Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிப் படை நடவடிக்கையின் அடுத்த கட்டம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப் படை நடவடிக்கையின் அடுத்த கட்டம் என்ன? - லண்டனிலிருந்து வன்னியன்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்]

கடந்த சில வாரங்களாக படைநடவடிக்கை ஒரு மந்த நிலையை அடைந்திருப்பதை அவதானிப்பதோடு புலிகளின் எதிர்ச்சமர் வலுவடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் படையினரின் இழப்பு அதிகரித்துக் கொண்டு செல்வதும் பலமுனைகளில் நகர்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும் பூநகரி நோக்கிய நகர்வு மாத்திரம் முழங்காவில் பிரதேசத்தை கடந்த வாரம் படையினர் கைப்பற்றியதோடு அரசின் மிகப்பெரும் பரப்புரையே மிக உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது. எனினும் அடுத்து என்ன நடக்கப் போகின்றது? என்பதை அறிய சிங்கள தேசமும், புலிகள் என்ன செய்யப் போகின்றார்கள்? என அறிய உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழர்களும், ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்க. புலிகளும் தாம் நீண்ட காலம் எதிர்பார்த்த இலக்கு நெருங்கிவருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். என்று செல்வது இன்றைய நிலையில் பொருத்தமானது.

கடந்த வாரம் பாலமோட்டை, வவுனிக்குளம், கிளாலி, முகமாலை, கல்விளான், முழங்காவில், ஆகிய போர்முனைகளில் பாரிய அளவிலான முன்னகர்வுகள் இடம்பெற்ற போதிலும் கல்விளான், முழங்காவில் ஆகியவற்றில் படையினர் முன்னகர்ந்திருப்பதனையும் ஏனைய இடங்களில் சற்றேனும் முன்னகர முடியாமல் இறுக்கமான சண்டைகளை படைத்தரப்பு சந்தித்திருப்பதனை நோக்குகின்ற போது புலிகள் போர்முனையில் ஓர் ஆச்சரியமான முடிவினை எடுத்து விட்டார்கள். என ஊகிக்க முடிகிறது.

வெள்ளாங்குளத்திலிருந்து ஏ32 வீதியூடாக முழங்காவில் பிரதேசத்iதை படைகள் கைப்பற்றிய விதத்தைப் பார்த்தால் வெள்ளாங்குளத்திற்கும் கல்விளானுக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியினூடாக நகர்ந்து முழங்காவில் ஏரிப்பகுதியைக் கடந்து மீண்டும் மேற்கு நோக்கித் எல் வடிவில் நகர்ந்ததன் மூலம் வெள்ளாங்குளத்தை இராணுவப் பெட்டிக்குள் அகப்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் முழங்காவில் கிராமம் முழுவதும் இராணுவ வசமாயிற்று. முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் கைப்பற்றப்பட்டது அரசின் பரப்புரைக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளது. 1990ஆம் ஆண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் ஏறக்குறைய 3000 ற்குட்பட்ட மாவீரர்களின் வி;த்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கிறது. இராணுவம் கைப்பற்றிய மாவீரர் துயிலுமில்லங்களில் இதுவே மிகப்பெரியதாக இருப்பதனால் இதைக்காட்டி சிங்கள தேசத்திற்கு தமது புயபலத்தை நிரூபிக்க முனைகிறது.

ஏ32 வீதியில் நாச்சிக்குடாச்சந்திக்கு (நாச்சிக்குடாவிற்கு செல்லும் வீதி ஆரம்பிக்கும் இடம்) அண்மையில் இராணுவம் தரித்து நிற்கின்றது. இவ்விடம் பூநகரியில் இருந்து 21 மைல் தெற்கே அமைந்துள்ளது. அத்தோடு நாச்சிக்குடாச் சந்தியிலிருந்து மேற்காகச் செல்லும் வீதியில் மூன்று மைல் தொலைவிலேயே மேற்குக் கடற்பரப்பின் முக்கியத்துவமான நாச்சிக்குடா ஓடத்துறை அமைந்துள்ளது. அதனை அடுத்த குமுழமுனை, வலைப்பாடு, பாலாவி ஆகிய ஓடத்துறைகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது. எனினும் மேற்குறிப்பிட்ட நாச்சிக்குடா, வலைப்பாடு, பாலாவி ஆகியவை பாக்குநீரிணையின் ஆழ்கடலை அண்மித்தே அமைந்துள்ளன. எனவே இவற்றின் முக்கியத்துவத்தினை புலிகள் உணர்ந்திருக்காதது ஒன்றல்ல. எனினும் இவற்றினை மிஞ்சிய ஒரு இலக்கினை எதிர்பார்த்து காத்திருப்பதனாலேயே முழங்காவில் நோக்கிய நகர்வு இராணுவத்திற்குச் சாத்தியமாயிற்று.

அடுத்து கல்விளான் பகுதியை கைப்பற்றிதோடு இராணுவம் நேரெதிர் வடக்கே காடுகளுக்கூடாக நகர்ந்தால் தென்னியன்குளத்தை அடையமுடியும். அந்த முயற்ச்சி கடந்த வாரம் பலத்த அடி வாங்கியதை பார்க்கின்ற போது பூநகரி நோக்கிய நகர்வில் இராணுவ வலயத்தின் வட முனையினை ஒடுங்கலான ஒரு பிரதேசத்தினூடாக நகர புலிகள் இடமளிப்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில் பாலமோட்டையிலிருந்து பார்த்தால் படிப்படியாக மேற்கு நோக்கி கூம்புவடிவில் வவுனிக்குளம் அதனை அடுத்து கல்விளான் இறுதியாக முழங்காவில் என ஒரு படிமுறையிலான இராணுவ ஒடுங்கல் பிரதேசத்தை அவதானிக் முடியும். எனவே மேலும் முழங்காவிலில் இருந்து பல்லவராயன் கட்டு என முன்னோக்கி இராணுவம் நகருகின்ற போது கைப்பற்றப்படுகின்ற இராணுவ ஒடுங்கல் வலயம் மேலும் நீண்டு செல்லப்போகின்றது. அவ்வாறு செல்லுகின்ற போது மேற்குக் கடற்பரப்பில் புலிகளின் ஆதிக்கம் இழந்து போகலாம். ஆனால்………!!!!! புலிகளின் காத்திருப்பு இதற்காகத்தான் என அமையுமானால் ஒடுங்கல் வலயம் இராணுவ வரலாற்றில் கறைபடிந்த வரலாற்றுப் பதிவாகிவிடும்.

