Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலை MY PAYPAL AC - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

My paypal is : visjayapalan@gmail,com

இதுவே இறுதி வார்த்தை.

இனி சொல்ல ஒன்றுமில்லை.

நான் தோற்று போய்விட்டேன். 3000 பேர்வரை என்னுடைய நம்பிக்கை அடிப்படையிலான கலை கடனாக பாலை இசைத் தொகுப்பை தரவிறக்கம் செய்துள்ளனர். REMOVED BY POET தரவிறக்கம் செய்த அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

-வ.ஐ.ச.ஜெயபாலன் (நமக்குத் தொழில் கவிதை

********************************************************************************

*

இதற்ககுமேல் எழுதி ஆகப்போவதொன்றுமில்லை. எனினும் கலை இரசிகர்கள்மீது நான் வைத்த நம்பிக்கையை இழக்க விருப்பமில்லை. முதலில் கடனாக தரவிறக்கம் செய்யுங்கள் பாடல்கள் பிடித்துப் பதிவுசெய்துகொண்டால் கடனை செலுத்துங்கள் என்கிற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய விரும்பினேன். (http://www.yarl.com/forum3/index.php?showtopic=43413) விநியோகஸ்தர் மூலம் லாபமீட்டியிருக்க முடியுமானாலும் ஒரு புதிய வரலாற்று மார்க்கத்தௌ உருவாக்க முனைந்தேன். 1000 பேர் தரவிறக்கம் செய்து கொள்வார்கள். 100 பேராவது கவுரவத்துடன் எனது கலைக் கடனை செலுத்த விரும்பி 10 - 20 $ (6 - 12 Euro) பணம் அனுப்புவார்கள் என நம்பினேன். இதனை இக்கடிதமூலம் வலியுறுத்துகிறேன். அதன்மூலம் முதலீட்டுக் கடனில் ஒருபகுதியைச் செலுத்திவிடலாம் என நம்பினேன். இவற்றைவிட இலங்கைத் தமிழ் கலைஞர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இடையில் நம்பகத்தன்மையுள்ள ஒரு உறவை ஏற்படுத்துவதில் முன்மாதிரியாக இருக்கவே விரும்பினேன். இன்றுவரை நான் எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானவர்கள் எனது தொகுப்பை கடனாக தரவிறக்கம் செய்துள்ளனர். ஈசனையும் கவிஞர் வல்வைசாகராவையும்தவிர ஒருவர்கூட கடனைச் செலுத்தவேண்டும் என்று கருதவில்லை. ஈசன் பனமனுப்ப முன்வந்தபோது பிழையான சர்வதேச வங்கி இலக்கத்தை கொடுத்துவிட்டேன். எனவே இதுவரை பணம் எதுவும் என்வங்கிக் கனக்கிற்க்கு வரவில்லை. எனினும் ஈசனுக்கும் வகவிதாயினிக்கும் எனது நன்றிகள்.

நோர்வேயில் இடம்பெற்ற வெளியீட்டுக்கு வந்திருந்தபலர் ஏற்கனவே படல்களை தரவிறக்கம் செய்திருந்தனர். இதனால் நான் குற்றச் சாட்டுகளுக்கு உள்ளாக நேர்ந்தது. இசை தொகுப்பைத் தடயாரித்தது தொடர்பாக இசையமைப்பாளருக்குக்கும் ஒலிபதிவுக்கும் கொடுத்த 150000 ருபா கடனையும் தயாரிப்போடு தொடர்புடைய ஏனைய செலவுகளுக்குமான மொத்தக் கடனையும் அடைக்கும் மாற்று முயற்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன், இதனால் நான் எனது பணிகளை விட்டுவிட்டுத் திரைப்படங்களில் பணியாற்ற நேர்ந்துள்ளது. இன்னும் என்பாடல்களைக் கடனாகப் பெற்ற 2117 பெரில் ஒரு 100 பேராவது நியாயமாகச் செயல்படுவார்கள் கலைஞர்களுக்கும் கலை இரசிகர்களுக்கும் இடையில் நம்பிக்கையின் அடிப்படையில் நான் ஆரம்பித்த ஒரு புதிய திட்டம் வெற்றிபெறும் என நம்புகிறேன்.

