Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய மகிந்த சிந்தனை பாடசாலை நடைபெறும் நாட்களை 5 இல் இருந்து 4 நாட்களாக குறைப்பு?

Featured Replies

எரிபொருளை சிக்கனப்படுத்த அரசாங்கம் பாடசாலை இயங்கும் நாட்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை நடத்தப்படும் நேரத்தை நீடித்து, பாடசாலை நடைபெறும் நாட்களை 5 இல் இருந்து 4 நாட்களாக குறைக்கும் யோசனை ஒன்று ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர எரிபொருளை சிக்கனப்படுத்தும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாடசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து, உரிய தரப்புகளின் கருத்துக்களை பெற்று இரண்டு வாரங்களுக்குள் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://isoorya.blogspot.com/

space.gif

கல்வியும் சிக்கனமாகப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஈரானில இருந்து வந்த ஜனாதிபதி எரிபொருள் குடுக்கயில்லையே. இந்தியாவுக்கெல்லாம் நேரடியாக் குழாயால குடுக்கப் போனினமாம். உவையள் ஆயுதத்தைக் கேட்டுப் போட்டு எரிபொருளைக் கேட்க மறந்திற்றினம் போல.

அட...சா நான் படிக்கிற காலத்தில உந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கலாமே.. :wub: (என்ன கொடுமை இது)...என்னும் கொஞ்ச காலத்தால..(மலசல கூடமும் போக கூடாது)..என்டு மகிந்த மாமா சட்டம் கொண்டு வாறாறோ யாருக்கு தெரியும்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

இவர் இன்னொரு இம்சை அரசனாக மாறி வருகிறார்..!

  • கருத்துக்கள உறவுகள்

5 நாட்களை 4 நாட்களாக மற்றும் போது , 5ம் நாள் பிள்ளைகள் தனியார் கல்வி நிலையத்துக்கு செல்வர்கள். அப்பொழுது எரிபொருள் குறையாதா?.

அட...சா நான் படிக்கிற காலத்தில உந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கலாமே.. :wub: (என்ன கொடுமை இது)...என்னும் கொஞ்ச காலத்தால..(மலசல கூடமும் போக கூடாது)..என்டு மகிந்த மாமா சட்டம் கொண்டு வாறாறோ யாருக்கு தெரியும்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

அப்படி என்றால் ஊர் நாறிப்போகும் என்று மகிந்தாவுக்கு தெரியாதா என்ன?

அப்படி என்றால் ஊர் நாறிப்போகும் என்று மகிந்தாவுக்கு தெரியாதா என்ன?

உங்களுக்கு தெரியுது அவருக்கு தெரியனுமே :wub: ...(இப்ப மட்டும் என்னவாம் நாறாமலா இருக்கு)....சின்னபுள்ளதனமா அல்லோ இருக்கு.. :wub:

அப்ப நான் வரட்டா!!

இப்ப ஞாயிற்று கிழமைகளில் மாத்திரம் நடக்கிற தம்ம பாடசாலைகளை இன்னுமொருநாளும் சேர்த்து விடப்போறாங்கள்..

மழைக்கு கூட ஒதுங்காத நாட்டாமைக்கு கல்வியின் அருமை பற்றி என்ன தெரியும். ஸ்ரீலங்கா ஜனாதிபதிகளின் வரலாற்றிலேயே வெளிநாட்டில் ( ஐநாவிலும் + சமீபத்தில் இலண்டனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் + அத்துடன் கடந்த வருடம் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் உட்பட) சிங்களத்திலேயே பேசிய பெருமை அம்பாந்தோட்டை துண்டு மாமா ஒருவருக்குத்தான் ஏனென்றால் அவருக்கு சிங்களம் வரும் ஆனால் ஆங்கிலம் வராது.

