Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கிளி போனதால் கிலி கொள்வதா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளி போனதால் கிலி கொள்வதா?!!

ஒன்றாகி களம் நின்றாடும் எம்மவர் பின்னால் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எவ்வளவு தூரம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதைக்காட்டி நிற்பதுதான் இந்தச் சின்னச்சறுக்கல்".. ம்ஹீம் சறுக்கல் என்று கூட இதைச்சொல்லிவிடச்சம்மதமில்ல??. எம் தலைமையின் தந்திரோபாயமான பின் வாங்கல். இரண்டாம் திகதி கேட்ட செய்திக்குப்பின்னர் பார்க்கும் இடமெங்கும் இதைப்பற்றிய பேச்சும் ஆராய்ச்சியும் தான் செய்துகொண்டிருக்கின்றோம் அன்றி நாம் என்ன செய்தோம்?!! இல்லை என்ன செய்யப்போகின்றோம்?! 'இன்னும் நமக்குள் பேதங்கள் காட்டி புலம் பெயர் நம்மவரிடையே பிரிவினைகளை உண்டாக்கும் வீண் பேச்சுக்களும் வாதங்களும் 'நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரப்போகின்றதா?!

'இரு வாரங்களுக்கு முன்னரே 'புலித்தலைமையின் தரப்பில் இருந்து 'நடேசன் ஐயா அவர்கள் ''கிளி நொச்சி போனாலும் எங்கள் போராட்டம் தொடரும்"என்று குறிப்பிட்டிருந்தார் அதனையும் தொடர்ந்து புலம் பெயர் உறவுகளே நீங்கள் 'உங்கள் கடமையான பரப்புரையைச்செய்யுங்கள் இங்கிருந்து வெற்றிச்செய்திகளை நாம் தருகின்றோம்" என்று சொன்னார். இது வெறும் செய்தியா? இல்லைத் தகவலா ஏன் அப்படிச்சொன்னார் என்பதற்கான ஆராய்ச்சிகளிலேயே நேரம் கடத்திச்சென்றோமே உறவுகளே; நாம் இந்தச்செய்தியுள் இருக்கும் ஆழ்ந்த கருத்தை உள்வாங்கிக்கொண்டோமா?! உணர்ந்து செயற்பட்டோமா?!! நமக்குள் ஏன் இன்னும் பிரிவினை வாதங்கள்?!! இன்னல்கள் கடந்து எத்தனை எத்தனையோ இழந்து மிஞ்சிய உயிரைத்தானே சுமந்து வந்தோம்?!! இந்த வேதனை வாழ்க்கை மறக்குமா?!! 'வெறும் வாய்ப்பேச்சுக்களினால் எமக்கிடையே சண்டையும் சச்சரவுகளும் நமக்கான இலட்சிய வெற்றியை ஈட்டித்தந்துவிடுமா?!!

ஈழத்தில் நின்றாடும் ஒவ்வொரு களப்போராளியும் புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி சொல்வான்/ள். இங்கிருந்து நாம் என்ன செய்கின்றோம் என்பதை அங்கிருந்து போராடும் உறவு அறியும். அதை நாம் விளம்பரப்படுத்த வேண்டிய தேவை இல்லை. 'தோல்விகளைக் கண்டு நாம் துவண்டு போனால் வெற்றிகளுக்கான வாய்ப்புக்களை நாமே தட்டிக்கழித்துவிட்டது போல் ஆகாதா?!

நமக்கான தேவை முதலில் ஒற்றுமை" பேதங்களையும் வீண் வாதங்களையும் தூக்கி எறிந்து விட்டு ஈழத்தமிழனாய் எங்கள் அண்ணன் விரும்பும் தமிழனாய் ஒன்று படுவோம். 'ஒன்று கூடி ஒப்பாரி வைப்பதால் எந்தப்பலனும் வந்துவிடப்போவதில்லை என்பதை நீங்கள் அன்றி வேறு யார் அறிவார்?! 'இனி என்ன செய்யுறது? !!! என்ற சோகத்தொனியை விடுத்து, செய்வோம்! செயற்படுவோம் அதற்கு முதல் உறவுகளே நாம் ஒன்று படுவோம். 'தளர்ந்து விழுந்தால் இன்னொரு கை தூக்கி விட வேண்டாமா?!! 'ஈழத்தமிழனுக்கு வலிகளும் வேதனைகளும் தோல்விகளும் ஏமாற்றங்களும் துரோகங்களும் புதிதல்ல! ஆகவே 'வெற்றியின் முதல்படி நோக்கி முன்னேறுகின்றோம் என்று கொள்வோம்"உங்கள் உற்சாகச் செயற்பாடுதான் களமாடும் எம் உறவுகள் வேண்டி நிற்பது. ஒன்று படுவோம்.

