Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியாபாரியா பூசாரியா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரியா பூசாரியா??

bielefeld4.jpg

தலைப்பைப்பாத்திட்டு இந்து மதநம்பிக்கையாளர்கள் கொதித்து எழலாம். மதநம்பிக்கையில்லாதவர்கள் இரண்டுமே ஒண்டுதானே என்று நினைக்கலாம். வேற்று மதக்காரர்கள் இந்து மதத்திலை இதுதானே நடக்கிறது என்று அலுத்துக்கொள்ளலாம்.(இந்து மதம்வேறு சைவமதம் வேறு ) ஆனால் என்னுடைய சைவ மதத்திற்கே இழுக்கு ஒரு சில பூசாரிகளாலும் சாமியார்களாலும்தான்.நானும் ஒரு சைவன் என்கிற முறையில் வெட்கி தலை குனிந்தபடி இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.கட்டுரை முடிவில் பக்தியின் பெயரால் கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்கும் புலம்பெயர் உறவுகளே சிந்தியுங்கள்

bielefeld3.jpg

இனி விடயத்திற்கு வருவோம்.யெர்மனியில் HAMM காமாட்சியம்மன் கோயில் ஜரோப்பாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பிரமாண்டமான கோயில்.இந்தக்: கோயில் தொடங்கிய காலத்திலிருந்தே பல சர்ச்சைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அனால் அண்மையில் புதியதொரு சர்ச்சை ஆனால் கொஞ்சம் ஆழமாக அவதானிக்கவேண்டிய சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. அது ஜெர்மனிக்கான சிறீலங்காவின்தூதர் மதுவிஜிதரா என்பவர் கோயிலுக்கு கும்பிடப் போனதுதான் பிரச்சனையே. கோயிலுக்கு எல்லாரும் கும்பிடத்தான் போவாங்கள். பிறகென்ன அங்கு கும்மியடிக்கவா போவாங்கள் என்று எல்லாரும் நினைக்கலாம். ஆனால் சிறீலங்கா தூதுவர் கோயிலுக்குப் போய் சாதாரணமாய் ஒரு விசேட அருச்சனை செய்து சாமி கும்பிட்டு விட்டு போயிருந்தால் பிரச்சனையில்லை. கும்பிட போனவரிற்கு கோயில் பூசகர் பொன்னாடை போர்த்தி அழகு பார்த்தது முதல்மரியாதை செய்து கோயில் அலுவலகத்தில் அழைத்து சென்று பேசியிருக்கிறார்கள். இந்தச் செய்தியும் படங்களும் இலங்கைத்தூதரக இணையத்திலும். ஈழப்போராட்டத்திற்கு எதிராக இயங்கி வருகின்ற ஏசியன் ரிறிபுன் இணையத்திலும். வெளியாகியிருந்தது காரணம் இதுகூட இலங்கையரசு வெளிநாடுகளில் மேற்கொள்கின்ற ஒருவகை பிரச்சாரம்தான்.

bielefeld5.jpg

இந்தச் சம்பவம் நடந்த பின்னர் கோயில் பூசகரிடம் விபரம்ஏதாவது பெறலாமென நினைத்து நான் தொடர்புகொள்ள முயற்சித்து அலுவலக தொலைசிக்கு தொடர்பு கொண்டேன். முடியவில்லை. ஆனால் பொன்னாடை போர்த்து மரியாதை செய்வது சாதாரண நிகழ்வுதான் எனவே இதனை பெரிது படுத்தவேண்டாம் என கோயில் அலுவலகத்தில் இருந்த கோயில் நிருவாகி ஒருவர் தெரிவித்தார். இதே போன்றதொரு சம்பவம் இங்கிலாந்திலும் சில காலங்களிற்கு முன்னர் நடந்தது. ஆனால் என்னிடம் சில கேள்விகள்.

கேள்வி 1.. இலங்கை அரசோ ஈழத்தில் கோவில்களையும் தேவாலயங்களையும் குண்டு வீசி அழித்தக்கொண்டிருக்க இலங்கைத் தூதரக அதிகாரிகளிற்குமட்டும் வெளிநாடுகளில் உள்ள கோயில்களில் மட்டும் ஏன் திடீர்பக்தி ..????