2

பாலை பாடல்களைத் தரவிறக்கம் செய்யவும் விபரங்களுக்கும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=43413

உங்களுக்கு பாடல்கள் பிடித்திருந்தால் மட்டும் வசதிஉள்ளபோது உங்கள் அன்பளிப்பை எனது வங்கிக் கணக்கிற்க்கு அனுப்பவும். உங்கள் கரிசனை மேலும் இலக்கியப் பணிகளுக்கு உக்கம் அளிப்பதாக அமையும்.

Bank Adress

Postbanken,

N-0021 Oslo,

Norway.

Shanmugampillai Jayapalan

Bank Account number. 0532 51 18328

Payment from abroad,

use the IBAN number : NO 6105325118328,

.

visjayapalan@gmail.com

00919941484253

அன்புடன்

.ஜெயபாலன

http://www.yarl.com/forum3/index.php?showtopic=43413

பண்டாரவன்னியன் படை நடந்த காடு

பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய கலைஞர்களுக்கு உதவும் என்பதால் சிலவிடயங்கலை பதிவுசெய்ய விரும்புகிறேன், இதுவரை என்னுடைய பாலை இசைத்தொகுப்பை 2210 இசை ஆர்வலர்கள் கடனாக தரவிறக்கம் செய்துள்ளனர். இதனை இணயத்தில் கடனாக வலங்கியதால் எனக்கு வினியோகத்தர்கள் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் எனது கடனை அடைத்திருகப்பதோடு உரிமம் மூலம்மும் மேலதிக பணம் கிடைத்திருக்கும். ஆனால் இணையத்தில் இறக்கிய யாருமே இதுவரை என் கடனை செலுத்த முன்வரவில்லை என்பது நம்ப இயலாமல் உள்ளது. எனது நம்பிக்கைகள் வீண்போய்விட்டது. கடனை அடைப்பதற்க்காக எனது பணிகளை விட்டுவிட்டு திரைப்படத்துறையில் பணிபுரிய நேர்ந்துள்ளமை மனச் சோர்வை கொடுக்கிறது. எல்லாவற்றையும்விட என் படு தோல்வி ஈழத் தமிழ் இசை/ கவிதை ஆர்வலர்களின் நேர்மையை நம்பி எதிர்காலத்தில் கலைஞர்கள் செயல்படக்கூடிய மார்க்கங்களை அடைத்தமைதான் துயரம். பாலையை கடனாகப் பெற்றுக்கொண்ட அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்,

ஜெயபாலன் அண்ணா,

உங்களின் பாடல்களை தரவிறக்கம் செய்துள்ளேன், ஆயினும் இன்னும் பாடல்களை அமைதியாக அமர்ந்து கேட்கும் சூழ்நிலை வரவில்லை ("நாக்க முக்க" பாடல்கள் இல்லாத இரைச்சலற்ற சூழ்நிலை வேண்டும்)

உங்களுக்கு எப்படி பணம் அனுப்புவது? பே-பால் கணக்கு வைத்துள்ளீர்களா? அல்லது வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டுமா?: காசு அனுப்பும் முறையை ஏற்கனவே நீங்கள் சொல்லி இருந்து அதனை சரியாக வாசிக்காமல் உங்களிடம் மீண்டும் கேட்கிறேன் என்றால், தயவு செய்து மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் நிலை மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. எனக்கு ஆற அமர்ந்து கேட்டு பயன்பெறக்கூடிய ஒரு நிலை தற்போது இல்லாத காரணத்தினால் நான் தரவிற‌க்கம் செய்யவில்லை. வல்வைசகாரா அவர்களும் கவிஞருக்கு உதவுவது குறித்து தனிமடலில் தொடர்பு கொண்டிருந்தார். க‌விஞ‌ர் ப‌ய‌ன்பெற்றால் என‌க்கு மிக‌ ம‌கிழ்ச்சியே..! ஆனால் ஒரு ப‌டைப்பை ப‌ண‌த்துக்காக‌ வாங்கி அதைப் படிக்காமல் இருக்க‌ என் ம‌ன‌ம் ஒப்ப‌வில்லை.

