Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிப் படை நடவடிக்கையின் அடுத்த கட்டம் என்ன?

Featured Replies

யோவ் காவடி என்ன லொள்ள. கறண்ட் அடி கத்தரிக்கா குளம்பு பற்றி நான் எங்கை எழுதியிருக்கிறன்?

அது உங்கை ஆமியின்ரை பல்குழல் செலுத்திகளை அடிக்கிறதோ பறிக்கிறதோ எண்டு திட்டம் எழுதுற வித்துவான்கள் எல்லோ சொல்லீனம்.

ஏன் 2010 இலேயே சனாதிபதி தேர்தல் வருகுது? :unsure: இல்லாட்டி 1980 களில வந்த scifi படங்களில பரவலாக பாவிக்கப்பட்ட பொதுவான ஆண்டிலக்கம் எண்ட படியாலோ :rolleyes:

4 வருசத்துக்கு ஒருக்கா உலகக் கோப்பை ஒலிம்பிக்க வாறமாதிர 6...8 வருடங்களுக்கு ஒருக்க ஓயாதஅலைகள் விரட்டி அடிப்பு துடைத்தழிப்பு மண் மீட்பு எண்டு ஏதோ விறு விறுப்ப நடந்தா சரி. உதுகளை உலகக் கோப்பை ஒலிம்பிக் போன்றவற்றின் கால அட்டவணைகளோடை ஒருங்கிணைச்சு செய்தா தொய்வில்லாமல் ஸ்கோருகள் ஏதே ஒரு களத்தில இருந்து வந்து கொண்டிருக்கும். இல்லாட்டி எந்த ஸ்கோரை பாத்தி விசிலடிக்கிறது எண்டு குளம்ப வேணும்.

இப்போதுள்ள கள நிலைமை (அதாவது நமக்கு தெரிந்த அளவில்) பழைய நினைவுகளைக் கிளறுகிறது. ஜயசிகுறு நடவடிக்கையின் உச்சக்கட்டத்தில் சிறீலங்கா ராணுவம் வன்னியெங்கும் பரந்து விரிந்த நேரம் ஒருவர் "யாகம் தொடங்கிவிட்டோம்" என்ற பாடலை மாற்றி "ஓடத் தொடங்கிவிட்டோம்" என்று மாற்றிப் பாடி கிண்டல் செய்தபடி இருந்தார். பிறகு அவர் "நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்" என்று பாடியது தனிக் கதை..! :unsure:

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: தேள் வடிவக் கொடுக்கு, பூரான் வடிவக் கொடுக்கு!!!! புல்லரிக்குது !!!!!தமிழ்நாட்டுச் சினிமாப் படங்கள் பரவாயில்லைப் போல் கிடக்கு. எப்படி இவர்களால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறதோ தெரியவில்லை? இதில் வேடிக்கை என்னவென்றால் தங்களின் கனவுகளையும் ஆசைகளையும் எங்களையும் நம்பச் சொல்லிக் கேட்பதுதான்.

நிலமையின் தீவிரம் இவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ புலிகளுக்கு நன்கே தெரிந்திருக்கும். அவர்களே இந்தத் தேள்வடிவத் தாக்குதல் வியூகம் பற்றிப் படித்துச் சிரித்திருப்பார்கள்(இந்த இக்கட்டான வேளையிலும் கூட).

சும்மா தொய்வு நிமித்துகிறேன் பேர்வழி எண்டு சொல்லிக்கொண்டி இதிகாசங்களில் வந்தது போல சிறுபிள்ளைக் கதை சொல்லிக் கொண்டிருக்குது சனம்.