கேள்வி 2..கோயில் நிருவாகம் சொன்னது போல பொன்னாடை போர்த்துவது சாதாரண நிகழ்வென்றால் அங்கு போகின்ற அனைத்து பக்தர்களிற்கும் ஏன் பொன்னாடை போர்ப்பதிலை. சரி சிறீலங்கா தூதுவரிற்கு மரியாதை செய்தார்கள்என்று வைத்துக்கொண்டாலும் அலுவலகத்தில் அழைத்துப்போய் என்ன பேசியிருப்பார்கள்..?????

கேள்வி 3.. இந்தக் கோயில் நிருவாகத்தினால் தற்சமயம் ஈழத்தில் அல்லலுறும் எம் உறவுகளிற்கு எவ்வித உதவியும் செய்யப்படவில்லை ஆனால் கோயில் அருகே ஒரு மடம் கட்டுவதற்காக காணி வாங்குவதற்கு பக்தர்களிடம் 150 யுரோக்கள் வசூலித்து வருகிறார்கள். தற்சமயம் வீடுவாசல் இழந்து காடுகளில் எம்உறவுகள் வாழ்ந்துவரும் வேளை HAMM காமாட்சி அம்மனிற்கு காணிதேவையர்..????

இவை எனது கேள்விகள் . பக்தகோடிகளே பதில் உங்களிடம்தான் உள்ளது நன்றி அன்புடன் சாத்திரி

படங்கள். சிறீலங்கா தூதரக இணையத்தளம் யெர்மனி

Edited by sathiri

  • Replies 98
  • Views 14.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி நான் கிஙஸ்தவ மதத்தைச்சார்ந்தவன் இருந்தாலும் என்னடைய கருத்தைக்கூறுகின்றேன் . இலங்கைத்தூதுவருக்கு பொன்னாடை போத்தியது எந்த முறையில்? அதாவது அவர் பெரிய உதவிகள் செய்தவரா இல்லை செய்யப்போகின்றவரா இல்லை இவர் எம் தமிழினத்தை சேர்ந்தவரா? இதில் இவர் எவற்றிலாவது அடங்குகிறாறா? என்னைப்பொறுத்தவரை சிங்களவனில் ஒருவன் கூட மனதளவில் தமிழன் வாழ நினைத்ததில்லை சாத்திரி நீங்கள் கூறியது போல ஈழத்தில் நமது சொத்தக்களை சேதமாக்pகயும் கோயில்களில் தமிழருக்கு சமாதிகட்டிக்கொண்டிருக்கிறா

  • கருத்துக்கள உறவுகள்

முதலில பக்தி என்ற பெயரில காசைக்கொன்டு போய் உன்டியலில கொட்டுற எங்கடையல சொல்ல வேனும். :o

சாத்திரி குறிப்பிடும் இவ்விடயம் நடந்து பல மாதங்களுக்கு மேலிருக்குமென நினைக்கின்றேன். அபபோதும் இவ்விடயம் இங்கு பதியப்பட்டது. ஆனால் அதை இப்போது மீண்டும் தூசி தட்டிப் புதுப்பித்து ஏதோ சமீபத்தில் நடந்தது போல் பதிந்ததன் உள் நோக்கம் என்னவோ??

Edited by Vasampu

இது ஒருபுறம்....... இன்னொன்று அது ஜேர்மனி டோட்மூண்ட் நகரில் இருக்கும் தமிழ் கடைகளுக்கு எல்லாம் கோபுரம் போல் ஒரு வர்த்தக மாளிகை. ஏன் சிறிய பல்பொருள் அங்காடி என்றே கூறலாம். அப்படி மாபெரும் பணச்செலவில் ஆரம்பிக்கபட்டது தான் இந்த தமிழ்க்கடை. கோபுரம் போல் இந்த தமிழ்க்கடையின் உரிமையாளரும் ஹம் காமாட்சி அம்பாள் பிரதம குருக்களும் பங்காக நடத்துகின்றனர். பிராமணனின் கோட்பாட்டையே விற்கும் இவர் போன்றோரை விபச்சாரிகளாக கருதுவதே சிறந்தது.

