Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலில் காதல்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலில் காதல்.!

அம்மா வீட்டிற்கு வந்திருந்தா எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்ல, ஒரு கடிதம் போட்டிட்டு வந்திருக்கலாம். சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறா. இன்னும் நாலைஞ்சு நாளைக்கு ஒரே புராணமாய் போப்போது. வர வர நின்மதியில்லாமல் போச்சு என்ர அறைக்கதவை பூட்டி திறப்பைக்கொண்டு போகவேணும். இல்லை என்றால் மனிசி அறையை ஒரு கை பாத்திடும். போனமுறை வந்து செய்த வேலை காணும். படங்கள் எல்லாத்தையும் பொறுக்கி ஒழிச்சுப்போட்டா. வந்த கோவத்திற்கு வேறை யாரும் என்றால் நடக்கிறதே வேறை அம்மா என்டதால விட்டிட்டு இருந்தனான்.

அவாக்கு இதே வேலையாப்போச்சு எத்தனை வருசமாச்சு சொன்னாக்கேக்கமாட்டன் என்கிறா. அவாவும் பாவம் தானே. என்ர காதல் புனிதம் அவவுக் எப்படிப்புரியும். பாவம் வந்தவ சந்தோசமாய் போகட்டும். என்ன கதைச்சாலும் சத்தம் போடாமல் இருப்பம். அந்த நினைவுகளோட வாழுறதே எனக்கு சந்தோசம் தான். அதை பெத்த தாய் அனுமதிக்க மாட்டா தான். இருந்தாலும் ஏனக்கு அதில நின்மதி. இப்ப நினைச்சாலும் வலு சந்தோசம் தான்.

------

அப்ப நான் A/L படிச்சிட்டிருந்தனான் ராதிகாவும் இந்த சிவபுரம் மகாவித்தியாலத்தில தான் படிச்சிட்டிருந்தவ. அவ அப்ப சின்னப்பிள்ளை ஆனா என்ர மனசில ஆழமாய் பதிஞ்சிட்டா, அழகான பிள்ளை தான். அவளின்ர பேச்சு தான் என்னைக்கவர்ந்தது. துடுக்காய் பேசுவாள், பயப்பிடத்தெரியாது. எங்கட ஆசிரியர்கள், மாணவர்கள் என்று எல்லாரிட்டையும் பிரபல்யமாய் இருந்தவள்.

சிவபுரத்தில இடம் பெயர்ந்து வந்திருந்தாள், சொந்த இடம் யாழ்ப்பாணத்தில எங்கையோ தான். ஏழாம் ஆண்டில் தான் அவள் முதல் முதல் சிவபுரம் வந்தவள். வந்த கொஞ்ச நாளில தன்ர திறமைகளைக்காட்டி எல்லாரின்ர மனசிலையும் இடம் பிடிச்சிட்டாள்.

முதல் முதல் அவள் எனக்கு அறிமுகமானது ஒரு சின்னச்சண்டையில தான். எங்கட பெடியள் வெறும் கமறாவை வைச்சு பொம்பிளைப்பிள்ளைகளை படம் எடுக்கிறம் என்று பிளாஸ் அடிச்சிக்கொண்டு இருந்தவங்கள். அதுக்குள்ள பிலிம்றோல் இல்லை இதைத்தெரியாத அந்தப்பிள்ளையள் பயந்து வரமறுத்திட்டுதுகள். என்ன இது வேலை என்று கேக்க சின்னனுகளை அனுப்பி விட்டிருந்தவை

