Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2008 இல் முதல் 10 கவனம் பெறாத நிகழ்வுகளில் தாயக அவலமும்

Featured Replies

time.com இன் கணிப்பீட்டின் படி (Top 10 Underreported News Stories) சர்வதேச அளவில் ஊடக கவனத்தைப் பெறாத 10 நிகழ்வுகளில் 3 ஆவது இடத்தை சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் பிடித்திருக்கிறது.

1. The Pentagon's latest nuclear snafu

2. Civil war displaces a million Congolese

Top 10 Underreported News StoriesNEXTBACK

3. Sri Lankan conflict deadlier this year than Afghanistan

In January the Sri Lankan government pulled out of its shaky 2002 cease-fire agreement with the rebel Liberation Tigers of Tamil Eelam, in an official nod to the fact that the country is once again engaged in civil war. Deadlier this year than the fighting in Afghanistan, the combat has raged largely under the radar because the government has banned from the war zone foreign journalists as well as most aid groups, which is bad news for the 300,000 Sri Lankans who have been forced out of their homes.

http://www.time.com/time/specials/2008/top...1861760,00.html

இதற்கு முதல் 2 காரணங்களும்

-1- உலகெங்கும் பலமொழித் திறமைகளோடு பரவி இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள்

-2- நடைமுறை அரசோடு அங்கீகாரத்திற்காக போராடுவதாக சொல்லும் விடுதலைப் புலிகள் அவர்களது தேசிய ஊடக கட்டமைப்புகள், அரசியல் பிரிவு, சமாதான செயலகம் மற்றும் பேச்சாளர்கள்.

குறுக்கு!

இது நிகழ்காலமா? அல்லது இறந்த காலமா? அண்ணளாவாக இன்றய தேதிக்கு எவ்வளவு கிட்டத்தில?......

ஏனெண்டா உப்பிடி கனக்க வந்து போயிற்று அதுதான்

இப்ப கிட்டத்தில பிரித்தானிய அமைச்சர் எவ்வளவு சாமர்த்தியமா சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கினவரெண்டு பாத்தனிங்கள் தானே?.......

அவர் பிளேட்ட இரண்டு மாதிரியும் போடுறமாதிபோட்டு மளுப்பீட்டார்.

  • தொடங்கியவர்

அண்ணளவாக

கடந்த காலத்தில நம்புங்கள் நாளை டண்டனக்கா டண்டனக்கா எண்டு சொல்லுறவை.

நிகழ்காலத்தில பாாாாாாாாரிய வெற்றிச் செய்தியை விரைவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அனுப்புவம் எண்டு சொல்லுகினம்.

அவர்கள் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எண்ட படியாலை எதிர்காலத்தில எப்பிடியோ தெரியாது.

time.com இன் கணிப்பீட்டின் படி (Top 10 Underreported News Stories) சர்வதேச அளவில் ஊடக கவனத்தைப் பெறாத 10 நிகழ்வுகளில் 3 ஆவது இடத்தை சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் பிடித்திருக்கிறது.

1. The Pentagon's latest nuclear snafu

2. Civil war displaces a million Congolese

Top 10 Underreported News StoriesNEXTBACK

3. Sri Lankan conflict deadlier this year than Afghanistan

In January the Sri Lankan government pulled out of its shaky 2002 cease-fire agreement with the rebel Liberation Tigers of Tamil Eelam, in an official nod to the fact that the country is once again engaged in civil war. Deadlier this year than the fighting in Afghanistan, the combat has raged largely under the radar because the government has banned from the war zone foreign journalists as well as most aid groups, which is bad news for the 300,000 Sri Lankans who have been forced out of their homes.

http://www.time.com/time/specials/2008/top...1861760,00.html

இதற்கு முதல் காரணம்

-1- உலகெங்கும் பலமொழித் திறமைகளோடு பரவி இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள்

:wub::):)

Edited by vettri-vel

அண்ணளவாக

கடந்த காலத்தில நம்புங்கள் நாளை டண்டனக்கா டண்டனக்கா எண்டு சொல்லுறவை.

நிகழ்காலத்தில பாாாாாாாாரிய வெற்றிச் செய்தியை விரைவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அனுப்புவம் எண்டு சொல்லுகினம்.

