Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பாய் தாக்குதல் எதிரொலி: இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல்- எம்.கே.நாராயணன் பதவி விலகல்

Featured Replies

இந்தியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்றான மும்பாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: ஒரு வழியாக ராஜினாமா செய்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். அதே போல மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார் என்று தெரிகிறது.

பாட்டீல் ராஜினாமைவையடுத்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராகிறார்.

நாட்டில் கடந்த நாலரை ஆண்டுகளாக நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களுக்கு உளவுப் பிரிவின் தோல்வியே காரணம் என்று மீண்டும் மீண்டும் உறுதியான நிலையில் அந்தப் பிரிவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உள்துறை அமைச்சகமும் அதன் அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் தனது பதவியைக் காப்பதிலேயே தீவிரமாக இருந்தார்.

தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தில் முன்னிலையில் நிற்க வேண்டிய இந்தத் துறை பெரும் தோல்வியை அடைந்த நிலையில் பாட்டீல் மீதான கோபம் நாடு முழுவதும் அதிகரித்து வந்தது.

ஆனாலும் சோனியா காந்தி குடும்பத்துடனான தனது நல்லுறவை பயன்படுத்திக் கொண்டு பதவியை தக்க வைத்து வந்தார் பாட்டீல்.

இந் நிலையில் வந்தது மும்பை தாக்குதல். இதுவரை இந்தியா கண்டிராத மிகப் புதிய வகையிலான தாக்குதல் இது. கடல் வழியே வந்து தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதல் நாட்டை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் கடல் வழியே பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் வந்து போவது குறி்த்தும், ஆயுதங்கள் வருவது குறித்தும் மகாராஷ்டிர, குஜராத் மீனவர்கள் அந்த மாநிலங்களின் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.

ஆனால், இரு மாநில அரசுகளும் செயல்படத் தவறியுள்ளன.

இந்த மாநிலங்களின் செயல்படும் மத்திய உளவுப் பிரிவான இன்டெலிஜென்ஸ் பீரோவும் இந்த தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து தகவல்களை திரட்டத் தவறியுள்ளது. இவர்களுக்கு எதிர்க் கட்சித் தலைவர்களை உளவு பார்க்கவே நேரம் போதாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல உள்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கடலோரக் காவல் படையும் (கடற் படை அல்ல) இந்த விஷயத்தில் பெரும் தோல்வி அடைந்துள்ளது.

இதையடுத்து உள்துறைக்கு தலைமை வகிக்கும் பாட்டீலுக்கு எதிரான கோபம் மீண்டும் வெடித்தது. தாக்குதல் நடந்து 4 நாட்களாகிவிட்ட நிலையில் அவரை மும்பையிலும் பார்க்க முடியவில்லை, டெல்லியிலும் வெளியில் தலை காட்டவில்லை.

மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு வந்தது.

ஆனால், நேற்று பிரதமர் நடத்திய மிக முக்கியமான உயர் மட்டக் கூட்டத்துக்கு பாட்டீல் அழைக்கப்படவில்லை. மேலும் நேற்று கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் ஆகியோருக்கு எதிராக பல்வேறு தலைவர்களும் கடும் கருத்துத் தெரிவித்தனர். அவரை உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந் நிலையில் இன்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ள நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளார் சிவராஜ் பாட்டீல்.

அதில் மும்பை தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் பெயர் பரிசீலனை:

இதையடுத்து நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி ஆகியோரில் ஒருவர் உள்துறை அமைச்சராக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பெயரும் அடிபட்டது. ஆனால், பாகிஸ்தானுடனான மோதல் தீவிரமாகியுள்ள நிலையில் அவரை மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது.

சிதம்பரத்திடமே அந்தப் பொறுப்பை வழங்கலாம் என சோனியாவும் கூறிவிட்டார்.

ஏற்கனவே ராஜிவ் காந்தியின் ஆட்சியில் உள்துறை இணையமைச்சராக இருந்த சிதம்பரம் உள்நாட்டு பாதுகாப்பை கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் உள்துறை அமைச்சரானால் நிதித்துறையை பிரதமரே கையாள்வார் என்று கூறப்படுகிறது.

நன்றி தற்ஸ் தமிழ்

சிதம்பரம் உள்துறை அமைச்சரானால் இலங்கை தமிழர்கள் மேல் கடுப்போக்கை கடைப்பிடிக்க சாத்தியமுண்டு. அவர் ராஜீவ் மற்றும் சோனியா குடும்பத்தினரின் விசுவாசத்தை வெளிக்காட்ட முயலலாம்.

