Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்

Featured Replies

சிங்களவன் எல்லாம் கெட்டவனும் அல்ல.. தமிழன் எல்லாம் நல்லவனும் அல்ல.

தத்துவம் 10-2008

:rolleyes::rolleyes:

சிங்களவன் இருக்கும் இடத்தில் நம்மவர் இன்று இருந்திருந்தால் கொழும்பில் ஒரு சிங்களவன் வந்து இருந்திருக்க முடியாது. கோபிச்சு கொள்ளாதீங்க உண்மையை சொன்னால் கொஞ்சம் கோபம் வரும் :lol:

Edited by vidivelli

  • Replies 152
  • Views 17.5k
  • Created
  • Last Reply

சிங்களவன் இருக்கும் இடத்தில் நம்மவர் இன்று இருந்திருந்தால் கொழும்பில் ஒரு சிங்களவன் வந்து இருந்திருக்க முடியாது. கோபிச்சு கொள்ளாதீங்க உண்மையை சொன்னால் கொஞ்சம் கோபம் வரும் :rolleyes:

சரியாகச் சொன்னீர்கள். இது 100 இற்கு 200 வீதம் உண்மை.

வசம்பு,

நீங்கள் என்னுடைய பதிலை போட்டு(Quote) அதற்கு பதில் கூறி இருந்தீர்கள், ஆகவே என்னைத்தான் குறிப்பிட்டீர்கள் என நான் கருத அனைத்து காரணங்களும் உள்ளன

நான் பதில் எழுதும் போது இந்த செய்தியை இணைத்தவரிற்கு பதிலாக எனது குறிப்பை எழுதவில்லை. அவர் கூறியதில், சிங்களவர்களுடன் இணைந்து கலை தொடர்பான விடயங்களில் ஈடுபடுபவர்களை 'துரோகி' என முத்திரை குத்தும் விடயத்தில் முரண்படுகின்றேன், ஆனால் அப்படி இணைந்து செயலாற்றும் பலர் தமிழ் தேசியத்திற்கெதிரான கருத்துருவாக்கங்களிற்கும், நிகழ்வுகளிற்கும், பரப்புரைகளுக்கும் துணை போயுள்ளதை மறுக்கவில்லை. இவர்களின் பங்களிப்பு உண்மையில் தமிழ் சிங்கள ஒற்றுமையை கட்டி எழுப்பியதை/எழுப்புவதை விட தமிழ் தேசியத்திற்கு, தமிழர்களின் நலனுக்கு எதிரானதாக அமைந்ததே அண்மைய வரலாறு

'நொமியன மினுசு' திரைப்படத்தில் சிங்கள இராணுவ அதிகாரியின் சப்பாத்து துடைக்கும் வேலைக்காரனாக நடராஜ சிவம் வந்து எம் இனத்தினை சிங்களவர்களுக்கு சேவகம் செய்யும் இனமாக காட்ட உதவியமை,

அதே போல மேர்வின் மகேசன் போராளியாக சில சிங்கள சினிமாவிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் வந்து போராட்டத்தையே கொச்சை படுத்தியமை,

தமிழ் சிங்கள உறவு பற்றி கதைக்க ஆரம்பித்த மனோரஞ்சன், இன்று முற்றிலுமான தமிழ் தேசிய

எதிர்பாளனாக மாறியமை

என்று பல உதாரணங்கள் உள்ளன.

எந்த ஒரு தமிழ் கலைஞனும், தான் ஒரு தமிழ் தேசிய பற்றாளன், தமிழ் தேசிய போராட்ட அரசியலுக்கு ஆதரவானவன் என தன்னை அறிவித்து கொண்டு, ஒரு சிங்கள கலைஞனுடனாவது உறவை பேண முடியும் என நினைக்கின்றீர்களா, அவரால் ஒற்றுமை வளர்க்க தோள் கொடுக்க முடியும் என கருதுகின்றீர்களா?

Edited by NIZHALI

நிழலி

மனோரஞ்சன் போன்றவர்களின் மனமாற்றத்திற்கு யார் காரணம். சிங்கள இனம் மட்டுமா?? இங்கே பல விடயங்களை என்னாலும் எழுத முடியும். ஆனால் நிர்வாகம் விட்டு வைக்காது. நீங்கள் ஒரு பக்கத்தையே பார்க்கின்றீர்கள். எமது பக்கத் தவறுகளையும் கொஞ்சம் யோசியுங்கள். மேலே விடிவெள்ளி கூறியது போல் தற்போதய நிலையில் கொழும்பில் இலட்சக் கணக்கான தமிழர்கள் வாழ்வது போல், யாழ்ப்பாணத்திலோ அல்லது வன்னியிலோ சிங்களக் குடும்பங்கள் வாழ முடியுமா?? உண்மைகள் பல வேளைகளில் கசப்பாகத் தானிருக்கும்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள்வர்களை வன்னியில குடி வைக்கிறது கொஞ்சம் கஸ்டம் வேணுமெண்டா வெளி நாட்டில உங்கட வீடுகளில விருந்தினரா கூட்டிக்கொண்டு வைச்சு தமிழன் யார் எண்டு ஒருக்கா காட்டிவிடுங்கோ.அப்பத்தான் இங்க யாழ் களத்தவர்களுக்கும் உங்களைப்பற்றி புரியும்.

சிங்கள்வர்களை வன்னியில குடி வைக்கிறது கொஞ்சம் கஸ்டம் வேணுமெண்டா வெளி நாட்டில உங்கட வீடுகளில விருந்தினரா கூட்டிக்கொண்டு வைச்சு தமிழன் யார் எண்டு ஒருக்கா காட்டிவிடுங்கோ.அப்பத்தான் இங்க யாழ் களத்தவர்களுக்கும் உங்களைப்பற்றி புரியும்.

உண்மைகள் பல வேளைகளில் கசப்பாகத் தானிருக்கும். உதாரணத்திற்கு நீங்களா?? :rolleyes:

எமது பக்கத் தவறுகளையும் கொஞ்சம் யோசியுங்கள்.

