Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரும்பிராயில் அர்ச்சகர்கள் நடத்திய தாக்குதலில் ஆலய வழிபாட்டுக்குச் சென்றவர் காயம்

Featured Replies

உரும்பிராயிலுள்ள ஆலயமொன்றிற்கு வழிபாட்டிற்காகச் சென்றிருந்த பக்தரொருவர் அந்த ஆலயத்தின் அர்ச்சகர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் ஆலய அர்ச்சகர்களால் தாக்கப்பட்டதில் உரும்பிராய் ஞானவைரவர் வீதியைச் சேர்ந்த இராஜரட்ணம் புஸ்பநாதன் (வயது 57) என்பவரே தலையில் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

குறிப்பிட்ட நபர் கடந்த 30 வருடகாலமாக இந்த ஆலயத்தில் வழிபாடு செய்துவந்தார். வழக்கம்போல் நேற்று புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஆலய வழிபாட்டுக்காக சென்றபோது வழிபாடு தொடர்பாக இந்தநபரிற்கும் ஆலயக் குருக்கள் மற்றும் அவரது மகன் உட்பட ஏனைய அர்ச்சகர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

மேற்படி முரண்பாடு தொடர்பான விடயத்தை ஆலய பரிபாலன சபைத் தலைவருக்கு எடுத்துக்கூறிய மேற்படி பக்தர், வழிபாட்டுக்காக மீண்டும் ஆலயத்திற்குச் சென்றார்.

இந்நிலையில் அந்த நபர் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்துவதற்கிடையில் அங்கு தயாராக நின்ற அர்ச்சகர்கள் மற்றும் அவரது உதவியாளர்கள் உட்பட ஏறக்குறைய ஐந்து பேர் மேற்படி பக்தரைத் தாக்கியுள்ளனர்.

இறைவனுக்குத் தூப,தீபம் காட்டுகின்ற உபகரணங்களைக் கொண்டே இவர் மீது தாக்கியதாகவும் இதனால் தலையில் படுகாயமடைந்த இவர் உடனடியாகக் கோப்பாய் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி விடயம் தொடர்பாக ஆலயப் பரிபாலன சபையினர் சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து தாக்குதல் நடத்திய அர்ச்சகர்கள் மேற்படி ஆலயப் பூஜை பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு வேறொரு அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

என்னே வில்லத்தனம் :)

  • கருத்துக்கள உறவுகள்

பூனையில்லா வீட்டுக்கு எலி காவல் என்ற நிலையாய் போய்விட்டது.

ஓம் பாருங்கோ ! அவன் குறைங்ச சாதி நான் கூடின சாதி எண்டு புலம்பிக் கொண்டு திரியுங்கோ ... சிங்களவன் உங்களிற்கு தங்கத்தட்டில தமிழிழத்தை வைச்சு தருவான் பிறகென்ன நம்ம ஆடடி தான் ...... முழுப் பைத்தியங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புதியவன் என்ன கனகாலத்திற்கு பிறகு.........

அதிரடியாக கோபம் கொப்பளிக்க வாறீங்கள்

என்ன ஆச்சு.............

கூட்டமைப்பு நலமா???

  • தொடங்கியவர்
ஓம் பாருங்கோ ! அவன் குறைங்ச சாதி நான் கூடின சாதி எண்டு புலம்பிக் கொண்டு திரியுங்கோ ... சிங்களவன் உங்களிற்கு தங்கத்தட்டில தமிழிழத்தை வைச்சு தருவான் பிறகென்ன நம்ம ஆடடி தான் ...... முழுப் பைத்தியங்கள்.
:):lol:

என்ன சிரிப்பு தராக்கி அவர்களே

இந்த செய்தியில் எங்கே இருக்கிறது சாதிப்பிரச்சினை

இவர் ஏன் இதுக்குள்ள அதை புகுத்துகின்றார் என்று கேட்காமல் என்ன சிரிப்பு????

இரண்டுபேர் சண்டைபிடித்தால் அதுக்கு சாதிதான் காரணம் என்று சொல்பவர் சொன்னால் கேட்பவருக்கு மதி எங்கே????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைவனுக்குத் தூப,தீபம் காட்டுகின்ற உபகரணங்களைக் கொண்டே இவர் மீது தாக்கியதாகவும்

ஆண்டவா... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தாள் போயு அவங்களிட்ட புக்கை கேட்டிருப்பார் அவங்கள் தாங்கள் சாப்பிடற நேரத்தில பாவி கேட்கிறான் எண்டு போட்டு

மண்டைய உடைச்சிருப்பாங்கள்..எங்கட குருக்கள் நல்லவையள்... :) அவையள கொறை சொல்லாதீங்கோ... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமை சாமி இது?!