இதுவரை காலமும் ஏ32 வீதியில் இராணுவம் நகருகின்றபோது கடற்கரை வீதிக்கு மிக அண்மித்ததாகவும் சமாந்தரமாகவும் இருந்துவந்த புவியியல் அமைப்பு நாச்சிக்குடாச் சந்திக்கப்பால் விதியிலிருந்து சற்று விலகி வீதிக்கும் கடலுக்குமான தூரம் அதிகரித்துச் சென்று பூநகரிக்கு அண்மையாக மீண்டும் ஒடுங்குவதனால் வீதிக்கு மேற்காக இருக்கி;ன்ற முனை போன்ற விரிந்த பிரதேசத்தை கைப்பற்றுவதற்கு பெரிய ஆளணிவளத்தேவையை அரசுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. எனவே பூநகரி நோக்கிய வெற்றிக்கு இன்னும் இருபத்தியொரு மைல் தூரத்தில் அமைந்துள்ள பூநகரி வாடியடியை (ஒல்லாந்தர் கோட்டையுள்ள இடம்) சென்றடைய வேண்டும். அவ்விடத்தை அடைந்துவிட்டால் சங்குப்பிட்டி இறங்குதுறைக்கு மேலும் செல்லவேண்டிய ஆறு மைல் தூரத்தை சண்டைகளின்றி உல்லாச நடைப்பயணமாகச் சென்று கடல்நீரேரியைத் தாண்டி யாழ்ப்பாணத்துக்கான தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் மீண்டும் ஒரு “யாப்பாணப்பட்டுனா”வை சிங்களதேசம் கொண்டாடும். இது நடப்பதற்கு புலிகள் என்ன தூங்கிக்கொண்டா இருப்பார்கள்?.

அது என்ன யாப்பாணப்பட்டுனா? கி.பி.13 ஆம் நூற்றாண்டில் கோட்டை மன்னன் ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு கோட்டையிலிருந்து (கொழும்பு), புத்தளம், மன்னார் ஊடாக தற்போதைய ஏ32 வீதிவழியே பூநகரியை அடைந்து அங்கிருந்து தனங்கிழப்பு, அரியாலை ஆகியவற்றை அடைந்து அன்றைய தமிழர் தலைநகரான நல்லூரை தாக்கி வெற்றி கொண்;டு நல்லூர் விதியில் சிங்களச் சேனைகள் வெற்றிக்களிப்பில் வலம் வந்ததைப் பெருமையுடன் “சிங்களப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே யாப்பாணப்பட்டுனா” என சிங்கள தேசம் இன்றும் பெருமையுடன் குறிப்பிடுகிறது. மேலும் இதிலுள்ள சோகம் என்னவெனில் நல்லூர் மீதான படையெடுப்பின் படைத்தளபதி யாரெனில் சென்பகப்பெருமாள் என்றழைக்கப்படுகின்ற பனிக்கர் குலத்தைச் சேர்ந்த தமிழர். என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பின்னாளில் இவர் மனம் திருந்தி முத்திரைச் சந்தியி;ல் நல்லூர்க் கந்தன் கோயிலைக் கட்டினார். என்பதும் இரண்டு வருடங்களுக்குள்ளேயே சிங்களப் படைகளின் நீண்டதூர படைப்;பரம்பலும் அதனால் ஏற்பட்ட சிம்மாசனப் போட்டியும் கோட்டை இராச்சியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததோடு திரும்பிக் கோட்டைக்குச் சென்ற சென்பகப்பெருமாள் ஆறாம் புவனேகபாகு என்ற பெயருடன் கோட்டை அரசனாக முடிசூடி சிம்மமாசனத்தில் குந்தியது. பெட்டிச் செய்யாயிற்று.

எது எப்படியாயினும் மீண்டுமொரு யாப்பாணப்பட்டுனாவை சிங்களதேசம் கொண்டாட தமிழர் தேசம் அனுமதிக்குமா? என்பதே தற்போது அனைவரிடமும் உள்ள கேள்வியாகும். தற்போதைய நிலையில் பெரும்பாலானோர் கருத்து என்னவெனில் யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை இராணுவம் திறந்து விடும். என்பதை நம்புகின்றனர். காரணம் அரசின் பிரச்சாரத்தின் வெற்றியும் புலிகளின் பின்நகர்வும் ஆகும். மேலும் புலம்பெயர் தமிழர்களின் மனங்கள் சலிப்படைந்து தோல்வியடைந்து விடுவோமா? என்கின்ற ஏக்கமும் சோகமும் நிறைந்த ஓர் மனநிலையில் இருப்பதனை அவதானிக்க முடிகிறது. போர் என்றால் எப்போதுமே எமக்குத்தான் வெற்றியா என்ன…. சண்டைகளில் வெற்றியும் தோல்வியும் வருவது இயற்கையே. தோல்விகளைக் கண்டு தமிழர்கள் துவண்டு போனது வரலாற்றில் எங்கேனும் நாம் கண்டதில்லையே!. தோல்விக்குப் பின்னர் மீண்டும் வீறுகொண்டெழுந்து வரலாற்றுப் பக்கங்களை நிரப்பியவர்கள் அல்லவா தமிழர்கள். பிறகெதற்கு தற்போது சோகத்தால் சோர வேண்டும். தோல்வி என்று துவண்டு போக வேண்டும். இழப்புக்கள் எமக்குப் புதியவை அல்லவே.

