Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுக்கோத்துக்களிடம் ஒரு கேள்வி

Featured Replies

தமிழக மக்கள் தாமாக விரும்பி தமது ஆதரவுகளை தாயக போராட்டத்துக்கு கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். தாயகத்தில போராளிகள் உயிர்களைத் தியாகம் செய்து போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால்...

புலம்பெயர் விசுக்கோத்துக்கள் என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள்?

மோட்டுத்தனமான முறையில் - எழுந்தமான முறையில் அறிக்கைகளை தயாரித்து புலம்பெயர் மக்களிடம் விநியோகம் செய்து வருகின்றார்கள்.

அண்மையில் சுவிஸில் மோட்டுத்தனமான முறையில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் (மேலே படம்) சிறீ லங்கா அரசுக்கு பிரச்சாரத்துக்கு பயன்பட்டது. இதுபோல...

பலப்பல செயல்களை உணர்ச்சிவசப்பட்டு.. திட்டமிட்டு ஆராயாமல் திடீர் திடீர் என்று செய்து வருகின்றார்கள்... இதற்கு ஒரு உதாரணமாக... அஜித் பட புறக்கணிப்பை சொல்லலாம்...

கேள்விகள்:

1. அஜித்துக்கு சொந்தமாக சுய கருத்து கூற உரிமை இல்லையா?

2. ஈழப் போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைவரும் சார்பான கருத்துக்கள் கூறவேண்டும் என்பது விதிமுறையா?

3. தமிழகத்தில் இருப்பவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதற்கு எமக்கு ஏதாவது உரிமை இருக்கின்றதா?

வெளிநாட்டில் இருக்கிற தமிழ் மக்களை அப்பிடிச்செய்... இப்பிடிச்செய் என்று சில விசுக்கோத்துக்கள் எழுந்தமான முறையில் அறிக்கைகள் விட்டு வருவதால்... இதன் மூலம் வரக்கூடிய எதிர்மறையான விளைவுகள் பற்றி நாம் சிந்திச்சு இருக்கிறோமா?

இப்படியான விசுக்கோத்துக்களின் அறிக்கைகள் தாயகபோராட்டத்துக்கு இன்னும் பல நெருக்கடிகளை கொடுக்கக்கூடும் ஒழிய உருப்படியாக எதுவும் செய்துவிடப்போவதில்லை. மாறாக தாயகபோராட்டம் மீது காழ்ப்புணர்வுகளையும் கசப்புக்களையும் தமிழகத்தில் உருவாக்கவே இவை வழிகோலும்..

தாயக போராட்டத்திற்கு ஆதரவு தருபவன் ஆதரவாளனாக இருக்கட்டும். ஆதரவு தராதவன் துரோகியாக இருக்கத் தேவையில்லை. யாரோவாக இருந்துவிட்டு போகட்டும்.

ஏற்கனவே இருக்கும் ஒரு ஜெயலலிதா போதும். மோட்டுத்தனமான முறையில் செயற்பட்டு இன்னும் பல ஜெயலலிதாக்களையும், சுப்பிரமணியம் சுவாமிகளையும் உருவாக்க நீங்கள் உடந்தையாக இருக்காதீர்கள்.

தாயக போராட்டத்திற்கு ஆதரவு சேர்ப்பதற்காக அல்லது விடுதலைப்புலிகளின் நன்மதிப்பை பெறுவதற்காக அல்லது... உணர்ச்சிவசம் காரணமாக உங்கட பாட்டுக்கு பின்விளைவுகள் பற்றி யோசிக்காது விசுக்கோத்து வேலைகள் பார்க்காமல் இருந்தால் தாயக மக்களுக்கு நல்லது.

