Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் திருமணம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அள்ளித் தெளிக்கும் அழகு

அளவாய் கொண்டு

ஆடம்பரமில்லா அலங்காரமிட்டு

ஆரவாரமில்லா பேச்சொடு

இரவலற்ற புன்னகை தந்து

இரங்கும் பார்வை கொட்டி

ஈயும் இதயம் காட்டி

ஈர்ந்தாள் என்னை

உருளும் கரு விழி கொண்டு.

உள்ளத்தில் உவகை பொங்க

ஊரின் சாயலில் பேசி

ஊடலற்ற பொழுதுகள் தந்து

எழிமை நடை பயில

எழில் கொண்டு வந்தாள்

ஏடு தூக்கும் கரத்தால்

ஏக்கம் தீர

ஐயுறவின்றித் தழுவி

ஐக்கியமாகும் எண்ணத்தில்..!

ஒரு தரம் என் கரம் பற்றினாள்

ஒரு பெரும் பொறி பிறந்தது

ஓராயிரம் உணர்வுகள் பொங்க

ஓரமாய் உடலெங்கும் பற்றியெரிந்தது

ஒளடதம் தேட

ஒளவையின் அடுக்குமொழி தந்தாள்.

அடுத்து என்ன..

அகேனம் விதி வழி சேர

அடுக்கிய கனவுகள்

அனைத்தும் ஒடிந்தன

விழிகள் விழிக்கையில்..! :)

Edited by nedukkalapoovan

  • Replies 133
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லகவிதை நெடுக்கு :D (அப்பாடா மனுசனுக்கு கனவிலையாவது பெண் வாசனையை கடவுள் காட்டீட்டான் :) )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லகவிதை நெடுக்கு :D (அப்பாடா மனுசனுக்கு கனவிலையாவது பெண் வாசனையை கடவுள் காட்டீட்டான் :) )

அப்படி என்ன தான் பெரிய வாசனை இருக்கப் போகிறது பெண்களிடம். பெண்களிடம் இயற்கையா உள்ளவை.. வெறும் வியர்வை துர்நாற்றமும்.. ஓமோன்களின் துர்நாற்றமும் மட்டுமே..! அவற்றை கட்டுப்படுத்த பாவிக்கும் செயற்கை நாற்றங்களே.. ஆண்களின் மனதைக் கவர்கின்றன.

எங்கே நக்கீரன்.. அவன் அன்று கண்டது அனைத்தும் உண்மை. நக்கீரா நீ வாழ்க..! ஒரு கனவோடு.. கண்டேனே.. இன்று நானும் அந்த உண்மை..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா ........உங்கடை உடம்பு முழுக்க இயற்கையாகவே சந்தணவாசமாக்கும் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ........உங்கடை உடம்பு முழுக்க இயற்கையாகவே சந்தணவாசமாக்கும் :)

சந்தனமோ இல்லையோ.. நாங்க பெண்களைப் போல.. பீற்றிக்கல்ல.. இயற்கையாகவே எமக்கு வாசனை (நாற்றம்.. துர்நாற்றம் அல்ல) இருக்கென்று..! :D

  • கருத்துக்கள உறவுகள்

விலிருந்து வரைக்கும் வரிகளை ஆரம்பித்த விதம் அழகு நெடுக்ஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்தை எழுதி போட்டு .......பிறகு என்ன கனவு என்று சொல்லி மழுப்பிறியள்.......அ ...கவிதை அசத்தல்

  • கருத்துக்கள உறவுகள்

கனவு கண்டு எழுதிய கவிதை போல நிஜத்திலும் நடை பெற வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கனவு உண்மையானால்

திருமணத்தின் பின் உங்கள் நிலை

அடுப்படியில் இருக்கும் பாத்திரங்களினால்

அடிவாங்கிக் கொண்டு -----------------

கந்தப்பு..ஏன்.ஏன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் கந்தப்பு(கராட்டி குங்பூ பழகி இருந்தால் உங்களை நோக்கி வாற பாத்திரங்களில் இருந்து தப்பலாம்). :)