சிக்கனம் பிடிக்க எவ்வளவோ விஷயம் இருக்க எங்க போய் எதில் கைவைக்கிறார்கள் பாருங்கள். பொருளாதார இக்கட்டிலும், அத்துடன் பண வீக்கத்திலும் சிக்கி நாடு போகிற போக்கிலே ----- கடந்த மாதம் மாவிலையேற்றம் பற்றி கருத்து தெரிவித்த உணவமைச்சர் மக்களை கோதுமை மாவிற்கு பதிலாக சோறும் சம்பலும் சாப்பிடச் சொன்னார். இந்த மாத நிலவரம் மாவை விட அரிசி விலை கூட.

இப்பொழுது எரிபொருள் சிக்கனத்திற்கு மாண்புமிகு நாட்டாமை வைத்த யோசனை உணவமைச்சரையும் மிஞ்சிவிட்டார் போங்கள்.

" கேணைப்பயல் ஊருக்கு கிறுக்குப்பயல் நாட்டாமை " என்றிருக்கும் நிலை மாறி யுத்தத்தை நிறுத்தி தமிழ் மக்களின் சுய நிர்ணய

உரிமையினை அங்கீகரித்து இலங்கைத்தீவில் அமைதி பூக்காதவரை எரிபொருள் சிக்கனம் இல்லை இன்னும் என்னென்னவோவிற்கெல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அமைச்சரவைக் கூட்டம் போட்டு மகிந்த சிந்தனைய வை அலச வேண்டியதுதான்.

Edited by thamizhanpan

5 நாட்கள் பாடசாலை போய் படித்தே என்னால் பாஸ்பன்ன முடியவில்லை இதுக்குள்ள 4 நாள்? என்னை போன்ற அறிவாளிகள் இனி உருவாக சந்தர்பம் இல்லை........

மழைக்கு கூட ஒதுங்காத நாட்டாமைக்கு கல்வியின் அருமை பற்றி என்ன தெரியும். ஸ்ரீலங்கா ஜனாதிபதிகளின் வரலாற்றிலேயே வெளிநாட்டில் ( ஐநாவிலும் + சமீபத்தில் இலண்டனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் + அத்துடன் கடந்த வருடம் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் உட்பட) சிங்களத்திலேயே பேசிய பெருமை அம்பாந்தோட்டை துண்டு மாமா ஒருவருக்குத்தான் ஏனென்றால் அவருக்கு சிங்களம் வரும் ஆனால் ஆங்கிலம் வராது.

சிக்கனம் பிடிக்க எவ்வளவோ விஷயம் இருக்க எங்க போய் எதில் கைவைக்கிறார்கள் பாருங்கள். பொருளாதார இக்கட்டிலும், அத்துடன் பண வீக்கத்திலும் சிக்கி நாடு போகிற போக்கிலே ----- கடந்த மாதம் மாவிலையேற்றம் பற்றி கருத்து தெரிவித்த உணவமைச்சர் மக்களை கோதுமை மாவிற்கு பதிலாக சோறும் சம்பலும் சாப்பிடச் சொன்னார். இந்த மாத நிலவரம் மாவை விட அரிசி விலை கூட.

இப்பொழுது எரிபொருள் சிக்கனத்திற்கு மாண்புமிகு நாட்டாமை வைத்த யோசனை உணவமைச்சரையும் மிஞ்சிவிட்டார் போங்கள்.

" கேணைப்பயல் ஊருக்கு கிறுக்குப்பயல் நாட்டாமை " என்றிருக்கும் நிலை மாறி யுத்தத்தை நிறுத்தி தமிழ் மக்களின் சுய நிர்ணய

உரிமையினை அங்கீகரித்து இலங்கைத்தீவில் அமைதி பூக்காதவரை எரிபொருள் சிக்கனம் இல்லை இன்னும் என்னென்னவோவிற்கெல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அமைச்சரவைக் கூட்டம் போட்டு மகிந்த சிந்தனைய வை அலச வேண்டியதுதான்.

தமிழன்பன் உங்கள் கருத்துடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை.