இப்படிக்கு,

உங்களைப்போன்ற ஒரு விசுக்கோத்து

  • Replies 61
  • Views 7.4k
  • Created
  • Last Reply

தூயவன் உடனடியாக சத்திரசிகிச்சை செய்யவேண்டியுள்ள கட்டத்தை நெருங்கியுள்ளதால் யாழ்களம் சார்பிலாவது உடனடியாக நிதிசேர்த்து செய்யவேண்டிய இடத்தில் உடனே சிகிச்சை செய்யவேண்டியுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***'

தமிழக மக்கள் தாமாக விரும்பி தமது ஆதரவுகளை தாயக போராட்டத்துக்கு கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். தாயகத்தில போராளிகள் உயிர்களைத் தியாகம் செய்து போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால்...

புலம்பெயர் விசுக்கோத்துக்கள் என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள்?

மோட்டுத்தனமான முறையில் - எழுந்தமான முறையில் அறிக்கைகளை தயாரித்து புலம்பெயர் மக்களிடம் விநியோகம் செய்து வருகின்றார்கள்.

அண்மையில் சுவிஸில் மோட்டுத்தனமான முறையில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் (மேலே படம்) சிறீ லங்கா அரசுக்கு பிரச்சாரத்துக்கு பயன்பட்டது. இதுபோல...

Edited by மோகன்

அண்ணா என்ர தாழ்வான வேண்டுகோள்,

விசுக்கோத்து போன்ற வார்த்தைகள தவிர்த்தால் , உங்கள் கருத்து எல்லோரிடமும் செல்ல வாய்ப்புள்ளது,

அன்புடன் எமது கருத்துகளை சொன்னால் தான் ஏற்று கொள்வார்கள், நானும் தவறு விட்டிருக்கிறேன்

****

தமிழக மக்கள் தாமாக விரும்பி தமது ஆதரவுகளை தாயக போராட்டத்துக்கு கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். தாயகத்தில போராளிகள் உயிர்களைத் தியாகம் செய்து போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால்...

புலம்பெயர் விசுக்கோத்துக்கள் என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள்?

கேள்விகள்:

1. அஜித்துக்கு சொந்தமாக சுய கருத்து கூற உரிமை இல்லையா?

2. ஈழப் போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைவரும் சார்பான கருத்துக்கள் கூறவேண்டும் என்பது விதிமுறையா?

3. தமிழகத்தில் இருப்பவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதற்கு எமக்கு ஏதாவது உரிமை இருக்கின்றதா?

வெளிநாட்டில் இருக்கிற தமிழ் மக்களை அப்பிடிச்செய்... இப்பிடிச்செய் என்று சில விசுக்கோத்துக்கள் எழுந்தமான முறையில் அறிக்கைகள் விட்டு வருவதால்... இதன் மூலம் வரக்கூடிய எதிர்மறையான விளைவுகள் பற்றி நாம் சிந்திச்சு இருக்கிறோமா?

இப்படியான விசுக்கோத்துக்களின் அறிக்கைகள் தாயகபோராட்டத்துக்கு இன்னும் பல நெருக்கடிகளை கொடுக்கக்கூடும் ஒழிய உருப்படியாக எதுவும் செய்துவிடப்போவதில்லை. மாறாக தாயகபோராட்டம் மீது காழ்ப்புணர்வுகளையும் கசப்புக்களையும் தமிழகத்தில் உருவாக்கவே இவை வழிகோலும்..

தாயக போராட்டத்திற்கு ஆதரவு தருபவன் ஆதரவாளனாக இருக்கட்டும். ஆதரவு தராதவன் துரோகியாக இருக்கத் தேவையில்லை. யாரோவாக இருந்துவிட்டு போகட்டும்.

ஏற்கனவே இருக்கும் ஒரு ஜெயலலிதா போதும். மோட்டுத்தனமான முறையில் செயற்பட்டு இன்னும் பல ஜெயலலிதாக்களையும், சுப்பிரமணியம் சுவாமிகளையும் உருவாக்க நீங்கள் உடந்தையாக இருக்காதீர்கள்.

