Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை வான்தாக்குதல் புலப்படுத்துவதென்ன......edited .....வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை வான்தாக்குதல் புலப்படுத்துவதென்ன.

கடந்த இரவு இடம்பெற்ற திருமலை வான் தாக்குதல்கள் பற்றிய சேதியை முதன் முதலில் சிங்கப்பூரில் வாழும் ஒரு இலங்கை ஊடகத்துறை நண்பர் மூலமே அறிந்தேன். அதைத்தொடர்ந்து தமிழக ஊடகத்துறையில் உள்ள நண்பர்கள் மகிழ்ச்சியுடன் கிடைத்த தகவல்களை என்னோடு பகிர்ந்து கொண் டனர். உண்மையில் உலகத் தமிழர் பலரும் இச்செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர்.

திருமலைக் குண்டுத்தாக்குதல் பற்றிய சேதியின் முக்கியமான தகவல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் அல்ல. சிறுரக விமானங்களை தாக்குதல்களுக்கு பயன்படுத்தவும் பின்னர் அவற்றைப் பத்திரமாக களத்துக்கு எடுத்துச் செல்லவுமான இராணுவப் புவியியல் போராளிகளின் கட்டுப் பாட்டில் இருக்கிறது என்பதுதான் உலகிற்க்கு யதார்த்த நநிலமையை எடுத்துக்கூறுவதாக அமைகிறது. இத்தகைய ஒரு தாக்குதலைச் சாத்தியமாக்கும் வகையில் வன்னியில் மட்டுமன்றி திருமலை வரையிலுமான கடலிலும் சிங்களப் பகுதிக் காடுகளிலும் புலிகளின் ஆழ்புலம் விரிந்திருக்கிறது. இதுதான் இந்திய உலக கொள்கை வகுப்பாளருக்கு ஒரு முக்கியமான சேதியாகும். இது அவர்கள் பிழையான தகவல்கள் அடிப்படையில் பாதகமான முடிவுகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்கும். இத்தகைய தக்குதலுக்கான மன உறுதியும் இவ்வளவு விரிவான ஆழ்புலமும் போராளிகளுக்கு இருப்பது உலகிற்க்கு கள நிலமையின் யதார்த்தத்தை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் போராளிகலின் இன்றய களநிலமை முறிவு அல்ல மூல உபாய அடிப்படையிலான திட்டமிட்ட பின்வாங்குதலே என்பதையும் உலகிற்க்கு தெளிவாக உணர்த்தியுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னம் உயர்மட்ட தொடர்புள்ள டெல்ஹியைச் சேர்ந்த முன்னணி ஊடகவியலாளர் ஒருவர் போராளிகளின் ஆட்டம் 7 நாட்களுள் முடிந்துவிடும் என்று உறுதியாகக் கூறினார். அவர் போராட்டத்தை ஒரு கணக்குச் சமன்பாடாகவே பார்த்தார். இதுதான் டிசிற் குளுவினரின் பிரச்சினை. சதங்களது சுருட்டுப் புகை அடங்கமுன்னம் தாங்கள் நினைப்பது நடந்துவிடும் என்று நம்புகிறவர்கள் அவர்கள். உண்மையில் இந்தியாவின் நலன்களைவிட தங்களது EGO தான் டிக்சிற் குழு அதிகாரிகளுக்கு முக்கியமாக உள்ளது. போராளிகளின் மன உறுதி அனுபவம் தமிழ் சிங்கள இரணுவப் புவியியலில் போராளிகளின் தேர்ச்சி சகல விமர்சனங்களையும் தாண்டிய உலகத் தமிழர்கலின் ஆதரவு எதுவும் அவர்களது சமன்பாட்டில் இடம்பெறாது. அந்த டெல்ஹி பதிரிகையாலருடன் பேசிய பல விடயங்கலை இங்கு பகிர்ந்து கொள்ள முடியாது எனினும் ஒன்றைக் குறிப்பிட்டாகவேண்டும். இறுதி யுத்தத்தில் இந்தியாவும் சேர்ந்து போராளிகளை துடைத்து அழித்துவிடும் என்பதுதான் தனக்குக் கிடைத்த தகவல் என்று சொன்னார். நான் அத்தகைய ஒரு இறுதி யுத்தம் ஒருபோதும் வராது என்பதைத் தெரிவித்தேன். இந்தியாவால் போராளிகளை அழிக்க முடியாது. இந்தியாவின் நல்லுறவை வேண்டி நிற்க்கிற போராளிகளை வரலாற்றுப் பிசகாகான முறையில் அமெரிக்கா சீனா போன்ற எதிர் முகாமுக்குள் தள்ளிவிடுகிறது மட்டுமே சாத்தியம் என்று கூறினேன். இதையே டிக்க்சிற் குழுவினர் இந்தியா ஏனைய தெனாசிய நாடுகளிலும் செய்தது என்பதை நினைவு படுத்தினேன். நேபாளத்துக்குப் பொருளாதரத் தடைபோட்டு அங்கு எஞ்சியிருந்த இந்திய நண்பர்கலையும் சீனாவின் பக்கம் தள்ளிய பெரும் தவற்றை நினைவுபடுத்தினேன்.

த்ருகோண மலைத் தாக்குதல் போராளிகள் சுற்றி வளைக்கப் பட்டுவிட்டார்கள் இனி அவர்களால் நகர முடியாது என்ற இலங்கை அரசும் அவர்களது நண்பர்களும் உருவாக்கிய பொய்மைகளை உடைத்துவிட்டது.

