Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?

Featured Replies

Facebook மாதிரி social networking site ஆக ஒன்றை உருவாக்கி குட்டன்களையும், குட்டிகளையும் சாய்த்துக் கொண்டு போவதற்கு வழி பார்க்கின்றீர்களா?

நல்ல யோசனை உதை தமிழில் மோகன் அண்ணாவையே செய்து தரும்படி கேக்கலாம்...!! ( ஏற்படும் செலவை பங்கு போடும் முயற்ச்சி செய்ய வேண்டும்)

உங்களுக்கு உடன் பாட்டு எண்றால் நானும் எனது வாக்கை இங்கே போட்டு விடுகிறேன்...!!

  • Replies 163
  • Views 23.2k
  • Created
  • Last Reply

வணக்கம்

மோகன் அண்ணாவின் கருத்துக்கும் கேள்விக்கும் நான் எதிர். காரணம் இந்த களத்தை நீங்கள் மூடுவதனால் மன உளைச்சல் மட்டுமல்ல என் உடன்பிறப்பையே இழந்தவன் என்கின்ற நிலையை அடைந்துவிடுவேன் ஏனெனில் நான் வளர்ந்த இடம் இது. என்னை அறிமுகம் செய்து வைக்க ஓரு விலாசமும் இதுதான். இந்த தளத்தை நான் என்றுமே மறந்ததில்லை. எங்கு சென்றாலும் முதலில் இங்கு வந்து செய்திகளை தகவல்களை பார்த்துவிட்டுத்தான் மற்றைய தளங்களிற்கு செல்வேன். ஏனோ தெரியவில்லை என்னையும் எழுத வைத்த தளம் இதுதான். தயவுசெய்து இதை மூடவேண்டாம்.

உங்களிற்கு இதை தொடர்ந்து நடாத்துவதற்கு நிதி வசதி குறைவாக இருந்தால் அதற்கு உதவுவதற்கு நான் எப்போதும் தயார். உங்களிற்கு கைகொடுக்க எப்போதும் தயராக இருக்கின்றேன்.

உங்களைப்போன்ற அன்பு நண்பர்களை அறிமுகம் செய்துவைத்த தளம் இது அதை அழிக்காதீர்கள்.

களவிதிகளிற்கு முரண்பாடாக நானும் சில நேரங்களில் செயற்பட்டிருக்கின்றேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன்.

நட்புடனும் நம்பிக்கையுடனும் பரணீதரன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

உங்களிற்கு இதை தொடர்ந்து நடாத்துவதற்கு நிதி வசதி குறைவாக இருந்தால் அதற்கு உதவுவதற்கு நான் எப்போதும் தயார். உங்களிற்கு கைகொடுக்க எப்போதும் தயராக இருக்கின்றேன்.

நானும் தான்

மீண்டும் தணிக்கை செய்யுமளவிற்கு கருத்துகள் இடம்பெறுவதை பார்க்கும்போது... சில திருந்தாத ஜென்மங்கள் இன்னும் இக்களத்தில் உலாவருவது வேதனைக்குரியதாகவே தென்படுகிறது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் ஒவ்வொருவரும் உணர்ந்து பொறுப்புடன் யாழின் விதிகளுக்கு அமைய கருத்துக்கள் பகிரவேண்டும்.

ஒருவர் எழுதும் ஆக்கமோ கருத்தோ அல்லது தலைப்போ கண்டனத்துக்குரியது என்று ஓருவர் நினைத்தால் REPORT என்றதை அழுத்தி புகார் செய்யலாம்.. அல்லது தனிமடலில் அவருக்கு எடுத்துக் கூறலாம். இதனால் விரோதங்களும் வீண் மனத்தாங்கல்களும் குறையும்.

அதைவிடுத்து நாங்களே நீதிபதியாகி கருத்துப் பதிந்தவர் மனம்நோக அங்கேயே பதில் கொடுப்பது நியாயமில்லை. கருத்தை பதிந்தவர் மனம் அவற்றை வாசிக்கும்போது எவ்வளவு பாதிப்படையும்? பலரும் படிக்கும் களத்தில் இவ்வாறு செய்வது அவரை நடுவீதியில் வைத்து திட்டுவதற்கு சமம் ! இந்த தவறை நானும் முன்பு செய்திருக்கலாம்.

ஆகவே உறவுகளே கோவிக்காமல் நான் சொன்னதை கருத்தாளர் நிலையில் இருந்து பார்த்து ஒரு முடிவு எடுங்கள்.

யாரும் யாரையும் திட்டியமாதிரி தெரியவில்லையே.. நான் கூட மேலே வைத்த கருத்து பொதுவானதே!