போராட்டத்தில் தொய்வு ஏற்படலாம் என்று நம்புவது கூடக் கஷ்ட்டமாகத் தெரிகிறது எமக்கு. அந்தளவுக்கு இந்த ஊடகங்கள் மக்களை உச்சாணிக் கொப்பில் தூக்கி ஏற்றி வைத்துள்ளன. இதில் புலிகளைக் குறை கூறுவதில் எந்தப்பயனுமில்லை. யாழ்ப்பாணத்தை ஒரு சில நாட்களுக்குள் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும், கிழக்கும் மேற்கும் சில நாட்களுக்குள் விழுந்து விடும் என்று புலிகள் ஒருபோதும் சொன்னது கிடையாது.இந்தக் கைங்கரியத்தைச் செய்ததெல்லாம் எமது பத்தி எழுத்தாளர்கள்தான். அன்று அப்படி எழுதியதால்த்தான் இன்று இதிகாசக் கதைகள் சொல்ல வேண்டியிருக்கு.இப்போது தாம் எழுதிய கற்பனைகளுக்கு விளக்கம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பலருக்கு தமது கணிப்புகள் எல்லாம் செத்தபின் தமது முகத்தை எங்கு கொண்டுபோய் வைப்பது என்று கவலை, அதனால இப்ப வன்னியைப் பற்றிக் கதைப்பது கூடக் கிடையாது. ரஷ்ஷியா, ஜோர்ஜியா, அப்காஸியா எண்டு சரியான தொலைவில போய் நிக்கினம். பாவம்.

வன்னியில் புலிகளின் தந்திரோபாயம் பற்றியும், எதிரி அகலக்கால் வைக்கிறது பற்றியும் எழுதியளவுக்கு அங்கு சனம் நாள்தோறும் இடம்பெயர்ந்து வாழும் அவலங்களையாவது எழுதியிருந்தால் சனத்துக்காவது உதவியாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

குறூக்ஸ் போன்றவர்கள் ஏன் யாழ் களத்துக்கு வர வேண்டும். ?நிறைய தளங்கள் அதாவது தேனி போன்ற தளங்களுக்கு எழுதலாமே? ஐந்து பத்தாவது பிச்சை காசாக தருவார்கள்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

மூளையில்லாத சிங்களப் படைகள் அழியப்போவது தெரியாமல் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.. தேள் வியூகத்துக்கள் சரியாக வந்து சேர்தவுடன் கொடுக்குப் பிடியில் மாட்டுவார்கள். அதன் பின்னர், சாரம், சாறி கூடக் கட்டிக் கொண்டு அவர்களால் திரும்பி ஓட முடியாது. வன்னி மண்ணுக்கு உரமாகப் புதையப்போகிறார்கள்.

அது தானே கிளக்கின் விடி வெள்ளி கக்கூசுக்கு இருக்க கூட பயப்படுகிறது. :wub:

வன்னிப் படை நடவடிக்கையின் அடுத்த கட்டம் என்ன? - லண்டனிலிருந்து வன்னியன்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்]

அது என்ன யாப்பாணப்பட்டுனா? கி.பி.13 ஆம் நூற்றாண்டில் கோட்டை மன்னன் ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு கோட்டையிலிருந்து (கொழும்பு), புத்தளம், மன்னார் ஊடாக தற்போதைய ஏ32 வீதிவழியே பூநகரியை அடைந்து அங்கிருந்து தனங்கிழப்பு, அரியாலை ஆகியவற்றை அடைந்து அன்றைய தமிழர் தலைநகரான நல்லூரை தாக்கி வெற்றி கொண்;டு நல்லூர் விதியில் சிங்களச் சேனைகள் வெற்றிக்களிப்பில் வலம் வந்ததைப் பெருமையுடன் “சிங்களப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே யாப்பாணப்பட்டுனா” என சிங்கள தேசம் இன்றும் பெருமையுடன் குறிப்பிடுகிறது. மேலும் இதிலுள்ள சோகம் என்னவெனில் நல்லூர் மீதான படையெடுப்பின் படைத்தளபதி யாரெனில் சென்பகப்பெருமாள் என்றழைக்கப்படுகின்ற பனிக்கர் குலத்தைச் சேர்ந்த தமிழர். என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பின்னாளில் இவர் மனம் திருந்தி முத்திரைச் சந்தியி;ல் நல்லூர்க் கந்தன் கோயிலைக் கட்டினார். என்பதும் இரண்டு வருடங்களுக்குள்ளேயே சிங்களப் படைகளின் நீண்டதூர படைப்;பரம்பலும் அதனால் ஏற்பட்ட சிம்மாசனப் போட்டியும் கோட்டை இராச்சியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததோடு திரும்பிக் கோட்டைக்குச் சென்ற சென்பகப்பெருமாள் ஆறாம் புவனேகபாகு என்ற பெயருடன் கோட்டை அரசனாக முடிசூடி சிம்மமாசனத்தில் குந்தியது. பெட்டிச் செய்யாயிற்று.

