Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராமன் தேடும் சீதை.......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமன் தேடும் சீதை.......

கவிதை.....

மலர்களின் மணம்வீசும்

இளவேனிற் காலத்தில்

இனிய மாலைப் பொழுதொன்றில்

நண்பனின் திருமண அழைப்பிற்கு

தனிமையில் செல்கின்றேன்.....

அழகான மண்டபத்தில்

மிக அழகான சோடினைகள்.....

என் மனதின் மகிழ்ச்சிக்கு

இயற்கையின் அழகுடன்

செயற்கையும் அழகுசேர்க்க

காதலெனும் நினைவு

என் கண்களால் வெளிவந்து

என் பார்வைக்கு இறகுகள்

பலமாக முழைத்துவிட....

தேடினேன் என் சீதையை...!

கண்டு கொண்டேன்

ஓர் அழகை

என் அந்தபுற(ர)த்தில்...!

ஆகா..! என்ன ஆச்சரியம்..

அம் மானின்

அழகில் மயங்கிவிட்டு

அம் மானை எனதாக்க

விழி அம்பை தொடுத்ததும்...

பதிலுக்கு ஓர் அம்பு

பாய்ந்து வருகுறது..!

என் பார்வை அம்புகள்

அவள் அழகை

அலசி ஆராய..

ஆர்ப்பரித்து எழுகிறது

என் மனதின் நினைவலைகள்...

என் பார்வையுடன் மோத

முடியாமல் அவள் முகம் தாள

அமைதியாய் எழுகிறேன்

அவள் அருகில் செல்வதற்காய்...

அருகில் சென்றதும்

அம்மா எனும் குரல் கேட்டு

அதிசயித்துப் பார்க்கிறேன்...!

குட்டியான அழகு மான்

அவள் கொஞ்சலுக்காய் வருகிறது...

கடிந்து கொண்டேன் என்னையே

நான் செய்த தவறுக்காய்...

இருந்தாலும் சொல்கிறேன்

அவள் என் மனதில்

சில கணங்கள்

இருந்துவிட்டாள் சீதையாக...

இப்பொழுது மாறிவிட்டாள்

அந்த குட்டிமானின் அம்மாவாக...

அவள் அழகுச் சிலைதான்

என் ஆராதனைக்குச் சொந்தமல்ல....

அழகைத்தான் ரசிக்கின்றேன்

அடிமனதில் காமம் அற்று...

இனி என்ன மறுபடியும்

தேடும் படலம் ஆரம்பம்..

இந்த ராமனுக்கு ஓர்

சீதை கிடைக்கும் வரை....

இளங்கவி

ராமன் தேடும் சீதை.......

கவிதை.....

மலர்களின் மணம்வீசும்

இனி என்ன மறுபடியும்

தேடும் படலம் ஆரம்பம்..

இந்த ராமனுக்கு ஓர்

சீதை கிடைக்கும் வரை....

இளங்கவி

வாழ்த்துக்கள் இளங்கவி :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன மறுபடியும்

தேடும் படலம் ஆரம்பம்..

தேடல் உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mallikai vaasam

உங்கள் கருத்துக்கு நன்றி, தேடுவதில் தானே வாழ்க்கையின் சுவாரசியம் அடங்கியிருக்கிறது.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nunavillan

மனிதனின் எல்லாவற்றையும் தேடுவதிலேயே வாழ்க்கையை தொலைத்து விடுகிறான். உங்கள் கருத்துக்கு கருத்துக்கு நன்றி.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் எல்லாவற்றையும் தேடுவதிலேயே வாழ்க்கையை தொலைத்து விடுகிறான். உங்கள் கருத்துக்கு கருத்துக்கு நன்றி.

இளங்கவி

கவிதை நன்று

எல்லாவற்றையும் தொலைத்து விட்டயல் போல இளங்கவி கொஞ்சம் வைத்திருங்கள் :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவருக்கு

தொலைப்பதும் அதனைத் தேடுவதும் வாழ்க்கையின் பகுதி நேர வேலைதானே முனிவர்.