நெடுக்கு தாத்தா எல்லா மனிசி மாரும் கணவனுக்கு அடிக்கிற ஆக்கள் இல்லை அதால பயப்பிடாம கல்யாணம் கட்டுங்கோ

:D

  • கருத்துக்கள உறவுகள்

கனவு உண்மையானால்

திருமணத்தின் பின் உங்கள் நிலை

அடுப்படியில் இருக்கும் பாத்திரங்களினால்

அடிவாங்கிக் கொண்டு -----------------

:) அப்பு அடுப்படி எங்க இருக்குது என்றே உங்களுக்கு தெறியாது என்று ஆச்சி புலம்புரா :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

:) அப்பு அடுப்படி எங்க இருக்குது என்றே உங்களுக்கு தெறியாது என்று ஆச்சி புலம்புரா :D:D:D

அடுப்படியில தான் விளக்குமாறு, அகப்பை, சுளகு போன்ற ஆயூதங்கள் இருப்பதினால் அந்தப்பக்கம் போகிறதில்லை.

இவ்வளவு கனவுகளையும் வைத்துக்கொண்டு நெடுக்ஸ் ஏன் தான் பெண்களில வெறுப்பு. நினைகிறது தான் கனவில வருமென்று சொல்லுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுப்படியில தான் விளக்குமாறு, அகப்பை, சுளகு போன்ற ஆயூதங்கள் இருப்பதினால் அந்தப்பக்கம் போகிறதில்லை.

அவுஸ்ரேலியாவுக்கும் உந்த ஆயுதங்களை ஆச்சி கொண்டுவர எவ்வளவு டொலரப்பு செலவு வீணாக்விப்போட்டியள். அப்புவுக்கு ஊர்வாசம் மணக்க வேணுமெண்டு உந்த ஆயுதங்களையெல்லாம் இறக்குமதி செய்தவர் அப்புவெண்டு ஆச்சி சொல்றா. :)

கனவு உண்மையானால்

திருமணத்தின் பின் உங்கள் நிலை

அடுப்படியில் இருக்கும் பாத்திரங்களினால்

அடிவாங்கிக் கொண்டு -----------------

அப்பு வீட்டு அடுப்படியில நல்ல சங்கீதக்கச்சேரிதான் நடக்குது :D

Edited by shanthy

அச்சச்சோ நானும் என்னமோ நெடுக் தாத்தாவின் திருமணம் என்று ஓடி வந்தேன். ஆனால் இறுதியில்................. :):D:D

கனவு நனவாகட்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ........உங்கடை உடம்பு முழுக்க இயற்கையாகவே சந்தணவாசமாக்கும் :D

:):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. அகர வரிசைக்குள் கனவில் நான் செய்த என் திருமணத்தைக் காண ஓடோடி வந்த கள உறவுகளுக்கு மிக்க நன்றிகள். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவுக்கும் உந்த ஆயுதங்களை ஆச்சி கொண்டுவர எவ்வளவு டொலரப்பு செலவு வீணாக்விப்போட்டியள். அப்புவுக்கு ஊர்வாசம் மணக்க வேணுமெண்டு உந்த ஆயுதங்களையெல்லாம் இறக்குமதி செய்தவர் அப்புவெண்டு ஆச்சி சொல்றா. :)

பிள்ளை நீங்கள் ஐரோப்பா மண்ணில இருக்கிறதால விளக்குமாறு, சுளகு போன்ற ஆயூதங்களைக் காண்பதில்லை போல கிடக்குது. கு.சா, சாத்திரி போன்றவர்கள் ஐரோப்பாவில் இருக்கிறதால தப்பீட்டினம். இங்க அவுஸ்திரெலியாவில சனம் ஊரைப் போல வீடு வளவுகளுடன் வாழ்கினம். அம்மிக்கட்டையில் அடிவாங்குவோரைப் பற்றி புத்தனைக் கேட்டுப்பாருங்கள்

