Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழருக்குப் போட்ட பிச்சையா இது? கவுதமி ரூ 1,000 - மும்தாஜ் ரூ 5,000 - சினேகா ரூ 10,000

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழருக்குத் தமிழ்நாட்டில் நிதி திரட்டுவதைப் பதிவர்கள் சிலர் இது என்ன பிச்சையா எனக் கேட்டுக் கோபமாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்தனர். ஆனால் தற்போது நடிகர்கள் தாங்கள் அளித்துள்ள நிதியின் மூலம் தாங்கள் யார் என்பதைத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டு விட்டனர்.

01-11-2008 அன்று அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழ் திரையுலகை சார்ந்த நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர்.

மத்திய அரசின் நேரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து இங்கு வந்து இனி அப்பாவித் தமிழர்களின் மீது குண்டு வீசமாட்டோம் என்று இலங்கை அமைச்சர் கூறிச் சென்ற பின்பும், இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு சாதகமான எந்த ஒரு நல்ல மாற்றமும் நிகழ்வதற்கான அறிகுறிகள் எதுவும் தோன்றவில்லை.

இந்நிலையில் நடிகர்களின் உண்ணாவிரதத்தினால் விளையப் போகும் பலன் என்ன?

இதனால் இலங்கை அரசு திருந்தி விடப் போகிறதா?

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடுமா?

அப்பாவி தமிழர்களின் மீதான தாக்குதல்கள் ஓய்ந்து விடப் போகின்றனவா?

இலங்கைத் தமிழர்களின் மகிழ்ச்சியான வாழ்வு மலர்ந்து விடப் போகிறதா?

எதுவும் நடக்கப் போவது இல்லையே.

நடிகர்கள் அனைவரும் தமிழர்கள் மீது மிக அதிக அன்பு உடையவர்கள் , தமிழர்கள் மீதும் தமிழர்கள் நலன் மீதும் எப்போதும் அக்கறை உடையவர்கள், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர அவ்வப்போது போராடி அவற்றைத் தீர்த்து வைப்பவர்கள் என்றால் , நடிகர்கள் தங்கள் உடைய தமிழ் இன உணர்வை வெளிப்படுத்திப் போராடுகிறார்கள் என்று மகிழலாம்.

ஆனால் உண்மை அதுவல்லவே?

நடிகர்கள் தங்களுடைய ரசிகர்கள் தங்களிடம் வைத்துள்ள அபரிமிதமான நம்பிக்கைகள் பட்டுப் போய் விடக் கூடாது என்பதால் , அந்த நம்பிக்கையைக் காத்துக் கொள்ளவும் - தமிழக மக்கள்- பத்திரிகைகள்- ஊடகங்கள்- ஆகியோரின் பழிச் சொல்லுக்குக் ஆளாகி விடக் கூடாது என்பதாலுமே இது போன்ற சமுதாய நலன் கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர் என்றே தோன்றுகிறது.

திரையில் நடிகர்கள் ஏற்கும் வேடங்களைப் போலவே அவர்கள் மக்கள் தொண்டர்கள், அடுத்தவர் துன்பத்தைக் கண்டு துடிப்பவர்கள், சமூகத்தைக் காக்கப் போகும் தலைவர்கள் என்றெலாம் எண்ணி , அந்த நடிகர்களை தங்கள் இதயத்தில் சுமந்து வாழும் அப்பாவி ரசிகர்களுக்கு இந்த நடிகர்கள் இதுவரை ஏதாவது செய்துள்ளனரா?

தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பெரிய பிரச்சினை வரும் நேரத்தில் மட்டும் இது போல ஒரே ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதம், கண்டனப் பொதுக் கூட்டம் என்று கலந்து கொண்டு அதோடு தங்கள் கடமை முடிந்து விடுகிறது என்று சென்று விடுகின்றனர்.

அதற்குப் பின்னர் அந்தப் பிரச்சினை தீர்ந்ததா , தமிழக மக்கள் நிம்மதி அடைந்து விட்டனரா, என்பதைப் பற்றியெல்லாம் இந்த நடிகர்களுக்குக் கவலை இல்லை.

நடிகர்களுடைய கவலை எல்லாம் தங்கள் அடுத்த திரைப்படத்திற்கு சம்பளத்தை எவ்வளவு உயர்த்தலாம்? , திரைப்படப் பணிகள் முடிந்தவுடன் ஓய்வுக்காக எந்த வெளிநாட்டிற்கு செல்லலாம்? , வெளி மாநிலங்களில் எங்கு நிலம், பண்ணை வீடுகள் , தோப்புகள் வாங்கலாம் என்பவைகளைப் பற்றித்தான்.

ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்தை வெளியாகும் முதல் நாள் அன்றே பார்த்து விட வேண்டும் என்று துடிப்பதைப் பயன்படுத்தி திரைப்படம் வெளியாகும் முதல் நாளில் ரசிகர்களுக்கான பிரத்தியேகக் காட்சிகளை தனி விலையில் விற்பதன் மூலம் மட்டுமே தமிழகம் முழுவதும் இருந்து எவ்வளவு பணம் கிடைக்கிறது என்று தெரியுமா?