இது என்ன? இங்கை அவுஸ்ரேலியாவுக்கு கப்பல்ல வந்ததுகள் இப்ப கோடலியோட குரூப் சேர்த்து வெட்டிக்கொண்டு திரிதுகள். இதைவிட கொடுமை வெள்ளைக்காரப்பெட்டைய ரேப்பண்ணினதும் நடந்தது. இதுகளை திருப்பி அனுப்பவேண்டாம் என்று எங்கட சனம் ஆர்ப்பாட்டம் செய்துதுகள். இதுகள் போராட்டம் சம்பந்தமான எந்த கூட்டத்துக்கோ ஆர்பாட்டத்துக்கோ வர இல்லை. இப்பவும் ஒரு கப்பல்

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கப்படவேண்டிய செயல் .

:)

சிங்களவன்களை தமிழனை அழிக்கிறது போதாது எண்டு இவை தங்களுக்குள்ளேயே அடிபட்டுச் சாகினம். எப்பதான் எங்கட சனம் திருந்தப்போகுதோ???

பக்தர் தாக்கப்பட்டதால் நல்லவராகி விட்டாரா? ஐயர் அடித்ததால் கெட்டவராகி விட்டாரா? நிகழ்வுக்கு காரணம் எவருக்குமே இங்கு தெரியாது. காரணம் தெரியும் மட்டும்மாவது தீர்ப்புகளை எழுதுவதை கொஞ்சம் தள்ளி போடலாமே :)

இதைத்தான் நானும் குறிப்பிட்டிருந்தேன்

என்ன சிரிப்பு தராக்கி அவர்களே

இந்த செய்தியில் எங்கே இருக்கிறது சாதிப்பிரச்சினை

இவர் ஏன் இதுக்குள்ள அதை புகுத்துகின்றார் என்று கேட்காமல் என்ன சிரிப்பு????

இரண்டுபேர் சண்டைபிடித்தால் அதுக்கு சாதிதான் காரணம் என்று சொல்பவர் சொன்னால் கேட்பவருக்கு மதி எங்கே????

சிவகுமாரன் எனும் பெரும்தகையை எமக்குத்தந்த மண் அது

பொறுப்போடு எழுதுவோம்

பக்தர் தாக்கப்பட்டதால் நல்லவராகி விட்டாரா? ஐயர் அடித்ததால் கெட்டவராகி விட்டாரா? நிகழ்வுக்கு காரணம் எவருக்குமே இங்கு தெரியாது. காரணம் தெரியும் மட்டும்மாவது தீர்ப்புகளை எழுதுவதை கொஞ்சம் தள்ளி போடலாமே :)

அதற்காக அவரைத் தாக்குவதெல்லாம் இந்த ஐயர்மாருக்குத் தேவையா?

Edited by Mallikai Vaasam

அதற்காக அவரைத் தாக்குவதெல்லாம் இந்த ஐயர்மாருக்குத் தேவையா?

ஏன் ஐயர்களுக்கு கோபம் வரக்கூடாதா? இதில் எவர் பக்கம் நியாயம் என்டு எனக்கு தெரியாது. முரண்படுதல் அடிபடுதல் சாதாரண மனித இயல்பு.

  • கருத்துக்கள உறவுகள்

பக்தர் தாக்கப்பட்டதால் நல்லவராகி விட்டாரா? ஐயர் அடித்ததால் கெட்டவராகி விட்டாரா? நிகழ்வுக்கு காரணம் எவருக்குமே இங்கு தெரியாது. காரணம் தெரியும் மட்டும்மாவது தீர்ப்புகளை எழுதுவதை கொஞ்சம் தள்ளி போடலாமே :)

நீங்கள் சொல்ல வருவது சரிதான்.....

இருப்பினும் செய்தியை நீங்கள் சரியாக புரியவில்லை என நினைக்கிறேன். அர்சகர்கள் இவரின் வருகைக்காக காந்திருந்து பூஜை பொருட்களால் தாக்கிஇருக்கிறார்கள். பூசாரி அதை செய்லாமோ? கோவிலுக்கு ஒரு பொறுப்பான நிர்வாகமும் இயங்கு நிலையில் இருந்திருக்கின்றது என்பதும் செய்தியில் தெளிவாக இருக்கின்றது.