சில 'தவறான' முடிவுகள் வேறு வழியின்றி எடுக்கப்பட்டவை. சிங்களவரோ, வேறு எந்த இனமோ தமிழரின் உரிமைகளையோ (உரிமைப்போராட்டத்தையோ) மதித்திருந்தால் அப்படியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டி வந்திராது. விஷப்பாம்பு கடிக்க வரும்போது அதைக்கொல்வதா, அல்லது அதுவும் பாவம் ஒரு உயிர்தானே என்று அது எங்களை கொல்ல அனுமதிப்பதா சரியான முடிவு?

மேலே விடிவெள்ளி கூறியது போல் தற்போதய நிலையில் கொழும்பில் இலட்சக் கணக்கான தமிழர்கள் வாழ்வது போல், யாழ்ப்பாணத்திலோ அல்லது வன்னியிலோ சிங்களக் குடும்பங்கள் வாழ முடியுமா??

அவ்வாறு தமிழரின் உரிமைகளை மற்ற இனம்/இனங்கள் மதித்து நடந்திருந்தால், யாழில் தனிய தமிழர் மட்டும் வாழும் நிலை ஏற்பட்டிருக்காது. அந்த இனங்களுடன் இணைந்து வாழ்வதை தமிழர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

அதற்காக மனோகரன், சிங்களபாடகருடன் சேர்ந்து பாடுவது தவறென்று சொல்ல வரவில்லை.

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நடைமுறைச்சிக்கல் இருந்தாலும் முயன்றால் முடியாதது(கொள்கை பற்று) எதுவும் இல்லை அன்பர்களே!

அவ்வாறு தமிழரின் உரிமைகளை மற்ற இனம்/இனங்கள் மதித்து நடந்திருந்தால், யாழில் தனிய தமிழர் மட்டும் வாழும் நிலை ஏற்பட்டிருக்காது. அந்த இனங்களுடன் இணைந்து வாழ்வதை தமிழர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

அதற்காக மனோகரன், சிங்களபாடகருடன் சேர்ந்து பாடுவது தவறென்று சொல்ல வரவில்லை. அதை ஆதாரமாக காட்டி, சிங்கள இனவாதிகள் / அரசியல்வாதிகள், இலங்கையில் தமிழருக்கு பிரச்சினை இல்லை என்று பிரச்சாரம் செய்வது பற்றி நாம் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

அப்போ சிங்கள இனம் தமிழரை கொழும்பில் தற்போது வாழ விட்டிருப்பது தவறென்கின்றீர்களா??

:rolleyes: மனோகரனின் பாடலே யுத்தத்தைக் கண்டித்தே பாடப்பட்டுள்ளது. இது எப்படி சிங்கள இனவாதிகளின் பிரச்சாரத்திற்கு உதவுமென்பது எனக்கு சத்தியமாய் புரியவில்லை. :rolleyes:

அப்போ சிங்கள இனம் தமிழரை கொழும்பில் தற்போது வாழ விட்டிருப்பது தவறென்கின்றீர்களா??

அப்படியென்றால் கொழும்பில் தமிழரால் சிங்களவருக்கு ஆபத்து என்றல்லவா பொருள்படும். நான் அப்படி பொருள்பட சொல்லவில்லை. கொழும்பில் தமிழர்கள் தான் எப்போது தங்களுக்கு என்ன நேரும் என்ற அச்சத்துடன் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

:) மனோகரனின் பாடலே யுத்தத்தைக் கண்டித்தே பாடப்பட்டுள்ளது. இது எப்படி சிங்கள இனவாதிகளின் பிரச்சாரத்திற்கு உதவுமென்பது எனக்கு சத்தியமாய் புரியவில்லை. :lol:

மன்னிக்கவும் தவறான கருத்து தான். அப்போது பாடலை கேட்கமுடியவில்லை. இப்போது கேட்ட பிறகு தான் புரிந்தது அவசரப்பட்டுவிட்டேன் என்று. கருத்தை வாபஸ் பெறுகிறேன். :D

அப்படியென்றால் கொழும்பில் தமிழரால் சிங்களவருக்கு ஆபத்து என்றல்லவா பொருள்படும். நான் அப்படி பொருள்பட சொல்லவில்லை. கொழும்பில் தமிழர்கள் தான் எப்போது தங்களுக்கு என்ன நேரும் என்ற அச்சத்துடன் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

கொழும்பில் தமிழர்கள் பயத்துடனேயே வாழ்ந்தாலும் அவர்கள் யாழிற்கோ அல்லது வன்னிக்கோ செல்லவில்லை. உங்கள் கருத்துப்படி பார்த்தால் யாழிலோ அல்லது வன்னியிலோ சிஙகளவர்களால் எம்மவர்க்கு ஆபத்து என்பதாலா அவர்களை அங்கு அனுமதிக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா??

மன்னிக்கவும் தவறான கருத்து தான். அப்போது பாடலை கேட்கமுடியவில்லை. இப்போது கேட்ட பிறகு தான் புரிந்தது அவசரப்பட்டுவிட்டேன் என்று. கருத்தை வாபஸ் பெறுகிறேன். :)

எப்போதும் நீங்கள் அவசரப்படுகின்றீர்கள் என்பதை ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியுமுள்ளேன். இங்கு விவாதமே அந்தப் பாடலைப் பற்றித்தான். ஆனால் நீங்கள் அதை விட்டுவிட்டு எங்கெல்லாமோ சென்று இப்போதாவது விடயத்தைப் புரிந்திருக்கின்றீர்கள். அதுவரைக்கும் நன்றிகள்.

சிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது.

முரளி அங்கிள்..!!.. :lol:

அற்புதமான கருத்தொன்றை முன்மொழிந்தமைக்கு..கு நன்றிகள்..ஆனா உங்களிடம் ஒரு சிறிய வினா..அதாவது தாங்கள் சுகந்திர போராட்ட தியாகி போல் எங்கியோ ஜெயிலிற்கு போனதாக யாழில் எழுதிய ஞாபகம்..ம் :D தாங்கள் சிறையில் இருந்து..து..

