Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவினை நோக்கி இராணுவத்தினர் முன்னேறுகின்றனர்- இராணுவ தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவினை நோக்கி இராணுவத்தினர் முன்னேறுகின்றனர்- இராணுவ தளபதி

- பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவினை மீட்கும் நோக்கில் பல்வேறு முனைகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைதுசெய்யும் முகமாகவே முல்லைத்தீவில் பல்வேறுமுனைகளில் தாக்குதல் நடத்துவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா சிங்கள் நாளிழான தினமினவிற்கு வழங்கிய நேர்காண்லொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவினை நோக்கிய இராணுவ நடவடிக்கையில் 56,57.58 மற்றும் 59 இராணுவ படையணிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன அத்துடன் அதிரடிபடை ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத்தினர் முல்லைத்தீவிலுள்ள விடுதலைப்புலிகளின் 1௪ வரையான முகாம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவில் பதுங்குழியில் இருக்கின்றனர்.

பாதுகாப்பு படையின் பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் பரப்பினை கைப்பறியுள்ள அவர்கள் தமது இறுதி இலக்கினை அடைய இன்னும் 21 கிலோமீற்றர் உள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை கிழக்கினை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்பது போன்று வடக்கினையும் பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக மீட்பர் என இராணுவதளபதி தினமினவிற்கு தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- வீரகேசரி

21 கிலோமீற்றரா?

21 மீற்றர் என்பது போல் பொன்சேக பிதற்றுகிறார். முல்லைத்தீவுக்கு இராணுவம் போகுதென்றால் அவர்கள் மரணத்தை நோக்கி போகின்றார்கள்.

எங்கடை தலைவர் பதுக்குகுலிக்குள் வாழ்வதாக சொல்கின்றவர் மாதனமுத்தா கோடிக்கணக்கான செலவில் பதுக்கு குலி கட்டியதை மறந்துவிட்டார் போலும்

Edited by இணையவன்
ஒருமையில் எழுதப்பட்டவை திருத்தப்பட்டுள்ளன. - இணையவன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மறைந்திருக்கும் முல்லைத்தீவு பிரதேசம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சரத் பொன்சேகா தினமினவிற்கு தெரிவித்துள்ளார்.

நாலாபுறமும் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் பிரபாகரன் தப்பியோட முடியாது தவிப்பதாக இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். 56, 57, 58 மற்றும் 59ம் படையணிகள் நான்கு புறங்களினூடாக முல்லைத்தீவை ஊடறுத்துள்ளதகாவும், இதற்கு மேலதிகமாக இரண்டு விசேட படையணிகள் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் நேரடிக் கண்காணிப்பில் இந்த இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய படையினர் சுற்றி வளைத்த போது சிறிய முகாம்கள் பலவற்றைக் கொண்டமைந்த வான் போ பேஸ் முகாமில்தான் விடுதலைப் புலித்தலைவர் பிரபாகரன் மறைந்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து சுமார் 800 கிலோ மீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இன்னமும் 21 கிலோ மீற்றரே எஞ்சியிருப்பதாகவும் இராணுவத் தளபதி தினமினவிற்கு குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் கைது செய்வதே தமது பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

paapam%20copy.jpg

21 கிலோமீற்றர்தான் இன்னுமிருக்காம்? :லொல்: :லொல்: :லொல்:

பிரபாகரனை கைது செய்யப்போராராம் :unsure::unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் முல்லைத்தீவுக்கு போவது இது முதல்முறையல்லவே. ஏலவே ஒட்டிசுட்டான் வரை.. ரத்வத்தை போய்த்தானே வந்தவர். ஏன் அப்போது படைத்துறையில் இருந்த சரத் பொன்சேகா பிரபாகரனைப் பிடிக்க முயலவில்லை. இப்போ 10 ஆண்டுகள் கழித்து.. இவ்வளவு இழப்புக்களோடு மீண்டும் பிடிக்கப் போக வேணும். அப்பவே பிடிச்சிருந்தா.. இந்த நிலை வந்திராதே.. என்று சிங்கள மக்கள் கேள்வி கேட்க மாட்டீனம் என்ற துணிச்சல் தான் இப்படியெல்லாம் பேச வைக்குது..! :unsure::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan army says poised to capture Tiger leader

COLOMBO (AFP) - Sri Lanka's military is poised to capture the leader of the Tamil Tigers and is surging towards his jungle hideout, the defence ministry said on Thursday.

