Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரந்தனை அண்மித்து இராணுவம்.?

Featured Replies

புலிகளின் குரல் செய்திகளிலும், தமிழ் நெற்றின் செய்தி குறிப்பிலும் பரந்தன் சந்திக்கு அண்மையில் சண்டை நடப்பதாக குறிக்கப்பட்டு உள்ளது.

Ki'linochchi hospital attacked again

[TamilNet, Tuesday, 30 December 2008, 15:30 GMT]

Sri Lanka Army (SLA) fired artillery shells have again hit Ki'linochchi hospital Tuesday evening between 3:50 and 4:00 p.m., initial reports from the town said. Hospital building was damaged in the shelling. Meanwhile, close-exchange of gunfire was reported in Paranthan area.

A telecommunication centre located 300 meters south of Ki'linochchi hospital was badly damaged in the shelling by the SLA Tuesday morning

http://tamilnet.com/art.html?catid=13&artid=27870

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில நாட்கலில் தறுதலை படைகளில் பலர் உயிர் போகும் . ஏனெனில் எமது வீரர்கள் நாட்டுக்காக போராடு வீரர்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குதல் என்பதே எமது பங்களிப்பு.மற்றும் அரசின் பொய்பிரச்சாரங்களை நாமெல்லோரும் சேருமிடத்து மிக இலகுவாக முறியடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில நாட்கலில் தறுதலை படைகளில் பலர் உயிர் போகும் . ஏனெனில் எமது வீரர்கள் நாட்டுக்காக போராடு வீரர்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குதல் என்பதே எமது பங்களிப்பு.மற்றும் அரசின் பொய்பிரச்சாரங்களை நாமெல்லோரும் சேருமிடத்து மிக இலகுவாக முறியடிக்கலாம்.

உண்மை தான்.. அண்ணோய்

2ம் இணைப்பு)பரந்தன் சந்தியில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் கடும் மோதல்

[புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:13 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் சந்திப் பகுதியை கைப்பற்றும் நோக்குடன் இன்று புதன்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் பரந்தனின் மேற்குப் புறத்திலிருந்து முன்நகர்ந்த படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கிடைத்த தகவல்களின் படி பரந்தன் சந்தியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, கிளிநொச்சி நகரை சுற்றியுள்ள தமது ஏனைய நிலைகளிலிருந்தும் அந்நகரை நோக்கி சிறிலங்கா படையினர் நகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நகர்வு முயற்சிகளுக்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி புதினம்

From Daily Mirror

Army enters Paranthan

The Army, yesterday evening, entered one of the most central intersections of the A-9 and the strategically important township of Paranthan after weeks of heavy fighting and stiff resistance from the LTTE, Army Headquarters said.

“Paranthan, about 4.5 km north of Kilinochchi, was blocked by the Army from north of A-9 on Wednesday (31) evening. Entry of the troops into Paranthan blocks the access route to Elephant Pass,” the Army said.

Troops of Task Force-I, commanded by Brigadier Shavindra Silva, entered Paranthan town, which was once an important economic centre, with a large factory which produced chemicals for local industries. Before the LTTE dominated the area, a large number of residents in Paranthan earned their living by working in the factory.

“Troops killed over twenty-five Tiger cadres during confrontations in Paranthan. Three dead bodies, four weapons were recovered,” the Army said.

Paranthan connects four important locations, Kilinochchi to the south, Pooneryn to the west, Mullaitivu to the east and Elephant Pass to the north.

Following heightened LTTE activities in the area in the early 1990s, the Army liberated the town from the LTTE in the “Sathjaya” operation in 1996. However, troops had to withdraw in September 1998.

The Army said that the entry to Paranthan enabled the troops to block Kilinochchi on three sides, north, west and south, mounting pressure on the Tigers.