ஒவ்வொரு அப்பாவி ரசிகனும் தன்னுடைய அபிமான நடிகரின் திரைப்படம் வெளியாகும் நாளில் அந்த நடிகனுக்கு கட்-அவுட்டுகள், விளம்பரப் பேனர்கள், சுவரொட்டிகள் , நடிகரின் உருவங்களுக்கு அபிசேகங்கள் என்று எவ்வளவு பணத்தை செலவழிக்கிறான் என்று எண்ணிப் பார்த்தது உண்டா?

அந்த ரசிகர்கள் ஒவ்வொருவனும் இந்த நடிகர்களைப் போல குளிர்சாதன அறைகளிலும் , அரண்மனை போன்ற வீடுகளிலும் வசித்துக் கொண்டு , சொகுசு வாகனங்களில் வலம் வந்து கொண்டு , தினமும் லட்சங்களில் சம்பாதிப்பவர்கள் அல்ல?

அடுத்த நாள் காலையில் தனது உணவுக்கே எந்த வித உறுதியும் இல்லாத - அன்றாடம் தனது உணவுக்கே உழைத்து சாப்பிட வேண்டிய அடிமட்ட நிலையில் உள்ள கூலித் தொழிலாளர் முதல், மாதா மாதம் சில பல ஆயிரங்களில் கிடைக்கும் ஊதியத்தை வைத்துக் கணக்குப் போட்டுக் காலத்தை நகர்த்தும் நடுத்தர குடும்பத்தை சார்ந்த சராசரி மனிதர்கள் வரை உள்ளோர்தான் நடிகர்களின் ரசிகர்கள்.

ஒரு நாளுக்கு தன்னுடைய சம்பளத்தை லட்சங்களில் பெற்றுக் கொள்ளும் இந்த நடிகர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளித் தந்த நிதியைப் பாருங்கள்,

ரஜினி காந்த் - 10 லட்சம்

கமலகாசன் - 5 லட்சம் .

விஜய காந்த் - 1 லட்சம்

சரத்குமார் - 2.5 லட்சம்

சத்திய ராஜ் - தெரியவில்லை

பிரபு - தெரியவில்லை

மோகன் - 25,000

பிரகாஸ் ராஜ் - தெரியவில்லை

விஜய டி. ராசேந்தர் - தெரியவில்லை

சிவக் குமார் + சூர்யா+ கார்த்தி - 5 லட்சம்

அஜித் குமார் - 5 லட்சம்

விஜய் - 1 லட்சம்

சிலம்பரசன் - 2 லட்சம்

தனுஸ் - தெரியவில்லை

சிபி ராஜ் - 1 லட்சம்

வடிவேலு - 2.5 லட்சம்

நடிகைகள்

திரிசா- தெரியவில்லை

நயன்தாரா -தெரியவில்லை

மீனா - தெரியவில்லை

குஸ்பூ -தெரியவில்லை

மனோரமா- 25,000

ராதிகா- 1 லட்சம்

கவுதமி - 1,000

மும்தாஜ் - 5,000

சினேகா - 10,000

நான் தெரியவில்லை என்று குறிப்பிடிருப்பவர்கள் எந்த நிதியும் தரவில்லை என்று நினைக்கிறேன்,

இந்த நடிகர்கள் ஒரு திரைப்படத்திற்கு 2 ,3 கோடிகள் முதல் 30 கோடிகள் வரை கூட சம்பாதிக்கின்றனர் என்று நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா?

அப்பாவி இலங்கைத் தமிழர்கள் இருபது ஆண்டுகளாக உண்ண உணவு, உறைவிடம் , உடை போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட முழுமையாக அனுபவிக்க முடியாமல் குண்டுகளாலும் , துப்பாக்கிகளாலும், இன வெறியர்களின் பாலியல் துன்புறுத்தல்களாலும் துரத்தி அடிக்கப் பட்டு துன்புறுத்தப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளித் தந்துள்ள நிதியைப் பார்க்கும் போதுதான் உண்மையிலேயே இதயம் பதறுகிறது.

இந்த நடிகர்கள் தங்களின் திரைப்படங்களின் வெளிநாட்டு விநியோக உரிமை மூலமாக சம்பாதிப்பது மட்டும் எத்தனை கோடிகள் தெரியுமா?

பிழைக்க வழி தேடியும் , உயிருக்குப் பயந்தும் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ள தமிழர்கள் அங்கு கூட தங்கள் அபிமான நடிகர்களின் திரைப்படங்களைக் காண எவ்வளவு அள்ளித் தருகிறார்கள் தெரியுமா?

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்கள் சங்கக் கடனை அடைக்கவும், புதிய கட்டிடம் கட்டவும் நிதி வசூல் செய்ய வெளிநாடுகளில் நட்சத்திர இரவு நடத்தி வசூல் செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

இத்தனை கோடிகள் சம்பாதிக்கும் நடிகர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் கட்டிடம் கட்டக் கூடாதா ?

நடிகர் சங்க கடன் அடைக்க கலை இரவு நடத்திய போது , நடிகர்களிடம் அப்படியொரு கேள்வியைக் கேட்காமல் பணத்தை அள்ளித் தந்த ரசிகர்களுக்கு இந்த நடிகர்களின் நன்றிக்கடன் இதுதானா?