இப்போது சொல்லுங்கள் கிளி போனதால் கிலி கொள்வதா?!!!

**ஆக்கபூர்வமான தெளிந்த கருத்துக்களை முன்வையுங்கள்**புரிந்துணர்வு

க்கு

நன்றி.

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

பசியாலும் பட்டினியாலும் வாடும் மக்களுக்கு நேசக்கரத்தினூடாக உதவிகள் வழங்கலாம். பலர் வழங்கி கொண்டிருக்கிறார்கள். இது ஒரு முதல் படி தான் என்றாலும் மிக அத்தியாவசியமானதாகவே எனக்கு தென்படுகிறது. எங்களை விட யார் தான் உதவி செய்யப்போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கமுங்க!

தமிழ்த்தங்கையின் இந்தப்பதிவில் பல விடயங்கள், வரி வரியாக தெளிவு படுத்தப்பட்டுள்ளன.

இதை ஒரு ஆரோக்கியமான விவாத அரங்காக நகர்த்தினால் பல விடையங்களில் நாம் தெளிவாகலாம் என்பது எனது கருத்து.

அதாவது பின்வரும் விடயங்களை கருத்தில்கொண்டு தொடருவோம்.

முதலாவதாக விடுதலைப்புலிகளின் இந்த தொடர்ச்சியான பின்வாங்கல்கள் காரனமாக புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன அதிர்வுகள்.

தாயக மக்களின் அவலம் மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதினால் அவர்கள் மத்தியில் விடுதலைப்போராட்டம் பற்றிய தற்போதைய நிலைப்பாடு.

விடுதலைப்புலிகளின் தந்திரோபாய நகர்வை தனக்கு கிடைத்த வெற்றியாகக் கொண்டு சிங்கள அரசு சாதிக்க முற்படும் விடயங்கள்.

தமிழ்த்தேசிய போராட்டத்தில் இதுவரை எந்தப் பங்களிப்பையும் செய்யாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் எமது உறவுகள் சிந்திக்கவேண்டிய விடயங்கள்.

தமிழர் படையின் தற்போதைய பின்நகர்வுகளை சர்வதேச நாடுகள் எப்படி கையாளப்போகின்றன.

எங்கள் தேசியத்தலைவருக்கும், போராளிகள் மற்றும் தாயகமக்களுக்கும் நாங்கள் சொல்லும் செய்தி;

விடுதலைப்புலிகளின் அடுத்தகட்ட நடவடிக்ககை எப்படியிருக்கலாம், அதன்போது புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பின் செயற்பாடு எப்படியிருக்கவேண:டும்.

போன்ற விடயங்களை முக்கியமாக கொண்டு தொடரலாம்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எல்லோரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றினைய வேண்டும்.விடுதலை போராட்டம் பற்றி தெளிவான கருத்துகளை தெரியாதவர்களுக்கு எடுத்து உரைப்பது.மனம் சோர்வடையாமல் தாயகத்திற்கு எம்மால் இயன்ற உதவிகள் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளி (நொச்சி ) போனதால் கிலி (பயம்) கொள்வதா?

உண்மையான வீர தமிழனுக்கு ,தமிழ் ஈழ தமிழனுக்கு இது தேவையில்லாத பயம் ? பல பாத்து ஆண்டுகளாக நாம் கண்டு வந்ததென்ன ? வீழ்வதும்,,அதி மீட்பதும் கூலிக்காக போராடும் எதிரி படைக்கு எங்கே தெரிய போகிறது . பெரும்பான்மையின் ஆட்சிகள் கை மாறின ,நம் ஆட்சி என்றும் ஒரு தலைவன் தான் அவர் வேலுப்பிள்ளை பெற்ற வீரப்பிள்ளை. அவர் சாதிக்க நினைப்பதை சாதித்தே தீருவார். நாமெலாம் உயிருக்கு அஞ்சி ஓடிவந்த கோழைகள். புலத்து உறவுகளே , சிந்திக்க வேண்டும் ,அவர்கள் சந்திக்கும் தீப்பிழம்புகள், வீரமுடன் போராடும் நம் போராளிகள் அவர்க்ளுக்கு துணையாகும் துணைப்படைகள்.