Task Force-I troops had commenced further operations in order to capture the rest of Paranthan town.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம் தாம் தட்டுவன்கொட்டி மற்றும் கோமாரிக்குடாக்குளம் என்ற கிராமங்களைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறியுள்ளது. பரந்தனை அண்மித்து விட்டதாகக் கூறிக்கொள்ளும் ராணுவம் இன்னும் நகர்ப்பகுதி கைப்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளது. நகர்ப்பகுதி நோக்கி வான்படையின் தாக்குதல் உலங்குவானூர்திகளின் துணையுடன் தாம் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.சோரன்பற

  • கருத்துக்கள உறவுகள்

2008 வருட முடிவுக்குள் கிளிநொச்சியைப் பிடிக்க முனைந்து தோற்று அதனைவிட இராணுவ ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பரந்தனை சிங்கள இராணுவம் மீண்டும் ஆக்கிரமித்துள்ளது. இனி ஆனையிறவை நோக்கிய நகர்வையோ அல்லது கிளிநொச்சி நோக்கிய நகர்வையோ இராணுவம் மேற்கொள்ளலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஆனையிறவை நோக்கிய நகர்வையோ அல்லது கிளிநொச்சி நோக்கிய நகர்வையோ இராணுவம் மேற்கொள்ளலாம்..

அப்படியாகும் பட்சத்தில் ஆனையிறவுக்கு வடக்காக முகமாலை முதல் நிலை கொண்டுள்ள புலிகளின் அணிகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கோ அல்லது தொடர்ந்து அப்பகுதியில் நிலைகொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கான வழங்கல்களை தொடர்ந்தும் பேணுவதற்கோ இன்னொரு மாற்றுவழியொன்று உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தனை இராணுவம் கைப்பற்றுமிடத்து,இராணுவத்து

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாகும் பட்சத்தில் ஆனையிறவுக்கு வடக்காக முகமாலை முதல் நிலை கொண்டுள்ள புலிகளின் அணிகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கோ அல்லது தொடர்ந்து அப்பகுதியில் நிலைகொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கான வழங்கல்களை தொடர்ந்தும் பேணுவதற்கோ இன்னொரு மாற்றுவழியொன்று உள்ளதா?

எல்லாம் சில நாட்களில் தெரிய வரும்..

  • கருத்துக்கள உறவுகள்
north.jpg
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி???

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி பரந்தன் மற்றும் அக்கராயன் குளம் ஆகிய பகுதிகளில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இரு தரப்பினருக்குமிடையே நேற்று நடைபெற்ற பலமணிநேர மோதலில் 12க்கும் அதிகமான விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதில் படைத்தரப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த மோதல்களையடுத்து படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது புலிகளின் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் பரந்தனிலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தட்டுவன்கொட்டி மற்றும் கமலக்காடு குளம் ஆகிய பகுதிகள் படையினரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

படையினர் பரந்தன் சந்தியைக் கைப்பற்றும் நோக்குடன் தொடங்கிய இம்மோதல்கள் நேற்று மாலை 7 மணிவரை நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி நகரை சுற்றியுள்ள தமது ஏனைய நிலைகளிலிருந்தும் அந்நகரை நோக்கி சிறிலங்கா படையினர் நகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இந்நகர்வு முயற்சிகளுக்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

www.tamilwin.com

கிளிநொச்சி பரந்தன் மற்றும் அக்கராயன் குளம் ஆகிய பகுதிகளில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இரு தரப்பினருக்குமிடையே நேற்று நடைபெற்ற பலமணிநேர மோதலில் 12க்கும் அதிகமான விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதில் படைத்தரப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த மோதல்களையடுத்து படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது புலிகளின் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் பரந்தனிலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தட்டுவன்கொட்டி மற்றும் கமலக்காடு குளம் ஆகிய பகுதிகள் படையினரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