தாயக போராட்டத்திற்கு ஆதரவு சேர்ப்பதற்காக அல்லது விடுதலைப்புலிகளின் நன்மதிப்பை பெறுவதற்காக அல்லது... உணர்ச்சிவசம் காரணமாக உங்கட பாட்டுக்கு பின்விளைவுகள் பற்றி யோசிக்காது விசுக்கோத்து வேலைகள் பார்க்காமல் இருந்தால் தாயக மக்களுக்கு நல்லது.

இப்படிக்கு,

உங்களைப்போன்ற ஒரு விசுக்கோத்து

முரளி,

மாற்று கருத்துகள் மீதான சகிப்புத்தன்மையோ அல்லது அவ்வாறு கூறுபவர்களுக்கு இருக்கின்ற கருத்துச் சுதந்திர உரிமையை மதிக்கும் எண்ணமோ இல்லாத சமூகத்திடம் இந்த கேள்விகளை வைக்கின்றீர்கள். இனி பாருங்கள் இதனையே சாக்காக வைத்து தம்மை பெரும் தமிழ் தேசிய வாதிகளாக காட்ட பலர் வருவினம். நீங்கள் கூறிய விடயங்களுக்கு பதில் எழுதி ஆரோக்கியமான விவாதம் நடத்தாமல் உங்களை துரோகியா இல்லையா என்பதில் விவாதம் நடத்திவினம்

உங்களின் சில கேள்விகளில் எனக்கு சில மாற்று கருத்து அல்லது வேறு கேள்விகள் இருப்பினும் உங்களின் கேள்விகள் நிச்சயம் நியாயமானவை

1. அஜித்துக்கு சொந்தமாக சுய கருத்து கூற உரிமை இல்லையா?

இது யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்களுக்கும் பொருந்தும் தானே? :)

யாழ் களத்தில் உள்ளவர்களுக்கு சொந்தமாக கருத்து கூற உரிமையில்லையா என்றும் கேள்விகள் வரலாமே?

அஜித் தாராளமாக சுய கருத்தை சொல்லட்டும் அதற்கு அவருக்கு சுதந்திரம் உண்டு. நாங்கள் அதில் தலையிட முடியயாது எற்றுக் கொள்கிறோம். அதே போல அவர் படங்களை புறக்கணிப்பது என்ற முடிவு எடுத்து கருத்து ஒன்றை கூறித்தான் உள்ளார்களே தவிர மிரட்டவில்லை. விரும்பியவர்கள் புறக்கணிக்கலாம். விருப்பமில்லாதவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். இதுவும் ஒவ்வொருவரின் சுதந்திரம் என்று நினைக்கிறேன்.

இதற்கு மேல் உங்கள் சுதந்திரத்தில் தலையிட விரும்பவில்லை நன்றி :wub:

முரளி

உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகின்றது. நீங்கள் இணைத்த விடயத்தின் பின் நடந்தவற்றையும் நீங்கள் அறிந்தால் இன்னும் கோபப்படுவீர்கள். இவ்விடயம் பற்றி சிங்கள அரசின் இணையத்தளம் கண்டித்து எழுதியிருந்தது பழைய கதை. ஆனால் இங்குள்ள பிரபல பத்திரிகையான 20 Min என்ற பத்திரிகை இந்நிகழ்ச்சியை வழங்கியவர்களிடம் இதுபற்றி அபிப்பிராயம் கேட்டது. அப்போது அவர்கள் கொடுத்த பொறுப்பான பதில்கள் புல்லரிக்க வைக்கின்றது.