http://www.pathivu.com/?p=3058

என்ன தீடிரென்று ரசியாவின்ர யேர்மனியின்ர வரலாறுகளை தூக்கிறயெறிந்து விட்டு திரும்ப புநகரிக்குள்ள வந்தட்டியள் எண்டு விளண்டேல பாருங்கோ ! என்ன செப்பி துப்பி அலுத்து போச்சு தோ !

  • 4 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேள்வடிவத் தாக்குதல் பற்றி சபேசன் எழுதியதாக இடைக்கிடை சிலர் கருத்துக்களைக் கூறுவார்கள்.

தேள்வடிவத தாக்குதல் பற்றிய வன்னியனின் ஆய்வுக் கட்டுரையை இணைத்த நினைவில் தேடிப்பார்த்தபோது சபேசன் கருத்துக்கூறவும் இல்லை என்றும் தெரிகின்றது :o .

 

ஆனால் சில கருத்தை இப்போது வாசிக்கும்போது இப்போது எவ்வளவு தெளிவடைந்துவிட்டோம் என்றும் தெரிகின்றது!

இதிலே வேதனை என்னவென்றால் இந்தக் கட்டுரைக்கு கைதட்டியவர்கள்தான் இன்றைக்கு என்னை கிண்டல் செய்கிறார்கள். படையினர் பூநகரிக்கு வந்தவுடன் "வன்னி முழுவதும் பறிபோகின்ற ஒரு நிலைக்கு நாம் தயாராக இருக்கிறோமா?" என்று ஒரு விவாதத்தை யாழில் ஆரம்பித்தவன் நான். என்னைப் பார்த்து "கிளிநொச்சி விழாது" என்று எழுதியதாக இப்பொழுது கதை பரப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் இதை எழுதவில்லையென்று நானும் பல இடங்களில்
சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆனால் இல்லை அவரேதான் என்று சிலர் அடம்
பிடிக்கிறார்கள். :lol: இந்த திரியிலை  நான் எந்த கருத்தையும்  வைக்காமல் இருந்ததால் அன்றைக்கு தப்பிட்டன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையாக நான் 2008ம் ஆண்டு புலம்பெயர்ந்து வருவதற்கு முன் பத்திரிகைகளில் வரும் இப்படியான அரசியல்,ராணுவக் கட்டுரைகளைப் பார்த்து வியந்ததுண்டு. ஆனால் இங்கு வந்து இணையத்தில் பரீட்சயமாகி, ஓரளவுக்கு இவர்களை எல்லாம் தெரிந்த பின்னர், இந்த "அலுக்கோசு"க் காமடியை எல்லாம் படிச்சு பீத்திக் கொண்டு திரிஞ்சோமே என்று தான் தோணும். :wub:

 

இப்ப இதுகளை எல்லாம் நினைக்க "கக்க" "பிக்க" னு சிரிப்பு சிரிப்பா வருது.. :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இதிலே

வேதனை என்னவென்றால் இந்தக் கட்டுரைக்கு கைதட்டியவர்கள்தான் இன்றைக்கு

என்னை கிண்டல் செய்கிறார்கள். படையினர் பூநகரிக்கு வந்தவுடன் "வன்னி

முழுவதும் பறிபோகின்ற ஒரு நிலைக்கு நாம் தயாராக இருக்கிறோமா?" என்று ஒரு

விவாதத்தை யாழில் ஆரம்பித்தவன் நான். என்னைப் பார்த்து "கிளிநொச்சி விழாது"

என்று எழுதியதாக இப்பொழுது கதை பரப்புகிறார்கள்.

