Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேள்விகளுக்கு எங்கே பதிலளிப்பது?

Featured Replies

எழுவான் அவர்களே,

என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எங்கே பதிலளிப்பது?

அல்லது எனது பதில் உங்களது சித்தாந்தத்தை தழுவியதாக அமையவேண்டும் என்ற எழுதாத விதியுள்ளதா?

எனது பதில் பிடிக்காததால் நீக்கினீர்களா? அல்லது அதற்கு வந்த பதில்களால் நீக்கினீர்களா?

மௌனமாக நழுவாமல் பதில் தாருங்கள் நண்பரே!

நடுவுநிலமையுடன் இருந்தால்தான் கருத்தாடல் தளத்தை நல்ல முறையில் கொண்டுசெல்ல முடியும். நல்லபடியாக கருத்தாடல் செய்யமுடியும்.

ஆரோக்கியமான ஒரு கலந்துரையாடல் நடைபெறுவதற்கு நடுவுநிலமை முக்கியமானது.

சாணக்கியன் அண்ணை, தனது கருத்தில் தனிநபர் தாக்குதல் ஒன்றும் செய்யவில்லை. தனது அபிப்பிராயத்தை கூறி இருந்தார். ஆனால், அவர் கூறிய கருத்துக்கு பதில் கருத்து எழுதியவர்கள் தனிநபர் தாக்குதல் செய்து இருந்தார்கள்.

இங்கே ஒருபக்கச் சார்பான கருத்துக்கள் எழுதப்படுவதையா நிருவாகம் எதிர்பார்க்கின்றது?

சாணக்கியன் அண்ணா வித்தியாசமான முறையில் எழுதுவதால் அவர் போராட்டத்திற்கு எதிரானவர் என்று அர்த்தம் அல்ல.

சாணக்கியன் அண்ணாவின் கருத்தினை கருத்தினால் வெல்ல முடியாது அவர்மீது தனிநபர் தாக்குதல் நடாத்தப்பட்டதை நிருவாகம் கண்டுகொள்ளாது அவரது கருத்துக்களை அப்புறப்படுத்தி உள்ளது சரியாகத் தெரியவில்லை.

இருதரப்பு வாதங்கள் இருந்தால்தான் ஓர் ஆரோக்கியமான கருத்தாடல் நடைபெற முடியும். எல்லாத்துக்கும் ஓம் ஓம் ஓம் சரி சரி சரி எண்டு கருத்து எழுதிப்பழகினால் அது எங்கே போய் முடியும்?

கள உறவுகளே, கருத்தினை கருத்தினால் மோதிக்கொள்ளுங்கள். நானும் பிழைவிடுவது உண்டு. நானும் சாணக்கியன் அண்ணாவுடன் ஆரம்பத்தில் பகைத்துக்கொண்டது உண்டு. ஆனால், அவர் கூறும் கருத்தினை பாராது அவரை தனிப்பட நோக்கி கருத்து எழுதுவதனால் கிடைக்கப்போவது என்ன?

நடுவுநிலமை நடுவுநிலமை நடுவுநிலமை.. எண்டு ஒண்டு இங்கு உருவாகுமா? :lol:

சரி அதை நான் இப்படியாவது இங்கு உருவாக்கி மகிழ்கின்றேன்.

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

  • தொடங்கியவர்

எழுவான் அவர்களே உங்கள் தனிமடலுக்கு நன்றி.

உங்கள் பதில் நான் எழுதிய கருத்தை விட மிகவும் நகைசுவையாகவும் அதேவேளை மிகவும் பாரதூரமானதாகவும் அமைந்துள்ளது!

அதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை.

மேலும் நான் இங்கு யாழ்களத்திற்கு வருகை தருவது தமிழ் மக்களில் ஒருவனாக, அவர்களுடன் என் கருத்துக்களை பகிர்ந்த கொள்ளவேயன்றி, உங்கள் தனிப்பட்ட கருத்துக்களுடன் எனது கருத்தை சரிபார்த்துக் கொள்ளவல்ல என்பதை உங்களுக்கு கூற விரும்புகிறேன். அதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியே போதுமானது.

எனது கருத்து "தவறான முன்னுதாரணம்" என்று கூறி உங்கள் தனிப்பட்ட ஊகங்களை வைத்து உங்கள் தவறை நியாயப்படுத்தியுள்ளீர்கள்!

