Jump to content

இமேஜ் கந்தர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கந்தர் என்ன கடைக்கோ என்று சுரேஷ் கேட்டது தான் தாமதம் கந்தர் கடுப்பாகி இல்லை படம் பார்க்க வந்தனான் என்றார்.கந்தர் கோபபட்டதிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்கும் பொழுதே அவர் அருகில் வந்து உன்னட்ட எத்தனை தரம் சொல்லுறது கந்தர் என்று கூப்பிடாதே என்னுடைய பெயர் "ஸ்கந்தா" எங்களுடைய தமிழ் சனம் எவ்வளவோ நிற்குது இங்கே,அவையளுக்கு என்னுடைய பெயர் கந்தர் என்று தெரிந்தால் என்னுடைய "இமேஜ்" என்னாகும் மச்சான் என்றவர் கடையில் வாங்கிய பொருட்களை காருகுள் கொண்டு போய் வைத்துவிட்டு சுரேஷிடம் இருந்து விடைபெற்றார்.

காரில் வீடு செல்லும் போது கந்தருக்கு மனசு ஏதோ போல் இருந்தது சுரேஷுடன் அப்படி பேசி இருக்க கூடாது என்று மனதில் எண்ணியவர் வீட்டை போய் அவனுடன் தொலைபேசியில் கதைக்கவேண்டும் என்று காரை விரைவாக ஓட்டினார்.அன்று மாலை சுரேஷுடன் தொடர்பு கொண்டு மச்சான் சொறிடா நான் அப்படி கேட்டிருக்க கூடாது என்றார்.

நான் அப்பவே மறந்திட்டன் மற்றது உன்னுடைய உந்த இமேஜ் பிரச்சினை நீ சின்னவனாக இருக்கும் போதே தொடங்கிவிட்டது தானே.உனக்கு நினைவிருக்கிறதா நாங்கள் பெடியன்கள் எல்லாம் சேர்ந்து எங்களுடைய கணக்கு வாத்தியாரை மொட்டை வாத்தியார் என்று பட்டம் சொல்லி கூப்பிடுவோம் சொல்ல எல்லோரும் ஓம் என்று சொன்னார் ஆனா நீ உன்னுடைய இமேஜ் பழுதாகிவிடும் வாத்தியாரிடம் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் பாடசாலைக்கே வராமல் வாத்தியாரிட்ட நல்ல பெயர் வாங்கின ஆள் தானே சரி அதை தான் விடுவோம் எங்களுடன் படித்த சுமதியை ஆசைபட்டு அவளுக்கு உன்னுடையை காதலை தெரிவித்தால் ஏனைய மாணவிகளிடம் உன்னுடைய இமேஜ் பழுதடைந்து விடும் என்று போட்டு கடைசி வரைக்கும் காதலை தெரிவிக்காமல் உன்னுடைய இமேஜை பெட்டைகளிடம் காப்பாற்றின ஆள் தானே நீ.

இப்பவும் நீ இந்த இமேஜிற்காக பாடுபடுகிறாய் வேலை தளத்தில் அதிகம் லீவு எடுக்கமாட்டாய் கேட்டால் மனேஜரிடம் உன்ட இமேஜ் ஸ்பொயில் ஆகிடும் என்பாய்.நீ ஒரு படைப்பாளி சிறந்த கருத்தாளன் ஆனால் சில விடயங்களை உன்னுடைய சொந்த பெயரில எழுதமாட்டாய் புனை பெயரில் தான் எழுதுவாய்.ஸ்கந்தா என்ற பெயருக்கு ஒரு இமேஜ் இருக்கு அதை கெடுக்க கூடாது அது தான் புனைபெயரில் எழுதுகிறேன் என்பாய்.கல்யாணம் கட்டின புதுசில் தண்ணி அடிப்பது என்றாலும் மனிசி வெளிநாட்டிற்கு போனால் தான் தண்ணி அடிப்பாய் காரணம் மனிசிக்கு உன்னுடய இமேஜ் பழுதடைந்துவிடும் என்று தானே.இப்ப வயசு போனபடியால் உன்னுடைய இமேஜ் நாடகம் மனிசிக்கு விளங்கிவிட்டது தண்ணி அடிப்பதை கண்டு கொள்வதில்லை.இப்படி பல இமேஜ் விளையாட்டுக்கள் உன்னுடையா வாழ்க்கையில் இருக்கு அதுகளை கிளற போனா ஒரு நாள் போதாது.

