Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகேஸ்வரியின் இறுதிக் கிரியை நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது

Featured Replies

யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் நேற்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இன்று அப்பகுதியில் பாரிய பதற்ற சூழல் நிலவியது.

தொடர்ந்து வாசிக்க

யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினர் பலர் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. ஈ.பி.டி.பி.யின் சட்ட ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதம் கரவெட்டிப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணிலேயே பருத்தித்துறைப் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

நேற்றிரவு முதல் இன்று புதன்கிழமை காலை 8 மணிவரை பருத்தித்துறைப் பகுதிக்குள் செல்வதற்கோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கு இராணுவத்தினர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கவில்லை. பேரூந்துகளோ, வேறு எந்த வாகனங்களோ செல்ல அனுமதிக்கப்படவில்லை.

காலை எட்டு மணியின் பின்னர் மீனவர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தமது தொழில்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் சிறிது சிறிதாக பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டபோதும், நண்பகலின் பின்னரே பேரூந்துச் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறைப் பகுதியில் பாடசாலைகள் இயங்கியபோதும் மாணவர்களின் வரவுவீதம் மிகவும் குறைவாகக் காணப்பட்டதாக யாழ் தகவல்கள் கூறுகின்றன. மகேஸ்வரி வேலாயுதத்தின் கொலை தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மித்த பகுதியிலிருந்து சிலர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத பிராந்தியச் செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.டி.பி.யின் சட்ட ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதத்தின் பூதவுடல இறுதிக் கிரியைகளுக்காக கொழும்புக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

கனவனிடம் கொண்டு செல்லப்பட்டு இருக்கு( டக்கிடம்)

மகேஸ்வரியின் இறுதிக் கிரியை நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது

Wednesday, 14 May 2008

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் வைத்து நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்ட ஈ.பி.டி.பி. அமைப்பின் ஆலோசகரும், சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதத்தின் பூதவுடல் இன்று விமான மூலம் கொழும்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இவருடைய இறுதிக் கிரியைகள் நாளை புதன்கிழமை மாலை பொரளை, கனத்தை மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகேஸ்வரி வேலாயுதத்தின் பூதவுடல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் விஷேட விமானம் ஒன்றில் இன்று மாலை கொழும்பு கொண்டு வரப்பட்டது. பூதவுடலுடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய உறவினர்களும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நாளை வியாழக்கிழமை மாலை பொரளை, கனத்தை மயானத்தில் இந்து முறைப்படி இறுதிக் கிரியைகள் நடைபெறவிருக்கின்றது.

இதேவேளையில், வடமராட்சிப் பகுதியில் - குறிப்பாக நெல்லியடி கரவெட்டிப் பகுதியில் நேற்றிரவு முதல் பதற்ற நிலை காணப்படுகின்றது. மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியும், குறிப்பாக அவரது வீடு அமைந்துள்ள வீதியும் நேற்றிரவு முதல் மூடப்பட்டு இன்று காலை 8.30 மணிவரையில் படையினரால் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. இன்று பகல் போக்குவரத்து வழமைக்குத் திரும்பிய போதிலும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடப்பதைத்தான் காணக்கூடியதாக இருந்தது.

இன்று காலை தமது வழமையான கடமைகளுக்குச் சென்றவர்கள் நெல்லியடி மற்றும் பருத்தித்துறைப் பகுதிகளில் படையினரால் மறிக்கப்பட்டு கடுமையான சோதனைக்கும் விசாரணைக்கும் உள்ளாக்கப்பட்டனர். இவர்கள் மைதானங்கள், கோவில்கள் போன்ற பொது இடங்களுக்குக் கொண்டுவரப்பட்டு பல மணி நேரமாகத் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டனர

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக்கிரியை செய்ய மகிந்த, வீரவன்ச, கெல உறுமய காரர் எல்லாரும் வருவினம் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை ஒரு கேள்வி கேட்கலாம் என்றால் இறந்தவரைப் பற்றிக் கேலியாகக் கதைப்பது தப்பு என்பதால் விட்டுவிடுகின்றேன். கேள்வியை மட்டும் சூசகமாகக் சொல்கின்றேன். இறுதிக்கிரியை பற்றிய கேள்வி அது.

  • கருத்துக்கள உறவுகள்
:wub: நான் ஒரு டியூப் லயிட். இன்னும் புரியவில்லையே ? இறுதிக் கிரியை - அதிலென்ன இருக்கு ?

