Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நெருக்கடி: பிரிட்டிஷ் வங்கியும் வீழ்ந்தது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்: சர்வதேச வங்கிகளுக்குப் போதாத காலம் இது.

இதோ சிக்கலில் சிக்கி விரைவில் கைமாறப்போகும் இன்னொரு வங்கியின் கதை.

வாஷிங்டன் மியூச்சுவல் வங்கியை விடிவதற்குள் அதன் இயக்குனர், தலைவர், வாடிக்கையாளர்களுக்குக் கூடத் தெரியாமல் வேறு வங்கியிடம் ஒப்படைத்து அதிரடி செய்தது அமெரிக்க அரசு.

இப்போது அமெரிக்காவைப் போலவே பிரிட்டனின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பும் தடுமாறத் துவங்கிவிட்டது.

இங்கும் வங்கித் துறையில் நெருக்கடிகள் ஆரம்பித்துள்ளன. முதல் கட்டமாக பிராட்ஃபோர்டு அண்ட் பிரிக்லி வங்கி மூடுவிழாவுக்குத் தயாராகி வருகிறது.

இந்த வங்கியை வேறு வங்கிக்கு கைமாற்றி விடாமல், அரசுடைமை ஆக்குகிறது பிரிட்டிஷ் அரசு. அதாவது இந்த வங்கியின் சேமிப்புகள், அசையும் அசையா சொத்துக்கள், வைப்புகள் போன்றவற்றை தனித்தனியாக விற்று இழப்பை சரி செய்யப்போகிறது பிரிட்டிஷ் அரசு.

பிரான்ஃபோர்டு அண்ட் பிரிக்லி வங்கி, சொத்துக்களின் மீது கடன் வழங்கும் பணியை பிரதானமாகச் செய்து கொண்டிருந்தது. 200 கிளைகளும், 44 மில்லியன் டாலர் வைப்புத் தொகையும் கொண்ட இந்த வங்கி, பிரிட்டனின் ஒன்பதாவது பெரிய கடன் அளிப்பு வங்கியாகும்.

மிகப்பெரிய நிறுவனங்களின் சொத்துக்களை பிணையமாகக் கொண்டு இந்த வங்கி கடன் வழங்கி வந்தது. ஆனால் அமெரிக்காவின் வீட்டு வசதிக் கடன் அமைப்பில் ஏற்பட்ட கடும் நெருக்கடி பிரிட்டனிலும் எதிரொலிக்க, பிரான்ஃபோர்டு அண்ட் பிரிக்லி வங்கியின் கடன் வழங்கும் திறனும் குறைந்தது. வராக்கடன் அதிகரித்துவிட்டது.

பல்வேறு கடன்களாக 41 பில்லியன் பவுண்ட்கள் (கிட்டத்தட்ட டாலரை விட இருமடங்கு அதிக மதிப்பு மிக்க கரன்ஸி பவுண்ட்) இந்த வங்கிக்கு நிலுவையில் உள்ளன.

இது அந்த வங்கியின் வைப்புத் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிராட்டபோர்டு மற்றும் பிரிக்லியின் நிர்வாகம் மற்றும் சொத்துக்களை வேறு தனியார் வங்கிகளை ஏற்கும்படி பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் பிராட்ஃபோர்டு அண்ட் பிரிக்லிக்கு உள்ள கடன் அளவைப் பார்த்து மிரண்டுபோய் எந்த வங்கியும் இதற்கு முன் வரவில்லை.

இந்நிலையில் அரசே இந்த வங்கியை ஏற்றுக்கொண்டு, அதன் கிளைகளையும் டெபாசிட்டுகளையும் தேவைப்படுவோருக்கு விற்க முடிவு செய்துள்ளது.

அதேபோல சொத்துக்களையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. பொதுமக்களின் அனைத்து வைப்புத் தொகையையும் பாதுகாப்பான வேறு வங்கிக்கு மாற்றித் தரப்படும் என்றும் பிரிட்டனின் கருவூலத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

முன் வந்தது சண்டேன்டர்:

இந் நிலையில் இந்த வங்கியின் 200 கிளைகளையும் டெபாசிட்டுகளையும் 400 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்க ஸ்பெயின் நாட்டு வங்கியான சண்டேன்டர் (ஸன்டன்டெர்) முன் வந்துள்ளது.