இவையெல்லாம் பேச நம் புலத்து உறவுகளுக்கு என்ன தகுதி இருக்கிறது.? ஏன் கிலி கொள்ளவேண்டும் .

.காலத்தின் தேவையாக இருக்க கூடும். எம் தலைவன் என்ன செய்தாலும் அதில் ஒரு தீர்க்க தரிசனம் இருக்கும். இதை ஏன் நம் புலத்து உறவுகள் உணர மறுக்கின்றன . எதியின் கணக்கு தப்புக்கணக்கு ஆக வேண்டும் .

இன்று பிடிப்பேன், நாளை பிடிப்பேன், இன்னும் கொஞ்ச......... தூரம் என்பான் , பல உலக ஊடகங்களுக்கு

பரப்புரை செய்வான். அவர்களும் அதை நம்பி தம்பட்டம் அடிப்பார். எவன் வந்து பார்த்தான் நம் ஈழமக்களின் கணீரையும் செந்நீரையும் . எவரை அனுமதித்தார்கள் உண்மை அறிய , நாடு நாடாக பிச்சா பாத்திரமேந்தி தன் நாட்டு மக்களை ,ரத்த ஆறில் தோய்த்து எடுப்பான் ,அதற்கும் அவர் துணை போவர். பணமாய் ஆயுதமாய் , கப்பலிலே கொடுத்து அனுப்புவான். எம் மக்களுக்கு யார் ? உங்கள் உதவிக்கரங்கள் தான் .

.நாங்கள் இருக்கிறோம் அஞ்சாதீர்? எம் கரம் நீளும் போது எதிரி வலு தாழும் . நாம் சிந்திக்கிறோமா ?

பரப்புங்கள் சேதியை . நெஞ்சக்கதவுகளை தட்டி எழுப்புங்கள் ஊடகங்களே . மனிதம் மறந்த புலம் வாழ்

தமிழ் உறவுகளை ............ .

  • கருத்துக்கள உறவுகள்

பசியாலும் பட்டினியாலும் வாடும் மக்களுக்கு நேசக்கரத்தினூடாக உதவிகள் வழங்கலாம். பலர் வழங்கி கொண்டிருக்கிறார்கள். இது ஒரு முதல் படி தான் என்றாலும் மிக அத்தியாவசியமானதாகவே எனக்கு தென்படுகிறது. எங்களை விட யார் தான் உதவி செய்யப்போகிறார்கள்?

நானும் உங்களை வழிமொழிகிறேன். இந்த ஒரு சின்ன விடயத்திலையே எங்கட ஒற்றுமையைக் காட்ட முடியல்ல..... காட்ட முன்வர மனசில்ல.. இதில..??! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

சிறு தவறு மன்னிக்கவும்.

Edited by nillamathy

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்த்தங்கை

உங்கள் குமுறல் புரிகிறது என்று வெறுமனே நாலுவரிகளை எழுதாமல் கொஞ்சம் நின்று, நிலைத்து எனக்குத் தெரிந்தவற்றைப் பேசலாம் என்று எத்தனிக்கிறேன். இந்த யாழ்க்கருத்துக்களத்தில் அரசியல், பரப்புரை, , பகுத்தறிவு, சமயம் என்று பலதரப்பட்ட கருத்துக்கள விற்பன்னர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் என் போன்ற கத்துக்குட்டிகள் உளற விளைவது அவர்களுக்குச் சிரிப்பை வரவழைக்கக்கூடும், இருப்பினும் என்னுடைய கருத்தில் ஏதேனும் குழப்பங்கள் இருப்பின் அதனைச் சுட்டிக் காட்டி தெளிவாக்கக் கேட்டுக் கொண்டு...