ஆகவே அர்ச்சகர் எனும் பெயரில் ஆள்அடிக்கும் கூட்டம் ஒன்று அங்கே இருந்திருக்கின்றது

எனும் முடிவுக்கு இயல்பாகவே வரலாம்.

அடி வாங்கியவர் குடிகாரனாக இருக்கலாம்? கொள்ளையனாக இருக்கலாம்? அர்ச்சகர்களை அடிக்கும் எண்ணம் உடையவனாக கூட இருந்திருக்கலாம். ஆனால் அதிகாலை காந்திருந்து இறைவழிபாட்டிற்கு பயன்படுத்தும் பொருட்களால் தாக்கியிருக்கிறார்கள். தற்பாதுகாப்பு தாக்குதலாக இது இருந்திருப்பின் செய்தி வேறுமாதிரி இருந்திருக்கும் மேலே இருக்கும் கருத்துக்களும் வேறாக இருந்திருக்கும்.

கடைசியிலை மணியாட்டுகிற ஐயர் மாருக்கும் வீரம் வந்திட்டுது....!! வாழ்க

அது எப்பிடி நீங்கள் ஐயர் மாரை கொல்ல வேணும் எண்டுறதும் இல்லை அவன்களுக்கு அடி போடுறதும் சரி எண்டுவீங்கள், ஆனால் அதை ஐயர் மார் செய்தால் மணி ஆட்டுற கையாலை அடி போடலாமோ ஆச்சாரம் என்ன ஆகும் எண்டு கவலைப்படுகிறீயளோ...??

உங்களிட்டையும் பிரிவினை சாதி வடிவிலை எட்டி பாக்குது போலகிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஐயர்களுக்கு கோபம் வரக்கூடாதா? இதில் எவர் பக்கம் நியாயம் என்டு எனக்கு தெரியாது. முரண்படுதல் அடிபடுதல் சாதாரண மனித இயல்பு.

அதைதான் நாங்களும் சொல்கிறோம்..... சாதாரணமனிதர்கள்தான் நாம் எல்லோரும். நாமும் மூலஸ்தானம்வரைக்கும் போய் வெளியில் நிற்கும் மனிதருக்கு விழங்க கூடிய பாசையில் பூஜை செய்கிறோம் எங்களையும் விடுங்கள் என்று.

ஆனால் அவர்கள் தாம் சதாரண மனிதர்கள் அல்ல அதற்கு அப்பாற்பட்வர்கள் நீங்கள் சாதரணமானவர்கள் உங்களுக்கு அதற்கு தகுதியில்லை என்று அவர்கள் சொல்கிறார்களே???? என்ன தகுதி...... பக்கதர்களை பூஜை பொரட்களால் அடிக்கும் தகுதியா????? அது எம்மிடம் இல்லைத்தான்

கடைசியிலை மணியாட்டுகிற ஐயர் மாருக்கும் வீரம் வந்திட்டுது....!! வாழ்க

அது எப்பிடி நீங்கள் ஐயர் மாரை கொல்ல வேணும் எண்டுறதும் இல்லை அவன்களுக்கு அடி போடுறதும் சரி எண்டுவீங்கள், ஆனால் அதை ஐயர் மார் செய்தால் மணி ஆட்டுற கையாலை அடி போடலாமோ ஆச்சாரம் என்ன ஆகும் எண்டு கவலைப்படுகிறீயளோ...??

உங்களிட்டையும் பிரிவினை சாதி வடிவிலை எட்டி பாக்குது போலகிடக்கு...

தயாண்ணா எனது கருத்தில் எங்கே ஐயர்மாருக்கு அடியுங்கள் என்று சொல்லியிருக்கிறேன் என்று கோடிட்டு காட்டும்படி தயவுடன் கேட்டு கொள்கிறேன்.

ஏன் ஐயர்களுக்கு கோபம் வரக்கூடாதா? இதில் எவர் பக்கம் நியாயம் என்டு எனக்கு தெரியாது. முரண்படுதல் அடிபடுதல் சாதாரண மனித இயல்பு.

நியாயமான கேள்வி...!!