தற்போது அரசுடைமையாக்கத்துக்கான வழிமுறைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த வங்கியின் இயக்குநர்களுடன் பேசி வருகின்றனர். இந்த வார இறுதிக்குள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுவிடும் எனத் தெரிகிறது.

பிராட்ஃபோர்டு அண்ட் பிரிக்லியின் இந்த வீழ்ச்சி பிரிட்டிஷ் தொழில் முனைவோருக்கும், வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

700 Billion Dollar Bailout Bill Fails In The House Save Email Print

President Bush and congressional leaders lobbied hard but it wasn't enough and

the House of Representatives has rejected that $700 BILLION dollar plan to bail out troubled Wall Street firms.

Party leaders kept the vote open for an extra period of time -- hoping to

convince some lawmakers to change their votes and pass the bill.

But, it wasn't enough. This comes after hours of debate... because no option looked good. Spend taxpayer money on Wall Street, or take a chance on economic catastrophe.

President Bush and his team plan to meet today to discuss the next steps.

http://www.wifr.com/home/headlines/29897729.html

  • கருத்துக்கள உறவுகள்

நுணா,

அமெரிக்காவில எல்லாம் கவுந்தடிக்குது போல இருக்கே..! மக்கள் நிலமை என்ன? :)

  • கருத்துக்கள உறவுகள்

புஸ்ஸின் தவறு என பல அமெரிக்க நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள். புஸ்ஸை இரண்டாவது தடவை தெரிந்தது தவறு எனவும் நாட்டை குட்டி சுவராக்கியதோடு மட்டுமல்லாமல் அமெரிக்க மக்கள் உலகின் எவ்விடம் போனாலும் எள்ளி நகையாடுகிறார்கள் என்று எனது பல நண்பர்கள் கூறினார்கள். அண்மையில் அமெரிக்க நண்பர் ஒருவர் தனக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த நன் மதிப்பை(?) பற்றி வேலையில் அழாத குறையாக கூறினார். தன்னை (Americans are war monstors) என்று அவுஸ்திரேலிய பெண் கூறியது தான் அவரின் இந்த அழுகைக்கு காரணம்

ஆனால் இம்முறையும் வெள்ளையர்( john macain) தான் அமெரிக்காவின் தலைவராக வேண்டும் என்று பல அமெரிக்கர் நினைக்கிறார்கள் போல உள்ளது. நான்(john macain) தான் குறிப்பிடுகிறேன். அவர் புஸ்ஸை விட பல மடங்கு போரில் ஆசை கொண்டவர். வியட்னாம் சிறையில் பல வருடம் சாத்து வாங்கியவர். புஸ்ஸிற்கு எள்ளளவிலும் குறையாத குணமுடையவர். ஒபாமா வந்தால் ஓரளவுக்கு அமெரிக்காவை பழைய நிலைக்கு கொண்டு வருவார் என்பது புத்தி ஜீவிகளின் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

வங்கிகள் வங்குரோத்து - பங்குச்சந்தை சரிவு - வர்த்தகம் அதளபாதாளத்தில் இப்படியே சிலநாட்களாக செய்திகளில் படிக்கிறோமே !!!

பெரிய பெரிய செல்வந்த நாடுகளுக்கே இக்கதியென்றால் தினமும் போரில் கோடான கோடியை செலவு செய்யும் சுண்டைக்காய் நாடு சிறிலங்காவின் நிலைமை எப்படியாகுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

வங்கிகள் வங்குரோத்து - பங்குச்சந்தை சரிவு - வர்த்தகம் அதளபாதாளத்தில் இப்படியே சிலநாட்களாக செய்திகளில் படிக்கிறோமே !!!

பெரிய பெரிய செல்வந்த நாடுகளுக்கே இக்கதியென்றால் தினமும் போரில் கோடான கோடியை செலவு செய்யும் சுண்டைக்காய் நாடு சிறிலங்காவின் நிலைமை எப்படியாகுமோ?

எல்லாம் நன்மைக்கே

தோள் கொடுக்க ஆளில்லாதபோது........

துரத்தியடித்தால்???