Edited by mathuka

ஏன் தேவையில்லாம விபச்சாரிகளை இழுக்கிறீங்கள்? பூசாரிக்கும் அவைக்கும் என்ன தொடர்பு? இரண்டும் ரி என்று முடியுது எண்டா? முடிஞ்சா 150 பிராங் குடுக்காமல் நிப்பாட்டுங்கோ அதைவிட்டிட்டு....சொல்றன் என்று தப்பா நினைக்க வேண்டாம்...கனடால ஒரு அமைப்பில இருக்கிற சிலர் யாழ் கழம் பற்றி உரையாடும்போது இப்படியான நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களால யாழின் தரத்தை மிகவும் குறைத்துக் கதைக்கிறார்கள். யாழில் ஒருவரும் இப்படியான வார்த்தைப் பிரயோகங்களைக் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள். வெளியே இருந்து பார்க்கிறவர்களுக்கு அப்படித் தோன்ற வைப்பது நாங்கள்தானே?? இங்கும் கூட பல மில்லியன் டொலர்கள் செலவில் கோபுரம் கட்டுகிறார்கள்தான் அதற்காக ஏன் குறிப்பிட்ட தொழில் செய்பவர்களை நீங்கள் தாழ்த்துகிறீர்கள்? இந்தக் கட்டுரையில் நீங்கள் சொல்ல வந்த விசயம் முக்கியமானதுதான் ஆனால் அதைச் சொல்லும் விதம் பற்றியே நான் கருத்து எழுதுகிறேன். தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி குறிப்பிடும் இவ்விடயம் நடந்து பல மாதங்களுக்கு மேலிருக்குமென நினைக்கின்றேன். அபபோதும் இவ்விடயம் இங்கு பதியப்பட்டது. ஆனால் அதை இப்போது மீண்டும் தூசி தட்டிப் புதுப்பித்து ஏதோ சமீபத்தில் நடந்தது போல் பதிந்ததன் உள் நோக்கம் என்னவோ??

விழிப்புணர்வுதான்

சிலரைப் போன்று ஏமாற்றிப் பிழைக்காமலும் பிச்சை எடுக்காமலும், தமது உடலை மூலதனமாக்கி, பல துன்பங்களுக்கு மத்தியில் உழைத்து வாழும் வர்க்கமாகிய பாலியல் தொழிலாளர்களை விபச்சாரி என்று எழுதியதோடு அல்லாமல், அவர்களை பூசாரிகளுடன் வேறு ஒப்பிட்டிருக்கிறார்.

சாத்திரிக்கு என்னுடைய வன்மையான கண்டனங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களுக்கு பிரமுகர்கள் வந்தால் அவர்களை வரவேற்பது நமது பண்பாட்டில் உள்ளது. சிங்களத் தூதுவர் என்றாலும் அவர் பிரமுகர்தானே. தமிழர்கள் "விருந்தோம்பல்" பண்புக்குப் பேர் போனவர்கள்..

பி.கு. முயற்சி செய்தால் நீங்களும் பிரமுகர் ஆகலாம்..

அவர் பாதணிகளை கழற்றி அர்ச்சனைத் தட்டுடன்தானே வந்திருக்கிறார்?

மகிந்தா தமிழில் ஐநாவில் பேசுவதுபோல, இந்தப் பொன்னாடை போர்த்தலும் என ஏன் நினைக்கக் கூடாது? எத்தனையோ பிக்குகள் வன்னிக்கு போனார்கள்? அவர்களால் ஏதோ பயன் ஏற்படும் என்று கருதியா ஆசனத்தில் அமர்த்தி வைத்துக் கதைத்தார்கள்?

அந்த பூசாரி இப்போதும் அகதி முகாம் நில அறையுள் ஒரு சிலையோடை இருந்தால் விபச்சாரியாக உருவகப்படுத்தப்பட்டிருக்கம