இதெல்லாம் வாழ்க்கெல சகஜமப்...பா..! :lol:

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பெயர் தான் .......கண்டதும் காதலோ ......ரசனையோ ? .........பூக்களை கண்டால்

ரசிக்க தானே தோன்றும் எவருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ராமனுக்கு

நம்புகிறோம் கவிஞர் இராமனென்று!!! தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

suvy

நீங்கள் வாழ்த்துச் சொன்னதற்கு மிக்க நன்றிகள்.

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

ராமன் தேடும் சீதை.......

இனி என்ன மறுபடியும்

தேடும் படலம் ஆரம்பம்..

இந்த ராமனுக்கு ஓர்

சீதை கிடைக்கும் வரை....

இளங்கவி

´ஏன் சீதையெல்லாம் தேடுறியள் இளங்கவி. பாவம் சீதை ஏற்கனவே ராமனெண்ட ஒரு ஆணால் நெருப்பில் இறங்கியது காணாமல் இளங்கவியும் சீதையைத் தேடினால் பாவம் சீதை ? :icon_mrgreen:

உங்களுக்கேற்ற பெண்ணைத் தேடுங்கோ கவி. வாழ்த்துக்கள் கவிக்கேற்ற காதலி கிடைக்க. :icon_mrgreen:

ராமனின் கண்ணில்..ல் மலர்ந்த காதலை..லை கவியாக்கி ஈற்றில்..ல் அவ் காதலை தன் அம்பால் மாய்த்து சென்ற விதம் அழகு வாழ்த்துகள்..ள்.. :icon_mrgreen:

இளம்கவி அண்ணா..ணா..!!.. :icon_mrgreen:

இராமனின் கண்ணில் மலர்ந்த காதலில் என் விழிகளை ஒரு நொடி மூடி திறக்க வைத்த..த இராமனின் காதல் வரிகள் இவ் வரிகள்.. :icon_mrgreen:

அழகில் மயங்கிவிட்டு

அம் மானை எனதாக்க

விழி அம்பை தொடுத்ததும்...

பதிலுக்கு ஓர் அம்பு

பாய்ந்து வருகுறது..!

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்முபேபிக்கு

பல நாளாய் காணாமல் இருந்து விட்டு எங்கள் படைப்புக்களுக்கு உங்கள் பதில் அம்புகள் பாய்ந்து வருகிறதே என்...னே அதிசயம்.....! . :wub: நீங்கள் குறிப்பிட்ட அதே வரிகள் தான் நானும் ரசித்து எழுதிய வரிகள்..... :rolleyes: மிக்க நன்றி ஜம்முபேபி ..

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பை

நான் தேடிய சீதை

எண்டு மாத்துங்கோ!

எந்தபுறமும் கண்டதில்லை.

ராமனின் அந்தப்புர(ற)ம்

சோடினை நன்று. சொல்ல வந்த கதையும் நன்று.

கணவனை இழக்காதவரை

திலகத்தை இழக்காதீர்கள்!

திலகாக்களை

இளக்காரமாகவும் நோக்காதிர்கள்.

இளங்கவி இன்னும் வளரட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசகிக்கு

கவிதைக்கு அழகே உவமானம் உவமேயம் தானே அதனால் தான் நான் என்று தலைப்பு வைக்காமல் ராமன் என்று வைத்தேன். மேலும் ''..கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய் அழகு...'' என்று ஒரு பெரிய கவிஞர் சொன்ன வரிகள் தான் நானும் கவிதை எழுதும் போது ஞாபகதில் வரும்.

திருமணம் செய்த பெண்கள் நெற்றியில் திலகமிடாவிட்டால் விரும் பிரச்சனையை உங்கள் கவிதை வரிகளில் சொன்ன விதம் அழகு. மற்றவருக்கு சொந்தமான ..'' பூ..'' என்று தெரியாமல் ரசித்தது இளக்காரமாக யோசித்தது என்று அர்த்தமாகாது அல்லவா.. !

