Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருப்புமுனையை ஏற்படுத்தப் போகும் பூநகரிக்கான யுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருப்புமுனையை ஏற்படுத்தப் போகும் பூநகரிக்கான யுத்தம்

[09 - November - 2008]

விதுரன்

வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பூநகரியையும் கிளிநொச்சியையும் கைப்பற்றி மன்னார் - பூநகரி வீதியூடாக யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதை மிக விரைவில் திறக்கப்பட்டுவிடுமென படையினர் கூறுகின்றனர். புலிகள் தொடர்ந்தும் பதில் தாக்குதலையே நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்கள் தாக்குதல் சமர் எதனையும் நடத்தாததால் இந்தக் களமுனையில் இனிப் புலிகளால் தாக்குதல் சமரையோ அல்லது ஊடறுப்புத் தாக்குதலையோ நடத்த முடியாதென்று படையினர் பெரும்பாலும் தீர்மானித்து விட்டனர்.

வவுனியா - மன்னார் வீதியிலி ருந்து வடபகுதி நோக்கி ஆரம்பிக்கப் பட்ட படை நடவடிக்கை மூலம் வன்னியில் ஏ-9 வீதிக்கு மேற்குப் புறமான பெரும்பாலான பகுதி படையினர் வசமாகியுள்ளது. பூநகரியையும் கிளிநொச்சியையும் கைப்பற்றிவிட்டால், யாழ்.குடா நாட்டுக்கு, மேற்குக் கரையோரத்தால் (மன்னார்-பூநகரி வீதி - ஏ-32 ) தரை வழிப் பாதையை திறந்து விடமுடியுமென்பதுடன் வவுனியாவிலிருந்து யாழ்.குடா நாட்டுக்கான ஏ-9 வீதியையும் முழுக்கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துவிட முடியுமென்றும் படைத்தரப்பு கருதுகின்றது. இதனால் கிளிநொச்சியை முதலில் கைப்பற்றா விட்டாலும் பூநகரியைக் கைப்பற்றுவதன் மூலம் கரையோரப் பாதையைத் திறந்து பின்னர் கிளிநொச்சியை கைப்பற்றுவதன் மூலம் ஏ -9 வீதியையும் திறந்து விட முடியுமென அவர்கள் நம்புகின்றனர். களமுனையில் ஏற்பட்டு வரும் மாற்ற ங்களை விட அரசும் படைத்தரப்பும் மேற்கொள்ளும் பெரும் பிரசாரங்கள் மூலம் மக்கள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தி விட முயற்சிக்கப்படுகிறது. இதனால் களமுனையில் ஏற்படும் வெற்றிச் செய்திகள் மட்டுமே அவர்களால் வெளியிடப்படுகின்றன.

படையினருக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் பின்னடைவுகள் குறித்த தகவல்கள் படை நடவடிக்கையை மட்டுமல்லாது படையினரின் மனோ நிலையையும் பாதித்துவிடுமென்பதால் அவை குறித்து எதுவும் தெரிவிக்கப்படாததுடன் இம்முறை வரவு - செலவுத் திட்டமும் யுத்தத்திற்குரியதாயுள்ளது. படையினரதும் அவர்களது குடும்பத்தவர்களதும் நலன்களே முக்கியத்துவப்படுத்தப்பட்ட

இவன்கள் கட்டுரை எழுதி எழுதி குழப்பி போடுவார்கள்////

வடிவேல் போல புலம்பவேண்டி இருக்கு...

வடிவேல் போல புலம்பவேண்டி இருக்கு...

அந்த நிலைக்கு 4ம் ஈழப் போர் வந்து விட்டது வசி

  • கருத்துக்கள உறவுகள்

இவன்கள் கட்டுரை எழுதி எழுதி குழப்பி போடுவார்கள்////

வடிவேல் போல புலம்பவேண்டி இருக்கு...

அந்த நிலைக்கு 4ம் ஈழப் போர் வந்து விட்டது வசி

கட்டுரையைப்படித்தீர்களா???

உண்மைநிலையைத்தானே எழுதியுள்ளார்

மிகவும் ஆபத்தான கட்டத்தில்நாம் ..............??? இருக்கிறோம் என்தை சொல்லியுள்ளார்

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் என்று சொல்வார்களே அந்தநிலை தற்போது...........????

இந்த நேரத்தில்கூட உங்கள் அதிமேதாவித்தனங்களை................??????????????????????????????????