இது நேர்மையான அணுகுமுறையல்ல, எனவே அதனை பகிரங்கமாக இங்கே முன்வைக்கவும். அந்த கருத்து தனிமடல் என்பதால் அதை இங்கே பிரசுரிப்பதற்கு உங்கள் அனுமதியை கோருகிறேன்!

உங்கள் விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

நடுவுநிலமை

உண்மைக்கு முன் நடுவுநிலமை என்ற ஒன்றில்லை.

சாணக்கியனின் நிலைப்பாடு என்பது தனிநபர் அவருக்குள் உள்ள குழப்பங்களுக்கு மக்களை இலக்காக்குவதாக உள்ளது. :lol:

வன்னியில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு நடுவுநிலமை.. கொழும்பில் நடக்கும் குண்டு வெடிப்புக்கு நடுவுநிலமை இல்லை புலிகள் என்று பேண முனையும் செயற்பாடே.... நடுவுநிலமை கடந்து போய் விட்ட நிலையில்..

உண்மையை ஆதாரங்களை தேடிச் சொல்ல யாராவது இருந்தால்.. அதைச் செய்யுங்கள். எமக்கு நடுவுநிலமை தேவையில்லை. எமது மக்கள் சார்ந்த அழிவுகளின் உண்மை காரணிதான் வெளிப்பட வேண்டும். நடுவுநிலமை அல்ல.. இந்த இடத்தில்.. இந்தக் காலத்தில்..! :unsure::lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

மீண்டும் தனிமடலில் "நிர்வாகம் அனுப்பும் தனிமடல்களுக்கு விளக்கங்களை முன்வைக்க கருத்துக்கள விதி இடமளிக்கவில்லை" என்று கூறி அப்படி பகிரங்க விவாதத்திற்கு வருவதானால் "வலைஞன் அல்லது மோகன் அவர்களுக்கு அனுப்பி அனுமதி பெற முயற்ச்சிக்கவும்" என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

குறித்த களவிதியின் இணைப்பை இங்கே தரவும்.

அத்துடன், குண்டுவைத்தது யார் யார் என்ற உங்கள் தனிப்பட்ட ஊகங்களின் அடிப்படையில் எனது கருத்து தவறு என்று நீங்கள் எவ்வாறு கூறுகிறீர்கள்?

நீங்கள் கூறலாம், ஆனால் அதை ஒரு கருத்தாளராக களத்தில் நின்று கூறுங்கள். வரவேற்கின்றேன்! ஆனால் மட்டுறுத்துதல் என்ற அராஜகத்தை பிரயோகித்து உங்கள் நிலைப்பாட்டிற்கு எதிரான என் கருத்தை நீக்கிவிட்டு, அதற்கு தனிமடலில் மட்டும் பதில்மேல் பதில் என்று உங்கள் கருத்து திணிப்பை மேலும் பிரயோகிப்பது கருத்துப் பயங்கரவாதமேயன்றி வேறில்லை.

அத்துடன் எனது கருத்து "தமிழ்மக்களின் கருத்தாக தவறாக அர்த்தப்பட்டு விடும்" என்று கூறி என் இனஅடையாளத்தை கேலிசெய்கிறீர்களா?

நீங்கள் குறிப்பிடும் தமிழ்மக்களை வரையரை செய்யமுடியுமா?

மேற்குறித்த கேள்விகளுக்கு இங்கே பதிலளிக்கவும் அல்லது

என்னை தடை செய்யவும்!

சுதந்திரம் (?) பற்றி பேசும் ஒரு கருத்துக்களத்தில் (?) கருத்துச்சுதந்திரத்தை பறிகொடுத்துவிட்டு அம்மணமாக நின்று துதிபாட நான் விரும்பில்லை!

நன்றி!

Edited by சாணக்கியன்

சாணக்கியன் அண்ணா கொழும்பில் குண்டு அரசாங்கத்தாலோ, இல்லை அதன் ஒட்டு குழுக்களாலோ வைக்கப்படவே இல்லை என்று உங்களால் அடித்து சொல்ல முடியுமா....???

ஒரு ஊகத்தில் உங்களால் சொல்லப்படும் கருத்தை எதிர்த்து வாதிட இங்கே பலர் இருக்கிறார்கள்... அதை வெட்ட வேண்டிய தேவை இல்லை.... உங்களின் கருத்துக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் இங்கு இருக்கும் மட்டுறுத்துனர்கள் இருக்கலாம்... ஆனால் கருத்து எழுதுபவர்கள் கிடையாது...!!