தனது சொந்த மொழியில் பேசுவதை இழிவாகக் கருதுவது சரியா. இது எம்மவரிடத்தில் அதிகமாகவே காணப்படுகிறது. அதனால் தான் தமிழர் இருவர் சந்தித்து;க கொண்டால் கூட ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

ரஸ்ய ஜெர்மனிய பிரான்ஜ் தலைவர்கள் கலந்து கொள்ளும் அனைத்து வைபங்கள் கூட்டங்கள் என்பவற்றில் தமது மொழிகளிலேயே பேசுவார்கள். இது அவர்கள் தங்கள் மொழி மீது கொண்ட பற்றுக்கும் அடையாளம்.

மஹிந்த லண்டன் பல்கலைக்கழகத்தில் எந்த மொழியில் பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சிங்களத்தில் பேசியிருந்தால் அது மஹிந்த தொடர்பான என்னுடைய மதிப்பை (மிக மிக மிகக் குறைவு என்ற போதிலும்) சற்று அதிகரிக்க உதவுமே தவிர குறைக்காது.

மணிவாசகன்!

உங்கள் கருத்து ஒரு தமிழ் சினிமா காமடி சீனில் வந்ததா ஒரு ஞாபகம்... இது கிட்டத்தட்ட மணிவண்ணன் விவேக்கிற்கு சொன்னமாதி இல்லோ கிடக்கு..

தமிழை கொச்சப்படுத்த வேணுமெடதற்காக சொல்லவில்லை... ஒருத்தர் எழுதின கருத்துக்கு மறுகருத்துக்கு மறுகருத்து எழுதவேணுமெண்டுகூட எழுதவில்லை... சிங்கள மானாட்டில் மகிந்த இங்கிலீசுல பேசினாதான் அசிங்கமா கிடக்கும். அதேமாதிரி ஒரு இங்கிலீஸ் மானாட்டில் போய் சிங்களத்திலதான் பேசுவனெண்டு அடம் பிடிப்பது சும்மா பிலிம்காட்டுவதுதான்.

ஏதோ மகிந்தவின் மகிமைக்காக அவர் அழக்கப்படவில்லை... தனது தேவைக்காக தானாகவே கேட்டு வாங்கிக்கொண்ட வாய்ப்பது... மற்றும் நீங்கள் சொன்ன ஏனைய சந்தர்ப்பங்களில் எல்லாம் மகிந்தவின் உரைக்கு கிடைக்கக்கூடிய சர்வதேச அவதானத்தை விட அந்த உரைபற்றி உள்ளூரில அலட்டினதுதான் பெரிதாய்க்கிடந்தது. ...

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் அநேகமாக அனைத்து விடயங்களும் ஆங்கிலத்தில நடந்து கொண்டிருக்க ரஸ்ய அதிபர் ரஸ்ய மொழியில் பேசுவது கோமாளித்தனமானதா? அல்லது பிரான்ஸ் அதிபர் பிரெஞ்சு மொழியில் பேசுவது கோமாளித்தனமானதா?

ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். நான் மஹிந்த பல்கலைக்கழகத்தில் உரையாற்றியது பெருமைப்படவேண்டிய விடயம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் அவர் சிங்களத்தில் பேசியது கிண்டலடிப்பதற்குரிய விடயமேயல்ல என்பதையும் தன் தாய் மொழியில் பேசுவதற்கு எவரும் வெட்கப்படவோ அவமானப்படவோ தேவையில்லை என்பதையுமே சொல்ல வந்தேன்.

நாளை தமிழீழதின் தலைவரும் ஜநா சபை போன்ற பொதுவிடயங்களில் தமிழில் தான் பேசவேண்டும்

ஆங்கிலம் தெரியாது என்ற அர்த்ததில் இல்லை தமிழ்ப்பற்றை வெளிக்காட்டவே

தனிப்பட்ட சந்திப்பில் என்ன மொழியும் பேசலாம் ஆனால் பொது வைபவங்களில் சொந்த மொழியில் பேசுவது என்பது பெருமமக்குரியவிடயம்....

நிச்சயமாய் நம் தமிழ் தலைவர்கள் அதனைத்தான் செய்வார்கள் வினித்

ஆனால் எம்மக்களிடம் தான் இந்த ஆங்கில மோகம் தம்மிடையே கூட ஆங்கிலத்தில் பேசுமளவிற்குக் கொண்டு போய் விட்டிருக்கிறது.