ஜெயசுக்குறு நாட்களைப்போல சிங்களப் படைகளை மழைகாலத்துக்கு முன்னம் காடுகளுள் முன்னேற போராளிகள் அனுமதிதுள்ளனர். சிங்களப் படைகள் நமது காடுகளில் பல புதிய முகாம்களை அமைத்து போராளிகளுக்குத் தருவதற்க்காக ஆயிதங்களை அங்கு குவிக்கிறார்கள். தமிழ்ர் வரலாறு அவர்களுக்கு நன்றி சொல்லும்.

ஜெயசுக்குறு பள்ளத்தில் நகர்ந்தது தற்போதய நகர்வு மேட்டுக் கையில் என சிங்கள இராணுவப் புவியியலாலர்கள் இறுமாந்திருக்கக்கூடும். அவர்களுக்கு எங்கள் காட்டாறுகளின் வலைப் பின்னல்களும் சதுப்பு நிலங்களும் நீர்த்த செம்மண் பூமியும் உரிய பாடத்தைக் கற்பிக்கும்.

சிங்களக் காடுகளைக் கட்டுப்படுத்தும் நிலையில் மாரி பொய்த்தாலும் சிங்கள உலர்வலயத்தை சீர்குலைப்பதன்மூலம் போராளிகளால் ஜெயசுக்குறு போன்ற வெற்றியை உறுதிப்படுத்த முடியும். மழையும் சீர்குலைப்பும் இணைந்தால் மிகக் குறைந்த விலையில் பெருவெற்றி சாத்தியமாகும்.

தாய்மண்ணுக்கு ஒரு ஏழைக் கவிஞன் தரக்கூடியது மிகச் சொற்பம்தான். சில வரிகள்தான்.

நமது வெற்றி நிச்சயம். போராளிகள் கட்டாய ஆள் சேர்பின்போது விட்ட தவறுகலைத் திருத்திக் கொள்வதும் வன்னியில் வாழும் மக்களதும் இளைய தலைமுறையதும் கருத்துக்களை முன்னிலைப் படுத்திக் கருமமாற்றுவதும் மிகமுக்கியம்.

பண்டாரவன்னியன் படை நடந்த காடு

பணியாது ஒருபோதும் ஈழவர் என் நாடு

http://www.gmobil.net/paalai/10 - Track 10.mp3

வ.ஐ.ச.ஜெயபாலன்

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தில் இந்தியாவும் சேர்ந்து போராளிகளை துடைத்து அழித்துவிடும் என்பதுதான் தனக்குக் கிடைத்த தகவல் என்று சொன்னார்.

:) இறுதிவரை இந்தியா எமக்குத் தலையிடியாகவே இருக்கப் போகிறது. சிங்களவன் கண்ணை மூடிக்கொண்டு இன அழிப்பு யுத்தமொன்றை இன்று செய்வதற்கு இந்தியாவின் பூரண ஆசீர்வாதம் இருப்பதே காரணம். இனியும் இந்தியாவை எமது நேச நாடாகப் பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

எமக்கு முன்னாலிருக்கும் தடையை அகற்றுவதற்கு எம்மால் முடிந்த எல்லாவற்றையுமே செய்ய வேண்டும். எமது இலக்கு ஒன்றுதான், தமிழீழத்தை அமைக்க எது குறுகே வந்தாலும் அது முழுப்பலத்துடன் எதிர்க்கப்பட வேண்டும். அது சிங்களவனாக இருக்கட்டும் அல்லது அவனுக்கு முண்டு கொடுக்கும் ஆரியப் பாரதமாக இருக்கட்டும்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

நாராயனா நாராயனா

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

எம்மால் முடிந்தவரை இந்தியாவின் குள்ளநரித்தனத்தை, எமது சமூகத்தில், வேலைத்தளத்தில், நண்பர்கள் மத்தியில், பிற நாட்டவர் மத்தியில் எடுத்துச் சொல்வோம். ஈழத்தில் அது சிங்களவன் மூலமாக நடத்தும் தமிழினப் படுகொலையை அம்பலப்படுத்துவோம்.

இதை இன்றிலிருந்தே ஆரம்பிப்போம் !

எம்மால் முடிந்தவரை இந்தியாவின் குள்ளநரித்தனத்தை, எமது சமூகத்தில், வேலைத்தளத்தில், நண்பர்கள் மத்தியில், பிற நாட்டவர் மத்தியில் எடுத்துச் சொல்வோம். ஈழத்தில் அது சிங்களவன் மூலமாக நடத்தும் தமிழினப் படுகொலையை அம்பலப்படுத்துவோம்.

இதை இன்றிலிருந்தே ஆரம்பிப்போம் !

அனேகமான இனத்தவருக்கு இது தெரியும்.... சீனா மீதுள்ள கடுப்பால இந்தியா பறவாயில்லையெண்டு இருக்கிறங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளி,

இதில் வேதனை என்னவென்றால் எங்களையும் வெள்ளைக்காரன் இந்தியன் என்று அழைப்பதுதான். நான் பலமுறை இதனால் பலருடன் வாக்குவாதப்பட வேண்டி இருந்தது. நான் இந்தியனாக அடையாளப்படுத்தப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவோ அல்லது போனால் போகட்டும் என்று இருந்து விடவோ முடியவில்லை.

எமது இனத்தையே குலையறுக்க கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் ஒரு அற்பத்தனமான நாட்டின் ஒருவனாக தவறுதாலகத்தானும் நாம் அடையாளப்படுத்தப்படுவதை நான் கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியாது.

உறுவத்திலும் நிறத்திலும் மட்டுமே ஒன்றாகத் தெரிவதால் காக்கையும் குயிலும் ஒன்றாகிவிட முடியாது. இதை விளங்கப்படுத்த் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், நான் வெள்ளைக்காரனிடம் இந்திய நரிகளின் கேவலப் புத்தி பற்றிக் குறிப்பிட மறுப்பதில்லை.

