Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்மோபெரிக் ஆயுதம் புலிகளால் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உவர் அண்ணாச்சி உங்க இருந்து என்ன சொல்ல விளைகிறார் என்றால்.. அரசசார்பற்ற நிறுவன வாகனங்களை ஆமிக்காரன் தடுத்திட்டான்.. அதற்கு ஏ9 மற்றும் கிளிநொச்சி நகருக்கு செல் வந்து விழுவதுதான் காரணம். ஆக ஆமிக்காரன் அவனின் இறுதி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறான்.. புலம்பெயர்ந்த மந்தைகள்.. 3 நாள் பழைய கோவணத்தையே இன்னும் கட்டிக் கொண்டு நாறடிக்குதுகள்.. நான் புதுக்கோவணம் கட்டிட்டன் எல்லோரும் கழற்றி புதிசை மாட்டுங்கோ என்றார்.

நீங்கள் என்னடான்னா.. இல்லை என்று அடம்புடிச்சா.. அண்ணாச்சிக்கு கோவம் எகிறிடுமில்ல.

அண்ணாச்சி பார்க்கல்லப் போல.. அமெரிக்க தூதரே.. நேற்று ஒரு நிகழ்வில்.. சிறீலங்கா அரசு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் நீதிக்குப்புறம்பான வகையில் தாக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி இருக்கிறார். அவர் சொல்லிக் கூட.. தடுக்க முடியாததை.. புலம்பெயர்ந்த புண்ணாக்குகள்..???! :lol:

INGOs come under ‘unjustifiable attacks’ in SL- Blake

INGOs in Sri Lanka come under ‘unjustifiable attacks’ in Sri Lanka despite the work they do - US Ambassador Robert Blake said at a function today.

டெயிலிமிரர்.

சிங்கள அரசின் தமிழர் ஒழிப்புத் திட்டங்களை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் யாரும் ஈடுப்பட்டது மாதிரித் தெரியவில்லை..

30 வருசமா சர்வதேசத்துக்குச் சொன்னது போதாதா...??! சர்வதேசத்துக்கு செகிட்டு மிசின் வாங்கிக் கொடுத்திட்டுச் சொல்லுங்கோ அப்பதான் அந்த முயற்சி பலிக்கும்..! :):)

Edited by nedukkalapoovan

ஓ... மக்களின் கோயிலை இடிச்சால் பொருள் சேதம் இல்லை காசு வன்னிக்கு போகும்தான்...

இஸ்லாமியரும் புனிதப்போர் செய்யினம் மக்காவுக்கு வேறை காசுகளை கொட்டுகினம் பள்ளி வாசல் வேற கட்டுகினம், பொருட்களை கொட்டுகினம்... ஆனாலும் அவை ஒற்றுமையாத்தான் இருக்கீனம்... அவர்கள் எல்லாம் அதை positive வாகத்தான் approch பண்ணுகினம் வெற்றியும் பெறுகினம்...

சிங்களவன் கூட பர்ணசாலைக்கும் பிக்குகளுக்கும் கொட்டாத காசு இல்லை இலங்கை பிக்குகள் பிச்சை எடுத்தும் தின்னவும் இல்லை... ஆனாலும் அவன் பலமாத்தான் இருக்கிறான்... நல்லா பிரச்சாரமும் செய்யுறான்... ஒருவேளை புத்தர் சிவனை விட பவர் புள்ளான ஆளோ தெரிய இல்லை...

இரும்பு திரைபோட்டு எதையும் வீணடீக்காத கம்யூனிச சீனாவுக்கையும் மதம் இருக்கு பண்டிகை செலவுகளும் இருக்கு, அதை எல்லாம் தடை செய்ய இல்லை... காரணம் மக்களை கலாச்சார முறைமைகளில் ஒண்றிணைக்கும் பல வளிகளில் அதையும் ஒண்றாக அணுகுவதுதான்...

தமிழருக்குதான் இங்கை பிரச்சினை... கோயில் என்பது வேண்டாம் எண்டு சொல்லவே முழுமையான பலத்தை பிரயோகிக்க முடியாமல் இருக்கு... கடவுள் இல்லை எண்டு 70 வருடத்துக்கு முன்னம் தொடங்க்கினவை இன்னும் கால்வாசிகூட தாண்ட முடியவில்லை... இவர் ஒருத்தர் இப்ப தொடங்கி மக்களை மனம் மாற்றி தமிழீழம் அடைய போறாராம்...!! எத்தினை காலம் காக்க வேணுமோ... ???

அண்ணை தமிழீழ பக்கம் மக்களின் கவனத்தை திருப்ப அதைவிட இலகுவான வளீகள் இருக்கு...

ஆனால் இதிலை ஒண்டு மட்டும் நிச்சயம்.... மற்றவர்களை குறை கூறுதல் என்பது இயலாமையில் வெளிப்பாடு... இருப்பதை தங்களால் ஆக்க பூர்வமாக முன்னெடுத்து செயல் படுத்த முடியாத கோதாரிகள் எல்லாம் அறிவுரை செய்ய வெளிக்கிட்டா இப்பிடித்தான் தமிழீழம் துரத்திலைதான் தெரியும்...

அண்ணை RAW விலை வேலை செய்யுறீயள் போல அவைதான் எப்பவும் அழிக்கிறது கொழுத்துறது மட்டும்தான் செய்யுறவை...!! ஆக்கிறது பற்றி சிந்திக்கிறது இல்லை...

Edited by தயா

அட டா நிச்சையமாக கன விசையங்கள் ஒருத்தர் தெரிஞ்சு வைச்சிருக்கிறார்.

புத்தர் நிச்சையம் பவுர் புல்லான ஆள்தான் இல்லாட்டி உப்பிடி கலைச்சு கலைச்சு அடிக்கமாட்டார் காவடி ஆடி யாகம் நடத்தி தேர் இழுத்து கலாச்சாரம் வழர்க்கிற கூட்டத்துக்கு.

