Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி உன் பார்வைகாய்.......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி உன் பார்வைகாய்........

கவிதை......

கிளிநொச்சி..! கிளிநொச்சி...!

வாயில் சொல்லப்பட்ட

தடவைகள் அதிகம்

எதிரியின் வாயிலல்ல

தமிழனே..! இன்று உன் வாயால்....

கிளிநொச்சி போய்விட்டதாம்...!

கிளிநொச்சி போய் விட்டதாம்...!

அழுதழுது இன்றுடன்

ஐந்து நாட்கள்மேல் போக்கிவிட்டாய்...!

அழாமல் அடுத்த அடி வைத்திருந்தால்

மறுபடியும் ஐந்து அடி முன்னெறியிருப்பாய்....!

எம் மனவுறிதி போய்விட்டதா..? சொல்..!

உன் கொள்கைதான் தோற்றதா..! சொல்..!

தமிழீழமே உன் குறிக்கோள்

கிளிநொச்சி அல்லவே...!

கிளிநொச்சி எங்களின்

தமிழீழத்தின் நகரம் தான்

அழகான நகரந்தான்

இன்று எதிரியின் வல்வளைப்பில்

சிக்கிவிட்ட நகரந்தான்...

முழுமையாய் செத்துவிட்ட நகரமல்ல...!

வல்லரசுகள் படை சூழ

வஞ்சனையும் சேர்ந்துகொள்ள

வல்வளைப்பு செய்யவந்த

வளங்கொண்ட எதிரியுடன்

வம்புக்காய் சண்டையிட்டு

எங்கள் வீரத்தின் பிறப்புகளை

நம் தலைவன் இழக்க நினைக்கவில்லை...

அப்படி இழந்திருந்தால்;எங்கள்

கொள்கைக்கும் அது வெற்றியில்லை....!

எங்கள் வீரப்புதல்வரெல்லாம்

குட்டிக்குட்டி அக்கினி மலையல்லவா...!

எங்கள் அக்கினி மலைகள் சேர்ந்தால்

எதிரியின் நகரங்கள் சிதையாதா...!

இது ஏன் இன்னும் புரியவில்லை...?

புரிந்துவிட்டால் குழப்பமில்லை..!

இந்தக் குட்டி அக்கினிகள்

தலைவன் அடைகாக்கும் நெருப்புகள்

தலைவனின் பார்வை கிடைத்துவிட்டால்

எதிரியினை அழித்துவிடும்

எங்களின் இருப்புகள்...!

ஒரு நகரத்துக்காய் ; எங்கள்

இருப்பெல்லாம் இழந்துவிட்டு

எம் இறுதியிலக்கை அடையாமல்

எதிரியின் பாசறையில் உயிர்வாழ்வதா..?

இன்று எம் அழிவை உலகெல்லாம்

ஊமையாய் பார்த்திருக்கு.....

நாளை அவன் அழிவை கேட்கவந்தால்

எம்மிடமும் பதிலிருக்கு....

நம் தலைவனின் மெளனம்

எதிரிக்கு சுனாமியின் அபசகுனம்....

தலைவனின் அமைதி கலைந்துவிட்டால்

எதிரி ஓடும்திசையெல்லாம்

தவறாமல் அவன் மரணம்...

எனவே தயங்காதே தமிழனே..!

உனக்கு மகிழ்ச்சி காத்திருக்கு.....

தயக்கமின்றி பார்த்திடுவாய்

கிளிநொச்சி நகரிலே

எதிரியின் அழிவுச் சின்னங்கள்

உன் பார்வைக்காய் காத்திருக்கு......

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை இளம்கவி. காலத்தில் தேவை அறிந்து எழுதப்பட்ட வரிகள். அதிலும் எனக்கு பிடித்த வரிகள்

எங்கள் வீரப்புதல்வரெல்லாம்

குட்டிக்குட்டி அக்கினி மலையல்லவா...!

எங்கள் அக்கினி மலைகள் சேர்ந்தால்

எதிரியின் நகரங்கள் சிதையுமல்லா..!

இது ஏன் இன்னும் புரியவில்லை...?

புரிந்துவிட்டால் குழப்பமில்லை..!

தலைவன் அடைகாக்கும் நெருப்புகள்

எதிரியினை அழித்துவிடும்

எங்கள் இருப்புகள்...!

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை.

ஒரு நகரத்துக்காய் ; எங்கள்

இருப்பெல்லாம் இழந்துவிட்டு

எம் இறுதியிலக்கை அடையாமல்

எதிரியின் பாசறையில் உயிர்வாழ்வதா..?

