Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மந்திரத்தீவினில் பூசாரியும் பூதமும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரத் தீவுக்கான படகுப் பயணம் மாதங்கள், வருடங்கள் என்று... நீண்டு கொண்டே போனது. பூசாரிக்கோ தன் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதில் அவரசம் மேலோங்க.. சீடர்களை அழைத்து..

எப்படியாவது மந்திரத் தீவை இந்த யூலைக்குள் அடைந்தே ஆக வேண்டும். ஏற்கனவே புயலில் சிக்கிய சிதைந்து போயுள்ள எங்கள் படகு இன்னும் நீண்ட காலம் கடலில் பயணிக்க முடியாது போலுள்ளது. ஆகவே படகை குறுக்கு வழியில் என்றாலும் செலுத்தி.. மந்திரத் தீவுக்கு என்னை விரைவாகக் கொண்டு சென்றுவிடுங்கள். அடுத்த முழு நிலவு தினத்தில் நான் மந்திரத் தீவில் இந்தக் குடுவையைத் திறந்தாக வேண்டும். இன்றேல் என்னால் இந்த அதிசயக் குடுவை தர இருக்கும் சக்தியைப் பெற முடியாமல் போய்விடும். அப்படி ஒரு நிலை எனக்கு வருமானால்.. உங்களை எல்லாம் வெட்டி இந்தக் கடலில் சுறாக்களுக்கு இரையிட்டு விடுவேன் என்று மிரட்டினான்.. பூசாரி.

அதைக் கேட்ட சீடர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இருந்தாலும் நிலமையைச் சமாளிக்க படகில் விரிக்கப்படாதிருந்த மேலதிக பாய்மரத்திலும் பாயை விரித்து படகை.. மந்திரத் தீவை நோக்கிய திசையில் விரைந்து செல்ல அனுமதித்தனர்.

படகும் காற்று வழி இழுபட்டு ஒரு வழியாக யூலை திங்களின் நடுப்பகுதியில் மந்திரத் தீவை அடைந்தது.

அதிசயக் குடுவையோடு மந்திரத் தீவை அடைந்த பூசாரிக்கோ பெரு மகிழ்ச்சி. தான் பெரும் சக்தி படைத்த தலைவனாகி அந்தத் தீவையே ஆளப்போகும் காலம் நெருங்கிவிட்டதாக எண்ணி அக மகிழ்ந்து கொண்டான். அதைக் கொண்டாட என்று சீடர்களை அழைத்து விருந்து வைத்தான். விருந்தின் போது அருந்திய மதுவின் மயக்கத்தில் பூசாரியும் சீடர்களும் மயங்கிக் கிடக்கும் போது.. மந்திரத் தீவே அதிரும் வண்ணம் ஓர் பெரிய வெடியோசை கேட்டது.

அதைக் கேட்ட பூசாரிக்கு.. திகைப்போடு கோபமும் முட்டிக் கொண்டது. எடேய் சீடர்களா.. என்ன மந்திரத்தீவில் வெடியோசை கேட்கிறது. இங்கே என்ன நடக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வாருங்கள் என்று சீடர்களை நாலா திக்கும் அனுப்பி வைத்தான்.

சீடர்களும் நாலா புறமும் சுற்றிப் பார்த்துவிட்டு.. பூசாரியிடம்..

தலைவா.. நாம் ஓர் அதிசயம் கண்டோம். இந்த மந்திரத் தீவினில் ஏற்கனவே எம் சந்ததியினர் வாழ்கின்றனர் தலைவா. அவர்கள் சென்ற டிரக் வண்டிக்கு யாரோ கண்ணிவெடி வைத்து விட்டனர். அதில் எங்கள் சந்ததியினர் 13 பேர் இறந்து போயினராம்.

எவரடா எங்கள் சந்ததியினருக்கு கண்ணி வெடி வைத்தது.

யாரோ புலிகளாம்.. அவர்கள் தமிழர்களாம். எங்கள் ஜென்ம விரோதிகளாம். இந்த மந்திரத் தீவினில் அவர்களுக்கும் ஆட்சியுரிமை இருக்கிறது என்று சண்டை பிடிக்கிறார்களாம்.