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry462032 இந்த இழையில் 17ம் திகதிக்குப் பிறகும் கருத்துகள் நீக்கப்பட்டதைப் பார்த்தே அக்கருத்தை எழுதினேன். அக் கருத்துகளுக்கு உரியவர்கள் யாரென்பதுகூட எனக்குத் தெரியாது.

ஒருவர் எழுதும் ஆக்கமோ கருத்தோ அல்லது தலைப்போ கண்டனத்துக்குரியது என்று ஓருவர் நினைத்தால் REPORT என்றதை அழுத்தி புகார் செய்யலாம்.. அல்லது தனிமடலில் அவருக்கு எடுத்துக் கூறலாம். இதனால் விரோதங்களும் வீண் மனத்தாங்கல்களும் குறையும்.

அதைவிடுத்து நாங்களே நீதிபதியாகி கருத்துப் பதிந்தவர் மனம்நோக அங்கேயே பதில் கொடுப்பது நியாயமில்லை. கருத்தை பதிந்தவர் மனம் அவற்றை வாசிக்கும்போது எவ்வளவு பாதிப்படையும்? பலரும் படிக்கும் களத்தில் இவ்வாறு செய்வது அவரை நடுவீதியில் வைத்து திட்டுவதற்கு சமம் ! இந்த தவறை நானும் முன்பு செய்திருக்கலாம்.

ஆகவே உறவுகளே கோவிக்காமல் நான் சொன்னதை கருத்தாளர் நிலையில் இருந்து பார்த்து ஒரு முடிவு எடுங்கள்.

வசி

நீங்கள் எதை வைத்து இப்படி எழுதினீர்களோ புரியவில்லை. ஆனால் உங்கள் கருத்துப்படி ஒருவரின் கருத்தோ அல்லது அவரால் இணைக்கப்பட்ட ஒரு தலைப்போ கண்டனத்திற்குரியதென்றால் அவரை அந்தப் பக்கத்திலேயே விமர்சிப்பது தவறென்கின்றீர்கள். ஆனால் இதைவிடக் கேவலமாக இந்தக் களத்திற்கு எதுவிதத்திலும் சம்பந்தப்படாத ஒரு நிறுவனத்தையோ அல்லது தனிப்பட்ட நபரையோ எந்தவித ஆதாரமுமில்லாது இங்கே அவர்களை தம் கற்பனைகளுக்கேற்றவாறு உண்மைகளை மறைத்து கேவலமாக சித்தரித்தும் அவர்களது தொலைபேசி இணைப்புகளைத் தந்தும் தம்மை தேசியவாதிகளாகக் காட்டிக் கொள்ள சிலர் செய்யும் களவிதிகளை மீறிய அத்துமீறல்களை விட இது கேவலமானதா??

சரி அப்ப நீங்கள் தாராளமாய் எல்லாரையும் திட்டி எழுதுங்கோ..

:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா,

விகடவி,சோழியன் அண்ணா அவையள் சொன்ன கருத்தே எனதும்.

ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பும் மிக அவசியம். உங்களுக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்யத் தயாராய் இருக்கின்றோம்.

சரி அப்ப நீங்கள் தாராளமாய் எல்லாரையும் திட்டி எழுதுங்கோ..

:)

உங்கள் கருத்திற்கான பதிலைத் தான் நான் சொல்லியிருக்கிறேன். மற்றும்படி இங்கே யார் யாரை திட்டி எழுதியுள்ளார்கள். அதைக் குறிப்பிடுங்களேன். சோழியான் கேட்டதைத் தான் நானும் கேட்கிறேன். பதிலைத் தாருங்களேன்.

:(:(:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை திருப்பி கூப்பிட்ட எல்லாருக்கும் அதோடை தனிப்பட கடிதம் எழுதி கூப்பிட்டவைக்கும் நன்றியோடை வணக்கத்தையும் சொல்லுறன். :rolleyes:

அப்பிடியே அப்பாடா ஒண்டு துலைஞ்சுது எண்டு சந்தோசப்பட்டவைக்கு என்னாலை ஒண்டும் செய்யேலாது உங்கடை தலைவிதி அப்படி :lol:

என்னை திருப்பி கூப்பிட்ட எல்லாருக்கும் அதோடை தனிப்பட கடிதம் எழுதி கூப்பிட்டவைக்கும் நன்றியோடை வணக்கத்தையும் சொல்லுறன். :lol:

அப்பிடியே அப்பாடா ஒண்டு துலைஞ்சுது எண்டு சந்தோசப்பட்டவைக்கு என்னாலை ஒண்டும் செய்யேலாது உங்கடை தலைவிதி அப்படி :)

:rolleyes:நான் ஒரு 4 மணித்தியாலம் உண்ணாவிரதமிருப்பம் எண்டு யோசிக்க நீங்கள் வந்திட்டியள் :) . அதாலை என்ரை உண்ணாவிரதத்தையும் கைவிட்டிட்டன். :D அப்படியே வரும் போது முனியையும் பிடித்து வந்திருக்கலாமே?? :(

  • கருத்துக்கள உறவுகள்

என்னை திருப்பி கூப்பிட்ட எல்லாருக்கும் அதோடை தனிப்பட கடிதம் எழுதி கூப்பிட்டவைக்கும் நன்றியோடை வணக்கத்தையும் சொல்லுறன். :lol:

அப்பிடியே அப்பாடா ஒண்டு துலைஞ்சுது எண்டு சந்தோசப்பட்டவைக்கு என்னாலை ஒண்டும் செய்யேலாது உங்கடை தலைவிதி அப்படி :)

எங்கை அந்த நேரம் தனிமடல் அனுப்பமுடியாமல் இருந்துச்சு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா, முனிவர் இருவரும் நலம் தானே!!

நீங்கள் இருவரும் எதற்காக அவசரப்பட்டு வெளியேற வேண்டும்? மோகனே மனம் மாறி களத்தை தொடர்ந்து நடத்துவதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் நீங்களிருவரும் உங்கள் கருத்துக்களால் தொடர்ந்தும் இணைந்திருப்பதே முறையானது. ஒரு நல்ல நட்பானது தனது நண்பனின் இக்கட்டான சூழ்நிலையில் அவனுடன் இணைந்திருந்து கைகொடுத்து காப்பாற்றுவதே. எனவே நீங்கள் இருவரும் யாழ் களத்தின் நல்ல நண்பர்கள் இல்லையா?? தயவுசெய்து தொடர்ந்து இணைந்திருங்கள்.

எப்போவும் இணைந்திருபோம் நம் உறவுகளிடம் வசம்பு அண்ணன் :rolleyes:

எப்போவும் இணைந்திருபோம் நம் உறவுகளிடம் வசம்பு அண்ணன் :)

:rolleyes:கு.சா விற்காக 4 மணித்தியாலம் உண்ணாவிரதமிருப்போமென்று யோசிக்க அவர் வந்திட்டார். அட உங்களுக்காவது 4 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருப்போமென யோசிக்க நீங்களும் வந்திட்டீங்க. :lol:

:) அதாலை எனது 4 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகின்றது என்பதை இத்தால் சகலருக்கும் அறியத் தருகின்றேன். :D

யாழ் தளத்தில இப்ப ஆக்களுக்கு ஏதோ முத்திரை குத்துறீனமாம். தமிழால் இணைவதிண்ட, தமிழராய் உயர்வதிண்ட மகிமை இதில தெரியுது. மோகன் அண்மையில குடுத்த அதிர்ச்சி வைத்தியம் காணாதுபோல இருக்கிது.

அப்ப குத்தவேண்டியான் அண்ணாச்சிக்கு ஒரு முத்திரை......

முதுகில ஒரு சிரியையும்...... கு$#%ல ஒரு சிங்கத்தையும் குத்தவேண்டியான்.... :huh::rolleyes::unsure:

யாழ் தளத்தில இப்ப ஆக்களுக்கு ஏதோ முத்திரை குத்துறீனமாம். தமிழால் இணைவதிண்ட, தமிழராய் உயர்வதிண்ட மகிமை இதில தெரியுது. மோகன் அண்மையில குடுத்த அதிர்ச்சி வைத்தியம் காணாதுபோல இருக்கிது.

நீங்க வேற, எனக்கு என்ன சந்தேகம் என்டா மோகன் அண்ணை துறப்பை துலைச்சிட்டாரோ என்று! ஏனெண்டா சிலபேர் இங்க துறப்பும் கையுமா திரியினம்?

யாழ் கள நிர்வாகிகளே!!! இவ்வாறான தொத்து வியாதிக்கு இடமளித்தால் யாழ்களத்தை இழுத்து மூடவேண்டி வரும் அல்லது இதுபோல களமொன்றை நான் தொடங்கவேண்டி வரும்.