அப்ப வந்தவள் தான் ராதிகா. பயப்பிடாமல் வந்து எங்கட பெடியளை நல்ல கேள்வி கேட்டாள். இன்னும் ஒருபடி மேல போய் கமறாப்பறிச்சு பிலிம்றோலைக்கழட்ட முயன்றாள் அப்ப தான் அவைக்கு தெரியும் வெறும் கமறாவை வைத்து பிளாஸ் அடிக்கிறம் என்ற விசயம். அதன்பிறக பிளாஷ் என்று எல்லாரும் நினைத்திருக்க நான் மட்டும் ராதிகாவை பலவடிவங்களில் அடிக்கடி படம் எடுப்பேன். இரண்டு அல்பங்கள் நிறைய அவளின் படங்கள் என்னிடம் இருக்கிறது. இது அவளிற்கே தெரியாத விடயம். எனது சகதோழன் நெருங்கிய நண்பன் கரனுக்கு மட்டும் தெரியும். சிவா வேண்டாமடா என்று பலமுறை சொல்லியிருக்கிறான்.

அதுக்கு பிறகு பிள்ளையள் எல்லாம் பயப்பிடாமல் வருங்கள் படத்தை எடுத்தா எங்கட பொடியள் கலியாணம் முடிச்சமாதிரி அலுவல் பண்ணிப்போடுவாங்கள் என்ற பயம் தான் அந்தப்பிள்ளையளுக்க.

அன்று தான் அவள் எனக்கு அறிமுகம். அவளின் துணிவு எனக்கு பிடிச்சிருந்தது. அதுக்கு பிறகு அவளை கவனிக்க ஆரம்பிச்சிட்டன். அன்று "கெட்டிகாரி எப்பவும் இப்படி துணிவா இருக்கவேணும் " என்று பாராட்டிவிட்டேன். "நன்றி அண்ணா, உங்கட நண்பர்களிற்கு கொஞ்சம் அறிவுரை சொல்லக்கூடாதா?" என்று என்னைக்கடிச்சு விட்டுச்சென்றாள்.

அன்றில் இருந்து அவளோடு பழக்கம் ஆரம்பமானது.

ஒரு நாள் நான் ரியுசனில் நிக்கும் வேளை. என்னோடு O/L லில் கூடப்படிச்ச கணேஸ் ராதிகாவை ஏத்திக்கொண்டு வந்தான். யார் என்று விசாரித்ததில் அவள் கணேஸின் ஓரே ஒரு செல்லத்தங்கை என்ற விவரம் கிடைத்தது. அவன் எனது நண்பன் தான் நான் A/L லில் கலைப்பிரிவிற்குள் நுழைந்தேன். அவன் வர்த்தகம் படிச்சவன். இருந்தாலும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். அவனின் தங்கை என்பது எனக்கு இன்னும் மகிழ்ச்சியே.

ஒரு சில வாரங்கள் ஓடின. இரண்டு நாளாய் அவளை நான் காணவே இல்லை. எங்கை என்று விசாரிச்சதில் அவள் பெரியமனிசியாகி விட்டாள் என்ற செய்தி கிடைச்சது. சாதாரனவிடயம் தானே ஆனால் அது என்னை ஆட்டிப்படைத்தது. கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தேன். ஏன் என்ற கேள்விக்கு அவள் பள்ளிக்கூடம் வராத 3 கிழமைகள் என்னை வாட்டிய ஏதோ ஒரு நினைவு பதில் சொன்னது. அதுவரை இருந்த அன்பு காதலாய் மாறியதாக உணர்ந்தேன். ராதிகாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா அவளது பள்ளி தோழிகள் ஆசிரியர்களிற்கு சொல்லி சிறப்பாக நடந்தது. கணேஸின் நண்பர்கள் என்ற ரீதியில் நாமும் கலந்து கொண்டோம். உண்மையைச்சொன்னால் நான் அந்த சடங்கிற்காய் அதிக வேலை செய்திருந்தேன். அதில் எனக்கு மகிழ்ச்சியும் கூடத்தான். ராதிகா அன்று நடந்து கொண்ட விதத்தில் அவளிற்கு இந்த நிகழ்வில் விருப்பம் இல்லை என அறிந்து கொண்டேன். சாதாரனமாகவே அவள் புதுமை பேசும் பெண். இதை எப்படி ஏற்பாள்.? (நமது சமூகத்தில் இந்த சடங்கு என்பது ஒரு நிகழ்வாக கொண்டாடப்படுவது வழக்கமே)