ஏன் தேவையில்லாம விபச்சாரிகளை இழுக்கிறீங்கள்? பூசாரிக்கும் அவைக்கும் என்ன தொடர்பு? இரண்டும் ரி என்று முடியுது எண்டா? முடிஞ்சா 150 பிராங் குடுக்காமல் நிப்பாட்டுங்கோ அதைவிட்டிட்டு....சொல்றன் என்று தப்பா நினைக்க வேண்டாம்...கனடால ஒரு அமைப்பில இருக்கிற சிலர் யாழ் கழம் பற்றி உரையாடும்போது இப்படியான நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களால யாழின் தரத்தை மிகவும் குறைத்துக் கதைக்கிறார்கள். யாழில் ஒருவரும் இப்படியான வார்த்தைப் பிரயோகங்களைக் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள். வெளியே இருந்து பார்க்கிறவர்களுக்கு அப்படித் தோன்ற வைப்பது நாங்கள்தானே?? இங்கும் கூட பல மில்லியன் டொலர்கள் செலவில் கோபுரம் கட்டுகிறார்கள்தான் அதற்காக ஏன் குறிப்பிட்ட தொழில் செய்பவர்களை நீங்கள் தாழ்த்துகிறீர்கள்? இந்தக் கட்டுரையில் நீங்கள் சொல்ல வந்த விசயம் முக்கியமானதுதான் ஆனால் அதைச் சொல்லும் விதம் பற்றியே நான் கருத்து எழுதுகிறேன். தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஹம் காமாட்சியம்மன் கோவில் ஒன்றும் கட்டவுட் கோபுரம் வைத்து கும்பாவிஷேகம் செய்து அவசரத்தில் தொடங்கப்பட்ட ஒன்றல்ல. பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டது. கோவிலின் திருவிழாவிற்கு ஐரோப்பாவின் பல பகுதியிலிருந்தும் பக்தர்கள் வருகின்றார்கள். அதனால் வருவாய்க்கும் குறைவில்லை. இப்போ பலருக்கும் பிரைச்சினையாக இருப்பது இந்த வருமானம் தான். இந்த வருமானத்தை குறி வைத்துச் சிலர் இந்தக் கோவிலை அபகரிக்கத் திட்டமிட்டு செயற்பட்டனர். அது பெரிய பிரைச்சினையாகி, கோவில் தற்போது ஹம் கிராமசபை நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் அனைத்து கணக்கு வழக்குகளின் மேற்பார்வையோடு நடைபெறுகின்றது. கோவில் வருமானத்தில் செலவுகள் போக மிகுதி இருந்தால், அதை ஹம் கிராமசபையே எடுக்குமென்பதால் கோவிலில் கட்டிட வேலைகள் செய்யப்பட்டு அதற்காக மிகுதிப்பணத்தை செலவழித்து வருகின்றார்கள்.

தாம் கோவிலை அபகரிக்க எடுத்த முயற்சிகள் பலிக்காததாலும், கோவில் தற்போது ஹம் கிராமசபையின் கீழ் வந்ததாலும் ஆத்திரமுற்று இப்படியான கரிபூசும் வேலைகள் தொடர்கின்றன. இதன் மூலம் பகைவர்களைக் கூட்டும் வேலையையே சிலர் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். ****. இவையெல்லாம் யாருக்குக் கேவலம்

இன்று தேசியத்திற்கு ஆதரவானவர்களாக தம்மை காட்டிக் கொளள் விரும்புபவர்கள் அடுத்தவர்களை கீழ்த்தரமாக விமர்சித்து விபச்சாரி, விலைமகள் போன்ற வார்த்தைகளை பாவிக்கின்றார்கள். ஆனால் இவர்களின் இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் தேசியத்தைத் தான் கேவலப்படுத்துகின்றது என்பதை களம் உட்பட சிலர் உணரவில்லை என்பது வேதனையான உண்மை தான்.

Edited by மோகன்
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி குறிப்பிடும் இவ்விடயம் நடந்து பல மாதங்களுக்கு மேலிருக்குமென நினைக்கின்றேன். அபபோதும் இவ்விடயம் இங்கு பதியப்பட்டது. ஆனால் அதை இப்போது மீண்டும் தூசி தட்டிப் புதுப்பித்து ஏதோ சமீபத்தில் நடந்தது போல் பதிந்ததன் உள் நோக்கம் என்னவோ??

