Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவு

Featured Replies

கண்ணீர் அஞ்சலிகள்

  • Replies 84
  • Views 20.3k
  • Created
  • Last Reply

ஈடு செய்ய முடியாத இளப்பு... அனுபவம் வாய்ந்த தளபதி... மணலாறு மாவட்டம் தந்த இணையில்லா போராளி...

சிங்கள குடியேற்றத்தால் ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்டு அதன் கொடுமை உணர்ந்து போராளியானவர்... இலங்கை படைகளுக்கு மட்டும் அல்ல இந்திய இராணுவத்துக்கும் பேரிடியாக இருந்தவர்...!

அஞ்சலிகள்..!!

  • கருத்துக்கள உறவுகள்

IMG4833-1211304339.jpg

பால்ராஜ் அண்ணா அவர்களுக்கு வீர வணக்கங்கள்..

இதை வேதனை என்பதா? சோதனை என்பதா?

என்ன கொடுமை....

அடுத்தடுத்து.....தொடர்கின்றதே...

சுய உடல் நலனில் அக்கறையின்றி..மண்ணையும், மக்களையும் காப்பதிற்காக தன்னையே அற்பணித்துக்கொண்ட

எங்கள் மைந்தனுக்கு எனது வீர வணக்கம்!

ஈழத்துக்காய் உழைத்த மாபெரும் தளபதியே

ஈழம் மலரும் முன் போனதேனோ...

மரபுவழி போர்ப்படையை மலர்வித்த மாவீரனே

மரணம் ஏன் உன்னைக் குறிவைத்ததோ...

என் முன் இறைவன் தோன்றி

எனக்கோர் வரம் தந்தால் நான் கேட்பேன்

சன்னம் புகா கவச உடைபோல்

மரணம் புகா கவசங்களை எம்

மாவீரர்களுக்கு அளிப்பாய் என்று

மாவீரனே..

நீ மீண்டும் ஈழத்தில் உதிக்கவேண்டும்

எம் சுதந்திர மண்ணை நீ மிதிக்கவேண்டும்

என் கண்ணீர்த் துளிகளையும் யாழ்கள கண்ணீர் வெள்ளத்தில் சேர்க்கிறேன்

இதய அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

களங்களில் போராளிகளின் பாதுகாப்புத்தான் முதலில் பின்புதான் சண்டை என்று கூறுமள்விற்கு ஒரு அன்புத்தளபதி இவர்தான்

கிருபாவின் வார்த்தைகள் அமரர் பால்ராஜ் பற்றிய சரியான ஒரு மதிப்பீடு. இலங்கை களமுனை வரலாற்றில் Officer and a gentleman னாக வாழ்ந்த பால்ராஜ் உன்னதமான யுத்ததந்திரி. முழுக் களமுனை வரலாற்றிலும் எதிரி தரப்பில் கொப்பேகடுவவும் எங்கள் தரப்பில் பால்ராஜ்யும் இணையற்ற தளபதிகள் என்று குறிக்கப் படும். அவருடைய கனவான மணலாறு மீட்ப்பும் மணலாறு அகதிகள் மீழ் குடியேற்றமும்தான் தான் அமரர் பால்ராஜ்யுக்கு நாம் செலுத்துகிற வீர வணக்கமாக அமையும்.

Edited by poet

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வீர வணக்கங்கள்

நம்ப முடியவில்லை, இது பொய்யாக இருக்ககுடாத

பால்ராஜ் அண்னனுக்கு எனது வீர வணக்கமும் இதய அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்கள இழப்புக்களோடு இயற்கையும் எம்மினிய வீரர்களை சாய்க்கிறதே.

தேசத்தின் குரல்.. கேர்ணல் ராஜு.. பிரிகேடியர் பால்ராஜ்.. என்று எம்மைவிட்டுப் போன தளபதிகள் நீள்கின்றனர்.

எதிரியோடு களமாடி எம்மண்ணையும் மக்களையும் காத்து நின்ற தளபதிக்கு வீரவணக்கங்கள். :)

வீீர வணக்கங்கள்்!!