நண்பனின் தங்கை என்பதால் நண்பர்கள் எல்லோரும் சேந்து கொஞ்சக்கொஞ்ச காச சேத்து ஒரு பரிசுப்பொருள் வாங்குவதாக திட்டமிட்டிருந்தார்கள். அந்த பரிசுப்பொருளுக்கு நானும் காசு கொடுத்திருந்தேன். ஆனால் அவளிற்காய் தனியாக ஒரு சிறிய மோதிரமும் வாங்கியிருந்தேன். கடைசி வரை அவளிற்கு அதைக்கொடுக்க முடியவில்லை. இப்பவும் அதை வைத்திருக்கிறேன்.

அதன் பிறகு அவளில் பலமாற்றங்கள். வளர்ந்து விட்டாள் அழகாய் மிளிர்ந்தாள். அவளை பார்த்திட்டு இருப்பது எனது முழுநேர வேலையாக மாறிவிட்டது. அவளது பள்ளிக்கூட மற்றும் ரீயுசன் நேர அட்டவணைகளிற்கேற்ப எனது வேலைகளை குறித்துக்கொண்டேன். எப்பொழுதும் அவளைத்தரிசிப்பதாற்காய் காத்திருப்பேன். அதில எத்தனை சுகம். அடிக்கடி நினைத்துச்சிரிப்பேன்.

அவளோடு கதைப்பதற்கான, அவளுக்கு உதவி செய்வதற்கான சந்தர்ப்பங்களை வலிய நானாய் உருவாக்கினேன். அவளுக்கு தெரியாத நேரம் அவளது துவிச்சக்கரவண்டியில் காத்தைத்திறந்து விடுவேன். அவளிற்கு முன்னால் காற்றடிப்பேன். அவளது அன்பைப்பெற பல வழிகளில் முயன்றிருக்கேன். ஒரு முறை நல்ல மழை அவள் குடை கொண்டு வர மறந்துவிட்டாள். என்ர குடையைக்கொடுத்தேன். "நீஙக என்ன செய்வீங்க" என்று கேட்டாள். "பக்கத்தில்தானே வீடு போய்விடுவேன்" என்று சொன்னேன். மறுநாள் குடையை திருப்பித்தந்தாள். எனது பொருட்களை சாதாரனமாகவே யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை.

என்னைப்பொறுத்தவரை அவள் வேறாக தெரியவில்லை. அன்றில் இருந்து அந்தக்குடைக்கு தனியான கவனிப்பு அந்தப்படியே இப்போதும் வைத்திருக்கிறேன். நான் வீட்டிற்குள் எனது அறையினுள் அடிக்கடி பிடிப்பதுண்டு. அதற்குப்பிறகு அந்தக்குடை வெளியுலகம் சென்றதில்லை. இப்படி அவளுடைய நினைவுகள் சுமந்து என்னோடு வாழும் ஒவ்வொரு பொருட்களிற்கும் கதைகள் உண்டு.