ஒரு பந்தியில அமெரிக்கா அறிக்கை விட்டுட்டுது எண்றார் அடுத்த பந்தியில சர்வதேசத்துக்கு செவிட்டு மிசின் பூட்ட வேணும் என்றார்.

Edited by kurukaalapoovan

அப்ப வெளிக்கிடுங்கோ கோயிலை இடிச்சு போட்டு, அதுக்கு செலவளிக்கிற காசை கேட்டு திருவோட்டோடை வீட்டு வீடா திரியலாம்...

கடவுளை அளிச்சாத்தான் தமிழீழம் கிடைக்கும் எண்டது புதுசாத்தான் இருக்கு....!! இப்ப எல்லாம் ஆமியையும் சிங்களவனையும், சர்வதேசத்தையும் பற்றி நாங்கள் கவலையே பட தேவை இல்லை.. எல்லாம் கோயிலை இடிக்க சரிவரும்...!!

காவடி எடுக்கிறதாலை தான் தமிழீழம் கிடைக்க தாமதம் ஆகுது இல்லாட்டா தமிழர் எல்லாரும் ஓடிவந்து தமிழீழம் கிடைக்க குத்தி முறிவினம் எண்டது புதிய சிந்தனைதான்...

கோயிலை இடியுங்கோ.... சர்வதேசமும் சிங்களவனும், ஐயன் மாருக்கு மனித உரிமை அகதி அந்தஸ்து கொடுக்கட்டும்...

தமிழீழத்துக்கு இப்பவே நல்ல பேர் வாங்கினமாதிரியும் இருக்கும்....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அட டா நிச்சையமாக கன விசையங்கள் ஒருத்தர் தெரிஞ்சு வைச்சிருக்கிறார்.

புத்தர் நிச்சையம் பவுர் புல்லான ஆள்தான் இல்லாட்டி உப்பிடி கலைச்சு கலைச்சு அடிக்கமாட்டார் காவடி ஆடி யாகம் நடத்தி தேர் இழுத்து கலாச்சாரம் வழர்க்கிற கூட்டத்துக்கு.

ஒரு பந்தியில அமெரிக்கா அறிக்கை விட்டுட்டுது எண்றார் அடுத்த பந்தியில சர்வதேசத்துக்கு செவிட்டு மிசின் பூட்ட வேணும் என்றார்.

உவர் அண்ணாச்சி.. புறக்கணி சிறீலங்கா பனர் கட்டி.. காட்டூன் வரைஞ்சு.. ஸ்கிரீன் சேவர் போட்டு உசுப்பி விட்டதாலதான் ஜோஜ் புஷ் அசந்து போய் அறிக்கை விட்டவர்..! :lol:

சிறீலங்காவை ஜேர்மனி சாடியதை அடுத்து ஐரோப்பாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான முரண்பாடு அதிகரித்து வரும் நிலையில் தான் அதன் தொடர்ச்சியாகத்தான் உந்தக் கருத்து வந்திருக்குது..!

இதற்கு.. முக்கியமாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கைகள் மற்றும் தாயகத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் அறிக்கைகள் மற்றும் புலம்பெயர் தேசங்களில உள்ள மந்தைகள் வெளில வந்து நடத்தின சில போராட்டங்களும் பொங்கு தமிழ்களும் உறுதுணையா இருந்திருக்கலாம். அவ்வாறான போராட்டங்கள் இன்னும் இன்னும் தொடரனும்..!

ஏன்னா சர்வதேசத்தின் செகிட்டு மிசினுக்கு இப்பதான் மனித உரிமைகள் பற்றிய உண்மை கேட்டிருக்குது. தமிழர்களின் போராட்ட நியாயம் பற்றிய உண்மை இன்னும் கேட்கல்ல. விடுதலைப்புலிகளின் நியாயத்தன்மை இன்னும் விளங்கல்ல..! அதுக்கு சர்வதேசத்தின் செகிட்டு மிசுனுக்கால கேட்க கத்தனும்..!

சும்மா ஸ்கிரீஸ் சேவரை போட்டிட்டு குந்திட்டு இருந்தா பாருங்கோ.. விசயம் போக வேண்டிய இடத்துக்குப் போறதுக்கிடையில.. உங்கட பரம்பரையே இல்லாமல் போயிடும்.. கண்டியளோ..!

சில பிரச்சார வடிவங்கள் வேகம்.. விவேகம் கொண்டனவாக இருப்பது இன்றைய காலக்கட்டத்தில் அவசியம். :)

Edited by nedukkalapoovan

சில பிரச்சார வடிவங்கள் வேகம்.. விவேகம் கொண்டனவாக இருப்பது இன்றைய காலக்கட்டத்தில் அவசியம். :lol:

கோயிலை இடி , ஐயரின் கோவணத்தை களட்டு பிரச்சாரம் இன்னும் பவர்புல்லானது... இதாலை கிறிஸ்தவரக அடயாள படும் ஜோர்ஜ் புஸ் கூட புல்லரித்து போவார்...!! கோயிலுக்கு கொட்டுகிற காசை தமிழர் எல்லாம் கொண்டு ஓடிவந்து போராட்டத்துக்கு கொட்டுவினம்...

அதாலை ஆயுதங்களை அலச்சியமாக கப்பலிலை வன்னிக்கு அனுப்பலாம்... அடுத்து என்ன தமிழீழத்துக்கான அங்கீகாரம்தான்...!!!

சுபம்...

தம்பி தயா!

இங்கு உள்ள தலைப்புக்கும் உமது கருத்துகளுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா??? .... ஏன் ஆட்டுக்குள் ... மாட்டை ....

தம்பி தயா!

இங்கு உள்ள தலைப்புக்கும் உமது கருத்துகளுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா??? .... ஏன் ஆட்டுக்குள் ... மாட்டை ....

விளக்கம் கூடின அண்ணை..!