எங்களிண்ட சகோதரர்களான சிங்களவரிட்ட அடி விழக்க..க கூட உங்கண்ட மனநிலையில எல்லா சிங்களவரும் நல்லவர்களாவோ பட்டவை..வை..?? :D ..இல்லாட்டிக்கு உங்க வந்து கணணிக்கு முன்னால இருகக்க தான் எல்லாம் சிங்களவரில நல்லவையும் இருக்கீனம் எண்ட எண்ணம் வந்ததோ..தோ.. :D

ஒருக்கா அதை சொல்லுங்கோ..கோ...(கோவிக்காம).. :D

அது சரி நாங்க பிரைன் மாமாவை நல்லவர் எண்டு சொல்லுவோம்..ம் அதை மாதிரி சிங்களவனும் கருணா மாமா மற்றது பிள்ளையான் அங்கிள் அவையளை நல்ல ஆட்கள் என்பீனம்..ம்..இப்படியே அவையளிள நல்லவை இவையளிள நல்லவை பார்த்து கொண்டிருந்தா..தா...

அப்படியே காலதிற்கும் இருக்கலாம்..ம்.. :)

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா போராட்டதிற்கு முன்னாடி நல்லவை.கெட்டவை என்பது கெடையாது.." :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தந்தையும் மகனும் ஒரு களுதையை சந்தைக்கு ஓட்டிச்சென்றனர் அதை விற்பதற்கு,அப்போது வழியில் எதிர்பட்ட இருவர் கூறிச்சென்றனர் இந்த முட்டாளுகளை பார் இரண்டு பேரும் நட்ந்து போகிறார்கள் ஆராவது ஒராள் களுதையில் ஏற்ப்போகலாமே என்று! உடனே தந்தை களுதையில் ஏறிப்பயணத்தை தொடர்ந்தனர்.

சிறிது தூரம் போன பின்னர் மீண்டும் சிலர் எதிர்ப்பட்டனர் போனவர்கள் சும்மா போகாமல் இங்க பார் கொடுமைய அந்த சின்ன பையனை நடக்க வைத்து விட்டு இந்த தடி மாடு களுதையில் போகிறது எண்டு,

தந்தை வேறு வழியில்லாமல் இறங்க மகன் இப்போது ஏறிக்கொண்டான்.

இன்னும் சிறிது தூரம் போனதும் எதிர்ப்பட்ட சிலர் கூறினராம் இங்க பார் கலி முத்திப்போச்சு வயது போன காலத்தில தகப்பன் நட்ந்து போக இந்த பையன் மாடு மாதிரி இருந்து கொண்டு அந்தாளை நடக்க விடுகிறான் எண்டு,

இதைக்கேட்ட தந்தையும் மகனும் களுதையில் ஏறிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தனர்,

அதை பார்த்த சிலர் கூறினராம் ஐயோ பாவம் அந்த சின்ன களுதை இந்த இரண்டு எருமை மாடுகளும் ஏறினால் என்ன ஆகும் என்று களுதைக்காக் வக்காலத்து வாங்கினர்'

வேறு வழி இல்லாமல் அந்த களுதையை தூக்கிச்சென்றனராம் சந்தைக்கு அவர்களை பார்த்து எல்லோரும் சிரித்தனராம்

அதற்கு தந்தை என்ன கூறியிருப்பார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்

முரளி அங்கிள்..!!.. :lol:

அற்புதமான கருத்தொன்றை முன்மொழிந்தமைக்கு..கு நன்றிகள்..ஆனா உங்களிடம் ஒரு சிறிய வினா..அதாவது தாங்கள் சுகந்திர போராட்ட தியாகி போல் எங்கியோ ஜெயிலிற்கு போனதாக யாழில் எழுதிய ஞாபகம்..ம் :D தாங்கள் சிறையில் இருந்து..து..

எங்களிண்ட சகோதரர்களான சிங்களவரிட்ட அடி விழக்க..க கூட உங்கண்ட மனநிலையில எல்லா சிங்களவரும் நல்லவர்களாவோ பட்டவை..வை..?? :D ..இல்லாட்டிக்கு உங்க வந்து கணணிக்கு முன்னால இருகக்க தான் எல்லாம் சிங்களவரில நல்லவையும் இருக்கீனம் எண்ட எண்ணம் வந்ததோ..தோ.. :D

ஒருக்கா அதை சொல்லுங்கோ..கோ...(கோவிக்காம).. :D

அது சரி நாங்க பிரைன் மாமாவை நல்லவர் எண்டு சொல்லுவோம்..ம் அதை மாதிரி சிங்களவனும் கருணா மாமா மற்றது பிள்ளையான் அங்கிள் அவையளை நல்ல ஆட்கள் என்பீனம்..ம்..இப்படியே அவையளிள நல்லவை இவையளிள நல்லவை பார்த்து கொண்டிருந்தா..தா...

அப்படியே காலதிற்கும் இருக்கலாம்..ம்.. :)

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா போராட்டதிற்கு முன்னாடி நல்லவை.கெட்டவை என்பது கெடையாது.." :D

ஜம்மு

முன்பு கருணாவை கருணா அம்மான், கருணா அம்மான் என்று தூக்கிப் பிடித்தவர்களும் எம்மவர் தான். பின்பு கருணா துரோகி என்று தூற்றித் தெரிபவர்களும் நம்மவர் தான். ஆனால் கருணா அன்றும் சரி இன்றும் சரி என்றும் ஒரே மாதிரித் தான் தன் போக்குகளை மாற்றவில்லை. இடம் மாறியதை வைத்துத் தான் போற்றுதலும், தூற்றுதலும் நடக்கின்றது. கருணாவின் வழமையான குணத்தை வைத்தல்ல.