எப்படி இருந்த நாங்கள் இப்படி... ஆகிட்டம். :unsure::lol:

???????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரிப் பாதை திறக்கப்படும்.

பரந்தன் சந்தி கைப்பற்றப்படும்.

அதன் பின்னர் ஆணையிறவு கைப்பற்றப்படும்.

-------

----

இவைதான் திருப்பு முனைகள் என்று "ஆய்வுகள்" சொல்லுகின்றனவா!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி என்ன நடக்கும் :unsure:

பூநகரிப் பாதை திறக்கப்படும்.

பரந்தன் சந்தி கைப்பற்றப்படும்.

அதன் பின்னர் ஆணையிறவு கைப்பற்றப்படும்.

-------

----

இவைதான் திருப்பு முனைகள் என்று "ஆய்வுகள்" சொல்லுகின்றனவா!

வணக்கம் கிருபன்S

இலங்கை அரசின் அல்லது ஏதாவது கும்பல்களின் செய்திகளை பார்தீர்கள் என்றால் விளக்கமாக இருக்கும்....(??)

Edited by jaalavan

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: அவங்கள் சொல்லி சொல்லி கொஞ்சம் கொஞ்சமாய் இடங்களை பிடிச்சிட்டெ வாராங்கள் :lol:

நினைச்சு பாக்க கவலையாதான் இருக்கு... :)

பொறுத்தார் பூமி ஆழ்வார். :unsure:

Edited by Bond007

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரிப் பாதை திறக்கப்படும்.

பரந்தன் சந்தி கைப்பற்றப்படும்.

அதன் பின்னர் ஆணையிறவு கைப்பற்றப்படும்.

-------

----

இவைதான் திருப்பு முனைகள் என்று "ஆய்வுகள்" சொல்லுகின்றனவா!

  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வு அப்படிச்சொல்லவில்லை

அவர்கள் நினைக்கின்றனர் என்று சொல்கிறது

நினைப்பது நடந்தால்.......??? என்றும் சொல்கிறது

நடக்கவிடமுடியுமா??? என்றும் சொல்கிறது

இதில் எமக்கெது தேவையோ அதை உடனே செய் என்றும் சொல்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் அல்லது ஏதாவது கும்பல்களின் செய்திகளை பார்தீர்கள் என்றால் விளக்கமாக இருக்கும்....(??)

தமிழ்நெற்றில் தற்போது வடபகுதியில் நடைபெறும் யுத்தம் பற்றிய செய்தி வராததால் இலங்கையரசினதும் அவர்களின் கும்பல்களினதும் செய்திகளையும், புலம்பெயர் தமிழரை உசுப்பேற்றும் ஆய்வுகளையும்தான் படிக்கவேண்டி உள்ளது. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த வகையில் ஆய்வொன்றை தாருங்கள். கீழ்வரும் இணைப்பிலுள்ள வரைபடம் சிலவேளை உதவியாக இருக்கலாம்.

http://www.nation.lk/2008/11/09/main8pic.pdf

ஆய்வு அப்படிச்சொல்லவில்லை

அவர்கள் நினைக்கின்றனர் என்று சொல்கிறது

நினைப்பது நடந்தால்.......??? என்றும் சொல்கிறது

நடக்கவிடமுடியுமா??? என்றும் சொல்கிறது

இதில் எமக்கெது தேவையோ அதை உடனே செய் என்றும் சொல்கிறது

நடக்கும், நடக்காது.. கடமை அது இதுவென்று எவ்வளவோ எழுதி முடித்தாயிற்று. எனினும் நீங்கள் நம்பிக்கை தளராமல் இருப்பது நல்ல செய்திதான்!

Edited by kirubans

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெற்றில் தற்போது வடபகுதியில் நடைபெறும் யுத்தம் பற்றிய செய்தி வராததால் இலங்கையரசினதும் அவர்களின் கும்பல்களினதும் செய்திகளையும், புலம்பெயர் தமிழரை உசுப்பேற்றும் ஆய்வுகளையும்தான் படிக்கவேண்டி உள்ளது. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த வகையில் ஆய்வொன்றை தாருங்கள். கீழ்வரும் இணைப்பிலுள்ள வரைபடம் சிலவேளை உதவியாக இருக்கலாம்.

http://www.nation.lk/2008/11/09/main8pic.pdf

நடக்கும், நடக்காது.. கடமை அது இதுவென்று எவ்வளவோ எழுதி முடித்தாயிற்று. எனினும் நீங்கள் நம்பிக்கை தளராமல் இருப்பது நல்ல செய்திதான்!

