Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா வன்னிக்கு உணவுப் பொருள்களை அனுப்பத் தேவையில்லை: சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திசை திருப்பவில்லை தீபன். திசை காட்ட முயற்சிக்கின்றேன்.

இந்தியா அனுப்பும் நிவாரணம் வேண்டாம். ஏனெண்டால் எங்களை அழிக்க இந்தியா துணை போகுது.

இலங்கை தரும் நிவாரணம் வேண்டும்- இலங்கை எங்களை ஆராட்டுதோ???????

இலங்கை அனுப்பும் நிவாரணம் கொடுக்கத்தானே வேண்டும்.எம்முடைய நிலத்துக்காக நாம் அவர்களுக்கு வரிகட்டுகின்றோமே? யாருடைய பணத்தில் யார் உண்பது.

இந்தியாவால் நிவாரணம் கொடுக்காமல் கூட பிரச்சனையை முடித்து வைக்கலாம் ஆனால் அவர்களுக்கு புலிகளும் இருக்க வேண்டும் அரசாங்கமும் இருக்க வேண்டும்.ஏனெனில் அது அவர்களுடைய வல்லரசு கனவுக்கு தடைபோடும்.அதனால் தான் நடித்துக்கொண்டிருக்கின்றார

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அனுப்பும் நிவாரணம் கொடுக்கத்தானே வேண்டும்.எம்முடைய நிலத்துக்காக நாம் அவர்களுக்கு வரிகட்டுகின்றோமே? யாருடைய பணத்தில் யார் உண்பது.

சோலை வரி?????? எத்தனை பேர்????? நிவாரணம் எத்தனைபேருக்கு???? மருத்துவ உதவி எத்தனை பேருக்கு????தமிழர்களுக்குக் கொடுக்கும் சம்பளம்??????

விடுங்க.. இந்தியா அரசு தருவதும் தமிழகத் தமிழனின் வரிப்பணம்தான்? அதெ ஏன் உதாசீனம் செய்யவேண்டும்? அவனை ஏன் கவலைப்படுத்தவேண்டும்.

இலங்கையின் நிவாரணம், சேவைகள், வரிகட்டல் போன்றனவற்றை ஒட்டு மொத்த தமிழினமும் புறகணித்தால் எங்களுக்கு விடிவு கிட்டும்.

Edited by வாசகி

என்னுடைய பிரதெசத்தை பொறுத்தவரை எல்லோரும் கட்டிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.365 நாட்களும் அரச மருத்துவமனைகளில் கட்டிலை நிரப்பிக் கொண்டுதானே இருக்pன்றார்கள்.மின்சாரம் பாவனைக்குரிய மின்சாரம் மட்டும் அறவிட்டால் போதாது என்று பாதுகாப்பு வரி வேறு இது எல்லாம் யாருடைய பணம்.எம்முடைய நிலத்தில் சுரண்டும் வளங்கள் இது எந்த கணக்கில் சேர்ப்பது மொத்த தமிழருடைய பணமும் தானே இவற்றில் 200000 லட்சம் மக்களுக்கு நிவாரணமாக உணவனுப்ப முடியாதா? அப்படி 50 லொறிகள் போனாலும் அதிலும் 25 ஐநாவுடையது.மீதி எத்தணை லெறிகள் நிவாரணமாக போகின்றது அதிலும் கடைகளுகக்கும் சேர்த்து தானே செல்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் பிண்ணைபுகளை நீங்கள் படிக்கவில்லை எண்டு நினைக்கிறன்.

இந்திய மக்களை கேவலப்படுத்த சொல்லப்பட்டதல்ல இது.இந்த நிவாணம் அனுப்புவதை விட பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர புலிகளையும் அரசாங்கத்தையும் முயற்சிக்கலாமே? நிவாரணம் அனுப்பவேண்டிய தேவையே இருக்காதே?

இது தான் கருத்து.

எனக்கு 5.30 க்கு வேலைமுடிகின்றது.ஆனால் அன்னும் போக வில்லை.

நன்றி வாசகி றாளை சந்திப்போம்

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட அரசியல்வாதிகள் விளக்கமாக சொல்ல மாட்டினம். மாட்டினால் தப்பிக்கிறதுக்கிறதுக்காக ரெட்டை வைச்சு சொல்லுவினம். சரி விடுங்கோ. அங்க இருக்கிற சனம் சிங்களன் கொண்டில் சாவதை விட பட்டினி கிடந்து சாகட்டும்.