தமது பிள்ளைகள் தாமாகவே இந்நிகழ்வை நடாத்தினார்களாம். அதுபோல் தமது பிள்ளைகளை தாம் இப்படியான நிகழ்வுகள் மூலம் போராட்டத்திற்கு அவர்களை தயார் படுத்துகின்றார்களாம். அப்போது பத்திரிகை நிருபர் இப்படியான ஆயுதக்கலாச்சார நிகழ்வுகள் எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு பாதிப்புகளை உண்டாக்குமல்லவா எனக் கேட்டபோது. பொறுப்பானவரின் பதில் எங்கள் தெய்வங்களே ஆயுதங்களுடன் தான் காட்சியளிப்பார்கள். அதனால் இது எமக்கு சாதாரணமான நிகழ்வுகள் தான். இப்போ எனக்கு பயமாக இருக்கின்றது காரணம் சமீபத்தில் எங்கள் பாடசாலைத் தமிழ் மாணவர்கள் 5 பேர் சேர்ந்து ஒரு இளம் பெண்ணைக் கடத்தி மிருகத்தனமாக கற்பழித்தார்கள். தற்போது அனைவரும் கைதாகியுமுள்ளார்கள். சிலவேளை இதுபற்றி கேட்டிருந்தால் எமது புராணக் கதைகளில் இதுவும் சாதாரண நிகழ்வுகள் தான் மகாபாரதத்தில் ஒரு பெண்ணை 5 பேர் வைத்திருந்து இருக்கின்றார்கள் என்று கூறினாலும் கூறியிருப்பார்.

இறுதியாக 20 Min பத்திரிகை போட்ட தலையங்கம் "சுவிசில் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் புலிகளுக்கு உதவுகின்றார்கள்" என்று. அத்துடன் இப்படியான செயற்பாடுகளை கண்டித்தே விமர்சனமும் செய்திருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ர சுதந்திரத்தையும் அல்லாரும் மதிக்கோணும்.. ஆமா சொல்லிட்டன்..! :)

அடப்பாவிகளா... இப்பிடியும் விசுக்கோத்துகள் இருக்கா..??! :):(

இது யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்களுக்கும் பொருந்தும் தானே? :)

யாழ் களத்தில் உள்ளவர்களுக்கு சொந்தமாக கருத்து கூற உரிமையில்லையா என்றும் கேள்விகள் வரலாமே?

அஜித் தாராளமாக சுய கருத்தை சொல்லட்டும் அதற்கு அவருக்கு சுதந்திரம் உண்டு. நாங்கள் அதில் தலையிட முடியயாது எற்றுக் கொள்கிறோம். அதே போல அவர் படங்களை புறக்கணிப்பது என்ற முடிவு எடுத்து கருத்து ஒன்றை கூறித்தான் உள்ளார்களே தவிர மிரட்டவில்லை. விரும்பியவர்கள் புறக்கணிக்கலாம். விருப்பமில்லாதவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். இதுவும் ஒவ்வொருவரின் சுதந்திரம் என்று நினைக்கிறேன்.

இதற்கு மேல் உங்கள் சுதந்திரத்தில் தலையிட விரும்பவில்லை நன்றி :wub:

அஜித் தான் ஏன் கலந்து கொள்ள வேண்டுமென்ற கேள்வியையே எழுப்பியுள்ளாரே தவிர, தமிழ்த் திரையுலகம் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்கவில்லை. இது அவரின் தனிப்பட்ட சுதந்திரம். அதுபோல் அஜித்தின் படத்தை விருப்பமில்லாதவர்கள் பார்க்காமல் விடலாம். ஆனால் அடுத்தவர்களை பார்க்க வேண்டாமெனத் தடுப்பது எப்படி தனிப்பட்ட சுதந்திரம் ஆகும்??

நிழலி குறிப்பிட்டது போல் நிஜங்களை ஆராயாமல் அடுத்தவனை துரோகிகளாக்கி தம்மை தேசியவாதிகளாகக் காட்டுவதையே பலர் இங்கு செய்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

**** முரளியிடம் சில கேள்விகள்:

அஜித் **** படங்களை நாங்கள் பார்த்தே ஆக வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கா?

தனது கருத்தை கூற அஜித் க்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை எங்களுக்கும் உண்டு?

தமிழகத்தில் உள்ள அனைவரும் எங்கள் தமிழரின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று சட்டம் இல்லை............ஆனால் சோற்றை தின்று....தமிழனுக்கு பிறந்த எல்லாரும் தமிழர் போராட்டதை ஆதரிக்க வேண்டும் என்பது மனசாட்சி....