க‌விஞ‌ரின் நிலை அறிந்து த‌ர‌விற‌க்க‌ம் செய்த‌வ‌ர்க‌ள் ஒத்துழைக்க‌ வேண்டும். :icon_idea:

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் அண்ணா,

உங்களின் பாடல்களை தரவிறக்கம் செய்துள்ளேன், ஆயினும் இன்னும் பாடல்களை அமைதியாக அமர்ந்து கேட்கும் சூழ்நிலை வரவில்லை ("நாக்க முக்க" பாடல்கள் இல்லாத இரைச்சலற்ற சூழ்நிலை வேண்டும்)

உங்களுக்கு எப்படி பணம் அனுப்புவது? பே-பால் கணக்கு வைத்துள்ளீர்களா? அல்லது வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டுமா?: காசு அனுப்பும் முறையை ஏற்கனவே நீங்கள் சொல்லி இருந்து அதனை சரியாக வாசிக்காமல் உங்களிடம் மீண்டும் கேட்கிறேன் என்றால், தயவு செய்து மன்னிக்கவும்.

அன்புக்குரிய நிழலி,

உங்கள் கடிதம் மகிழ்ச்சி தருகிறது.

என் கவிமனசசு நிறைய உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் மாணவராக இருந்தால் பணம் அனுப்பவேண்டியதில்லை. உங்கள் பணம் நிச்சயமாக நல்ல காரியங்களுக்குப் பயன்படும்.பாலையில் கடன்வாங்கி பணத்தை முடக்கியதாலும் அதை வினியோகத்தருக்கு கொடுக்கமால் கடனாக தரவிறக்கம் செய்ய கொடுத்ததன் மூலமும் கலைஞர்களுக்கும் இரசிகர்களுக்குமிடையில் ஒரு புதிய வழியைத் திறப்பதாக நினைத்தேன். ஏற்க்குறைய 2500 பேர் தரவிறக்கம் செய்தபோதும் இதுவரை கவிதை எழுதும் என்தங்கை ரஞ்சினிமட்டும் 100 யுறோ அனுப்பியுள்ளாள். இனொரு அவுஸ்திரெலிய நண்பர் 100 அவுஸ்திரேலிய டாலர் அனுப்பியிருபதாக அறிவிதுள்ளார்.

நான் தரவிறக்கம் செய்கிறவர்களில் மேற்கு நாடுகளில் வாழ்கிறவர்கள் 5 அல்லது 10$ கட்டணமாக அனுப்புவார்கள் என நம்பினேன். மேற்படி வகைப்படுத்தலில் குறைந்தது ஆயிரம் பெயராவது வருவார்களல்லவா?

நெருக்கடி மிக்க இந்த சூழலில் ஒரு கவிஞனின் உழைப்பையும் அவனது முதலீட்டையும் இலவசமாகப் பெற விரும்பாத உங்கள் மனசு அழகானது. உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

பணம் அனுப்பத் தேவையான விபரங்கள் யாழில் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=43413

Postbanken,

N-0021 Oslo,

Norway.

Shanmugampillai Jayapalan

Bank Account number. 0532 51 18328

Payment from abroad,

use the IBAN number : NO 6105325118328,

.

நான் மாணவன் இல்லை. கடந்த வருடம் கனடாவிற்கு குடி புகுந்த ஒரு குடும்பத்தன், எனவே என்னால் உரிய பணம் அனுப்ப முடியும்.

நான் வழக்கமாக இலங்கைக்கு காசு அனுப்பும் போது, வங்கியினது விபரமும், கணக்கு இலக்கமும் மட்டுமே கொடுப்பேன். IBAN என்றால் என்ன, அதனையும் தரவாக் கொடுக்க வேண்டுமா?

IBN mean International Bank Number.

there is a IBN # for all banks. thats easy way to find the bank by the IBN number. cause there are many banks in same name. ecc.... People Bank, Union bank, federal bank.like that.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மாணவன் இல்லை. கடந்த வருடம் கனடாவிற்கு குடி புகுந்த ஒரு குடும்பத்தன், எனவே என்னால் உரிய பணம் அனுப்ப முடியும்.

நான் வழக்கமாக இலங்கைக்கு காசு அனுப்பும் போது, வங்கியினது விபரமும், கணக்கு இலக்கமும் மட்டுமே கொடுப்பேன். IBAN என்றால் என்ன, அதனையும் தரவாக் கொடுக்க வேண்டுமா?