இராமேஸ்வரத்தில சேரம் பேசுனது ஞாபகத்துக்கு வருது. நாங்களும் சாப்பாடு வேண்டாம். சேவை ஒண்டும் வேண்டாம். நிவாரணம் வேண்டாம் எண்டு அண்ணைக்கு ஆதரவாக திலீபண்ணை செய்தது போல புரட்சி செய்தால் சர்வதேச மாந்த நேசர்கள் (அரசுகள் இல்லை) எங்களை ஆதரிப்பினம் எண்டு சொன்னால் பேச்சி பேசுற பேச்சைப் பார். எங்கையோ குளுருல இருந்து பனிப் பிடிச்சுட்டு எண்டு சொல்லுவினம்.

Edited by வாசகி

சம்பந்தர் தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறார்.

இந்திய அரசின் வன்னிக்கு உணவு அனுப்புவோம், வைத்தியர்கள் அனுப்புவோம் போன்ற பிதற்றல்களை விடுத்து ஈழப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகாண ஏதாவது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

இது மட்டுமல்ல, எத்தனை நாளைக்கு தான் இலங்கை அரசாங்கத்திடம் வெறுமனே கவலை தெரிவிக்கப்போகிறார்கள். எல்லாம் கபட நாடகம். தமிழ் மக்களின் சாபக்கேடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் கபட நாடகம். தமிழ் மக்களின் சாபக்கேடு.

ஓமோம்.. எல்லாம் கபட நாடகம். எங்கண்ட கையிலதான் எங்கட விடிவு இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறார்.

இந்திய அரசின் வன்னிக்கு உணவு அனுப்புவோம், வைத்தியர்கள் அனுப்புவோம் போன்ற பிதற்றல்களை விடுத்து ஈழப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகாண ஏதாவது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

சம்மந்தர் சொல்லியிருக்கார் ஆனால் இலங்கையோ வெற்றியின் மமதையில் இருக்கிறது விடுதலை புலிகள் ஒத்தாலும் இலங்கை அரசாங்கம் ஒரு போதும் ஒத்துப்போகாது அதற்க்கு மகிந்தவின் சில கூற்றுக்கள் உதாரணம்

சிங்கள பேரினவாதிகளுக்கு பேதி எடுக்க வைத்தால் தான் பேச்சு வார்த்தைக்கு வருவார்கள் அது வரைக்கும் ??? :lol::lol:

சம்பந்தன் அய்யா சொன்னது சரியே.

1. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தென்னிலங்கையில் இருந்து உணவுப் பொருட்களை அனுப்பத்தடை.

2. தனியார் நிறுவனங்கள் உணவு மருந்து வகைகளை தென்னிலங்கையில் கொள்வனவ செய்து வன்னிக்கு அனுப்பத் தடை.

3. ஐநாவின் உலக உணவுத்திட்டம் உணவு அனுப்பாததால் அல்ல ஓமந்தையில் சிறீலங்கா படையினர் அனுமதிக்காததால் செல்லவில்லை.

இந்தப் பின்னணியில் இந்தியா சிறீலங்கா ஊடாக உணவு அனுப்புவதாக நாடகம் நடத்துவது இனவாத சிறீலங்காவை விட மோசமான ஒரு வஞ்சனை.

நிலமைகள் தெரியாதது போல் இந்தியாவின் அரசி பருப்பு மருத்துவர் எண்டு கண்துடைப்பு கூட்டு பத்திரிகை அறிக்கைகள் எமது மக்களிற்கோ போராட்டத்திற்கோ உதவப் போறதில்லை. இந்தியா போராட்டம் தொடர்பாக கொள்கை ரீதியா தனது பழைய நிலைப்பாட்டை மாற்றவில்லை தமிழ்நாட்டின் கொந்தளிப்பை அடக்க கண்துடைப்புகள் செய்கிறது என்பது தெளிவாகிறது.

இது அடிப்படையில் ஈழத்தமிழர்களை அவமானப்படுத்தும் வழமையான தமிழ் எதிர்ப்பு இந்திய வரட்டுக்கொள்கை வகுப்பாளர்களினதும் சிங்கள இனவாதிகளினதும் கூட்டு நாடகம். இதன் உண்மை நிலையை தமிழ்நாட்டு உறவுகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

4 நாளைக்கு வன்னிக்கு உணவு அனுப்புவோம் என்பது இந்தியாவின் கண்துடைப்பு. தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் நடவடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறார்.