இதில் தம்மையும் இந்திய நாட்டின் குடிமகன் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்காரர்கள் குறை கூறினால் அது எனது பிழையுமில்லை. ஏனென்றால் போலி தேசியவாதத்துக்குள் உங்கள் தன்மானத்தையே அடகு வைத்துவிட்டு சிறிது சிறிதாக உங்கள் இன அடையாளத்தையே அதற்கு விற்றுவிட்டு தேசிய ஆநாதைகளாக வாழ விரும்பும் உங்கள் போல் என்னாலும் இருக்க முடியாது. அதேபோல இந்துத்துவ தேசிய வாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த மேலாதிக்க வாதம் உங்களுடன் மட்டுமே இருக்கட்டும். எங்களால் அதை ஜீரணிக்க முடியாது.

Poet,

தற்சமயம் இந்தியாவின் சர்வதேச அணுகுமுறைகள், உலக நடப்புகளில் சடுதியான குழப்பத்தை ஏற்படுத்தாமல், சாந்தமான முரையில் தன்னுடய நலன்களை முன்னெடுப்பதாகும்.

there can be few reasons for this.

1. India is heavily depend on the west for its growing economy.

2. US 's pro active foreign policies deny India's pro activeness and pushes itself for reactive measures.

3. China's massive economic and military growth.

4. Pakistan's nuclear arsenal

5. International Islamic militarism and india's 150 million muslim population

6. Relative weakness of Russia

7. Petroleum reserves in the entire mid east under the direct / indirect control of US / West

8. There is no competing super powers. only one camp.

for these reasons india cannot move away from diplomatic measures and take drastic actions. india's all actions has to be within the frame work created by balance of power by the main players. most of recent indian moves are such, avoiding confrontations and grasping oppertunities when presented. india is steering itself through the complex international arena.

So india will not take drastic actions and put itself in an adverse situation. Thats why militarily getting involved in Srilanka i.e. sending troops -

will not take place for a foreseeable future.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ வான்படை திருமலையில் போட்ட குண்டில் எதுவித அழிவும் ஏற்படவில்லையென்றே வைத்துக்கொண்டாலும் அவர்கள் வன்னியிலிருந்து புறப்பட்டு திருமலைவரை வெற்றிகரமான விமானப் பறப்பினைமேற்கொண்டுவிட்டு இழப்பெதுவுமின்றி தளம்திரும்பிய செய்தி ஒன்றே போதும் சொறணைகெட்ட சிங்களத்துக்கு, தாங்கள் போரில் மாபெரும் வெற்றிகளை குவித்து வருவதாக பீற்றிக்கொள்ளும் சிறிலங்கா அரசதலைவர் ஒரு குவளைத் தண்ணீரில் விழுந்தே உயிர்விடலாம்.

சூராவளி,

இதில் வேதனை என்னவென்றால் எங்களையும் வெள்ளைக்காரன் இந்தியன் என்று அழைப்பதுதான். நான் பலமுறை இதனால் பலருடன் வாக்குவாதப்பட வேண்டி இருந்தது. நான் இந்தியனாக அடையாளப்படுத்தப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவோ அல்லது போனால் போகட்டும் என்று இருந்து விடவோ முடியவில்லை.

எமது இனத்தையே குலையறுக்க கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் ஒரு அற்பத்தனமான நாட்டின் ஒருவனாக தவறுதாலகத்தானும் நாம் அடையாளப்படுத்தப்படுவதை நான் கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியாது.

உறுவத்திலும் நிறத்திலும் மட்டுமே ஒன்றாகத் தெரிவதால் காக்கையும் குயிலும் ஒன்றாகிவிட முடியாது. இதை விளங்கப்படுத்த் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், நான் வெள்ளைக்காரனிடம் இந்திய நரிகளின் கேவலப் புத்தி பற்றிக் குறிப்பிட மறுப்பதில்லை.

இதில் தம்மையும் இந்திய நாட்டின் குடிமகன் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்காரர்கள் குறை கூறினால் அது எனது பிழையுமில்லை. ஏனென்றால் போலி தேசியவாதத்துக்குள் உங்கள் தன்மானத்தையே அடகு வைத்துவிட்டு சிறிது சிறிதாக உங்கள் இன அடையாளத்தையே அதற்கு விற்றுவிட்டு தேசிய ஆநாதைகளாக வாழ விரும்பும் உங்கள் போல் என்னாலும் இருக்க முடியாது. அதேபோல இந்துத்துவ தேசிய வாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த மேலாதிக்க வாதம் உங்களுடன் மட்டுமே இருக்கட்டும். எங்களால் அதை ஜீரணிக்க முடியாது.

இதே நிலை ஆஸ்திரேலியருக்கும் நியூசிலாந்தருக்கும் இருக்குதுதான்.. இருந்தாலும் அவர்கள் மாற்று அடையாளத்தை நிச்சய காரணமின்றி மறுப்பதில்லையாம்... ஆனாலும் இதைவிட உறவுநிலையில் முன்னனியில் உள்ள நாங்கள் எங்களை இந்தியரெண்டு நாம் பொதுப்படுவதில்லையாம்..

இதை நான் சொல்ல வில்லை ஒரு வெள்ளையின ஆசான் எனக்கு சொன்னது...

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளி,

இதில் வேதனை என்னவென்றால் எங்களையும் வெள்ளைக்காரன் இந்தியன் என்று அழைப்பதுதான். நான் பலமுறை இதனால் பலருடன் வாக்குவாதப்பட வேண்டி இருந்தது. நான் இந்தியனாக அடையாளப்படுத்தப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவோ அல்லது போனால் போகட்டும் என்று இருந்து விடவோ முடியவில்லை.

இங்கு சிட்னியில் சில மானங்கெட்டதுகள், மாவீரர் தினத்துக்கு போக மாட்டினம், இந்திய சுதந்திர தின நிகழ்வுக்கு செல்கினம்.