இது புதிய நடைமுறை எனது வங்கி இலக்கத்தின் முன் நார்வே 61 என சர்வதேசக் குறியீடு இணைத்துள்ளார்கள். இதுஎனது சர்வதேச வங்கிச் சுட்டெணாகும்

நான் முன்னம் பிழையான IBAN

இணைத்து ஈசனை சிரமப் படுதிவிட்டேன். அவர் பணத்தை திருப்பிவிட 20 அவுஸ்திரேலிய டாலர் தண்டம் கடியதாக எழுதியிருக்கிறார். அவருடைய கொடுப்பனவு வந்துசேருமென்று எதிர்பார்க்கிறேன்.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் நிலை மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. எனக்கு ஆற அமர்ந்து கேட்டு பயன்பெறக்கூடிய ஒரு நிலை தற்போது இல்லாத காரணத்தினால் நான் தரவிற‌க்கம் செய்யவில்லை. வல்வைசகாரா அவர்களும் கவிஞருக்கு உதவுவது குறித்து தனிமடலில் தொடர்பு கொண்டிருந்தார். க‌விஞ‌ர் ப‌ய‌ன்பெற்றால் என‌க்கு மிக‌ ம‌கிழ்ச்சியே..! ஆனால் ஒரு ப‌டைப்பை ப‌ண‌த்துக்காக‌ வாங்கி அதைப் படிக்காமல் இருக்க‌ என் ம‌ன‌ம் ஒப்ப‌வில்லை.

க‌விஞ‌ரின் நிலை அறிந்து த‌ர‌விற‌க்க‌ம் செய்த‌வ‌ர்க‌ள் ஒத்துழைக்க‌ வேண்டும். :)

நன்றி.

மருதங்கேணிக்கும் டங்குவாருக்கும் எனது நன்றிகள். வினியோகஸ்தர்களுக்குத் தராமல் இணையத்தில் ஏற்றியதால் ஏழைக் கவிஞனான எனக்கு ஏற்பட்ட நிதி இழப்பு என் பணிகளைப் பாதித்துள்லது. தரவிறக்கம் செய்தவர்கள் கைவிட்டமை என் பணிகளைத்தொடர வேறு வழியில்லாமல் திரைபடம்போன்ற பிற துறைகளில் வேலை செய்ய என்னை நிர்பந்தித்துள்ளது.

இதுதவிர வேறு வருத்தமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் நண்பா

உனது கடிதங்களும் அதற்கான பதில்களையும் பார்க்கும்போது பாடலை தரவிறக்கம் செய்தவர்கள் உனக்கு பணம் தர முயன்றாலும் நீ இலகுவான ஒரு வழியை காட்ட வில்லை என்றே தோன்றுறுகிறது. உனது நண்பர்களே உனக்கு பண உதவி செய்வார்கள். ஒரு 10 பவுணோ அல்லது10 டொலரோ உன் முயற்சிக்கு தர பெரிய பாரமாக இருக்காது எங்களுக்கு. ஆனால் நீ இன்ரநசனல் பாங் நம்பர் அது இது என்று குழப்புகிறாய். இலகுவான வழிகளை கண்டு பிடிக்க வேண்டும். எல்லோரிடமும் பணப்பட்டுவாடா பாங் ஊடாக செய்யும் அறிவு குறைவு. நாங்கள் எப்பொழுதும் உண்டியல் வழியாகவே பணம் அனுப்பி பழக்கமானவர்கள். கிறடிற் காட்டையும் அவ்வளவு சீக்கிரம் இன்ரநெட்டில் பாவிக்க பயம். களவாடி விடுகிறார்கள் கள்வர்கள். எனவே அந்த அந்த நாட்டிலுள்ள உனது நண்பர்களின் நம்பிக்கையானவர் ஒருவருடைய தொலைபேசி இலக்கம் பாங்க் நம்பரை கொடு அந்ந அந்த நாட்டில் என்றால் பாங்குக்கு போறபோதே காசை பயமில்லாமல் போட்டு விடுவார்கள்.

வரிசை கிரமமாக இவ்வளவு செய்தாலே போதும்.

லண்டன் பெயர்............... பாங்பெயர்........... சோட்கோட் ...................... எக்கவுன்ட் நம்பர்....................................

நோர்வே

கனடா

ஜேர்மனி

பிரான்ஸ்

என்று நாடுகளில் உள்ளவர்களை பட்டியலிட்டு தெளிவாக போடு................... காசு வரும்.

இல்லாவிட்டால் நீ சொல்லிக்கொண்டிருக்க வேண்டியது தான். பணம் வராது. லண்டன் நம்பர் இருந்திருந்தால் நானே இவ்வளவுக்கும் எனது பங்களிப்பை செய்திருப்பேன். இன்னும் ஒரு வழி அங்கு இந்தியாவில் நீ இருக்கும் விலாசம் பெயர் இடம் எல்லாம் சரியாக எழுதி போடு அப்படி போட்டால் நண்பர்கள் உண்டியலில் பணம் அனுப்புவார்கள். நீ ஒன்டையும் சீர்மையாக செய்யாமல் மற்றவர்களை நொகாதே.