ஓரு முறை சரஸ்வதிப்பூசைக்கு அவள் தனி நடனம் ஆடியிருந்தாள் அன்றும் படம் எடுத்திருந்தேன். "ஏன் என்னை நீங்கள் படம் எடுத்தனீங்கள்" என்று அவள் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் சொல்ல எனக்கு முடியவில்லை. எங்கள் வகுப்புப்பிள்ளைகளை எடுக்கும் போது உங்களையும் எடுத்தான் என்று கரன் சொல்லிச்சமாளித்தான். அப்படியே ஒரு சில படங்களையும் கொடுத்தேன். பணம் கட்டாமல் வாங்க மாட்டன் என்று சொல்லிவிட்டாள். அதற்காக அவளிடம் வாங்கிய 125 ரூபா இன்னும் என்னிடம் உள்ளது. இப்படியே தொடந்தது வருசம் ஓன்று போயாகிவிட்டது. அவளிடம் காதல் சொல்ல நான் நினைக்கவில்லை. சொல்லவும் முடியவில்லை. அவளை காதலிப்பதாக கூறிய இன்னொருவனை அவள் பேசியதாக அறிந்தேன். அதனால் எனக்கும் அவளிற்கும் விரிசல் வந்துவிடக்கூடாது என்பதால் காத்திருந்தேன். அவளிற்கு முன்னால் என்னை பகிடிபண்ணுவார்கள் பட்டம் தெளிப்பார்கள். இருவரும் ஒரே நேரம் ஒரு இடத்தில் நின்றால் குடும்பமா வந்திட்டியளா என்று கேட்பார்கள். ஆனால் இவைகள் அவளிற்கு விளங்கியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை அந்த நேரங்களில் அவளிடம் எந்த மாற்றத்தையும் நான் கனவில்லை. நான் அவளைக்காதலிக்கும் விடையம் எனது வீட்டிற்கு சாதுவாக தெரிந்திருந்தது. அப்படியே எனது ஆசிரியர்களிற்கும் தெரிந்திருந்தது. "சிவா ராதிகா எங்கே" என்று என்னைக்கேலி பண்ணியிருக்கிறார் எங்கள் தலைமை ஆசிரியர் ராகவன். அது எனக்கு பலத்த சந்தோசத்தைக்கொடுக்கும். அந்த நிமிடங்கள் நான் பறந்து கொண்டிருப்பேன். இப்படி எனக்குள்ளே காதலை புதைத்த நான். கடைசிவரை என் காதலை அவளிடம் சொல்லாமல் இருப்பேன் என்று நினைக்கவில்லை. சொல்வது அவசியமாகவும் எனக்க படவில்லை. "

தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலையில் தொடங்கிற காதல் இப்படியே கற்பனையில் போய்விடும்......நல்ல காதல் கதை ...தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சித்திரை வருடப்பிறப்புக்கு கிட்ட ஒரு நாள் ராதிகா பாடசாலை ரியூசன் எங்கும் வரவில்லை கணேஸைத்தேடினேன் அவனையும் காணமுடியவில்லை. உண்மையில் இந்த சித்திரைப்பொங்கலுக்கு அவளை எனது வீட்டிற்கு எப்படியாவது கூட்டிட்டுப்போய் அறிமுகப்படுத்துவது என்று இருந்தேன். விதி வேறுவழி விளையாடியது. ராதிகாவின் அப்பாவிற்கு விசம்கலைச்சு அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாய் எங்கள் தலைமை ஆசிரியர் சொன்னார். எனக்க சரியான கஸ்டமாய் இருந்தது. உடனையே அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன்.

கணேஸின் மடியில் ராதிகா மயங்கியநிலையில் இருந்தாள். கணேஸ் கூட கனநேரமாய் அழுதிருக்கிறான். கண்கள் சிவந்திருந்தன. என்னைக்கண்டதும் மறுபடி கண்கலங்கியது. நான் அவனைத்தேற்றினேன். ராதிகாவை அந்த நிலையில் பாத்த எனக்கு தாங்க முடியவில்லை. என்க்கு அழுகையே வந்துவிட்டது. அதுதான் காதலோ என்று பின்னர் நினைத்தேன். அந்த நிகழ்வோடு எனது வாழ்க்கை மட்டும் அல்ல ராதிகாவின் வாழ்வும் தான் மாறிப்போய் விட்டது.