உங்கள் கருத்துக்கு நன்றி வாசகி

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இளக்காரம்" என்பது

இளகிய மனசுக்குகாரருக்கு இல்லாதது.

இளகியமனசுக்காரர்கள்

காதல் வசப்பசப்பட மறுப்பவர்கள்.

இளக்காரமாகப் பார்க்காதீர்களென்று

கவிநாயகன் வர்க்கத்துக்கு சொல்லவில்லை.

வட்ட நிலாத் திலகத்தைக் கண்டு

உதடு சுழிக்கும் பெண்டிருக்கும் வண்டுகளுக்கும் அந்த வாக்கியம்.

உவமானம் உவமேயம் அலங்காரம்தான்.

ஆனால் பாருங்கோ ஏதாவது ஒரு குணம் பொருந்த வேண்டும்.

இந்த நாயகனை இராமன் என்று சொல்ல என்ன பொருந்துகிறது.

கவிதை சொல்லாத அவன் நிறம் பொருந்துகிறதோ. :)

ஆகவேதான் இராமனுடன் பொருதினேன்.

மனதில் பட்டத்தை சட்டென்று சொல்லி விடுபவள் நான்.

சரியெனப் பட்டால் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சினிமாப் பாடல்களுக்கு தனியிலக்கணம் படைத்து வெகுகாலமாயிற்று.

"ஓடும் நிமிடம். உறையும் வருடம்" கேட்க நல்லா இருக்கு. உண்மை இருக்கா?

நீங்கள் சுட்டிய காதல் பாடலை பாருங்கள். காதல் என்றாலே மிகைகள் மிகுந்து விடுவது கண்கூடு. கண்ணுக்கு மை தீட்டாத ஒருத்தி சொல்வதாக கவிக்கோ பாடுகிறார் "வீட்டுக்குள் அவர் இருக்க வாசலில் எதுக்கடி வரவேற்புக் கோலம்"

இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆழமாக அலசிபாருங்கள். கவிதைக்கு எது அழகு என்பது புரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தமிழில் மிகவும் பாண்டித்தியம் படைத்தவர்களாக இருப்பதாக உணர்கிறேன் ஆனால் நானொ இரசாயனவியல் துறையைச் சேர்ந்தவன் தமிழன் என்ற உணர்வாலும், தமிழ் மொழியில் கொண்ட பற்றாலும் எங்கள் உறவுகள் படும் துண்பங்களை எனக்கு தெரிந்த தமிழை வைத்துக்கொன்டு எம் மக்களுக்கு எனது கவிதை வடிவிலோ கதை வடிவிலோ இலகுவான தமிழில் சொல்ல முயற்சித்து அதற்கு ஓரளவு ஆதரவும் கிடைத்ததாக நம்புகிறேன்.

ராமனுக்கும் இந்த கவிதை நாயகனுக்கும் வீரம் பொருந்தியிருக்களாம், குடும்ப பாசம் பொருந்தியிருக்கலாம், நிறம் பொருந்தியிருக்கலாம், ராமன் செய்த குறும்புத்தனங்கள் பொருந்தியிருக்கலாம்... மொத்தத்தில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் தா..னே..!

ஓடும் நிமிடம் உறையும் வருடத்தில் தப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை அதில் கருத்தும் இருப்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது காரணம் காதலியை காணாத அந்த நேரம் உறைந்து போயுள்ளதாக அதாவது அசைவில்லாமல் இருப்பது போன்ற உணர்வு என்பதுக்காகவே அந்தச் சொல்லை கவிஞர் பயன்படுத்தியிருக்கிறார் எனத் தோன்றுகிறது.

கவிதைக்கு பொய் அழகு என்பதை இருவேறு கவிஞர்களின் வரிகளும் சொல்லி நிற்கிறதே...! ஒருவர் கண்ணுக்கு மை அழகு என்பதை மற்றக் கவிஞரின் வரிகள் மறுப்பது போன்றே அமைந்துள்ளன. என் கருத்துப்படி மெய்யும் அழகு, பொய்யும் அழகு அதற்காக பொய்மட்டும் தான் அழகு என்று நான் சொல்ல வரவில்லை.