வணக்கம் வசம்பு நான் இணைத்துள்ள படத்திலேயே திகதி மாதம் இருக்கிறது எனவே அதில் பிரச்சனையில்லை ஆவணி தான் நடந்தது. அடுத்தாய் இந்த பிரச்சனை தெரியவந்ததுடன் அதனைப்பற்றி சம்பந்தப் பட்டவர்களுடனும் தொடர்பு கொண்டு விபரம் எடுத்த பின்னர்தான் இதனை எழுதஇருந்தேன். சம்பத்தப் பட்ட பூசாரியுடன் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் பலன் இல்லை. அடுத்ததாய் நான் கடந்த 3 மாதங்களாக வேறொரு நிகழ்வொன்றினை நடத்திமுடிப்பதற்காக அதிலேயே அதிகளவு நேரத்தினை செலவளித்ததால் எழுத்து வேலை எதுவும் செய்யவில்லை எனவேதான் இறுதியாகவும் கோயில் நிருவாகத்துடன் தொடர்பு கொண்டுவிட்டு ஒரு பேப்பரில் இந்த விபரத்தினை எழுதினேன் அதனை பின்னர் இன்னமும் காலம் தாழ்த்தி யாழில் இணைத்தேன் விபரம் போதுமா?? நன்றி

Edited by sathiri

சாத்திரி

உங்களைப் போன்றவர்கள் சிலரின் செயற்பாடுகளினால்த் தான்,பலர் தேசியத்திற்கு எதிராக மாறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

Edited by Vasampu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தேவையில்லாம விபச்சாரிகளை இழுக்கிறீங்கள்? பூசாரிக்கும் அவைக்கும் என்ன தொடர்பு? இரண்டும் ரி என்று முடியுது எண்டா? முடிஞ்சா 150 பிராங் குடுக்காமல் நிப்பாட்டுங்கோ அதைவிட்டிட்டு....சொல்றன் என்று தப்பா நினைக்க வேண்டாம்...கனடால ஒரு அமைப்பில இருக்கிற சிலர் யாழ் கழம் பற்றி உரையாடும்போது இப்படியான நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களால யாழின் தரத்தை மிகவும் குறைத்துக் கதைக்கிறார்கள். யாழில் ஒருவரும் இப்படியான வார்த்தைப் பிரயோகங்களைக் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள். வெளியே இருந்து பார்க்கிறவர்களுக்கு அப்படித் தோன்ற வைப்பது நாங்கள்தானே?? இங்கும் கூட பல மில்லியன் டொலர்கள் செலவில் கோபுரம் கட்டுகிறார்கள்தான் அதற்காக ஏன் குறிப்பிட்ட தொழில் செய்பவர்களை நீங்கள் தாழ்த்துகிறீர்கள்? இந்தக் கட்டுரையில் நீங்கள் சொல்ல வந்த விசயம் முக்கியமானதுதான் ஆனால் அதைச் சொல்லும் விதம் பற்றியே நான் கருத்து எழுதுகிறேன். தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சினேகிதி இரண்டுமே ரி எண்டு முடியிறதாலை மட்டுமில்லை பல ஒற்றுமைகளை சொல்லாம்.அடுத்தாய் கனடாவிலை உள்ள எந்த அமைப்பு யாழ் களத்தைப்பற்றி கதைக்கினம் அந்த அமைப்பின்ரை பெயரை ஒருக்கால் சொல்லுங்கோ நான் அவையோடை கதைக்கிறன்.அவையளள் யாழைப்பற்றி கதைக்கிறதிற்கான தரத்தினை அவர்கள் கொண்டிருக்கிறார்களா என்பதனை நான் சொல்லுறன்.பூசாரிகள் செய்வது தொழில்தான் என்பதனை ஏற்றுக்கொண்ட உங்களிற்கு நன்றிகள் . செய்யும் தெழிலே தெய்வம் என்பார்கள் ஆனால் தெயவத்தையே வைத்து தொழில் செய்யும் இவர்கள் தொழிலில் நேர்மையாக இருந்தாலே போதும்.

****

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் பாதணிகளை கழற்றி அர்ச்சனைத் தட்டுடன்தானே வந்திருக்கிறார்?

மகிந்தா தமிழில் ஐநாவில் பேசுவதுபோல, இந்தப் பொன்னாடை போர்த்தலும் என ஏன் நினைக்கக் கூடாது? எத்தனையோ பிக்குகள் வன்னிக்கு போனார்கள்? அவர்களால் ஏதோ பயன் ஏற்படும் என்று கருதியா ஆசனத்தில் அமர்த்தி வைத்துக் கதைத்தார்கள்?