கணேஸ் உறவினர் ஒருவரின் உதவியுடன் வெளிநாடு செல்வதற்கென கொழும்பு சென்றுவிட்டான். உறவினர்கள் தெரிந்தவர்கள் என்ற யாருமே இல்லாத ஊரில் இருப்பதற்கு பிடிக்காமல் ராதிகாவும் தாயாரும் திரும்பவும் யாழ்ப்பாணம் சென்று விட்டனர். இவை எல்லாம் ஒரு சில கிழமைகளில் நடந்தேறின. கடைசியாக ராதிகா என்னோடு பேசிய போது அவள் இருந்த சோகத்தில் காதல் சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றவே இல்லை. அதோடு ராதிகாவிற்கும் எனக்கும் இடையிலான தொடர்புகள் அற்றுப்போயின.

எனது தலைமை ஆசிரியரிற்கு ராதிகாவிடம் இருந்து கடிதம் வந்ததாக அடிக்கடி சொல்வார். எங்களை எல்லாம் நலம் விசாரித்திருந்ததாகவும் சொல்வார். அருகில் இருந்தவர்கள் என்னை ஒருவாறு பரிதாபகமாக பார்ப்பார்கள். நான் பல தடவை தலையைக்குனிந்த படியே இருந்திருக்கிறேன். அவளது நலங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. அதன்பிறகு எப்பவாவது வரும் கடிதங்களும் நிண்டு போயிருந்தன.

ஐந்தாறு வருடங்களின் பின்னர் வந்த கடிதத்தில் ராதிகாவிற்கு திருமண ஆயத்தங்கள் செய்து கொண்டிருப்பதாக செய்தி வந்தது. ராதிகா ஏல் படிக்கும் போது ஏற்பட்ட பழக்கமாம் அது காதலாகி பின்பு இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் முடிந்து விட்டதாகவும். ராதிகா ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் பயிற்சியில் இருப்பதாகவும். அவளது கணவன் ஒரு கணக்காளன் என்ற செய்தியும் கீடைத்தது. கூடவே அவளது திருமணப்படமும் அனுப்பப்பட்டிருந்தது, வழக்கம் போல ஆசிரியர் எனக்கு கொண்டு வந்து காட்டியிருந்தார். அவரின் அனுமதியுடன் அதிலும் ஒரு படம் எடுத்து என்னோடு வைத்துக்கொண்டேன். இதற்கிடையில் ராதிகா சிவபுரம் விட்டு சென்ற அடுத்த ஆண்டே கிளிநொச்சி இயக்கத்தின் கதையில் வந்த உடனே எனது குடும்பத்தாரும் அங்கு போய்விட்டார்கள். நான் மட்டும் வரமாட்டேன் என்று உறுதியாக இங்கேயே இருந்து விட்டேன்.

நான் படிச்ச அந்த பள்ளிக்கூடம், கல்வி நிலையம் என்று அவளது நினைவு சுமந்த அந்த இடத்தில் இருந்து விட்டேன். வீட்டில் இருந்து அம்மா, அக்கா அடிக்கடி வந்து போவார்கள். என்னையும் கிளிநொச்சி வரும்படி வற்புறுத்துவார்கள். நான் அந்த கல்லிநிலையத்திற்கு அருகில் ஒரு கடை போட்டுக்கொண்டு அதோடையே என்ர காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இன்றும் அம்மா வந்திருக்கிறா. பெண் பாத்து வந்திருப்பா படம் கொண்டு வந்திருப்பா. வழக்கம் போல நான் வேண்டாம் என்று சொல்லுவேன். அம்மா அழுதபடி வீடு திரும்புவா. இது தொடர்கதையாகப்போய்விட்டது.