 

நாங்க வாசிச்ச வரைக்கும்.. மேற்படி கட்டுரைக்கு பெரும்பாலும் எல்லோரும்.. நக்கலாத் தான் பதில் சொல்லி இருக்கினம்.

 

மேலும் நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் எழுதி இணைத்த கட்டுரைகளை மீண்டும்.. ஒருக்கா பகிரங்கப்படுத்துங்கள். அப்போது தான் மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல வாறீங்கண்ணு புரியும்..!

 

நீங்களும் நிறைய எழுதிக் கிழிச்ச ஆள் தான்... அதனை மறைக்க முடியாது. அதுசரி..  இந்த வன்னியன் நீங்கள் இல்லைத் தானே..???! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்படி எல்லாம் தடம்புரண்டீர்கள் என்பதற்கும்.. இங்கு தலைப்புக்கள் உள்ளன சபேசன்...

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=38509

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வாசிச்ச வரைக்கும்.. மேற்படி கட்டுரைக்கு பெரும்பாலும் எல்லோரும்.. நக்கலாத் தான் பதில் சொல்லி இருக்கினம்.

 

மேலும் நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் எழுதி இணைத்த கட்டுரைகளை மீண்டும்.. ஒருக்கா பகிரங்கப்படுத்துங்கள். அப்போது தான் மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல வாறீங்கண்ணு புரியும்..!

 

நீங்களும் நிறைய எழுதிக் கிழிச்ச ஆள் தான்... அதனை மறைக்க முடியாது. அதுசரி..  இந்த வன்னியன் நீங்கள் இல்லைத் தானே..???! :lol::D

 

இந்த வன்னியன் என்பவர் சாந்தி அக்காவின் கணவன் வன்னியனா அல்லது வேறு ஆளா?...அவராகத் தான் இருக்கும் என நினைக்கிறேன்...அவரும் இப்படியான கட்டுரைகள் எல்லாம் எழுதுறவர்

இந்த வன்னியன் நான் இல்லை. சாந்தி அக்காவின் கணவரும் இல்லை. இவருடைய கட்டுரைகள் சம்பந்தமாக நான் ஒரு முறை அவருடனேயே நேரில் பேசியிருக்கிறேன். தன்னை அதிகம் எழுத வேண்டாம் என்றும், தன்னுடைய கட்டுரைகளினால் படையினர் பல இரகசியங்களையும் இடங்களையும் அறிந்து கொள்கிறார் என்று புலிகள் சொன்னதாக என்னிடம் கூறினார். அது ஒரு கனாக் காலம்.

நானும் நிறைய எழுதியிருக்கிறேன். தவறு என்கின்ற பொழுது அதை மாற்றிக் கொள்வதற்கும் நான் தயங்கியது இல்லை. இதே யாழ் களத்தில் புலிகளின் பணியகத்தில் நின்ற ஒரு போராளி சொன்னதை நம்பி கொடிகாமம் வரை புலிகள் முன்னேறி விட்டார்கள் என்று செய்தி போட்டிருக்கிறேன். போராளி சொன்னதால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கே உள்ள கள உறவுகளோடு என்னுடைய செய்தி உண்மைதான் என்று அடம்பிடித்திருக்கிறேன்.

செய்தி பொய் என்று தெரிந்ததான் பிற்பாடு, என்னுடைய தளத்தில் செய்திப் பகுதியையே நிறுத்தி விட்டேன். உண்மை பொய் தெரியாத ஒரு களநிலவரத்திற்குள் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை புரிய வைத்த தருணங்ககள் அவைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.