நடக்கும்இ நடக்காது.. கடமை அது இதுவென்று எவ்வளவோ எழுதி முடித்தாயிற்று. எனினும் நீங்கள் நம்பிக்கை தளராமல் இருப்பது நல்ல செய்திதான்

உண்மைதான் வேறுவழி...........???

ஆனால் என்ன நடந்தாலும்..........???

அது என்னைமட்டுமல்ல .....................உம்மையும் பாதிக்கும் என்பதும் 100வீத உண்மைதான்

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆய்வுக்கும் பிடிபடாத எவர்களாலும் ஊகித்தறிய முடியாத புதிரான முடிவுகளை எடுப்பதே புலிகளின் வழமை. தலைமையில் நம்பிக்கை வைத்து எங்கள் கடமையைச்; சரி வரச்செய்வோம். நாம் எதிர் பார்த்த அந்த நாள் நிச்சயம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னைமட்டுமல்ல .....................உம்மையும் பாதிக்கும் என்பதும் 100வீத உண்மைதான்

தமிழ்நாட்டில் ஆதரவு பெருகியதால் யுத்தம் நிறுத்தப்படலாம் என்று நம்பிக்கை கொண்டோம். ஆனாலும் பாசில் ராஜபச்ஷ பிரணாப் முகர்ஜியுடன் பேசி, அதன் பின்னர் பிரணாப் முதல்வர் கருணாநிதிக்கு எடுத்துச் சொன்னபின்னர் முதல்வர் உணவு மருந்து கொடுத்து (சிங்கள அரசு மூலம்) நமது பிரச்சினையைத் தீர்க்க முயல்கின்றார். சற்று ஓய்ந்திருந்த சிங்கள விமானப் படையினர் மீண்டும் மக்கள்மீது குண்டுகள் வீசி, புலிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கியழித்ததாக அறிக்கை விடுகின்றது. 6 படைப்பிரிவுகளையும் 100 பட்டாலியன்களையும் கொண்டு சிங்களப் படைகள், தமிழர்களை அழித்தொழிக்க யுத்தம் நடாத்துகின்றது. மடுவை ஆக்கிரமிக்கத் தொடங்கிய சண்டை கிளிநொச்சி, பூநகரி என்று மூர்க்கமாகத் தொடர்கின்றது. இதையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றலாம் என்று நம்பிக்கை கொள்ள எல்லோராலும் முடியாது..

எந்த ஆய்வுக்கும் பிடிபடாத எவர்களாலும் ஊகித்தறிய முடியாத புதிரான முடிவுகளை எடுப்பதே புலிகளின் வழமை. தலைமையில் நம்பிக்கை வைத்து எங்கள் கடமையைச்; சரி வரச்செய்வோம். நாம் எதிர் பார்த்த அந்த நாள் நிச்சயம் வரும்.

மாவீரர் தின உரை எப்படி அமையும் என்று அடுத்த வாரமளவில் ஆய்வுகள் எழுதத் தொடங்குவார்கள். ஊகிக்கிறார்களா இல்லையா என்று தெரிய அதிக காலம் இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஆதரவு பெருகியதால் யுத்தம் நிறுத்தப்படலாம் என்று நம்பிக்கை கொண்டோம். ஆனாலும் பாசில் ராஜபச்ஷ பிரணாப் முகர்ஜியுடன் பேசி, அதன் பின்னர் பிரணாப் முதல்வர் கருணாநிதிக்கு எடுத்துச் சொன்னபின்னர் முதல்வர் உணவு மருந்து கொடுத்து (சிங்கள அரசு மூலம்) நமது பிரச்சினையைத் தீர்க்க முயல்கின்றார். சற்று ஓய்ந்திருந்த சிங்கள விமானப் படையினர் மீண்டும் மக்கள்மீது குண்டுகள் வீசி, புலிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கியழித்ததாக அறிக்கை விடுகின்றது. 6 படைப்பிரிவுகளையும் 100 பட்டாலியன்களையும் கொண்டு சிங்களப் படைகள், தமிழர்களை அழித்தொழிக்க யுத்தம் நடாத்துகின்றது. மடுவை ஆக்கிரமிக்கத் தொடங்கிய சண்டை கிளிநொச்சி, பூநகரி என்று மூர்க்கமாகத் தொடர்கின்றது. இதையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றலாம் என்று நம்பிக்கை கொள்ள எல்லோராலும் முடியாது..