உனது அன்பான அனஸ்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பாடல்களின் கவிவரிகளைத்தான் வாசித்தேன்.

இப்போதைக்கு தரவிறக்கம் செய்து பாடலை கேட்பதற்கு நேரமில்லாமல் இருக்கின்றது. தரவிறக்கும் செய்யும் பட்சத்தில் நீங்கள் கூறியவற்றை கவனத்தில் எடுத்து செயற்படுவேன்.

poet,

நீங்கள் PAYPAL Account setup செய்வது பணம் அனுப்புபவர்களுக்கு இலகு. அவர்களுக்கு செலவு இல்லை. 10 டொலருக்கு paypal, 65 சதம் வெட்டிக்கொள்ளும். (3.5% + 30 cents)

https://www.paypal.com

Edited by esan

poet,

பணம் வந்துள்ளதா என்று அறியத்தாருங்கள். ( AUD$ 100) இல்லாவிட்டால் அவர்களுடன் தொடர்பு கொண்டு நான் கேட்கலாம். பிந்தவேண்டாம்.

நீங்கள் PAYPAL Account setup செய்வது பணம் அனுப்புபவர்களுக்கு இலகு. அவர்களுக்கு செலவு இல்லை. 10 டொலருக்கு paypal, 65 சதம் வெட்டிக்கொள்ளும். (3.5% + 30 cents)

https://www.paypal.com

சிறிய தொகையை இலகுவாக அனுப்ப PAYPAL சிறந்த முறைதான். அத்துடன் இம்முறை பரவலாகப் பாவிக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிய தொகையை இலகுவாக அனுப்ப PAYPAL சிறந்த முறைதான். அத்துடன் இம்முறை பரவலாகப் பாவிக்கப்படுகிறது.

அன்புக்குரிய அனஸ், ஈசன், இணையவன்,

நான் பாலை இசைத் தொகுப்பை கடனாக மின்வலையில் தரவிறக்கம் செய்யும் திட்டத்தை வாசுகிக்குத் தெரியாமலே ஆரம்பித்தேன். ஐரோப்பாவிலும் கனடாவிலும் வெளியீட்டுவிழாக்கள் நிகத்த அவர் முனைந்தபோதுதான் அது பயனில்லை ஏற்கனவே எல்லோரிடமும் பாடல்கள் இருக்கிறது என்ற சேதி அவரைத் தாக்கியது. நான் வினியோகத்தரிடம் செல்லாமல் risk எடுத்து யாழ்க் களத்துக்கு வந்ததே நவீன சாதனங்களைப் பயன்படுத்தி கலைஞர்களுக்கும் உலகளாவிய தமிழ்க் கலை ஆர்வலர்களுக்குமிடையில் நம்பிக்கை அடிபடையிலான பாலம் ஒன்றை அமைப்பதுதான். இது எதிர்காலத்தின் சிந்தனையாக இருக்கும் என நம்பினேன். இது என் உழைப்பும் வாசுகி கடன் பட்ட முதலீடும் ஆகும். எனக்கு உலகத் தமிழர் மத்தியில் இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் நீண்டகாலத்துக்கு விற்பனையாகக் கூடிய இசைத் தொகுப்பு என்றும், முதல் சுற்றில் இந்திய பணத்தில் 3 - 5 இலட்சம் இலகுவாகத் திரட்டமுடியும் என்றும் வினியோகத்துறை அனுபவஸ்தர்கள் மதிப்பிட்டார்கள். இன்று வினியோகஸ்தர்களும் வாசுகியும் கைவிட்ட நிலையில் தொகுப்பைப் பிரதி எடுக்கவே இயலவில்லை, பாடலை விரும்பித் தரவிறக்கம் செய்கிறவர்கள் தொகை 2500 தாண்டிவிட்டது அவர்கள் எனக்கு 5 - 10$ கடன்பட்டிருக்கிறர்கள் என்பதுதான் இந்த நடைமுறையின் அடிப்படை. இவர்களுள் இலங்கையில் வாழ்கிறவர்களும் மாணவர்களும் வசதியற்றவர்களும் தவிர்ந்த அனைவரும் என் கடனைச் செலுத்துவார்கள் என்று நம்பினேன். பலர் கேலிசெய்தாலும் நான் இன்னும் உங்களை நம்புகிறேன். எதிர்கால தொழில் நுட்ப சாதியக்கூறுகளை உலகத் தமிழ்க் கலைஞர்கள் நம்பிகை அடிப்படையில் பயன்படுத்தி மேம்பட முடியும் என்று நம்புகிறேன். ஒரு கவிஞன் என்கிற வகையில் நாழைய தமிழர்கள் சிந்திக்கிறதை இப்பவே தரிசிக்க விரும்புகிறேன். அதற்கான விலை என்வாழ்வும் என் நிம்மதியுமாக இருந்தபோதும்கூட எதிர்காலத்தின் சினந்தனைகளோடு வாழவே விரும்புகிறேன். நம்பிக்கைகளின் அடிப்படையிலான ஒரு வாழ்வையே எனது பிள்லைகளுக்கும் அவர்கள் தலை முறைக்கும் விட்டுச் செல்ல விரும்புகிறேன். உங்களிடம் நான் எதிர்பார்ப்பதுவும் அதுவே. இதுவும் அத்தகைய ஒரு திட்டம்தான். நம்புகிறேன்.