அப்படியா சங்கதி. அவர்களுக்கு எங்கள் பலம் தெரியவில்லை. இதோ பார்.. இப்பவே என் அதிசயக் குடுவையை திறந்து சிங்களப் பேரினவாதப் பூதத்தை அவர்கள் மீது ஏவி விடுகிறேன்.

(குடுவையைத் திறந்ததும்.. விஸ்வரூபம் எடுத்துப் புறப்பட்டது சிங்களப் பேரினவாத பூதம். போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று முழங்கியபடி பரந்து விரிந்து சென்றது.)

சீடர்களே பார்த்தீர்களா.. என் பூதத்தின் சக்தியை. அங்கே பாருங்கள்... மந்திரத் தீவின் தலைநகராம் கொழும்பில்... தமிழர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் பெண்களின் மானத்தை களைந்து கொண்டிருக்கிறது. அதோ பாருங்கள்.. ஒரு தமிழன் எரியும் டயருக்குள் துடிதுடித்துச் சாகிறான். இதோ பாருங்கள் தமிழர்களை சிறைக்குள் அடைத்து வைத்து கண்களைத் தோண்டிக் கொல்கிறது. ஆகா என் பூதத்துக்குதான் எத்தனை அற்புத சக்தி கண்டீர்களா. நரகலோகத்தில் செய்யும் சித்திரவதைகள் அனைத்தையும் அது பூலோகத்தில் தமிழர்களிடத்தில் அரங்கேற்றுகிறது. அதற்கு அப்படி ஒரு வெறியை ஊட்டி வைத்திருக்கிறேன் நான்.

உண்மைதான் தலைவா... இத்தோடு தமிழர்கள் அழிந்தார்கள். மந்திரத் தீவினில் அவர்களின் கொட்டம் இத்தோடு அடங்கிவிடும். எனி நீங்களும் நாமும் எங்கள் சந்ததியுமே இத்தீவினில் வாழப் போகிறோம்..!

ஆம் சீடர்களே..மந்திரத்தீவினில் சிங்கள இனத்தின் இரட்சகன் இந்தப் பூசாரி ஜே ஆர் என்று ஒரு காலம் வரலாறு சொல்லும் பாருங்கள். நான் இன்று கட்டவிழ்த்துவிட்ட இந்தப் பூதம் சாகா வரம் பெற்றது. அது தமிழர்களை அழிக்கும் வரை ஓயாது.

இதைக் கேட்ட சீடர்கள்.. உணர்ச்சி வசப்பட்டு.... வாழ்க பூசாரி ஜே ஆர். வாழ்க சிங்களப் பேரினவாத பூதம்.. என்று கோசமிட்டபடி.. பூசாரியோடு மந்திரத்தீவினில் கூத்தடித்தபடியே காலத்தைக் கழிக்கலாயினர்.

மந்திரத் தீவாகிய இலங்கையில் அதுவே என்றும் தொடர்கதையாகிப் போனது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவார் உருவகம் நல்லாத்தான் இருக்கிறது. வாழ்த்துகள்

மந்திரத்தீவின் பூசாரிகளுக்கும்,சீடர்களுக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு யூலையின் வேதனைகளைப் பதிய வேண்டும் என்பதற்காக தந்த படைப்பு. என்னால் நேரடியாக உணரப்படாத போதும் இன்றும் பதியப்பட்ட துன்ப அனுபவங்களை படிக்கின்ற போது.. நேர்ந்த துன்பங்களை உணர முடிகிறது. அது எனக்குள் ஊட்டிய வலியைத் தீர்க்க இதை உருவாக்கினேன்.

நன்றி சங்கிலியன். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா ........

காலத்திற்கு ஏற்ற கதை ,பொருத்தமான நேரத்தில் தந்தமைக்கு நன்றி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா ........

காலத்திற்கு ஏற்ற கதை ,பொருத்தமான நேரத்தில் தந்தமைக்கு நன்றி .

கடந்த காலத்தை நினைவு படுத்தி இருந்தா அதுவே போதும்.

நன்றிகள் நிலாமதி சகோதரி. :rolleyes:

கறுப்பு ஆடியை நினைவு படுத்தும் நல்லதொரு பதிவு... அருமை

நல்லதொரு கதை நெடுக்ஸ்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தா நல்ல கதை.