தமிழ்த்தங்கை!, உங்களுடைய இவ்விவாதத்தில் நீங்கள்... 'கிளிநொச்சி போனாலும் எங்கள் போராட்டம் தொடரும்." 'புலம் பெயர் உறவுகளே! நீங்கள் உங்கள் கடமையான பரப்புரையைச் செய்யுங்கள்" என்று திரு.நடேசன் அண்ணா கூறிய கூற்றினை முன்வைத்தே....... ' இது வெறும் செய்தியா? தகவலா? என்று ஆராய்ச்சி நடாத்திக் கொண்டு நேரத்தைக் கடத்துகிறோமே தவிர, அதனுள் பொதிந்திருக்கும கருத்தை ஆழமாக உள்வாங்கினோமா?, செயற்பட்டோமா? என்றும் ஏன் எமக்குள் ஒற்றுமையில்லாத் தன்மையுடன் இருக்கிறோம்" என்று ஆதங்கப்பட்டுள்ளீர்கள்.

இவ்விடத்தில் உங்களிடம் இருந்து மேலதிகமாக சிலவற்றைக் கேட்க விரும்புகிறேன்.

உங்களுடைய இவ்விவாதத்திற்காக நீங்கள் முன்வைத்த கூற்றிலிருந்தே ஏற்கனவே எங்கள் தாயகத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட மூவகையான தளங்களை பலப்படுத்தவேண்டிய தேவையே தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

அவையாவன,

1. பரப்புரை (உலகமெல்லாம் அறியும் வகையில் எங்கள் தாயகப் பிரச்சனையை வெளிப்படுத்துவது)

2. பொருள் வளம் (இனவாத அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அழிப்பு நடவடிக்கைகளில் இருந்து சகலவழியிலும் தாயகத்தை மீட்பிக்கும் பலம்)

3. உள்வட்டப் பரப்புரை ( தேவைப்படுமிடத்து எம்மக்களுக்குள்ளும், எம் தாயகத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்)

இந்த மூன்று தளங்களும் உங்களிடம் இருந்து வந்த கூற்றில் வெளிப்பட்டிருக்கிறது.

செய்வோம் செயற்படுவோம் என்பதன் அடிப்படையில் இம்மூன்று தளங்களில் நீங்கள் எதனை முன் நிலைபடுத்தப் போகிறீர்கள் என்று தெரிவித்தால் உங்கள் விவாதக்களம் சிறப்படையும் என்று நினைக்கிறேன்.

Edited by valvaizagara

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய நிலையைப் பொறுத்தவரை நிலப்பரப்பைக் கைப்பற்றுவது மட்டுமே வெற்றி என்று ஸ்ரீலங்கா அரசோ அவர்களுக்கு உதவும் இந்தியா உள்ளிட்ட நாடுகளோ நினைக்கவில்லை. தமிழர் தாயகத்தில் இருக்கும் தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் ஆதரவை தமிழீழ விடுதலைப் போராட்டம் என்று இழக்கிறதோ, அப்போதுதான் இந்த யுத்தத்தில் தாம் வெற்றிபெற்றதாக அர்த்தப்படும் என்பதை எதிரி நன்குணர்ந்திருக்கிறான். அதனால்தான் வன்னியில் இருக்கும் மக்கள் மீது மிக மோசமான தாக்குதல்களை நடத்துவதோடு புலம்பெயர் தமிழர்களின் மன உறுதியைக் குலைக்கும்வகையிலான செயற்பாடுகளையும் அவன் முன்னெடுத்து வருகிறான். இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் மக்கள் மீது இரண்டு பொறுப்புக்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான பொறுப்பு, வன்னியில் அவலப்படும் எம் உறவுகளுக்கு எல்லா விதத்திலும் கை கொடுப்பது. அடுத்தது, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பங்களிப்பு. இரண்டாவதுவிடயத்தை யாரும் சொல்லிச் செய்ய வேண்டியதில்லை. ஆனால் வன்னி மக்களுக்கான ஆதரவு என்பது இன்றைய நிலையில் அவசியமானது மட்டுமல்ல, அவசரமானதுங்கூட..