அவர்கள் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எண்ட படியாலை எதிர்காலத்தில எப்பிடியோ தெரியாது.

வழக்கம்போல் உங்கள் பதில்கள் என்னால் விளங்கி கொள்ளுமளவுக்கு இலகுவாகவும், தெளிவாகவும், விளக்கமாவும், சுருக்கமாகவும், நேரடியாகவும் இருந்தததையிட்டு நான் மிகவும் புழகாங்கிதம் அடைகிறேன்... நன்றிகள்.

Edited by Sooravali

இங்கு அடிப்படையில் சில மாற்றங்கள் அவசியம்.

புலத்தில் இயங்கிய அமைப்புக்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் புலிகளுடன் தொடர்பை வைத்திருந்தார்கள். புலிகள் மீது தடை விழ இவர்கள் அடங்கிப்போனார்கள். இதனால் தாயக அவலம் உலக கவனத்தை ஈர்க்கவேண்டிய பாதைகள் மூடப்பட்டன.

100% சுதந்திரமான தமிழர் அமைப்புகளின் பேச்சை மேற்குலகம் நடுநிலமையான‌து என்று கேட்கும். சிங்களம் செய்யும் மனித உரிமை மீறல்களை மாத்திரம் வெளிக்கொண்டுவரும் இத்தகைய அமைப்புக்களால் புலிகள் ஓரங்கட்டப்படுவர் என்று நினைப்பது முட்டாள்தனம்.

இத்தகைய அமைப்புக்களின் உருவாக்கத்திற்கும் செயற்பாட்டிற்கும் புலம்பெயர்ந்தவர்களும் , புலிகளும் தயாரா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு முதல் 2 காரணங்களும்

-1- உலகெங்கும் பலமொழித் திறமைகளோடு பரவி இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள்

-2- நடைமுறை அரசோடு அங்கீகாரத்திற்காக போராடுவதாக சொல்லும் விடுதலைப் புலிகள் அவர்களது தேசிய ஊடக கட்டமைப்புகள், அரசியல் பிரிவு, சமாதான செயலகம் மற்றும் பேச்சாளர்கள்.

மற்றவனை மந்தை எண்டு மாரி தவக்கை மாதிரி கத்துற உங்களுக்கும் உண்மையான விளக்கம் இல்லை.

உண்மையான காரணங்கள் என்ன?

1) எமது பிரச்சனையில் தலையிடுவதால் அவர்களுக்கு எந்த வித இலாபங்களும் இல்லை.

2) சர்வதேச அரசியலில், மற்றும் ஊடகங்களில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய எம்முடைய பொருளாதாரப் பலம் = 0

3) புலம்பெயர் தேசத்தில் சட்டம், ஊடகவியல், அரசியல் போன்றவற்றில் துறைசார் வல்லுனர்களை கொண்ட கட்டமைப்புகள் இன்மை.

4) எம்மவர்களிடையேயான ஒற்றுமையின்மை, சுயநலம் (95% மான எம்மவரின் வாழ்க்கை குடும்பம், பொருளியல் நலனுக்குள் முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளது)

வெறும் அனுதாபம் மட்டும் உலகை ஈர்த்துவிடுமானால் ருவாண்டாவில் எவ்வளவோ மனித படுகொலைகளை தவிர்த்திருக்கலாம்.

இதை விட்டுவிட்டு யுத்த ஸ்கோர் சொல்வதுதான் எல்லாவற்றிற்கும் பிரச்சனை எண்டு சொல்வது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமான சம்பந்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தேசங்களில் இப்போது உடனடியாக நாம் செய்யவேண்டியது Lobying, ஊடகங்களிற்கு பணத்தை வாரி இறைப்பது, அரசியல்வாதிகளுக்கு வாரி இறைப்பது.

துட்டு தான் எல்லாத்துக்கும் மருந்து.

Bruce Fein ஒரு பேட்டியில சொல்லுவார். எல்லாம் செய்யலாம். காசு தான் வேணும் எண்டு.