சிதம்பரம் உள்துறை அமைச்சரானால் இலங்கை தமிழர்கள் மேல் கடுப்போக்கை கடைப்பிடிக்க சாத்தியமுண்டு. அவர் ராஜீவ் மற்றும் சோனியா குடும்பத்தினரின் விசுவாசத்தை வெளிக்காட்ட முயலலாம்.

பொதுத்தேர்தல் ஒன்று நெருங்கி வரும் காலகட்டத்தில் தமிழக மக்களின் அதிருப்திக்கு ஆளாகும் எந்த ஒரு காரியத்தையும் செய்ய சிதம்பரம் துணிய மாட்டார். இதை சோனியாவுக்கும் சிதம்பரம் விளக்கி இருக்கக் கூடும்

காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றால் (?) நிதித்துறைக்கு சிதம்பரம் மீண்டும் செல்லும் வாய்ப்புகளே அதிகம்!

Edited by vettri-vel

தேசிய பாதுகாப்பு செயலாளர் எம்கே நாராயணனும் ராஜினாமா!!!

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

PM snubs Shivraj Patil and Narayanan

Comment Print Email A A A Share Facebook! Digg it! Newsvine! Reddit! Del.icio.us! Technorati! StumbleUpon! RSS Feed

CloseIndia Today expert view on PM snubs Shivraj PatilPrime Minister Manmohan Singh rebuffed Home Minister Shivraj Patil and National Security Adviser M. K. Narayanan on Saturday by not inviting them to an emergency meeting on the Mumbai terror attack. The meeting discussed lapses in internal security, even as various security agencies pointed fingers at each other for letting the terrorists through.

http://indiatoday.digitaltoday.in/index.ph...82&Itemid=1

எம்.கே. நாராயணன் புலிகள் மீதுள்ள கோபம் காரணமாக இலங்கைப் பிரச்சினையில் தனது கவனத்தைச் செலுத்தி இந்தியாவின் உள்ளகப் பாதுகாப்பில் கோட்டை விட்டிருப்பார்.. வெளியே போகத்தானே வேண்டும்..

National Security Advisor M. K. Narayanan resigns: Report

ITGD Bureau

New Delhi, November 30, 2008 15.37 pm

==============================================================

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. எம்.கே.நாராயணன் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார் என 'டைம்ஸ் நவ்' செய்தி சேவை தெரிவிக்கிறது

NSA M K Narayanan resigns: Report

30 Nov 2008, 1558 hrs IST, TIMES NEWS NETWORK & AGENCIES

NEW DELHI: National Security Adviser MK Narayanan has submitted his resignation over the attacks in Mumbai that killed nearly 200 people, news

channel Times Now said on Sunday.

Earlier in the day, Home minister Shivraj Patil, under tremendous criticism over a spate of terrorist attacks in the country since last year, has resigned in the wake of the Mumbai terror strikes. Patil has said that he felt obliged to take "moral responsibility" for the brutal attacks in Mumbai, an official government source said.

Prime Minister Manmohan Singh has accepted resignation of Home minister Shivraj Patil and has forwarded it to the President.

Finance minister P Chidambaram will take over as the new home minister and the finance ministry will now be under the direct charge of Prime Minister Manmohan Singh. The CWC, which met here on Saturday night, gave the marching orders to Shivraj Patil.

http://timesofindia.indiatimes.com/India/N...how/3776113.cms

Edited by vettri-vel

M K Narayanan resigns over Mumbai terror

Sunday, 30 November , 2008, 16:11

New Delhi: National Security Adviser (NSA) M K Narayanan on Sunday submitted his resignation to Prime Minister Manmohan Singh following the terror attacks in Mumbai, sources in the Prime Minister's Office (PMO) said.