மக்களைக் காப்பேன் , ஊழலை ஒழிப்பேன், தீவிரவாதிகளை கொல்வேன், நாட்டை எதிரிகளிடம் இருந்து பாது காப்பேன் என்று வீர வசனம் பேசி அப்பாவி ரசிகனை ஏமாற்றி சம்பாதித்த கோடிகளில் அள்ளிக் கொடுக்க மனம் இல்லாவிட்டாலும் கிள்ளியாவது கொடுத்து இருக்க வேண்டாமா?

வெளிநாடுகளில் தமிழ் திரைப்படங்களுக்கு இன்று கிடைக்கும் கோடிகள் அங்கு வாழும் இலங்கைத் தமிழர்கள் கொட்டிக் கொடுக்கும் பணம் இல்லையா?

தங்களுக்கு அன்பையும் , ஆதரவையும் , பணத்தையும் அள்ளிக் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு நடிகர்கள் என்ன பிச்சையா போடுகிறார்கள்?

தங்கள் அபிமான தலைவர்கள் எப்படிப் பட்ட வள்ளல்கள் என்பதை உணர்ந்து இனியாவது தமிழர்கள் விழித்துக் கொள்வார்களா என்றால் ...............

அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றே தோன்றுகிறது..........

http://arivili.blogspot.com/2008/11/1000-5000-10000.html

விஜய் உண்ணாவிரதமும் சில தமாஷ்களும்...

Source taken from : www.tamilcinema.com

உணர்வை காட்டுகிற உண்ணாவிரதம்தான். இதிலேயும் சில தமாஷ்கள் அரங்கேறின. லாரன்ஸ் பேசும்போது விஜய், அஜீத் இருவரும் தனது ரசிகர்களிடம் சொல்லி நிதி திரட்டி கொடுக்க வேண்டும் என்று பேசினார். ஆனால் இதை கண்டு கொள்ளவே இல்லை இருவரும். விஜய் பேசும்போது, இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தனது ரசிகர்கள் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றார். இன்னும் 24 மணி நேரத்திற்குள் குறைந்தது ஒரு கோடி தந்தியாவது அவருக்கு போய் சேர வேண்டும் என்றார். தமாஷ் என்னவென்றால், இவர் பேசியது சனிக்கிழமை பிற்பகலில். மாலை ஆறு மணியோடு பல ஊர்களில் தந்தி ஆபிசை மூடி விடுவார்கள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முழு விடுமுறை. இந்த நிலையில் 24 மணி நேர கெடு கொடுத்த விஜயின் யோசனையை எப்படி எடுத்துக் கொள்வது?

ராதாரவியின் பேச்சில் விஜய் பேச்சை விடவும் தமாஷ். ஈழத் தமிழர்களை இலங்கை வாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டுமாம். அப்படி அழைத்தால் இந்தியா உதவும் என்றார். நல்லவேளையாக பின்னாலேயே பேச வந்த திருமாவளவன், வரலாற்றை எடுத்துச் சொல்லி ராதாரவிக்கு புரிய வைத்தார். இலங்கையை பொறுத்தவரை வந்தேறிகள் என்பது சிங்களர்கள்தான். வேண்டுமென்றால் சிங்களவர்களை ‘இலங்கை வாழ் இந்தியர்கள்’ என்று அழைக்கலாம். ஏனென்றால், இந்திய அரசு அவர்களுக்குதான் மறைமுக உதவி செய்கிறது என்றார் காட்டமாக!

http://cenimafun.blogspot.com/2008/11/blog-post_3328.html

அப்புமாரே! எம்மவர்கள் பலர் (சிலரல்ல) ஐந்து சதம் கூட இன்று வரை கொடுக்காமல் இருக்கிறார்கள், இத்தனைக்கும் எல்லாவற்றையும் சிங்களன் அழித்து விட்டான் என்று கூறி அகதி அந்தஸ்து கேட்டவர்கள்!!!

முதலில் எம்மைத் திருத்துவோம், பிறகு ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புமாரே! எம்மவர்கள் பலர் (சிலரல்ல) ஐந்து சதம் கூட இன்று வரை கொடுக்காமல் இருக்கிறார்கள், இத்தனைக்கும் எல்லாவற்றையும் சிங்களன் அழித்து விட்டான் என்று கூறி அகதி அந்தஸ்து கேட்டவர்கள்!!!

முதலில் எம்மைத் திருத்துவோம், பிறகு ....

எல்லாருமல்ல நீங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

அப்புமாரே! எம்மவர்கள் பலர் (சிலரல்ல) ஐந்து சதம் கூட இன்று வரை கொடுக்காமல் இருக்கிறார்கள், இத்தனைக்கும் எல்லாவற்றையும் சிங்களன் அழித்து விட்டான் என்று கூறி அகதி அந்தஸ்து கேட்டவர்கள்!!!

முதலில் எம்மைத் திருத்துவோம், பிறகு ....

நெல்லையான்,

இந்த ஆக்கத்தை எழுதிய வலைப்பதிவர், அறிவிழி என்கிற இந்தியர். அவர் பார்வையில் அவர் எழுதியது சரிதானே..!