உங்கட கதையை வாசிக்க எனக்கும் யூலை நினைவு வருது. நாங்கள் ஒரு சிங்களவருடைய வீட்டில தான் வாடகைக்கு இருந்தனாங்களாம் அந்த வீட்டுக்காரருடைய அண்ணா ஆமியில இருந்தவராம் அப்ப அந்த பிரச்சனை நேரம் அவர் ஆமியோட தம்பி வீட்ட வந்தவராம் ஆனா நாங்க இருந்த வீட்டுக்காரர் எங்களை ஒளிச்சு வைச்சு கொண்டு தன்ட அண்ணாட்டை சொன்னவராம் நான் அவையளை அப்பவே கலைச்சு போட்டன் என்டு. அப்ப அவருடைய அண்ணா எங்கட சாமான் எல்லாத்தையும் எடுத்து வீட்டுக்கு முன்னால போட்டு எரிச்சு போட்டு போயிட்டாராம். பிறகு அந்த வீட்டுக்காரர் தான் எங்களை ஒரு அகதி முகாமில கொண்டு போய் இறக்கி விட்டவராம்.(இவ்வளவும் எனக்கு ஞாபகம் இல்லை ஏனென்டா நான் சரியான சின்னன் ஆனா அப்பா சொன்னவர்). அப்ப நாங்கள் யாழ்ப்பாணம் வரேக்கை கைவீசம்மாவில தான் வந்தனாங்கள் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா நல்ல கதை.

உங்கட கதையை வாசிக்க எனக்கும் யூலை நினைவு வருது. நாங்கள் ஒரு சிங்களவருடைய வீட்டில தான் வாடகைக்கு இருந்தனாங்களாம் அந்த வீட்டுக்காரருடைய அண்ணா ஆமியில இருந்தவராம் அப்ப அந்த பிரச்சனை நேரம் அவர் ஆமியோட தம்பி வீட்ட வந்தவராம் ஆனா நாங்க இருந்த வீட்டுக்காரர் எங்களை ஒளிச்சு வைச்சு கொண்டு தன்ட அண்ணாட்டை சொன்னவராம் நான் அவையளை அப்பவே கலைச்சு போட்டன் என்டு. அப்ப அவருடைய அண்ணா எங்கட சாமான் எல்லாத்தையும் எடுத்து வீட்டுக்கு முன்னால போட்டு எரிச்சு போட்டு போயிட்டாராம். பிறகு அந்த வீட்டுக்காரர் தான் எங்களை ஒரு அகதி முகாமில கொண்டு போய் இறக்கி விட்டவராம்.(இவ்வளவும் எனக்கு ஞாபகம் இல்லை ஏனென்டா நான் சரியான சின்னன் ஆனா அப்பா சொன்னவர்). அப்ப நாங்கள் யாழ்ப்பாணம் வரேக்கை கைவீசம்மாவில தான் வந்தனாங்கள் :wub:

இன்னிசை உங்களைப் போலத்தான் நானும் பின்னாட்களில் பதிவுகளில் இருந்து திரட்டிய தகவல்களை அடிப்படையாக வைத்தே இதனை எழுதினேன். 1983 கலவரத்துக்கு கால்கோள் இட்டவர் ஜே ஆர். செய்து முடித்தது அவரின் சீடர்களான காமினி.. அத்துலத்முதலி என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டீர்கள்.. உங்களை உங்கள் குடும்பத்தை.. சிங்கள மக்கள் காப்பாற்றி அனுப்பியதை. அது உண்மை. தமிழர்கள் மீதான மனிதாபிமானம் சில சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கிறது. அதேவேளை பேரினவாத பூதம் தொற்றிக் கொண்ட சிங்களவர்களும் உள்ளனர். ஜே. ஆர் போன்ற பேரினவாதிகள் ஏவிவிடும் பூதம் தொற்றிக் கொண்ட சிங்களக் காடையர்கள் தமிழனை அழிக்கின்ற போது மனிதாபிமான உள்ளம் கொண்ட சிங்கள மக்கள் தமிழர்களைக் காத்த பல நிகழ்வுகள் உண்டு.