மும்பை பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து திரு.எம்.கே.நாராயணன் பதவி விலகல்

புதுடெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு எம்.கே.நாராயணன் தனது பதவி விலகல் கடிதத்தை

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்தார் என பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன

http://sify.com/news/fullstory.php?id=14808645

Edited by vettri-vel

நேற்று பிபிசி தொலைக்காட்சி செய்தியில் பிரித்தானியாவிற்கான பாக்கிஸ்தான் தூதுவர் Wajid Shamsul Hasan கூறினார் மும்பை தாக்குதலை சந்தேகிக்க பல தரப்புகள் இருக்கு என்று. தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நிறம் சற்று கறுப்பு என்றும் இது பொதுவாக தென் ஆசிய பகுதியினரின் தன்மை என்றும் சொன்னார். தமிழ் புலிகள் முதலமைச்சர் ராஜீவ் காந்தியை கொலை செய்திருந்தார்கள் என்றும் சொன்னார். எனவே தாக்குதலை நடத்தியவர்களாக பலதரப்பட்டவர்களையும் சந்தேகிக்க வேண்டும் என்றார்.

பி ராமன் கரிகரன் போன்றவர்கள் தமது ஆய்வுகளின் பல முறை குறிப்பிட்டிருந்தவர்கள் புலிகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கு எண்டு. ISI ஓடு சேர்ந்து புலிகளும் போதைப் பொருள் ஆயுதங்கள் கடத்திறவை, இந்தியாவுக்குள்ளை இயங்கிற தீவிரவாத அமைப்புகளுக்கு பயிற்சி கொடுக்கினம் எண்டு.

மும்பை தாக்குதல் இந்தியாவின் 9-11 போன்றது என்று வருணிக்கப்படுது. அமெரிக்கா தனது 9-11 இற்கு காரணம் என ஆப்கானிஸ்தானையும் பின்னர் சம்பந்தம் இல்லாது ஈராக்கையும் தாக்கிய மாதிரி இந்தியாவும் பாக்கிஸ்தானையும் பின்னர் புலிகளையும் தாக்குமா?

தாக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் அடுத்த தேர்தலில் வெல்ல வேண்டும் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். அப்பொழுது தான் 20 ஆம் நூற்றாண்டு சிந்தனைகளில் சிக்கித் தவிக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் black humour ஆலோசைகளோடு இந்தியா 21 ஆம் நூற்றாண்டில் வல்லரசாக வடிவம் பெறும்.

நாராயனின் விலகல் நற்செய்தியே!! கடந்த கலைஞரின் ஆட்சிக்கலைப்பிற்கும் இவரே சூத்திரதாரி!!!

ஆனால் நாரயணன், சிதம்பரம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!!

பார்ப்போம் .... மாற்றம் வருமா???? இல்லை புலியை பூதமாக்கும் பிராமணத்துவ வேதாளம் முருக்கை மரத்தில் மீண்டும் ஏறுமா????? .............. என்று ...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருமாதிரி ஒரு **** போகுது

டெல்லி: இந்தியா இதுவரை பார்த்ததிலேயே மிக மட்டமான தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் தனது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார்.

ஆனால்இ வேறு ஆலோசகரை தேர்வு செய்யும் வரை இவரது ராஜினாமா கிடப்பில் போடப்படும் என்று தெரிகிறது.

வெளியுறவுச் செயலாளராக இருந்து பிரதமர் ராஜிவ் காந்தி உள்பட பல பிரதமர்களை இலங்கைஇ காஷ்மீர்இ அமெரிக்க உறவு உள்ளிட்ட பல விஷயங்களில் தவறாக வழி நடத்திய ஜே.என்.தீட்சித் இம்முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

வழக்கம் போலவே பிரதமர் மன்மோகன் சிங்கையும் தவறாகவே வழி நடத்தி வந்தார். திடீரென அவர் மறையவே 2005ம் ஆண்டு இந்தப் பொறுப்பு எம்.கே.நாராயணனிடம் வழங்கப்பட்டது. இது நிலைமையை இன்னும் மோசாக்கியது.

இந்திரா காந்தி குடும்பம்இ காங்கிரஸ் கட்சி ஆகியோரின் ஜால்ரா என்பதைத் தவிர நாராயணனுக்கு பெரிய தகுதி ஏதும் இருந்ததில்லை

இந்திரா குடும்பத்துக்கு நெருக்கம் என்பதால் இருமுறை இன்டெலிஜென்ஸ் பீரோவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1992ம் ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார். 2004ம் ஆண்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கி்ன் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தீட்சித் மறைந்த பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார்.

பாலக்காட்டைச் சேர்ந்தவரான இவர் தான் தேசிய பாதுகாப்பு விஷயத்தில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு உதவி வந்தவர். இருவரும் சேர்ந்து காட்டிய பொறுப்பின்மையும் செயலின்மையும் தான் நாட்டை இந்த அளவுக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது.