சில மாதங்களுக்கு முன்னர் கனடாவில் போட்டிபோட்டுக்கொண்டு வன்னி மக்களுக்காக நிதி சேகரித்த சங்கங்கள் இப்போது என்ன செய்கின்றன? மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவது ஆதாரபூர்வமாகத் தெரிகின்ற நிலையில், அதற்கான ஆக்கபூர்மான எதிர்வினைகள் புலம்பெயர் நாடுகளில் தற்போது மேற்கொள்ளப்படுவது மிகமிகக் குறைவு. அதனை நாங்கள் நிறைவாகச் செய்யும்போது விடுதலைப் போராட்டம் மீதான புலம்பெயர் தமிழ்மக்களது பற்றுறுதி என்னவென்பது எதிரிக்கும் சர்வதேசத்துக்கும் மட்டுமல்ல எங்களுக்கும் தெரியவரும். கனடாவில் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் 256 சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் இருக்கின்றன. ஏதாவது ஒரு அமைப்பு ஆரம்பித்தால், போட்டிக்காகவேனும் மற்றவர்களும் ஆரம்பிப்பார்கள்.

கிளிநொச்சி ஸ்ரீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதென்பது சில சதுர கிலோமீற்றர் பரப்பளவை ஆக்கிரமித்ததுதான் என்ற உண்மை விளங்கியவர்களுக்கு ஸ்ரீலங்காத்தரப்புச் செய்யும் பரப்புரைப் போர் பற்றியும் விளங்கும். காரணம் அதற்கு முன்னரே பலமடங்கு பெரிய பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியிருந்தது. அதைவிட கிளிநொச்சி மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க பகுதி இன்னமும் விடுதலைப் புலிகள் வசமே உள்ளது. அதையும் இழக்கப் போகிறார்களா இல்லையா என்று உயிரைக் கொடுத்துப் போராடும் போராளிகளை விமர்சித்துக்கொண்டிருக்காம

அன்புக்குரிய அண்ணாமார், அக்காமார் எல்லோருக்கும் ஒரு கும்புடு போடுறேனங்க!

இந்தப்பகுதி என்னுடைய அறிவுக்கும், வயதுக்கும்(நான் ஒரு சின்னப்பிள்ளை) கொஞ்சம் அதிகம் தான் இருப்பினும் உந்த துன்பங்களிலை நானும் அனுபவித்தவள் என்ற ரீதியில் சில கருத்தை சொல்ல விரும்புகிறேனெங்கோ.

தாயக மக்களின் அவலம் மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதினால் அவர்கள் மத்தியில் விடுதலைப்போராட்டம் பற்றிய தற்போதைய நிலைப்பாடு.

உப்பிடித்தான் உந்த யாழ்ப்பாணம் போனவுடனே எல்லாரும் துள்ளிக்குதித்தவை புலிகள் கதை முடிஞ்சுது, யாழ்ப்பாண மக்களை போட்டு துவைக்கலாம் என்று.

நேற்றும் ஒரு சங்கதி கேள்விப்பட்டேன் பாருங்கோ, தீவுப்பகுதி மக்களையெல்லாம் டக்களஸ் ஜயா ஏதோ வெருட்டிப்பார்த்தாராம்.

உதெல்லாம் எமது மக்களைப்பொறுத்தவரை அவியாது பாருங்கோ.

இத்தனை வருஷமாக அந்த யாழ்ப்பாண மக்கள் திறந்த சிறைச்சாலையில் வாழ்ந்தாலும் விடுதலையுணர்வு குறைஞ்சிதோ என்றால் இன்னும் அதிகரிச்சிருக்கென்று தான் சொல்லலாம் பாருங்கோ.

மற்றதாக நீங்கள் குறிப்பிட்ட கிளிநோச்சி மக்களைப் பார்த்தீங்களோ எல்லாரும் தங்கடை பிள்ளையளுக்குப் பின்னாலையே போயிட்டினமாம்.

இதிலையிருந்தே அவர்களுடைய உணர்வை புரியவில்லையோ?

இதற்கு முன்பு கிழக்குமாகானத்திலை என்னாச்சு? இன்றும் மக்களைப்போட்டு சித்திரவதை செய்கிறாங்க ஏன்? அங்குள்ள மக்கள் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளைத் தான் ஆதரிக்கிறார்கள் அதுதான் உண்மையெங்க.

விடுதலைப்புலிகளின் இந்த தொடர்ச்சியான பின்வாங்கல்கள் காரனமாக புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன அதிர்வுகள்.