  • தொடங்கியவர்

நண்பரே நெடுக்காலபோவான்,

உங்கள் தனிப்பட்ட கருத்திற்கும் நன்றி!

ஆனால் புலிகளே சில தவறுகளுக்காக மன்னிப்புகோரிய வரலாற்றை அறிந்தும் கூட,

"..நடுவுநிலமை கடந்து போய் விட்ட நிலையில்.."

மற்றும்

"..இந்த இடத்தில்.. இந்தக் காலத்தில்.." (தேவையற்றது) என்று கூறி மட்டுறுத்துதல் என்ற கருத்து பயங்கரவாதத்திற்கு பக்கபலமாக நிற்கிறீர்களே?

இது தகுமா?

அரசு தான் வன்னியில் வன்முறை செய்யவில்லை என்றதும்.. மெளனமாகின்றோம்.. அரசுகள் செய்த தவறுகளையும் அதன் தலைவர்கள் காலங்கடந்து சுடலை ஞானம் கண்டு வெளியிட்டனர் என்பதையும் இலகுவாக மறக்கின்றோம்.

வன்னியில் வெடிக்கும் போது இது உள்வீட்டு வேலை என்று சிங்கள இராணுவம் கதையளந்த போது.. அதை ஏற்றுக் கொண்டவர் போல நின்றவர் நீங்கள்.

ஆனால் கொழும்பில் நடப்பதற்கு மட்டும்.. அது சிங்கள அரசின் உள்வீட்டு வேலையல்ல.. புலிகள் தான் என்று அடித்துச் சொல்கிறீர்கள்.

அந்த வகையில்... நடக்கும் அனைத்துக் கொலைகளுக்கும் புலிகள் தான் காரணம் என்று கற்பிக்க விளையும் சிங்கள அரசுக்கும் அதற்கு சேவகம் செய்யும் துரோகிகளுக்கும்.. உங்களுக்கு என்ன வேறுபாடு???

சிங்கள அரசு.. ஆழ ஊடுருவும் அணியை இயக்குகிறது என்பதை சமாதான காலத்திலேயே கண்காணிப்புக் குழு முன்னிலையில் அவர்களின் நடவடிக்கைகளை முறியடித்து.. உடலங்களை கைப்பற்றி காட்டினர் புலிகள். அப்படி இருந்தும்.. வன்னி நிகழ்வுகளுக்கு அரசுக்குள்ள பொறுப்பை அது தட்டிக்களித்து புலிகள் மீது பழிபோடும் போது.. அதற்கு மெளமிருப்பதும்.. புலிகளின் உள்வீட்டு வேலை என்று சந்தேகம் வளர்ப்பதுமா கருத்துச் சுதந்திரம்..??! இவை கருத்துச் சுதந்திரமல்ல. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் கொடிய சிங்களப் பேரினவாத அரசுக்கு சார்பாகச் செய்யப்படும் பிரச்சாரம்.

சிங்களப் படையினர் கொன்று குவிக்கும் மக்களுக்கு ஆதாரம் கிடையாது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களே சிங்கள அரசுடன் நேர்மையாகச் செயற்பட முடியாது என்று கூறி வெளியேறும் நிலையில்... நீங்கள் சிங்கள அரசின் குற்றங்களை புலிகள் மீதான குற்றமாக்கிக் காட்டும் வகையில் சந்தேகம் வளர்ப்பது... எமது மக்களுக்கு நடுநிலை நின்று தகவல் சொல்வதல்ல. அது சிங்கள அரசின் அராஜகத்துக்கு துணைபோகும் செயல்.

அதனை கண்டிக்க வேண்டியது.. மனித உரிமைகளை காக்க விரும்பும் ஒரு சராசரி மனிதனின் கடமை. அதை நாம் செய்வோம்..!

