என்று நம்புகிறேன்.இங்கே கடவுளை அறிவியல் ரீதியாக இருப்பதாக நிறுவுங்கள் என்று கேட்பது எவ்வாறு மடமையானது அல்லது அறிவற்ற சிந்தனை என்பதை நீங்கள் நிறுவினால் ,அதற்குத் தகுந்ததாக நீங்கள் சொல்லும் தலைப்பு இருக்கும்.

நீங்கள் அதற்கான கருதாடல்களையோ தர்க்கத்தையோ முன் வைக்காமல் வெறுமனே தலைப்பை மட்டும் வைத்தால் அதனை ஆதாரம் எதுவுமற்ற வெறும் அவதூறு என்றல்லவா நாம் எடுக்க முடியும்?

வெற்றி வேல் இணைத்த வீடியோலும் இவ்வாறான பல ஆதாராம் அற்ற அவதூறுகள், தமிழில் எழுத முடியாத கீழத்தரமான வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தன.அவற்றையே பண்பற்றவை அவதூறானவை என்று சொன்னேன்.மேலும் ஒரு பிரபலமான விஞ்ஞானி சொன்னதாக வெற்றி வேல் ஒரு மோசடியான விடியோவை ஆதாரமென இணைத்து இருந்தார்.இது கருத்தியல் ரீதியாக மோசடியானது பண்பற்றது என்றே சொல்லி இருந்தேன்.

மனித சக்தி என்பது எல்லைக்குட்பட்டதுதான். மனிதனால் முற்றாக அறியப்பட முடியாதிருக்கின்ற ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி இந்த அண்டங்களை இயக்குகின்றது.

மனிதனால் அறியப் பாடதது பற்றி மனிதரான நீங்கள் எவ்வாறு அறுதியிட்டுக் கூறுகிறீர்கள்? அவ்வாறு நீங்கள் கூறுவது நீங்கள் மனிதர் அல்ல என்னும் காரணத்தாலா? ஆற்றல் மிகுந்த சக்தி என்று ஒன்று இருக்கிறது என்பது எவ்வாறு அறியப்பட்டது? அது இந்த அண்டங்களை இயக்குகிறது என்பது எவ்வாறு அறியப்பட்டது? இவறிற்கான ஆதாரங்கள் என்ன?

அந்த சக்திக்குரிய மூலமே பரம் எனப் பெயரிடப்படுகிறது. அறிவு என்பது தானாக இயங்கும் சக்தி கொண்டதல்ல. அதனை இயக்கும் மூலம் பரமாகும்.

அண்டங்களின் தோற்றத்திலிருந்து இன்று வரை அது தொடர்து இயங்கிக் கொண்டிருக்கின்ற வகையில் பரம் எல்லையற்ற ஆற்றலைக் கொண்டது என்பதை உணர முடியும்.

பரம் எல்லயற்ற ஆற்றலை உடையது என்று எவ்வாறு உணர்கிறீர்கள்? மனிதனால் அறியப்பாடாதது பற்றி எப்படி இவ்வளவு தெளிவாகச் சொல்கிறீர்கள்.

அறிவென்பது என்ன? அறிவென்பது அண்டங்களின் தோற்றம் அதன் இயங்கு நிலை, அதனை இயக்கும் சக்தி என்பவைதான். அதிலிருந்து மனிதன் ஒருசிலவற்றைத் தெரிந்து கொண்டிருக்கிறான். அதனைத் தனது அறிவென்று கூறுகிறான்.

அறிவிற்கு எட்டாத ஒன்றை, இல்லை என எவ்வாறு கூறமுடியும். அந்த நிலைதான் எல்லைக்குட்பட்ட அறிவு. இல்லை என முடிவெடுத்தலுக்கும் ஆதாரங்கள் தேவை. காணமுடியவில்லை, உணர முடியவில்லை, தெரிந்து கொள்ள முடியவில்லை, அறிய முடியவில்லை என்பதெல்லாம் ஆதாரமாகாது.

பரத்தைத் உங்களுக்குத் தெரிக்கக் கூடிய அறிவு எனக்கில்லை. ஒவ்வொரு மனிதனும் தனித்துத்தான் இறைவனை அறிய முயல வேண்டும். முயன்று பாருங்கள்.