விடாமுயற்ச்சிக்கு உலக வரலாற்றில் உதாரணமானவர்கள் தமிழினம் அல்லவா. ஏன் இதை நாம் மறக்க வேண்டும். இதனையே 2001 இல் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர் வன்னிக்கு விஜயம் செய்த நோர்வேயின் தூதுவர் எரிக் சொல்கைம் அவர்கள் “இரண்டாம் உலகப் போரில் அழிவிலிருந்து மீண்டெழுவதற்கு ஐரோப்பாவிற்கு நீண்டகாலம் தேவைப்பட்டது. ஆனால் குறுகிய காலத்தினுள் வன்னியில் ஏற்பட்ட அழிவில் இருந்து மீண்டெழுவதற்கு மக்கள் மேற்கொண்ட மிக வேகமான கட்டுமான வேலைத்திட்டங்கள் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அதே நேரம் உலகில் வேறு எந்தொரு இனத்திலும் இல்லாத ஒரு விடா முயற்ச்சியையும் தன்னம்பிக்கையையும் தான் தமிழர்களிடம் காண்பதாகவும் இதனையி;ட்டு பெருமையடைகிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இன்னுமொரு உதாரணம் உங்களுக்கு வேண்டுமானால் சொல்கிறேன் ஐந்து பெரிய இராணுவ நடவடிக்கைகளுக்கு உள்ளாகி மண்மேடாக பார்ப்பவர்களின் மனதை உருக்கக் கூடியதாக அழிந்து போயிருந்த கிளிநொச்சி நகரத்தை இன்று போய்ப்பாருங்கள். போரின் வடுக்கள் தெரிகிறதா என்ன? தமிழர்கள் என்றும் உறுதியானவர்களே.

எனவே வன்னியில் ஏற்பட்டிருக்கின்ற படைநடவடிக்கைகள் பற்றி உலகத் தமிழர்கள் சலிப்படையவோ, சோர்வடையவோ, வேண்டியதில்லை. கடந்த காலப் படைநடவடிக்கைகளில் புலிகளுக்கு ஏற்பட்ட ஆளணி இழப்பு தற்போதைய இராணுவ நடவடிக்கையின் போது ஏற்படவில்லை. எது எப்படியிருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தப் பெரிய இராணுவ நடவடிக்கைக்கும் எதிராக நினைத்த மாத்திரத்தில் களமுனையினை தமக்குச் சாதகமாக மாற்றக் கூடிய ஆளணி ஆயுத பலத்துடனேயே இருக்கிறார்கள். இதற்கு வடபோர்முனை, மற்றும் மணலாறு, பாலமோட்டை, வவுனிக்குளம். ஆகிய பகுகளில் போராளிகள் மேற்கொள்ளும் முறியடிப்புத் தாக்குதல்கள் தக்க சான்றாகும்.

மேலும் இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களைச் சுற்றி புலிகள் இட்டிருக்கும் வியூகத்தை உற்று நோக்குகின்ற போது வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் மேற்குக் கரையோரங்களை தமது பிடிக்குள் இறுக்கமாக வைத்திருப்பதற்கு புலிகள் ஒரு தேள் வடிவ வியூகம் இட்டிருக்கிறார்கள் போல் தோன்றுகிறது. அது எப்படி எனில் வன்னியின் மையத்தில் கிழக்குப் புறத்தில் மேற்கு நோக்கிப் பார்த்தவாறு அமர்ந்திருக்கின்ற தேளின் இடப்புறக் கொடுக்கில் பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதி; அகப்பட்டிருக்கிறது. மறுபுறத்தே தேளின் வலப்புறக் கொடுக்கில் வவுனிக்குளம், மல்லாவிப்பகுதி அகப்பட்டிருக்கிறது. இப்பகுதிக்குள் நுழைவோருக்கு தேளின் கொடுக்கு கவ்வினால் எப்படியிருக்கும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு ப் புரிய வைக்க வேண்டியதில்லை. மேலும் தேளின் வால்ப்பகுதியில் இருக்கின்ற கொடூரமான ஊசி போன்ற முனை எந்த நேரமும் பின்பக்கம் நீண்டு தெற்காக உள்ள மணலாற்றுப்பக்கம் திரும்பி குத்தவும் வாய்ப்பாக இருக்கும் அதேபோல் முன்புறத்தே சடுதியாக தேளுக்கு மேலாக எழுந்து தேளின் முன்புறம் குத்தும் அப்போதுதான் அதன் வேதனை எப்படியிருக்கும் என்பதை பாலம்பிட்டி, பெரியமடு, விடத்தல்தீவு, சிறாட்டிகுளம் ஆகிய இடங்களிலிருந்து குத்து வேண்டிய பின்னர் துடிதுடிக்கப் போகின்ற சிங்களச் சேனையிடமே கேட்க வேண்டும். இதுவே ஒரு முக்கிய பேர்க்களப் பிரதேசம் என்பதை வரும் நாட்களில் உணர முடியும்.

மேலும் வெள்ளாங்குளத்திலிருந்து பூநகரி நோக்கி நீண்டு செல்லப் போகின்ற இராணுவ ஒடுங்கல் வலயம் இன்னுமோர் வித்தியாசமான புலிகளி;ன் இராணுவப் பொறியினுள் நுழைந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. தற்போது அந்தப் பொறியின் இழுவிசையின் அந்தத்தினை இராணுவம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. என்றே சொல்லலாம். அத்தோடு புலிகளும் தமது பாச்சலுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருப்பதாகவே வன்னித் தகவல்கள் சொல்கின்றன. இதற்கு கடந்த வார இறுதியில் விடத்தல் தீவுப்பகுதியில் அதாவது இராணுவ வலயத்தினுள் புலிகளின் வேவு அணிகள் நுழைந்து தமது பணிகளில் ஈடுபட்ட வேளை எதிர்பாராத விதமாக இராணுவ அணியுடன் முட்டியதன் வெளிப்பாடாக ஏற்பட்ட சண்டையைக் குறிப்பிடலாம். எனவே வன்னியில் ஏற்படவிருக்கும் கொடுமையான தேள் பாச்சலின் அகோரத்தை சிங்களப்படை உணரும் நாள் வெகுதூரமில்லை.

http://www.pathivu.com/?p=3058

தாங்க முடியல்லை.