இங்கை சிலர் போர் ஆய்வுகள் செய்வதை விட்டு "கோயிலை இடி, ஐயனின் கோமணத்தில் கொடி ஏத்து " என கோசம் போட்டா தமிழீழம் கிடைக்கும் எண்டுகினம் அதாலைதான், நானும் சிந்திச்சு பாக்கிறன் விளைவு எப்படி காயாகி கனியாகும் எண்டு...!!!

உதாரணமாய் நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வளி ஓடி புல்லுக்கும் பொசியுதாம்... அதை தடுத்தால் எல்லாமே நெல்லுக்கு போகும் எண்டது போல ஒண்டை சொல்லுகினம்..

Edited by தயா

தமிழர் தரப்பால் ஈட்டப்படும் வெற்றிகள் தமிழரைச் சந்தோஷப்படுத்தவே செய்யும். யாரை யார் குழப்புவது? குழப்பங்களைத் தூரத்தில் வைத்துவிட்டு முதலில் சந்தோஷப்படுவோம். இந்த சமர் வெற்றியின் கட்டியம். விடயத்திலிருந்து திசைதிருப்பப்படும்போது வேஙெ;கேயோ சென்றுவிடுகிறோம். குழப்புபவர்கள் குழப்பமடைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக மாங்குளத்திலோ, கிளிநொச்சியிலோ நிற்கும்போதும் சந்தோசப்படலாமா?

main7pic1qf6.jpg

இங்கே இனவாத சிங்கள அரசின் பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் வரைபடங்களை கொண்டு வந்து இணைப்பவர்கள்,

அதே வரைபடங்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்து,

சிங்கள இராணுவம் எங்கே வசமாக வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறது,

அந்த குறியிட்ட இடங்களை அடைய எவ்வளவு நவீன படைக்கலங்களை நகர்த்தியிருக்கும்,

அப்படி நகர்த்திய நவீன படைக்கலங்களில் எவ்வளவை அண்மையில் பறிகொடுக்க வேண்டி வந்திருக்கும்,

அப்படி பறிகொடுத்த அந்த படைக்கலங்கள் எதிர்கால போர்க்களங்களில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் என்ன

என்பதை சிந்திக்க முடிந்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும்!

சிங்களவர்கள் பிச்சை எடுத்தாவது யுத்தம் செய்வது என்று நினைக்கிறார்கள்,

அரசியலில் எதிரும் புதிருமாக செயற்படும் சிங்களவர்கள் கூட தமிழர்களை அழிப்பது என்று வரும் போது ஒற்றுமையாக செயற்படுகிறார்கள்.

ஆனால் தமிழர்களோ மதவாதம், நாத்தீகவாதம், மண்ணாங்கட்டி இவை எல்லாம் பேசி தன்னை பெரும் அறிவாளியாக காட்டும் விளையாட்டிலேயே குறியாக இருக்கிறார்கள்

பல்வேறுபட்ட சிந்தனைகள் ஒரு சமுதாயத்திற்கு தேவைதான் என்றாலும்,

யுத்த காலத்தில், ஒட்டு மொத்தமாக ஈழத்தமிழினத்தின் இருப்பே கேள்விக்குறி ஆக்கப்பட்டிருக்கும் ஒரு காலத்தில்,

கொள்கை வேறுபாடுகளையும் பிரதேச வேறுபாடுகளையும் தனிப்பட்ட துவேசங்களையும் களைந்துவிட்டு,

நாத்தீகன் ஆத்தீகன் எனும் வரட்டு பிடிவாதங்களையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு,

தமிழர்கள் ஒரே இனக்குழுமமாக, தமிழர் விடுதலை போராட்டத்துடன் தற்போது இணைந்து செயற்பட மறுக்கும்பட்சத்தில்,

ஈழத்தமிழனத்தை காப்பாற்ற எதிர்காலத்தில் எவரும் இருக்கமாட்டார்கள். இது நிச்சயம்!!!

Edited by vettri-vel

வெற்றி வேல் நன்றாக சொன்னீர்கள்.ஒவ்வொரு நாளும் யாழ்களத்தை திறந்தால் ஏதாவது ஒரு தலைப்பில் சண்டை பிடித்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள் இந்த தமிழருக்கு மட்டுந்தான் இந்த பழக்கம் உள்ளது.

ஈழத்து கவிஞப் எஸ்.போ நேற்று மதுரையில் நடந்த மக்கள் தொலைக்காட்சியின் 3 ஆண்டு விழாவில் உரையாற்றினார்.அவர் நாசுக்காக சொன்னார் வன்னியில் தமிழர்களுக்கான நாடு உருவாவதற்கான பலப்பரிட்சை நடக்கு நடக்குது என்று.(அவர் சொன்ன வசன நடைவேறு)

ஈழத்துக்காக பிரச்சாரம் பண்ண வேண்டிய யாழ்களத்தை எதிரிக்காக பிரச்சாரம் பண்ணிக்கொண்டிருக்கின்றார்க

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை இணைச்சு எனக்கு தெளிவு ஏற்படுத்தியதுக்கு நன்றி,இப்படத்தின் படி பார்த்தால் இராணுவம் கைப்பற்றிய பகுதி ஒப்பீட்டளவில் ஆக்கிரமிப்பு அற்ற பகுதியை விட மிகச்சிறியதே!

  • கருத்துக்கள உறவுகள்

30 வருசமா சர்வதேசத்துக்குச் சொன்னது போதாதா...??! சர்வதேசத்துக்கு செகிட்டு மிசின் வாங்கிக் கொடுத்திட்டுச் சொல்லுங்கோ அப்பதான் அந்த முயற்சி பலிக்கும்..! :lol::)

:D:D:lol:

மாங்குளத்திலும் கிளிநொச்சியிலும் கூட சந்தோசப்படும் விடயங்கள் நடக்கலாம்.

ஓம் ஓம் சிங்களவர்கள் வசமாக வாங்கிக்கட்டினம் தமிழர்கள் குளிரூட்டின அறைகளில இருந்து கணனித் திரைகளை பாத்து பொத்தான்களை அமத்தி சிங்களவருக்கு பேதி குடுக்கினம்.