நிச்சயமாக...தமிழ்த் தலைவர்கள் கூட அவ்வாறே நடந்துகொள்வார்கள்....

ஏனெனில் ஆங்கிலத்தில் கதைத்தால் தான் பெருமை என்ற மனப்பான்மை தான் காரணம்.

இவ்வாறான மாயைகள் தான் ஆங்கில உச்சரிப்புக்களை தமிழில் எழுதுவதற்கும் அது தமிழின் முன்னேற்றம் என வாதிடுவதற்கும் காரணமாக அமைகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

:wub: ஜம்மு பேபி:

அட...சா நான் படிக்கிற காலத்தில உந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கலாமே.. (என்ன கொடுமை இது)...என்னும் கொஞ்ச காலத்தால..(மலசல கூடமும் போக கூடாது)..என்டு மகிந்த மாமா சட்டம் கொண்டு வாறாறோ யாருக்கு தெரியும்..

வந்தாலும் வரும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவனவன் எரிபொருளை மிச்சப்படுத்த என்னன்னமோ செய்யுறாங்கள்.இந்த மோட்டுக்கூட்டங்கள் பிள்ளையளின்ரை படிப்பிலை எல்லே கையை வைக்குதுகள்.வெங்கிடாந்தியள்

நிச்சயமாய் நம் தமிழ் தலைவர்கள் அதனைத்தான் செய்வார்கள் வினித்

ஆனால் எம்மக்களிடம் தான் இந்த ஆங்கில மோகம் தம்மிடையே கூட ஆங்கிலத்தில் பேசுமளவிற்குக் கொண்டு போய் விட்டிருக்கிறது.

அதுக்காக பிள்ளையான் எல்லாம் தமிழ்பற்றில் தான் தமிழில் பேசுவதாக நினைக்க கூடாது :wub::wub:

மஹிந்த லண்டன் பல்கலைக்கழகத்தில் எந்த மொழியில் பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சிங்களத்தில் பேசியிருந்தால் அது மஹிந்த தொடர்பான என்னுடைய மதிப்பை (மிக மிக மிகக் குறைவு என்ற போதிலும்) சற்று அதிகரிக்க உதவுமே தவிர குறைக்காது.

இலங்கை பிரித்தானிய காலணித்துவ நாடு... கொமன்வெல்த் நாடுகளில் இருக்கும் நாடும் கூட... ஆங்கிலம் இலங்கையின் ஆட்ச்சி மொழிகளில் ஒண்று...

அதன் தலைவரான மகிந்த ஒண்றும் சிங்கள நாட்டின் ஜனாதிபதி கிடையாது. இலங்கையில் சிங்களம் மட்டும்தான் தேசிய மொழியும் கிடையாது... அப்படி பட்ட ஒரு நாட்டின் தலைவர் தேசிய மொழியைதான் பொது இடத்தில் பேச முடியும். அதாவது சிங்களமும் பேசி அவர் தமிழ், ஆங்கிலமும் பேசி இருக்க வேண்டும்... ஆனால் சிங்களத்தில் மட்டும் பேசியது எப்படி அவரின் மரியாதையை உயர்த்தியது....???

மற்ற மொழிகளில் பேசாது விட்டது அவருக்கு ஆங்கிலம், தமிழ் மொழிகள் சாரளமாக வராது என்பதுக்காக இருக்கலாம்... அது இலங்கை அரசியல் தெரிந்த பல்களைக்கழக மாணவர்களுக்கு நன்கு தெரிந்தும் இருக்கும்...

இன்னும் சொன்னால் மகிந்தரின் இனவெறியைதான் சிங்கள பேச்சு கோடிட்டு காட்டுகிறது.....!!!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சிங்கள மொழியில் உரையாடினால் அது அவரது மொழியின் மீதுள்ள பற்று.

நாங்களும் தமிழ் மொழியில் கதைப்போமே.

முன் உதாரணம் மறைந்த தமிழ் செல்வன் அண்ணா அவர்கள்.

