Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர் நலன்-எம்பி பதவியை ராஜினாமா செய்தார் கனிமொழி

Featured Replies

சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக ராஜ்யசபா எம்பி பதவியை கனிமொழி ராஜினாமா செய்துள்ளார்.

சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இது தொடர்பாக நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரு வார காலத்துக்குள் இலங்கையில் தமிழர்கள் மீதான சி்ங்கள ராணுவத்தி்ன் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவிகளை உடனே நிறுத்த வேண்டும், இதை இரு வாரத்துக்குள் செய்யாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது ராஜ்யபசா எம்பிக்களுக்கும் பொறுந்தும் முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார் கனிமொழி. இது தொடர்பாக தனது கடிதத்தை கட்சியின் தலைவரான கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.-Thatstami

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் நலன்-எம்பி பதவியை ராஜினாமா செய்தார் கனிமொழி

சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக ராஜ்யசபா எம்பி பதவியை கனிமொழி ராஜினாமா செய்துள்ளார்.

சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இது தொடர்பாக நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரு வார காலத்துக்குள் இலங்கையில் தமிழர்கள் மீதான சி்ங்கள ராணுவத்தி்ன் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவிகளை உடனே நிறுத்த வேண்டும், இதை இரு வாரத்துக்குள் செய்யாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது ராஜ்யபசா எம்பிக்களுக்கும் பொறுந்தும் முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார் கனிமொழி. இது தொடர்பாக தனது கடிதத்தை கட்சியின் தலைவரான கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://thatstamil.oneindia.in/news/2008/10...mils-issue.html

----------------

என்னமோ நகர்வுகள் நடக்குது. விழிப்பாய் இருந்து.. நடக்கிறதை தமக்கு நல்லதாக்கிக் கொள்வதே ஈழத்தமிழர்களின் புத்திசாலித்தனமாக இப்போது இருக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் பலம்.. விடுதலைப்புலிகள். அவர்களை ஓரங்கட்ட எவர் முயற்சி செய்யினும்.. அது வீண்முயற்சியாகும் என்பதை அறிஞ்சு கொண்டு தமிழக உறவுகளின் துணிச்சல் மிக்க செயற்பாடுகள் ஈழத்தமிழர் நலனில் இன்னும் ஊக்கம் பெற வேண்டும்.

***

பல வேறுபட்ட கொள்கை கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களும் தமிழர்கள் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் இது.

ஆகவே ஆதரவு தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரவணைத்துக் கொள்வோம்!

இப்போதே இந்திய புலனாய்வுத்துறை றோவும் இந்தியாவில் இருக்கும் சிங்கள் இனவாத அரசின் அடிவருடிகள் சிலரும், தமிழக மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஈழவிடுதலைக்கான ஆதரவு அலையை எப்படி திசைதிருப்பலாம் அதற்கு என்ன செப்படிவித்தை காட்டலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருப்பார்கள்.

இன்னும் நமது எதிரிகள் மிகப்பலமாகவே இருக்கிறார்கள். எப்படியாவது நம்மை வீழ்த்திவிட வேண்டும் என்னும் வெறியுடனேயே செயற்படுகிறார்கள்.

இதை புரிந்து கொண்டு, தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால்,

அன்று சோழனின் மரக்கலங்களிலே பட்டொளி வீசிப்பறந்த தமிழர்களின் தேசியக்கொடி ஐ.நா வின் முன்றலிலே பறக்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை!

இது சத்தியம்!!!

Edited by இணையவன்
*** தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டதால் அது தொடர்பான கருத்து நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழர் நலன்-எம்பி பதவியை ராஜினாமா செய்தார் கனிமொழி

சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக ராஜ்யசபா எம்பி பதவியை கனிமொழி ராஜினாமா செய்துள்ளார்.

சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இது தொடர்பாக நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரு வார காலத்துக்குள் இலங்கையில் தமிழர்கள் மீதான சி்ங்கள ராணுவத்தி்ன் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவிகளை உடனே நிறுத்த வேண்டும், இதை இரு வாரத்துக்குள் செய்யாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது ராஜ்யபசா எம்பிக்களுக்கும் பொறுந்தும் முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார் கனிமொழி. இது தொடர்பாக தனது கடிதத்தை கட்சியின் தலைவரான கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://thatstamil.oneindia.in/news/2008/10...mils-issue.html

கனி மொழி அவர்களின் ராஜீனாமவுக்கு ஈழததமிழர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜானா

Rajya Sabha MP Kanimozhi handed over a postdated resignation to the party chief in support of the party's Tamil cause. Kanimozhi's resignation is dated October 29, 2008.