மீண்டும் வருவாரா பிரிஜேஷ் மிஸ்ரா?:

நாராயணன் மீது சமீப காலமாவே பிரதமர் நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் பாஜக ஆட்சியில் பிரதமர் வாஜ்பாயின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ராவுடன் பிரதமர் மன்மோகன் சிங் அவ்வப்போது ஆலோசனைகள் நடத்தி வந்தார்.

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்த விஷயத்தில் இவர் பிரதமருக்கு பெரும் உதவியாக இருந்தார்.

மேலும் பாஜக ஆட்சியில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மிகுந்த தீவிரம் காட்டியவர். யாருக்கும் அஞ்சாதவர்இ வாஜ்பாயோ-அத்வானியோ.. யாருக்கும் ஜால்ரா போட மாட்டார். மனதில் பட்டதை சொல்லிவிடுவார். இதனால் இவர் மீது வாஜ்பாய்க்கு அதீத மரியாதை உண்டு.

குறிப்பாக ஐபி மற்றும் ரா அதிகாரிகளை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் மிஸ்ரா.

நேற்று கூட நாராயணனுடன் மிஸ்ராவையும் உடன் வைத்துக் கொண்டு தான் முக்கிய ஆலோசனையை நடத்தினார் மன்மோகன் சிங்.

இதற்கிடையே நாராயணனுக்குப் பதிலாக வேறு ஆலோசகரை தேர்வு செய்யும் வரை அவரையே பதவியில் நீடிக்குமாறு பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

மிஸ்ராவையே மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக்க வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஐபி தலைவரும் பதவி இழக்கிறார்?:

அதே போல இன்டலிஜென்ஸ் பீரோ உளவுப் பிரிவின் இயக்குனர் பி.சி. ஹல்தர்இ உள்துறைச் செயலாளர் மதுக்கர் குப்தா ஆகியோரும் ராஜினாமா செய்யுமாறு பிரதமரால் உத்தரவிடப்படுவார்கள் என்று தெரிகிறது.

செய்தி : தற்ஸ்தமிழ் இணையம்.

அலுமினிய குண்டு சைக்கிள் களில் பயன்படுத்தப்படும் ‘பால்ரசு கடத்தல் வழக்குகளை சோடித்து மினக்கட்டதில் உண்மையான தீவிரவாதிகளை நாட்டுக்குள்ளே விட்டுவிட்டார்கள் இனியாவது சரியானவர்கள் பதவிக்கு வருவார்களோ? தமிழ்நாட்டு கடற்கரையில் ஊசியை தேடின நேரத்துக்கு மும்பைக்கடற்கரையில் தேடியிருந்தாலாவது உவங்களை உள்ளவிடமால் பிடிச்சிருக்கலாம்.

இவர்களின் பதவிவிலகலால் மட்டும் இறந்தவர்கள் வந்துவிடுவார்களோ? நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும்.

புதுடெல்லி

உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த இலாக்கா மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து சிவராஜ் பாட்டீல் வகித்து வந்த உள்துறை இலாக்கா, நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக, தலைநகர் டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிதம்பரத்திடம் உள்ள நிதித்துறை இலாக்காவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

எம்.கே. நாராயணன் ராஜினாமா

சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து, மும்பை சம்பவத்துக்குப் பொறுப்பேற்று பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேபோல் மகராஷ்டிரா மாநில முதல்வர் விலாஷ்ராவ் தேஷ்முக்கும், மும்பை சம்பவத்துக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.

நன்றி :தமிழ்யாகூ(மூலம் - வெப்துனியா)

உள்த்துறை அமைச்சர் சிவராஜ் பட்டேல் பதவி விலகி விட்டார்....!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இதுவரை பார்த்ததிலேயே மிக மட்டமான தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் தனது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார்.

அறிவு குறைந்தவர்களுக்கு பொறுப்பான பதவி கொடுத்தால் ,

அநியாயமாக அப்பாவி உயிர்கள் தான் பலியாகும் என்பதற்கு ,

இவர் நல்ல உதாரணம் .

பெரும் நன்மைகளுக்கான சிறு தொடக்கம். இந்தியா தமிழர்களின் நண்பனாக மாறது என்ற போகொல்லாகமவின் கொக்கரிப்புக்கு நல்ல பதில். எனினும் வலியும், வேதனையும், இழப்புகளும் எவ்வளவு கொடுமையானவை என்பதை உணர்ந்த நாம் இந்தியாவின் சோகத்துக்கு ஆறுதல் செய்தி அனுப்புவோம்.