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நீங்கள் ஐரோப்பா மண்ணில இருக்கிறதால விளக்குமாறு, சுளகு போன்ற ஆயூதங்களைக் காண்பதில்லை போல கிடக்குது. கு.சா, சாத்திரி போன்றவர்கள் ஐரோப்பாவில் இருக்கிறதால தப்பீட்டினம். இங்க அவுஸ்திரெலியாவில சனம் ஊரைப் போல வீடு வளவுகளுடன் வாழ்கினம். அம்மிக்கட்டையில் அடிவாங்குவோரைப் பற்றி புத்தனைக் கேட்டுப்பாருங்கள்

ஐரோப்பாவிலும் தமிழ் கடைகள் வழிய உதுகள் எல்லாம் இருக்குது. நீங்கள் சொல்லுறேள்.. இங்க சனம்.. பாய் விரிச்சும் படுக்குதுகள்.. என்றால் பாருங்கோவன்..!

நான் கண்டிக்கிறன் அகப்பை காம்பால அடிவாங்கிற பிள்ளைகள் ஐரோப்பாவில இருக்கிறதை..! ஐயோ அதையேன் பேசுவான். இது லண்டனா இல்ல.. யாழ்ப்பாணத்துக் குக்கிராமமா என்ற நிலைக்குப் போயிட்டுது..! :)

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நீங்கள் ஐரோப்பா மண்ணில இருக்கிறதால விளக்குமாறு, சுளகு போன்ற ஆயூதங்களைக் காண்பதில்லை போல கிடக்குது. கு.சா, சாத்திரி போன்றவர்கள் ஐரோப்பாவில் இருக்கிறதால தப்பீட்டினம். இங்க அவுஸ்திரெலியாவில சனம் ஊரைப் போல வீடு வளவுகளுடன் வாழ்கினம். அம்மிக்கட்டையில் அடிவாங்குவோரைப் பற்றி புத்தனைக் கேட்டுப்பாருங்கள்

:) அப்பு அது அம்மிகட்டையல்ல சப்பாத்தி கட்டை...அப்பு அவுஸ்திரெலியா வந்தவுடன் அம்மி குள(ழ)வி எல்லாம் மறந்தாச்சோ :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

:) அப்பு அது அம்மிகட்டையல்ல சப்பாத்தி கட்டை...அப்பு அவுஸ்திரெலியா வந்தவுடன் அம்மி குள(ழ)வி எல்லாம் மறந்தாச்சோ :D

அம்மி என்று எழுதினேன். புத்தன் சப்பாத்திக் கட்டையில் அடிவாங்குகிறதைச் சொல்லி விட்டார்.

:D அப்பு அது அம்மிகட்டையல்ல சப்பாத்தி கட்டை...அப்பு அவுஸ்திரெலியா வந்தவுடன் அம்மி குள(ழ)வி எல்லாம் மறந்தாச்சோ :D

கந்தப்பு உதை ஒருக்கா சொன்னால் போதாதோ? 5 தடவைகள் சொல்லி இருக்கின்றீர்களே. சப்பாத்திக்கட்டையால் வாங்கி அடியால் நோவு அதிகமோ :):D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு உதை ஒருக்கா சொன்னால் போதாதோ? 5 தடவைகள் சொல்லி இருக்கின்றீர்களே. சப்பாத்திக்கட்டையால் வாங்கி அடியால் நோவு அதிகமோ :):D:D

ஆச்சி மட்டுமா.. எல்லாருமே ஆண்களை தப்பாத்தான் புரிஞ்சுக்கிறாங்க.

யாழ் இணையம் இன்று அதிகாலையில இருந்து இப்படி ஒரு சதியை செய்துட்டு இருக்குது. ஒரு தடவை பதிவு செய்தா 2 3 4 5 என்று தானே குளோனிங் செய்து விடுகுது..! :D

யாழ் இணையம் இன்று அதிகாலையில இருந்து இப்படி ஒரு சதியை செய்துட்டு இருக்குது. ஒரு தடவை பதிவு செய்தா 2 3 4 5 என்று தானே குளோனிங் செய்து விடுகுது..! :)

பதிவுகளின் எண்ணிக்கையை கூட்டுது போல ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.