Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் மச்சம் சாப்பிடுற ஆக்களோ? (வயசுக்கு வந்தவர்களுக்கு மட்டும்)

Featured Replies

வணக்கம்,

நான் சுமார் பத்துவருடங்கள் தாவரபோசணியாக இருந்தது. பிறகு இஞ்சால வந்தாப்பிறகு மச்சமும் கலந்து அடிக்கிறது. அண்மையில நாங்கள் சாப்பிடுற இந்த மச்ச வகைகள் எப்பிடி உருவாக்கப்படுகிது எண்டுறது சம்மந்தமாக சில காணொளிகளை பார்த்தன். நீங்களும் அதை பார்த்து மகிழ்வதற்காக அல்ல.. பார்த்து அழுவதற்காக இதில இணைக்கிறன். மிருகவதை சம்மந்தமாக இதைவிட அகோரமான காணொளிகள் இருக்கிது. இணைக்கமுடியவில்லை. யூரியூப்பிற்கு போனால் இதுபற்றி ஊறிப்பட்ட காணொளிகள் இருக்கிது. பார்க்கலாம். பெரும்பாலான காணொளிகளுக்கு கொடி காட்டப்பட்டு இருக்கிறதால லொகின் பண்ணி உள்ள போனால்தான் பார்க்கலாம். எங்களுக்கு சாப்பிடேக்க கொண்டாட்டம். ஆனால் எங்கள் வயிற்று பசியுக்கு ஆகுதியாக போகின்ற பிராணிகளிண்ட மரண ஓலங்கள், வேதனைகள் எழுத்தில எழுதமுடியாதவை.

சிக்கன் சாப்பிடுற ஆக்கள் பார்க்கவேண்டிய காணொளி

பார்க்க கொடுமையா இருக்கு. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி முரளி இனைப்புக்கு பார்க்க கொடமையா இருக்கு இதுகளும் உயிர்தான

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்.... பார்க்க பாவமாகத்தான் இருக்கு

முதல் ஒளிப்படத்தில் உள்ளது போலத்தான் ஊரிலேயும் கோழி வெட்டுவார்கள் (கழுத்தை அறுத்து அல்லது சுருக்கிட்டு). வீட்டில் அன்பாக வளர்த்த கோழியை வெட்டுவார்கள். ஒரே வித்தியாசம் அதில் ஒரு தடவையில் ஒரே ஒரு கோழி தான் அனேகமாக வெட்டப்படும், இவ் ஒளிப்படத்தில் நூற்றுக் கணக்கான கோழிகள்

அதே போல் வீட்டு விசேடங்களுக்கு ஆடடிப்பதும் நடக்கும். ஆடடிப்பதை சின்ன வயதில் பார்த்து இருக்கின்றேன் (ஆடடிப்பதை ஆட்டுக்கடிப்பது என்று வாசிக்க கூடாது..சொல்லிட்டன்)

ஒரு மீனவனின் வலையில் ஒரே தடவையில் ஆயிரக் கணக்கான மீன்களும் ஏனைய கடல் சார் உயிரினங்களும் இங்கு கோழிகள் சாவதைப் போல துடி துடித்து உயிரை விடும். ஆனால் அதனை, வலையில் சிக்கிய மீன்களை (இரட்டை அர்த்தம் கற்பிக்க கூடாது) வாங்கி செல்லும் போது எந்த பாவம் உணர்வும் ஏன் வருவதில்லை என்று யோசிக்கின்றேன்

-நிழலி-

யோசிக்கிறீங்களோ யோசிச்சுப்போட்டு புள் கட்டுக் கட்டுறதுதான கிகிகிக :unsure:

யோசிக்கிறீங்களோ யோசிச்சுப்போட்டு புள் கட்டுக் கட்டுறதுதான கிகிகிக :unsure:

என்னை இரக்கமற்றவன் என்று நினைத்து விட்டீர்களா? இன்றிரவு மட்டும் கோழி சாப்பிட மாட்டேன் (மீன் பொரியல் இருக்கும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை இரக்கமற்றவன் என்று நினைத்து விட்டீர்களா? இன்றிரவு மட்டும் கோழி சாப்பிட மாட்டேன் (மீன் பொரியல் இருக்கும்)

ரொம்ம சுத்தம்

கவுணாவத்தை வேள்விக்கு போகேலையோ இல்லாட்டி வெள்ளவத்தை 'மார்க்கெட்'டுக்கு கோழி இறைச்சி வாங்க போகேலையோ.. சனம் இறைச்சி வாங்க.. பெரிய வரிசேலை நிக்கும்.. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப கொஞ்ச நாளாய் வயதுவந்தவர்களுக்கு மட்டும் எண்டு சொல்லிப்போட்டு பால்குடியள் பள்ளிக்கூடத்துலை படிக்கிற விசயங்களை இஞ்சை கொண்டுவந்து புதினம் காட்டீனம்.