இந்திய அரசின் வன்னிக்கு உணவு அனுப்புவோம், வைத்தியர்கள் அனுப்புவோம் போன்ற பிதற்றல்களை விடுத்து ஈழப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகாண ஏதாவது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

இது மட்டுமல்ல, எத்தனை நாளைக்கு தான் இலங்கை அரசாங்கத்திடம் வெறுமனே கவலை தெரிவிக்கப்போகிறார்கள். எல்லாம் கபட நாடகம். தமிழ் மக்களின் சாபக்கேடு.

நாங்கள் யாரிடமும்

சாப்பாடு கேட்கவில்லை

உழைத்து

சமைத்து

நிம்மதியாக

உண்ண

உறங்க விடுங்கள் என்றுதான் கேட்கிறோம்

கேட்பதை தரமாட்டேன் என்பது மட்டுமல்ல

தரமறுப்பவனுக்கு உதவுவேன் என்பதைத்தான் நிறுத்தச்சொல்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கபட நாடகம் தான் இந்த உணவு வழங்கல் ஆக இருந்தாலும் கூட, அதனால் பயனடையப் போவது வன்னியில் பட்டினியால் வாடும் சனந்தானே? நாம் இங்கிருந்து இலகுவாக அதைப் புறக்கணிக்கக் கோருகிறோம், ஆனால் வன்னியில் அவலப்படும் பெற்றோரும், பிள்ளைகளும் இதை வேண்டாம் என்று சொல்வார்களா?

சிங்கள அரசுடன் போரிட்டுக்கொண்டே அது வன்னிக்கு சொட்டுச் சொட்டாக அனுப்பும் உணவை நாம் எதிர்பார்த்து இருக்கவில்லையா? அதுபோலத்தான் இந்த உணவுப்பொருட்களும். இன்றிருக்கும் நிலையில் யார் உதவுகிறார்கள் என்பதைவிட அவர்கள் செய்யும் உதவிதான் வன்னியில் அல்லல்ப்படும் மக்களுக்கு முக்கியம்.

வன்னியின் அவலத்தை இந்தியாவும் சிங்கள தேசமும் தமது அரசியல் காய்நகர்த்தல்களுக்கு ஏதுவாகப் பாவித்தாலும் கூட அங்கிருக்கும் மக்களுக்கு மூச்சுவிடக் கிடைத்த சந்தர்ப்பமாக இதைப் பார்ப்பதுதான் சரி .

ஏனென்றால் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் நிதிகளையும் முடக்கி விட்டார்கள், வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவது கடிணம், உள்ளூரிலும் விவசாயம் பார்க்க முடியாது, சிங்களவனும் உணவு அனுப்புகிறானில்லை...அப்படியா

சிங்களவ்னுக்கு ஆயுதம் கொடுப்பதையோ அல்லது எமது போராட்டத்தை நசுக்குவதையோ இந்த ஆரிய தேசம் ஒருபோதுமே நிறுத்தப் போவதில்லை. தமிழ்நாட்டு எழுச்சியை அடக்கத்தான் இந்த உணவு வழங்கும் படலமே !

இந்திய அரசு இலங்கையில் போர் நிறுத்தத்தை கட்டாயமாக திணிப்பதற்கு தயாராகவே இருக்கிறது.

புலிகள் வலிந்த தாக்குதல்களை நடத்தி சிறிலங்கா படையினருக்கு பின்னடைவுகளை தோல்விகளை ஏற்படுத்தினால் உடனடியாகவே போர் நிறுத்தத்தை கொண்டுவர இந்தியா அதிக சிரத்தை எடுக்கும்.

மிகச்சரியாக சொன்னீர்கள்.

அப்போது தி.மு.க வின் யுத்தநிறுத்த கோரிக்கையை டெல்லி ஆயுதமாக கையில் எடுக்கும்

கலைஞரும் தமிழக அரசின் கோரிக்கையை டெல்லி ஏற்றுக்கொண்டது!