ஸ்ரீலங்காவின் பங்குச்சந்தை சர்வதேச பங்குச்சந்தைகளின் நிலைக்கு வளர்ச்சியடைந்ததல்ல. சர்வதேச பங்குச்சந்தைகளுடனான இணைப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. சர்வதேச முதலீடுகளும் ஒப்பீட்டளவில் குறைவானதே. இதனால் கொழும்புப் பங்குச்சந்தைக்கான நேரடிப்பாதிப்புக்கள் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்திய பங்குச்சந்தை பாதிப்படையும்போது கொழும்புப் பங்குச்சந்தை பாதிக்கப்படலாம்.

கொழும்பின் பொருளாதார மையங்கள் மீது ஏதாவது தாக்குதல்கள் இந்தச்சமயத்தில் இடம்பெற்றால் மட்டுமே ஸ்ரீலங்காவின் பங்குச்சந்தை அதளபாதாளத்துக்குப் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

மறைமுகமான பாதிப்புக்கள் நிறைய உண்டு .குறிப்பாக உலக நாடுகளுக்கு உதவும் பணத்தொகை பற்றி அமெரிக்கா போன்ற நாடுகள் நிச்சயாமாக கருத்தில் எடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பவுண்ஸ் டொலருக்கு எதிராக படு வீழ்ச்சி கண்டுள்ளது.

அமெரிக்காவுக்கு வால் பிடிச்சவை எல்லாம்.. அமெரிக்கா கொடுக்கிற திறவுக்கு ஆடும் பொம்மைகளே..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வங்கிகள் வங்குரோத்து - பங்குச்சந்தை சரிவு - வர்த்தகம் அதளபாதாளத்தில் இப்படியே சிலநாட்களாக செய்திகளில் படிக்கிறோமே !!!

பெரிய பெரிய செல்வந்த நாடுகளுக்கே இக்கதியென்றால் தினமும் போரில் கோடான கோடியை செலவு செய்யும் சுண்டைக்காய் நாடு சிறிலங்காவின் நிலைமை எப்படியாகுமோ?

என்னதான் பஞ்சம் வந்தாலும் விபச்சாரியின் வருமானத்திற்கு பெரிய பாதிப்பு வராது.

உலகநாடுகளைப் பொறுத்தவரையில் இலங்கை ஒரு விபச்சாரியே.

Edited by காட்டாறு

மிகவும் மோசமாக இறுகி வரும் பொருளாதார நிலையால் சிறீலங்காவை விட தமிழர் தரப்பே அதிக பாதிப்புகளை நெருக்கடிகளை எதிர் வரும் மாதங்கள் வருடங்களில் சந்திக்க இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பெரியபெரிய வங்கியள் எல்லாம் கையை தூக்கேக்கை நானும் கையை தூக்கலாம் போலை கிடக்கு confused0006.gif

ஏனெண்டால் உந்த Citi Bank , Barclays Bank காரர் தந்தகாசை கெதியாய் கட்டச்சொல்லி நச்சரிக்கிறாங்கள் குறுக்காலை போவார் :huh:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பெரியபெரிய வங்கியள் எல்லாம் கையை தூக்கேக்கை நானும் கையை தூக்கலாம் போலை கிடக்கு confused0006.gif

ஏனெண்டால் உந்த Citi Bank , Barclays Bank காரர் தந்தகாசை கெதியாய் கட்டச்சொல்லி நச்சரிக்கிறாங்கள் குறுக்காலை போவார் :lol:

அய்...இப்பிடியெல்லாம் பிரச்சனை வருமெண்டு தெரிஞ்சுதான் நான் தாபல் கந்தோரிலை கணக்கு வைச்சிருக்கிறன். காசு இருந்தால் போடலாம். போட்டதை எடுக்கலாம். இல்லாட்டி காசோலையை போட்டிட்டு ஒரு நாலு நாளையாலை காசு எடுக்கலாம். பிரச்சனை முடிஞ்சுது. :huh::wub:

  • கருத்துக்கள உறவுகள்

அய்...இப்பிடியெல்லாம் பிரச்சனை வருமெண்டு தெரிஞ்சுதான் நான் தாபல் கந்தோரிலை கணக்கு வைச்சிருக்கிறன். காசு இருந்தால் போடலாம். போட்டதை எடுக்கலாம். இல்லாட்டி காசோலையை போட்டிட்டு ஒரு நாலு நாளையாலை காசு எடுக்கலாம். பிரச்சனை முடிஞ்சுது.