ஊரிலை ஆட்டுக்கிடாய் கோழியளை பலியெடுக்கேக்கை ஒருத்தரும் முன்னுக்கு நிண்டு பாக்கேல்லையோ?அதைவிட புண்ணாக்கு தவிடு எண்டு போட்டு செல்லமாய் வளத்த ஆட்டுக்கிடாயை வளத்தவனே தீவாளியிலண்டு ஆட்டின்ரை வாயைபொத்திபுடிச்சுக்கொண்டு கழுத்தை திருகி சாக்கொல்லுறான்.இதை என்ரை கண்ணாலை நேரை நிண்டு பாத்தனான்.என்ன கொடுமையப்பா :o (அதிலை நான் ஒரு பங்கு வாங்க நிண்டது வேறை விசயம்)

சரி எல்லாம் கிடக்கட்டும் இனிமேலாவது வயதுவந்தவர்களுக்கு மட்டும் எண்டு சொல்லி என்னைப்போலை ஆக்களை சும்மா பேப்பட்டம் கட்டக்கூடாது.

எங்களுக்கு "வயதுவந்தவர்களுக்கு மட்டும்" எண்டு ஒரு வசனம் வந்துது எண்டால் நாங்கள் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டுதான் திரிவம். :unsure:

அதுசரி காய்ஞ்சபூமியிலை காய்ஞ்சு போய் கிடக்கிற சோமாலியாக்காரனை ஆரும் உங்கினேக்கை கண்ட சிலவன் dogrun-1.gif

  • தொடங்கியவர்

குமாரசாமி அண்ணை, நாங்கள் சின்னனில பார்த்தது உயிரோட ஆக்கள நரபலி பலியெடுக்கிறதுதான். இப்பிடி வேள்வி எண்டு ஒருஇடமும் பார்க்க இல்லை. எங்கட வீட்டோட கோயில் ஒண்டு இருந்திச்சிது. வீட்டிலதான் துறப்பு, சாமியிண்ட நகைப்பெட்டி எல்லாம் வைக்கிறது. இதால மச்சம் சாப்பிடுறது மிகக்குறைவு. ஆரும் ஆக்கள் வீட்ட வந்தால் ஏதாவது பின்பக்கத்தில வச்சு சமைச்சு குடுக்கிறது. இப்பிடி விசயங்களை நாங்கள் ஊரில பார்க்க இல்லை. ஒரே ஒரு தடவை சேவல் ஒண்டை சாக்காட்டுறத பார்த்து இருக்கிறன் சின்ன வயசில. ஒருத்தர் வந்து விலாமரத்தில சேவலை தலைகீழா தொங்க விட்டுப்போட்டு கழுத்தை அறுத்தார். அது லுலுலு.. குலுக் குலூக் எண்டு சேவலிண்ட தொண்டையுக்காக மரணஓலம் வந்தது இப்பவும் அப்பிடியே படமா நினைவு இருக்கிது.

இஞ்ச வந்தகையோட மச்சம் சாப்பிடாட்டி குளிர் தாங்கிப்பிடிக்கேலாது. வருத்தங்கள் எல்லாம் வரும் எண்டு சனம் பிடிச்சு வெருட்டிவிட்டதால கோழி, பண்டி, மாடு எண்டுகிடைக்கிற மச்சம் எல்லாத்தையும் வாயுக்கபோட பழகியாச்சிது. இப்ப இதுகள பார்த்தாப்பிறகு பழையபடி தாவரபோசணியா மாறுவமோ எண்டு யோசிக்கிறன்.

மற்றது வயசுக்கு வந்தவர்களுக்கு எண்டு போடுறது எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான். இப்ப குஞ்சு குருமாண்கள் எல்லாம் யாழுக்கு வந்துதானாம் தமிழ் படிக்கிறது. அதுகள் உதுகளப்பாத்துப்போட்டு மம்மி, டாடிக்கு முறைப்பாடு செய்ய பிறகு மம்மி, தாடி எங்கட கழுத்தை அறுக்கவந்தால் ஆபத்து தானே? எல்லாரும் அம்சமா அடக்கிக்கொண்டுதான் இருப்பீனம். காலநேரம் வரேக்கதான் அட்டாக் செய்யுறது. அதுதான் இஞ்ச உந்த கிளைமோர் தாக்குதல்களில இருந்து தப்ப இப்பிடி ஒரு முன்னேற்பாடு.