Edited by Vasampu

ஜமுனா,

நான் சிறையுக்கு சென்று வந்தது அங்கு நான் பட்ட கொடிய அனுபவங்கள் பற்றி யாழில எழுதி இருந்தேன். இன்றும் நான் தாயகபோராட்டம் சம்மந்தமாக யாழில ஆதரவான கருத்துக்கள் எழுதுகின்றேன் என்றால் அதற்கான காரணங்களில ஒன்று நான் முன்பு அப்பாவியாக பிடிபட்டு மகர சிறையில பெற்ற அனுபவங்களே.

நான் முழுவதுமாக கூறிய கருத்தின் சாரம்சத்தை விளங்கிக் கொள்ளாது ஒரு வசனத்தை தூக்கி அதுக்கு விளக்கம் கேட்டு இருக்கிறீங்கள். நான் சொன்னதையே திருப்பி பார்ப்பம்.

"சிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது."

இதுக்கு மேல இவ்வளவும் எழுதி இருக்கிது: கீழ இருக்கிறத - முன்னுக்கு எழுதினதில மேல இருக்கிறத வாசிச்சால் நான் சொன்ன கருத்து ஒரு சாதாரண மனுசனுக்கு விளங்கி இருக்கும். இது விளங்க இல்லை எண்டால்- இதுக்கு மேல வியாக்கியானம் கேட்டால் - இதுக்கு மேல எது நான் எழுதினாலும் அது உங்களுக்கு ஒருபோதும் விளங்கப்போவதில்லை. எண்டபடியால நான் எழுதினத திருப்பி எழுதிவிடுறன். இன்னொருக்கால் பொறுமையா வாசிச்சு விளங்க முடியுமோ எண்டு பாருங்கோ. விளங்காட்டிக்கு நான் ஒண்டும் செய்ய ஏலாது:

சீலன் கேட்ட கேள்வியில ஓரளவு நியாயம் இருக்கிது. ஊரில சனத்தை சாக்காட்டிக்கொண்டு சிங்களவரும், தமிழரும் ஒற்றுமைய இருக்கிறதா காட்டுற பார்த்தால் எங்களுக்கு பத்தி எரியும்தான். பாதுகாப்பு இணையத்தளத்திலயும் உப்பிடி தமிழ் - சிங்கள ஒற்றுமை பற்றி ஏதோ ஒண்டு போட்டு இருக்கிது.

ஆனால்.. அடிப்படையில ஒரு விசயம் என்ன எண்டால் விடுதலைப் புலிகளே சொல்ல் இருக்கிறார்கள் இந்த தாயக போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்று. அதாவது சிங்கள-தமிழ ஒற்றுமை பற்றிய இந்தப்பாடல் பிழையானது எண்டு விடுதலைப் புலிகள் சொல்லுவார்களா என்பதே சந்தேகம்.

ஊரில பிரச்சனைகள் துவங்க முன்பே பல்லாயிரம் தமிழ் சனங்கள் இலங்கையின் வடக்கு-கிழக்கு தவிர்ந்த இதர பகுதிகளில வாழ்ந்து வருகிதுகள். இவர்களுக்கு எண்டு ஒரு வாழ்க்கை இல்லையா? இவர்களிற்கு எப்போதும் சிங்கள இன மக்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவை இருக்கிது. ஏன் எண்டால் அவர்கள் தனித்தமிழ் பகுதியில இல்ல.

அப்படி எண்டால் இவர்கள் சிங்களவர்களுடன் எப்படி வாழவேண்டும் எண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்? குறிப்பிட்ட பாடகர் மனோகரன் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் சிலது இவர் பிறந்து வளந்தது எல்லாமே கொழும்பிலையோ தெரியாது. அப்பிடி எண்டால் உதுக்கு நீங்கள் என்ன செய்யப்போறீங்கள்?

தமிழர் எண்டால் அவர்கள் தாயகபோராட்டம் சம்மந்தமாக ஆதரவு தரவேண்டும், தாயக போராட்டம் சம்மந்தமாக விழிப்புணர்வு கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பாப்பது தவறானது. நாங்கள் அப்படி இருக்கலாம். ஏன் எண்டால் நாங்கள் சிறீ லங்கா இனவாத அரசுமூலம் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. ஆனால் அப்படியான அனுபவம் எல்லாருக்கும் கிடைச்சது எண்டு சொல்லிறதுக்கு இல்ல.

நாங்கள் செய்யக்கூடியது தாயக மக்கள் படும் துன்பங்களை பிரச்சாரம் செய்வது, அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்பட எங்களால முடியுமான எதையாவது செய்வது ஒழிய... இப்பிடி அவர் அப்பிடி பாடி இருக்ககூடாது எண்டு சொல்லிறது நியாயபூர்வமானது இல்ல. சரி ஒரு காலத்தில தமிழீழம் கிடைக்கிது எண்டு வையுங்கோ. அதுக்கு பிறகும் தமிழீழம் அல்லாத பகுதிகளில தமிழர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். அப்பிடி எண்டால் அந்த நேரத்தில தமிழர்கள் எப்பிடி இருக்கவேண்டும் எண்டு நீங்கள் நினைக்கீறீங்கள்?

நாங்கள் எங்கட வசதி, சூழ்நிலைகள் பற்றி மாத்திரம் கவலைப்படுறம். ஆனால்.. சிங்கள பிரதேசங்களில வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சிங்களவர்களுடன் சினேகபூர்வமான உறவை வச்சு இருக்காட்டிக்கு வீட்டுக்கு வெளியில ஒரு அடி எடுத்தும் வைக்க ஏலாது. உந்தப் பாட்டுக்கள் எமக்கு பிழையாக தெரியலாம். ஆனால் சிங்கள இன மக்களுடன் விரும்பியோ விரும்பாமலோ, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வாழ்கின்ற, வாழப்போகின்ற தமிழ் மக்களுக்கு இது தேவையான ஒரு பாடல்.

அரசியல் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் பாரியார் ஒரு சிங்களவர் என்று எங்கையோ வாசிச்சதாக ஞாபகம். அப்பிடி எண்டால் அவர்கள் எப்பிடி வாழவேண்டும் எண்டு நினைக்கீறீங்கள்? சிங்களத்தில கதைக்ககூடாதா?

சிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது.

சும்மா பஞ்சு பஞ்சு எண்டு சொல்லி கடைசியில நீங்கள் பஞ்சு ஆகாமல் பாத்துகொள்ளுங்கோ.

மனோகரனுடன் பாடும் டெஸ்மன் டீ சில்வா சிங்களவரல்ல. அவர் பெர்கர் (யுரேசியன்) இனத்தைச் சேர்ந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ "அபே ஒக்கம எக்காய் ...கொட்டி தமாய் கரதராய்" என்று சொல்லவாறியல் போல.....சொல்லுங்கோ சொல்லுங்கோ கருத்து சுதந்திரம் தானெ...........

சுத்தம் :lol:

தலைப்பே தவறானது.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்கிறார்கள்.

சிங்களவர் - தமிழர் - இந்திய தமிழர் - இலங்கை சோனகர் - இந்திய சோனகர் - பெர்கர் மற்றும் மலே (இந்தோனிசியா மற்றும் மலேசியாவிலிருந்து வந்தோர்)

இன்னும் இனங்கள் இருக்கோ தெரியாது? இருக்கலாம்.

பாடுபவர் பற்றித்தான் எழுதினே தவிர கொட்டியா பற்றி இங்கு எதுவுமில்லை.

டெஸ்மன் டீ சில்வா பெர்கர்

அது எனக்கே இன்றுதான் தெரியும்.

அவரை பாடகராக மட்டுமே பார்த்திருக்கிறேன்.

பைலா பாடல்கள்

போர்த்துகேயர் வழி வந்தது.

அவர் பைலா பாடல்கள் வழி இலங்கையில் பிரபலமானவர்.

- இலங்கை மலையில் மோதி சுக்கு நூறாகி பல உயிர்களைக் காவு கொண்ட விமானம்

- 1971ல் நடந்த இராணுவ பாலியல் வல்லுறவுகள் : கொலைகள் மற்றும்

- நாட்டில் இடம்பெறும் சிறு சிறு தவறுகளைக் கூட தனது பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டுவந்தவர் டெஸ்மன்.

சிங்களவர் அல்லாத ஒருவரை

அவர் சிங்களவர் அல்ல என்பதே பிரச்சனையா?

இதுகூட புரியாதவர்கள் இங்கு உள்ளார்களே?

சுப்பர் :lol:

Edited by AJeevan

சுத்தம் :lol:

சிங்களவர் அல்லாத ஒருவரை

அவர் சிங்களவர் அல்ல என்பதே பிரச்சனையா?

இதுகூட புரியாதவர்கள் இங்கு உள்ளார்களே?

சுப்பர் :lol:

:lol:இல்லை அதையும் தாண்டி...டி...டி..டி :)

ஜம்மு

முன்பு கருணாவை கருணா அம்மான், கருணா அம்மான் என்று தூக்கிப் பிடித்தவர்களும் எம்மவர் தான். பின்பு கருணா துரோகி என்று தூற்றித் தெரிபவர்களும் நம்மவர் தான். ஆனால் கருணா அன்றும் சரி இன்றும் சரி என்றும் ஒரே மாதிரித் தான் தன் போக்குகளை மாற்றவில்லை. இடம் மாறியதை வைத்துத் தான் போற்றுதலும், தூற்றுதலும் நடக்கின்றது. கருணாவின் வழமையான குணத்தை வைத்தல்ல.

வசபண்ணா..ணா..!!. :unsure:

கருணா அங்கிள் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி தன் போக்கில் மாறவில்லை எண்டு குறிபிட்டிருந்தீர்கள்..ள் எனக்கு வெளங்கவில்லை எத்தகைய போக்கில் இருந்து மாறவில்லை எண்டு ஒருக்கா தெளிவுபடுத்துறீங்களோ..ளோ..??. :unsure:

இன்றைய ரீதியில் அவர் சிங்கள பேரினவாதிகள் தான் கதி என இருக்கிறார்..ர் அப்படி பட்ட அவரின் போக்கு மாறவில்லை எண்டு கூறுவது வேடிக்கையாக தான் இருக்கிறது எண்டு சொல்லாம்..ம். :D

மற்றது..து..!!

அவரை தூற்றுவதால்..ல் எமக்கு எத்தகைய பிரயோசனமும் இல்லை..லை மாறாக அவரை "ஸ்டார்" ஆக்கிறோம்..ம்..(அது எங்கடையளுக்கு வெளங்க வேண்டுமே).. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜமுனா,

நான் சிறையுக்கு சென்று வந்தது அங்கு நான் பட்ட கொடிய அனுபவங்கள் பற்றி யாழில எழுதி இருந்தேன். இன்றும் நான் தாயகபோராட்டம் சம்மந்தமாக யாழில ஆதரவான கருத்துக்கள் எழுதுகின்றேன் என்றால் அதற்கான காரணங்களில ஒன்று நான் முன்பு அப்பாவியாக பிடிபட்டு மகர சிறையில பெற்ற அனுபவங்களே.

நான் முழுவதுமாக கூறிய கருத்தின் சாரம்சத்தை விளங்கிக் கொள்ளாது ஒரு வசனத்தை தூக்கி அதுக்கு விளக்கம் கேட்டு இருக்கிறீங்கள். நான் சொன்னதையே திருப்பி பார்ப்பம்.

"சிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது."