;;

அறிய முடியவில்லை
;; என்று நீங்கள் சொல்வது எதை? அண்டங்களின் தோற்றம் அதன் இயங்கும் சக்தி என்பவற்றைத் தானே? ஆகவே அவை பற்றிய அறிவு மனிதனுக்கு இல்லை என்று தானே அர்த்தம்? அவை பற்றிய அறிவு இல்லாத நிலையில் அதனை இயக்குவது பரம் எனவும் அது எல்லாம் வல்ல சக்தி எனவும் எவ்வாறு கூறுவீர்கள்?

மனித அறிவுக்கு எட்டாததை எவ்வாறு அறிய முடியும்? இவை எல்லாம் உங்கள் உணர்வு அல்லது கற்பனையே அன்றி அறிவு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றல் மிகுந்த சக்தி என்று ஒன்று இருக்கிறது என்பது எவ்வாறு அறியப்பட்டது? அது இந்த அண்டங்களை இயக்குகிறது என்பது எவ்வாறு அறியப்பட்டது?

எனக்கு உள்ளுக்க தெரியுது..! :rolleyes:

ஆனால் தலைப்பில் பண்பு இல்லையே!

'கடவுளை மதிக்காத மடையரே கேளும்!' என ஒரு ததலைப்பு போட்டால் அதையும் பண்பான தலைப்பென யாழ்் நிர்வாகம் அனுமதிக்கும் என நினைக்கிறேன்!

இந்த சந்தேகம் உங்களுக்கே வந்தது தான் இப்ப சூடான செய்தி... :wub:

அண்டங்கள் இயங்குகின்றதா? இல்லையா? அதை இயக்கும் ஆற்றல் மனிதருக்கு உண்டா? அப்படிப்பட்ட அறிவாளிகள், அந்த இயக்கத்தில் சிறுமாற்றம் ஏதாவது செய்ய முடிகிறதா? அண்டங்களில் மாற்றம் செய்யத் தேவையில்லை. நீங்கள் வாழ்கின்ற பூமியிலாவது சிறு மாற்றம் செய்ய முடிகின்றதா?

இவைகளில் இயங்கு திறன்களில் மாற்றங்களில்லாமல், இயக்குகின்ற சக்தியைத்தான் பரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அப்படியொரு ஆற்றல் மிக்க சக்தி உண்டென்பது அண்டங்களின் இயங்கு திறத்திலிருந்துதான் புரிந்து கொள்ளப்பட்டது.

அந்த ஆற்றலை அறிந்து அளவிடும் சக்தி நம்மிடமில்லை.

ஏற்கெனவே இப்பகுதியில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். " இல்லை என்பதன் அடிப்படை இருக்கிறது என்பதிலிருந்துதான் தோன்றியது" நாரதரின் வாதமும் அப்படித்தானிருக்கிறது. கேள்வியாகவே எல்லாம் இருக்கிறதே தவிர இல்லை என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமே முன்வைக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நாரதர் அவர்களே!

நீங்கள் மீண்டும் இலகுவாகக் கேள்விகளைக் கேட்டு இந்த விவாதத்தைத் தொடரலாம் எனப் பார்க்கிறீர்கள். நான் ஏற்கனவே சொல்லி விட்டேன், கடவுள் தொடர்பான எனது பதில்கள் முடிந்துவிட்டன இனி நீங்கள்தான் என்னைச் ஆராய, சிந்திக்கத் துண்டவேண்டுமென்று.

சரி நான் சொல்வது உங்களுக்குப் பொருந்தாதவையென்றால் அது அப்படியல்ல இப்படித்தான் என்று சொல்லவேண்டும். அந்த வகையில்தான் சிந்திக்கத் தூண்டமுடியும். அறிவியல் சொல்லித்தரவில்லை சொல்லித்தரவில்லை காத்திருப்போம் என்று மக்களை அது காட்டித்தருமென்னும் ஒரு குருட்டு நம்பிக்கைக்குள் இருட்டினுள் வைத்திருக்க முடியாது.

ஆரம்ப காலத்திலிருந்தே பகுத்தறிவாளர்கள் எதற்கும் விடைதேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்காது அறிவியலின் தலையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டுக் கேள்விகளைக் கேட்டே தாங்கள் பெரிய அறிவாளிகளென்று தம்மை நிறுவ முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் சார்பு நிலையென்றால் என்னவென்று கேட்டீர்கள். ஒன்றைப் புரிந்துகொள்ள ஒப்பிட இருக்கும் இன்னொன்றைச் சார்பு நிலையென்பார்கள்.

