Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு

Featured Replies

ரொறன்ரோவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு

[ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 04:02 மு.ப ஈழம்] [காவலூர் சங்கீதன்]

தாயகம், தேசியம், தன்னாட்சி போன்ற தமிழர்களின் அடிப்படைக் கோட்பாட்டை வலியுறுத்தி கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் பொங்குதமிழ் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெறுகின்றது.

இந்நிகழ்வு சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் Keele & Sheperd சந்திக்கு அருகாமையில் உள்ள Downsview Park திறந்தவெளி அரங்கில் நடைபெற்று வருகின்றது.

வீதிகள் அனைத்தும் செயலிழக்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம் அலை மோதிய வண்ணம் உள்ளது.

சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டவுண்ஸ்வியூ வெளியரங்க மைதானத்தில் குழுமியிருப்பதாக நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருக்கும் மருத்துவ கலாநிதி பிறையன் செனிவிரட்ன உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர் உரையாற்றினர்.

கனடிய மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரதிநிதிகளும் தங்கள் ஆதரவை வழங்கியதுடன், வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு உணர்வுபூர்வமான ஆதரவையும் வழங்கினர்.

தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

புதினம்

  • Replies 60
  • Views 5.3k
  • Created
  • Last Reply

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

அடியேனும் இந்த நிகழ்வுக்கு சென்று இருந்தேன். பல்லாயிரக்கணக்கான மக்களின் உற்சாக கரகோசத்துடன் உணர்வுபூர்வமாக இந்த எழுச்சி நிகழ்வு கொண்டாடப்பட்டது. நான் எனது கைத்தொலைபேசி ஊடாக எடுத்த காணொளியை இங்கு இணைக்கின்றேன் நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

மங்கள விளக்கை மாவீரர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் தாயாரும், மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் பாரியாரும் ஏற்றி வைத்தார்கள். அகவணக்கத்தை தொடர்ந்து தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் செனவிரத்தின பிரதம உரையை ஆற்றினார். ஓர் சிங்களவர் தமிழர் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கின்றார் என்று பார்த்தபோது, மற்றும் அவரது விரிவான, தெளிவான உரையைக் கேட்டபோது பிரமிப்பாக இருந்தது.

தொடர்ந்து கலைஞர் வர்ண ராமேஸ்வரன் தலைமையிலான இசைக்குழு பொங்கு தமிழ் கீதத்தை ஒலித்தது. பொங்கு தமிழ் பொங்கு தமிழ் எண்டு கூடி இருந்த அனைவரும் முழக்கம் இட்டார்கள். தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு கனேடிய தமிழர்களின் ஒற்றுமையை மீண்டும் ஒருதடவை காட்டியதோடு, மக்கள் தாயகம் மீது எவ்வளவு பற்று வைத்து இருக்கின்றார்கள், தாயக விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வாறான ஆதரவை தருகின்றார்கள் என்பதற்கும் சான்றாக அமைந்தது. மேலும்..

பயங்கரவாதிகள் என்று இங்கு உள்ள தமிழருக்கு முத்திரை குத்தி, அவர்களுக்கு பூச்சாண்டி காட்டும் ஸ் ரீபன் காப்பரின் அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான கோமாளித்தனமான வேலைகள் பயன் அற்றவை என்பதை அறிவிக்கும் நிகழ்வாக கூட இதை உணரக்கூடியதாக இருந்தது.

இங்கு தடைகள் வரலாம்.. தமிழரின் சுயமான செயற்பாடுகளுக்கு பல்வேறு தடைகள் போடப்படலாம். பூச்சாண்டிகள் காட்டப்படலாம். ஆனால் இங்கு மக்கள் முன்புபோலவே தாயகத்தின்பால், தமிழர் தலைமையின்பால், போராட்டத்தின்பால் மிகுந்த பற்றுடன் இருக்கின்றார்கள்.

நன்றி! வணக்கம்!

அருமை ஈழத்தமிழினம் அடுத்த தேர்தலில் என்ன நடக்கும் என சொல்லியுள்ளது பொல இருக்குது கனடா வாழ் உறவுகளுக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ரொறன்ரோ பொங்குதமிழ் நிகழ்வுக்கு அழைத்து சென்ற முரளிக்கு நன்றி .

உங்களது ஆற்றலை கண்டு பெருமிதம் கொள்கின்றேன் .

தொடரட்டும் உங்கள் பணி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுக்கள் மாப்பு

ரொறன்ரோவில் நடத்தப்பட்ட பொங்குதமிழ் மிகப்பெரிய வெற்றி என்றே கூறுவேன். உலகத்தமிழர் இயக்கத்தினைத் தடைசெய்து ஒரு மாதங்கூட முடிந்திராத நிலையிலும், குறுகியகால அவகாசத்திலும் (இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே) அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட நிகழ்விது. எந்த நிலையிலும் கனடியத்தமிழ் மக்களின் ஆதரவு எமது போராட்டத்திற்கு இருக்குமென அவர்கள் நிரூபித்து விட்டார்கள். :(:wub::)

Edited by Thamilachchi

கனடியத்தமிழ் உறவுகளின் சாதனையும் கோசமும் நிச்சயம் பல பூட்டிய கதவுகளை உடைக்கும்... வாழ்க உங்கள் ஒற்றுமை..

நன்றி முரளி...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் கனடா வாழ் தமிழ் மக்கள் இதில் கலந்து கொண்டதாக புதினத்தில் படித்தேன்.