அதை விடு பின்னேரம் வீட்ட வாறியோ ஒரு "புளு லேபல் ஸ்கொச்" இருக்கு மச்சான் வரும் போது கொண்டு வந்தவன் வாரும் அடிப்போம் என்றான் சுரேஷ்.ஆசையா தான் இருக்கு ஆனால் ஸ்டேட்டில் இருந்து மனிசியின் அண்ணன் வந்திருக்கிறான் அவர்களை தனியே விட்டிட்டு வாறது சரியில்லை என்று காய் வெட்டினான் ஸ்கந்தா.மச்சானையும் கூட்டி கொண்டு வாவன் என்று கட்டாயபடுத்தினான் சுரேஷ்.கூட்டி கொண்டு வாறது பிரச்சினை இல்லை மச்சான் அவருக்கு முன்னால் நான் தண்ணி அடிக்கிறதில்லை ஏன் என்றால் என்னுடைய இமேஜ் என்னாகிறது.

(யாவும் கற்..ப...)

கடலுக்கு எல்லை உண்டு கற்பனைக்கு எல்லை உண்டோ..??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது எங்கடை கந்தப்புவை நக்கலடிக்க வேணுமெண்டு எழுதின கதை :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது எங்கடை கந்தப்புவை நக்கலடிக்க வேணுமெண்டு எழுதின கதை :unsure:

:lol::o

Posted

நல்ல இமேஜ் கதை தான்..

நிஜமான ஒரு க..ற்..ப :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது எங்கடை கந்தப்புவை நக்கலடிக்க வேணுமெண்டு எழுதின கதை

:unsure:

இரு நாட்டு தளபதிகளின் நட்புறவை திட்டமிட்டு கவிழ்பது போல் இருக்கிறது தங்கள் அறிக்கை.நானாவது கந்தரை அப்படி எழுதுறதாவது.முழுக்க முழுக்க என்னுடைய அனுபவம் தான் பெயர் மட்டும் கந்தர். :lol:

நல்ல இமேஜ் கதை தான்..

நிஜமான ஒரு க..ற்..ப :(

நிஜமான கற்பனை தான் எனது கதை. :o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த போத்தல் இப்போ எங்கே புத்தன்? :lol::lol:

நீங்கள் அடிச்ச நீங்களோ? :o:o:o

Posted

:lol::o

:o:o கந்தப்புவின் முகக்குறியைப் பார்த்தால் உந்த இமேஜ் பிரச்சினை கந்தர் இல்லை ஸ்கந்தர் நீங்கள் தான் போலிருக்கே கந்தப்பு :lol:

Posted

ம்ம்.."இமேஜ்" கதை நன்னா தான் இருக்கு மாம்ஸ் :o ..வாழ்த்துக்கள்..உப்படி பல பேர் இருக்கீனம் தாங்களே தங்களுக்கு ஒரு "இமேஜை" உருவாக்கி அந்த கற்பனையில வாழ்ந்து கொண்டு..(ஏன் யாழில கூட தான்).. :lol:

அப்ப "இமேஜ்" போயிடும் எண்டும் காதலை சொல்லாம தயங்குற ஆட்களும் இருக்கீனமோ..??..எனக்கு உது தெரியாம போச்சுதே..ஓமோம் இருக்கலாம்..இருக்கலாம்...(அது சரி யார் மாம்ஸ் சுமதி)..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

அது சரி யார் மாம்ஸ் சுமதி)..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

:o அச்சோ தம்பி இப்ப உந்த சுமதிக்கு மாமாவின் வயதிருக்கும் எல்லோ

ஏன் சுமதியை தேடுறியள்.............. ஓஹோ அவாக்கு மகள் இருக்கும் என்ற நப்பாசையிலோ :lol: கில்லாடி ஜம்முபேபி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புத்தன்