கடசி நேரத்தில அதிசயம் நடத்தப் போறார் சூரிய தேவன் மன்னராட்சி மலரப்போகுது சந்தோசங்கள் நடக்கப் போகுது.

நல்லகாலம் பிறக்குது நல்லகாலம் பிறக்குது...

:lol:

அம்புக்குறிகளை உத்துப்பாக் நல்ல தெளிவா தெரியுது மோட்டுச் சிங்களவரின்ரை நவீன ஆயுதங்கள் எல்லாம் எங்களிட்ட வரப்போகுது நாங்கள் ஓசியில ஈழம் காணலாம் எண்டு.

ஆனபடியாக நாத்திகன் ஆத்திகன் எண்டு வெறும் வரட்டு பிடிவாதங்களை விட்டுட்டு ஒற்றுமையாக ஓ போடுங்கோ ஓசியில வயிறு வழக்கிற கூட்டத்தோடு. அவையின்ரை ஓசியில வயிறு வழக்கிற உரிமையை மறுத்துப் போடாதேங்கோ அது பிறகு மனித உரிமை மீறலாகி போராட்டத்துக்கு சர்வதேச ரீதியில் பாதிப்பு வந்துவிடும். :D

ஈழத்தமிழன் தனது இனத்தின் பலவீனங்களை உணர்ந்து ஏற்றுக் கொண்டு அதற்கான மாற்றீடுகள் பற்றி யதார்த்தமாக சிந்தித்து செயற்படுத்த தொடங்கும் மட்டு எதிர்காலம் என்ன நிகழ்காலத்திலும் யாராலும் காப்பாற்ற முடியாது. புலிகளால் உயிரையும் உடல் அங்கங்களையும் கொடுத்து போராட்டத்தின் தேவையை நியாயப்பாடுகளை நினைவூட்ட உணர்த்த முடியும். அந்த அர்ப்பணிப்புகள் மாத்திரம் ஈழத்தை வென்று தரப்போவதில்லை. சிங்களவனின் ஆயுதங்களை புலிகள் தமது உயிர்களை கொடுத்துப் பெறவும் பின்னர் பெற்ற ஆயுதங்களைப் பாதுகாக்க கொடுக்கப்படும் உயிர்களும் என்று எமது போராட்டத்தில் ஒப்பீட்டளவில் செலவிடக் கூடிய நிலையில் ஒரு தெரிவாக இருப்பது உயிர்கள் தானே அன்றி பொருளாதார வளமோ தொழிநுட்ப வளமோ அல்ல. எதிரியை விட பலமடங்கு எண்ணிக்கையில் சிறிய இனமாகிய நாம் இந்த வினோதமான சமன்பாடு மூலம் இறுதி வெற்றியை அடையலாம் என்பது வெறும் கனவு. இது தற்காலிக வெற்றிகளை உருவாக்கலாம் அதிகப்படியாக தேவை உணர்ந்து செயற்பட வைக்க கால அவகாசத்தை தரலாம். அதை உணர முடியாவிட்டால் அந்த கால அவகாசத்தில் எந்தப்பயனும் இல்லை அதை உருவாக்க கொடுக்கப்பட்ட உயிர்களும் விரையமாக்கப்பட்டவை தான்!

யூதர்களும் ரோமர்களுக்கு எதிராக போர் புரிந்தார்கள் கிளர்ச்சி நடத்தினார்கள் தமது தாயகத்தில். வெற்றி பெறவில்லை. காலப்போக்கில் தாயகத்தில் இருந்த யூதர்களை விட புலம்பெயர்ந்த யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நிலமை நோக்கித்தான் எமது போராட்டமும் நகர்கிறது. ஈழப்போர் 1, 2 , 3, 4 என்று பார்த்தால் கொல்லப்படுவோர் காயமடைவோர் என்பவற்றோடு நிரந்தரமாக தாயக பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்கள் என்பதும் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது.

17 மில்லியன் சனத் தொகையையும் முழு அங்கீகாரத்தை கொண்ட மோட்டுச் சிங்களவருக்கு பிடிச்சு விடுகிற விளையாட்டால் சமாதானம் சண்டை என்று சுழற்சி முறையில் போவதில் நீண்ட கால நோக்கில் எதிர்த்தரப்பு என்று ஒப்பிட்டு பார்க்கும் போது பெரிதாக பாதிப்பில்லை. தமது அரசு என்ற நிலையில் இருந்து படி சமாதான காலத்தின் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மூலம் தன்னை பலப்படுத்த முடியுது. அரசாக இருந்து கடன்கள் நிதியுதவிகள் பெற முடியுது. மிகுதி அவசரத் தேவைகளிற்கு அசையாச் சொத்துக்களை குத்தகைக்கு விட முடியுது முறிகடன் பெற முடியுது. ஒரு துருவமாக இருந்த உல ஒழுங்கு பல துருவமாக மெதுவாக மாறிவரும் நிலையில் சீனா இந்தியா என்பவற்றின் பொருளாதார வழர்ச்சி அவற்றிற்கிடையேயான போட்டிகளையும் சாதாகமாக பயன்படுத்தும் நிலை.

ஈழப்போர் 3 இல அகலகால் வைச்சு மோட்டுச் சிங்களவர்கள் பறிகுடுத்த ஆயுதங்களை வைச்சு ஈழப்போர் 4 அய் எதிர்கொள்ளுவம். மோட்டுச் சிங்களவர்கள் அடுத்த சந்ததி ஆயுதங்களுடன் வருவார்கள் அதை பிறகு அகலகால் வைக்க விட்டு பறிப்பம் பிறகு ஈழப்போர் 5 இக்கு அதை வைச்சு இலங்கை தீவு முழுக்க சில வாரங்களில் பிடிக்கலாம் எண்டு அடுத்த சமாதான காலத்தில முழங்கலாம் காவடி ஆடிக் கொண்டு. ஏன் எண்டால் பிச்சை எடுத்து ஈழப்போர் 4 நடத்தின மோட்டுச் சிங்களவர்கள் ஈழப்போர் 5 இக்கு வேட்டை துப்பாக்கியோடை வரப்போகினம் தமிழர்கள் தேமோபெரிக்க ஆயுதத்தோடை நிக்கப்போயினம். :)

சரி தாயகத்தின் இராணுவ தொழிநுட்ப தேவைகளை விடுவம்.