அலுமினிய குண்டு சைக்கிள் களில் பயன்படுத்தப்படும் ‘பால்ரசு கடத்தல் வழக்குகளை சோடித்து மினக்கட்டதில் உண்மையான தீவிரவாதிகளை நாட்டுக்குள்ளே விட்டுவிட்டார்கள் இனியாவது சரியானவர்கள் பதவிக்கு வருவார்களோ? தமிழ்நாட்டு கடற்கரையில் ஊசியை தேடின நேரத்துக்கு மும்பைக்கடற்கரையில் தேடியிருந்தாலாவது உவங்களை உள்ளவிடமால் பிடிச்சிருக்கலாம்.

இவர்களின் பதவிவிலகலால் மட்டும் இறந்தவர்கள் வந்துவிடுவார்களோ? நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும்.

நான் சொதப்ப வந்ததையே நீங்க சொல்லிடிங்க.... அதனால உங்களை நான் காப்பியடிச்சுகிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: தமிழர்களுக்கு இதுவரை காலமும் இருந்து வந்த ஏழரைச் சனிகளில் ஒன்று தொலைந்தது ! நல்ல விடயந்தான் !!!!!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா வியாழன் மாறுவதற்கு முதல் சனி மாறிட்டுதே :lol:

உண்மையில் ஒரிஜினல் இந்தியனாக இருந்திந்தால் சார்க் மகாநாட்டில் கலந்துகொண்டபோது இலங்கை அரசு நடுவீதியில் தவிக்கவிட்டு அவமானபடுத்தியபோதே இராஜிணாமா செய்துஇருக்க வேண்டும். இப்போதாவது புத்தி வந்ததே அதுவேபோதும்.

இது எல்லாம் ஒரு நாடகம் ! பாருங்கள் நாராயணன் வந்து திரும்பி பதவி ஏற்காவிட்டால். ஜனங்கள் முந்த முன் நாராயணன் முந்திவிட்டார். எம்மால் அரசியல்

தேசியத்தலைவருக்கும் எம்ஜீஆருக்கும் இடையில் பிரச்சினையை உருவாக்க அயராது பாடுபட்டு கையும் மெய்யுமாக பிடிபட்டவர்தான் இந்த சிதம்பரம்

நாடகம் முடிந்தது.....................நாராயணன் ராஜினாமை ஏற்க மன்மோஹன் சிங் மறுப்பு............ தொடர்ந்து அவரை பதவியில் நீடிக்க வலியுருத்தல்....

பாட்டீல் பதவிவிலகல்

20081130054938shivraj_patil203.jpg

இந்திய உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சிவராஜ் பாட்டீல்

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார்.

இதுவரை நிதியமைச்சராக இருந்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த ப. சிதம்பரம், புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகலில் சிவராஜ் பாட்டீல் தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்தார்.

தற்போது இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல், சிவராஜ் பாட்டீல் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதேபோல், சிதம்பரத்தை புதிய உள்துறை அமைச்சராக நியமித்திருக்கும் உத்தரவையும் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவரை சிதம்பரம் கவனித்து வந்த நிதியமைச்சகத்தின் பொறுப்பை, பிரதமர் மன்மோகன் சிங் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவி்க்கப்பட்டுள்ளது.

நரசிம்மராவ் அமைச்சரவையில் ஐந்து ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விவாதிக்க நேற்றிரவு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் தோல்வியடைந்திருப்பது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மீதும் விமர்சனம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, காரியக் கமிட்டி என்ன முடிவெடுத்தாலும், அதன்படி செயல்படத் தயாராக இருப்பதாக பாட்டீல் தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்துக்கு, நிதியமைச்சர் சிதம்பரமும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போதே சிதம்பரத்துக்கு உள்துறை கொடுக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

அதன்பிறகு, இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த சிதம்பரம், மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

74 வயதான சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதை அடுத்து, புதிய உள்துறை அமைச்சராகியிருக்கும் 63 வயதான சிதம்பரம், 1980-களின் பிற்பகுதியில் மறைந்த ராஜீவ் காந்தி அமைச்சரவையில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான இணை அமைச்சராகப் பதவி வகித்த அனுபவம் பெற்றவர்.

இதனிடையே, மும்பை சம்பவத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் பதவி விலக முன்வந்ததாகவும், ஆனால் பிரதமர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

BBC Tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.