எம்மவர்களின் வியாபார நிலையங்களைப் பார்த்தால் அவர்கள் இந்தியன் கடை என்று எழுதியிருக்கிறார்கள். இதனால் அண்மையில் அவுஸ்திரெலியாவில் இந்தியர்கள் என்ற தலைப்பில் பார்த்த ஒரு ஆக்கத்தில் பல ஈழத்தமிழர்களின் வணிக நிறுவனங்களும் இடம் பிடித்ததினைக் கண்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய ரகுநந்தன், புத்தன், சூறாவள், கந்தப்பு,ஈசன்,வணங்காமுடி அனிவர் கருத்துக்களையும் வாசித்தேன். விரிவாக பதில் எழுதவேண்டும் எனினும் வார இறுதியில் வந்தவாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் புலம்பெயர்ந்தவர்களின் சமூக இயல் என்கிற தலைப்பில் பேசா ஆயுத்தம் செய்தபடி இருக்கிறேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய கட்டுரைகலை எனக்கு அனுப்பி வையுங்கள்.

சில அன்பர்களின் கோபம் நமது தயகம் வாழும் மக்கலது நிலையில் பூகோள அரசியலில் பயனற்றது. கடந்த காலங்களில் இந்திய அதிகாரிகள் இந்திய அரசாங்கம் இந்திய அரசியல்வாதிகளுடனான முரண்பாட்டை இந்தியாவுடனான முரண்பாடாகப் பார்த்ததில் நாங்களும் எட்டிக்குப் போட்டியாக பல தவறுகளை இழைத்துவிட்டோம். இந்திரா அம்மையாருக்குப்பின் காங்கிரஸ் அரசுகளும் அதிகாரிகளும் பல அநீதிகளை எங்களுக்கு செய்துவிட்டார்கள். ஏட்டிக்குப் போட்டியாக நாமும் தவறுகள் இழைத்துவிட்டோம். இன்றய நிலையில் வெற்றிபெறுவது முக்கியம். அதற்க்கான செல்வாக்கை பரந்துபட்ட உலக அரங்கில் நாம் கட்டி எழுப்பவேண்டும். நீண்டகால அடிப்படையில் நமக்கும் இந்தியாவுக்குமான உறவுகள் முக்கியம் அதனையும் இரண்டாவது முதன்மை நிகழ்ச்சி திட்டமாக நாம் வெற்றி பெறவேண்டும். அதற்க்கேற்ப்ப கடந்த கால்நூற்றாண்டுகளாக இடம்பெற்ற அடுத்தவர்கள் தவறுகள் பற்றிய விமர்சனம் மட்டுமன்றி எங்கள் தவறுகள் பற்றிய சுயவிமர்சனங்களுக்கும் நாம் தயாராக வேண்டும். நாம் வெற்றி பெறுவதும் வெற்றியை தக்கவைப்பதும் மேம்படுவதும் முக்கியம். ஈசன் நீங்கள் பெரியதும் முக்கியமானதுமான விவாதத்தை ஆரம்பிதிருக்கிறீர்கள். நேரமுள்ளபோது பதில் எழுதுகிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

பொயெட்,

இந்தியா, புலிகளின் கை ஓங்கும் பட்சத்திலோ அல்லது இலங்கை ராணுவத்தால் போரில் வெற்றி பெறமுடியாமல்ப் போகும் பட்சத்திலோ தமது ராணுவ வல்லமையால் புலிகளைத் துடைத்தழித்து விடுவோம் என்று ஒரு அதிகாரி கூறியதாக நீங்களே இங்கு இணைத்த ஆக்கத்தில் ஜெயபாலன் சொன்னதாக எழுதியிருக்கிறீர்கள். புலிகளையும், எமது தேசியத் தலமையையும் அழித்துவிட்டு சிங்களவராகப் பார்த்துக் கொடுக்கும் ஒரு பிச்சைத் தீர்வுக்கு இந்தியா தமிழ் மக்களைத் தள்ளப் பார்க்கிறது. ஆனால் உங்கள் கருத்துப்படி நாம் இன்னும் இந்தியாவை அநுசரித்துப் போக வேண்டும்! அப்படித்தானே??? இது "சிங்களவன் எங்களை அழித்துக்கொண்டிருக்கும் போதும் அவனுடன் அநுசரித்துப் போக வேண்டும், ஏனென்றால் நாங்களும் சிங்களவனுக்கு ஏட்டிக்குப் போட்டியாக தவறுகள் இழைத்து விட்டோம்" என்னுமாப்போல் உள்ளது.

எனக்கு இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்குமிடையே உள்ள வேறுபாடு புரியவில்லை. ஏனென்றால் இலங்கை எம்மை நேரடியாகக் கொல்கிறது, இந்தியா அதற்கு உதவி செய்கிறது.இதனை உங்களால் இல்லை என்று மறுக்க முடியுமா? அல்லது பத்திரிக்கைகளில் வருவது போல்,"இந்தியா இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று விரும்புகிறது, தமிழர் உற்பட சகல இன மக்களும் அமைதியாக வாழ்வேண்டும் என்று விரும்புகிறது" போன்ற இந்திய அதிகாரிகளாலும், அரசியல் தலைவர்களாலும் திரும்பத் திருமச் சொல்லப்பட்டு வரும் அறிக்கைகளை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் போல எண்ணத் தோன்றுகிறது. இந்தியா இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று எப்போதாவது எண்ணியிருந்தால் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுத்திருக்காது. ஏதோ இந்திரா காந்தி இல்லாத படியால்த் தான் நிலமை இப்படி ஆயிற்று என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்திரா ஜே. ஆருக்குப் பாடம் புகட்டத்தான் போராளிகளுக்கு உதவி புரிந்தார் என்பது எல்லோருக்கும் வெளிச்சமான விடயமாச்சே? நீங்கள் எப்படி அதை மறந்தீர்கள்? இந்தியா உங்களுக்கு உதவி செய்வதற்கு உங்களிடம் என்ன இருக்கிறது? மன்னாரிலுள்ள எண்ணெய் வளமா??