குட்டிக் கதை சொல்லி அனைவருக்கும் நல்ல குட்டு கொடுத்திருக்கிறியள். பாராட்டுக்கள்

Posted

நானு, சாத்திரி, சின்னா, கு.சா, கந்தப்பு, நெடுக்கு(கைவிட்டாப் பாவமெல்லோ) டங்கு, இப்படியே ஒரு நீண்ட வரிசை யாழ்க்களத்தில இருக்கிறம். இமேஜைக் காப்பாற்ற என்னபாடு படுகிறம். இந்தப் புத்தன் இப்படியெல்லாம் போட்டுடைத்து எங்களுடைய இமேஜை உடைக்கிறாம்பா :lol:

Posted

நானு, சாத்திரி, சின்னா, கு.சா, கந்தப்பு, நெடுக்கு(கைவிட்டாப் பாவமெல்லோ) டங்கு, இப்படியே ஒரு நீண்ட வரிசை யாழ்க்களத்தில இருக்கிறம். இமேஜைக் காப்பாற்ற என்னபாடு படுகிறம். இந்தப் புத்தன் இப்படியெல்லாம் போட்டுடைத்து எங்களுடைய இமேஜை உடைக்கிறாம்பா :huh:

கிகிகிகிக்கி இத்தனைபேரா??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:huh::wub: கந்தப்புவின் முகக்குறியைப் பார்த்தால் உந்த இமேஜ் பிரச்சினை கந்தர் இல்லை ஸ்கந்தர் நீங்கள் தான் போலிருக்கே கந்தப்பு :huh:

அப்படியானால் யாழிலை நான் ஸ்கந்தர் என்ற பெயரில் அல்ல வந்திருப்பேன்.

Posted

:o அச்சோ தம்பி இப்ப உந்த சுமதிக்கு மாமாவின் வயதிருக்கும் எல்லோ

ஏன் சுமதியை தேடுறியள்.............. ஓஹோ அவாக்கு மகள் இருக்கும் என்ற நப்பாசையிலோ :huh: கில்லாடி ஜம்முபேபி

ம்ம்..சுமதி மாமிக்கு வேண்டும் எண்டா மாமாவின்ட வயசு இருக்கலாம்..ஆனா அவாவிற்கு மகள் இருந்தா பார்த்தியளே அங்க தான்..ஜம்மு..முமு பேபி நிற்குது.. :wub: (ஆனா நீ விரும்புற ஆளை விட உன்னை விரும்புறாவை கட்டினா வாழ்க்கை நன்னா இருக்கு எண்டு சொன்னவர் அல்லோ ரசனி மாமா).. :lol:

அது தான் என்னை யார் விரும்பீனம் எண்டு தேடி கொண்டு இருக்கிறன்..(அப்ப இந்த ஜென்மத்தில...எண்டு நீங்க சொல்ல வாறது விளங்குது).. :D

அப்ப நான் வரட்டா!!

நானு, சாத்திரி, சின்னா, கு.சா, கந்தப்பு, நெடுக்கு(கைவிட்டாப் பாவமெல்லோ) டங்கு, இப்படியே ஒரு நீண்ட வரிசை யாழ்க்களத்தில இருக்கிறம். இமேஜைக் காப்பாற்ற என்னபாடு படுகிறம். இந்தப் புத்தன் இப்படியெல்லாம் போட்டுடைத்து எங்களுடைய இமேஜை உடைக்கிறாம்பா

ஓ..அப்படியே..இப்ப நான் ஒன்னு சொன்னா கோவிக்கமாட்டியளே :huh: ..ஆதி..தீ..தீ..நீங்க உங்களுகுள்ள நினைக்கலாம் அப்படி "இமேஜ்" இருக்கு எண்டு..ஆனா மற்றவன்..அப்படி நினைக்கனுமே..(உண்மையை சொல்லிட்டன் எண்டு கோவிக்காதையுங்கோ என்ன).. :lol:

அது சரி எனக்கு மற்றது எண்ட குருவிற்கு யாழில எப்படி "இமேஜ்" இருக்கோ...??...(எப்பவுமே அறிவாளிகள் அடக்கமா தான் இருப்பீனம் எண்டு குரு சொல்லி தந்தவர் பாருங்கோ) :lol: ...அப்பாடா ஒரு மாதிரி நாமளும் அறிவாளி ஆகிட்டோம் இதை அப்படியே....தொடர்ந்திடனும்.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த போத்தல் இப்போ எங்கே புத்தன்? :huh::huh:

நீங்கள் அடிச்ச நீங்களோ? :D:(:lol:

பின்ன என்ன செய்யிறது தனிய அடித்தது தான்.இடைகால சினிமா பாட்டையும் கேட்டு கொண்டு அடிக்கிறது தனி சுகம் தானே :lol:

:lol::o கந்தப்புவின் முகக்குறியைப் பார்த்தால் உந்த இமேஜ் பிரச்சினை கந்தர் இல்லை ஸ்கந்தர் நீங்கள் தான் போலிருக்கே கந்தப்பு :wub:

இல்லை பிள்ளை உது எண்ட கதை :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்ம்.."இமேஜ்" கதை நன்னா தான் இருக்கு மாம்ஸ் :lol: ..வாழ்த்துக்கள்..உப்படி பல பேர் இருக்கீனம் தாங்களே தங்களுக்கு ஒரு "இமேஜை" உருவாக்கி அந்த கற்பனையில வாழ்ந்து கொண்டு..(ஏன் யாழில கூட தான்).. :huh:

அப்ப "இமேஜ்" போயிடும் எண்டும் காதலை சொல்லாம தயங்குற ஆட்களும் இருக்கீனமோ..??..எனக்கு உது தெரியாம போச்சுதே..ஓமோம் இருக்கலாம்..இருக்கலாம்...(அது சரி யார் மாம்ஸ் சுமதி)..?? :huh:

அப்ப நான் வரட்டா!!

சுமதியை தான் நானும் தேடுறன் :wub:

வணக்கம் புத்தன்

குட்டிக் கதை சொல்லி அனைவருக்கும் நல்ல குட்டு கொடுத்திருக்கிறியள். பாராட்டுக்கள்

நன்றி கண்மனி

நானு, சாத்திரி, சின்னா, கு.சா, கந்தப்பு, நெடுக்கு(கைவிட்டாப் பாவமெல்லோ) டங்கு, இப்படியே ஒரு நீண்ட வரிசை யாழ்க்களத்தில இருக்கிறம். இமேஜைக் காப்பாற்ற என்னபாடு படுகிறம். இந்தப் புத்தன் இப்படியெல்லாம் போட்டுடைத்து எங்களுடைய இமேஜை உடைக்கிறாம்பா :lol:

இல்லாதவன் தானே உடைப்பான். :lol:

Posted

இல்லை பிள்ளை உது எண்ட கதை :huh:

:wub: இப்ப இப்படி சொல்ல உங்கள் இமேஜ் என்னாகிறது :huh:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:lol: இப்ப இப்படி சொல்ல உங்கள் இமேஜ் என்னாகிறது :huh:

எங்கோ புத்தனை காணோம்

:lol::lol::huh::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்படியானால் யாழிலை நான் ஸ்கந்தர் என்ற பெயரில் அல்ல வந்திருப்பேன்.

என்ன தான் இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையாது எண்டு சும்மாவே சொன்னவ...! :huh:

Posted

எங்கோ புத்தனை காணோம்

:lol::D:lol::lol:

:lol: புத்துமாமா இனி வரமாட்டார். வந்தா அவரின் "இமேஜ்" என்னாகிறது ஆ :lol:

Posted

அப்படியானால் யாழிலை நான் ஸ்கந்தர் என்ற பெயரில் அல்ல வந்திருப்பேன்.

ஆமால..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓ இப்படி எல்லாம் விசயம் இருக்கோ :lol: புத்து உதை கொஞ்சம் முந்தி சொல்லியிருக்கலாமே :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓ இப்படி எல்லாம் விசயம் இருக்கோ :lol: புத்து உதை கொஞ்சம் முந்தி சொல்லியிருக்கலாமே :lol:

முந்தி சொல்லி இருந்தா என்னுடைய இமேஜ் என்னாகிறது :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொப்பி எனக்கும் அளாவாய் இருக்கு.....

அட உங்களுக்கும் அளவா இருக்கோ :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.