காட்டாறு...நீங்கள் சொல்வது சரி...ஆனால் முன்னுக்கு நிண்டு செய்யிறவையும் தூக்கி உள்ளுக்கைபோடுது வெளிநாட்டுச்சட்டம் இப்ப.. குடும்பகாரருக்கு என்ன சொல்றியள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டாறு...நீங்கள் சொல்வது சரி...ஆனால் முன்னுக்கு நிண்டு செய்யிறவையும் தூக்கி உள்ளுக்கைபோடுது வெளிநாட்டுச்சட்டம் இப்ப.. குடும்பகாரருக்கு என்ன சொல்றியள் ?

நீங்கள் சொல்வது சரி. உள்ளுக்கை போறவனுக்கு தான் அதன் வலி தெரியும்.

ஆனால் போராட்டம் எண்டு பார்த்தால் உள்ளுக்க போவதற்கு கூட பயப்படக் கூடாது. போராளிகள் உயிரையே துச்சமாக மதிக்கிறார்கள். கரும்புலிகள் சாவுக்கே தேதி குறிக்கிறார்கள். இவர்களின் தியாகத்தை நினைத்தால் எவரும் எதற்கும் துணியலாம்.

அதைவிட துணிந்து சிறை செல்லும் சீமான், வை.கோ, நெடுமாறன் போன்றோர் என்ன வேலை வெட்டி இல்லாதவர்களா?

ஆனால் lobbying போன்ற உள்ளூர் அரசியல் செயற்பாடுகளுக்கு பணம் திரட்டுவது எந்தவகையிலும் குற்றமாகாது.

எம் போராட்டம் சர்வதேசம் எங்கும் பயங்கரவாதமாக சித்திகரிக்கப்பட்டு புலிகளை அவை தடை செய்த பின் எமது செயற்பாடுகளை நாம் மீள் செதுக்கியிருக்க வேண்டும். தடை செய்தது தவறு என்பதுக்கும் அப்பால் நாம் அந் நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைவாக காத்திரமான வழிகளில் போராடவேண்டும். புலிகளினதும் கொடியையும், அதன் தலைவரின் படத்தையும் காவி கொண்டு கூட்டங்களை நடத்துவதை நிப்பாட்டி புலிகள் இயக்கம் சாராத புலம் பெயர் தமிழ் மக்களின் போராட்டம் என்று காட்டினால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை விட்டு விட்டு. "நீங்கள் தடை செய்தாலும் நாங்கள் அதனையும் மீறி புலிகளின் கொடியையும் பிரபாகரனின் கொடியையும் கொண்டுதான் எம் மக்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளை உலகிற்கு அம்பலப்படுதுவோம்" என்று வீம்பு காட்டினால அதன் பயன் மிக குறைவாகவே இருக்கும்.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தவை பற்றிக் கதைப்பதையோ, யாரையும் குறை கூறுவதையும் தவிர்த்து, எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பது பற்றி விவாதித்தால் பிரியோசனமாக இருக்கும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் போராட்டம் சர்வதேசம் எங்கும் பயங்கரவாதமாக சித்திகரிக்கப்பட்டு புலிகளை அவை தடை செய்த பின் எமது செயற்பாடுகளை நாம் மீள் செதுக்கியிருக்க வேண்டும். தடை செய்தது தவறு என்பதுக்கும் அப்பால் நாம் அந் நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைவாக காத்திரமான வழிகளில் போராடவேண்டும். புலிகளினதும் கொடியையும், அதன் தலைவரின் படத்தையும் காவி கொண்டு கூட்டங்களை நடத்துவதை நிப்பாட்டி புலிகள் இயக்கம் சாராத புலம் பெயர் தமிழ் மக்களின் போராட்டம் என்று காட்டினால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை விட்டு விட்டு. "நீங்கள் தடை செய்தாலும் நாங்கள் அதனையும் மீறி புலிகளின் கொடியையும் பிரபாகரனின் கொடியையும் கொண்டுதான் எம் மக்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளை உலகிற்கு அம்பலப்படுதுவோம்" என்று வீம்பு காட்டினால அதன் பயன் மிக குறைவாகவே இருக்கும்.

இங்க தான் நீங்க பிழை விடுறீங்க.

நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் நினைக்கிறீர்களா கனடா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் மட்டுந்தான் இப்படியான சட்டங்களை கொண்டுவந்திருக்கிறது என்று? அவர்களுக்கு வேண்டியதெல்லாம் எம்மினம் இங்கு ஒரு பிறிதான இன உணர்வு கொண்ட இனக்கட்டமைப்புக்குள் வந்ததுவிடக்கூடாது என்பதுதான். தமிழர், தமிழ் தேசிய உரிமை போராட்டம் என்ற உணர்வுகளோடு இருந்தால் நீங்கள் கனடிய நீரோட்டத்தில் இணையமாட்டீர்கள்.

சரி நீங்கள் கனடிய நீரோட்டத்தில் இணைவதால் அவர்களுக்கு என்ன இலாபம்?

ஒன்றே ஒன்று: நீங்கள் செலவழிக்கும் பணம் இந்த நாட்டுக்குளே இருந்துவிடும். இந்த நாட்டின் பொருளாதாரம் வளரும். ஊர், போராட்டம் எண்டு காசுகளை வெளியில் அனுப்பமாட்டீர்கள்.

புலிக்கொடி, தலைவர் படம் போன்றவற்றை தூக்கவிடாமல் செய்வது முதல் படி. இப்படியே சென்றால் இனவுணர்வை தூண்டும் காரணிகள் எல்லாம் செத்துவிடும். நாளடைவில் எல்லாவற்றையும் நீர்த்துவிடச் செய்யலாம் என்னும் நல்லெண்ணம் தான்.

காந்தி அகிம்சை வழியாக போராடும் போது ஆயுதத்தை தூக்கவில்லையே தவிர, சட்டங்களை எதிர்த்துத் தான் போராடினார்.

  • கருத்துக்கள உறவுகள்

Lobbying செய்யவேண்டியது அவசியம்தான். எனினும் அரசியல் செல்வாக்கு இல்லாதவர்களிடம் போய் எங்கள் பிரச்சினைகளைச் சொல்லி வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரமுடியாது. வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டுமென்றால் பிரதமர்/ நாட்டின் அதிகாரங்கள் நிறைந்த தலைவர் தமிழ்ச் சிறுபான்மை இனத்தின் அரசியல் பலத்தை உணரவேண்டும். தமிழ்ச் சிறுபான்மை இனத்தின் துணையினால்தான் 10 - 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நிலை வரவேண்டும். இவ்வாறான அரசியல் பலம் இல்லாமல் தமிழர்களால் எதுவும் செய்யமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றை மட்டும் நாங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளும் இலங்கை இந்திய அரசியல்வாதிகள் போன்றவர்கள் தான். என்ன வித்தியாசம் அங்கு நேரடியாக ஊழல் செய்வார்கள். தாதா விளையாட்டு காட்டுவார்கள். இங்கு அது இல்லை. மற்றும்படி இங்கும் பணம் தான் ராஜா.

Edited by காட்டாறு

புலிக்கொடி, தலைவர் படம் போன்றவற்றை தூக்கவிடாமல் செய்வது முதல் படி. இப்படியே சென்றால் இனவுணர்வை தூண்டும் காரணிகள் எல்லாம் செத்துவிடும். நாளடைவில் எல்லாவற்றையும் நீர்த்துவிடச் செய்யலாம் என்னும் நல்லெண்ணம் தான்.

இல்லை...புலிக்கொடியும் தலைவர் படமும் மட்டும் தான் இனவுணர்வை தரும் விடயங்கள் என்பதனை ஏற்க முடியாது. அப்படி நினைப்பது இந்த அரசுகளின் (தடை செய்த அரசுகளின்) சதிகளுக்குள் நாமாகவே மாட்டுப்படுவது போன்றது தான். எம் போராட்டம் பயங்கரவாதம் அல்ல என்பதனை ஏற்கனவே புரிந்தும் அதனை ஏற்க மறுக்கும் சர்வதேசம் மீது, அதனை ஏற்க வைக்கும் அளவுக்கு சட்டத்திற்குட்பட்ட ரீதியில் அழுத்தம் கொடுக்கும் போதுதான் அப் போராட்டத்தினை முன்னெடுக்கும் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை அகற்றப்படும். ஒரு இயக்கத்தினதோ அல்லது கட்சியினதோ கொடியினையும் தலைவரின் படத்தினையும் காவும் போது அது அவ் இயக்கம் / கட்சி சார்ப்பான போராட்டமாகவே பார்க்கப்படும். எமக்கிருக்கும் புலிகள் மீதான ஆதரவு வேறு அதனை வெளிக்காட்டும் இடங்களும் சந்தர்ப்பங்களும் வேறு வேறு. எல்லா இடத்திலும் அதனை காட்டியே ஆகவேண்டும் என்று இல்லை