ஐயர்மாரும் சாதாரண மனிதராக நடக்க விட வேண்டும் அப்பதான் வெளியாலை வந்து வேற வேலைகள் செய்ய முற்படுவார்கள் என்பது பகுத்தறிவாளர்களுக்கு புரியுதே இல்லிங்களே... :)

அதை விட்டு போட்டு மூலஸ்தானத்துக்கை மூலம் வெளியாலை வரும் வரைக்கும் மந்திரம் மட்டும்தான் ஓத வேண்டும் எண்டு கட்டளை போடுகினம்... :lol:

அவளைத்தொடுவானென் கலைப்படுவானேன் எண்டமாதிரி உந்த சகதிக்குள்ள இருந்துகொண்டு மணக்குது மணக்குதெண்டு கத்திறதில என்ன பயன்?

நீங்கள் சொல்ல வருவது சரிதான்.....

இருப்பினும் செய்தியை நீங்கள் சரியாக புரியவில்லை என நினைக்கிறேன். அர்சகர்கள் இவரின் வருகைக்காக காந்திருந்து பூஜை பொருட்களால் தாக்கிஇருக்கிறார்கள். பூசாரி அதை செய்லாமோ? கோவிலுக்கு ஒரு பொறுப்பான நிர்வாகமும் இயங்கு நிலையில் இருந்திருக்கின்றது என்பதும் செய்தியில் தெளிவாக இருக்கின்றது.

ஆகவே அர்ச்சகர் எனும் பெயரில் ஆள்அடிக்கும் கூட்டம் ஒன்று அங்கே இருந்திருக்கின்றது

எனும் முடிவுக்கு இயல்பாகவே வரலாம்.

அடி வாங்கியவர் குடிகாரனாக இருக்கலாம்? கொள்ளையனாக இருக்கலாம்? அர்ச்சகர்களை அடிக்கும் எண்ணம் உடையவனாக கூட இருந்திருக்கலாம். ஆனால் அதிகாலை காந்திருந்து இறைவழிபாட்டிற்கு பயன்படுத்தும் பொருட்களால் தாக்கியிருக்கிறார்கள். தற்பாதுகாப்பு தாக்குதலாக இது இருந்திருப்பின் செய்தி வேறுமாதிரி இருந்திருக்கும் மேலே இருக்கும் கருத்துக்களும் வேறாக இருந்திருக்கும்.

நண்பர் மருதங்கேணி இந்த செய்தியை வைத்து எந்த தெளிவான முடிவையும் எடுக்க முடியாது என்பதுதான் எனது கருத்து.

சரி உங்கள் வழியிலேயே நானும் ஒரு கற்பனை காரணத்தை சொல்கிறேன். பக்தர் குருக்களை தாகத வார்தைகளால் பேசியிருக்க கூடும். அதுபொறுக்காத மகன் மறுநாள் நண்பர்களுடன் சேர்ந்து பக்தருக்கு சாத்துப்படி வைத்திருக்க கூடும். இது சாதாரணமாக நடக்க கூடியதுதானே மருதங்கேணி.

ஐயர் மகன் என்று பார்காமல் அப்பன் மகன் என்டு பாருங்கோ கணக்கு சரியா வரும். :)

Edited by வாசகன்

நியாயமான கேள்வி...!!

ஐயர்மாரும் சாதாரண மனிதராக நடக்க விட வேண்டும் அப்பதான் வெளியாலை வந்து வேற வேலைகள் செய்ய முற்படுவார்கள் என்பது பகுத்தறிவாளர்களுக்கு புரியுதே இல்லிங்களே... :lol:

அதை விட்டு போட்டு மூலஸ்தானத்துக்கை மூலம் வெளியாலை வரும் வரைக்கும் மந்திரம் மட்டும்தான் ஓத வேண்டும் எண்டு கட்டளை போடுகினம்... :lol:

நல்ல கருத்து. ஐயரும் எம்மை போலவே மென்று தின்று மலம் கழிக்கும் சாதாரண மனிதர்தான். அவர்களும் எமக்குள் ஒருவர். :) . ஆறறிவு இல்லாத பகுத்தறிவுகள் சரியான தொல்லைதான் இங்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசமறுப்பு விடியப்பறம் ஐஞ்ரைக்கு பஞ்சாலாத்தியாலை சாத்து வாங்கியிருக்கிறான் பாவி !!!!!!! :lol:

மனுசன் மடப்பள்ளிப் பக்கம் என்ன சேட்டை விட்டானோ ஆருக்குத்தெரியும் :)

இதுக்குப்போய் சாதி கீதி எண்டு அதை இதுக்கை கொண்டு திணிச்சுக்கொண்டு :)

எல்லாம் சரி ஐயர் அம்மாவுக்கு ஒண்டும் நடக்கேல்லைத்தானே? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.