பல தவறுகளை நாங்களும் விட்டு விட்டோ என்று அடிக்கொருதரம் சொல்கிறீர்களே? வை எவை என்று ஏன் சொல்கிறீர்கள் இல்லை?? உங்களுக்குத் தெரிந்த அந்த"தவறுகள்" எல்லோருக்கு விளங்கட்டுமே? எதற்கு மறைந்திருந்து கல்லெறிகிறீர்கள்?

எனக்குத் தெரியும், உங்களால் அதைச் சொல்ல முடியாது. ஏனென்றால், தமக்குத்தாமே சரியென்று நினைப்பதை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் ஒன்று இருக்கிறது. அக்கூட்டம், இந்தியாவின் பிரமாண்டத்தைப் பார்த்து மயங்கிப் போய் இந்தியா செய்வதையெல்லாம் சரியென்று சொல்லும் கூட்டம். அவர்களைப் பொறுத்தவரை புலிகள் 1987 இல் இந்தியா பரிந்துரைத்த மாகணசபை அமைப்பை ஏற்றுக்கொள்ளாமல் ஆக்கிரமிப்புப்படையுடன் போரிட்டது பிழை. அவர்களே சொல்லிக்கொள்ளும் ரஜீவைக் கொன்றது பிழை. இதுதானே அந்தத் தவறுகள்.

சரி, உங்கள் வழிக்கே வருவோம். திலீபன் உண்ணாவிரதம் இருக்கக் காரணமான அந்த 5 கோரிக்கைகளையாவது இந்தியா நிறைவேற்றித் தந்ததா? அல்லது அந்தக் கோரிக்கைகளே தவறானவை என்று சொல்ல வருகிறீர்களா? ஒப்பந்தக்காலத்தில் இலங்கைப் படைகள் செய்த அத்துமீறல்களையும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களையும் சரியென்று சொல்ல வருகிறீர்களா? இதெல்லாம் இந்தியாவின் பார்வையின் கீழே தானே நடந்தது ? இந்தியாவால் என்ன செய்ய முடிந்தது ? குமரப்பா புலேந்திரன் உற்பட பன்னிரு வேங்கைகளை சிங்கள ராணுவம் பலாத்காரமாக கொழும்புக்கு இழுத்துச்செல்ல முற்பட்டபோது இந்தியா என்ன செய்து கொண்டிருந்தது? உங்கள் கதையின்படி அந்தப் பன்னிரு வேங்கைகளும் இந்தியாவின் சொல் கேட்டு கொழும்பிற்குப் போயிருக்க வேண்டும், அப்படித்தானே??

அமைதி காக்க வருகிறோம் என்று சொல்லியே ஆயிரமாயிரம் அப்பாவிகளைக் கொன்று குவித்தார்களே? அதுக்கெதிராகப் போராடியதுதான் நீங்கள் சொல்லும் "ஏட்டிக்குப் போட்டியான தவறுகளா"? ரஜீவை யார் கொன்றார்கள் என்று இன்னமும் தெரியாது, ஆனால் நாங்களே முந்திக்கொண்டு அந்தக் கொலையை எம்மீது போட்டுக்கொள்வோம். அது இன்னொரு ஏட்டிக்குப் போட்டியான தவறு, அப்படித்தானே?? ஒருவேளை நீங்கள் சொல்லியவாறே புலிகள் அந்தத் தவறை செய்யாமல் விட்டிருந்தால் பிறகு என்ன நடந்திருக்கும்? உங்களுக்குத் தெரியுமா? ராஜீவ் மீண்டும் பிரதமராகி ஈழம் எடுத்துத் தந்திருப்பாரா??

7000 இற்கும் அதிகமான தமிழர்களை தனது கன்னி நடவடிக்கையிலேயே கொன்று குவித்தா இந்திராவின் மகன் தனது ரெண்டாவது நடவடிக்கையில் என்ன செய்திருப்பார் என்று உங்களால் யூகிக்க முடியாதோ என்னவோ?

தவறுகள், தவறுகள்.....அடிப்படியில் இந்தியா எமக்கு ஒரு தனிநாடு அமைவதையோ அல்லது சுய நிர்ணய அந்தஸ்த்துடன் தமிழர்கள் வாழ்வதையோ விரும்பப் போவதில்லை. இன்னும் சொல்வதானால் தனது மாநிலங்களுக்கு இருக்கு அதிகாரத்திலும் கூடிய எந்த அதிகாரப் பரவலாக்கத்தையுமே அது ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.இதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகுநந்தனுக்கு,

என் கருத்துக்களை மீண்டும் வாசியுங்கள். நீங்கள் சொல்லுகிறமாதிரியான தோரணையில் நான் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்க வில்லை. எனது கருத்துக்களின் தொனியும் அழுத்தமும் வேறு.