சிங்களவர்கள் கொல்லப்படும் போது மனிதாபிமானம் பிறக்காமல் போனதற்கு எமக்குள் மனிதாபிமானம் இல்லை என்பதல்ல அர்த்தம். தமிழ் மக்கள் இழப்புக்களை சந்திக்கும் போது மனிதாபிமானம் இன்றி காட்டுமிராண்டித்தனமாக நடக்கும் ஒரு கூட்டம் அழிகிறதே என்ற நிலையை ஏற்படுத்திய சிங்களவர்களின் செயற்பாடுதான் காரணம்..! அதை புரிந்து கொள்ளுங்கள்..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தயா,

நீங்கள் இந்தக் கேள்வியை குறித்த அந்த தலைப்பிலல்லவா விவாதிக்க வேண்டும். அங்கே நான் எனது கருத்து தவறு என்று உணர்த்தப்பட்டால், அதை நான் மனப்புர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். அது எனக்கு மட்டுமல்ல என்னை போல சந்தேகங்கள் தோன்றும் பலருக்கும் உதவக்கூடும்!

இங்கே தனிப்பட்ட அரசியல் கருத்தை கொண்ட ஒரு தனிநபர் நேர்மையற்ற முறையில் என்னை தாக்குவது மனஉழைச்சலை தருகிறது!

நான் எதிர்பார்ப்பது பலதரப்பட்ட தமிழ் பேசும் மக்களும் இங்கு வந்து தன்னம்பிக்கையுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து தெளிவு பெறும் ஒரு பலமான சங்கமமாக இந்த யாழ் திகழவேண்டும் என்பதே! அல்லாமல் தனியே மாப்பு குறிப்பிட்து போல ஒருவர் அனுதாபம் தெரிவிக்க மற்றையவர் ஆழ்ந்த அனுதாபம் என்று கூறி காலத்தை ஓட்டவேண்டியதுதான்.

நான் இங்கே பொழுதுபோக்குக்கு மட்டுமன்றி, கொஞ்சம் வலியும், கொஞ்சம் பயமும் என்ற நிலையில்தான் இங்கு உலாவருகிறேன். ஏற்கனவே இங்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களால் முன்னர் போலன்றி கருத்து எழுதுவதை நான் வெகு வாக குறைத்திருந்தேன்.

இனி....?

தயா,

நீங்கள் இந்தக் கேள்வியை குறித்த அந்த தலைப்பிலல்லவா விவாதிக்க வேண்டும். அங்கே நான் எனது கருத்து தவறு என்று உணர்த்தப்பட்டால், அதை நான் மனப்புர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். அது எனக்கு மட்டுமல்ல என்னை போல சந்தேகங்கள் தோன்றும் பலருக்கும் உதவக்கூடும்!

இங்கே தனிப்பட்ட அரசியல் கருத்தை கொண்ட ஒரு தனிநபர் நேர்மையற்ற முறையில் என்னை தாக்குவது மனஉழைச்சலை தருகிறது!

நான் சொன்னது உங்களின் கருத்து தூக்க பட்ட காரணமும்... அதுக்கு நிர்வாக அதிகாரி எடுத்த நடவடிக்கையை நான் ஏற்று கொள்ள வில்லை என்பதும் மட்டுமே...!!!

சுருக்கமாக சொன்னால் நீங்கள் ஊகம் செய்யும் விடயத்தை ஒட்டு மொத்த தமிழரின் கருத்தாக அமையாது என்பது தான்...!! அதுக்கான விளக்கங்கள் உங்களுக்கு வைக்கப்படும்.....!!

உங்களி கருத்து வெட்டப்பட்டதையும் நான் ஆதரிக்க வில்லை.... அதுக்காக நீங்கள் வைத்த கருத்தையும் நான் ஆதரித்ததாக இல்லை....!

  • தொடங்கியவர்

அரசு தான் வன்னியில் வன்முறை செய்யவில்லை என்றதும்.. மெளனமாகின்றோம்.. அரசுகள் செய்த தவறுகளையும் அதன் தலைவர்கள் காலங்கடந்து சுடலை ஞானம் கண்டு வெளியிட்டனர் என்பதையும் இலகுவாக மறக்கின்றோம்.

வன்னியில் வெடிக்கும் போது இது உள்வீட்டு வேலை என்று சிங்கள இராணுவம் கதையளந்த போது.. அதை ஏற்றுக் கொண்டவர் போல நின்றவர் நீங்கள்.

ஆனால் கொழும்பில் நடப்பதற்கு மட்டும்.. அது சிங்கள அரசின் உள்வீட்டு வேலையல்ல.. புலிகள் தான் என்று அடித்துச் சொல்கிறீர்கள்.