அஜித் படங்களை நாம் புறக்கணிப்பதால் நமக்கு என்ன எதிர்மறையான விடயங்கள் நடக்க போகின்றது? 3 மணி நேரமும் காசும் மிச்சம்.

முரளி (நீர்தான்), ஜெயலலிதா, சுப்பிரமணிய சுவாமியையும் நாங்கள் உருவாக்கவில்லை...அவர்களின் பிறப்பு அப்படி.....

விசுக்கோத்து என்று சொல்லியிருக்கும் நீங்கள் இதனால் வரும் பின் விளைவுகளை சிந்தித்தீர்களா...

வீட்டு எசமானுக்கு நாய் எவ்வளவு விசுவாசம் காட்ட வேண்டுமோ.. அவ்வளவு விசுவாசத்தை அஜித் தமிழருக்கு காட்ட வேண்டும்.

உங்கள் கேள்விகள்:

1. அஜித்துக்கு சொந்தமாக சுய கருத்து கூற உரிமை இல்லையா?

2. ஈழப் போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைவரும் சார்பான கருத்துக்கள் கூறவேண்டும் என்பது விதிமுறையா?

3. தமிழகத்தில் இருப்பவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதற்கு எமக்கு ஏதாவது உரிமை இருக்கின்றதா?

என் பதில்கள்

1. எவரும் எவரையும் மிரட்டவில்லை. அஜித் படங்களை புறக்கணிக்க வேண்டுகோள் மாத்திரமே விடுக்கப் பட்டுள்ளது. அதனை ஆமோதிப்பவர்கள் போகாமல் விடுவார்கள். யாராவது போனால், அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். அப்படி போனவர்களை துரோகிகள் என்று யாராவது கூறின் அது தவறு (DVD யில் படம் பார்பவர்களை என்ன செய்வது?)

2. விதி அல்ல. மாற்றுகருத்துள்ளவர்களுக்கு புரிய வைக்க முயலலாம். மாறாவிடின், விட்டுவிட வேண்டியது தான். ஆதரவு தர ஆயிரம் பேரென்றால், எதிர்க்க நூறாவது இருப்பது இயற்கை.

3. யாரும் அறிவுரை கூற வில்லை. வேண்டுகோள்களும், கோரிக்கைகளுமே விடப்படுகின்றது. தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்

-நிழலி-

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ சொல்லுகின்றீங்க எனக்குமட்டும் ஒன்றும் புரியுதில்லை ஏன்?

நிழலி குறிப்பிட்டது போல் நிஜங்களை ஆராயாமல் அடுத்தவனை துரோகிகளாக்கி தம்மை தேசியவாதிகளாகக் காட்டுவதையே பலர் இங்கு செய்கின்றார்கள்.

துரோகி என்று கூறிய கருத்துக்களை விட , துரோகியாக பட்டம் கொடுக்கிறார்கள் எண்டு புலம்பி, அடுத்தவனுக்கு தேசியவாதி பட்டம் கொடுக்கிற கருத்துக்கள் மிக அதிகம்

Edited by பல்லவன்

  • கருத்துக்கள உறவுகள்

வால் அறுந்த நரி ஒண்டு வால் இல்லாமல் திரிய வெக்கப்பட்டு சொல்லிச்சாம் வால் அறுத்தா கடவுளைப்பாக்கலாம் எண்டு,இதை நம்பி வால் அறுத்தா உங்கட மூஞ்சில நீங்களே காறி உமிழ்றது மாதிரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜித் அல்லது அர்ஜுன் அவர்கள் ஈழதமிழர்பிரச்சனையில் சம்பந்தப்பட விருப்பமில்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானே?

குரங்கிட்டை மூத்திரம் கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பாயுமாம்

தம்பி மாப்பு! நரம்பில்லாத நாக்கால் நாலுபக்கமும் வாதாடலாம் ஆனால் நியாயம் எண்டு ஒண்டு இருக்கு :(

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ சொல்லுகின்றீங்க எனக்குமட்டும் ஒன்றும் புரியுதில்லை ஏன்?