தனிநாடு தனிநாடு எண்டு தாளம் போட்டுக் கொண்டு காவடி ஆடி தேர் இழுக்கிறது கூட்டம் எவ்வளவு பணத்தை இதுவரை சுயமாக சுகாதார சேவை போன்ற அடிப்படை விடையங்களை உருவாக்க செலவிட்டிருக்கு? பரந்த அளவில் அடிப்படை சுகாதார சேவை ஒருவிடையம். வன்னி மீது வைத்திய சேவைகள் இறுக்கப்பட்டிருந்தாலும் அங்கு இயங்கும் அரச வைத்தியசாலைகளின் பங்கு என்ன அதற்காக சிறீலங்கா அரசு செலவிடும் நிதி எவ்வளவு? அதை மாற்றீடு செய்வதற்கான பொருளாதார தேவை என்ன?

அதற்கப்பால் சிக்கலான விசேட வைத்திய தேவைகளை கைய்யாழுவதற்கான வசதிகளை உருவாக்குவதற்கு எந்தளவு செலவிட்டிருக்கிறார்கள்? பிரிகேடியர் பாலராச் வீரச்சாவு நடந்த பொழுது புலம்பெயர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர் பேட்டியில் கூறியிருந்தார் மிகவும் அடிப்படை வசதிகள் தான் விசேட வைத்திய தேவைகளை கைய்யாளவே இருக்கிறது இதை மேம்படுத்துவது புலம்பெயர்ந்தவர்களின் கடமை என்று.

அதேபோல் புனர்வாழ்வுக்கழகத்தின் வளத் தேவைகள் தெரிந்த ஒன்று. சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் உலக உணவுத்திட்டம் மற்றும் சிறீலங்கா அரசின் நிவாரணங்கள் என்று எந்தளவிற்கு

வெளியுதிவிகளில் வன்னி மக்கள் நம்பியிருக்கிறார்கள். வன்னி மக்களின் சனத்தொகை போன்ற இராணுவப் பெறுமதி கொண்ட தகவல்களையும் வெளியிட வேண்டிய நிலை ஏன்?

இந்தியாவும் வேண்டாம் சர்வதேசமும் வேண்டாம் புலிகள் ஏன் அடிச்சுப் பிடிக்காமல் இருக்கிறார்கள் என்று ஏப்பம் விடும் புலம்பெயர்ந்தவர்கள் விடுவிக்கப்படும் தாயக பிரதேசத்தில் இருக்கும் மக்களை பராமரிப்பதற்கான தேவைகளின் பொருளாதார தார்ப்பரியத்தை புரிவார்களா? மாறாக இறுதி யுத்தத்திற்கு காசு வேண்டினவங்கள் ஏன் அடிக்காமல் பின்வாங்கிறாங்கள் எண்ட கற்பனையில் தான் மிதக்கிறார்கள்.

சரி தாயகத்து தேவைகளை விடுவோம் புலம்பெயர்ந்த நாடுகளில் போராட்டத்தின் நியாயத்தை பரப்புரை செய்வதற்கான பொருளாதாரத் தேவைகள் என்ன?

இன அழிப்பு நிகழுது அதில் இருந்து ஓடித் தப்பி வந்திருக்கிறம் விடுதலைப் போராட்டம் நடக்குது அதை அங்கீகரியுங்கோ என்று கத்திறம் ஆனால் வெளியார் பார்வையில் எமது நடத்தை அப்படியில்லை - put money where your mouth is.

புலம்பெயர்ந்தவர்களை அந்தந்த நாடுகளில் அடையாளப்படுத்துவது அவர்களது கலாச்சார நுகர்வுப் பழக்க வழக்கங்கள் சார்ந்த கடைகள் உணவகங்களுக்கு அப்பால் பொது நோக்கில் கோயில்கள் தான்.

சிறு அளவில் தமிழ்பாடசாலைகள் இருக்கிறது.

புலம்பெயர்ந்த தேசங்கள் எங்கும் இத்தனை ஆடம்பரமான கோவில்களை கட்டியெழுப்ப முடிந்த எம்மால் கேவலம் இந்தனை வருடங்களுக்கு பிறகும் நாம் எதிர் கொண்ட அடக்குமுறைகளை காலனித்துவத்திற்கு முன்னரான எமது சுயாட்சிக்கான வரலாற்று ஆதாரங்களை (ஆயுதப்போராட்ட பக்கம் வேண்டாம் தடை பயங்கரவாத சர்ச்சைகளால்) கொண்ட ஒரு அருங்காட்சியகத்தை (museum) கட்ட முடியவில்லை அதற்கான ஒரு திட்டம் கூட இல்லை.

ஆனால் விசா சிபாரிசு செய்து கூப்பிட்டு பூசாரிகளுக்கு பென்ஸ் கார் வேண்டி கொடுத்துவிட்டு கோயில்களில் தாறதை நக்கி கொண்டு சர்வதேச அங்கீகாரம் இறுதியுத்தம் பற்றி நீட்டி முழக்கிறம்.

மாவீரர் தினம் கொண்டாடிறம் மரத்திலும் அட்டையிலும் "நினைவுக் கல்" செய்து வர்ணம் பூசி நிகழ்ச்சி நடத்திப்போட்டு தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுகிறோம். தாயகத்தில் இறந்த மக்கள் மாவீரர்களுக்காக 1 நிரந்த நினைவாலயத்தை புலம்பெயர்ந்த எந்த நாட்டிலாவது கட்ட முடிந்ததா? இதை புலிகொடி போர்த்து அங்கீகாரம் தடை என்று சர்ச்சைக்குள்ளாக்காது பொதுவானதாக முயற்சிக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றைவிட நாம் அதிகம் நம்புவது மதிப்பதும் செலவிடுதும் இந்து மதத்தையும் அதில் வயிறு வழர்க்கும் பூசாரிகளையும் தான்.