இன்று எம் அழிவை உலகெல்லாம்

ஊமையாய் பார்த்திருக்கு.....

நாளை அவன் அழிவை கேட்கவந்தால்

எம்மிடமும் பதிலிருக்கு....

உண்மையானதும் நிதர்சனமுமான வரிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இன்று எதிரியின் வல்வளைப்பில்

சிக்கிவிட்ட நகரந்தான்...

முழுமையாய் செத்துவிட்ட நகரமல்ல...!"

உரத்துச்சொல்லுங்கள் கொஞ்சம் உறைக்கச் சொல்லுங்கள்!! இனி என்ன? என்ற வேதனை விசும்பல்களுக்கு உங்கள் வரிகள் விடைகளாகட்டும்! முனகலும், அழுதலும் எந்தத்தீர்வை முன் வைக்கப்போகின்றது?!! ' வெற்றிகளுக்குத்துள்ளுவதும் தோல்விகளில் துவண்டு விழுந்து இனி எழும்பவே முடியாமல் கிடப்பதுவுமா போராட்டம் கற்றுத்தந்தது?!!

யாழ் முகப்பிலேயே உண்டே!! 'விழ விழ எழுவோம் விடுதலை பெறுவோம்"..

நெறிப்படுத்தும் நெருப்பு வரிகள். முரசறையும் கவிப்பொருள்கள்.

Edited by Thamilthangai

போராட்டத்தின் வெற்றியின் ஆரம்பம் தான் இந்த கிளிநோச்சியின் விட்டுக்கொடுப்பு.

உங்கள் கவிதை நல்லாயிருக்கு.

பாராட்டுக்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nunavilan

மிக்க நன்றி என் கவிதையை ரசித்ததற்கு....! ஆம் எங்கள் ஒவ்வொரு புலி வீரனும் எவ்வளவோ சாதிக்கக் கூடியவர்கள்.. ஒரு நகரத்தை காக்க எங்கள் வீரரை இழப்பது முறையல்லவே...!

இளங்கவி

பிரபாவுக்கு

எங்கள் அழிவை இவர்களெல்லாம் பார்த்திருக்கிறார்கள்.... நாளை புலிகள் வீறுகொண்டு எழுந்து நகரங்களை மீட்கும் போது இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்..?

நன்றி ரசித்தமைக்கு..

இளங்கவி

thamilthangai

கிளி நொச்சியின் இழப்பால் துவண்டு போயிருக்கும் எங்கள் உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல எழுதிய வார்த்தகளே இவை..

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு....

இளங்கவி

விதுஷா

மிக்க நன்றி கவிதையை ரசித்ததற்கு...

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திறக்கு ஏற்ற படைப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sagevan

நன்றி உங்கள் கருத்துக்கு...

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

பல உன்மைகள் பொதிந்துள்ளன

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

"கிளிநொச்சி எங்களின்

தமிழீழத்தின் நகரம் தான்

அழகான நகரந்தான்

இன்று எதிரியின் வல்வளைப்பில்

சிக்கிவிட்ட நகரந்தான்...

முழுமையாய் செத்துவிட்ட நகரமல்ல...!"

காலத்திற்கு ஏற்ற கவிவரிகள். வழ்த்துக்கள் இழங்கவி! தொடருங்கள்.

"விடுதலையின் குழந்தையை

நெஞ்சிலே சுமந்து

தலைவனின் வளியிலே

தமிழினம் தொடரும் வரை

கிளிநொச்சிகள் நிமிரும்."

பிரியமுடன் பரதேசி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவர் ஜீ

கருத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி முனிவர் ஜீ

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரதேசி

மிக்க நன்றி கருத்துச் சொன்னதற்கு....

எங்கள் எல்லோரினதும் கனவுகள் விரைவில் நிச்சயம் நிறைவேறும்...

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

அழகான,அருமையான கவிதை பாராட்டுகள் இளங்கவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rathy

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

"சிக்கி விட்ட நகரம் தான் செத்து விடவில்லை" .........

.நம்பிக்கை தரும் வார்த்தைகள்.

இது ஏனோ சிலருக்கு புரிவதில்லை .புரியும் காலம் விரைவில் ........

.....நல்ல கவி வரிகள் பாராட்டுகள். இளம் கவி ...... .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

மிக்க நன்றி என் கவிதைக்கு கருத்துச் சொன்னதற்கு....