இதுக்கு மேல இவ்வளவும் எழுதி இருக்கிது: கீழ இருக்கிறத - முன்னுக்கு எழுதினதில மேல இருக்கிறத வாசிச்சால் நான் சொன்ன கருத்து ஒரு சாதாரண மனுசனுக்கு விளங்கி இருக்கும். இது விளங்க இல்லை எண்டால்- இதுக்கு மேல வியாக்கியானம் கேட்டால் - இதுக்கு மேல எது நான் எழுதினாலும் அது உங்களுக்கு ஒருபோதும் விளங்கப்போவதில்லை. எண்டபடியால நான் எழுதினத திருப்பி எழுதிவிடுறன். இன்னொருக்கால் பொறுமையா வாசிச்சு விளங்க முடியுமோ எண்டு பாருங்கோ. விளங்காட்டிக்கு நான் ஒண்டும் செய்ய ஏலாது:

சும்மா பஞ்சு பஞ்சு எண்டு சொல்லி கடைசியில நீங்கள் பஞ்சு ஆகாமல் பாத்துகொள்ளுங்கோ.

முரளி அங்கிள்..ள்..!!

நான் எழுதியதை தாங்கள் வடிவாக வாசிக்கவில்லை போல்..ல்..ஏற்கனவே சொல்லிட்டேன் தானே அற்புதமான கருத்தை தாங்கள் முன்மொழிந்திருக்கிறீர்கள்..ள

் எண்டு பிறகென்ன..ன நான் கேட்ட "மில்லியன் டொலர் கேள்வி" வந்து..து.. :lol:

தாங்கள் மகர சிறையில் இருக்கும் போது கூட..ட

சிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது."

தாங்கள் கூறிய இந்த மனநிலை இருந்ததோ..தோ..அல்லாட்டிக்கு சூழல் மாறி கனடாவிற்கு வந்தா பிறகு இத்தகைய மனநிலை வந்ததோ..தோ எண்டு நான் கேட்டதை வடிவா வாசிக்காம..ம ஏதோ சொல்லிட்டு போயிருக்கிறீங்கள்..ள்..!!.. :D

நீங்க சொல்லுற விடையை வைத்து தான்..ன் தங்களிண்ட கருத்தினை பரீசீலனை பண்ணலாம்..ம்..ஏன் எண்டா நாங்க இங்க இருந்து கொண்டு..டு சிங்களவனை வெறுக்க கூடாது..து அவையளும் எங்களிண்ட சகோதரர்கள் எண்டு ஆயிரம் கதைகள் கதைக்கலாம்..ம் பாருங்கோ :unsure: ..ஆனால் அங்க இருந்து பாதிக்கபட்டவையிண்ட மனது எப்படி இருக்கும் என்பது தான் கேள்வி..??..

ஆனபடியா உணர்ச்சிவசபடாம நான் கேட்ட கேள்விக்கு விடையை சொல்லுங்கோ முரளி அங்கிள்..!! :lol: ..நீங்க சொல்லுற விடையில தான் நாளைக்கே நானும் சிங்கள கலாச்சாரம் மற்றும் சிங்கள மொழியை பின் தொடர்ந்து..து சிங்களவனோட இருந்து இங்க நான் "பியர்" அடிக்கலாம் தானே..னே என்ன நான் சொல்லுறது சரியோ முரளி அங்கிள்..ள்..!!

நீங்கள் கொடுக்கின்ற விளக்கங்கள்..ள் வந்து உங்கை புலம்பெயர்து வந்து..(சிங்களவனிட்ட அடி வாங்கி ஓடி வந்த)..இப்ப ஒரு நிலைமைக்கு வந்த அவுஸ் டமிழ்ஸ் கொடுக்கிற விளக்கம் தான்..ன்.. :lol:

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா..ணா நான் பஞ்சானாலும் மற்றவனிண்ட காயத்தை ஆற்றுவன்..ன்.." :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் அல்லாத ஒருவரை

அவர் சிங்களவர் அல்ல என்பதே பிரச்சனையா?

இதுகூட புரியாதவர்கள் இங்கு உள்ளார்களே?

சுப்பர் :(

இன்று இலங்கையில் தமிழ் தேசிய போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்த பிறகு தான் இலங்கை பல்லின மக்களுக்கு உரியது என்ற போர்வையில் பல ஊடகங்கள் முக்கியமாக பீ.பீ.சி தமிழொசை மற்றும் வேறு ஊடகங்களும் முழங்குகின்றன

பறங்கியர்கள் :- இவர்களிள் சிங்கள பகுதிகளில் வாழ்ந்த பறங்கியர்களில் 90 % சிங்களவ,கிறிஸ்தவர்களாக மாறி விட்டார்கள் ஏனையோர் வெளிநாடு சென்று விட்டார்கள்.அவர்களுகென்று தான் இங்கிலாந்து,கொலன்ட் போன்ற நாடுகள் முன்னைய காலங்களிள் பிரஜா உரிமையை இலகுவாக கொடுத்தது.

இதை போல் தமிழ் பகுதிகளிள் வாழ்ந்த பறங்கியர்கள்.(மட்டகளப்பு,யாழ

சிலருக்கு தெரிந்தது அவ்வளவுதான் என நினைக்கிறேன்.

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திரங்களில் அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்.

அதை மாற்ற நம்மால் முடியாது.

தமிழர் என்று நான் குறிப்பிட்டது கூட தவறு.

உங்கள் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைப் பாருங்கள்.

அதில் இலங்கை தமிழர் என்றே இருக்கும்.

அதில் மறுபக்கத்தில் உங்கள் தகப்பனாரது விபரப்பகுதியில்

தகப்பனார் இலங்கையில் பிறந்தவர்

என ஒரு வாசகம் எழுதப்படும்.

அல்லாவிடில்

நீங்கள் இந்தியத் தமிழர்.

இந்திய தமிழரானால் அவருக்கு குடியுரிமையோ அல்லது வாக்களிக்கும் உரிமையோ

இல்லை என்று அர்த்தம்.

சிங்களவர்களை சிங்களவர் என்றே குறிப்பிடுகிறார்கள்.