ஆனால் எங்கட ஆக்கள் சிலரைப் பற்றி நீங்கள் எழுதியதில் மாற்றுக்கருத்து இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது ஈழத்தமிழனுக்கு பணம் ஒரு குறையல்ல.

புலம்பெயர் நாடுகளில் எம் மக்களுக்காக சேகரிக்கப்பட்டவைகள் ஏராளமாக ஒருசில சதிகளினால் முடக்கப்பட்டு விட்டது.

தமிழக திரையுலகமே,தமிழக உறவுகளே! உங்கள் குரலும்,உங்கள் ஆதரவுமே எமக்கு தேவை.

நீங்கள் எமக்காக உங்கள் பதவிகளை இழக்க வேண்டாம்.

உங்கள் வாழ்க்கையை இழக்க வேண்டாம்.

உங்கள் சுகபோகங்களை இழக்க வேண்டாம்.

எமக்காக குரல் தாருங்கள்.

உங்கள் ஆதரவு இருந்தாலே எமக்கு போதும்.முக்கியமாக தமிழ்திரையுலகத்தினரே நீங்கள் ஒவ்வொருவரும் தனி ஊடகங்களை போன்றவர்கள்.எந்தவொரு செய்திகளையும் இலகுவாக சகல இடங்களுக்கும் எடுத்து செல்லும் வல்லமை உங்களுக்குண்டு.

எனவே உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தென்னிந்திய நடிகர்கள் நிதி தரவில்லையென்பது ஒரு தேவையற்ற ஆதங்கம். வழங்கியளவுக்கு திருப்திப்படுங்கள். இது வெறும் நன்கொடைதான் - இவ்வளவு தான் தரவேண்டும் என்ற நியதி எதுவும் கிடையாது. தமிழகத்தில் சேர்க்கப்பட்ட நிதி மத்திய அரசு மூலமாகத்தான் அனுப்பப்படும் என்கின்றபோது சேர்த்த நிதிமேல் தமிழக அரசுக்கு இனி எவ்வித உரிமையும் கிடையாது என்பதுதான் பொருள். சேர்க்கப்பட்ட நிதியை முற்றுமுழுதாக மத்திய அரசு ஈழ மக்களுக்கு வழங்கும் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. எனினும் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

Edited by vanangaamudi

வணக்கமுங்கோ எப்பதான் திருந்தப்போறமோ தெரியாது

நாங்களும் கொடுக்கமாட்டம் கொடுக்கிறவனிற்கும் நக்கலும் நையாண்டியும் அவர்கள் அதாவது கொடுத்தார்கள் எம்மவர்கள் இப்படி கொடுப்பார்களா ? நவம்பர் மாதம் வருகிறதென்றாலே நிறைய பேர் ரெலிபோன் ஓவ் செய்திடுவாங்கள் . காரணம் காசு கேட்பாங்கள் என்டு ..

ஆமா மேலே எழுதினவர் என்ன கண்ணை மூடிக்கொண்டு எழுதினவரா தெரியவில்லை தெரியவில்லை என்றால் தேடி பார்த்து எழுதிறதுதூனே

நயன்தாரா 5 லடசம் கொடுத்தவர் என்று கொட்டை எழுத்திலை இங்கையே வெட்டி ஓட்டி இருக்கிறாங்கள்

சும்மா மற்றவனை நக்காமல் எங்கடை கடமை என்னவோ அதை செய்வம்

தயவு செய்து தமிழகத்தில் ஈழமக்களுக்காக ஏற்பட்டிருக்கும் ஆதரவை பாரட்டவிட்டாலும் கொச்சைப்படுத்தும் செய்திகளை வெளிவிடவேண்டாம்..

அவர் அவர் வசதிகளுக்கு , நிலைமைகளுக்கு ஏற்ப அவர்கள் உதவி செய்திருக்கிறார்கள்..

நடந்தது உண்ணாவிரதப்போரட்டம்...அதற்கு வந்து பங்குபற்றியதிற்கு நாம நன்றியாக இருக்கவேண்டும்.. எதிர்காலத்தில் இப்படியான கொச்சைப்படுத்தும் செய்திகளை வெளியிட்டு நாகரிகமில்லாத இனமாக நடக்கவேண்டாம்...எவரையும் வற்புறுத்தி எதுவும் செய்ய முடியாது அன்பால்,அறிவால் நாம் எதனையும் அடையலாம்..

சேர்க்கும் பணமும் நிச்சயமாக பாதிப்படைந்திருக்கும் மக்களின் கைகளில் சேர்ந்தபின் தான் எதுவும் நிச்சயம்? இந்திய அரசு தற்போது தமிழகத்தை கணக்கில் எடுக்காது இலங்கையுடன் இரகசியமாகவும். பகிரங்கமாகவும் பல விடையங்களை கொண்டு செல்கிறது.. அதனை விட இந்திய அரசிற்கு கவலை கொடுக்கும் எதுவும் செயமாடேன் என்று கருணானிதி அவர்கள் கூறியுள்ளர் எனவே ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் கைவிட்ட மாதிரி நிலைமையில் இலங்கையரசு தனது கபட நடகம் தொடஙி விட்டது கிளினொச்சி முழுவதும் செல்லடி.விமானத்தக்குதல் என்று..என்வே நடிகர் சங்கம் மற்றும் என்றும் மாறத தமிழக கட்சிகளே உறுதியான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஈழத்தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துகொண்டு இருக்கின்றனர்..எனவே கவனமாக கையாளுங்கள்..