எனது குட்டிக் கதையில் கூட சிங்கள பேரினவாத பூதத்தை ஏவியவனையும்.. அவன் சீடர்களையும்.. பேரினவாத பூதம் செய்த அழிவுகளையுமே சுட்டிக்காட்டி இருக்கிறேன். மொத்த சிங்கள சமூகத்தையும் குற்றம்சாட்டவில்லை..! :wub:

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி இன்னிசை. அத்தோடு தயா.. வெற்றிவேல் போன்றவர்கள் தந்த ஊக்குவிப்புக்கும் நன்றிகள். :wub:

Edited by nedukkalapoovan

மந்திரத்தீவு கதை நல்லா இருக்கு

சரி அந்த படகு நடுக்கடலிலேயே மூழ்கிப் போகும் வாய்ப்பில்லையோ நெடுக் தாத்தா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மந்திரத்தீவு கதை நல்லா இருக்கு

சரி அந்த படகு நடுக்கடலிலேயே மூழ்கிப் போகும் வாய்ப்பில்லையோ நெடுக் தாத்தா

அது விஜனோட வரேக்கையே கவிழ்ந்திருந்தா தமிழருக்கு இந்தக் கேடு வந்திருக்குமா..?! அதாலதான்.. பூசாரியின் படகையும் கரை சேர்த்துவிட்டன். எல்லாம் தமிழர்கள் எங்க நேரம்.. இல்ல படகு கவிந்திராது..??! :wub::wub:

Edited by nedukkalapoovan

கதையல்ல நிஜம் :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையல்ல நிஜம் :wub:

உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரத்தீவு கதை நல்லா இருக்கு

சரி அந்த படகு நடுக்கடலிலேயே மூழ்கிப் போகும் வாய்ப்பில்லையோ நெடுக் தாத்தா

அதை மூழ்காமல் காப்பதியதில் எங்கள் முன்னோருக்கும் ஓரளவு பங்கு உண்டு :wub: .மற்றும் நெடுக்ஸின் கரு அருமை.

வழமை போலவே ஒரு சிறு கருவை பூதம் போல பெருபித்து காட்டிய நெடுக்ஸ் தாத்தாவிற்கு வாழ்த்துக்கள் :wub: ..தங்களின் கதை நகரும் காலகட்டத்தில் நான் பிறக்கவே இல்ல.. :wub:

இப்படியான பதிவுகளின் மூலம் தான் அந்த வலியினை உணர கூடியதாக உள்ளது :wub: ....வர..வர தங்கள் கதைகளின் எழுதோட்டம் அருமையாக இருக்கிறது நெடுக்ஸ் தாத்தா.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழமை போலவே ஒரு சிறு கருவை பூதம் போல பெருபித்து காட்டிய நெடுக்ஸ் தாத்தாவிற்கு வாழ்த்துக்கள் :wub: ..தங்களின் கதை நகரும் காலகட்டத்தில் நான் பிறக்கவே இல்ல.. :wub:

இப்படியான பதிவுகளின் மூலம் தான் அந்த வலியினை உணர கூடியதாக உள்ளது :wub: ....வர..வர தங்கள் கதைகளின் எழுதோட்டம் அருமையாக இருக்கிறது நெடுக்ஸ் தாத்தா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நாங்க மட்டும் என்னவாம். நாங்களும் படிச்சு பேசித் தெரிஞ்சு கொண்ட வரலாறுகள் தான் அதிகம். எம்மினத்தைப் பற்றி நாமே அறிஞ்சு கொள்ளவில்லை என்றால் அது எமக்குத்தான் அவமானம்.

நியூட்டனின் விதிகளைப் படிக்கும் போது.. எவரும் நான் அக்காலத்தில் பிறக்கவில்லை என்று சொன்னது கிடையாது. பேசாமல் ஆசிரியர் சொல்லித் தர... அல்லது தேடிப் படிக்கிறார்கள். ஆனால் எமது இனத்தின் வரலாற்றை அறியும் போது.. நான் அக்காலத்தில் பிறக்கவில்லை என்று பலரும் குறிப்பிடக் கண்டிருக்கிறேன். அது ஏன் என்று புரியவில்லை. எமது இனத்தின் வரலாறை தேடிப் படிக்க வேண்டியதும் தெளிய வேண்டியதும் எமது கடமை. அது பிறப்புக் காலத்துக்கு அப்பாற்பட்ட விடயம். இதை உணராததால் தான் என்னவோ எமது இனத்தின் வரலாறு ஒரு முழுமை இன்றிக் கிடக்கிறது.