அந்த வகையில்... நடக்கும் அனைத்துக் கொலைகளுக்கும் புலிகள் தான் காரணம் என்று கற்பிக்க விளையும் சிங்கள அரசுக்கும் அதற்கு சேவகம் செய்யும் துரோகிகளுக்கும்.. உங்களுக்கு என்ன வேறுபாடு???

சிங்கள அரசு.. ஆழ ஊடுருவும் அணியை இயக்குகிறது என்பதை சமாதான காலத்திலேயே கண்காணிப்புக் குழு முன்னிலையில் அவர்களின் நடவடிக்கைகளை முறியடித்து.. உடலங்களை கைப்பற்றி காட்டினர் புலிகள். அப்படி இருந்தும்.. வன்னி நிகழ்வுகளுக்கு அரசுக்குள்ள பொறுப்பை அது தட்டிக்களித்து புலிகள் மீது பழிபோடும் போது.. அதற்கு மெளமிருப்பதும்.. புலிகளின் உள்வீட்டு வேலை என்று சந்தேகம் வளர்ப்பதுமா கருத்துச் சுதந்திரம்..??! இவை கருத்துச் சுதந்திரமல்ல. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் கொடிய சிங்களப் பேரினவாத அரசுக்கு சார்பாகச் செய்யப்படும் பிரச்சாரம்.

நண்பரே தயவு செய்து குறித்த தலைப்பில் அது சம்பந்தமில்லாமல் நீண்ட தூரம் விலகி செல்லாதீர்கள்!

நான் யாழில் கூட எனது கருத்து தெரிவிக்கும் உரிமையை பறி போனதை குறித்து நியாயம் கேட்கவே இத்தலைப்பை ஆரம்பித்தேன்.

நீங்கள் வேண்டமானால் எனது கருத்து சரியா தவறா என்று ஒரு புதிய தலைப்பை ஆரம்பித்து இதனை ஆராயுங்கள்.

இங்கே எனது கருத்தை அகற்றியது தவறு, எனது கருத்தை மீள ஒப்படைக்கப்பட வேண்டும். மீண்டும் நான் உங்களுக்கு பதில்தர அந்த பதிலை தூக்கமாட்டார்கள் என்று உத்தரவாதம் தர முடியுமா உங்களால். அப்போது நான் உங்களுக்கு தகுந்த பதில் தருகிறேன்.

கண்ணைக்(எனது) கட்டிப்போட்டு அடிப்பதுதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான தொழிலோ?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன், உங்களின் கருத்து வெட்டப்பட்டதை கண்டிக்கிறேன். ஆனால் உங்களின் கருத்தோடு உடன்பாடில்லை.

சாணக்கியன் தனது கருத்தை இங்கே பதிந்தால் அதற்கு மற்றவர்கள் உடன் பட வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்கு பதில்க் கருத்தை நாகரீகமாக முன்வைக்கலாம் தானே?? அதைவிடுத்து நிர்வாகம் அதனை விழுந்தடித்து தூக்க வேண்டிய அவசியமென்ன?? ஒரு கருத்தை இருட்டடிப்புச் செய்வதாலேயே மற்றவர்களுக்கு அதைப்பற்றிய ஆவலை நிர்வாகம் கூட்டுகின்றது.

உதாரணமாக கனடாவில் CTR வானொலிக்கு நடந்த அடாவடித் தனத்தை சிலர் இங்கே பதிந்தபோது நிர்வாகம் சிலரின் தவறுகளை மூடிமறைப்பதற்காக விழுந்தடித்துத் தூக்குகின்றது. ஏன் அதனை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினால் அதையும் தூக்குகின்றார்கள். இப்படியான கூத்துக்களால் எவரும் தம்மை தேசியவாதிகளாக காட்டமுடியாது.

அன்பின் சாணக்கியன் இங்கு பதியப்படும் கருத்துக்கள் எல்லாம் தமிழீழமலர்வுக்கும் அறிவுக்குமே தவிர மாற்றுக்கருத்துக்களை வைத்து வாதிடுவதற்கு அல்ல என்பது என் கருத்து , அப்படித்தான் நான் இதன் நீண்ட கால வாசகனாக அறிந்தேன், மக்களை குழப்பும் அரசும் , ஒட்டுக்குழுக்குழுக்களும் சேர்ந்து வெளியிடும் கருத்துக்களை முதன்மைப்படுத்துவது முட்டாள்தனம். எனவே நாம் சிந்தித்து செயற்பட்டால் இனி வரும் வரலாறு நல்ல படியாக எழுதப்படும் என்பது திண்ணம்....