- - dailymirror.lk - -

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாயே! எம்மீது தாங்கள் காட்டும் பரிவுக்கு!!!

இங்கு கலைஞரின் மகள் கனிமொழியின் ராஜினாமாக் கடிதம் பற்றிய தவறான விளக்கம் தரப்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். காரணம் கனிமொழி அவர்கள் பின் திகதியிட்ட (29.10.08) தனது ராஜினாமாக் கடிதத்தை முன்கூட்டியே கட்சித்தலைவரான கலைஞரிடம் கொடுத்துள்ளார். கலைஞரும் அதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தாலே கனிமொழியின் ராஜினாமா செல்லுபடியாகும். அதனால் தற்போது அவர் ராஜினாமாச் செய்துவிட்டார் என்று அர்த்தமில்லை. இருவாரங்களின் பின் நிலைமகளைப் பொறுத்து தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமாச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது கனிமொழி புதிதாக ராஜினாமாக் கடிதம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படாது. ஆனால் தற்போது விபரம் புரியாது வாயாரப் பாராட்டி விட்டு பின் வாய் கிழிய திட்டத் தொடங்குவீர்கள். எனவே எதையும் சரியாகப் புரிந்து கொண்டு செய்வதே நல்லது.

முன்பு J.R அதிபராக வந்தபோது தனது கட்சியின் அனைத்து அமைச்சர்களிடமும் திகதியிடப்படாத ராஜினாமாக் கடிதங்களை வாங்கி வைத்திருந்தது பலருக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கின்றேன்.

வசம்பு சொல்வது சரி

கனிமொழி ராஜினமா செய்யவில்லை. அப்படி ராஜினமா செய்வதாக இருந்தால் அதற்கான கடிதத்தை நாடாளுமன்றத்தின் சபாநாயகரிடமே கொடுக்க வேண்டும்.

கனிமொழி இரண்டு வாரங்கள் கழித்து கொடுப்பதற்கு ஏற்றபடி திகதியை இட்டு ஒரு ராஜினமாக் கடிதத்தை கலைஞரிடம் கொடுத்திருக்கின்றார். இது ஒரு முன்னேற்பாடு. அவ்வளவுதான். இதை முன்மாதிரியாகக் கொண்டு மற்றைய எம்பிக்களும் கலைஞரிடம் பின்தேதியிட்டுக் கடிதத்தை கொடுக்கக் கூடும்.

காலக்கெடு முடித்ததன் பின்பு கலைஞர் இந்தக் கடிதங்களை நாடாளுமன்றத்தின் சபாநாயகரிடம் அனுப்பக் கூடும். அப்படி அனுப்பிய பிற்பாடே இவர்கள் உண்மையாக ராஜினமா செய்திருப்பதாக அர்த்தப்படும்.

அப்ப இன்னமும் 13 நாட்களில

தமிழீழ பிரகடனம்?

புலிகள் நீண்ட கனரக பாச்சல்?

ஓயாத அலைகள் 5?

எல்லாளன் 3?

பூநகரி புயல் 1?

மழை வேற பெய்யத் தொடங்கிவிட்டுது ஆமியும் இனி அரக்க முடியாது ஆப்பிழுத்த குரங்காக.... ம்ம் அறுவடைகள் தொடரட்டும்.

மானாட மங்கையோ மாங்கனி ராத்திரியோ நவராத்திரி

ஈழத்தமிழர்கள் மீது, எங்கள் போராட்ட சக்தியின் மீதும் அன்பும், நம்பிக்கையும் கொண்டவர் கனிமொழி. இன்றைய இந்த எழுச்சியின் ஒரு காரணிகளில் கனிமொழியின் பங்கு முக்கியமானது. எம்மில் பலருடன் எமது போராட்ட நிகழ்வுகள் தொடர்பாக அடிக்கடி விவாதிப்பவர்.

நன்றிகள் கூற வார்த்தைகளே இல்லை.

விடிவு வெகு தூரமில்லை

அய்யா பூசாரி எங்கடை புலம்பெயர்ந்த மந்தைகள் பிளைட் டிகற் போட்டு கூப்பிட்டு விவாதிக்கிறது பறவை முனியம்மாவுடனும் யோதிகாவுடனும் எல்லோ. ஏதாவது ஒரு நிகழ்ச்சி சொல்லுமையா மதிப்புக்குரிய கனிமொழியை அருந்ததி ராய் அப்துல்கலாம் போன்றவர்களை வரவழைத்து எங்கடையள் நிகழ்ச்சி நடத்தியதை?