மாவீரர் தின உரை எப்படி அமையும் என்று அடுத்த வாரமளவில் ஆய்வுகள் எழுதத் தொடங்குவார்கள். ஊகிக்கிறார்களா இல்லையா என்று தெரிய அதிக காலம் இல்லை..

இதையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றலாம் என்று நம்பிக்கை கொள்ள எல்லோராலும் முடியாது..

ஆனால் மாற்றியே ஆகவேண்டும்

வேறுவழி..........?????????ஏதாவது உங்களிடம் உள்ளதா???????????

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் மாற்றியே ஆகவேண்டும்

வேறுவழி..........?????????ஏதாவது உங்களிடம் உள்ளதா???????????

நமக்கு கண்கட்டு வித்தையும் தெரியாது. தொப்பிக்குள்ளால் முயற்குட்டியை வரவழைக்கும் கெட்டித்தனமும் இல்லை.. அத்தோடு பில்லி, சூனியம், மலையாள மாந்தீரிகமும் தெரியாது..

மாற்றங்களை கற்பனையில் உருவாக்கமுடியாது. இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் நேரடியான, மறைமுகமான ஆதரவோடு சிங்கள அரசு நடாத்தும் யுத்தத்தில் தமிழர்கள் தமது சொந்தப் பலத்தை மாத்திரம் போரிடுகிறார்கள். இடப்பெயர்வுக்கு உள்ளாகியிருக்கும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களைக் காப்பாற்ற பெருமளவு உதவியும் இல்லை என்ற நிலைதான் உண்மை. .

இவை எல்லாம் வரும் எண்டு எதிர்பாக்கவில்லையோ?

Edited by I.V.Sasi

நன்றி கிருபன் தந்த வரைபடத்திற்கு...

நிலைமை மோசம் தான் ஆனால் கடந்த காலவரலாறுகளின் படி தற்காலிக தோல்விகளே நிரந்தர வெற்றிகளைக்கொடுத்துள்ளன...ஆன

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு கண்கட்டு வித்தையும் தெரியாது. தொப்பிக்குள்ளால் முயற்குட்டியை வரவழைக்கும் கெட்டித்தனமும் இல்லை.. அத்தோடு பில்லி, சூனியம், மலையாள மாந்தீரிகமும் தெரியாது..

அதாவது இவற்றிற்கு நாம்தான் முகம்கொடுக்கவேண்டும் என்கின்றீர்கள்

பின்னர் எதற்கு தயக்கம்

இலங்கை ராணுவத்தால் வெளியிடபட்டுள்ள புதிய வரைபடம்.

newssri_lanka_map.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்றேல், வியட்னாம் என்று நாம் கொடுக்கும் விளக்கங்கள் நமக்குப் பொறுந்தாது. ஏனென்றால் அந்த நாடுகளுக்கு கட்டாயம் இன்னொரு வல்லரசினதோ அல்லது குறைந்தது இன்னுமொரு நாட்டினதோ உதவி இருந்தது. இஸ்ரேலுக்கு அமெரிக்க, பிரித்தானிய ஆயுத உதவிகளும், வியட்னாமுக்கு சீன மற்றும் ரஷ்ஷிய உதவிகளும் போர் முடியுமட்டும் இருந்து கொண்டே இருந்தன. எமக்கு அப்படியில்லை, சிங்களத்துக்கு உதவும் நாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. எமக்கென்று யாருமில்லை.

புலிகளின் பலமுள்ளவரை மட்டுமே இந்தப் போர் நீண்டு செல்லும், அதன் பின்னர் கெரில்லாப் போர் முறைக்குள் நுழைய வேண்டியதுதான். நீண்டகாலம் இழுபடும் போராட்டங்களுக்கு ஏற்படும் தொய்வுநிலை இப்போது எமக்கு ஏற்பட்டு இருக்கிறது. இது எமதுஇலட்சியத்தை இன்னும் பின்னோக்கித் தள்ளுவதோடு மட்டுமல்லாமல்,அதற்கு ஏதுவான காரணிகளையும் பலவீனப்படுத்தப் போகிறது.

58 படையணி விடத்தல் தீவுக்கு போக முதல் சிதைஞ்சு போகும் எண்டார் நம்மட வேல்ஸ் பூவிறிஸ். அதைப்போலவே வரைபடத்தில 58 படையணியை காணவில்லை. :lol:

அடுத்த 18 நாட்களுக்கை தனிநாடு பிரகடனமாம். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.