தயவுசெய்து இந்த வன்னியனின் ஆய்வை யாழ். களத்திலை இணைக்காதையுங்கோ. உங்களிற்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே குறுக்கரை இன்னும் காணோம்? :)

அந்தாள் சும்மா ஆராஞ்சாலே கடுப்பாகிரும். இதுக்குள்ள தேள் கதை எல்லாம் கதைச்சா பி.பி எகிறி மண்டைய கிண்டைய போட்டிராது?

மனுசன் எவ்வளவோ கஷ்டப்பட்டு மந்தைக் கூட்டம் மந்தைக் கூட்டம் எண்டு கத்திப் பாத்திச்சு. ஒருத்தனும் விளங்கிக்கொள்ளுற மாதிரி தெரிய்யேல்லை. சரி இவங்களுக்கு எழுதினாப் புரியாது. வீடியோவில போட்டாலாவது திருந்துகிறாங்களா எண்டு ஆடு இரை மேயிற வீடியோவை இணைச்சிச்சு. அப்பிடியிருந்த்தும் திருந்திறாங்களா? அரை அரை எண்டு அரைகிறாங்களே!

Edited by காட்டாறு

புலம்பெயர் தமிழரிடையே காணப்படுவது சோர்வு, சலிப்பு என்ற முடிவிற்கு வந்துவிடக் கூடாது. அது சலனம். விரைவில் அது நீங்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு கணிசமான பகுதியினர் மத்தியில் ஒரு நம்பிக்கையீனம் அல்லது சலிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. மடு கைப்பற்றப்படும்வரை இருந்த இந்த சலிப்புத் தன்மை படையினரை அகலக்கால் பதிக்க அனுமதிக்கப்பட்டபோது சற்றுக் குறைந்திருந்தது. விட்டுப்போட்டு புலிகள் அடிக்கப்போகினம் எண்ட எதிர்பார்ப்பு இருந்தது. எனினும் இதுவரை புலிகள் அமைதியாக இருப்பதால் மீண்டும் ஒரு சலிப்புத் தன்மை புலத்திலிருக்கும் பலரிடம் உருவாகி வருகிறது.

எனினும் இந்தச் சலிப்புத் தன்மை நிலையானது அல்ல. புலிகள் ஒரு தாக்குதலை நடத்தி 50 முதல் 100 படையினர் பலி என்ற செய்தி வந்தாலே இது மாறக்கூடியது.

தாயக நிலமை தொடர்பாக ஊடகங்களும் ஆய்வுகளும் புலம்பெயர் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இயங்க முற்படுகின்றது. மக்களின் எதிர்பார்ப்பு இயல்பானது. ஏதாவது ஒரு பதில் நடவடிக்கை மூலம் ஒரு திருப்பம் வரவேண்டும் என்ற உணர்வு மிகுந்த நிலையே தற்போது உள்ளது. ஆனால் ஒரு திருப்பத்திற்கு பலவித பணிகள் நடக்கவேண்டும், கடினமான உழைப்புத் தேவை. இவைகள் யாவும் தாயக மக்களும் புலம்பெயர் மக்களும் ஒருங்கிணைந்து செய்யவேண்டியவை. சோர்வும் சலிப்பும் என்பது சரியான பதம் அல்ல. ஒட்டுமொத்த ஈழத்தமிழனுக்கும் துயரம். சிங்களத்தால் ஏற்படுத்தப்படும் துயரம். இதில் இருந்து மீள்வதற்கு மக்கள் போராடுகின்றனர். உறவுகள் போராடுகின்றனர். அவர்கள் முயற்ச்சிக்கு எவ்வாறு ஆதரவு கொடுப்பது? என்ன பணிகளை செய்யலாம்? அவர்கள் துயரத்தை எந்தெந்த வழிகளில் உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்றவிடயத்தை அல்லவா ஆராய வேண்டும். ஊடகங்கள் இவ்வாறான ஒரு நேர்த்தியான நிலையில் மக்களை வழிநடத்த வேண்டும்.

எமது பணிகளில் இருந்து நீண்ட தூரம் விலகி நிற்கின்றோம். தாயக மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் ஒரு இடைவெளி உணரப்படுகின்றது. பங்காளி நிலமையில் இருந்து பார்வையாளர் நிலைமையாக கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. லட்சம் மக்கள் பாரிய இடப்பெயர்வையும் அவலத்தையும் சந்தித்துக்கொண்டிருக்கும் போது அதை வெளிப்படுத்த ஊடகங்கள் முயற்சிஎடுப்பதை விடுத்து எதிர்பார்ப்புகளை திருப்திப்படுத்த முயல்கின்றது. ஒரு பொங்குதமிழை சிறப்பாக செய்ய ஊக்குவித்த ஊடகங்கள் இவ்வாறான ஒரு அவல நிலையில் ஒரு மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் குறித்து ஊக்கமளிக்க பின்நிற்கின்றது. இதை விட சிங்களத்துக்கு சாதகமான விடயம் எதுவும் இல்லை.