இந்தியா பற்றிய என் விமர்சனங்களை இந்தியா வரும்போது இந்தியாவிலும் போராளிகள் பற்றிய விமர்சனங்களை வன்னி செல்லும்போது வன்னியிலும் தொடர்ந்து வைத்துவருகிறேன். யாழ்க்களத்தில் சில விசயங்கலைத் தொட்டுக் காட்டமட்டுமே முடியும். மற்றும்படிக்கு நான் அதிகம் அரசியல் தெரிந்தவனல்ல. வெறும் கவிஞன்மட்டும்தான். உங்கள் தீவிரமானகருத்துக்களால் தமிழர் வாழ்வு விடிந்து வெற்றிபெறுமானால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனாலும் என்னுடைய சிற்றறிவுக்கும் சிற்றனுபவத்துக்கும் அப்படித் தோன்றவில்லை என்பதை பதிவுசெய்ய விரும்புகிறேன். விவாதத்துக்கு வெளியில் சென்று விவாதிக்கிற அரசியல் வேண்டாம்

Poet நன்றி. :icon_mrgreen:

இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக மெற்கொண்டு வந்த இராஜதந்திரங்கள் வெற்றி அளிக்காததால் இலங்கை அரசாங்கத்துடன் பொறுமை இழந்த நிலையில் காணப்படுகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினை.

இனி வருங்காலங்களில் தமிழர் அபிலாசைகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என எதிர்பார்போமாக.

ஜெயபாலான்,

இந்திய கொள்கை வகுப்பளார்கள் விட்ட பிழைகளாலையே உப கண்டத்தில் இந்தியாவின் பிடி தளர்ந்து வருகிறது.இதற்கு அடிப்படைக் காரணம் இந்தியாவால் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே.அதற்குத் தடையாக இருப்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் உள் நோக்கிய பார்வை.அவர்கள் இந்தியாவிற்க்குள் இருக்கும் தேசிய இனக்களின் சுய நிர்ணய உரிமைப்போராட்டங்களுடன் எங்களை இணைதிஉப் பார்க்கிறார்கள்.ஆனால் சிறிலாங்காவில் இருக்கும் சிங்களப் பவுத்த பேரினவாத்திற்கு எதிராக எழுந்ததே தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் என்னும் அடிப்படையில் இருந்து அவர்கள் தமது கொள்கைகளை வகுப்பார்களேயானால் அவர்கள் சரியான முடிவுகளுக்கு வர முடியும்.

எழுச்சி கொள்ளும் எந்தத் தேசிய இன விடுதலைப் போராட்டத்தையும் ஆயுத பலம் கொண்டு அடக்கி விட முடியாது என்பதே இன்று உலகெங்கும் நிகழும் விடுதலைப் போராடங்களின் வரலாறாக இருக்கிறாது.தமீழ ஈழமும் அதற்கு விதிவிலக்கல்ல.

இந்தியாவின் தேசிய நலங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்பதை பலமுறை நாங்கள் சொல்லிலும் செயலிலும் காட்டியாயிற்று.ஆனால் தற்போதைய கொள்கை வகுப்பளர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாத வரை எந்த முன் நேற்றமும் ஏற்படப் போவதில்லை.டெல்கியில் மாற்றங்கள் நிகழ்வதன் மூலமே அது சாத்தியம் ஆகும்.இனி வரும் காலங்களில் அந்த மாற்றங்கள் நிகழும்.அது கருணானிதியின் அரசியல் வாழ்க்கையின் அஸ்தமனத்திலையே சாத்தியமாகும்.தமிழ் நாட்டு மக்களிடம் ஈழ விடுதலைக்கான் ஆதரவு இருக்கும் மட்டும் நாம் தொடர்ச்சியான முன் நெடுப்பக்களை எடுக்க வேணும். நாம் இந்திய மக்களை நோக்கியதாக எமது கொள்கைகளை பரப்புரைகளை முன் நெடுக்கவேணும்.அதைச் செய்யுங்கள்.அதற்கு முதல் நீங்கள் அரசியல் ரீதியாகத் தெளிவாக இருக்க வேண்டும். உங்களின் பல கருதுக்களில் உங்களின் தெளிவற்ற அரசியல் நிலைப்பாடுகள் வெளியாகின்றன.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு காவு கொடுக்க அல்ல இருபதினாயிரம் பேர் மாவீரர் ஆனார்கள் என்பதை மனதில் எப்போதும் வைத்திருங்கள்.தெளிவடைவீர்கள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாரதர் இதன்பின்னர் அடுத்த வாரம்தான் என்னால் பதில் அழிக்க ன அரசியல் நிலைபாடு உள்ளது. ஆனால் தெளிவு என்பது வேறு. தெளிவு முழுமை சார்ந்தது. ஆய்வாளன் என்கிற வகையில் நான் எதிர்த் தரப்பின் குற்றச் சாட்டுகளையும் கேட்கச் சபிக்கப் பட்டவன்.தனால் எல்லாத் தரப்பின் அச்சங்களையும் சீர்துக்கிப் பார்க்க முனைகிறவன். அவர்கள் ராஜதந்திர உலகிற்க்கு எண்பத்தி எழுக்குமுன் இடம்பெற்ற சம்பவங்களின் வீடியோக்களையும் முன்வைக்கிறார்கள். பலசமயம் நான் பதில் சொல்ல வேண்டி வந்திருக்கிறது. உங்களுக்கு இத்தகைய சிக்கல்கள் இல்லையல்லவா. எங்களுக்கும் எனக்கும் நிலைபாடு ஒன்றுதான், உங்களளவுக்கு இல்லாவிட்டாலும் நானும் உயிரையும் வசதி வாய்ப்புக்களையும் பணயம்வைத்துத்தான் செயல்படுகிறேன். ஆனபடியால் குற்றம் சாட்டுவதை விடுத்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.

திசை தெரிந்தால்போதும் கப்பலை ஓட்டிவிடலாம் என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் கடலில் நீரோட்டங்களும் கற்பாறைகளின் அமைவும் மனணல்திட்டுக்களும் பற்றியும் தெரிந்திருப்பதும் அவசியம் என்று நினைக்கிறேன். எதிர்க்காற்றுக்கும் ஏற்றவாறு பாயை மாறி ஓட்டவேண்டும் என நினைக்கிறேன். நான் சந்தித்த போராளிகள் பலரும் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்று தோன்றுகிறது. தெளிவோடு போராட்டத்துக்ககு அதரவவாக இருப்பது தவறென்றால் என்னை மன்னித்து விடுங்கள். நிறைய வேலை இருக்கிறது. போய்வருகிறேன்.