இளங்கவி

இளங்கவி

கிளி போனால் என்ன ஆனை விழுந்தாலென்ன

தூக்கிய ஆயுதங்கள் இன்னமும் கரங்களில்தானே

ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே

பரிவட்டம் தூக்க ஒரு கூட்டம் அலையும்

சாகத் துணிந்த புலிகளுக்கு சமுத்திரமும் காலளவு

எவரஸ்ட் சிகரம் உயரென்று நினைத்திருந்தால்

மனிதனால் தொடப்பட்டிருக்க முடியாது.

முடியுமென்று நினைத்தவன் சாதனையாளன்

அநுராதபுரத்தில் 21 புலிவீரர் முடியுமென்று

இராணுவ கோட்டையில் புகுந்து துவம்சம் செய்தனர்

முடியும் புலியால் முடியும் என்று அடித்துக்கூறு.

இன்று கேலி செய்பவர்கள் நாளை வியந்துபோவார்கள்

இளங்கவி உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி உங்கள் கவி சொல்லும் சேதி நிச்சயம் நாளை நடந்தே தீரும். அழுவதாலும் அவசரம் காட்டுவதாலும் தீர்மானிக்கப்பட்ட சில விடயங்களை சிதறுதேங்காய் ஆக்க முடியாது. கால எல்லைகளும் நிர்ணயிக்க முடியாதவை. காற்றுள்ள போதுதான் தூற்றிக் கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் பிரயோசனம் அற்றதாகிவிடும். தாயக நிலை அத்தகையதே. ஆனால் புலம்பெயர்ந்த தேசங்களில் பெரும் மாற்றங்கள் உருவாகவேண்டும். மட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில் இருந்து விடுபட்டு விரிந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். சிதறுண்டு கிடக்கும் அடம்பன் கொடிகளை திரட்டி எடுக்கும் கெட்டித்தனத்தில் இருக்கிறது தாயகத்தின் வேதனை தீர்க்கும் முக்கால்ப்பங்கு. தொடருங்கள் உங்கள் கவிகள் உறவுக் கொடிகளை இணைத்து பலமுடையதாக மாற்றும் சக்தி கொள்ளட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

chozhan

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..... உங்கள் வரிகளும் மிக மிக நன்று..

எங்கள் நிலங்களை இழக்கலாம் அது புலிகள் தமது தந்திரோபாயமான பின் வாங்கலைக் கடைப்பிடிக்கும் மட்டும் தான். புலிகளின் மெளனத்துக்கு எந்தவொரு உலக அரசியல் சாணக்கியராலும் பதில் சொல்ல முடியாது ஆனால் புலிகளின் அமைதி கலையும் போது இழந்த நகரங்கள் ..ஏன் எதிரியின் ஆக்கிரமிப்பில் நெடுங்காலமாக இருக்கும் நகரங்கள் கூட செல இரவுகளில் புலிகளின் கையுக்கு இடம் மாறும் என்பதை முந்தய வரலாறுகள் காட்டியுள்ளது...

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

valvaizagara

உங்களுக்கு நன்றி.... என் வரிகளில் புதைந்து கிடந்த கருத்துக்களையும் வரவேற்று... எனக்கும் கவிதைகளால் மக்கள் மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவர ஊக்கத்தையும் தந்து, புலம்பெயர் தமிழர்களின் பங்குகளையும் சொல்லி இறுதிவரை நம்பிக்கை இழக்கக்கூடாது என்ற உங்கள் தன் நம்பிக்கைக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீரப்புதல்வரெல்லாம்

குட்டிக்குட்டி அக்கினி மலையல்லவா...!

எங்கள் அக்கினி மலைகள் சேர்ந்தால்

எதிரியின் நகரங்கள் சிதையாதா...!

இது ஏன் இன்னும் புரியவில்லை...?

புரிந்துவிட்டால் குழப்பமில்லை..!

இந்தக் குட்டி அக்கினிகள்

தலைவன் அடைகாக்கும் நெருப்புகள்

தலைவனின் பார்வை கிடைத்துவிட்டால்

எதிரியினை அழித்துவிடும்

எங்களின் இருப்புகள்...!

அழகான கவிதை . வாழ்த்துகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பிக்கு

மிக்க நன்றிகள் கவிதையை ரசித்ததற்கு..

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை இளங்கவி! தொடருங்கள் வாழ்த்துகள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

suvy

என் வரிகளை ரசித்ததற்கு மிக்க நன்றி...

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.