உங்கள் சந்தேகத்திலை கொஞ்சம் உண்மை இருக்கலாம் பாருங்கோ, அதுக்காக அவர்களின்ரை செயல்பாட்டிலை தளர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.

விடுதலைப்புலிகளின்ரை உந்த பின்நகர்விலை மக்களிற்கு பெரிய ஒரு எதிர்பார்ப்பு மட்டும் இருக்கெங்கோ அவ்வளவு தான் இப்போதைக்கு என்னால் சொல்லமுடியும்.

மக்களெல்லாம் இப்போ நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை பாருங்கோ, அவங்க நல்லா உசாராகியிட்டாங்க.

இப்படித்தான் பாருங்கோ உந்த கிளிநோச்சி வெற்றியை கனடாவிலையும் கொண்டாடினவையாம்; அவையின்ரை நோக்கம் வெற்றியை கொண்டாடுவதில்லை பாருங்கோ, அதாவது இங்குள்ள இளைஞரை தூண்டிவிட்டு அதனால் வரும் விபரீதங்களையெல்லாம் விடுதலைப்புலிகள் தலையில் போடத்தான் திட்டமிட்டவையாம்;

ஆனால் நடந்ததோ எல்லாம் தலைகீழாகத்தான் பாருங்கோ. இங்குள்ள இளைஞர்கள் எல்லாம் தேசியத்தலைவரின் நோக்கம் புரிந்து செயல்படுவதினால் இவர்களின் திட்டத்தை முறியடித்து விட்டார்கள்.

பசியாலும் பட்டினியாலும் வாடும் மக்களுக்கு நேசக்கரத்தினூடாக உதவிகள் வழங்கலாம். பலர் வழங்கி கொண்டிருக்கிறார்கள். இது ஒரு முதல் படி தான் என்றாலும் மிக அத்தியாவசியமானதாகவே எனக்கு தென்படுகிறது. எங்களை விட யார் தான் உதவி செய்யப்போகிறார்கள்

எங்களுடைய நோக்கமெல்லாம் தேசியம் நோக்கியதாக இருக்கவேண்டுமே ஒழிய சுயவிளம்பரத்திலை இருக்கக்கூடாது பாருங்கோ.

அவனவன் தங்களுக்கேற்ற முறையில், தங்களது வசதிக்குத் தக்கமாதிரித்தான் பங்களிக்க விரும்புவார்கள், அதற்காக இந்த அமைப்பு மூலமாக அல்லது என் மூலமாக உதவி செய் என்று யாரும் யாரையும் வற்புறுத்தக்கூடாது பாருங்கோ.

முதலாவதாக இந்த நிதி சேகரிப்பு விடயத்தை எடுத்துக்கொள்வோம், இதிலைதான் எனது குழப்பமே ஆரம்பிக்கின்றது.

புலம்பெயர்ந்த நாடுகளிலை எமது மக்களிற்காக இரண்டுவிதமாக நிதி சேகரிக்கிறார்கள், ஒன்று போராட்டத்திற்காக, இரண்டாவதாக போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக இதில் இரண்டிற்கும் பங்களிப்பு செய்யுமளவிற்கு பெரும்பான்மையினருக்கு வசதியிருக்காது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அப்படியிருக்கும்போது எனது பங்களிப்பு போராட்டத்திற்குதான், ஏனெனில் எங்களிற்கென்றோரு நாடு கிடைத்திட்டால், மக்களின் இன்னல்கள் நிரந்திரமாகவே தீர்ந்துவிடுமல்லவா?

மிகுதி நாளை தொடருகின்றேன்.

இந்த இணைப்பில் உள்ளதற்கும் இந்த திரியில் உள்ளதற்கும் இடையே தொடர்பு உண்டு. கண்டிப்பாக வாசித்து பார்க்கவும். அதில் சொல்லப் பட்டு இருப்பதனையே நானும் என் கருத்தாக இதில் வைக்கின்றேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=49738

இது இருமுறை இணைக்கப்பட்டுள்ளது... இரண்டாவது இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=49730&hl=

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பில் உள்ளதற்கும் இந்த திரியில் உள்ளதற்கும் இடையே தொடர்பு உண்டு. கண்டிப்பாக வாசித்து பார்க்கவும். அதில் சொல்லப் பட்டு இருப்பதனையே நானும் என் கருத்தாக இதில் வைக்கின்றேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=49738