இன்று தேசியம் சார்ந்த ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகள் என்றால் மாவீரர் தினம் பொங்கு தமிழ். இவை 2 உம் சீரியசான நிகழ்வுகள். நிச்சையமாக இவற்றிற்கு செலவிடக் கூடிய பொருளாதாரம் அதிகரிக்கப்பட்டு அவை ஒழுங்கமைக்கப்படும் முறைகள் மெருகேற்றப்பட்டு சிறீலங்கா இவற்றின் மீது பூச முயலும் பயங்கரவாதச் சாயம் முறையடிக்கப்பட வேண்டும்.

அவற்றிற்கு அப்பால் தமிழ்த் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது புலம்பெயர்ந்த நாடுகளில். இது போன்ற மேலும் சீரயஸ் குறைந்த ஆனால் தேசியத்தின் பெயரால் புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றிணைக்கும் சந்தேசமாக கலகலப்பாக இருக்கும் நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட வேண்டும் அவற்றிற்கா நிதிகள் செலவிடப்பட வேண்டும். தமிழ்தேசியம் என்றால் ஒப்பாரியும் அழுகையும் கோசங்களும் என்றிருந்தால் பரந்த அளவில் நம்மவர்களையே உள்வாங்க முடியாது. அதற்கு அப்பால் ஏனைய இனத்தவர்களையும் ஒரு கலாச்சார பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டி போன்ற தளங்களில் உள்வாங்குவது இலகுவாக இருக்கும் கருத்துக்களை பரிமாற அதன் மூலம் உருவாகும் உறவுகள் மூலம் எமக்கான நியாயத்தை எடுத்துரைக்க உதவும்.

புலம்பெயர்ந்தவர்கள் ஊடகத்துறைக்குள் துறைசார் ரீதியில் கல்வி பயின்று சர்வதேச ஊடகங்களிற்குள் புகுவதற்கான புலமைப்பரிசில் திட்டங்கள் தேவை. புலம்பெயர்ந்த நாடுகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தேசியத்தை பலம்படுத்தும் ஆவணங்கள் விபரணங்கள் அறிவூடல் நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்காக உதவி செய்யக் கூடிய நிதியங்கள் உருவாக்கப்பட வேண்டும். திறமை உள்ளவர்களை முழுநேரமாக இயங்குவதற்கு கவரக் கூடி அளவில் எத்தனை தமிழ் ஊடகங்களில் தரமான சம்பள வளங்கப்படுகிறது? இல்லாவிட்டால் தொலைக்காட்சியை ஆரம்பித்துவிட்டு சித்தர்கள் சமியார்களின் விளம்பரக் காசில் இந்தியாவின் சின்னத்திரைகளை போட்டு நேரங்களை நிரப்பிக் கொண்டிருக்க வேண்டியான். புலம் பெயர்ந்தவர்களும் தமது நேரத்தையும் பணத்தையும் இந்த இரண்டிற்கும் செலவிட்டுவிட்டு இடைவேளைகளில் குடிசைக் கைத்தொழில் ஊடகங்களில் எழுதும் பொழுது போக்கு ஆய்வாளர்களின் புண்ணாக்கையும் தவிட்டையும் இரைமீட்க வேண்டியான். எமது பொருளாதர பலங் கொண்டே எமது மனிதவள சீரழிக்கப்படுவதற்கு இதை விட வேறு எதுவும் சிறந்த உதாரணமாக இருக்க முடியாது.

பிரான்சில் இயங்கும் தமிழர் மனித உரிமை நிலையம் (TCHR) மற்றும் தாயகத்தில் இயங்கும் வடக்கு கிழக்கு மனிதஉரிமைகள் செயலகம் (NESoHR) போன்றவற்றிற்கு நிதி செலவிடப்பட்டு அவர்களுது செயற்பாடுகள் விரிவாக்கப்பட்டு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

எமக்கான கொள்கை ஆய்வு மய்யங்கள் தேவை. அதன் மூலம் ஏனைய தேசங்களின் கொள்கை ஆய்வு மய்யங்களுடன் துறைசார் ரீதியில் உறவாட எம்மை தயார்படுத்த உதவும் சந்தர்ப்பங்களை உருவாக்கும்.

சிறீலங்கா புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் உள்ள தூதரங்களிற்கு செலவிடும் நிதி எவ்வளவு. அங்கு எத்தனைபேர் சம்பளத்திற்கு முழுநேரமாக இயங்குகிறார்கள்.

Brussels Washigton போன்ற இடங்களில் lobbying இற்கு எவ்வளவை சிறீலங்கா செலவிடுகிறது. நாம் எவ்வளவை செலவிடுகிறோம்? அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியம் GSP சலுகையை மீளாய்வு செய்ய இருக்குது. அதுக்கு நாம் எவ்வளவு lobbying செய்கிறோம்? அதற்கு எவ்வளவு நிதியை ஒதுக்கியிருக்கிறோம்? வெறும் 1000 டொலராவது? இலவசமாக மின்னஞ்சல்கள் செய்வது தான் அதிகப்படியாக நடக்குது. ஆனால் கோயில்களில் அழிந்து போகும் எமது பொருளாதாரத்துக்க அளவு கணக்கில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளில் தேசியத்திற்கு என்று எத்தனைபேர் முழுநேரமாக இயங்குகிறார்கள். உணர்விருந்து திறமை இருந்து இயங்க முடிந்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய சம்பளத்தை வழங்க முடியுதா?