சே இந்த முறையும் தலையங்கத்தை பாத்து ஏமாந்து போனன் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி,

நீங்கள் தாவரபட்சணியா மாறுவதுதான் நல்லதெண்டு படுது..."கொழுப்பு கூடிப்போச்சு உங்களுக்கு" :)

மச்சம் விரும்பிச் சாப்பிடுறதில்லை அதிலும் , செவ்வாய்,வியாழன்,வெள்ளி,சனி, பங்குனித்திங்கள், கார்த்திகைத்திங்கள், தைப்பூசம், சிவராத்திரி, கந்தசஷ்டி, நவராத்திரி, கெளரிகாப்பு, பிள்ளையார்கதை, 'இதையும் விட ஊர்க்கோயில் கொடியேற்றங்கள், 'கும்பத்துமால் கருமாரி அம்மன், முத்துக்குமாரஸ்வாமி கோயில்,ஆலடிப்பிள்ளையார், கும்பிளாவளைப்பிள்ளையார், கோணேசர் கோயில் இப்படி நிறைய இருக்கு.

'முரளி ஒரு பிழை திருத்தம் மச்சம் என்று சொல்லுறது 'கடல்வாழ் உயிரினங்களை

நீங்கள் சொல்லிறதெல்லாம் மாமிச வகையைச் சேர்ந்தது. :)

ஆகவே மச்சம் சாப்பிடலாம் :)

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

முரளி,

நீங்கள் தாவரபட்சணியா மாறுவதுதான் நல்லதெண்டு படுது..."கொழுப்பு கூடிப்போச்சு உங்களுக்கு" :)-

-

-

'முரளி ஒரு பிழை திருத்தம் மச்சம் என்று சொல்லுறது 'கடல்வாழ் உயிரினங்களை

நீங்கள் சொல்லிறதெல்லாம் மாமிச வகையைச் சேர்ந்தது. :)

ஆகவே மச்சம் சாப்பிடலாம் :)

தமிழ் தங்கை ,

சரியாச் சொன்னீங்க ........ முரளிக்கு கொஞ்சம் கொழுப்பு கூடியிருக்குது தான் .

எல்லாம் கால் கட்டு போட சரிவரும் .

முரளி,

நீங்கள் தாவரபட்சணியா மாறுவதுதான் நல்லதெண்டு படுது..."கொழுப்பு கூடிப்போச்சு உங்களுக்கு" :)

:) :) :):lol: :lol: ............................ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புலத்தில சிலர் "நாங்கள் வேஜிட்டேறியன் " எண்று சொல்லுறதை கெளரவமாய் நினைக்கினம்.......

அது சரி கொண்ற பாவம் திண்டால் போச்சு இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் "நான் வெஜ்" தான் சாப்பிறனான்....

  • தொடங்கியவர்

முரளி,

நீங்கள் தாவரபட்சணியா மாறுவதுதான் நல்லதெண்டு படுது..."கொழுப்பு கூடிப்போச்சு உங்களுக்கு" :D

நீங்களும் பகிடிவிடப்பழகீட்டீங்கள் என. :D சொன்னால் நம்புவீங்களோ இல்லையோ... நான் இந்த காணொளியை பார்த்தபிறகு இன்னமும் மாமிசம் சாப்பிட இல்லை. கொஞ்சநாளைக்கு மாமிசம் எனக்கு தரவேணாம் எண்டு அம்மாவுக்கு சொல்லி இருக்கிறன். அப்ப நீங்கள் மீன் சாப்பிட்டால் பரவாயிலை எண்டு சொல்லிறீங்கள் போல. மீன் போடுற மரண ஓலம் எங்களுக்கு கேட்காது இதால சாப்பிடலாமோ?

எங்கட மண்ணுக்கேயுரிய வாசனை தானே பகடி" என்கிறது :D

சின்னமீன் பெரிய மீனுக்கு எப்படியும் இரையாகிவிடும் முரளி, பெரிய மீன்கள் சாப்பிடுறதை விட சின்னமீன்கள் சாப்பிடலாம். நான் சொன்னனே எங்கட வீட்டில் 'மச்சம்" என்பதே குறைவு மிகமிகக்குறைவு...அத்தனை கோயில் விரதங்களும் எங்கடவீட்டில் விடாமல் கடைப்பிடிக்கிறது. டிசம்பர் 9ம் திகதியில் இருந்து இனி சித்திரை வருஷத்துக்கும் பிறகுதான் வீட்டில் 'மச்சம்" என்ற சொல்லே வரும்.

நானும் "சைவவிரும்பிதான்(தாவரப்பட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.