Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கரடிப்போகுச் சந்தி கைப்பற்றப்பட்டது - ராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரடிப்போகுச் சந்தி கைப்பற்றப்பட்டது - ராணுவம்

பரந்தனைக் கைப்பற்றிய செயலணிப்படை 1, அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. கிளிநொச்சிக்கும் பரந்தனுக்கும் இடையில் உள்ள பகுதியான கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றியதன் மூலம், கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தாம் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே பகுதியில் அமைந்திருந்ததாகக் கருதப்படும் "பேஸ் 93" எனப்படும் பெண்புலிகளின் முகாமையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகக் கூறும் ராணுவம், கடந்த 31 ஆந் தேதி மோதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல்.ஈலப்பிரேயன் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

கரடிப்போக்கு சந்தியென்ன கிளிநெச்சியையே பிடிக்கட்டும். மீண்டும் ஒரு ஓயாத அலைகள், தவளைப்பாச்சல் வராமலா போகப்போகுது.

கரடிப்போக்கு சந்தியென்ன கிளிநெச்சியையே பிடிக்கட்டும். மீண்டும் ஒரு ஓயாத அலைகள், தவளைப்பாச்சல் வராமலா போகப்போகுது.

நாளை எல்லா சேதியும் கிளி. விழுந்தது, புலி முடிந்தது என்று கூவும்,

கலங்காது தாங்குவோம்,

"ஓடு மீன் ஓடி, உறு மீன் வரும்"

தமிழனுக்கு என்றொரு நாடே தவிர, கிளி. யும் பூ. கிரியும் இல்லை தமிழன் போராடுவது. இது வெளிச் சண்டை இல்லை, உயிரை வேள்வியாக்கிய உயிர் கொடை,

நம்பிக்கை ஒன்றே ஒளி!

நாளை எல்லா சேதியும் கிளி. விழுந்தது, புலி முடிந்தது என்று கூவும்,

கலங்காது தாங்குவோம்,

"ஓடு மீன் ஓடி, உறு மீன் வரும்"

தமிழனுக்கு என்றொரு நாடே தவிர, கிளி. யும் பூ. கிரியும் இல்லை தமிழன் போராடுவது. இது வெளிச் சண்டை இல்லை, உயிரை வேள்வியாக்கிய உயிர் கொடை,

நம்பிக்கை ஒன்றே ஒளி!

இவர்கள் வான்குண்டு போட்டு எம்மண்ணில் விழுந்த குழிகள்தாம்...

கனரகஆயுதங்களுடனும் அளப்பெரும் ஆளணியுடனும் உள்நுழைந்த சிங்களத்துக்கு புதைகுழிகள் என்பதனை மறவாதீர்கள் தோழர்களே...

அவன் உள்நுழைந்திருப்பது புலிக்குகைக்குள் புலி மௌனம் காப்பது புலியின் பலவீனமல்ல...புலி பதுங்குவது பாய என்பதனை வரலாறுகள் சொல்லவில்லையா...

இந்த நிலமல்ல கைப்பற்றபட்ட காலங்கள் நினைவில்லையா

கலங்காதீர்கள் தோழர்களே...

மனவுறுதியுடன் இருங்கள்..

இனமான தமிழ் உணர்வுடன் விலை போகாமல் இருங்கள்...

தலைவன் மேல் நம்பிக்கையுடன் இருங்கள்

அவர்தம் கரங்கள் வலுப்படும் காரணாமாயிருங்கள்..

ஒவ்வொரு தமிழன் தாகமும் தமிழீழ விடுதலையாக இருக்கட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி போய்விட்டது, கரடி போக்கு போய்விட்டது என்று உங்களில் யாருக்காவது யாராவது ஆறுதல் சொன்னால், அல்லது அவர்கள் சொல்லித்தான் நீங்கள் எமது தாயக விடுதலைப் போரின் பரிமாணத்தை அறிவீர்கள் என்றால் நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட தேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பரந்தன், இன்று கிளிநொச்சி, நாளை ஆனையிறாவு?

புத்தாண்டு மிகவும் வேகமாக நகர்கின்றது..

வெற்றியின் மமதையிலுள்ளவர்களுக்கு தேவையான தக்க பதில் காத்திருக்கும்.

நேற்று பரந்தன், இன்று கிளிநொச்சி, நாளை ஆனையிறாவு?

புத்தாண்டு மிகவும் வேகமாக நகர்கின்றது..

நேற்று புலிகளுடன் இன்று இலங்கை இராணுவத்துடன் நாளை ...........?

வால்பிடிப்பும் வேகமாக நகர்கின்றது. <_<

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று புலிகளுடன் இன்று இலங்கை இராணுவத்துடன் நாளை ...........?