அவள் என்னைக்காதலிக்கவில்லை, எனக்கு கிடைக்கப்போவதில்லை என்ற எண்ணங்கள் என்னை வருத்தியதில்லை. எனது காதலில் எனக்கு பூரண திருப்தி. அவளை உண்மையாக நேசித்தேன் என்பதில் எனக்கு சந்தோசம். என்னோடு அதிக காலமாய் பழக்கம் வைத்திருக்கின்ற எங்கள் கல்விநிலைய தலைமை ஆசிரியர் பலதடவை எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அம்மாவின் வேண்டுதலால். யார் சொல்லியம் இதுவரை என்னுள் மாற்றம் ஏற்படவில்லை. கடந்த வருடம் எங்கள் எல்லாரையும் பார்ப்பதற்கென்று ராதிகா சிவபுரம் வந்திருந்தாள். எதிர்பாராத தரிசனம். அவளில் பெரிய மாற்றங்கள். குணம், துடுக்கான பேச்சு எதுவும் மாறவே இல்லை. என்னைப்பொறுத்தவரை அவள் இன்னும் அப்படியே தான் இருந்தாள். என்னோடு நன்றாக பேசினாள். அவளது கணவனுக்கும் அறிமுகப்படுத்தியிருந்தாள். அவளது சாமத்தியவீட்டு வீடியோவில் என்னைப்பாத்ததாக சொல்லியிருந்தார். என்னை நேசிச்ச பல ஜீவன்கள் வாழ்ந்த வாழ்கின்ற இடம் மீண்டும் ஒருமுறை தரிசிக்க வந்ததாய் சொல்லியிருந்தாள். அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. என்னைப்பற்றி கதைத்தார்கள். ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்டாள். நான் பதில் பேசவில்லை.

தலைமை ஆசிரியர் பேசினார். "ஓரு பிள்ளையைக்காதலிச்சவனாம், அந்தப்பிள்ளையட்ட காதலைச்சொல்லேல்லையாம். அது ஊருக்கு போயிட்டுது. இப்ப கலியாணமும் செய்திட்டுது என்றார். இவன் இன்னும் இப்படியே இருக்கிறான். சரியான விசரன். என்ன சொல்லியும் கேக்கிறான் இல்லை ராதிகா". என்றார்.

அவளும் அவளது பாட்டிற்கு. " ஒருதலைக்காதலிற்கு இத்தனை காத்திருப்பா. உங்களுக்கு என்ன பைத்தியமா? நீங்க காதலிச்சவங்க கொடுத்து வைச்சவங்க. உங்கள தவறவிட்டிட்டாங்களே" என்றாள். நான் அந்த கொடுத்துவைச்சவள் நீ தான். என்று சொல்லவழியின்றி. ஆசிரியரைபப்பாத்தேன். அவரது கண்கள் என்னை பாவமாய் பாத்தது. என்கண்கள் ஏனோ கலங்கியிருந்தது. எனது கண்களை கண்ணீருடன் கண்ட ராதிகாவின் கணவன். " சும்மா இருடா ராதி, பாவம் அவர் கஸ்டப்படுத்தாதே" என்று அவளை கட்டுப்படுத்திக்கொண்டார்.

அவர்கள் சிவபுரத்தில் இரண்டு கிழமைகள் தங்கியிரந்தார்கள். கோவில்கள் பள்ளிக்கூடம் என்று எல்லா இடமும் சுற்றிப்பார்த்தார்கள். எனது வீட்டிற்கும் ஒரு நாள் விருந்துக்கு அழைத்திருந்தேன். நான் தனியாக சமைப்பதை கண்ட ராதிகாவும் அவளது கணவனும் எனக்கு உதவி செய்தார்கள். வீட்டிலும் இப்படித்தானாம். ராதிகாவை தனியாக சமைக்க விடுறதில்லையாம். வாழ்க்கையின் பலனை அடைந்த மாதிரி உணர்வு.