ஈராக்கிலும் ஆப்கனிலும் அமெரிக்கா பயங்கரவாதத்தினை கட்டவிழ்த்துள்ளது என்பதனை நிரூபிக்கும் போராட்டங்களில் யாரும் பின்லாடனினதோ அல்லது சதாமினதோ படங்களை காவவில்லை.

Edited by நிழலி

Lobbying செய்யவேண்டியது அவசியம்தான். எனினும் அரசியல் செல்வாக்கு இல்லாதவர்களிடம் போய் எங்கள் பிரச்சினைகளைச் சொல்லி வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரமுடியாது. வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டுமென்றால் பிரதமர்/ நாட்டின் அதிகாரங்கள் நிறைந்த தலைவர் தமிழ்ச் சிறுபான்மை இனத்தின் அரசியல் பலத்தை உணரவேண்டும். தமிழ்ச் சிறுபான்மை இனத்தின் துணையினால்தான் 10 - 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நிலை வரவேண்டும். இவ்வாறான அரசியல் பலம் இல்லாமல் தமிழர்களால் எதுவும் செய்யமுடியாது.

அதுக்கு மாற்றீடாக தான் மாவீரர் உரையில் தேசிய தலைவர் ஒரு திறந்த பொருளாதார கொள்கையை அறிவிக்க போய் BBC வரை முக்கிய செய்தியாக வெளியிட்டு தங்களின் கொள்கை எதை சார்ந்ததாக இருக்கிறது என்ன்பதை பறை சாற்றினார்களே..

இந்த அறிவித்தல் செய்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கலாம். ஆனால் சர்வதேச நாடுகளில் பெரிதாக எடுபடவில்லை. எடுபட்டிருந்தால் சிலவேளை தாராளமாக புலிகளுக்கு இராணுவ உதவிகளை வெளிப்படையாகவோ / மறைமுகமாகவோ செய்திருப்பார்கள். :wub:

புலிகளுக்கு உதவி செய்வதுக்கு சாத்தியம் குறைவே.. இலங்கை அரசை நம்பி முதலீடு செய்தவர்கள், தேசிய தலைவரின் அறிவிப்பை உடனடியாக செயலுக்குள் எடுப்பார்கள் என்பதுக்கு இல்லை... நீண்டகால அளவில் சிலவேளைகளின் பலன் இருக்கலாம்... எல்லாம் இலங்கை அரசின் வருங்கால இராசதந்திர நடவடிக்கைகளில் தங்கி இருக்கிறது..

ஆனால் இலங்கை அரசை மேலும் தங்களின் கைகளுக்குள் கொண்டுவர மேற்குலகுக்கு இது போதுமானதாக இருக்கும்... எங்களுக்கு கண்கள் பற்றி போய் கொண்டுதான் இருக்கிறது... சிங்களவனுக்கு சகுனமாவது பிழைக்கட்டுமேன்...

Edited by தயா

1) எமது பிரச்சனையில் தலையிடுவதால் அவர்களுக்கு எந்த வித இலாபங்களும் இல்லை.

2) சர்வதேச அரசியலில், மற்றும் ஊடகங்களில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய எம்முடைய பொருளாதாரப் பலம் = 0

3) புலம்பெயர் தேசத்தில் சட்டம், ஊடகவியல், அரசியல் போன்றவற்றில் துறைசார் வல்லுனர்களை கொண்ட கட்டமைப்புகள் இன்மை.

4) எம்மவர்களிடையேயான ஒற்றுமையின்மை, சுயநலம் (95% மான எம்மவரின் வாழ்க்கை குடும்பம், பொருளியல் நலனுக்குள் முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளது)

வெறும் அனுதாபம் மட்டும் உலகை ஈர்த்துவிடுமானால் ருவாண்டாவில் எவ்வளவோ மனித படுகொலைகளை தவிர்த்திருக்கலாம்.