சிங்களவன் இந்தியா உதவி செய்யாவிட்டாலும் இந்தியா எமக்கு ஆதரவாகத்தான் பேசியது என்று பிரச்சாரம் செய்கின்றான் தனக்கு எதிரானதையும் தனக்கு ஆதரவானதாக மாற்ற முயல்வான் அல்லது வெளி உலகிற்கு காட்டிக்கொள்வான் அது அவனது சாமர்த்தியம் நாம் அப்படி இல்லை உதவி செய்யிறவனையும் விடமாட்டம் . வைக்கல்பட்டடை குணம் என்று இதைத்தான் சொல்லுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்பத்தான் கவலைப்படுறார்கள் :icon_mrgreen: சிலபேர்

ஆம் இந்தக்களத்தில் கருத்துக்கள் சொல்லும் எல்லோரும் ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது அல்ல இங்கு முக்கியம் ஆனால் யார் யார் எமக்கு எமது உறவுகளுக்கு ஆதரவு கரம் கொடுத்து குரல் கொடுத்தார்கள் என்பது தான் இங்கு முக்கியம் எமது மக்களுக்கு பணம் இப்பொழுது பொருட்டு அல்ல காரணம் பணத்தை அங்கு வைத்து அல்லது எதுவும் வாங்க முடியாத நிலை இன்று ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு வாழும் எமது உறவுகளின் துயர் துடைக்க அவர்களுக்கு வேண்டியது ஆதரவு குரல் தான் முதலில் தேவை அதன் பின்பு தான் எல்லாமே எனவே யார் பணம் கொடுத்தார்கள் என்று அறுதி இட்டு அவர்களை நோகடிக்காமல் நமக்கென்ற கடமைகள் எமது தலைமேல் நிறையவே உண்டு எனவே அதனை செவ்வனே செய்தால் அங்கு உள்ள எமது மண் பூரிப்படைந்து விடுதலையும் கிடைக்கும்

எமது போராட்டம் தொடங்கியது யாரையும் நம்பி இல்லை எமது உறவுகளை நம்பி மட்டும் தான் எனவே அயல் வீட்டான் வந்து உதவுவான் என்ற நம்பிக்கை இருந்தாள் அதை இன்றே மறந்து விட்டு என் கடமையை நான் என் தாய் நாட்டுக்கு எனது சகோதரனுக்கு என் உறவுகளுக்கு என் ஊருக்கு என் மண்ணுக்கு நான் செய்தேனா என்று நான் எனது உள்ளத்தை தட்டிக்கேட்டு அதனை சரிவர செய்தால் எல்லாம் நன்றாய் நடக்கும் .

என்றும் நன்றியுடன்

நாதன் தோமஸ்

கொடுக்கும் நிதிப் பங்களிப்புகளை விட ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான பிரதிபலிப்புகளை தமது கலைப் படைப்புகளில் முடிந்தவரை காட்டுவார்களாக இருந்தால் அதுவே பெரிய உதவி!

படங்களின் பொருளாதார வெற்றிக்காக மசால இருக்க வேண்டும். ஆனால் கூடவே பயனுள்ள செய்திகளையும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டால் பெரும் உதவியாக இருக்கும். தற்பொழுது சேர்க்கப்படுபவை எல்லாம் கெட்டு சீரழிந்து போவதற்கானதாகத்தான் அனேகமாக இருக்கிறது.

கொடுப்பவரையும் கொடுக்கவிடாது தடுக்கும் நோக்கம்தான் மேற்படி ஆக்கத்தில் தென்படுகிறதே தவிர வேறு எதுவுமில்லை. அந்த நடிக நடிகையர் தங்களது திறமையால், என்னென்ன இழப்புகளைக் கண்டு மேலெழுந்தார்களோ.. அவர்களுகஇகு எமது பிரச்சனைகள் எவ்வளவு தூரம் புரியுமோ.. எனினும், ஏதோ ஒரு உன்னுதலினால் இவ்வளவாவது கொடுத்தார்களே என்று பாராட்டுவதைவிடுத்து.. அவர்களை எள்ளல் செய்யும் போக்குடைய மேற்படி ஆக்கத்தின் உள்நோக்கம் நேர்மைத்தனமாக எனக்குத் தென்படவில்லை.