உதாரணமாக வேகத்தை அளவிட எமக்கு இரண்டு புள்ளிகள் தேவை. அவ்விரண்டிற்குமிடையிலான தூரத்திற்குள் பயணஞ்செய்ய எடுத்த நேரத்தை வைத்துக் கொண்டே வேகத்தைக் கணக்கிடுகிறோம். இதிலே கணித ரீதியில் திசை, கதி போன்ற விடயங்களுக்குள் எல்லாம் போய் ஆராயவேண்டியதில்லை. இங்கு அறிய வேண்டியது. சார்பு நிலைபற்றியே. பிரபஞ்சத்தில் சடப்பொருட்களில்லாதிருந்தால

அண்டங்கள் இயங்குகின்றதா? இல்லையா? அதை இயக்கும் ஆற்றல் மனிதருக்கு உண்டா? அப்படிப்பட்ட அறிவாளிகள், அந்த இயக்கத்தில் சிறுமாற்றம் ஏதாவது செய்ய முடிகிறதா? அண்டங்களில் மாற்றம் செய்யத் தேவையில்லை. நீங்கள் வாழ்கின்ற பூமியிலாவது சிறு மாற்றம் செய்ய முடிகின்றதா?

அண்டங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது பற்றிய அறிவியல் விளக்கங்களை முடிந்தவரை இணைக்கிறேன், பாருங்கள்.பூமியில் மனிதன் செய்யும் மாற்றங்களால் காலனிலையிலும் சுற்றுச் சூழலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விடயம்.அணுவைப் பிளந்து அளப்பரிய சக்தியை வெளிப்படுத்தியமை, உப அணுத்துகள்களைக் கண்டு கொண்டமை, மற்றைய கோள்களுக்கு கலங்களை அனுப்பியமை என பல துறைகளில் இன்று அபரிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நோய்களைக் கண்டறிதல், நோய்களைக் குணமாக்கல் உயிர்களை செயற்கையாக உற்பத்தி செய்தல் மாற்றி அமைத்தல் செயற்கையாக கருவூட்டல் எனப் பலதுறைகளில் மேலும் முன் நேற்றம் கண்டிருக்கிறான் மனிதன்.இவை எல்லாம் இயற்கையை மனிதன் அறிவியலின் துணை கொண்டு மாற்றி வரும் செயல்கள்.

இவைகளில் இயங்கு திறன்களில் மாற்றங்களில்லாமல், இயக்குகின்ற சக்தியைத்தான் பரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அப்படியொரு ஆற்றல் மிக்க சக்தி உண்டென்பது அண்டங்களின் இயங்கு திறத்திலிருந்துதான் புரிந்து கொள்ளப்பட்டது.

அந்த ஆற்றலை அறிந்து அளவிடும் சக்தி நம்மிடமில்லை.

ஏற்கெனவே இப்பகுதியில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். " இல்லை என்பதன் அடிப்படை இருக்கிறது என்பதிலிருந்துதான் தோன்றியது" நாரதரின் வாதமும் அப்படித்தானிருக்கிறது. கேள்வியாகவே எல்லாம் இருக்கிறதே தவிர இல்லை என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமே முன்வைக்கப்படவில்லை.

அண்டங்களை இயக்குகின்ற ஒரு சக்தி இருக்கிறது என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை.அண்டங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை விளக்க பல்வேறு அறிவியல் காரணக்கள் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்கின்றன.அவற்றில் தெரியாத விடயங்களும் இதுவரை ஆதாரபூர்வமாக நீருபிக்கப்படாத எதிர்வு கூறல்களும் இருக்கின்றன.

நண்பர் நாரதர் அவர்களே!

நீங்கள் மீண்டும் இலகுவாகக் கேள்விகளைக் கேட்டு இந்த விவாதத்தைத் தொடரலாம் எனப் பார்க்கிறீர்கள். நான் ஏற்கனவே சொல்லி விட்டேன், கடவுள் தொடர்பான எனது பதில்கள் முடிந்துவிட்டன இனி நீங்கள்தான் என்னைச் ஆராய, சிந்திக்கத் துண்டவேண்டுமென்று.