வன்னியின் நிலமையை பொறுத்தவரை அழுதாலும் அவள்தான் பிள்ளை பெறவேண்டும் என்பதுக்கு ஒப்பானது. இடம்பெயர்ந்து மரங்களுக்கு கீழ் பட்டிணிகிடந்து வாழும் மக்கள் தான் எதிரிக்கு எதிராக போராட வேண்டும். அந்த மக்களில் இருந்து தான் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான படைகள் திரட்டப்பட வேண்டும். வேறு யாரும் இணைந்து கொள்ளக் கூடிய சூழல் தற்போது இல்லை. இந்த மக்களின் அவலப்பட்ட நிலைக்கு கைகொடுப்பது களத்தில் நிற்பதற்கு ஒப்பான பணி என்பதே நிதர்சனமான உண்மை. நேரடியான துயரத்தில் இருந்து விடுபட்ட நாம் செய்யவேண்டிய பணிகளை விடுத்து எப்போது எங்கே அடிவிழும் அது பேரிடியா இருக்கவேண்டும் என்ற சிந்தனையில் இருக்கின்றோம். அதை நாமும் சேர்ந்து தான் செய்யவேண்டும் என்ற யதார்தத்தில் இருந்து எவ்வாறு விலகினோம்?

வன்னிமக்களின் அவல நிலமை பொங்கு தமிழை விட இரண்டு மடங்கு எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு பாரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான நிலமைகளுக்கு ஊடகங்கள் அதி உச்ச முக்கியத்துவம் கொடுத்து ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும். ராணுவம் இடத்தை பிடித்துவிட்டது என்று அங்கலாய்ப்பதும் விட்டுட்டாங்களே என்று சலிப்பதும் , விட்டுட்டாங்கள் திருப்ப நாரி முறிய கொடுக்க போறாங்கள் என்று ஆறுதல் படுவதும் என்று விலத்தி நிற்க பழக்கப்படுகின்றோம். ஆக்கிரமிக்காதே, மக்களை அவலப்படுத்தாதே , அகதி ஆக்கதே என்று சத்தம் போட முனையவில்லை. அவ்வாறான முயற்சியும் ஆக்கிரமிப்புக்கும் விரும்பிய படி மக்களை அவலப்படுத்தும் வேகத்துக்கும் பொருளாதார தடைக்கும் எதிரான போராட்டம் தான். சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் போது கவனஈர்ப்பு நடத்துவது பெறுமதியானது. இவ்வாறன காலத்தின் தேவைகளை ஆய்வுகள் செய்து ஊடகங்கள் ஊக்கமளிக்க முன்வரவேண்டும்.

இன்னும் நீண்ட காலத்துக்கு புலிகள் தற்காப்பு தாக்குதலும், கரந்தடி தாக்குதலோடு நிப்பாட்டி கொள்வர். பெரிய தாக்குதல் எதையும் நடத்த போவதில்லை எண்றே வைத்து கொள்ளுங்களேன்......!! இது இராணுவ வளி மூலோபாயம் அல்ல.... அரசியல் சாணக்கியம்...!!!

உண்மைதான் வெறும் இராணுவத் தாக்குதலும் அதனால் கடைக்கும் வெற்றிகளும் இலக்கை அடையச் செய்யாது.

வன்னிப் படை நடவடிக்கையின் அடுத்த கட்டம் என்ன? - லண்டனிலிருந்து வன்னியன்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்]

. எனவே வன்னியில் ஏற்படவிருக்கும் கொடுமையான தேள் பாச்சலின் அகோரத்தை சிங்களப்படை உணரும் http://www.pathivu.com/?p=3058

:rolleyes::unsure::lol:

ஓம் பாருங்கோ எப்ப தொடக்கம் புலிகள் தேளானது ??? நல்லா அலசுறியள்

தேள் கடிக்குதோ இல்லையோ எங்கட சனங்கள் அங்க சாகப் போகுதுகள் அதகளையும் எழுதி அரசியலாக்குங்கோ நல்லாயிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரபரப்பு விளம்பரத்திலும் தேள் வடிவத் தாக்குதல் எண்டு ஏதோ இருந்தது..

என்ரை ஆய்வு என்ன சொல்லுதேன்றால்.

அடுத்த வருட பிற்பகுதி அல்லது 2010 முற்பகுதி வரை புலிகள் பாரிய ஊடறுத்து விரட்டியடிக்கும் எந்த தாக்குதலையும் செய்யப் போவதில்லை. வழிமறிப்பு சமர்களும் கரந்தடிச் சண்டைகளுமே இடம் பெறும். மேலும் சில நிலங்கள் சிறிலங்கா அரசால் கைப்பற்றப் படலாம்.

ஆனால் தமது ஆளணி ஆயுத படைகலங்களை பேணும் பொருட்டு முல்லைத்தீவு பகுதியை புலிகள் தமது முழுமையான கட்டு பாட்டின் கீழ் பேணுவார்கள். தொடரும் வழிமறிப்புத் தாக்குதல்களின் போர் அனுவபத்தினூடாகவும்.. பொருளாதார இலக்குகளை தாக்கும் போதும் ஆயுத படை கட்டுமானங்களை தாக்கும் போதும் அசராத அரச பயங்கரவாதத்தினை பெரும் ஆள் இழப்பினை ஏற்படுத்தி வகைதொகையற்ற வகையில் ஏற்படுத்தி நிலைய குலைய செய்வார்கள்.

அப்போ மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும். உலக நாடுகள் ஓடி வரும். பேச சொல்லும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும். உலக நாடுகள் ஓடி வரும். பேச சொல்லும்.

அப்படியானால் தமிழீழப் போராட்டம் வெறும் கயிறு இழுத்தல் போட்டியா? முன்னுக்குப் போவதும் பின்னுக்கு வருவதும் புலம் பெயர் நாடுகளில் இருந்து பார்ப்போருக்கு பொழுதுபோக்காக இருக்கும். அமைதியான வாழ்வின்றி அலையும் மக்களின் நிலை மட்டும் மாறப்போவதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கறந்தடியில் இருந்து ஆரம்பிக்க... எனி சிறீலங்கா இடமளிக்குமா என்பது சந்தேக்கத்துக்கு இடமானதே..!