அந்த பூசாரி இப்போதும் அகதி முகாம் நில அறையுள் ஒரு சிலையோடை இருந்தால் விபச்சாரியாக உருவகப்படுத்தப்பட்டிருக்கம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை மீண்டும் இணைத்த யாழ் நிருவாகத்திற்கு நன்றிகள். அத்துடன் அவர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க நானும் சில வசனங்களை திருத்தி இணைத்திருக்கிறேன். எனவே மீண்டும் கருத்தாடுவோம் நண்பர்களே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையை மீண்டும் இணைத்த யாழ் நிருவாகத்திற்கு நன்றிகள். அத்துடன் அவர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க நானும் சில வசனங்களை திருத்தி இணைத்திருக்கிறேன். எனவே மீண்டும் கருத்தாடுவோம் நண்பர்களே

ஹம் அம்மாளாச்சிக்கு அரோகரா அரோகரா :)

இனிமேல் வரமாட்டன் என்றுவிட்டு என் திரும்ப வந்தனீங்கள்? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் வரமாட்டன் என்றுவிட்டு என் திரும்ப வந்தனீங்கள்? :)

வசி அதற்கான பதில் இங்கே எழுதியுள்ளேன்.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry462247

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் வரமாட்டன் என்றுவிட்டு என் திரும்ப வந்தனீங்கள்? :(

நம்ம ரத்தம் சாத்திரி! :)

  • கருத்துக்கள உறவுகள்

வசி கேட்டது கு.சா வை என்று நினைக்கிறன்.அதுவம் சும்மா பகிடிக்குதானாய் இருக்கும்.கு.சா உங்களை மீன்டும் கன்டதில் மிக்க மகிழ்ச்சி :)

சாத்திரி அண்ணை,

என்னட்டயும் ஒண்டு ரெண்டு கேள்விகள் இருக்கிது. அது என்ன எண்டால் தாயகத்திலேயே சனம் கண்டுகொள்ளாத ஒரு விசயத்தை வெளிநாட்டில ஏன் நீங்கள் தூக்கிப்பிடிக்கீறீங்கள் எண்டுறதுதான். அதாவது..

தாயகத்தில பிரசித்திபெற்ற மாவிட்டபுரம், கீரிமலை நகுலேஸ்வரம், துர்க்கை அம்மன், நல்லூர், மிச்சம் அங்கால கேதீஸ்வரம், கோணேஸ்வரம், இன்னும் மிச்சம் கொழும்பில பொன்னம்பலவானேஸ்வரம், கதிரேசன், மயூராபதி அம்மன், இன்னும் ஒரு ஓரமா கதிர்காம கந்தன் எண்டு அங்கை சிங்களவர் மாத்திரம் இல்லை... ஆமிக்காரர், நேவிக்காரர், போலிஸ் திருநூறு, சந்தனம், குங்குமம், காதில பூ இது எல்லாம் வச்சுக்கொண்டு சைவ அடியார்களாக, கையில தாம்பாளங்களோட அதுக்க பழங்கள், தேங்காய் கற்பூரம் எண்டு சரக்குகளோட, பயபக்தியோட கோயிலுக்கு போறீனம்.

அங்க அவங்களை இஞ்ச வரக்கூடாது, இல்லாட்டிக்கு கும்பிடப்படாது, இல்லாட்டிக்கு எண்டு யாராலையும் சொல்ல ஏலுமோ? அங்க இருக்கிற பூசாரிகளையும் வியாபாரிகள் இல்லாட்டிக்கு விபச்சாரிகள் எண்டு உங்களால சொல்ல ஏலுமோ?

மற்றது மடு தேவாலயம்... கிறிஸ்தவர்கள் சம்மந்தப்பட்டது. அங்கையும் இதேமாதிரியான நிகழ்வுகள் இருக்கிது. அப்ப பாதிரிமாரையும் வியாபாரிகள் இல்லாட்டிக்கு விபச்சாரிகள் எண்டு சொல்லுவீங்களோ?

சிலரைப் போன்று ஏமாற்றிப் பிழைக்காமலும் பிச்சை எடுக்காமலும், தமது உடலை மூலதனமாக்கி, பல துன்பங்களுக்கு மத்தியில் உழைத்து வாழும் வர்க்கமாகிய பாலியல் தொழிலாளர்களை விபச்சாரி என்று எழுதியதோடு அல்லாமல், அவர்களை பூசாரிகளுடன் வேறு ஒப்பிட்டிருக்கிறார்.