Government forces were just 21 kilometres (13 miles) away from achieving their "final goal" of capturing rebel leader Velupillai Prabhakaran, the ministry said, quoting army chief Lieutenant General Sarath Fonseka.

He said security forces were attacking Mullaitivu, the northeastern coastal district where the 53-year-old Tamil separatist leader was believed to based, from several fronts.

"The security forces are attacking Mullaitivu, Prabhakaran's hideout, from several directions," Fonseka said. "The army's aim is to capture Prabhakaran -- who is holed up in a bunker -- alive."

He said four divisions of the army would "surge" towards the hideout of Prabhakaran who is wanted in Sri Lanka as well as neighbouring India for the 1991 slaying of former Indian premier Rajiv Gandhi.

"They (troops) have to march forward another 21 kilometres to achieve the final goals," the army chief said adding that security forces had already captured "several hundred square kilometres" from the guerrillas.

It is not the first time in the decades-old conflict that the Sri Lankan authorities have said they were on the verge of capturing or killing Prabhakaran.

The leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) has also been reported dead or injured on numerous occassions.

The government pulled out of a Norwegian-brokered turuce in January, and says it has killed 4,196 rebels in fighting since the start of the year.

The strength of the LTTE is not clear, but the military said at the beginning of this year that the Tigers had about 3,000 combatants. The figure was later raised to about 5,000 by military authorities.

The government does not allow journalists to freely visit frontline areas.

http://news.yahoo.com/s/afp/20080612/wl_as...taryprabhakaran

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் நேரடிக் கண்காணிப்பிலேயே மணலாறு படை நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

சிங்களச் சனத்தின் காதில் நிறையப் பூச்சுற்றலாம் பொன்சேகாவிற்குத் தெரிந்த விடயம்.

சரிங்கண்ணா ! போங்கோ, திரும்பி வருவதற்கு ஏதாவது வழி செய்து கொள்ளுங்கோ.

ஏன் தெரியுமா இந்த ராணுவநடவடிக்கை..................

தேர்தல் ஒரு வார காலத்துக்குள் அறிவிக்கப்படும்

கலைக்கப்பட்டுள்ள வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் ஒரு வார காலத்துக்குள் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 1988ம் ஆண்டின் இல.02 என்ற மாகாண சட்ட விதிகளின் இரண்டாவது பிரிவின் 10 - ஆ என்ற உபபிரிவுக்கமைய மாகாண சபையொன்று கலைக்கப்பட்டு ஒரு வாரத்தினுள் அல்லது ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து ஒரு வார காலத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பினை தேர்தல் ஆணையாளர் வெளியிட வேண்டும்.

இதற்கமைய வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் வெளியிட வேண்டும். இந்த அறிவித்தல் வெளியாகி மூன்று மாதத்துக்குள் மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதன் பின் மூன்று கிழமைக்குள் வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற வேண்டுமென்றும் மாகாண சபைச் சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாணசபை:

வட மத்திய மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் 1988-04-28ல் நடத்தப்பட்டது. இம்மாகாணசபை இதுவரை நான்குமுறை கலைக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாணசபைக்கு புது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு கடைசியாக 2004-07-10ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. 2004-08-11ஆம் திகதி இதன் முதலாவது சபைக்கூட்டம் இடம்பெற்றது. இதன்படி 2004-08-11ஆம் திகதி முதல் இச்சபை செயல்படத் தொடங்கியுள்ளது. இதன் பிரகாரம் இம்மாகாண சபையின் பதவிக்காலம் 2009-08-11ஆம் திகதியே நிறைவுக்கு வரவேண்டும். எனினும், உரிய காலத்துக்கு முன்பே இம்மாகாணசபை கலைப்பு இடம்பெற்றுள்ளது.