தமிழீழம்.. இறுதி யுத்தம் எண்டதெல்லாம்.. வெறும் வாய்ப்பேச்சுத்தானா..??! காவடியார் என்ன சொல்ல வாறார்..??! :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களைச் சுற்றி புலிகள் இட்டிருக்கும் வியூகத்தை உற்று நோக்குகின்ற போது வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் மேற்குக் கரையோரங்களை தமது பிடிக்குள் இறுக்கமாக வைத்திருப்பதற்கு புலிகள் ஒரு தேள் வடிவ வியூகம் இட்டிருக்கிறார்கள் போல் தோன்றுகிறது. அது எப்படி எனில் வன்னியின் மையத்தில் கிழக்குப் புறத்தில் மேற்கு நோக்கிப் பார்த்தவாறு அமர்ந்திருக்கின்ற தேளின் இடப்புறக் கொடுக்கில் பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதி; அகப்பட்டிருக்கிறது. மறுபுறத்தே தேளின் வலப்புறக் கொடுக்கில் வவுனிக்குளம், மல்லாவிப்பகுதி அகப்பட்டிருக்கிறது. இப்பகுதிக்குள் நுழைவோருக்கு தேளின் கொடுக்கு கவ்வினால் எப்படியிருக்கும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு ப் புரிய வைக்க வேண்டியதில்லை. மேலும் தேளின் வால்ப்பகுதியில் இருக்கின்ற கொடூரமான ஊசி போன்ற முனை எந்த நேரமும் பின்பக்கம் நீண்டு தெற்காக உள்ள மணலாற்றுப்பக்கம் திரும்பி குத்தவும் வாய்ப்பாக இருக்கும் அதேபோல் முன்புறத்தே சடுதியாக தேளுக்கு மேலாக எழுந்து தேளின் முன்புறம் குத்தும் அப்போதுதான் அதன் வேதனை எப்படியிருக்கும் என்பதை பாலம்பிட்டி, பெரியமடு, விடத்தல்தீவு, சிறாட்டிகுளம் ஆகிய இடங்களிலிருந்து குத்து வேண்டிய பின்னர் துடிதுடிக்கப் போகின்ற சிங்களச் சேனையிடமே கேட்க வேண்டும். இதுவே ஒரு முக்கிய பேர்க்களப் பிரதேசம் என்பதை வரும் நாட்களில் உணர முடியும்.

emoyesxi8.gif

இலங்கை அரசாங்கம் அவ்வப்போது இவ்வாறான வில்லங்கமான துண்டைப் போடுகின்றது. மகிந்த சிந்தனையின் கீழ் கருணா அமோனியம் குளோரியம் என்று ஏதோ பினாத்தியுள்ளான். அதை யார் கவ்வித் திரிவது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. கருணா சொன்னதுக்கு பக்கபலமாக இவ்வாறான ஊக ஆக்கங்கள் சாட்சியாகும். இது நடக்கும் என்று தெரிந்து தான் சில வதந்திகள் கிழப்பி விடப்படுகின்றது. சர்வதேசத்திடம் இலங்கை அரசு அடுத்த கட்ட உதவி கோரலுக்கான முயற்ச்சி இது. அல்லது இலங்கை அரசு ஏதோ நாசவேலை செய்வதுக்கான முன்கூட்டிய நியாயப்படுத்தல் இது. சிறுத்தீவு தாக்குதலில் படையினரிடம் இருந்தே விசவாயு காப்பு முகமூடிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதை விட வேறு ஒரு குறிப்பிடத்தக்க நேரடித் தடயமும் இல்லை. தடயத்தின் அடிப்படையில் இலங்கை அரசே நாசவேலைக்கு தயாராகலாம். ஆனால் ஆய்வுகள் ஊகங்கள் மண்டை காயவைக்கின்றது.

இலங்கை அரசு ஏதோ நாசவேலை செய்வதுக்கான முன்கூட்டிய நியாயப்படுத்தல் இது. சிறுத்தீவு தாக்குதலில் படையினரிடம் இருந்தே விசவாயு காப்பு முகமூடிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதை விட வேறு ஒரு குறிப்பிடத்தக்க நேரடித் தடயமும் இல்லை. தடயத்தின் அடிப்படையில் இலங்கை அரசே நாசவேலைக்கு தயாராகலாம்.

Edited by Panangkai

வன்னிப் படை நடவடிக்கையின் அடுத்த கட்டம் என்ன? - லண்டனிலிருந்து வன்னியன்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்]

மேலும் இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களைச் சுற்றி புலிகள் இட்டிருக்கும் வியூகத்தை உற்று நோக்குகின்ற போது வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் மேற்குக் கரையோரங்களை தமது பிடிக்குள் இறுக்கமாக வைத்திருப்பதற்கு புலிகள் ஒரு தேள் வடிவ வியூகம் இட்டிருக்கிறார்கள் போல் தோன்றுகிறது. அது எப்படி எனில் வன்னியின் மையத்தில் கிழக்குப் புறத்தில் மேற்கு நோக்கிப் பார்த்தவாறு அமர்ந்திருக்கின்ற தேளின் இடப்புறக் கொடுக்கில் பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதி; அகப்பட்டிருக்கிறது. மறுபுறத்தே தேளின் வலப்புறக் கொடுக்கில் வவுனிக்குளம், மல்லாவிப்பகுதி அகப்பட்டிருக்கிறது. இப்பகுதிக்குள் நுழைவோருக்கு தேளின் கொடுக்கு கவ்வினால் எப்படியிருக்கும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு ப் புரிய வைக்க வேண்டியதில்லை. மேலும் தேளின் வால்ப்பகுதியில் இருக்கின்ற கொடூரமான ஊசி போன்ற முனை எந்த நேரமும் பின்பக்கம் நீண்டு தெற்காக உள்ள மணலாற்றுப்பக்கம் திரும்பி குத்தவும் வாய்ப்பாக இருக்கும் அதேபோல் முன்புறத்தே சடுதியாக தேளுக்கு மேலாக எழுந்து தேளின் முன்புறம் குத்தும் அப்போதுதான் அதன் வேதனை எப்படியிருக்கும் என்பதை பாலம்பிட்டி, பெரியமடு, விடத்தல்தீவு, சிறாட்டிகுளம் ஆகிய இடங்களிலிருந்து குத்து வேண்டிய பின்னர் துடிதுடிக்கப் போகின்ற சிங்களச் சேனையிடமே கேட்க வேண்டும். இதுவே ஒரு முக்கிய பேர்க்களப் பிரதேசம் என்பதை வரும் நாட்களில் உணர முடியும்.