எனவே, உறவுகள் ஆக்கங்களை இணைக்கும்பொழுது கவனமாக இருங்கள். நல்லது செய்தாலும்.. பிழைபிடிப்பவன் ஈழத்தமிழன் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக்கிவிடாதீர்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் கொடுத்ததை இவர்கள் எப்படித் தெரிந்து கொண்டார்கள். புகை நுழையாத இடத்துலயும் பேப்ப்ர்காரம் நுழைஞ்சிடுவான் எண்டு நல்ல பேப்பர்க்காரனுக்கு சொன்னதை தங்களுக்கு வசதியாக எடுத்துக்கொண்ட சில பேப்பர்க்காரர்களின் சேதிகளை இங்கே தந்து சேவை செய்யும் நபர்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் மேலான பனி.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தை தமிழக மக்களுக்கும் மத்திய அரசுக்கும் விளக்கி எங்கள் போராட்டத்தை அங்கீகரித்தால் அதுவே போதும்.குறைந்த பட்சம் சிறிலங்கா அரசுக்கு இந்திய மத்திய அரசு போர்த்தளபாட, நிபுணத்துவ ,உளவுசம்பந்தபட்ட உதவிகளைச் செய்யாமல் தடுத்தாலே அதுவே அவர்கள் எங்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும். ஈழத்தமிழர்கள் தமிழகத்திலிருந்து நிதியை எதிர்பார்க்கவில்லை. நீதியான, உண்மையான ,உறுதியான ,தார்மீக ஆதரவே எங்களுக்குப் போதும்.

Edited by pulavar

தற்போது ஈழத்தமிழனுக்கு பணம் ஒரு குறையல்ல.

புலம்பெயர் நாடுகளில் எம் மக்களுக்காக சேகரிக்கப்பட்டவைகள் ஏராளமாக ஒருசில சதிகளினால் முடக்கப்பட்டு விட்டது.

தமிழக திரையுலகமே,தமிழக உறவுகளே! உங்கள் குரலும்,உங்கள் ஆதரவுமே எமக்கு தேவை.

நீங்கள் எமக்காக உங்கள் பதவிகளை இழக்க வேண்டாம்.

உங்கள் வாழ்க்கையை இழக்க வேண்டாம்.

உங்கள் சுகபோகங்களை இழக்க வேண்டாம்.

எமக்காக குரல் தாருங்கள்.

உங்கள் ஆதரவு இருந்தாலே எமக்கு போதும்.முக்கியமாக தமிழ்திரையுலகத்தினரே நீங்கள் ஒவ்வொருவரும் தனி ஊடகங்களை போன்றவர்கள்.எந்தவொரு செய்திகளையும் இலகுவாக சகல இடங்களுக்கும் எடுத்து செல்லும் வல்லமை உங்களுக்குண்டு.

எனவே உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கின்றோம்.

கொடுப்பவரையும் கொடுக்கவிடாது தடுக்கும் நோக்கம்தான் மேற்படி ஆக்கத்தில் தென்படுகிறதே தவிர வேறு எதுவுமில்லை. அந்த நடிக நடிகையர் தங்களது திறமையால், என்னென்ன இழப்புகளைக் கண்டு மேலெழுந்தார்களோ.. அவர்களுகஇகு எமது பிரச்சனைகள் எவ்வளவு தூரம் புரியுமோ.. எனினும், ஏதோ ஒரு உன்னுதலினால் இவ்வளவாவது கொடுத்தார்களே என்று பாராட்டுவதைவிடுத்து.. அவர்களை எள்ளல் செய்யும் போக்குடைய மேற்படி ஆக்கத்தின் உள்நோக்கம் நேர்மைத்தனமாக எனக்குத் தென்படவில்லை.

எனவே, உறவுகள் ஆக்கங்களை இணைக்கும்பொழுது கவனமாக இருங்கள். நல்லது செய்தாலும்.. பிழைபிடிப்பவன் ஈழத்தமிழன் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக்கிவிடாதீர்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாளுக்கு தன்னுடைய சம்பளத்தை லட்சங்களில் பெற்றுக் கொள்ளும் இந்த நடிகர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளித் தந்த நிதியைப் பாருங்கள்,

சத்திய ராஜ் - தெரியவில்லை

பிரபு - தெரியவில்லை

பிரகாஸ் ராஜ் - தெரியவில்லை

விஜய டி. ராசேந்தர் - தெரியவில்லை

தனுஸ் - தெரியவில்லை

நடிகைகள்

திரிசா- தெரியவில்லை

நயன்தாரா -தெரியவில்லை

மீனா - தெரியவில்லை

குஸ்பூ -தெரியவில்லை

நான் தெரியவில்லை என்று குறிப்பிடிருப்பவர்கள் எந்த நிதியும் தரவில்லை என்று நினைக்கிறேன்,

ரஜினிகாந்த் - ரூ.10 லட்சம், கமலஹாசன் - ரூ.5 லட்சம், சிவகுமார் - ரூ.5 லட்சம், நயன்தாரா ரூ.5 லட்சம்.