பொன்சேகா மாமா, இந்த வயசு போன நேரத்தில ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை...?

ஊரைக் கூட்டி தம்பட்டம் அடித்து தலைவரைப் பிடிக்கப் போவதாகச் சபதமிட்டு ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது சிறுபிள்ளைத் தனம். அதுவும் புலிகளின் இதயப் பகுதியை தொட நினைப்பது எவ்வளவு பாரதூரமானது என்பதை பொன்சேகா அறிந்திராவிட்டால் இத்தனை வருட அனுபவமுள்ள அவர் இலங்கை இராணுவத்தில் இருப்பதற்கே தகுதியற்றவர்.

இவ் இராணுவ நடவடிக்கையின் நோக்கம் என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோன்ச நாளா மன்ணார் என்டு ஏமாதீச்சினம் சிங்கள சனத்தை இப்ப முல்லைத்தீவி இன்ணும் கொன்ச நாள் பொக புநகரி என்பினம்

சரத்பொன்சேகா மாமா சிங்கள சனதின்ர கையலயெ அடி வென்டி சாகபொகுது.. சொல்லுர பொய்க்கு :icon_idea:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

மணலாறு தொடங்கி முல்லைத்தீவு வரை மொத்தத் தூரமே 21 கிலோமீற்றர்களாகத்தான் இருக்கும். கிளிநொச்சி தொடங்கி வவுனியா வரை 70 கிலோமீற்றர்கள் என்றால்... அப்ப நேற்று இளந்திரையன் அண்ணா பிபிசிக்குச் சொன்னது போல.. இராணுவம் இன்னும் முன்னணி பாதுகாப்பு நிலைகளில தான் சண்டை போட்டிட்டு நிற்குது..! :o:icon_idea:

srilankamap1ty2.gif

இப்படத்தில் சிவப்பு வட்டத்துள் கறுப்புக் கோட்டால் இணைக்கப்பட்ட தூரத்தை.. வரைபடத்தின் இடது கீழ் பக்க மூலையில் உள்ள அளவிடையுடன் ஒப்பு நோக்குங்கள். அதன் தூரம் ஒரு 25 கிலோமீற்றர்கள் தான் இருக்கும் என்ற உண்மையை அறியலாம். :rolleyes:

Edited by nedukkalapoovan

பார்போம் நீண்டகால்ம் தடுப்பு சமரை செய்ய முடியாது ஆகாவே கொஞ்சம் கொஞ்சம் விட்டு தான் சண்டை தொடரும்..

கோயில் மனியில் ஆயுதம் செய்தவர்களையும் கானோம் புலிகளுக்குதொழில் நுற்ப்பங்களை சொல்லி கொடுத்தவர்களையும் காணோம் :icon_idea:

Edited by வினித்

இலங்கை இராணுவதளபதிக்கு நகைசுவை உணர்வு கொஞ்சம் அதிகம்

புலிகளை திசை திருப்பலாம் என்று பொன்சேகா கனவுகாணுகிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Explosives dump destroyed by jets

Air Force jets destroyed an explosives dump and ammunitions manufacturing complex of the LTTE in Pudukuduirrippu in Mullaitivu a short while ago, the air force said.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=17586

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் விடயம் மிகவும் பயங்கரமானது

ஆனால் இங்கு எழுதும் பலர் இவற்றை நகச்சுவையாக சித்தரிக்கின்றனர்......

ஆனால் இவர்களின் இந்த தன்னம்பிக்கை பாராட்டுதற்குரியது?????

இவர்கள் அதற்கான .........முயற்சிகளை.........அல்லது

அதற்கான......... பொறுப்புகளை ...... நிறைவேற்றியிருப்பின்?????

நான் அறிந்தவரை பலரிடம் வாய்......மட்டுமே..... உண்டு????