மேலும் வெள்ளாங்குளத்திலிருந்து பூநகரி நோக்கி நீண்டு செல்லப் போகின்ற இராணுவ ஒடுங்கல் வலயம் இன்னுமோர் வித்தியாசமான புலிகளி;ன் இராணுவப் பொறியினுள் நுழைந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. தற்போது அந்தப் பொறியின் இழுவிசையின் அந்தத்தினை இராணுவம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. என்றே சொல்லலாம். அத்தோடு புலிகளும் தமது பாச்சலுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருப்பதாகவே வன்னித் தகவல்கள் சொல்கின்றன. இதற்கு கடந்த வார இறுதியில் விடத்தல் தீவுப்பகுதியில் அதாவது இராணுவ வலயத்தினுள் புலிகளின் வேவு அணிகள் நுழைந்து தமது பணிகளில் ஈடுபட்ட வேளை எதிர்பாராத விதமாக இராணுவ அணியுடன் முட்டியதன் வெளிப்பாடாக ஏற்பட்ட சண்டையைக் குறிப்பிடலாம். எனவே வன்னியில் ஏற்படவிருக்கும் கொடுமையான தேள் பாச்சலின் அகோரத்தை சிங்களப்படை உணரும் நாள் வெகுதூரமில்லை.

http://www.pathivu.com/?p=3058

இந்த தவளைகளின் தொல்லை தாங்க முடியலைடா சாமி!!!

இது போன்ற இராணுவ மேதைகள் லண்டனில் இருந்து கொண்டு என்ன செய்கிறார்கள். எழுதுவதை நிறுத்தி விட்டு வன்னியின் களங்களில் நின்று தங்கள் இராணுவ மேதாவிலாசத்தை காட்ட வேண்டியது தானே!!!

ஒரு சந்தோசம்!!! புலிப்பாய்ச்சலை இந்த தவளைகளால் ஒருநாளும் கணிக்க முடியாது என்பது தான்!

தவளைகள் கத்தி கத்தியே பக்கத்தில் இருக்கும் தவளைகளையும் பாம்புக்கு இரையாக்கிவிடும். அது தான் சோகம்!!!

ஒரு நாள் புலி பாய்ந்த கல்லில் அமர்ந்து, இப்படி தேள் பற்றி எழுதுபவர்கள் தான் திருடனுக்கு தேள் கொட்டியது போல் விழிக்க வேண்டிவரும்!!!

Edited by vettri-vel

மாரிகாலம் தொடங்கும் போது மகிந்த பரிவாரங்கள் தமது தவறை உணர்வார்கள். ஆனால் இந்த முறை பொறியில் இருந்து மீளுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது. ஒட்டு மொத்தமாக துடைத்தலிக்கப்படும்.

புலிகளை யாரும் கணிப்பிட முடியாது. புலிகளால் முடியாதது என்று ஒன்றில்லை. புலிகள் தமது நிகழச்சி நிரல்படித்தான் காய்கள் நகர்த்துவார்கள்.

இந்த வருட மாவீரர் தின உரைக்கான புதிய படையணியாக விசேட இரசாயன தாக்குதல் படையணி அறிமுகமாகலாம். உலகத்திலேயே அமெரிக்காவுக்கு அடுத்தாக அதிக அளவில் விசேட படையணிகள் புலிகளிடம் தான் உண்டு.

ஓயாத அலைகள் 5 வெற்றிகரமாக நடக்க வேண்டும் எண்டு எல்லோரும் முடிந்தவரை பிரார்த்தனை செய்வோம். மோட்டுச் சிங்களவர் மண்கவ்வும் நாள் வெகு தொலைவில் இல்லை. உதுகளை எல்லாம் நாங்கள் பிரேமதாச சந்திரிக்கா காலத்தில இருந்து சந்தித்தனாங்கள். உலகத்திலேயே 4 ஆவது இராணுவத்தை ஓட ஓட விரட்டினாங்கள். டம்லர்கள் வெல்வது உருதி. நம்பிக்கையோடு இருப்போம் நம்பிக்கை தான் வாழ்க்கை.

மியா மியா பூனைக்குட்டி!

மீசைக்கார பூனைக்குட்டி!

ஆளை ஏய்க்கும் பூனைக்குட்டி!

ஆசை காட்ட ரொம்ப கெட்டி!

:rolleyes::lol::unsure:

Edited by vettri-vel

மாரிகாலம் தொடங்கும் போது மகிந்த பரிவாரங்கள் தமது தவறை உணர்வார்கள். ஆனால் இந்த முறை பொறியில் இருந்து மீளுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது. ஒட்டு மொத்தமாக துடைத்தலிக்கப்படும்.

புலிகளை யாரும் கணிப்பிட முடியாது. புலிகளால் முடியாதது என்று ஒன்றில்லை. புலிகள் தமது நிகழச்சி நிரல்படித்தான் காய்கள் நகர்த்துவார்கள்.

இந்த வருட மாவீரர் தின உரைக்கான புதிய படையணியாக விசேட இரசாயன தாக்குதல் படையணி அறிமுகமாகலாம். உலகத்திலேயே அமெரிக்காவுக்கு அடுத்தாக அதிக அளவில் விசேட படையணிகள் புலிகளிடம் தான் உண்டு.