சாத்திரிக்கு என்னுடைய வன்மையான கண்டனங்கள்

மீண்டும் நிர்வாகம் தனது பாரபட்ச நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. சிலரின் மிரட்டல்களுக்கு பயந்து தமது பலவீனங்களை காட்டுவதை எப்போது இவர்கள் நிறுத்தப் போகின்றார்கள். நான் மட்டுமல்ல பலரும் பாரபட்சமற்ற நடவடிக்கையை நிர்வாகம் எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டோம். அவை எல்லாம் வீண் தானா?? இக்கருத்துப் பக்கத்தில் வெற்றிவேல் மற்றும் எனது கருத்துக்களே நீக்கப்பட்டுள்ளன. ஆனால் நான் குறிப்பிட்ட பிரான்சிலுள்ள பொண்டி விடயமும் இலண்டன் கோவில் விடயமும் உண்மையென்பது எல்லோருக்கும் தெரியும். அவற்றை நீக்கிவிட்டால் அது பொய்யாகி விடுமா??

:) அதுபோல் பூசாரிகளை விபச்சாரிகளுடன் ஒப்பிடும் சபேசனின் வாதமும் இங்கே பல்லிழித்தே நிற்கின்றது பாரபட்சமான செயற்பாடுகளுக்கு எடுத்துக் காட்டாக. :(

ஒருவர் கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வருகின்ற பொழுது, அதை செய்ய வேண்டியது பூசாரியின் கடமையாக இருக்கலாம்.

ஆனால் பொன்னாடை போர்த்தி, அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய பேச்சுவார்த்தை பற்றியே நாம் வினாவுகின்றோம்.

கோயில் திருவிழாவின் போது, சிறிலங்காவில் இருந்து சிலரை தருவிக்க வேண்டியிருக்கும் என்றும், அதற்கு சிறிலங்கா தூதரக அதிகாரியின் நட்பு தேவைப்படும் என்றும் கோயில் நிர்வாகத்தினர் சிலரிடம் கூறியிருக்கிறார்கள். அவர்களும் அதைக் கேட்டு தலையாட்டியிருக்கிறார்கள்

இருக்காதா பின்னே?

"திருவிழா எவ்வளவு முக்கியமான விடயம்? அதை இலங்கையில் இருந்து ஆட்களை அழைத்துத்தானே செய்ய வேண்டும்!" இப்படி கேட்டவர்களும் சமாதானமாகி விட்டார்கள்.

கோயில் தேவைகளுக்காக இலங்கையில் இருந்து எந்தச் சிக்கலும் இல்லாமல் ஆட்களை கொண்டு வர சிறிலங்காத் தூதரக அதிகாரி உதவுவார். நல்லது. ஏற்றுக் கொள்கிறோம்.

பதிலுக்கு நீங்கள் என்ன செய்வதாக அவரிடம் வாக்குறுதி அளித்தீர்கள்?

இதைத்தான் நாம் கேட்கிறோம்

நல்ல விடயம். முதலில் மேலே இணைக்கப்பட்ட படங்கள் ஒரே நாளில் எடுக்கப் பட்டவையல்ல. அதைக் கூட உங்களுக்கு பார்க்க நேரம் இருந்திருக்காது. ஏனெனில் உங்களின் நோக்கம் வேறானது. ஆனால் உங்கள் கேள்விகளுக்கான சரியான பதிலை இங்கு மற்றவர்களிடம் கேட்பதை விட ஐரோப்பாவில் சிலர் பரீட்சைகள் நடாத்துவதற்காக இலங்கையிலிருந்து நடுவர்களை அழைக்கின்றார்கள். அப்படி அழைப்பவர்கள் எதுவித பிரைச்சினைகளும் இல்லாது வந்து சேர பரீட்சை நடத்துவோரும் இலங்கைத் தூதுவராலயங்களோடு நட்பைப் பேணுகின்றார்களாம். அநேகமாக அவர்கள் பதிலுக்கு என்ன செய்வதாக வாக்குறுதி கொடுத்திருப்பார்களோ அதையே இவர்களும் கொடுத்திருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.