படையினர் பரந்தன் சந்தியைக் கைப்பற்றும் நோக்குடன் தொடங்கிய இம்மோதல்கள் நேற்று மாலை 7 மணிவரை நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி நகரை சுற்றியுள்ள தமது ஏனைய நிலைகளிலிருந்தும் அந்நகரை நோக்கி சிறிலங்கா படையினர் நகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இந்நகர்வு முயற்சிகளுக்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

www.tamilwin.com

புதுவருடம் புலிகளுக்கு நல்ல ஆண்டாக அமையும், அகல கால் வைத்தவன் காலும் இல்லாமல் ஓடப்போகிறான்

  • கருத்துக்கள உறவுகள்

புதுவருடம் புலிகளுக்கு நல்ல ஆண்டாக அமையும், அகல கால் வைத்தவன் காலும் இல்லாமல் ஓடப்போகிறான்

காலில்லாமல் ஓடுவது எப்படி ? எங்கோ உதைக்கிறதே??!!

புதுவருடம் புலிகளுக்கு நல்ல ஆண்டாக அமையும், அகல கால் வைத்தவன் காலும் இல்லாமல் ஓடப்போகிறான்

காலில்லாமல் ஓடுவது எப்படி ? எங்கோ உதைக்கிறதே??!!

இழுகித்தான் :rolleyes:

வீரகேசரி இணையம் 1/1/2009 9:43:30 AM -

பரந்தனை இராணுவம் முற்று முழுதாக கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=9872

  • கருத்துக்கள உறவுகள்

பராந்தன் நகரை பிடித்து விட்டோம்: ராணுவம்

வியாழக்கிழமை, ஜனவரி 1, 2009, 13:19 [iST]

கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் நகரைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது. ஆனால் அதை விடுதலைப் புலிகள் உறுதி செய்யவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் நகரைக் கைப்பற்றும் நோக்குடன் நேற்று அதிகாலை பரந்தனின் மேற்குப் புறத்திலிருந்து ராணுவம் தாக்குதல் தொடுத்தபடி முன்னேறத் தொடங்கியது.

இதைத் தடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர்.

பரந்தன் சந்தி மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

பரந்தனைப் பிடிக்கும் முயற்சியில் உதவ கிளிநொச்சியைச் சுற்றிலும் உள்ள படைப் பிரிவுகளை ராணுவம், பரந்தனை நோக்கி திருப்பி விட்டது.

நேற்று காலை முதல் நடந்து வந்த சண்டையில் 50 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், பரந்தன் நகரம் பிடிபட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை பரந்தன் நகரம் தங்களது வசம் வந்ததாக பாதுகாப்புத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

கிளிநொச்சியிலிருந்து நான்கரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பரந்தன், யாழ்ப்பாணம் கண்டி தேசிய நெடுஞ்சாலை எண் 9ல் புலிகளின் மற்றொரு முக்கிய தளமாக உள்ள யானைக்கவுனிக்கு தெற்கே உள்ளது.

இந்த நகரம் கைப்பற்றப்பட்டிருப்பது 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதியில் பாதுகாப்பு படைகளின் கை ஓங்கியிருப்பதை காட்டுகிறது.

ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்த, இலங்கை விமானப் படை விமானங்கள் வானிலிருந்து குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் இலங்கை ராணுவப் படைகள் ஏ9 நெடுஞ்சாலையை வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் சீல் வைத்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அப்பாவிகளை தாக்கி அழிக்கும் ராணுவம்:

இதற்கிடையே கிளிநொச்சியைப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ராணுவம், தனது கோபத்தை அப்பாவித் தமிழர்கள் மீது காட்டி வருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் முருகமோட்டை என்ற தமிழர்கள் கிராமம் உள்ளது. இங்கு இலங்கை படையின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியது.

இதேபோல அருகில் உள்ள சேத்துக்கண்டி என்ற இடத்திலும் குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. பள்ளிக்கூடத்திலும் குண்டுகள் விழுந்தன.

இந்த தாக்குதலில் சிவானந்தன் (30), மரியம்மா (55), சகாயம் மக்கிரட்ஸ் (24) மற்றும் சந்திரபோஸ் (36) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். 15 பேர் காயமடைந்தன்.