நீங்கள் கேட்ட கேள்விகலுக்கு நான் பதில் சொல்லி விட்டேன்.பிரபஞ்சத்தின் தோற்றம்,அணுவின் தோற்றம் என்பவை பற்றி அறிவியல் ரீதியாக இதுவரை கண்டறியப்பட்டவை பற்றிய விவரங்களை இங்கே இணைக்கிறேன்.இவற்றில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டவை ஒரு புறமும் இன்னும் ஆதாரபூர்வமாக நீரூபிக்கப்படாதா அதிக சாதியக்கூறுகளை உடைய எதிர்வு கூறல்களும் உண்டு.இவறிற்கான தேடல்கள் பரிசோதனைகள் நடந்து கொண்டு தான் இருக்கிண்றன.

சரி நான் சொல்வது உங்களுக்குப் பொருந்தாதவையென்றால் அது அப்படியல்ல இப்படித்தான் என்று சொல்லவேண்டும். அந்த வகையில்தான் சிந்திக்கத் தூண்டமுடியும். அறிவியல் சொல்லித்தரவில்லை சொல்லித்தரவில்லை காத்திருப்போம் என்று மக்களை அது காட்டித்தருமென்னும் ஒரு குருட்டு நம்பிக்கைக்குள் இருட்டினுள் வைத்திருக்க முடியாது.

அறிவியல் ரீதீயாக ஒரு விடயம் கண்டறியப் படும் வரை காத்து இருக்க வேண்டும் எனில் காத்திரிக்க வேண்டியது அவசியம்.அதை விடுத்து பிழையான யூகங்களைக் கற்பனைகள் மேல் நம்பிக்கை கொள்வது தான் ஆதரங்களின் அடிப்படையில் அமையாத குருட்டுத் தனமான நம்பிக்கை எனப்படுகிறது.

ஆரம்ப காலத்திலிருந்தே பகுத்தறிவாளர்கள் எதற்கும் விடைதேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்காது அறிவியலின் தலையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டுக் கேள்விகளைக் கேட்டே தாங்கள் பெரிய அறிவாளிகளென்று தம்மை நிறுவ முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பகுத்து அறிபவர்கள், இருக்கின்ற அறிவையே பகுத்து அறிகின்றனர்.எல்லோரும் எல்லாத் துறைகளிலும் விற்பன்னர்கள் ஆகி விட முடியாது.ஆகவே பகுதறிவாளர்கள் ஒரு விடயத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் அந்த விடயத்தில் விற்பன்னரான ஒரு அறிவியலாளர் அல்லது அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார் என்பதன் அடிப்படையிலையே ஒரு விடயத்தை அறிவியல் ரீதியாக அணுக முடியும். அத் அத் துறை சார் நிபுணர்களின் பொதுக் கருத்து எது என்ன என்பதன் அடிப்படையிலையே ஒரு பகுத்தறிவாளனால் அத் துறை பற்றிய முடிவுக்கு வர முடியும்.கரு என்பவர் தனது உணர்வினால் எந்த ஆராய்வ்ய்ம் நிரூபணமும் இன்றி சொல்லியதை குருட்டுத் தனமாக நம்புவது பகுத்தறிவு அன்று.

முதலில் சார்பு நிலையென்றால் என்னவென்று கேட்டீர்கள். ஒன்றைப் புரிந்துகொள்ள ஒப்பிட இருக்கும் இன்னொன்றைச் சார்பு நிலையென்பார்கள்.

உதாரணமாக வேகத்தை அளவிட எமக்கு இரண்டு புள்ளிகள் தேவை. அவ்விரண்டிற்குமிடையிலான தூரத்திற்குள் பயணஞ்செய்ய எடுத்த நேரத்தை வைத்துக் கொண்டே வேகத்தைக் கணக்கிடுகிறோம். இதிலே கணித ரீதியில் திசை, கதி போன்ற விடயங்களுக்குள் எல்லாம் போய் ஆராயவேண்டியதில்லை. இங்கு அறிய வேண்டியது. சார்பு நிலைபற்றியே. பிரபஞ்சத்தில் சடப்பொருட்களில்லாதிருந்தால

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.