(இங்கே உயர் குலம் தாழ் குலம் என குறிப்பிடுவதில்லை. அது அவர்களது வாசகம எனும் குடும்ப பெயரை வைத்தே கணிப்பிடுகிறார்கள். தமிழருக்கு அவ்வாறு இல்லை. சிங்களவருக்கு உ+ம் : பண்ணடாரநாயக்க (உயர்), பிரேமாதாச (தாழ்) குலம் என்பதை குறிக்கும்............. சோனகர்களை லங்கா மறக்கள (லங்கா சோனகர்) இந்திய மறக்கள (இந்திய சோனகர்) என்றும் கிறிஸ்தவர்கள் சிங்களவர்களாக இருந்தால் சிங்களவர் என்றும்

கிறிஸ்தவர்கள் தமிழராக இருந்தால் இலங்கை தமிழர் : இந்திய தமிழர் என்றுமே குறிப்பிடுகிறார்கள்)

இலங்கை தமிழர்

இந்தியத் தமிழர்

( இந்திய தமிழருக்கு இந்த கொடுமை ஏற்பட முக்கிய காரணமானவர்கள் யாழ்பாண தமிழர்கள் என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை)

இலங்கை சோனகர்

இந்திய சோனகர்

மலே

மற்றும்

பறங்கியர் (பெர்கர்)

என இலங்கை அரச பிறப்பு சான்றிதழ்களில் வருவதையே குறிப்பிட்டேன்.

அது எனது கருத்தல்ல. நடைமுறையில் அரச கருமமாக உள்ளது.

சிலருக்கு அது கூட தெரியவில்லை.

உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல்

செய்யும் விதண்டாவாதம் ஒரு பிரயோசனத்தையும் ஏற்படுத்தாது.

பறங்கியர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களே.

அவர்கள் தமிழ் அல்லது சிங்களம் பேசலாம்.

ஆனாலும் அவர்கள் எப்படி தமிழர் ஆகமுடியும்?

அல்லது சிங்களவர் ஆகமுடியும்?

அவர்கள் தாங்கள் பறங்கியர் என்பதை தொடர்கின்றனர்.

தமிழர்கள் கூட சிங்களவர்களானதற்கு

தங்களைப் போன்றவர்களே காரணமாகியிருக்கலாம்.

தமிழர் சிங்களம் படித்து பேசினாலும்

சிங்களவர் தமிழ் படித்து பேசினாலும்

அவர்கள் பிறப்பால் மாற வாய்ப்பு நம் நாட்டில் இல்லை.

தமிழ் பேசும் சோனகரையே சிங்களமாக்கும்

இனவாதக் கருத்து தங்களது எழுத்துகளில் இருப்பது கொடுமை.

அப்படி நினைப்பது அல்லது எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும்.

கடந்த மாதத்தில் கொழும்பு - புத்தளம் - சிலாபம் போன்ற பகுதிகளில்

யாழ்பாணம் - மன்னார் - மட்டக்களப்பு போன்ற (வடக்கு - கிழக்கு) பகுதிகளில் இருந்து

அண்மையில் குடியேறிய சிங்களவர்கள் கூட காவல் நிலையத்தில் தம்மை பதிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதற்கு காரணம் அவர்கள் அடிப்படையில் சிங்களவர்களாக இருந்தும்

தமிழ் மொழிக்கல்வி பெற்று சிங்களம் பேச முடியாமல் இருப்பதே.

அவர்களது அடையாள அட்டையிலும் : பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலும்

சிங்களவர் என்றே குறிப்பிட்டு உள்ளார்கள்.

அதை ஏன் தமிழ் பதிவாளர்கள் தமிழர் என பதியவில்லை?

நாம்தான் நமக்கு எதிரி.

ராஜசிங்கம் - ராஜசிங்க ஆனது போல

தமிழனை சிங்களவன் சிங்களவனாக ஏற்றுக் கொண்டாலும்

தமிழனை

தமிழனே தமிழனாக ஏற்றுக் கொள்ளாத கொடுமை

நம்மைத் தவிர வேறு ஒரு இனத்திலும் இல்லை.

இதனாலேயே தமிழர்களும்

தமிழ் பகுதிகளும் சிங்களமாகினவோ என்னவோ?

Edited by AJeevan

நீங்க சொல்லுற விடையை வைத்து தான்..ன் தங்களிண்ட கருத்தினை பரீசீலனை பண்ணலாம்..ம்..ஏன் எண்டா நாங்க இங்க இருந்து கொண்டு..டு சிங்களவனை வெறுக்க கூடாது..து அவையளும் எங்களிண்ட சகோதரர்கள் எண்டு ஆயிரம் கதைகள் கதைக்கலாம்..ம் பாருங்கோ. ஆனால் அங்க இருந்து பாதிக்கபட்டவையிண்ட மனது எப்படி இருக்கும் என்பது தான் கேள்வி..??..

இப்போது கனடா வந்தபின்னரா இப்படி சிங்கள-தமிழ் ஒற்றுமை பற்றிய கருத்து எனக்கு ஏற்பட்டது என்று கேட்கின்றீர்கள்? சிங்களவனுடன் சேர்ந்து பியர் அடிப்பது பற்றி கதைக்கிறீர்கள்.

நான் சிறையில் இருந்தபோது அந்த சிறைக்கதையில் எனக்கு ஆதரவு தந்த, உதவிகள் செய்த சிங்களவர்கள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன். நான் சிறீ லங்காவில் இருந்த காலத்தில் எனக்கு சிங்கள நண்பர்களும் இருந்தார்கள். அவர்கள் வீடுகளிற்கு சென்று உணவும் அருந்தியுள்ளேன். அவர்களது பெற்றோர் என்னையும் தமது பிள்ளைபோல மரியாதை தந்து உபசரித்து உள்ளார்கள். இது எல்லாம் கனடாவுக்கு வந்தபின்னர் ஏற்படும் ஞானம் அல்ல.

"கண்ணா..ணா நான் பஞ்சானாலும் மற்றவனிண்ட காயத்தை ஆற்றுவன்..ன்.."

ஓமுங்கோ. பலர் இப்ப இப்பிடித்தான் சொல்லுறீனம். காயத்தை ஏற்படுத்தவேண்டியது. பின்னர் காயத்துக்கு மருந்துபோடுறன் எண்டு சொல்லவேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் சிங்களம் படித்து பேசினாலும்

சிங்களவர் தமிழ் படித்து பேசினாலும்

அவர்கள் பிறப்பால் மாற வாய்ப்பு நம் நாட்டில் இல்லை.