அனஸ் சொல்லும் வழிமுறைகள் நாட்டுக்கு ஒருவர் இணைப்பாலராக இருப்பது நண்பர்கள் யாராவது முன்வந்தால்தான் சாத்தியம். கனடாவில் இருந்து கவிஞர் வல்வைசாகரா அவ்வண்ணம் ஒரு திட்டத்தை செயல்படுத்த விரும்பினார். அப்படி நண்பர்கள் முன்வந்து தொலைபேசி இலக்கத்தையும் அறியத்தந்தால் மகிழ்வேன்.

ஈசனும் இணையவணும் PAYPAL Account setup பற்றி பேசுகிறார்கள். இது ஆர்வம் தருகிறது. இதுபற்றி இப்பதான் அறிகிறேன். உழைப்பதும் காப்பதும் முன்னர் அம்மவினதும் பின்னர் சகோதரர்களதும் இன்று வாசுகியதும் பணியாகத் தொடர்கிற வாழ்வில் எனக்கு வங்கி நடைமுறைகள் தெரியாமல் போய்விட்டது ஆச்சரியமில்லை. ஈசனும் இணையவனும் எனக்கு PAYPAL Account setup அமைக்க உதவ முடியுமா. ஈசன் என் வங்கிக் கணக்கில் பணம் இருப்பு - 40 குரோணர் என உள்ளது. உங்கள் வங்கியில் விசரித்துப் பாருங்கள். பிழையான இலக்கம் தந்து உங்களைச் சிரமப் படுதியதற்க்கு மன்னியுங்கள். பாலை இசைத் தொகுபிற்க்கு இதுவரை பிராங்பேட்டில் இருந்து கவிதை உலகில் பரீட்சயமான எனது தங்கை ரஞ்சினி அனுப்பிய 100 யூரோ மட்டுமே கிடைத்துள்ளது.

நான் இலகுவில் விரக்தி அடைபவனல்ல. எனினும் கடனும் நம்பிக்கையின் அடிப்படையில் வாசுகியிடம் இனி பணம் அனுப்ப வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டதும, எனது திட்டம் தோற்றுப்போகிற பயம் இவைதான் என்னை அலைக்களிக்கின்றன. இப்போது என் பணிகலை விட்டுவிட்டு திரைப்படங்களில் பணிபுரியும் நிர்பந்ததில் இருக்கிறதும் சோகம்தான்.

அன்புடன்

வ.ஐ.ச.ஜெயபாலன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே ......

உங்களது மனவேதனை எனக்கு புரிகின்றது .

நான் கவிதைகளை அருமையாகத்தான் வாசிப்பேன் , அதிலும் குறிப்பிட்ட ஒரு சிலரது மட்டுமே . அதிலும் நீங்களும் ஒருவர் .

நான் சில பழைய சினிமா பாடல்களை தவிர புதியவற்றை கேட்பது கூட மிக , மிக அருமை . இல்லை என்றே சொல்லலாம் .

ஆதலால் நான் உங்களது பாடலை தரவிறக்கம் செய்யவில்லை .

தரவிறக்கம் செய்தவர்கள் மனச்சாட்சிப்படி நடந்து கொள்வதே , மனிதப் பண்பாக இருக்கும் .