சொந்த பலவீனங்களை நிவர்த்தி செய்யாது மாற்றவர்களிடம் மாற்றத்தை வேண்டி நிற்கும் வரை விடிவு தூரத்தில் தான். அந்த நிலை நீடித்தால் விடியல் என்பது வெறும் பகல் கனவாக கூட மாறுவதை தடுக்க முடியாது.

தமிழ்நாட்டினதும் இந்தியாவினதும் ஆதரவு இறுதி வெற்றிக்கு தேவை ஆனால் அவை போதுமானது அல்ல. இந்தியாவினதும் தமிழ்நாட்டினதும் ஆதரவு என்பது பேரம்பேசல் மூலம் நிபந்தனைப்படுத்தப்பட்டது தான். எமது சொந்தப் பலம் போல் நிபந்தனையற்ற முறையில் தேசிய தலமைக்கு கிடைப்பதில்லை. இந்தியா உட்பட ஏனையவர்களுடனான பேரம்பேசலில் அதற்கான விலையின் தாக்கத்தை குறைக்க எமது சொந்தப்பலம் பலமடங்காக பல வழிகளில் அதிகரிக்கப்பட வேணும். இந்தா அந்தா என்று அங்கலாய்ப்பதுக்கு இது ஒண்டும் தமிழ் சினிமாவின் இடைவேளைக்கு பின்னரான காட்சி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழிவாழ்க..கருணாநிதி வாழ்க...ஜெயலலிதா வாழ்க..வை.கோ வாழ்க..ராமதாஸ் வாழ்க..திருமா வாழ்க..விஜயகாந்த் வாழ்க.. வேறை எல்லாரும் வாழ்க .. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாமே வாழ்க..கோசம் போட்டு களைச்சுப்போனன் ரீ குடிச்சிட்டுவாறன்

குடிச்சாச்சா? மறுபடி தொடங்குங்க...

என்ன ஒரு நக்கல்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் அரசியல் சதுரங்கம் ஆரம்பமாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

Kanimozhi quits Rajya Sabha over Lankan crisis

Dravida Munnetra Kazhagam Rajya Sabha member Kanimozhi on Wednesday submitted her resignation from the Upper House to party chief and her father M Karunanidhi in line with the decision of an all-party meeting to put pressure on the Centre to call for a ceasefire in Sri Lanka.

Her resignation comes a day after the all-party meeting on the issue of Sri Lankan Tamils passed its resolution that all members of Parliament from Tamil Nadu would quit within a fortnight to press the demand.

Kanimozhi told PTI that it was for the party to take an "appropriate decision at appropriate time" on her resignation.

She said Tuesday's resolution had given two weeks' time to the Centre to take steps to pressurise Sri Lanka for a ceasefire in the Tamil-speaking northern part, where the island army is on a final push against the Liberation Tigers of Tamil Eelam.

Highly placed DMK sources said that as the resolution was applicable to Rajya Sabha members also, Kanimozhi handed over her resignation to Karunanidhi.

While the meeting was attended by the DMK, the Congress, the Left and a few other parties, the principal opposition All India Anna Dravida Munnetra Kazhagam with its ally Marumalarchi Dravida Munnetra Kazhagam, the Bharatiya Janata Party and the Desiya Murpokku Dravida Kazhagam boycotted it, describing the initiative as an "eye-wash".

http://www.rediff.com/news/2008/oct/15mp.htm

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட மறுப்பு..இலங்கையின் உள் விவகாரம் என காங்கிரஸ் கைவிரிப்பு....

வன்னியில' இருந்து மக்களை வெளியேற விடாமல் தடுப்பதாக புலிகள் மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு ...

http://www.dinamalar.com/fpnnews.asp?News_...31&cls=row3

http://www.dinamalar.com/fpnnews.asp?News_...33&cls=row3

கனிமொழி எம்.பி பதவியை இராஜினாமா செய்ய கடிதம் கொடுக்கிறார்!

சிங்கள அரசுக்காக ஆள்கடத்தல்களும் கொலைகளும் செய்து அதற்கு ஊதியமாக

கேடுகெட்ட கருணா சிங்கள இனவாத அரசிடமிருந்து எம்.பி (Malicious Persecutor) பதவி பெறுகிறான்

ஒப்பிட்டுப் பார்த்தேன்!

ஓ! என் ஈழத்தமிழர் சமுதாயமே!!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.