நன்றி ஜம்மு பேராண்டி.. உங்கள் கருத்துப் பகிர்வுக்கும்.. ஊக்கத்துக்கும்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

83 யூலை மாதத்து நினைவுகள் வரலாறு மறக்காது. அந்தக் கலவரத்தினை காமினிதிசா நாயக்கா. அத்துலத் முதலியை விட மோசமாக செயல்பட்டவர் பிரேமதாசா. அவரது குழுவினர்தான் புறக்கோட்டை மற்றும் தமிழ் வர்த்தகர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் அழிப்புக்களை செய்திருந்தனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

83 யூலை மாதத்து நினைவுகள் வரலாறு மறக்காது. அந்தக் கலவரத்தினை காமினிதிசா நாயக்கா. அத்துலத் முதலியை விட மோசமாக செயல்பட்டவர் பிரேமதாசா. அவரது குழுவினர்தான் புறக்கோட்டை மற்றும் தமிழ் வர்த்தகர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் அழிப்புக்களை செய்திருந்தனர்.

தகவல் பகிர்வுக்கு நன்றிகள் சாத்திரி. :lol:

நான் பிறக்குமுன் நடந்த கறுப்பு ஜூலை சோகங்கள் படித்திருக்கிறேன். வீட்டிலும் அதுபற்றி பேச கேட்டிருக்கிறேன். அதை கருவாக கொண்ட கதை அருமை நெடுக்ஸ்!

கதையில் மனித இனமற்ற (?) பூதம் தான் அழிவு செய்கின்றது. அனுப்பியது மனிதனே! ஆனால் நிஜத்தில் மனிதனே அழித்திருக்கிறான்..அழித்துக்

கொண்டே இருக்கிறான்..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறக்குமுன் நடந்த கறுப்பு ஜூலை சோகங்கள் படித்திருக்கிறேன். வீட்டிலும் அதுபற்றி பேச கேட்டிருக்கிறேன். அதை கருவாக கொண்ட கதை அருமை நெடுக்ஸ்!

கதையில் மனித இனமற்ற (?) பூதம் தான் அழிவு செய்கின்றது. அனுப்பியது மனிதனே! ஆனால் நிஜத்தில் மனிதனே அழித்திருக்கிறான்..அழித்துக்

கொண்டே இருக்கிறான்..! :lol:

உண்மையில் தமிழின அழிப்பை முதன்மைப்படுத்தும்.. சிங்களப் பேரினவாதக் கொள்கையை பூதமாகவும்.. சிங்களப் பேரினவாதத்தின் நவீன தந்தை என்று சொல்லத்தக்க ஜே ஆர் ஜெயவர்த்தனாவை பூசாரியாகவும் அவரின் அருவருடி பேரினவாதிகளை சீடர்களாகவும் உவமிச்சிருக்கிறேன்..! :lol:

Edited by nedukkalapoovan

உண்மையில் தமிழின அழிப்பை முதன்மைப்படுத்தும்.. சிங்களப் பேரினவாதக் கொள்கையை பூதமாகவும்.. சிங்களப் பேரினவாதத்தின் நவீன தந்தை என்று சொல்லத்தக்க ஜே ஆர் ஜெயவர்த்தனாவை பூசாரியாகவும் அவரின் அருவருடி பேரினவாதிகளை சீடர்களாகவும் உவமிச்சிருக்கிறேன்..! :lol:

:lol: புரியுது.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

பழைய பூசாரியை விட புதிதாக வந்த பூசாரிச் சகோதரர்களினால் தான் எங்கட சனம் அதிகளில் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கி

  • கருத்துக்கள உறவுகள்
பழைய பூசாரியை விட புதிதாக வந்த பூசாரிச் சகோதரர்களினால் தான் எங்கட சனம் அதிகளில் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.