எம் போராட்டம் சர்வதேசம் எங்கும் பயங்கரவாதமாக சித்திகரிக்கப்பட்டு புலிகளை அவை தடை செய்த பின் எமது செயற்பாடுகளை நாம் மீள் செதுக்கியிருக்க வேண்டும். தடை செய்தது தவறு என்பதுக்கும் அப்பால் நாம் அந் நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைவாக காத்திரமான வழிகளில் போராடவேண்டும். புலிகளினதும் கொடியையும், அதன் தலைவரின் படத்தையும் காவி கொண்டு கூட்டங்களை நடத்துவதை நிப்பாட்டி புலிகள் இயக்கம் சாராத புலம் பெயர் தமிழ் மக்களின் போராட்டம் என்று காட்டினால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை விட்டு விட்டு. "நீங்கள் தடை செய்தாலும் நாங்கள் அதனையும் மீறி புலிகளின் கொடியையும் பிரபாகரனின் கொடியையும் கொண்டுதான் எம் மக்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளை உலகிற்கு அம்பலப்படுதுவோம்" என்று வீம்பு காட்டினால அதன் பயன் மிக குறைவாகவே இருக்கும்.

இந்த குறிப்புகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது. எமது பிச்சரங்களை முன்னெடுப்பதில் எம்மிடம் அதிக திறமை இருந்ததாக தெரியவில்லை. அமரிக்கவில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு பின்னர் பயங்கர வாதம் குறித்து உலகின் பார்வை மாறியது. தற்கொலைத் தாக்குதல்களுக்கு புலிகள் முன்னோடிகள் வழிகாட்டிகள் என்ற இலங்கை அரசின் பிரச்சாரம் உலகின் கவனத்தில் மிகவும் வெற்றி பெற சந்தர்ப்பமாக அமைந்தது. இந்த நிலையில் எமது பிரச்சாரங்கள் மாற்றமடையவில்லை. தாயகத்தில் கரும்புலித் தாக்குதல்களும் அவர்களுடைய தியாகத்தை வீரத்தை வெளிப்படுத்துவதும் மிகவும் இன்றியமமையாதது. அதே நேரம் புலத்தில் இவற்றுக்கான நிர்பந்தத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அந்த நிர்பந்தத்திற்கு சர்வதேச நாடுகளின் ஆயுத உதவியையும் , மூர்க்கத்தனமான ஆயுத பாவனையையும் காரணமாக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த இரு தன்மைகளினதும் முக்கியத்துவம் குறித்த புரிந்துணர்வு எம்மிடம் இருக்கவில்லை. எமது பிரச்சாரங்களி அது வெளிப்படவும் இல்லை.

எமக்குரிய அரசியல் வடிவங்கள் குறித்த தனித்துவமான முன்னெடுப்புக்கும் இராணுவ முன்னெடுப்புக்கும் உரிய வித்தியாசங்கள் புரிந்துகொள்ளும்படி இல்லை. இராணுவ முன்னெடுப்புகளையே அரசியலாக காட்சிப்படுத்த முனைந்தது ஒரு பின்னடைவே. புலத்தில் இவ்வளவு முன்னெடுப்புகள் இருந்தும் எத்தனை அந்நிய தேசத்தினருக்கு திலீபன் மற்றும் பூபதித்தாயின் அறவழிப்போராட்டங்கள் தெரியும்? எத்தனை பேருக்கு புலிகள் முன்பு அரசுகளை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்தது தெரியும்? இன்றைக்கு இலங்கை பேரினவாதத்தால் இடம்பெயர்ந்த மக்களின் விபரங்கள் தெரியும்? இன்ன நாடுகளில் இத்தனை ஆயிரம் மக்கள் புலம் பெயர்ந்து உள்ளனர் என்றோ அகதிகளாக இவ்வளவு மக்கள் உள்ளாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ளனர் என்றோ, ஒரே பார்வையில் எளிய முறையில் பார்க்க கூடிய புள்ளிவிபரம் மற்றும் மற்றும் கணக்குகள் தெரியாது. இன்றைக்கு பதினைந்து வருடமாக ஐம்பதாயிரம் அறுபதாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என்ற ஒரே கணக்கையே பல செய்தி நிறுவனங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.