நான் சொல்லியதில் ஏதாவது தவறு இருந்தால் பொறுத்து கொள்ளவும் எனக்கு உங்கள் அளவுக்கு தமிழில் பாண்டித்தியம் இல்லாததால்...

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

வாசகிக்குத் தமிழ் பாண்டித்தியம் இருந்தாலும் கவிதை அனுபவம் இல்லையென்று தெரிகிறது. தமிழறிவும் கவியறிவும் வெவ்வேறானவை. "ஓடும் நிமிடம், உறையும் வருடம்" என்ற தொடர் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அந்தத் தொடர் சொல்லும் செய்தி கவிதை வாசிப்பவரைச் சென்றடைந்ததா என்பது தான் முக்கியம்.இது மாதிரி அனுபவங்களைக் கண்டவர்களுக்கு இத்தொடர் சொல்வது சட்டெனத் தைத்திருக்கும். வைத்தீஸ்வரன் போன்றோரின் ஆழமான கவிதைகளில் இப்படியான இதயத்தைத் தைக்கும் சொற்றொடர்கள் வருவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் மிகைப் படுத்தப் பட்ட பொய்களை ஆரம்ப நிலையிலிருக்கும் கவிஞர்கள் எதுகை மோனைக்காகப் பயன்படுத்துவது வாசகியின் கருத்துக்கு நியாயம் சேர்க்கிறது. இளங்கவி ஒரு ஆரம்பக் கவிஞர் நிலையைத் தாண்டியவர் என்பது என் தனிப்பட்ட கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி

தமிழில் பாண்டித்தியம் பெற்றவள் அல்லள் நான். ஏறத்தாழ 15 ஆண்டுகளாக தமிழுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்து 3 மாதகாலமாக தமிழுடன் உறவாடுபவள். மேம்போக்காக வாசிக்காமல் ஆழ்ந்து வாசிப்பதால் தோன்றுவதை சொல்லி விடுவேன். இளங்கவிகளுக்கு அத்தைகய கருத்துகள் ஊக்கம் கெடுக்கும் விதத்தில் அமைந்து விடும் அபாயம் உள்ளது என்பதை புரிந்தேன். இனி மேல் இதுபோல் புரியேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Justin

என்னைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கு மிக்க நன்றி வானில் பறப்பதுபோன்று உள்ளது. மிக்க நன்றி Justin

கவிஞர் வைரமுத்துவின் வரிகளால் கவரப்பட்டு அவரைப்போல் கவி எழுத வேண்டும் என்ற ஆர்வத்திலும் எங்கள் தமிழ் மொழியை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாங்கள் மறக்கக்கூடது என்ற தமிழ் பற்றிலும் எழுத தொடங்கியவன். கவிஞர் வைரமுத்துவைப்போல் எழுத முடியாவிட்டாலும் எனது வரிகளையும் பலர் ரசிப்பதையிட்டு மிகுந்த சந்தோசம்.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசகி

பதில் கருத்துக்கு மிக்க நன்றி வாசகி,

உங்கள் எந்தக் கருத்தும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எனது ஊக்கத்தை கெடுக்கவில்லை மாறாக உங்களைப் போல் தமிழில் தேர்ச்சி பெற ஆர்வத்தைத் தூண்டியது. உண்மையான விமர்சனங்கள் நல்ல தான் நட்பை உருவாக்கும் அத்துடன் பிழைகளைத் திருத்தி நல்ல படைப்புக்களைத் தர உதவும். உங்கள் உண்மையான விமர்சனங்களை என்றும் எதிர்பார்க்கிறேன்.

கடந்த மூன்று மாதங்களாகத்தான் தமிழுடன் மீண்டும் தொடர்பு என்றீர்கள், இந்தக் குறுகிய காலத்தில் இத்தனை தேர்ச்சியா....! அதிசயிக்கிறேன்....!

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.