இதிலை ஒரு கேள்வி கேட்கலாம் என்றால் இறந்தவரைப் பற்றிக் கேலியாகக் கதைப்பது தப்பு என்பதால் விட்டுவிடுகின்றேன். கேள்வியை மட்டும் சூசகமாகக் சொல்கின்றேன். இறுதிக்கிரியை பற்றிய கேள்வி அது.

அது தானே பார்த்தேன் எனது பாலர்வகுப்பு ஆசிரியையின் மகளுக்கு டக்கிளஸ் தான் கொள்ளிவைக்க போகிறார் எண்டு தப்பா சொல்லிவிங்களோ? இல்லை :wub::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தானே பார்த்தேன் எனது பாலர்வகுப்பு ஆசிரியையின் மகளுக்கு டக்கிளஸ் தான் கொள்ளிவைக்க போகிறார் எண்டு தப்பா சொல்லிவிங்களோ? இல்லை :rolleyes::lol:

என்ன மூளை வினித் உங்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

செத்த வீடு முடிஞ்சுதோ ? கடைசியா யாராம் கொள்ளி வச்சது. பாவம் மகேஸ்வரி கொள்ளி வைக்கவும் அடிபடுகிறார்கள்.

டக்கிளஸ் மகேஸ்வரியின் பேழையைத் தாங்கிச் செல்லும் அற்புதமான காட்சி.

captb356bba66ba749ca8d8jk1.jpg

படம் : Associated Press

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சிங்கள இராணுவ மரியாதையுடன் மகேஸ்வரியின் பிணம் போகும் போது எனக்கு விளங்கிவிட்டது தமிழருக்கு எப்படிப்பட்ட சேவை செய்திருப்பா என்று.

இவ்வளவு சிங்கள இராணுவ மரியாதையுடன் மகேஸ்வரியின் பிணம் போகும் போது எனக்கு விளங்கிவிட்டது தமிழருக்கு எப்படிப்பட்ட சேவை செய்திருப்பா என்று.

நீங்கள் சொல்லுற மாதிரியும் சொல்லலாம் அல்லது சிறிசபாவில் ஆரம்பிந்த அருகில் ஆலோசனை சேவை டக்கிளசுக்கும் தொடர்ந்து செய்ததால் இந்த விசுவாசம் ஆனால். உண்மையாக கொலையில் பலத்த சந்தேகம் ஊரில் கதைப்பதாக சொன்னார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிகிரிகையில் சமூகசேவையாளரிடம் சமூகசேவை பெற்றவர்களும்.......... உடல்நிலமை காரணமாக சேவையை பெறமுடியாது போனாலும் சேவைகளை நேரில் பார்த்து தரிசித்த சிலரும் கலந்து கொண்டனர். ஆனால் அங்கே ஒரு புத்த பிக்குவும் தீடிரென தோன்றியுள்ளார்? அவர்கள்தான் முற்றும் துறந்தவராச்சே சேவையென்ற ரீதியில் அவர்களுக்கு எதையளிக்க முடியும்? மத சேவைதான் வேலை என வாழ்பவரல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: நல்லாத்தான் சமூக சேவை செய்திருக்கிறா போல. மொட்டத்தலை கூட வந்திருக்கு ? சிறிமாவின்ர தங்கச்சி !!!!!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகேஸ்வரியின் இறுதிச் சடங்கில் டக்ளஸ் மகேஸ்வரியின் உடலை முத்தமிட்டதை சக்தி டிவியில் காட்டீனார்கள் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன,

அத்துடன் சில காலமாக செல்வி.மகேஸ்வரி திருமணமான பெண்கள் அணிவதுபோல் நெற்றியில் குங்குமம் இட்டார்(???)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dm.jpg

dakku.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகேஸ்வரியின் பூதவுடலுக்கு பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

[16 - May - 2008] [Font Size - A - A - A]

* பொரளையில் இறுதிக்கிரியை

பி.ரவிவர்மன்

சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சின் ஆலோசகரும் மனித கௌரவத்திற்கான மன்றத்தின் ஸ்தாபகருமான செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தின் இறுதிக்கிரியை நேற்று வியாழக்கிழமை கொழும்பு பொரளை கனத்தை இந்துமயானத்தில் நடைபெற்றது.

பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவானோர் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னதாக நேற்றுக்காலை முதல் நண்பகல் ஒரு மணிவரை கொழும்பு பம்பலப்பிட்டி பார்க் வீதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) அலுவலகத்தில் செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இங்கு அமைச்சர்களான கருஜெயசூரிய, பி.தயாரத்ன, சுசில்பிரேமஜெயந்த, மிலிந்தமொரகொட மற்றும் மேலகமக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் எம்.பி., மேல்மாகாணசபை உறுப்பினர் பிரபாகணேசன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலாநிதி ந.குமரகுருபரன், மேல்மாகாண ஆளுநர் அலவிமௌலானா, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ்.பத்மநாபா பிரிவு சிரேஷ்ட முக்கியஸ்தர் என்.ஷ்ரீதரன், ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவர் வாசுதேவநாணயக்கார உட்பட பலர் இங்கு இறுதியஞ்சலி செலுத்தினார்கள்.

இதேவேளை, நண்பகல் ஒருமணிக்கு ஈ.பி.டி.பி. அலுவலகத்திலிருந்து பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டது.

இங்கு அமைச்சர்களான டி.யூ.குணசேகர, டலஸ்அழகப்பெரும, ராஜாகொலுரே, சம்பிக்கரணவக்க, ஜோன்செனவிரத்ன, ஜே.வி. பி.எம்.பி.க்களான இராமலிங்கம் சந்திரசேகரன், பிமல்ரத்னாயக்கா, பிரதியமைச்சர்களான எம்.எஸ்.செல்லச்சாமி, பி.இராதாகிருஷ்ணன், ஹுசைன்பைலா, முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சிறிசேனகுரே, ரெலோ துணை முதல்வர் அபுயூசுப், சர்வதேச கிளைகளுக்கான பொறுப்பாளர் உதயன் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

அத்துடன் இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலர் இங்கு வந்து இறுதியஞ்சலி செலுத்தினார்கள்.

பொரளை கனத்தை இந்து மயானத்தில் மாலை 5.45 மணியளவில் செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பி. செயலாளர்நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இறுதியஞ்சலி செலுத்திய பின்னர் சிதைக்கு தீ மூட்டினார்.

அதே நேரம் பொரளை கனத்தை மயானத்தை சுற்றிலும் நேற்று நண்பகலுக்கு பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

http://www.thinakkural.com/news/2008/5/16/...s_page50984.htm

பொரளை கனத்தை இந்து மயானத்தில் மாலை 5.45 மணியளவில் செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பி. செயலாளர்நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இறுதியஞ்சலி செலுத்திய பின்னர் சிதைக்கு தீ மூட்டினார்.

ஆகா... செய்ய வேண்டியதை செய்ய வேண்டியவரே செய்து போட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலர் இங்கு வந்து இறுதியஞ்சலி செலுத்தினார்கள்.

இவர்களை எல்லாம் இயக்குவதில் சிங்களப் பேரினவாதிகளை விட இந்திய றோத்தான் முன்னணியில் நிற்கிறது. இந்திய அதிகாரிகள் அப்பாவித் தமிழ்மக்கள் மீதான எந்தத் தாக்குதலையும் கண்டித்ததே கிடையாது...! ஆனால் இவருக்கு அஞ்சலி செய்யப் போயுள்ளனர் என்றால்..??! :o:huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

maheswaryzc1.th.jpg

cemet3hw1.th.jpg

ceme2lg9.th.jpg

cemetaryia3.th.jpg

cemetaryia3.th.jpg

இவர் கட்சித் தலைவரா இல்லை கனவராகவ வந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்
:o ரெண்டும்தான் !
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

cemetaryia3.th.jpg

இவர் கட்சித் தலைவரா இல்லை கனவராகவ வந்தார்?

கட்சிக்கு கட்சித்தலைவராகவும் கண்மணிக்கு கணவர் மாதிரியும் இருப்பதாக/இருந்ததாக அக்கம்பக்கத்தில் கதை அடிபடுவதாக ஏற்கனவே ஒரு தகவல் உண்டு.......அப்போது அது எவ்வளவு தூரத்திற்கு உண்மை என்று தெரியவில்லை... ஆனால் இப்ப அது முற்றிலும் உண்மை போல் தெ..ரி..கி..ற..து......?????????????

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளிக்குடம் காவுவதற்கும் முன்னுக்கும், பின்னுக்கும் சீருடையில் காவல் காக்கும் வாழ்க்கை என்ன வாழ்க்கை டக்ளஸ் தேவானந்தா ? நாம் தமிழராய் ஒன்று படுவோம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.