நன்றி தமிழ்சிறி,

பணபிரசினையின் நெருக்கடியைவிட என் நம்பிக்கைகள் தோற்றுப்போனதும் கடன் பழுவால் என் பணிகளை விலக்கித் திரைப்படங்களில் செயற்பட நிர்பந்தம் ஏற்படுள்லமையும்தான் என்னை அலைகழிக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.paypal.com/ இணையத்துக்கு சென்று அதில் உங்கள் 'உண்மையான" தகவல்களை பதிவு செய்து அதில் உங்கள் வைப்பக கணக்கையும் இணைத்து விட்டால் பணம் அனுப்புபவர்களுக்கும், அதை பெறும் உங்களுக்கும் இலகுவாக இருக்கும். அதை விடுத்து வைக்கப கணக்குகளுக்கு அனுப்புவது உங்களுக்கு அனுப்பும் பணத்தை போன்ற இன்னோர் தெகையை வைப்பகங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. உதாரணமாக 10 டொலர்களை அனுப்ப விரும்பும் ஒருவர் 30 டொலர்களை சேவைக்கட்டணமாக வழங்க நேரிடலாம். இதில் நான் ஒரு முறை நன்றாக அனுபவப்பட்டுள்ளேன். 42 டொலர்களை அனுப்ப 35 டொலர்களை சேவைக்கட்டணமாக செலுத்தினேன்.

எனவே பே பல் கணக்கினைத்திறப்பதன் மூலம் நீங்கள் குறிப்பிடத்தக்களவு வெற்றியீட்ட முடியும் என்பது எனது எதிர்பார்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் உங்கள் ஆதங்கம் புரிகிறதுநான் ஆரம்பத்திலேயே சொன்னேன் பாடல்களை தயாரித்த பணத்தினை பொறுவதாக இருந்தால் குறுந்தட்டு வெளியீட்டாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு வெளிடச்சொல்லி. இனி புலம்புவதால் பயன் இல்லை அதுமட்டுமில்லை பணம் அனுப்புவர்களிற்கு நீங்கள் பணம் அனுப்புவதற்காக காட்டும் வழிகள் சிரமமானது. புலம்பெயர்ந்த வாழ்க்கை முறை உங்களிற்கு தெரிநததுதான். பத்து யுரோ என்பது பெரிய விடயம் இல்லை ஆனால்.அதனை அனுப்ப ஒருவர் வங்கிக்கு போய் பத்து யுரோவிற்கு அனுப்பும் கூலியாக இன்னாரு பத்துயுரோவை இழக்க எவரும் விரும்பமாட்டார்கள். அதைவிட நேரம் அந்த இருபது யுரோக்களை விட பெறுமதியானது. எனவே pay pal முறையை செய்துவிட்டு அதன் விபரத்தினை கொடுத்தால் அனைவரும் கணணிக்கு முன்னால் இருந்தே சுலபமாக அலுவலை முடிப்பார்கள்.இல்லாவிடின் நீங்கள் இப்பிடியே புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். நன்றி வணக்கம்.

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் உங்கள் ஆதங்கம் புரிகிறதுநான் ஆரம்பத்திலேயே சொன்னேன் பாடல்களை தயாரித்த பணத்தினை பொறுவதாக இருந்தால் குறுந்தட்டு வெளியீட்டாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு . எனவே pay pal முறையை செய்துவிட்டு அதன் விபரத்தினை கொடுத்தால் அனைவரும் கணணிக்கு முன்னால் இருந்தே சுலபமாக அலுவலை முடிப்பார்கள்.இல்லாவிடின் நீங்கள் இப்பிடியே புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். நன்றி வணக்கம்.

நன்றி. விக்கிரமாதிதியன்களாக பொறுமையாக எனக்ககான பதில்களைச் சொல்லும் நண்பர்களுக்கு நன்றி. இனி முருங்கை மரப்பக்கம் போகாமல் இந்த புதிய திட்டத்தை வெற்றிபெற செய்வதில் முனைப்பாக இருக்கப் போகிறேன். எதிர்காலத்திலும் எனது வெளியீடுகளை இவ்வண்ணமே உங்களுடம் சேர்க்க விரும்புகிறேன். நட்டப்பட்டாலும் தோற்றுப்போக விருப்பமில்லை. தாமதமானாலும் எனது வெற்றி தமிழர் மத்தியில் ஒரு புதிய மரபை உருவாக்கும்.