இறந்தவர்களில் மரியம்மா, சகாயம் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். குண்டு வீச்சில் அவர்கள் உடல்கள் கோரமாக சிதறி இருந்தது.

குண்டு வீச்சில் அருகில் இருந்த செஞ்சிலுவை சங்க அலுவலகமும் சேதம் அடைந்தது. அங்கு நின்றிருந்த மாடு ஒன்றும் பலியானது.

இதற்கிடையே கிளிநொச்சி அருகே பல இடங்களில் சிங்கள படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

கண்ணி வெடிக்கு 3 ராணுவத்தினர் பலி:

மட்டக்களப்பு மாவட்டம் குடும்பிமலை என்ற இடத்தில் சிங்கள ராணுவ வண்டி மீது கண்ணிவெடி தாக்குதல் நடந்தது. இதில் 3 வீரர்கள் பலியானார்கள்.

http://thatstamil.oneindia.in/news/2009/01...-paranthan.html

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தன் நகரப்பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது. தாங்கிகள், ஆட்டிலெறிகள் மற்றும் விமானப்படை தாக்குதல் விமானங்கள், உலங்கு வானூர்திகளின் துணையுடன் தாம் இப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளதாக அது மேலும் தெரிவித்தது. சுமார் 50 போராளிகள் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் வரையில் காயமடைந்ததாகவும் கூறியிருக்கும் ராணுவம் தமது தரப்பு இழப்புகள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. தம்மால் கைப்பற்றப்பட்ட இடங்களை மீளக் கைப்பற்றும் நோக்கில் தளபதி வேலவன் மற்றும் தளபதி ஜெரோம் தலமையில் இம்ராண் பாண்டியன் அணி மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளை தாம் முறியடித்து விட்டதாகவும் கூறியுள்ளது.

மேலும், இயக்கச்சி, புதுக்குடியிருப்புப் பகுதிகள் நோக்கித் தமது கவனம் திரும்பியிருப்பதாகவும் கூறும் ராணுவம், ஆனையிறவு மற்றும் முகமாலையில் நிலை கொண்டுள்ள புலிகளுக்கு இது அச்சுருத்தலாக அமையும் என்றும் கூறியிருக்கிறது.

இரணைமடு சந்தியையும் சிங்களவர்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்கள்

பரந்தன் வீழ்ச்சியால் பாதிப்புக்கள் ஏற்படவே செய்யும். ஆனாலும் அடுத்த நகர்வுகள் எப்படி நிகழப்போகிறது என்பதை ஊகங்களால் கூறமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தன் கைப்பற்றப்பட்டதை அடுத்து வடபகுதியில் நிலைகொண்டுள்ள புலிகளுக்கான வழங்கல்ப் பாதையை தாம் முற்றாக தடுத்திருப்பதாக ராணுவம் பி.பி.சி இற்கு வழங்கிய செவ்வியில் கூறியிருக்கிறது. இதனால் முகமாலை மற்றும் ஆனையிறவு பகுதிகளிலிருந்தும் புலிகள் தந்திரோபாயப் பின்வாங்கல் ஒன்றைச் செய்யும் நிலை ஏற்படலாம் என்று ராணுவம் எதிர்பார்க்கிறது.

http://img357.imageshack.us/my.php?image=k...valaidsdmi8.jpg

தட்டுவான்கொட்டி இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட செய்தி பிழையாக இருக்க வேண்டும். மேல் இணைக்கப்பட்ட படத்தில் பார்த்தால் விளங்கும்.

Edited by உமை

kandavalaidsdmi8.jpg

w1331.png

பரந்தன் சந்தியையும் இரணைமடு சந்தியையும் இன்று காலை கைப்பற்றி உள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. புலிகள் இது பற்றி எதனையும் தெரிவிக்கவில்லை

2009 மிக மோசமாக தமிழ் மக்களுக்கு விடிந்துள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.