வால்பிடிப்பும் வேகமாக நகர்கின்றது. <_<

நாளை இந்தியா, அமெரிக்கா என்று ஒஹோவாக இருக்கலாம்..

கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டோம்: கோத்தபய ராஜபக்ச

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியை சிறிலங்க இராணுவம் கைப்பற்றிவிட்டதாக கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.

கொழும்புவில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்துள்ள சிறிலங்க அரசின் பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்ச, கிளிநொச்சியை விட்டு விடுதலைப் புலிகள் காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செய்தியாளர்கள் கூட்டத்தில் இது குறித்து தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறிய கோத்தபய ராஜபக்ச, விரைவில் பிரபாகரனை பிடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த ஒரு பேட்டியில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சிறிலங்க இராணுவம் கைப்பற்றி வருவது குறித்து கேட்டதற்கு பதிலளித்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் ப. நடேசன், கிளிநொச்சியை நாங்கள் இழந்தால் கூட அது போரின் முடிவாக இருக்காது என்றும், தமிழர் பகுதிக்குள் நுழைந்த சிறிலங்க இராணுவத்தை மீண்டும் திரும்ப விடமாட்டோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையே வாழ்க்கை!இந்திய இராணுவம் வந்ததும் எல்லாம் போச்சுது என்றார்கள். யாழ்ப்பாணத்தை இழந்ததும் எல்லாம் போச்சுது என்றார்கள் எல்லாவற்றையும் புரட்டிப் போட்ட வரலாறு தமிழர் படைக்கு உண்டு. ஆகவே மனம் தளராதீர்கள் உறவுகளே!எல்லாம் மாறும்.

இப் புத்தாண்டில் போர்களத்தில் எதிரியுடன் சமர் புரியும் எமது வேங்க்கைகளுக்காக இறைவன பிராத்திப்போமாக. எதை இளந்தாலும் மீண்டும் மீட்போம் தமிழர் படை வெல்லும். நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி பிடிபட்டதை மகிந்த இன்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளார். புலிகளை ஆயுதங்களைக் களைந்து விட்டு சரணடையுமாறு கேட்டுள்ளதோடு, இந்த வெற்றி வேறு எதனோடும் ஒப்பிடப்பட முடியாத வெற்றி என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல எந்த வித எதிர்ப்பின்றியே ராணுவம் கிளிநொச்சி நகருக்குள் பிரவேசித்து இருக்கிறது. கிளிநொச்சியைத் தக்கவைக்கப் புலிகள் கடுமையாகப் போரிடுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்ததால் ராணுவம் மெதுவாகவே முன்னேறியதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டுச் செய்திச் சேவைகளிலும் "புலிகளின் தலமைக் காரியாலயம் பிடிபட்டது" என்று செய்தி போட்டிருக்கிறார்கள்.

நீரையெல்லாம் உள்ளிழுத்து வெளி மூசும் கடலை அறியாதவர்கள் கொண்டாடட்டும்.

நீரையெல்லாம் உள்ளிழுத்து வெளி மூசும் கடலை அறியாதவர்கள் கொண்டாடட்டும்.

கடலாக இருந்தால் சரி பள்ளமாக இருந்தால் தன்னி மேல வராதுப்பா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னை சோனியா காந்திதானே இந்த யுத்தத்தை திரைமறைவில் அரங்கேற்றுகிறார். அவர் மனம் மகிழ மகிந்த அரசாங்கம் வெற்றிக்களிப்பில் வெளியிட்ட செய்தி.

தமிழரை பழிவாங்குவதுதான் சோனியா காந்திக்கு விருப்பமென்பதை அவரது மௌனமே சொல்கிறதே.

நன்றி சோனியா காந்தி அவர்களே..... உங்கள் கணவர் ராஜீவ் முன்னின்று ஆற்றிய தமிழின அழிப்பினை நீ;ங்கள் திரைமறைவில் அரங்கேற்றுகங்கள்..... உஙகள் பக்க துணையாக கலைஞர். மகிந்தர்.........

எங்களுக்கு எங்கள் தலைவர் பிரபாகரன் நம்பிக்கை நட்சத்தி;ரம். அவர் உலகத்தின் விடுதலைபோரட்ட இனங்களின் தலைவர்களில் மிகவும் தனிரகமான உன்னதமான தலைவன்.

தமிழனம் என்றோ ஒரு நாள் சுதந்திரம் பெற்று, தனித் தமிழ் ஈழம் அமைப்போம்.

வெற்றிவேல் வீரவேல் சுற்றிவந்த பகைவர்தம்மை தோழ நடுங்கவைத்த எங்கள் சக்திவேல்.

வெல்க தமிழர்படை. வெல்க புலிப்படை. தமிழர் தாகம் தமிழ் ஈழத் தாயகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.