ராதிகாவை அவளது கணவன் ஒரு குழந்தை போல பார்த்துக்கொண்டான். தொலைவில் இருந்து பார்த்தேன். முகம் கழுவும் போது சட்டையை நனைத்துவிட்டாள் என்று பேசினான். அவளிற்கு சளிப்பிடித்துவிடுமாம். அக்கறையோடு சண்டை போட்டான். "சரிடா சரி வீட்டை மாதிரி இங்கையும் தொடங்காதே, பாக்கிறவை தப்பாய் நினைக்கப்போயினம். நான் என்ன குழந்தையா? உனக்கு பொண்டாட்டியாக்கும் நினைவில வைச்சுக்கொள்" அதே வாய் அவனை செல்லமாய்ச்சீண்டி அடக்கியது. அவனும் "வீட்டை வாம்மா பாத்திக்கிறேன்" என்று சிரித்தான். நான் கூட இப்படி அவளை கண்ணும் கருத்துமாய் பாத்திருப்பேனா சந்தேகம் தான். என்னை விட சிறந்த ஒருவன் அவளிற்கு கணவனாய் கிடைத்ததை இட்டு மிகமகிழ்ந்தேன்.

போகும் போது ராதிகா அக்கறையோடு சொல்லிச்சென்றாள். "உங்கட காதலி இன்னொருதரை மணந்த பின்னும் அவளுக்காக நீங்க உங்கள் வாழ்க்கையைப்பாழாக்கிறது நல்லாய் இல்லை. யோசிச்சு செய்யுங்க உங்களுக்கு புத்தி சொல்ற அளவிற்கு எனக்கு அநுபவம் இல்லை. மீண்டும் உங்களை எல்லாம் காணக்கிடைக்குமோ தெரியாது. அப்படி கிடைச்சா கண்டிப்பா உங்களுக்கென்று ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்க வேணும் என்று கடவுளிட்ட வேண்டுறன். அது தான் என்னால் இப்போதைக்கு முடிந்தது" என்று கூறிச்சென்றாள். அவளது கண்ணிகளிலும் கண்ணீர் காரணம் எனக்கு தெரியவில்லை. ஏன் அழுதாள்? என்மேல் அக்கறையா? எதுக்கு? அல்லது என் காதலை அறிந்து கொண்டாளா? எப்படி?

இதற்க விடை என் ஆசிரியரிடம் கிடைத்தது.

ராதிகா சிவபுரம் வந்ததற்கு காரணமே அவர் அனுப்பிய தகவல் தானாம். எனக்காக வரவழைத்திருக்கிறார். சகலவிடயமும் அவளிற்கு தெரிந்திருந்திருக்கிறது. அதனால் தான் கணவனுடன் வந்து தான் மணம் முடித்ததை தெரியப்படுத்தி என்னையும் மறந்து வேறை யாரையும் மணக்கச்சொல்லியிருந்தாள். எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது இதைக்கேக்க. எனக்காக அவள் கவலைப்படுறதை நான் விரும்பவில்லை. எனக்கு கலியாணம் செய்யப் பிடிக்கவில்லை. அதற்காக இப்ப ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். எனக்கு திருமணம் என்று கூறிவிட்டு சிவபுரத்தை விட்டு வெளியேறப்போகிறேன். தலைமை ஆசிரியர் மூலம் ராதிகாவிற்கு இந்த தகவலும் கட்டாயம் போகும். என்னால் காதலிக்கப்பட்ட குற்றத்திற்காக அவள் வருந்துவது எனக்கு விருப்பமில்லை. ஊர் விட்டு மாறப்போறேன். என்வாழ்வில் மாற்றம் வருமா? எனக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.

முற்றும்.

நன்றி: விழிசிறகுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணாவிலன் இணைத்தமைக்கு

எல்லோர் வாழ்விலும் முடியாமல் ஓடுகின்ற திரைப்படம் ...பள்ளி பருவத்தை எட்டி பார்க்க வைக்கிறது

என்ன நுணா அண்ணா அனுபவத்தை கதையாக தாறியள் போல இருக்கு..கு :o

ம்ம்..அவா "பெரிய மனிசி" ஆகிட்டா எண்டு கோவிலிற்கு போய் அர்ச்சனை செய்யிறது எல்லாம் கொஞ்சம் அதிகம் படி தான் எனக்கு உது தெரியாம போச்சே இல்லாட்டிக்கு நானும்..ம்..அங்கால சொல்ல மாட்டன் :o உந்த புத்து மாமா இங்கையே படுத்து கிடக்கிறார்..ர்..!! :blink:

அப்ப நான் வரட்டா!!