இப்படி எமது தேவைகளோ எண்ணிலடங்காது எமது நடத்தைக்கும் கோசங்களிற்கு இடையே உள்ள பொத்தல்கள் கேவலமானது. ஆனால் கோடிக்கணக்கில் கோயில்களில் கொட்டிவிட்டு சிறீலங்கா நோக்கியும் சர்வதேசம் நோக்கியும் "இராணுவ நிலை" கட்டுரைகள் எழுதி தமிழீழம் மீட்கிறதுக்கு ஒரு கூட்டம் திரியுது. இதுபோன்ற நகச்சுவைகள் தான் சிங்களமும் எம்மிட எதிர்பார்க்கிறது.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஒரே இனக்குழுமமாக, தமிழர் விடுதலை போராட்டத்துடன் தற்போது இணைந்து செயற்பட மறுக்கும்பட்சத்தில், ஈழத்தமிழனத்தை காப்பாற்ற எதிர்காலத்தில் எவரும் இருக்கமாட்டார்கள். இது நிச்சயம்!!!

உண்மைதான்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இனவாத சிங்கள அரசின் பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் வரைபடங்களை கொண்டு வந்து இணைப்பவர்கள்,

அதே வரைபடங்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்து,

சிங்கள இராணுவம் எங்கே வசமாக வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறது,

அந்த குறியிட்ட இடங்களை அடைய எவ்வளவு நவீன படைக்கலங்களை நகர்த்தியிருக்கும்,

அப்படி நகர்த்திய நவீன படைக்கலங்களில் எவ்வளவை அண்மையில் பறிகொடுக்க வேண்டி வந்திருக்கும்,

அப்படி பறிகொடுத்த அந்த படைக்கலங்கள் எதிர்கால போர்க்களங்களில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் என்ன

என்பதை சிந்திக்க முடிந்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும்!

சிங்களவர்கள் பிச்சை எடுத்தாவது யுத்தம் செய்வது என்று நினைக்கிறார்கள்,

அரசியலில் எதிரும் புதிருமாக செயற்படும் சிங்களவர்கள் கூட தமிழர்களை அழிப்பது என்று வரும் போது ஒற்றுமையாக செயற்படுகிறார்கள்.

ஆனால் தமிழர்களோ மதவாதம், நாத்தீகவாதம், மண்ணாங்கட்டி இவை எல்லாம் பேசி தன்னை பெரும் அறிவாளியாக காட்டும் விளையாட்டிலேயே குறியாக இருக்கிறார்கள்

பல்வேறுபட்ட சிந்தனைகள் ஒரு சமுதாயத்திற்கு தேவைதான் என்றாலும்,

யுத்த காலத்தில், ஒட்டு மொத்தமாக ஈழத்தமிழினத்தின் இருப்பே கேள்விக்குறி ஆக்கப்பட்டிருக்கும் ஒரு காலத்தில்,

கொள்கை வேறுபாடுகளையும் பிரதேச வேறுபாடுகளையும் தனிப்பட்ட துவேசங்களையும் களைந்துவிட்டு,

நாத்தீகன் ஆத்தீகன் எனும் வரட்டு பிடிவாதங்களையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு,

தமிழர்கள் ஒரே இனக்குழுமமாக, தமிழர் விடுதலை போராட்டத்துடன் தற்போது இணைந்து செயற்பட மறுக்கும்பட்சத்தில்,

ஈழத்தமிழனத்தை காப்பாற்ற எதிர்காலத்தில் எவரும் இருக்கமாட்டார்கள். இது நிச்சயம்!!!

இவர்கள் இன்னொன்றையும் மறந்துவிடுகிறார்கள்

அது

யோர்சியா என்கிற அமெரிக்க ஐரோப்ப ஆதரவு உடைய ஒரு நாட்டை

இரண்டு மூன்று நாட்களில் தரைமட்டமாக்கி தன்காலடியில் விழுந்து மன்னிப்புக்கேட்க வைத்துவிட்டது ரசியா...........

ஆனால் உமது போராளிகள்

யோர்சியா அமெரிக்க ஐரோப்பா ரசியா இந்தியா சீனா என எல்லோரும் ஆதரவு வழங்கும் சிறீலங்காவை எதிர்த்து

எமது ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டு இத்தனை வருடமாக....??????

உண்மையில் புல்லரிக்கும் எம்தலைவனை நினைக்கும்போது...............

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை இணைச்சு எனக்கு தெளிவு ஏற்படுத்தியதுக்கு நன்றி,இப்படத்தின் படி பார்த்தால் இராணுவம் கைப்பற்றிய பகுதி ஒப்பீட்டளவில் ஆக்கிரமிப்பு அற்ற பகுதியை விட மிகச்சிறியதே!

மேலேயுள்ள யாழ்ப்பாணமும் மிக மிகச் சிறிய பகுதிதான். 95 ஆம் ஆண்டிலிருந்து இச் சிறிய பகுதியை பல்லாயிரம் படைகளைக் குவித்துப் பாதுகாத்து வருகிறான்.. இன்னமும் ஆக்கிரமிக்க தனது வளங்கள் எல்லாவற்றையும் பாவிக்கிறான்..

சிங்கள அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் மிகத் தெளிவானது.

* பிரதேசங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் தமிழீழ நடைமுறை அரசை இல்லாது ஒழிப்பது.

* தமிழ்த் தேசியம் என்று சிந்திப்பவர்களைக் கூட அழித்து ஒழிப்பது

* நிலத் தொடர்புள்ள தமிழர் தாயகத்தைக் கூறுபோட்டு சிங்களவர்களைக் குடியமர்த்துவது.

* இயலுமான அளவு தமிழரை வெளி நாடுகளுக்கு அனுப்பி மிகவும் சிறுபான்மை ஆக்குவது (உ+ம்: பறங்கியர் இனம் போலாக்குவது)

இதற்குப் பதிலாக தமிழர் செய்வதெல்லாம் வெறும் சொல்லாடல்கள்தான்..

ஓம் ஓம் .........

----

-----

-----

------

............எதிர்பார்க்கிறது.

உங்களை குழப்பினா எனக்கு கோழிக்காலும் பிரியாணியும் கிடைக்கும்.