:(:D:)

மாற்றுக்கருத்துக்கும் விசக்கருத்துக்கும் வித்தியாசம் உள்ளது.

ஒரு நியாயமான போராட்ட முன்னெடுப்புகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்து அந்த போராட்டத்தை மேலும் வலுவாக்கும் வண்ணம் தமது கருத்துக்களை வைப்பது மாற்றுக்கருத்து.

அதை விடுத்து எங்கோ எவனோ சாகிறான் அதற்காக நாம் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்ற ரீதியில்

கருத்துக்கள் வைத்தால் அவை மாற்றுக்கருத்துக்கள் அல்ல. அவை தமிழர்களின் எழுச்சியையும் விழிப்புணர்வையும்

திசை திருப்பும் விசக்கருத்துக்கள்.

இது போன்ற கருத்துக்களை வைப்பதற்கு இவர்கள் இந்திய புலனாய்வுத்துறையினால் தூண்டப்பட்டிருக்கவும் சந்தர்ப்பம் உண்டு

நான் இனவாதத்தில் நம்பிக்கை இல்லாதவன் மட்டும் அல்ல, அப்படி இனவாதம் பேசுபவர்களை பார்த்து அருவருப்பும் அடைபவன்.

ஆனாலும் இன்று டெல்லி சவுத் புளொக்கில் இருந்து ஈழவிடுதலை போராட்டத்திற்கு எதிராக மிகவும் மோசமான சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கும்

திரு. நாராயணன், திரு. மேனன் போன்ற மலையாளிகள் அதே மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட அஜித் போன்றவர்களை தங்கள் பக்கம் இழுப்பது இலகுவாகவே இருக்கும் என்பது ஒரு நியாயமான சந்தேகம்.அஜித்துக்கு ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் இருப்பதால், தமிழர்களிடையே ஈழவிடுதலை பற்றிய ஒன்றுபட்ட கருத்து ஏற்படுவதை குழப்பியடிக்க அஜித் இவர்களுக்கு மிகவும் பயன்படுவார்.

மாற்றுக்கருத்து, மண்ணாங்கட்டி என்ற பெயரில் தான் இந்திய புலனாய்வுத்துறை தமிழர்களிடையே பல் வேறு இயக்கங்களையும் குழுக்களையும் ஏற்படுத்தி ஈழவிடுதலையை சிதைக்கும் தனது சதிவேலையை தமிழர்களை வைத்தே கடந்த 25 வருடங்களாக செயற்படுத்தி வருகிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது

விசக்கருத்துக்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் அவை வளர்ந்து விருட்சமாகி உன் தோட்டத்து பயிரை எல்லாம் தம் விசக்காற்றால் நச்சாக்கிவிடும். அப்போது நீ அழுது புரள்வதால் உன் அழிவை தடுத்திட முடியாது

அதேநேரத்தில் வேற்றுமொழி பேசும் நடிகர் என்ற அடிப்படையில் ஒருவர் மீது காழ்ப்புணர்வு கொள்வதும் அநாகரீகம். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

ஆஹா அண்ணாமார்... அக்காமார் டபிள் மீனிங், ரிபில் மீனிங்கில எல்லாம் கருத்து எழுதி என்ன புலகாங்கிதம் அடையச்செய்து போட்டீங்கள். எண்ட மம்மி கூப்பிடிறா.. கம்பியூட்டரில கனநேரமா விளையாடிக்கொண்டு இருக்கிறனாம். வந்து அம்புலி மாமா கார்டூன ரீவியில பார்க்கட்டாம் எண்டு. அப்ப மிச்சம் நாளைக்கு ஆராய்வம் என... ? உங்கட அம்மாமார் கனநேரம் உதுக்க நிண்டு மினக்கட்டால் ஒண்டும் சொல்லிறது இல்லையோ? வீடுகளில பேச்சு விழாதோ?

அப்ப நான் வரட்டா...