அன்பின் சாணக்கியன் இங்கு பதியப்படும் கருத்துக்கள் எல்லாம் தமிழீழமலர்வுக்கும் அறிவுக்குமே தவிர மாற்றுக்கருத்துக்களை வைத்து வாதிடுவதற்கு அல்ல என்பது என் கருத்து , அப்படித்தான் நான் இதன் நீண்ட கால வாசகனாக அறிந்தேன்,

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கூறலாம், ஆனால் அதை ஒரு கருத்தாளராக களத்தில் நின்று கூறுங்கள். வரவேற்கின்றேன்! ஆனால் மட்டுறுத்துதல் என்ற அராஜகத்தை பிரயோகித்து உங்கள் நிலைப்பாட்டிற்கு எதிரான என் கருத்தை நீக்கிவிட்டு, அதற்கு தனிமடலில் மட்டும் பதில்மேல் பதில் என்று உங்கள் கருத்து திணிப்பை மேலும் பிரயோகிப்பது கருத்துப் பயங்கரவாதமேயன்றி வேறில்லை.

இதற்குப் போய்ப் பயங்கரவாதம், பாசியம் என்ற சொற்றொடரை எடுத்து விடுவதைப் பார்க்கின்றபோது, இராஜகரன் தோற்றுவிடுவார் போலிருக்கின்றது.

மேற்குறித்த கேள்விகளுக்கு இங்கே பதிலளிக்கவும் அல்லது

என்னை தடை செய்யவும்!

தடை செய்து தான் வெளியேற வேண்டும் என்றில்லையே. விரும்பினால் வெளியேறலாம். ஒதுங்குகின்றேன் எனத் தலைப்பும் ஆரம்பித்து..... படம் காட்டலாம்.

ஏற்கனவே அவ்வாறு ஒரு தடவை செய்து திரும்பி வந்தீர்கள் அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப் போய்ப் பயங்கரவாதம், பாசியம் என்ற சொற்றொடரை எடுத்து விடுவதைப் பார்க்கின்றபோது, இராஜகரன் தோற்றுவிடுவார் போலிருக்கின்றது.

தடை செய்து தான் வெளியேற வேண்டும் என்றில்லையே. விரும்பினால் வெளியேறலாம். ஒதுங்குகின்றேன் எனத் தலைப்பும் ஆரம்பித்து..... படம் காட்டலாம்.

ஏற்கனவே அவ்வாறு ஒரு தடவை செய்து திரும்பி வந்தீர்கள் அல்லவா.

:rolleyes::lol::D

எழுவான் அவர்களே,

என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எங்கே பதிலளிப்பது?

அல்லது எனது பதில் உங்களது சித்தாந்தத்தை தழுவியதாக அமையவேண்டும் என்ற எழுதாத விதியுள்ளதா?

எனது பதில் பிடிக்காததால் நீக்கினீர்களா? அல்லது அதற்கு வந்த பதில்களால் நீக்கினீர்களா?

மௌனமாக நழுவாமல் பதில் தாருங்கள் நண்பரே!

சாணக்கியன் அண்ணா அவர்கள் மேல இப்பிடி கேள்விகள் கேட்டு இருக்கிறார். எழுவான் அவர்கள் இதற்கு இங்கு பதில் எழுதி இருக்கலாம். அதைவிடுத்து...

இப்படி சாணக்கியன் அண்ணை கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லாது, நிருவாகம் மற்றவர்கள் சாணக்கியன் அண்ணாவை நையாண்டி செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது வேதனையை தருகின்றது.

இப்பிடி ஒருத்தன இன்னொருத்தன் துகிலுரிஞ்சுகொண்டு இருந்தால் நாம முன்னேறின மாதிரித்தான். :rolleyes:

நிருவாகம் சாணக்கியன் அண்ணாவின் கேள்விகளுக்கு இங்கு பதில் அளிக்கலாம். அல்லது இந்தக்கருத்தாடலை மூடலாம். இரண்டும் கெட்டான் நிலையில் இதை வைத்து இருப்பதன் நோக்கம் என்ன?