இலங்கை பிரித்தானிய காலணித்துவ நாடு... கொமன்வெல்த் நாடுகளில் இருக்கும் நாடும் கூட... ஆங்கிலம் இலங்கையின் ஆட்ச்சி மொழிகளில் ஒண்று...

அதன் தலைவரான மகிந்த ஒண்றும் சிங்கள நாட்டின் ஜனாதிபதி கிடையாது. இலங்கையில் சிங்களம் மட்டும்தான் தேசிய மொழியும் கிடையாது... அப்படி பட்ட ஒரு நாட்டின் தலைவர் தேசிய மொழியைதான் பொது இடத்தில் பேச முடியும். அதாவது சிங்களமும் பேசி அவர் தமிழ், ஆங்கிலமும் பேசி இருக்க வேண்டும்... ஆனால் சிங்களத்தில் மட்டும் பேசியது எப்படி அவரின் மரியாதையை உயர்த்தியது....???

மற்ற மொழிகளில் பேசாது விட்டது அவருக்கு ஆங்கிலம், தமிழ் மொழிகள் சாரளமாக வராது என்பதுக்காக இருக்கலாம்... அது இலங்கை அரசியல் தெரிந்த பல்களைக்கழக மாணவர்களுக்கு நன்கு தெரிந்தும் இருக்கும்...

இன்னும் சொன்னால் மகிந்தரின் இனவெறியைதான் சிங்கள பேச்சு கோடிட்டு காட்டுகிறது.....!!!

உண்மை தான் மகிந்தருக்கு துண்டை போட்டு கதிரையில் இருக்கத்தான் தெரியும் மற்றதெல்லாம் பக்கத்து நாட்டு பூனையல் தான் நடத்துது...

நான் சொல்லுவன்

இதுவந்து மகிந்தவின்ர ஆசை இல்லை அவர் எடுத்துக்கொண்ட பாத்திரம் அது...

உப்பிடி எல்லாம் பேசினாத்தான் தான் ஒரு சிங்களத்தின்ர விடிவெள்ளி எண்டு காட்டலாம்...

அய்க்கிய நாட்டு சபையில பேசும்போது சொந்த மொழியில் பேசுவது ஒரு கவுரவம்தான்.. அதுக்காக ஒரு பல்கலைக்கழக விழாவிலையும் போய் பொழிப்பற்றை காட்டவேணுமெண்டில்லை...

முன்னம் ஆரோ ஒருமேதை சொன்னமாதிரி ஒரு ஞாபகம்...

துரோகிகள் வஞ்சர்களின் இறுதி தஞ்சம் நாட்டுப்பற்றுத்தான்... இதில முழியையும் சேர்த்துக்கொள்ளுங்கோ.

கொழும்பில் காலி வீதியில் நின்று வரும் போகும் வாகனங்களை பார்த்தால் அதில் 50% இற்கும் மேலானவை அரச திணைக்கள மற்றும் இராணுவ வாகனங்கள் தான். அதிலும் 90% அரச மற்றும் இரானுவ தேவைகளுக்கு பாவிக்கப்படாமல் சொந்த தேவைகளுக்கு பாவிக்கப்படுவது தான் உண்மை. பெரும்பலான இரனுவ/அரச வாகனங்களில் குடும்ப உருப்பினர்கள் பயனம் செய்வதை சாதாரனமக காணலாம்.

1. இரனுவ/அரச அதிகாரிகளின் மனைவிமார் கடைக்கு/சந்தைக்கு செல்ல.

2. இரனுவ/அரச அதிகாரிகளின் மனைவிமார் சேவாவனிதா போன்ற கூட்டங்களுக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் செல்ல

3. இரனுவ/அரச அதிகாரிகளின் பிள்ளைகளை படசாலைக்கு/ரியூசனுக்கு கூட்டிச்செல்ல.

இவற்றை நிறுத்தாமல் சாதாரண மக்களின் அடிப்படை தேவைகளின் ஒன்றான kalviyil கை வைப்பதை என்னவென்று சொல்வது?

Edited by rajcan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.