இங்க தபாற் கந்தோரையும் வங்கியாக்கி விட்டார்களே! நானும் வீட்டு வாடகைக்கும், மின்சாரத்துக்கும், தொலைபேசிக்கும் காசோலை கொடுத்துவிட்டு இப்பதான் காசை தபாற்கந்தோரில வைப்பிலிட்டனான். அதுக்கொண்டும் பிரச்சனை வராதா சாத்திரி!!! :huh::wub:

ஸ்ரீலங்காவின் பங்குச்சந்தை சர்வதேச பங்குச்சந்தைகளின் நிலைக்கு வளர்ச்சியடைந்ததல்ல. சர்வதேச பங்குச்சந்தைகளுடனான இணைப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. சர்வதேச முதலீடுகளும் ஒப்பீட்டளவில் குறைவானதே. இதனால் கொழும்புப் பங்குச்சந்தைக்கான நேரடிப்பாதிப்புக்கள் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்திய பங்குச்சந்தை பாதிப்படையும்போது கொழும்புப் பங்குச்சந்தை பாதிக்கப்படலாம்.

கொழும்பின் பொருளாதார மையங்கள் மீது ஏதாவது தாக்குதல்கள் இந்தச்சமயத்தில் இடம்பெற்றால் மட்டுமே ஸ்ரீலங்காவின் பங்குச்சந்தை அதளபாதாளத்துக்குப் போகும்.

இதைத்தானைய்யா அண்டையில இருந்து இண்டை வரைக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறாங்கள்... அனாலும் சிறிலங்கா முன்னேறிக்கொண்டுதான் போகுது...

நாங்கள்தான் என்னும் நக்கிக்கொண்டு இருக்கிறம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிதிநிலை நெருக்கடி தொடர்பாக ஐரோப்பாவிற்கு எச்சரிக்கை

வீரகேசரி இணையம் - உலக நிதி நெருக்கடி தொடர்பில் அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்துள்ளது போல தன்னாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஐரோப்பா நிரூபித்துக்காட்ட வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கூறியுள்ளார்.

பாரீஸில் ஐரோப்பியத் தலைவர்களுடன் தற்போதைய நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான ஒரு உயர்மட்டக் கூட்டத்துக்கு முன்பாக கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தொமினீக் ஸ்திரொஸ் கான், நெருப்பைத் தாண்டி நிரூபிக்கிற ஒரு சூழ்நிலை தற்போது நிலவுவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவிலே பொருளாதாரத்தை மீட்பதற்காக பல்லாயிரம் கோடி டாலர்களில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது போல ஐரோப்பாவும் ஒருங்கிணைந்த ஒரு அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நடக்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் ஜெர்மனி, பிரிட்டன் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களோடு விவாதிக்கவுள்ள பிரஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோஸி, மொத்த ஐரோப்பாவும் ஒரு பொதுவான நிலைபாட்டை எடுக்க தீவிரமான முயற்சிகள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

The Great Depression was a worldwide economic downturn starting in most places in 1929 and ending at different times in the 1930s or early 1940s for different countries. It was the largest and most important economic depression in modern history, and is used in the 21st century as a benchmark on how far the world's economy can fall. The Great Depression originated in the United States; historians most often use as a starting date the stock market crash on October 29, 1929, known as Black Tuesday. The end of the depression in the U.S. is associated with the onset of the war economy of World War II, beginning around 1939.[1]

The depression had devastating effects both in the developed and developing, largely still-colonized world. International trade was deeply affected, as were personal incomes, tax revenues, prices, and profits. Cities all around the world were hit hard, especially those dependent on heavy industry. Construction was virtually halted in many countries. Farming and rural areas suffered as crop prices fell by 40 to 60 percent.[2][3] Facing plummeting demand with few alternate sources of jobs, areas dependent on primary sector industries such as farming, mining and logging suffered the most.[4] Even shortly after the Wall Street Crash of 1929, optimism persisted. John D. Rockefeller said that "These are days when many are discouraged. In the 93 years of my life, depressions have come and gone. Prosperity has always returned and will again."[5]

The Great Depression ended at different times in different countries; for subsequent history see Home front during World War II. The majority of countries set up relief programs, and most underwent some sort of political upheaval, pushing them to the left or right. In some states, the desperate citizens turned toward nationalist demagogues - the most infamous being Adolf Hitler - setting the stage for World War II in 1939.

...

http://en.wikipedia.org/wiki/Great_Depression

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.