என்னை திருப்பி கூப்பிட்ட எல்லாருக்கும் அதோடை தனிப்பட கடிதம் எழுதி கூப்பிட்டவைக்கும் நன்றியோடை வணக்கத்தையும் சொல்லுறன். :huh:

உங்களை திருப்பி கூப்பிட சொல்லி மடல் போட்டு இருந்தீர்கள்... மன்னிக்கவும் நேரம் இன்மையால் உங்களை கூப்பிட்டு எழுத முடிய இல்லை.... :huh::rolleyes::unsure:

Edited by தயா

உங்களை திருப்பி கூப்பிட சொல்லி மடல் போட்டு இருந்தீர்கள்... மன்னிக்கவும் நேரம் இன்மையால் உங்களை கூப்பிட்டு எழுத முடிய இல்லை.... :huh::rolleyes::unsure:

:)அட கு.சா உங்களுக்குமா போட்டிருந்தார். :huh::D எனக்கு அனுப்பின மடலில் இப்படி எனக்கு மட்டும் தான் போட்டிருப்பதாக எழுதியிருந்தார். :huh:

இது நம் சில உறவுகளின் நடவடிக்கை போன்று சின்னப் பிள்ளைத்தனமாக இருக்கு...

நான் யாழ் களத்தின் நீண்ட கால வாசகன்... என்னை போல் நிறைய வாசகர்கள் யாழ் களத்திற்கு உள்ளார்கள்...நான் கூட நிறைய எனது முந்நாள் பல்கலைக்கழக நண்பர்களுக்கு சிபாரிசு செய்து உள்ளேன்...

எனக்கு தெரிந்து தற்போதைய யாழ் கள உறவுகள்(எல்லோரும் அல்ல).. தட்டி கொடுப்பதை விட.. திட்டிக்கெடுப்பதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள்... இந்நிலை மாறினால் யாழ் களம் புதுப்பொலிவு பெறும் என்பது எனது அப்பிப்பிராயம்...

நன்றி

என்ரை சந்தேகத்தை தீர்த்து வைத்த மோகன் அண்ணைக்கு நன்றி....

....போராட்டத்தில கொல்லப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கும், பொதுமக்களுக்கும் அஞ்சலி செய்ய எழுதின கருத்தை தலைப்புக்கு சம்பந்தமில்;லை என்று தூக்கி இன்னும் துறப்பு தன்ரை கையிலதான் என்பதை உறுதி செய்திருக்கிறார்!

நல்ல விசயம்... ஆனா உப்பிடி தலைப்புக்கு சம்மந்தமில்லாத கருத்துகளை எல்லாம் தூக்கினால் யாழ்களத்தில ஒரு கருத்தும் மிஞ்சாதே.....?

சரி சரி.... உங்கடை கஸ்டம் விழங்காம நான் கேள்விகளை கேட்க பிறகு நீங்கள் விரக்தியடைய... ஏன் எனக்கு பொல்லாப்பு....!

என்ன இப்பிடி சொல்லிட்டியள்...??? யாழ்களம் இயங்குவதா..? இல்லையா என தீர்மானிக்கவேண்டியவர் இயக்குணர். ஐயா உங்கள் முடிவுகள் எப்படி இருந்தாலும் நாம் வரவேற்கிறோம். ஏன் எனில் களத்தினை இயக்குவதில் படும்பாட்டினை நான் அறிவேன். ஆனால் ஒன்று கருத்துக்களத்தில் அவ்வளவுக்கு நீங்கள் இணைத்திருக்கவேண்டிய அவசியமோ, அதிகமான பணமோ செலவு செய்யத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் உங்கள் முடிவுகள் உறுதியாக இருக்கட்டும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மோகன் ஐயா!

உந்த அமாவாசை பறுவத்துக்கு மட்டும் வந்து குலைக்கிறவையாலைதான் பிரச்சனை வருது போலை கிடக்கு :) இல்லாட்டி பாவிக்க வேண்டிய குளிசையளை நேரகாலத்துக்கு எடுக்காதவையும் இஞ்சைவந்து கிறுக்கிறதாலையும் பிரச்சனை வருது போலைகிடக்கு :unsure:

என்ன கோதாரியோ எனக்கும் பின் வரிசையிலை நிண்டு குலைச்சு குலைச்சு பழகிப்போச்சு :o என்ரை வாயும் சும்மா கிடக்காது பழஞ்சீலை கிழிஞ்சமாதிரி எப்ப பாத்தாலும் புறுபுறுத்துக்கொண்டு :D

வணக்கம் மோகன் அண்ணா.

கடந்த வாரம் என்னை பதிவு செய்ய முயற்சித்தேன், ஆனால் புதியவர்களை இணைப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை பார்த்தேன்.

ஆனால் மறுபடியும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையிட்ட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.