  • கருத்துக்கள உறவுகள்

அஜித் அல்லது அர்ஜுன் அவர்கள் ஈழதமிழர்பிரச்சனையில் சம்பந்தப்பட விருப்பமில்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானே?

குரங்கிட்டை மூத்திரம் கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பாயுமாம்

தம்பி மாப்பு! நரம்பில்லாத நாக்கால் நாலுபக்கமும் வாதாடலாம் ஆனால் நியாயம் எண்டு ஒண்டு இருக்கு :)

குமாரசாமி தாத்தா, உங்களின் தத்துவம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :(

இனப்போரில் நடுநிலமை பேணுபவன் இனத்துரோகியென்பதற்க்கு மாற்றுக்கருத்து இல்லை. :(

அஜித் அல்லது அர்ஜுன் அவர்கள் ஈழதமிழர்பிரச்சனையில் சம்பந்தப்பட விருப்பமில்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானே?

குரங்கிட்டை மூத்திரம் கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பாயுமாம்

தம்பி மாப்பு! நரம்பில்லாத நாக்கால் நாலுபக்கமும் வாதாடலாம் ஆனால் நியாயம் எண்டு ஒண்டு இருக்கு :(

கு.சா

அஜித்தும் அர்ஜுனும் தங்களை எதிர்வரும் நவ1ம் திகதி திரையுலகம் நடாத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விட்டவர்களிடம் தானே இதனை தெரிவித்துள்ளனர். இதை அவர்கள் என்ன பத்திரிகை நிருபர்களை கூட்டியா தெரிவித்தார்கள். தற்போது அஜித்தின் "ஏகன்" திரைப்படம் வெளிவர இருப்பதால் அஜித்திற்கு வேண்டாதவர்கள் இதனை ஊதிப் பெரிதுபடுத்தியுள்ளனர். இப்படியான விடயங்களை கண்டு கொள்ளாமல் விடுவதே எமக்கு அழகு. அஜித்தும் அர்ஜுனும் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் விடுவதால் எமக்கு ஒரு நட்டமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா அண்ணாமார்... அக்காமார் டபிள் மீனிங், ரிபில் மீனிங்கில எல்லாம் கருத்து எழுதி என்ன புலகாங்கிதம் அடையச்செய்து போட்டீங்கள். எண்ட மம்மி கூப்பிடிறா.. கம்பியூட்டரில கனநேரமா விளையாடிக்கொண்டு இருக்கிறனாம். வந்து அம்புலி மாமா கார்டூன ரீவியில பார்க்கட்டாம் எண்டு. அப்ப மிச்சம் நாளைக்கு ஆராய்வம் என... ? உங்கட அம்மாமார் கனநேரம் உதுக்க நிண்டு மினக்கட்டால் ஒண்டும் சொல்லிறது இல்லையோ? வீடுகளில பேச்சு விழாதோ?

அப்ப நான் வரட்டா...

தம்பிராசா? இஞ்சை என்ன பாலர் வகுப்பே நடக்குது? :)

கொம்மாட்டை சொல்லி சோத்திலை கொஞ்சம் உப்பை கூட போட்டு சாப்பிடு ராசா? அப்பவாவது.........???????????????? :(

  • கருத்துக்கள உறவுகள்

நடுனிலமை எண்டா என்ன? சிங்கள பாதுகாப்பு இணையத்தை வெட்டி ஒட்டிப்போட்டு அதுதான் சரி எண்டு வாதிடுறதோ?

அஜித் அல்லது அர்ஜுன் அவர்கள் ஈழதமிழர்பிரச்சனையில் சம்பந்தப்பட விருப்பமில்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானே?

குரங்கிட்டை மூத்திரம் கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பாயுமாம்

தம்பி மாப்பு! நரம்பில்லாத நாக்கால் நாலுபக்கமும் வாதாடலாம் ஆனால் நியாயம் எண்டு ஒண்டு இருக்கு :(

:(:):D:lol:

இப்படி எல்லாம் பழமொழி இருக்கா? என்னால் எனது சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.