கள உறவுகளே, ஒரு விடயத்தை புரிந்துகொள்ளுங்கள். மாற்றுக்கருத்தாளர்களை இங்கு தனிப்பட நையாண்டி செய்வதன் மூலம் அல்லது ஒதுக்கி வைப்பதன் மூலம் தமிழ்த்தேசியத்தை நீங்கள் வளர்க்கப்போவதில்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

இதற்குப் போய்ப் பயங்கரவாதம், பாசியம் என்ற சொற்றொடரை எடுத்து விடுவதைப் பார்க்கின்றபோது, இராஜகரன் தோற்றுவிடுவார் போலிருக்கின்றது.

அவர் அப்படி சொல்வதில் தவறு என்ன எண்று சொல்லுவீர்கள் எண்டு நம்புகிறேன்...!!

தடை செய்து தான் வெளியேற வேண்டும் என்றில்லையே. விரும்பினால் வெளியேறலாம். ஒதுங்குகின்றேன் எனத் தலைப்பும் ஆரம்பித்து..... படம் காட்டலாம்.

ஏற்கனவே அவ்வாறு ஒரு தடவை செய்து திரும்பி வந்தீர்கள் அல்லவா.

பொன்னையா

Joined: 10-January 08

Member No.: 4,731

எண்று சொல்கிறது உங்களின் தரவு....!! அவர் விலகி இணைந்து ஒருவருடங்களாகி விட்டன.... புதிதாக 5 மாதங்களுக்கு முன் இணைந்த நீங்கள் நினைவில் வைத்து இருப்பது ஆச்சரியம்தான்...

ஒருவிடயம் சரியாக புரிகிறது... நேரடியாக வழமையான பெயரின் எழுத முடியாமல் வேறு பெயர்களின் எழுதும் தாங்கள் இதை சொல்ல தகுதியானவரோ...???

அவரின் கருத்தை எதிர்க்க முடியாமல் அவரை வசைபாட நினைக்கும் போது சாணக்கியன் வெண்று விடார் என்பதுதான் உண்மை...!!!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி சாணக்கியன் ஒரு மாற்றுக்கருத்தாளரா?? அப்படியானால் மாற்றுக் கருத்தாளன் என்பதன் பொருள் என்ன?? எதற்கு மாற்றாக அவர் கருத்துக்களை வைக்கிறார்?? யாழ் கருத்துக்களிற்கெதிராகவா?? அல்லது தமிழ்த்தேசியக்கருத்துக்களி

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாருக்கு என் ஆதரவுகள் என்றும் உண்டு.

Edited by குமாரசாமி

அன்பின் சாணக்கியன் இங்கு பதியப்படும் கருத்துக்கள் எல்லாம் தமிழீழமலர்வுக்கும் அறிவுக்குமே தவிர மாற்றுக்கருத்துக்களை வைத்து வாதிடுவதற்கு அல்ல என்பது என் கருத்து , அப்படித்தான் நான் இதன் நீண்ட கால வாசகனாக அறிந்தேன்,

:rolleyes:

இதுக்கும் சிரிக்கறாங்க. என்ன எளவோ தெரியல

சாத்திரி அண்ணை,

அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள் வன்னியில் சிறீ லங்கா இராணுவம் கிளைமோர் தாக்குதல்கள் செய்வது சிறீ லங்கா அரசாங்கத்தின் இயலாமை எண்டு சொன்னதை சாணக்கியன் அண்ணா அவர்கள் நகைச்சுவையாக இருக்கின்றது என்று சொல்லி இருந்தார்.

இதுதான் நடந்தது. இதற்கு ஆளாளுக்கு சாணக்கியனை போட்டுத்தள்ள வந்திட்டீனம்.

ஆனால்..

நடேசன் அவர்கள் இலங்கை மண் பற்றி சொல்லியபோது...

பலர் பலவிதமாக கிண்டல் செய்தார்கள்..

நிருவாகம் கண்டுகொள்ளவில்லை...

அப்பிடி எண்டால்...

இராணுவ விசயங்கள் எண்டால் கிண்டல் பண்ணக்கூடாது...

வேற இதர விசயங்கள்: இலங்கை மண், தமிழர் வருடப்பிறப்பு... இவை பற்றி நடேசன் அவர்கள் ஏதாவது சொன்னால் கிண்டல் பண்ணலாமா?