உண்மையில் விடயம் மிகவும் பயங்கரமானது

ஆனால் இங்கு எழுதும் பலர் இவற்றை நகச்சுவையாக சித்தரிக்கின்றனர்......

ஆனால் இவர்களின் இந்த தன்னம்பிக்கை பாராட்டுதற்குரியது?????

இவர்கள் அதற்கான .........முயற்சிகளை.........அல்லது

அதற்கான......... பொறுப்புகளை ...... நிறைவேற்றியிருப்பின்?????

நான் அறிந்தவரை பலரிடம் வாய்......மட்டுமே..... உண்டு????

நீங்க வேற எனக்கு ஒரு சனியன் ஆர்மி நாயாறு என்ற இடத்துக்கு வந்து விட்டான் என்று சொல்லிச்சு

நான் நாயறு எங்கை என்று கேட்டேன் முல்லைத்தீவில் இருந்து 5 6 KM என்று சொன்னன்

எனக்கு சதேகம் ஆனால் சிலர் சொல்லினம் நாயாறு மனலாற்றில் இருந்து தூரம் என்று

யாரவ்து புரியவையுங்கள் ( இதய துடிப்பு அதிகம் ஆகுவது போல் இருக்கு) :D

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம் முல்லைத்தீவை நோக்கி முன்னேறுவதில் வியப்பில்லைத்தான். ஆனையிறவை மீளக் கைப்பற்றுவதென்பது சரத் பொன்சேக்காவினதும், பெரும்பாலான சிங்கள மக்களினதும் ஆசையாக இருப்பதால்த்தான் முகமாலையில் தமக்கு சவக்குழி தோண்டப்படுவது தெரிந்தும் ராணுவத்தை அனுப்பி வைக்கின்றனர். இப்படி நிறைவேறாத பல ஆசைகளில் ஒன்றுதான் முல்லைத்தீவைக் கைப்பற்றித் தலைவரைச் சிறைப்பிடித்தல் என்பதும்.

இடங்களைக் கைப்பற்றுவது இழப்பது நீண்டகால அடிப்படையில் போரில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை. இடங்கள் கைம்மாறுவது என்பது நாம் பலமுறை கண்ட உண்மை. இதனால் எமக்கு என்ன பலன் என்பது பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டும்.

மாங்குளத்தைக் கைப்பற்றி, ஒட்டுசுட்டான் வரை ஜயசிக்குருப் படைகள் வந்து முல்லைத்தீவின் வாசலுக்குள் எட்டிப் பார்த்தபின்னர்தான் அவர்கள் ஓமந்தை வரை விரட்டியடிக்கப்பட்டனர் என்பதையும் நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். எதிரி அகலக் கால் வைப்பதும் எமக்கு நல்லதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

வினித்,

நாயாறு என்பது முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் உள்ள ஒரு பகுதி என்று நினைக்கிறேன். கொக்கிளாய் எனும் தமிழ்க் கிராமத்துக்கு அருகில் உள்ள இன்னொரு தமிழ்க் கிராமம்.இது ஏற்கனவே ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று ஞாபகம்.

வினித்,

நாயாறு என்பது முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் உள்ள ஒரு பகுதி என்று நினைக்கிறேன். கொக்கிளாய் எனும் தமிழ்க் கிராமத்துக்கு அருகில் உள்ள இன்னொரு தமிழ்க் கிராமம்.இது ஏற்கனவே ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று ஞாபகம்.

நானு மல்லாவி போய் இருக்கேன் துனுக்காய் உயிலம்குளம் முலங்காவில் பக்கம் ஆனால் நாயாறு எங்கை இருக்கு னெறு தெரியவில்லை

நாயாறு, செம்மலையில் ( அளம்பில்) இருந்து ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. கொக்கு தொடுவாயில் இருந்து 6 மைல். முல்லை தீவில் இருந்து மணலாற்றுக்கு போகும் நுளைவாய் நாயாறு.

Edited by பொய்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.