சரத்குமார் - ரூ.2 லட்சம்

விஜயகாந்த் - ரூ.1 லட்சம்

சத்யராஜ் - ரூ.1 லட்சம்இளையராஜா - ரூ.1 லட்சம்

எஸ்.வி.சேகர் - ரூ.25,000

இராம நாராயணன் - ரூ.25,000

விஜய் - ரூ.1 லட்சம்

விக்ரம் - ரூ.2 லட்சம்

சிலம்பரசன் - ரூ.2 லட்சம்

பிரபு - ரூ.2 லட்சம்

கார்த்திக் - ரூ.1 லட்சம்

எஸ்.ஜே.சூர்யா - ரூ.1 லட்சம்

சிபிராஜ் - ரூ.1 லட்சம்

ஜெயம் ரவி -ரூ.50,000

பரத் - ரூ.50,000

ஜே.கே.ரித்திஷ் - ரூ.2 லட்சம்

ராஜேஷ் - ரூ.50,000

கே.பாக்யராஜ் - ரூ.25,000

மயில்சாமி - ரூ.25,000

மோகன் - ரூ.20,000

பாண்டியராஜன் - ரூ.10,000

பிருதிவிராஜ் - ரூ.5,000

பிரசன்னா - ரூ.10,000

ஒய்.ஜி.மகேந்திரன் - ரூ.15,000

பிரசாந்த் - ரூ.25,000

பசுபதி - ரூ.25,000

விஜயகுமார், அருண்விஜய் - ரூ.25,000

அப்பாஸ் - ரூ.10,000

ராதிகா சரத்குமார் - ரூ.1 லட்சம்

தேவயானி - ரூ.10,000

மனோரமா - ரூ.25,000

குட்டி பத்மினி - ரூ.5,000

  • கருத்துக்கள உறவுகள்

:wub: இங்கு 1000, 2000 தந்தவர்களை நாம் கோவிக்கக் கூடாது. பாவம் அவர்களுக்கு என்ன கஷ்ட்டமோ யாரறிவார் ? இந்தக் கஷ்ட்டத்திலும் அவர்கள் தங்களால் இயலுமானதைச் செய்வது பெரிய விடயந்தான்.

அவர்கள் தரும் பணம் வெறும் அடையாளம் தான். ஆனால் அவர்களது தார்மீக ஆதரவு என்பது இதை விடவும் எத்தனையோ மடங்கு பெரியது. இதுவரை காலமும் தமிழ்த் திரையுலகம் ஈழமக்கள் சார்பாக இப்படித் திரண்டெழுந்தததாக வரலாறு இல்லை. ஆகவே தருவதை வாங்கிக் கொள்வோம், அனைவரையும் சேர்த்துக் கொள்வோம் !!!!இதில் நீ பெரிது , நான் பெரிது என்கிற விவாதம் வேண்டாம் !

தானம் கொடுத்த மாட்டிற்று பல்லைப்பிடிச்சு பார்த்த கதைதான் எம்மவர் நிலை

ஒரு சதம் கொடுத்தாலும் அது மரியாதைக்குரியதுதான் காரணம் கொடுக்கவேண்டும் என்கின்ற மனதே பெருமைக்குரியது. .

அப்புமாரே! எம்மவர்கள் பலர் (சிலரல்ல) ஐந்து சதம் கூட இன்று வரை கொடுக்காமல் இருக்கிறார்கள், இத்தனைக்கும் எல்லாவற்றையும் சிங்களன் அழித்து விட்டான் என்று கூறி அகதி அந்தஸ்து கேட்டவர்கள்!!!

முதலில் எம்மைத் திருத்துவோம், பிறகு ....

இதே தான் நெல்லியன் ! எம்மில் பலருக்கு எடுத்ததிற்கு எல்லாம் மற்றவனை எதிர்த்தும் மற்றவன் செய்கின்ற உதவிகளை நையாண்டி செய்தும் பழகிவிட்டது கடந்த காலங்களில் நாம் எதுவுமே செய்யாமல் .....

இதற்குள் அவன் துரொகி நீ துரொகி என்று பட்டமளிப்பு விழாக்கள் நடத்துவதென்றால் போதும் ......

இது தான் நாம் திரும்ப திரும்ப விடுகின்ற பிழைகள் ..... இதுகளை சொன்னால் நொல்லுறவனும் துரோகி .... அலுவல் முடிஞ்சுது ...

நாங்களும் கொடுக்கமாட்டம் கொடுக்கிறவனிற்கும் நக்கலும் நையாண்டியும் அவர்கள் அதாவது கொடுத்தார்கள் எம்மவர்கள் இப்படி கொடுப்பார்களா ? நவம்பர் மாதம் வருகிறதென்றாலே நிறைய பேர் ரெலிபோன் ஓவ் செய்திடுவாங்கள் . காரணம் காசு கேட்பாங்கள் என்டு ..

பரணி !இது தான் தமிழன் இன்னமும் இழிபடுவதிற்கு ஓரு காரணம் ! எமக்கா உதவி செய்பவனை அது சிறிதோ அல்லது பெரிதோ பிரச்சனையல்ல அந்த உதவியை வைத்துக் கொண்டு எவ்வாறு அவர்களிற்கு மேலும் எமது நிலமையை விளக்கி மேலும் உதவிகளையும் தார்மீக ஆதரவையும் பெறாலம் என்கிற பக்குவம் எம்மவர்கள் பலரிடம் இல்லாது போய்விட்டது.

ரஜினிகாந்த் - ரூ.10 லட்சம், கமலஹாசன் - ரூ.5 லட்சம், சிவகுமார் - ரூ.5 லட்சம், நயன்தாரா ரூ.5 லட்சம்.