புலித்தேவன் அவர்கள் விசயமான ஊர்ப்புதினத்தில் இடம்பெற்ற செய்தியை விட்டுவைத்த நிருவாகம்... சாணக்கியன் அண்ணாவின் இந்தக்கருத்தை தூக்கியதை நினைக்க வேடிக்கையாக இருக்கிறது.

அதாவது கருத்து என்பது கருத்து என்றவகையில் பாராது கருத்து எழுதியவர் யார் என்று பார்த்து தூக்கப்படுகின்றது..

சும்மா தமிழ்த்தேசியம் என்று சொல்லி குளிர்காய்பவர்கள் அல்லது கத்திக்கொண்டு இருப்பவர்கள் எதை எழுதினாலும் கண்டுகொள்ளாது... சுயமாக எதையாவது சிந்தித்து எழுதுபவர்களை கண்டிப்பது உங்களுக்கே நன்னா இருக்கிதா?

கருத்தாடல் தளம் என்றால் கருத்துக்கள் வரத்தான் செய்யும். இயலுமான அளவு தனிநபர்களாக பார்க்காது.. கருத்துக்களை மாத்திரம் பார்த்து அவற்றுக்கு பதில் கருத்து எழுதி கருத்தாடல் செய்தால்தான் சிந்தனைகள் சிறக்கும்... இல்லாவிட்டால் இறக்கும்..

Edited by முரளி

சும்மா தமிழ்த்தேசியம் என்று சொல்லி குளிர்காய்பவர்கள் அல்லது கத்திக்கொண்டு இருப்பவர்கள் எதை எழுதினாலும் கண்டுகொள்ளாது... சுயமாக எதையாவது சிந்தித்து எழுதுபவர்களை கண்டிப்பது உங்களுக்கே நன்னா இருக்கிதா?

சரியாகச் சொன்னீர்கள் முரளி

நான் கலாதரனின் வானொலி பற்றி எழுதியதையெல்லாம் தூக்கிவிட்டார்கள்

இத்தனைக்கும் நான் யாரையும் தாக்கி எழுதவுமில்லை இல்லாததையும் எழுதவில்லை பொய்யும் எழுதவில்லை

நிர்வாகம் யாருக்காகப் பயப்படுகிறது?

உண்மைக்கு ஏன் பயப்படவேண்டும்?

எதை மூடி மறைக்க நினைக்கிறார்கள்?

யாழ் நிர்வாகம் பொய்மைக்கும் அடாவடித்தனத்துக்கும் திருட்டுக்கும் துணைநிற்கின்றதா?[/color]

சரியாகச் சொன்னீர்கள் முரளி

நான் கலாதரனின் வானொலி பற்றி எழுதியதையெல்லாம் தூக்கிவிட்டார்கள்

இத்தனைக்கும் நான் யாரையும் தாக்கி எழுதவுமில்லை இல்லாததையும் எழுதவில்லை பொய்யும் எழுதவில்லை

நிர்வாகம் யாருக்காகப் பயப்படுகிறது?

உண்மைக்கு ஏன் பயப்படவேண்டும்?

எதை மூடி மறைக்க நினைக்கிறார்கள்?

யாழ் நிர்வாகம் பொய்மைக்கும் அடாவடித்தனத்துக்கும் திருட்டுக்கும் துணைநிற்கின்றதா?

முதலில் "கலாதரனின் வானொலி" என்ற தலைப்பு தற்காலிகமாக நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது என்றே எழுதப்பட்டது. ஆனால் நிர்வாகத்தைப் பொறுத்தவரை தற்காலிகமும் நிரந்தரமும் ஒன்றென்ற உண்மை உறைத்ததனாலேயோ என்னவோ 75 நிமிடங்களின் பின் நீக்கப்பட்டுள்ளது என்று மாற்றப்பட்டது.

ஒன்றுமட்டும் புரிகின்றது உண்மைகள் நன்றாக சிலருக்குச் சுடத்தொடங்கியுள்ளது. அது தாங்க முடியாமல்த் தான் உடனுக்குடன் தூக்குகின்றார்கள். ஆனால் இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. இதை மண்ணுக்குள் தலையை மறைக்கும் தீக்கோழிகள் எங்கே புரிந்து கொள்ளப் போகின்றார்கள்??

Edited by Vasampu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.