வாழ்க மத்திய அரசின் மனிதநேயம்! என்று அறிக்கைகள் விட்டு புளங்காகிதம் அடைவார்

Edited by vettri-vel

தற்போதைய சூழ்நிலையில் நாம் செய்யவேண்டியது எமக்கெதிராகவோ எமக்கு சார்பாகவோ எது நடந்தாலும் அவற்றை நாம் எமக்கு சாதகமாக பிரச்சாரம் செய்ய பழகவேண்டும். கலைஞரின் மாற்றம் சாதகமோ பாதகமோ காலப்போக்கில் புரியும். சில கோணங்களில் நோக்கும்போது சாதகமாகத்தான் இருக்கின்றது. எதுவாகினும் சிங்கள அரசினதும் ஓட்டுக்குழுக்களிதும் பிரச்சாரத்திற்கு போட்டியாக ஏன் எம்மால் செய்ய முடியாது. குறைந்த வலுவிலேயே அவர்களால் இத்தனை வேகம் காட்டும்போது அதிக வலுவுடைய நாம் இன்னும் வேகமாக செல்ல வேண்டும். இனிவரும் காலங்களில் எது நடந்தாலும் அதை நாம் எமக்கு சாதகமானதாக மாற்றி பிரச்சாரம் செய்யவேண்டும். இதுதான் நாம் ஈழத்தின் விடியலிற்கு செய்யப்போகும் ஒரு பக்கபலம். .

எது நடத்தாலும் அதனை எமக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எதிராக எதுவும் நடந்தால் எமக்கு சாதகமாக நடந்துவிட்டது என்று தமிழ் மக்களிடத்தில் பரப்புரை செய்யும் கூத்துக்களை நிறுத்த வேண்டும். குறிப்பாக தமிழகத்தின் போராட்டங்களை நிறுத்திக் கொள்வதற்காக இந்தியா அறிவித்துள்ள நிவாரண வழங்கல் நாடகத்தை தமிழக போராட்டங்களிற்கு கிடைத்த வெற்றியாக பரப்புரை செய்யக் கூடாது.

நீங்கள் வேறு இங்கு கலைஞர் பொருட்கள் சேகரி;க்கின்றார் அனுப்புவதற்கு.அது பொதி செய்யப்படுவதிலிருந்து இலங்கை வந்தடையும் வரை எந்த பிரச்சனையும் இருக்காது.ஆனால் ஓமந்தையில் வைத்து தமிழ் நாட்டில் இருந்து புலிகளுக்காக அனுப்பப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டது.என்று செய்தி வரும் பாருங்கள்

அப்படி வராது.

இப்படி வரும்:

இந்தியா மனிதாபினான அடிப்படையில் வழங்கிய உணவு பொதிகளை எடுத்துச் சென்ற பாரவூர்திகள் மீது புலிப்பயங்கரவாதிகள் எறிகணை தாக்குதல்.

அதாவது ஒரு கல்லில் இரு மாங்காய்கள்.

1. புலிகள் மீது தமிழ்நாட்டில் அவப்பெயர்.

2. வன்னி மக்களின் பட்டினிச்சாவு

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய சூழ்நிலையில் நாம் செய்யவேண்டியது எமக்கெதிராகவோ எமக்கு சார்பாகவோ எது நடந்தாலும் அவற்றை நாம் எமக்கு சாதகமாக பிரச்சாரம் செய்ய பழகவேண்டும். கலைஞரின் மாற்றம் சாதகமோ பாதகமோ காலப்போக்கில் புரியும். சில கோணங்களில் நோக்கும்போது சாதகமாகத்தான் இருக்கின்றது. எதுவாகினும் சிங்கள அரசினதும் ஓட்டுக்குழுக்களிதும் பிரச்சாரத்திற்கு போட்டியாக ஏன் எம்மால் செய்ய முடியாது. குறைந்த வலுவிலேயே அவர்களால் இத்தனை வேகம் காட்டும்போது அதிக வலுவுடைய நாம் இன்னும் வேகமாக செல்ல வேண்டும். இனிவரும் காலங்களில் எது நடந்தாலும் அதை நாம் எமக்கு சாதகமானதாக மாற்றி பிரச்சாரம் செய்யவேண்டும். இதுதான் நாம் ஈழத்தின் விடியலிற்கு செய்யப்போகும் ஒரு பக்கபலம். .

இது கருத்து. உளமாராப் பாராட்டுகிறேன் பரணி.

ஒரு தடவை ஆகாயத்தால் சாப்பாடு கிடைத்து பிரச்சனையை அனுபவித்தோம். இப்போ தரையால் வருகிறதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.