சரத்குமார் - ரூ.2 லட்சம்

விஜயகாந்த் - ரூ.1 லட்சம்

சத்யராஜ் - ரூ.1 லட்சம்இளையராஜா - ரூ.1 லட்சம்

எஸ்.வி.சேகர் - ரூ.25,000

இராம நாராயணன் - ரூ.25,000

விஜய் - ரூ.1 லட்சம்

விக்ரம் - ரூ.2 லட்சம்

சிலம்பரசன் - ரூ.2 லட்சம்

பிரபு - ரூ.2 லட்சம்

கார்த்திக் - ரூ.1 லட்சம்

எஸ்.ஜே.சூர்யா - ரூ.1 லட்சம்

சிபிராஜ் - ரூ.1 லட்சம்

ஜெயம் ரவி -ரூ.50,000

பரத் - ரூ.50,000

ஜே.கே.ரித்திஷ் - ரூ.2 லட்சம்

ராஜேஷ் - ரூ.50,000

கே.பாக்யராஜ் - ரூ.25,000

மயில்சாமி - ரூ.25,000

மோகன் - ரூ.20,000

பாண்டியராஜன் - ரூ.10,000

பிருதிவிராஜ் - ரூ.5,000

பிரசன்னா - ரூ.10,000

ஒய்.ஜி.மகேந்திரன் - ரூ.15,000

பிரசாந்த் - ரூ.25,000

பசுபதி - ரூ.25,000

விஜயகுமார், அருண்விஜய் - ரூ.25,000

அப்பாஸ் - ரூ.10,000

ராதிகா சரத்குமார் - ரூ.1 லட்சம்

தேவயானி - ரூ.10,000

மனோரமா - ரூ.25,000

குட்டி பத்மினி - ரூ.5,000

என்னையா கல்யானத்துக்கு மொய் எழுதிறமாதிரி பட்டியல் போடுறியல்?...

பணத்தை பாக்காதிங்கையா அவங்களின் ஆதரவைப்பாருங்க...

சிறு துளி பெரும் வெள்ளம் என்று பழமொழி எல்லாம் சொல்லி வைத்து கொண்டு 1000 கொடுத்தவர்களையும் 5000 கொடுத்தவர்களையும் கிண்டல் நக்கலோ?

தலைப்பே விஷமத்தனமாக இருக்கு..................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கருநாநிதியடன் இன்னுமே திருந்தவில்லையா நீங்கள் சொல்லுவது சரி காசு பெரிசில்லத்தான். ஆனால் இவர்களெல்லாம் உன்மையாகவே எமக்காகத்தான் வந்தார்களா. ஏன் இந்தப்போராட்டம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலே பலதரப்பட்ட கிளறுபடிகள். கருநாநிதி

ஆரம்பித்தார் அது இப்போ பனம் சேர்க்கிறதில போய் நிற்குது ஏன்மக்கள் பனமாய்யா கேட்டார்கள் பனத்தை வைத்து பனத்தை சாப்பிடவா மடியும் பனம் இருந்காலுத் வேண்ட பொருள்வேனும் சரி இது ஒழுங்காக ஈழமக்களைசென்றடையும் என்று யாராவது நினைத்தால் அது முட்டால் தனம் ஏன் நெடுமாறன் ஜயாவை மறந்து விட்டீர்களா முன் ஒருமுறை இப்படி சேர்த்து மத்திய அரசும் மாநில அரசும் இனுமதிமறுத்து அவையெல்லாம் பழுதாய் போனதை மறந்து விட்டீர்களா என்ன. ஏன் கருநாநிதியே கூறியிருக்கிறார் இந்தியாவின் இறையான்மைக்கு பங்கம் வராதமாதிரி தான் போராட்டங்கள் என்று. எந்த ஒரு நாடும் அவர்களுடைய நாட்டுக்கு பங்கம் வாரமாதிரி நடக்கமாட்டார்கள் தான. சரி அதைவிடுவோம் இந்தத் திரையுலகினர்களெல்லாம் சரி போராட்டம் நடத்தினாகள். எல்லாம் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மூலம் கோடிக்கனக்கில் சம்பாதிக்கிறார்கள் அவையெல்லாம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக. ஏன் நக்கீரன் பத்திரிகையென்பது ஒரு பிரபலமான் பத்திரிகை அது ஆதாரமில்லாமல் எந்த செய்தியையும் பிரசுரிக்காது. அஜித்தும் அர்ஜினும் முதல் மறுத்தது 100 வீதம் ஒன்மையான ஒன்று ஏன் அது பொய்யென்றால் நக்கீரன் பத்திரிகை அதைமறுத்து செய்தி வெளியிட்டிருக்கலாமே. இவர்களில் பலர் வெளிநாடுகளின் பனத்திதை நம்பித்; தான் இப்போராட்டம் நட்தப்பட்டது .தமிழ்நாட்டில் சேரும் பனத்தைவிட வெளிநாட்டில் சேரும் பனத்தொகையதிகம். சரி எல்லாம் பொறுத்திருந்துதான் பர்க்க வேண்டும் யார் முட்டால் என்று

Edited by puspaviji

ஆஜீத் கேக்க மாட்டாதவர் இல்லை ஆனால் ஜங்கரன் செய்த கேவலமான செயற்பாடுகள் சிலது எங்களள கேவலப்படுத்தி இருக்கு அது புரியவில்லையா?

ஜங்கரன் செய்த வேலை என்ன என்றூ சொல்லி தான் புரிய வேண்டுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.