  • கருத்துக்கள உறவுகள்

Brigadier Balraj (Balasegaram Kandiah, born on 27 November, 1965)

உடல் நலனில் அக்கறையில்லாது தாயக மண்ணின் விடுதலையையே மூச்சாகக் கொண்டு உழைத்த தளபதிகள் இவரும் ஒருவர். வெறும் 42 வயதில் மாரடைப்பால் மரணித்திருப்பது.. வேதனைக்குரியது..! :)

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி பால்ராஜ் மரணம்: 3 நாட்கள் துக்கதினம் மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

Tuesday, 20 May 2008

விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் மரணமடைந்ததாக வன்னியிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. திடீரென ஏற்பட்ட மாரடைப்பினாலேயே அவர் மரணமடைந்ததாகவும், அவரது மறைவை முன்னிட்டு மூன்று தினங்களுக்கு துக்கதினமாக அனுஷ்டிக்கப்படும் எனவும் விடுதலைப் புலிகளின் தலைமையகம் இன்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பில் புலிகளின் தலைமையகம் இன்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தலைமைச் செயலகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழம்

இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ்மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும்.

இவ்வாறு அந்த சுருக்கமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முதலாவது மரபு ரீதியான படைப்பிரிவான சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு 1991 இல் அமைக்கப்பட்ட போது அதன் முதலாவது தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பால்ராஜ், விடுதலைப் புலிகள் நடத்திய பாரிய தாக்குதல் நடவடிக்கைகள் பலவற்றிலும் முக்கிய தளபதியாகப் பணியாற்றியவர். ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் 2000 ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலில் முக்கிய பங்காற்றி, அத்தாக்குதலின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் பால்ராஜ்தான்.

சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் தளபதியாக 1991 – 1993 காலப் பகுதியிலும், பின்னர் 1995 – 1997 ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலும் பணிபுரிந்த பால்ராஜ், பல்வேறு விதமான யுத்த தந்திரோபாயங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர். குறிப்பாக உளவியல் ரீதியான தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் இவர் வல்லவர். யுத்தம் ஒன்றை நடத்திச் செல்லும் போதும் அதற்கான திட்டமிடலிலும் வித்தியாசமான உபாயங்களைக் கையாள்வதில் பால்ராஜ் தனது திறமையை பல சந்தர்ப்பங்களில் விளக்கியிருக்கின்றார்.

குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் நுறைவாயிலாக இருந்த ஆனையிறவு படைத் தளத்தை 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தகர்த்தெறிந்து அதனைக் கைப்பற்றிய போது பால்ராஜ் கையாண்ட உபாயங்கள் அனைவரையும் வியக்கவைப்பதாக அமைந்திருந்தது. இந்த உபாயங்கள் சிறிலங்கா படைத் தரப்பைத் திகைக்க வைத்தது. 1,200 போராளிகளுடன் படகுகள் மூலம் இயக்கச்சிப் பகுதியை பால்ராஜ் சென்றடைந்த போது, ஆனையிறவை வெற்றிகொள்ளாத நிலை ஏற்பட்டால் அனைவரும் உயிருடன் திரும்ப முடியாது என்ற நிலைமையே காணப்பட்டது.

இருந்தபோதிலும் வியக்கவைக்கும் உபாயங்களைப் பயன்படுத்தி, வேகமான தாக்குதலைத் தொடுத்து பால்ராஜ்ஜையும் குழுவினரையும் சுற்றிவளைத்த படையினரை மண்கவ்வ வைத்தவர் பால்ராஜ். பால்ராஜ்ஜின் அந்த தாக்குதல் உபாயமே அன்று ஆனையிறவின் வெற்றிக்குப் பிரதான காரணமாக அமைந்தது. இதனைவிட மணலாறு பகுதியிலும் அவரது தலைமையிலான தாக்குதல் அணிகளின் வீரம் செரிந்த தாக்குதல்கள் எதிரிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே அமைந்திருந்தது.