பொயற் (கவி)

உங்களுக்கு ஞாபம் இருக்கொ இல்லையோ தெரியாது... அதாவது யாழ்களத்தில நாங்களெல்லாம் கடும்போக்காளர்கள்....

இது உங்களுக்கு தெரியுமென நினைக்கிறேன்...

Edited by Sooravali

ஜெயபாலன் உங்கள் மேல் குற்றம் சாட்டவில்லை.

அவர்கள் என்ன விடயங்களைச் சொல்கிறார்கள் என்று சொல்லுங்கள் நாங்கள் அதற்க்குத் தகுந்த பதில் எழுதுவோம்.அவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு வரலாற்றைத் திரிக்க முடியாது.

பிரபகாரனை அவர்கள் மிரட்டியது கொடுத்த வாக்குறுதிகளை மீறியது நம்பிக்கைத் துரோகம் செய்தது என பலதை நாங்கள் அறிவோம்.இந்திய இரானுவத் தளபதி யாழ்ப் பல்கைலைக் கூடத்தில் வைத்து பிரபகாரனின் குடும்ப்பத்தை முன் வைத்து மிரட்டியது எனப் பல வரலாறுகள் விடியோ ஆவணமாக உள்ளன.

மேலும் கடலில் சுழிகள் மணற்திட்டிகள் எது வந்தாலும் நாம் பயணிக்கும் திசை ஒண்டு தான்.கடலில் மணற் திட்டி இருக்கிறது என்பதற்காக நாம் திசையை மாற்ற முடியாது.அப்படி மாற்றுவதானால் நாம் பயணம் செய்வதே பயனற்றதாகி விடும்.பல மணற்திட்டிகளையும் சுழிகளையும் தாண்டித் தான் நாம் இப்போதைய இடத்திற்க்கு வந்திருக்கிறோம்.பயணத்தின் இறுதி எல்லையை நாம் தொட்டு விட்ட நேரத்தில் இலக்கை மாற்றுவோம் என்று யாராவது நினைத்தால் அவர்கள் எம்மைப் புரிந்து கொள்ளவில்லை என்பதாகவே எண்ண வேண்டி இருக்கிறது.

நாரதர் சொல்வதில் எனக்கு 100 க்கு 110% உடன்பாடு

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்தான் ஜெயபாலன் என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. ஆனாலும் இப்போது தெரிந்ததற்காக எனது கருத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளப்போவதில்லை.

காலங்காலமாய் இந்திய அரசியல் விளையாட்டால் வஞ்சிக்கப்பட்டபின்பும் "இந்தியாவை அநுசரித்துப்போக வேண்டும்" என்ற கருத்துக்களால் நான் சலிப்படைந்து விட்டேன். உங்கள் கருத்தைத்தான் புலிகளும் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்னரும் கூட எமது அரசியல்துறை இந்தியா ஆடும் கபட நாடகம் பற்றி கண்டனமும் தெரிவித்திருந்தது.

மதிப்பிற்குரிய ஜெயபாலன் அவர்களே, அநுசரித்துப் போவது வேறு மரியாதை கொடுப்பது வேறு. எமது தன்மானத்தையும் உரிமைகளையும் விட்டு விட்டுத்தான் அநுசரித்துப் போக வேண்டும் என்றால் அப்படி ஒரு அடிமைத்தனம் எதற்கு ?

தமிழ் இலக்கிய ஆர்வளர்களில் பிரபல்யமான நீங்களே நாம் ஏட்டிக்குப் போட்டியாக தவறு இழைத்திருக்கிறோம் என்று சொல்லும்போது அதனால் ஏற்படும் பதிப்பு அதிகமானது. ரகுனாதன் எழுதும் கருத்துக்கும், எழுத்தாளர் ஜெயபாலன் எழுதும் கருத்துக்குமிடையே நிறைய வித்தியாசம். அது கருத்து வேறுபாட்டல் இல்லை, கருத்துப் பிரபல்யத்தால்.

நீங்கள் எழுத்தாளர், உங்களுக்குக் கோபம் வருவது குறைவாக இருக்கலாம். நானோ சாதாரண தமிழன். எனக்குக் கோபம் வரும். ஏனென்றால் நாங்கள் எல்லோருமே இந்தியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

உங்களை விட எனக்கு அரசியல் அறிவு குறைவுதான். அநுபவமும் கிடையாது. ஆனால் எனக்கு நினைவிருந்த நாள்முதல் புலிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அயிரமாயிரமாய் எமக்காக மரித்துக்கொண்டிருக்கிறார்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

பிரபகாரனை அவர்கள் மிரட்டியது கொடுத்த வாக்குறுதிகளை மீறியது நம்பிக்கைத் துரோகம் செய்தது என பலதை நாங்கள் அறிவோம்.இந்திய இரானுவத் தளபதி யாழ்ப் பல்கைலைக் கூடத்தில் வைத்து பிரபகாரனின் குடும்ப்பத்தை முன் வைத்து மிரட்டியது எனப் பல வரலாறுகள் விடியோ ஆவணமாக உள்ளன.