உரிமைக்காக பொங்கும் கனடா வாழ் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள். :(

IMG_3403.jpg

IMG_3404.jpg

IMG_3408.jpg

IMG_3453.jpg

IMG_3456.jpg

IMG_3457.jpg

IMG_3476.jpg

IMG_3478.jpg

IMG_3495.jpg

IMG_3502.jpg

வெட்ட வெளியில் வெய்யிலையும் பொருட்படுத்தாது மிகவும் உணர்ச்சிகரமாக நடந்தது

உலகம் முழுவதும் இப்படி தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பயங்கரவாதம் என்று விடுதலைப்போரை கொச்சைப்படுத்துவோரை வெட்கப்படவைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிதாக்கி பார்க்கவும்

pongutamil2008torontoke1.th.jpg

dsc05549jy4.jpg

dsc05550af5.jpg

dsc05572pb2.jpg

dsc05596ns1.jpg

dsc05606kh9.jpg

dsc05632rr3.jpg

dsc05640wu9.jpg

dsc05676yd0.jpg

dsc05677to7.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவாழ் ஈழத்தமிழர்களுக்கு நன்றிகள் . தேவையான நேரத்தில் உங்களது ஒற்றுமையை காட்டியுள்ளீர்கள் . உங்கள் மீது இருந்த களங்கத்தையும் நீக்கி விட்டீர்கள் மீண்டும் ஓர் முறை நன்றிகள் .

கனடா வாழ் உறவுகளுக்கு பாராட்டுக்கள். வாற கிழமை எங்கட அதிரனும் லண்டனில்.........தமிழர் எல்லாம் தலைவன் பக்கம்

  • தொடங்கியவர்

சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்று வராலாறு படைத்திருக்கும் கனடா பொங்கு தமிழ் நிகழ்வு இன்று சனிக்கிழமை மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

பெரிதாக்கி பார்க்கவும்

pongutamil2008torontoke1.th.jpg

அருமையாக எடுக்கப்பட்ட படம் :(

நானும் சென்றிருந்தேன், இது எங்களின் கடமை.

கனடிய அரசாங்கம் இந்த நிகழ்வை நடைபெறவிடாது தடுக்க அல்லது வேகத்தை குறைக்க பலவிதமான முயற்சிகளை பண்ணியது. இதன் உச்சக்கட்டமாக சில முக்கியமானவர்களை கைதும் செய்திருந்ததாக தகவல். எது எப்படியிருப்பினும் தமிழர்கள் இதைப்போன்ற பல தடைகளை தாண்டிய அனுபவமுள்ளவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துக்காட்டியுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்கள் திங்கட்ககிழமை விடுவிக்கப்பட சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

இணைவோம் தமிழராய்....

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவாழ் ஈழத்தமிழர்களுக்கு நன்றிகள் . தேவையான நேரத்தில் உங்களது ஒற்றுமையை காட்டியுள்ளீர்கள் . உங்கள் மீது இருந்த களங்கத்தையும் நீக்கி விட்டீர்கள் மீண்டும் ஓர் முறை நன்றிகள் .

இதுதான் தலைவரின் அடுத்தபடை

புலம்பெயர் தமிழர் படை

வெற்றி நமதே

உலகமே பார்

ஒரு லட்சம்பேர் சேர்ந்தாலும் ஒரு சிறு வன்முறையுமில்லாமல்

அமைதியாக அடக்கமாக காந்தீயவழியில்

நாங்களா பயங்கரவாதிகள்???

இல்லை பயங்கரவாதிகள் என்ற உங்கள் கோட்பாட்டிலேயே குளறுபடிகள்

தயவுசெய்து உங்கள் குளறுபடிகளை மாற்றுங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

கலந்து கொண்ட அனைத்து கனடிய உள்ளங்களுக்கும் நன்றிகள். தமது ஒற்றுமை மூலம் கனடிய அரசுக்கு சாட்டை அடி கொடுத்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.

ஒரு லட்சம் கனடா வாழ் தமிழ் மக்கள் இதில் கலந்து கொண்டதாக புதினத்தில் படித்தேன்.

உரிமைக்காக பொங்கும் கனடா வாழ் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள்

உண்மையில் இடவசதி போதாது

வாகனத் தரிப்பிடங்கள் விழா தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலங்களுக்கு முதலே நிரம்பி விட்டன

விழா நடைபெற்ற இடத்திற்கு அண்மையான வீதிகள் , பெருந்தெருக்கள் முடங்கி விட்டன

வாகனங்களில் வரவேண்டாம் என்று அறிவித்தல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள

உண்மையில் இடவசதி போதாது

வாகனத் தரிப்பிடங்கள் விழா தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலங்களுக்கு முதலே நிரம்பி விட்டன

விழா நடைபெற்ற இடத்திற்கு அண்மையான வீதிகள் , பெருந்தெருக்கள் முடங்கி விட்டன

வாகனங்களில் வரவேண்டாம் என்று அறிவித்தல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள

நேரத்தோடு வெளிக்கிட்டு கூட வாகன நெரிசல் காரணமாக அதிக நேரம் எடுத்து விட்டது

கனடா வாழ் தமிழ் மக்கள் தங்கள் எழுச்சியைக் காட்டியிருக்கிறார்கள். 5% மக்கள் மட்டுமே தமிழீழம் கேட்கிறார்கள் என்ற கருத்துக்குச் சரியான சாட்டையடி.

இங்கிலாந்து வாழ் தமிழ் மக்களும் தங்கள் எழுச்சியைக் காட்டுவோம். இங்கிலாந்து வாழ் கள உறவுகளும் இந் நிகழ்வின் வெற்றிக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அறிந்தவர் அனைவருக்கும் இந் நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி இந்த நிகழ்வில் கலந்து கொள்பவரின எண்ணிக்கையை அதிகரிக்க உதவ வேண்டும்.

பிரித்தானியாவும் இம்முறை அதிரும் என்றே எதிர்பார்க்கிறோம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.