ஓயாத அலைகள் 5 வெற்றிகரமாக நடக்க வேண்டும் எண்டு எல்லோரும் முடிந்தவரை பிரார்த்தனை செய்வோம். மோட்டுச் சிங்களவர் மண்கவ்வும் நாள் வெகு தொலைவில் இல்லை. உதுகளை எல்லாம் நாங்கள் பிரேமதாச சந்திரிக்கா காலத்தில இருந்து சந்தித்தனாங்கள். உலகத்திலேயே 4 ஆவது இராணுவத்தை ஓட ஓட விரட்டினாங்கள். டம்லர்கள் வெல்வது உருதி. நம்பிக்கையோடு இருப்போம் நம்பிக்கை தான் வாழ்க்கை.

உங்களுக்கு ஒன்றும் தெரியாது...

ஒவரு படையணியிலும் ஆக குறைந்தது 1000தில் இருந்து 2000ம் 3000ம் பேர் இருக்கிறார்கள் அப்போ இது வரை கேள்ப்பட்ட படையணிக்ளின் தொகையை கூட்டி பாருங்களேன்.....

யாரோ ஒரு பன்னாடை 2 3 வருடத்துக்கு முன் ஒரு கட்டுரை தினக்குரலில் எழுதி இருந்த்து....

இனி சண்டை தொடங்கினால் மட்டக்களப்புக்கும் வன்னிக்கும் நேரடியாக பதை திறக்க படும் என்று ஆனால் கடசியில்?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை யாரும் கணிப்பிட முடியாது. புலிகளால் முடியாதது என்று ஒன்றில்லை. புலிகள் தமது நிகழச்சி நிரல்படித்தான் காய்கள் நகர்த்துவார்கள்.

ஓயாத அலைகள் 5 வெற்றிகரமாக நடக்க வேண்டும் எண்டு எல்லோரும் முடிந்தவரை பிரார்த்தனை செய்வோம். மோட்டுச் சிங்களவர் மண்கவ்வும் நாள் வெகு தொலைவில் இல்லை. உதுகளை எல்லாம் நாங்கள் பிரேமதாச சந்திரிக்கா காலத்தில இருந்து சந்தித்தனாங்கள். உலகத்திலேயே 4 ஆவது இராணுவத்தை ஓட ஓட விரட்டினாங்கள். டம்லர்கள் வெல்வது உருதி. நம்பிக்கையோடு இருப்போம் நம்பிக்கை தான் வாழ்க்கை.

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

இந்த வருட மாவீரர் தின உரைக்கான புதிய படையணியாக விசேட இரசாயன தாக்குதல் படையணி அறிமுகமாகலாம். உலகத்திலேயே அமெரிக்காவுக்கு அடுத்தாக அதிக அளவில் விசேட படையணிகள் புலிகளிடம் தான் உண்டு.
">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூளையில்லாத சிங்களப் படைகள் அழியப்போவது தெரியாமல் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.. தேள் வியூகத்துக்கள் சரியாக வந்து சேர்தவுடன் கொடுக்குப் பிடியில் மாட்டுவார்கள். அதன் பின்னர், சாரம், சாறி கூடக் கட்டிக் கொண்டு அவர்களால் திரும்பி ஓட முடியாது. வன்னி மண்ணுக்கு உரமாகப் புதையப்போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுள்ள கள நிலைமை (அதாவது நமக்கு தெரிந்த அளவில்) பழைய நினைவுகளைக் கிளறுகிறது. ஜயசிகுறு நடவடிக்கையின் உச்சக்கட்டத்தில் சிறீலங்கா ராணுவம் வன்னியெங்கும் பரந்து விரிந்த நேரம் ஒருவர் "யாகம் தொடங்கிவிட்டோம்" என்ற பாடலை மாற்றி "ஓடத் தொடங்கிவிட்டோம்" என்று மாற்றிப் பாடி கிண்டல் செய்தபடி இருந்தார். பிறகு அவர் "நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்" என்று பாடியது தனிக் கதை..! :rolleyes:

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் கறந்தடியில் இருந்து ஆரம்பிக்க... எனி சிறீலங்கா இடமளிக்குமா என்பது சந்தேக்கத்துக்கு இடமானதே..!

குறுக்ஸ்..

புலிகள் தொடர்ந்தும் தம்மை மரபுவழி படையணியாக பேணுவார்கள். அதற்கான தள நிலம் (முல்லைத்தீவு) தொடர்ந்தும் அவர்களது கட்டுபாட்டிலேயே இருக்கும். கைப்பற்றிய பகுதிகளில் கொரில்லா யுத்தம் நடக்கலாம்.

ஆனால் விரட்டியடிப்பு சமர் 2010திலதான்..

அதுவரையும் அல்லல்படும் மக்களுக்கான உதவிகளை செய்து கொண்டு கள ஆய்வாளர்கள் காணாமல் போறது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலப்போற அண்ணாச்சி அடிக்கடி சொல்வது போல.. கோவில் மணியில் ஆட்லறி செய்து.. புறக்கணி சிறீலங்கா பனரை சுத்திக்கட்டி.. அடிச்சால்.. ஓர்மமா வாற சிங்களவன் ஓடிடுவான். எதுக்கும் தலைவர் அண்ணாச்சியைக் கூப்பிட்டு பக்கத்தில வைச்சிருக்கிறது நல்லது..! இவர் உங்கினை இருந்து வெத்து வேட்டுகளா தீர்த்திவிட்டு ஓடி ஒளிச்சிடுறார். அவரிடைய படிப்பு சக்தி சிந்தனை தொலைநோக்கு இவற்றைப் பாவிக்காததாலதான் புலிகளுக்கு இவ்வளவு பெரிய பின்னடைவு..! எதற்கும் கோவில் மணிகளைக் கழற்றி ராமசாமியார் சிலைக்கு முன்னால வைச்சு திராவிட பூசை செய்திட்டு ஆட்லறி செய்து அடித்தால்.. நிச்சயம் ஆமி அனுராதபுரத்திலதான் போய் நிற்கும்.. என்பது அண்ணாச்சியின் திடமான ஆய்வு..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.