எலும்பில்லைத் தானே? எலும்பு மட்டுமெனில் இன்னமும் முயற்சித்து சதையுடன் கூடிய கோழிக்கால் கிடைக்க முயற்சி செய்யுங்கள்

.

ஆனபடியாக நாத்திகன் ஆத்திகன் எண்டு வெறும் வரட்டு பிடிவாதங்களை விட்டுட்டு ஒற்றுமையாக ஓ போடுங்கோ ஓசியில வயிறு வழக்கிற கூட்டத்தோடு. அவையின்ரை ஓசியில வயிறு வழக்கிற உரிமையை மறுத்துப் போடாதேங்கோ அது பிறகு மனித உரிமை மீறலாகி போராட்டத்துக்கு சர்வதேச ரீதியில் பாதிப்பு வந்துவிடும். :lol:

ஓ.... புலம்பெயர் நாட்டிலை கோயில் வைத்து நடத்துறது எல்லாம் பிராமணன்... நாங்கள் அவர்களின் கோவணங்களை இலகுவாய் உருவலாம்... :) எண்டு இந்த புண்ணாக்கு சொல்லுது...!!

அவர்களின் கோமணத்தை களட்டுகிறதுக்கும்... அப்படி வயிறு வளக்கிறதை தடுக்கிறதுக்கும் கூட வித்தியாசம் இல்லைபோல... அண்ணைக்கு கோமணம் எண்டா அவ்வளவு சாதாரணம்...

கோயில் வைச்சு வருமானம் பாத்த ஜெயதேவனின் கோயில் ஐயரின் கார் கண்ணாடியை உடைச்சதுக்கு கொலை முயற்ச்சி எண்டு வளக்கு போட்டவை...

அப்படி கோயில் வைத்து மக்களை ஏமாத்தும் ஜெயதேவனை எதிர்க்க முடியாத ஒரு தமிழன் அங்கை வேலை செய்யிற ஐயனை எதிர்க்கிறார்....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை இணைச்சு தெளிவு ஏற்படுத்தினதோட நிக்காம அதற்கு ஒரு பொழிப்புரையும் தந்ததற்கு நன்றி,இப்ப எனக்கு நல்லா விளங்கிப்போட்டுது.ஏனெண்டா நான் பிறக்கிறதுக்கு முதலே 83 இனக்கலவரம் நட்ந்திட்டுது,அதனாலே எனக்கு இந்த வரலாறு எல்லாம் சரியாத்தெரியாது. இருந்தாலும் நீங்கள் சொன்ன தமிழ்தேசியம் பற்றி சிந்திப்பவர்களையே கொல்வார்கள் என்பது சரியாக இருக்காது, நான் நினைக்கிறேன் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக செயற்படுபவர்கள் என்பதை அவசரத்தில் மாறி எழுதிப்போட்டியல் போல?மற்றது இந்த பிரதேசங்களே இல்லாமலே உலகத்தில நடைமுறை அரசு ஒண்டு இயங்கினது அதுதான் பலஸ்தீனம்,அதை ஐ நா உட்பட பல நாடுகள் அங்கீகரித்தும் இருக்கு(29 நொவம்பர் 1947 முதல்),

சிங்களவன் மினக்கெட்டு ஒரு அரை டிக்கெட்டை லண்டனுக்கு அனுப்பிவிட அவன்ற நிகழ்ச்சி நிரல் விழங்காம அது திரும்ப இலங்கைக்கே வந்து சிங்களம் படிச்சு நாடாளுமன்றம் போகப்போறன் எண்டு நிக்கிது.

தமிழன் குட்ட குட்ட குனிபவனல்ல என்பது எதிரிக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரதேசங்களே இல்லாமலே உலகத்தில நடைமுறை அரசு ஒண்டு இயங்கினது அதுதான் பலஸ்தீனம்,அதை ஐ நா உட்பட பல நாடுகள் அங்கீகரித்தும் இருக்கு(29 நொவம்பர் 1947 முதல்),

பிரதேசங்கள் எல்லாம் கைமாறுகின்றது. மேலும் வன்னியில் உள்ள சனத்தொகையை விட கனடாவில் இருக்கும் தமிழர்கள் அதிகமாக இருப்பதால், கனடாவை மையப்படுத்தி மேற்கு நாடுகளில் பாலஸ்தீனம் மாதிரி நடைமுறை அரசைக் கொண்டுவரலாம் என்று சொல்ல வருகிறீர்கள் போலுள்ளது. அந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம் சிங்களவர்கள் வசமாக வாங்கிக்கட்டினம் தமிழர்கள் குளிரூட்டின அறைகளில இருந்து கணனித் திரைகளை பாத்து பொத்தான்களை அமத்தி சிங்களவருக்கு பேதி குடுக்கினம்.

வெறும் வார்த்தைச் சோடினைகள் போராட்டத்துக்கு அபின் போன்றதுதான்!

கோயில்களுக்கு இருக்கும் கொடையர்களின் மிகச்சிறியவீதமே போராட்டத்திற்க்கு இருக்கின்றது.

பணத்துக்கு காய்ந்துகொண்டிருப்பவனின் வாழ்கைகூட கோயிலுக்கு உபகாரம் செய்யும்,

இவர்கள் போராட்டத்துக்கு உபகாரம் செய்ய அத்துணை மனப்பக்குவம் இவர்களுக்கு இருக்க முடியுமா?

புகைக் குச்சியில் இருந்து தண்ணிப் போத்தல்கள் வரைக்கும் தமது வருமானத்துக்கு அடிப்படைத் தேவையாக காட்டும் இவர்களால் போராட்டப் பங்களிப்பு மட்டும் இழுக்கமுடியாத பட்ஜெட்டாகத்தெரியும்.

போராட்டம் பற்றிய அறிவூட்டல்களுக்கு முதல் உண்மையான மனித உணர்வு கொண்டவர்களாக இவர்களின் உணர்வு மாற்றப்பட வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.