நரதருக்கும் ஏனைய தோழர்களுக்கும்,

நாம் ஒரு தோணியில்தான் இருக்கிறோம். பணிகள் பாத்திரங்கள் வேறு மொழி வேறு முனைப்பு மட்டுமே ஒன்று. நாம் பெரும்பாலும் பிரசாரகர்களாகவே பழக்கப் பட்டிருக்கிறோம். ராஜதந்திரப் பணிகளிலும் lobby செல்வாக்கு திரட்டும் பணிகளிலும் என் வளங்கள் ஏதுமற்ற நிலையில் இயன்றவரை முனைகிறேன். யருக்கும் பயப்பட்டதோ பணிந்ததோ இல்லை.

மேலே நாரதர் சொன்னதுபோன்ற விடயங்கள் ஆங்கிலத்தில் பதிவுசெய்யப் பட்டுவது அவசியம். தமிழ்கனேடியன் போன்றவை அந்த அவசரப் பணியைச் செய்யவேண்டும். முதற்கண் யாழிலும் தமிழ் கனேடியனிலும் யாராவது எழுதுங்கள். எனக்கும் கொஞ்சம் தகவல் அவசரமாக்த் தேவை.

அடேல் பாலசிங்கம் போன்றவர்கள் இதுபற்றி சிறு புத்தகமாக எழுதினால் மிகவும் பயன்படும். நாங்கள் விவாதங்களில் இந்திய இராணுவ அதிகாரிகள் டிக்சிற் பிரபாகரனை சுடும்படி உதரவிட்டதையும் அசோக் கோட்டல் சம்பவத்தை மட்டுமே மேற்கோள் காட்ட முடிகிறது.

சென்னைப் பல்கலைக் களகத்தில் மேல்படிப்புக்காக வந்திருக்கும் சீன நண்பர் ஒருவருடன் விரிவாக பேசினேன். உலக தென் ஆசிய நிலமைகளில் நிறைய மாற்றம் வரப்போகிறது.

நாங்கள் வெற்றி பெற்றாகவேண்டும். வெற்றி பெறுவோம்.

நரதருக்கும் ஏனைய தோழர்களுக்கும்,

நாம் ஒரு தோணியில்தான் இருக்கிறோம். பணிகள் பாத்திரங்கள் வேறு மொழி வேறு முனைப்பு மட்டுமே ஒன்று. நாம் பெரும்பாலும் பிரசாரகர்களாகவே பழக்கப் பட்டிருக்கிறோம். ராஜதந்திரப் பணிகளிலும் lobby செல்வாக்கு திரட்டும் பணிகளிலும் என் வளங்கள் ஏதுமற்ற நிலையில் இயன்றவரை முனைகிறேன். யருக்கும் பயப்பட்டதோ பணிந்ததோ இல்லை.

மேலே நாரதர் சொன்னதுபோன்ற விடயங்கள் ஆங்கிலத்தில் பதிவுசெய்யப் பட்டுவது அவசியம். தமிழ்கனேடியன் போன்றவை அந்த அவசரப் பணியைச் செய்யவேண்டும். முதற்கண் யாழிலும் தமிழ் கனேடியனிலும் யாராவது எழுதுங்கள். எனக்கும் கொஞ்சம் தகவல் அவசரமாக்த் தேவை.

அடேல் பாலசிங்கம் போன்றவர்கள் இதுபற்றி சிறு புத்தகமாக எழுதினால் மிகவும் பயன்படும். நாங்கள் விவாதங்களில் இந்திய இராணுவ அதிகாரிகள் டிக்சிற் பிரபாகரனை சுடும்படி உதரவிட்டதையும் அசோக் கோட்டல் சம்பவத்தை மட்டுமே மேற்கோள் காட்ட முடிகிறது.

சென்னைப் பல்கலைக் களகத்தில் மேல்படிப்புக்காக வந்திருக்கும் சீன நண்பர் ஒருவருடன் விரிவாக பேசினேன். உலக தென் ஆசிய நிலமைகளில் நிறைய மாற்றம் வரப்போகிறது.

நாங்கள் வெற்றி பெற்றாகவேண்டும். வெற்றி பெறுவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

மேலே நாரதர் சொன்னதுபோன்ற விடயங்கள் ஆங்கிலத்தில் பதிவுசெய்யப் பட்டுவது அவசியம். தமிழ்கனேடியன் போன்றவை அந்த அவசரப் பணியைச் செய்யவேண்டும். முதற்கண் யாழிலும் தமிழ் கனேடியனிலும் யாராவது எழுதுங்கள். எனக்கும் கொஞ்சம் தகவல் அவசரமாக்த் தேவை.

அடேல் பாலசிங்கம் போன்றவர்கள் இதுபற்றி சிறு புத்தகமாக எழுதினால் மிகவும் பயன்படும். நாங்கள் விவாதங்களில் இந்திய இராணுவ அதிகாரிகள் டிக்சிற் பிரபாகரனை சுடும்படி உதரவிட்டதையும் அசோக் கோட்டல் சம்பவத்தை மட்டுமே மேற்கோள் காட்ட முடிகிறது.

பின் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு அல்லது பதிலே கிடைக்காத இரு கடிதங்கள்

(1)

தலைமைச் செயலகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்

யாழ்ப்பாணம்

12.10.1987

கனம் ராஜீவ் காந்தி அவர்கள்

இந்திய பிரதம மந்திரி

புதுடில்லி

கனம் பிரதம மந்திரி அவர்களே

யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மிகவும் ஆபத்தான பாரதூரமான நிலைமையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

இந்திய அமைதி காக்கும் படைகள் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது போர்ப்பிரகடனம் செய்து இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தற்பாதுகாப்பிற்காக எமது போராளிகளையும் பொதுமக்களையும் அழிவிலிருந்து காப்பதற்காக நாம் இந்திய சிறிலங்கா இராணுவங்களை எதிர்த்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம

Rajiv Gandhi Wanted LTTE Cheif Killed - IPKF Commander Claim

JAFFNA MASS GRAVE -- It was the work of IPKF says: SL ARMY

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.