எல்லோர் வாழ்விலும் முடியாமல் ஓடுகின்ற திரைப்படம் ...பள்ளி பருவத்தை எட்டி பார்க்க வைக்கிறது

ஓ..அப்படியோ முனி மாமு..மு.. :unsure: ஏன் உங்களுக்கு ஏதாச்சும் "பிளாஸ்பக்" இருக்கோ கொஞ்சம் சொல்லுங்கோ கேட்போம் யார் முதலில காதலை சொன்னது நீங்களோ இல்லாட்டிக்கு அவாவோ மாமு..மு.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பல பேரின்டை முதல் காதல் கோவிந்தாதான் போல இருக்கு. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பல பேரின்டை முதல் காதல் கோவிந்தாதான் போல இருக்கு. :)

:D ஒம் ஒம்...பலரின்ட'" காதலே"கோவிந்தா இந்த லட்சசனத்தில் முதல் காதல் பற்றி கேட்க வேண்டுமெ! :lol: `

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..அப்படியோ முனி மாமு..மு.. :wub: ஏன் உங்களுக்கு ஏதாச்சும் "பிளாஸ்பக்" இருக்கோ கொஞ்சம் சொல்லுங்கோ கேட்போம் யார் முதலில காதலை சொன்னது நீங்களோ இல்லாட்டிக்கு அவாவோ மாமு..மு.. :)

அப்ப நான் வரட்டா!!

என்ன ஜமுனா பழைய [பிளாஸ் பக்]கதையா வேண்டவே வேண்டாம்

அதுவே நாறிப்போய் கிடக்கு அதை கிளறவா

  • கருத்துக்கள உறவுகள்

காதலர்கள் தோற்கலாம் ஆனால்" காதல் தோற்பதில்லை ."அதனால் தான் இன்று வரை

நினைவு வச்சு எழுதி இருக்கிறீங்க

என்ன ஜமுனா பழைய [பிளாஸ் பக்]கதையா வேண்டவே வேண்டாம்

அதுவே நாறிப்போய் கிடக்கு அதை கிளறவா

ஓகோ...., முனிவர் தவக்கோலம் பூண்ட காரணம் இது தானா..........?

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ...., முனிவர் தவக்கோலம் பூண்ட காரணம் இது தானா..........?

ஆம் பிள்ளை சரியாக கண்டு பிடித்து விட்டியள்

நீங்கள் மல்லிகை வாசம் அல்ல

கற்பூரவாசமாக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுனா நல்லாயிருக்கு வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லகதை ஒன்றை இணைத்திருக்கின்றீர்கள் நுணாவில் :)

நுனா நல்லாயிருக்கு வாழ்த்துக்கள். :wub:

என்ன சாமான் நல்லாயிருக்கு சுப்பண்ணை? :lol:

பள்ளிப்பருவத்து காதலை விளக்கும் அருமையான கதை. அதனால் வரும் சோகம் மிக ஆழமானது. மனதுக்கு அமைதி அளிக்கும் விடயம் என்னவென்றால், அந்த சோகத்தை அனுபவித்தோர் நாம் மட்டுமல்ல... நம்மைப்போல் பலர் உள்ளனர் என்பதே.

நன்றி நுணாவிலான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சாமான் நல்லாயிருக்கு சுப்பண்ணை? :D

ஆகா வந்திட்டாங்கையா <_< கதைதான் நல்லாயிருக்கு கு.சா வேற ஒன்றும் எனக்கு தெரியல உங்களுக்கு ஏதாவது தெரியுதா :lol: ?

நல்ல கதை. வித்தியாசமான முடிவு. <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.