இது முற்றிலும் உண்மையில்லை என்று நினைக்கிறேன், நீர்கொழும்பின் தோப்பு, வைக்கால போன்ற பகுதிகளில் இருந்த பல கத்தோலிக்க திருச்சபையின் தமிழ் மொழிமூலப் பாடசாலைகள் அரசு பொறுப்பேற்ற பிறகு சிங்கள மொழி மட்டும் கொண்ட பாடசாலைகளாக மாறின. இது அப்பகுதியில் சிங்களவராகப் பிறந்த மக்கள் சிறுபானமையினராக இருந்த போது 70 களில் நடந்தது. பிறகு சிங்களம் கற்ற தமிழ்க் குழந்தைகள் வளர்ந்த போது அவர்கள் தமிழ் என்பதால் வேலை வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டப் பட்டது. அதிலிருந்து தப்ப அவர்கள் கைக்கொண்ட உபாயம், இலஞ்சம் கொடுத்து தங்கள் குழந்தைகளைச் சிங்களவர் என்று பதிந்து கொண்டார்கள். தங்கள் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தையே முறைகேடாக மாற்றிக் கொண்டார்கள். சிறி லங்காவில் எதுவும் சாத்தியம் அஜீவன்!

இது முற்றிலும் உண்மையில்லை என்று நினைக்கிறேன், நீர்கொழும்பின் தோப்பு, வைக்கால போன்ற பகுதிகளில் இருந்த பல கத்தோலிக்க திருச்சபையின் தமிழ் மொழிமூலப் பாடசாலைகள் அரசு பொறுப்பேற்ற பிறகு சிங்கள மொழி மட்டும் கொண்ட பாடசாலைகளாக மாறின. இது அப்பகுதியில் சிங்களவராகப் பிறந்த மக்கள் சிறுபானமையினராக இருந்த போது 70 களில் நடந்தது. பிறகு சிங்களம் கற்ற தமிழ்க் குழந்தைகள் வளர்ந்த போது அவர்கள் தமிழ் என்பதால் வேலை வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டப் பட்டது. அதிலிருந்து தப்ப அவர்கள் கைக்கொண்ட உபாயம், இலஞ்சம் கொடுத்து தங்கள் குழந்தைகளைச் சிங்களவர் என்று பதிந்து கொண்டார்கள். தங்கள் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தையே முறைகேடாக மாற்றிக் கொண்டார்கள். சிறி லங்காவில் எதுவும் சாத்தியம் அஜீவன்!

உண்மை .... ஏற்றுக்கொள்கிறேன்.

நான் கூறுவது வேறு. இது வேறு.

முன்னது நடைமுறையில் உள்ளது.

பின்னது லஞ்சம் மற்றும் சில தேவைகளின் காரணங்களுக்காக ஏற்பட்டது.

நீர்கொழும்பு - நீர்கொழும்புக் கொச்சிக்கடை .......... இங்கேதான் தாங்கள் கூறும் தோப்பு : வாய்க்கால் போன்ற பகுதிகளும் ஏத்துக்கால் : உடங்காவல் :சின்னப்பாடு : குடாப்பாடு போன்ற இடங்களும் உண்டு. இங்கே உள்ளவர்கள் அனைவருமே தமிழர்கள்தான். வெளியில் சிங்களம் பேசுவார்கள். வீட்டில் தமிழ் பேசுவார்கள். உதாரணமாக ஆங்கில ஆதிக்கம் இல்லாத நாடுகளில் உள்ள நம்மவர் குழந்தைகள் போல வீட்டில் தமிழும் வெளியே அந்த நாட்டு மொழியும் பேசுவது போல..... இருந்தாலும் குழந்தைகள் அவர்கள் வயதை ஒத்தவர்களோடு அந்தந்த நாட்டு மொழிகளிலேயே பேசுவதை காண முடிகிறது. பெற்றோருடன் மட்டுமே தமிழ் அதிகம் பேசுவார்கள். ஆங்கில நாடுகளில் தமிழில் பேசுவோர் அரிது.

சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் அங்கிருந்த கத்தோலிக்க பாடசாலைகள் சிங்கள மயமாக்கப்பட்டன.

அதனால் அப்படியான தன்மைகள் வந்தன எனலாம்.

வேலை வாய்ப்பு கருதி அப்படி ஆகியிருக்கும்.

அதை இப்பகுதி சிங்களவர் பெரிது படுத்தியிருக்க மாட்டார்கள்.

அதை செய்ய வழி விட்டிருப்பார்கள். அதுவே தொடர வாய்ப்பானதாகியிருக்கலாம்.

இதென்ன பெரிய விசயம். யாழ்பாணம் : மட்டக்களப்பு : மன்னார் : திருகோணமலை போன்ற இடங்களில் இருந்த வந்த தமிழர்களுக்கே சிங்கள பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் : அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகள் இருக்கின்றனவே? :huh:

ஒருவர் சிங்கள பெயர் கொண்ட கடவுச்சீட்டில வெளிநாடு போய் பிடிபட்டு திரும்பி வந்து அரசியலேயே இருக்காரே? :D

இதுபோல பல காரியங்களுக்காக இன்னும் பலர் இருக்கிறார்கள். அது குறித்த விபரம் வேண்டாம்.

இருந்தாலும் நம்மால்தான் இன்னமும் யாழ்பாணத்தான் : தீவான் : மட்டக்களப்பான் : திருகோணமலையான் : மன்னாரான் : கொழும்பான் : இந்தியன் : சோனீ என்று அழைப்பதிலிருந்து சாதி பேதிகளைக் கூட நிறுத்த முடியவில்லை. :(

முதல்ல நாம தமிழர் என்று தமிழ் பேசுவோரை அழைக்க முயல்வோம். அடுத்து .................மற்றவை

Edited by AJeevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.