எனது திட்டம் எதிர்கால தமிழ்க் கலைஞர்களுக்கு உதவியான ஒரு ஏற்பாடு என நம்புகிறேன். இது ஒரு பரிசோதனையே. இது வெற்றிபெறவெண்டும் என்பது என் அத்மார்தமான விருப்பம். எனது மனச் சோர்வில் பண இழப்பைவிட இத்தகைய முன்மாதிரி திட்டம் தோற்றுப் போவது சம்பந்தமான கவலைதான் அதிகமாக உள்ளது.

பாலை இசைத் தொகுப்புக்கான இரண்டாவது கொடுப்பனவு திருமதி கி.கோகிலா அவர்களிடம் இருந்து கிடைத்தது. உங்களுக்கு WESTERN UNION மூலம் பணம் அனுப்பியுள்ளேன் இன்னும் அரை மணிதியாலத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அவர் அறிவித்திருந்தார். தாயார் இறந்த மரணத்துயரின் நடுவிலும் அவர் வெளியில் சென்று பாலை இசைத்தொகுப்புக்காக பணம் அனுப்பியுள்ளமை நெஞ்சைத் தொட்டது.

இந்த திட்டதில் உள்ள திருத்தப் பட வேண்டிய குறைபாடுகள்பற்றி ஈசன், இணையவன், பறவைகள், சாஸ்திரி சுட்டிக்காட்டியுள்ளனர். மண்டையை உடை உடையென்று உடைத்து PayPaul கணக்கு ஆரம்பித்தால் முதல்பெயர் கடைபெயரை பெயரை மாறி எழுதிவிட்டேன். முதல் பெயர் சண்முகம்பிள்ளை கடைபெயர் ஜெயபாலன் என்பதை மாறி எழுதிவிடேன்.

உருபடியில்லாத மனிசன் என்று வாசுகி சொல்லுவது சரிதான். வாழ்க்கைக்கு அடிப்படையான எந்த சின்ன விடயங்களையும் என்னால் கையாள முடியவில்லை. இத்தனை வயசாகியும் முதல் பெயர் கடைபெயர் எப்பவும் தெளிவான புரிதல் இண்றி தப்புத்தப்பாகவே எழுதித் தொலைக்கிறேன். முதல் கடை பெயர்கள் மாற்றி எழுதினால் அது அப்படியே ஓகேயா இல்லையா என்று யாராவது சொல்லமுடியுமா. அல்லது மீண்டும் மண்டையை உடைக்க வேணும்.

எனது பேபோல் கணக்கின் எந்த விபரங்கள் பணம் கைமாற்றுகிறவருக்கு அவசியம் என்பதையும் அறியத்தாருங்கள்.

அந்த கணக்கை மூடி விட்டு அப்படியே இன்னோன்றை சரியாக திறவுங்கள்! அல்லது அவர்களோடு தொலை பேசி மூலம் பேசிப்பாருங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய இசை ஆர்வலர்களுக்கு, நான் இப்பொழுது பேபால் கணக்கு ஆரம்பிதிருக்கிறேன்,

அதன் அணுகு மினஞ்சல் : visjayapalan@gmail.com

உண்மையில் நான் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டனையால்தான் இது சாத்திய மானது.

இதுவரை உங்களில் 3000 பேருக்கும் அதிகமானவர்கள் என்னுடைய பாலை இசைத் தொகுப்பை கடனாக வலை இறக்கம் செய்துள்ளனர். அவர்களுள் மூவர் இதுவரை பனம் அனுப்பியுள்ளனர். அவர்களுள் எனது தங்கை ரஞ்சினி (பிராங்பேர்ட்) பணத்தை நேரடியாக எனது வங்கிக்கணக்கிற்கு அனுப்பினார், இரண்டாவதாகப் பணம் அனுபிய திருமதி. கோகிலா "வெஸ்டேர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்ப மூன்றவது கொடுப்பனவை அனுப்பிய பறவைகள் இலகுவானதும் நவீனமானதுமான "பேபால்" ஊடாக பணம் அனுப்பியுள்ளார். அவர்களை வாழ்த்துகிறேன். பாலையை தரவிறக்கம் செய்த ஏனையவர்களுள் வசதியானவர்கள் உங்களால் இயன்ற கொடுப்பனவை என்னுடைய மின்னஞ்சல் வழி visjayapalan@gmail.com எனது பேபால் கணக்கிற்க்கு அனுப்பி வைக்கும்படி பணிவன்புடன் கோருகிறேன்

அன்புடன்

கவிஞன்

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.