யுத்த நிறுத்த நடைமுறையிலிருந்த 2003 ஆம் ஆண்டில் பால்ராஜ் இருதய சந்திர சிகிச்சை ஒன்றுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இவ்வருட ஆரம்பத்திலும் இருதய நோயால் மீண்டும் பாதிக்கப்பட்ட அவர், மூன்று மாத காலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த காலப் பகுதியில் கூட மணலாறு மற்றும் மன்னார் பகுதிகளில் யுத்த நடவடிக்கைகளில் பால்ராஜ் ஈடுபட்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.ajeevan.ch/content/view/2847/1/

:) களம் பல கண்ட மூத்த தளபதிக்கு வீரவணக்கங்கள் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரத்தின் விருட்சம் ஒன்று வீழ்ந்து கிடக்கிறது.

நெஞ்சம் தாங்கமுடியவில்லையே!

தமிழீழ வரலாற்றின் மகத்தான வீரனே!

உனக்கு எம் வீர வணக்கங்கள்!

இந்நேரத்தில் காசி அண்ணனின் சில வரிகள்:

காலமெல்லாம் புலிகுகையில் நீ தங்கினாய்

கண்மூடி இன்று படமாய் தொங்கினாய்

பூமாலை உன் படத்தில் போட்டார் பார்த்தோம்

போட்டவரே நஞ்சு மாலை ஏற்றார் பார்த்தோம்

நீ மடியவில்லையடா

உன் கதை முடிய்வில்லையடா!

ஓ வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர்

எழுதி வைக்கப்படும்

நீ மடியவில்லையடா

உன் கதை முடிய்வில்லையடா!

களம் பல கண்ட மதியுகத் தளபதி பிரிகேடியர் பால் ராஜ்ஜுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

வீரப்போர்களம் பலகண்ட உனக்கு வணக்கம் அண்ணா. :)

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த தளபதிக்கு வீரவணக்கங்கள்

மறைந்த தளபதிக்கு

வீர வணக்கமும் இதய அஞ்சலியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் வீரத் தளபதிக்கு எமது சிரம் பணிந்த வீரவணக்கம். இவர் வீரத்திற்கு இரு சான்றுகள்:

1. ஆனையிறவு படைத்தளத்தை என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றும்படி ரத்வத்தை பலாலியிலிருந்து ஆணைக்கு மேல் ஆணை பிறப்பித்த பொழுது ஆனையிறவு கொமாண்டர் கூறினானாம்: ஐயகோ, பிரபாகரன் வந்தால் பரவாயில்லை எங்களுக்குப் பக்கத்தில பால்ராஜ் வந்திட்டார் இனி நாங்கள் இருக்க முடியாது என்று.

2. சிங்கப்ப+ரில் சிகிச்கை முடிந்து கொழும்பு விமானநிலையம் திரும்பியபோது பல படையினர் தளபதி பால்ராஜை ஒரு முறை பார்ப்பதற்கு முண்டியடித்தார்களாம். ஏனென்றால் அவர்களை ஓட ஓட விரட்டிய தளபதியின் திட்டமிடலையும் வீரத்தையும் நினைத்து.

இவர் பெயர் தமிழீழ வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

மீளாத்துயில் கொண்ட அண்ணனுக்கு அஞ்சலிகள்.

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.

பால்ராஜ் அண்ணாவின் பெயரைக் கேட்டாலே சிங்கள இராணுவத்திற்கு உதறலெடுக்கும். ஈழத் தமிழர்களுக்கு இது பேரிழப்பாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் பால்ராஜ் அண்ணையைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும் சமீபத்தில் ஆனையிறவு மீட்பு நடவடிக்கை ஒளிக்காட்சியைப் பார்த்தபோது எப்பேர்ப்பட்ட ஒரு அஞ்சாநெஞ்சன் என்கிற மலைப்பு ஏற்பட்டது. இப்படி ஆகுமென்று கனவிலும் நினைக்கவில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இயங்கும் ரி.வி.ஜ...தொலைக்காட்சி நிறுவனம் தனது வழமையான நிகழ்வுகளை நிறுத்தி, தாயக சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் நாங்களும் இவருக்குரிய மரியாதையை செலுத்த ஆயத்தமாகுவோமாக...

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப்படைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய தளபதி பால்ராஜுக்கு இதய அஞ்சலிகள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.