இது இருமுறை இணைக்கப்பட்டுள்ளது... இரண்டாவது இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=49730&hl=

இணைப்புக்கு நன்றி!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய நிலையைப் பொறுத்தவரை நிலப்பரப்பைக் கைப்பற்றுவது மட்டுமே வெற்றி என்று ஸ்ரீலங்கா அரசோ அவர்களுக்கு உதவும் இந்தியா உள்ளிட்ட நாடுகளோ நினைக்கவில்லை. தமிழர் தாயகத்தில் இருக்கும் தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் ஆதரவை தமிழீழ விடுதலைப் போராட்டம் என்று இழக்கிறதோ, அப்போதுதான் இந்த யுத்தத்தில் தாம் வெற்றிபெற்றதாக அர்த்தப்படும் என்பதை எதிரி நன்குணர்ந்திருக்கிறான். அதனால்தான் வன்னியில் இருக்கும் மக்கள் மீது மிக மோசமான தாக்குதல்களை நடத்துவதோடு புலம்பெயர் தமிழர்களின் மன உறுதியைக் குலைக்கும்வகையிலான செயற்பாடுகளையும் அவன் முன்னெடுத்து வருகிறான். இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் மக்கள் மீது இரண்டு பொறுப்புக்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான பொறுப்பு, வன்னியில் அவலப்படும் எம் உறவுகளுக்கு எல்லா விதத்திலும் கை கொடுப்பது. அடுத்தது, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பங்களிப்பு. இரண்டாவதுவிடயத்தை யாரும் சொல்லிச் செய்ய வேண்டியதில்லை. ஆனால் வன்னி மக்களுக்கான ஆதரவு என்பது இன்றைய நிலையில் அவசியமானது மட்டுமல்ல, அவசரமானதுங்கூட..

சில மாதங்களுக்கு முன்னர் கனடாவில் போட்டிபோட்டுக்கொண்டு வன்னி மக்களுக்காக நிதி சேகரித்த சங்கங்கள் இப்போது என்ன செய்கின்றன? மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவது ஆதாரபூர்வமாகத் தெரிகின்ற நிலையில், அதற்கான ஆக்கபூர்மான எதிர்வினைகள் புலம்பெயர் நாடுகளில் தற்போது மேற்கொள்ளப்படுவது மிகமிகக் குறைவு. அதனை நாங்கள் நிறைவாகச் செய்யும்போது விடுதலைப் போராட்டம் மீதான புலம்பெயர் தமிழ்மக்களது பற்றுறுதி என்னவென்பது எதிரிக்கும் சர்வதேசத்துக்கும் மட்டுமல்ல எங்களுக்கும் தெரியவரும். கனடாவில் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் 256 சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் இருக்கின்றன. ஏதாவது ஒரு அமைப்பு ஆரம்பித்தால், போட்டிக்காகவேனும் மற்றவர்களும் ஆரம்பிப்பார்கள்.

கிளிநொச்சி ஸ்ரீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதென்பது சில சதுர கிலோமீற்றர் பரப்பளவை ஆக்கிரமித்ததுதான் என்ற உண்மை விளங்கியவர்களுக்கு ஸ்ரீலங்காத்தரப்புச் செய்யும் பரப்புரைப் போர் பற்றியும் விளங்கும். காரணம் அதற்கு முன்னரே பலமடங்கு பெரிய பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியிருந்தது. அதைவிட கிளிநொச்சி மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க பகுதி இன்னமும் விடுதலைப் புலிகள் வசமே உள்ளது. அதையும் இழக்கப் போகிறார்களா இல்லையா என்று உயிரைக் கொடுத்துப் போராடும் போராளிகளை விமர்சித்துக்கொண்டிருக்காம

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...... 256 சங்கங்கள், மற்றும் அமைப்புக்களா? எங்கட இனத்தின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக...,

அட ஒவ்வொரு சங்கமும் ஆகக் குறைந்தது ஒரு நாள் வீதம் ஒரு தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தா அது எட்டரை மாதத்திற்கு மேலாக உலகிலேயே தம்நிலை வருத்தும் நீண்ட போராட்டமாக மாறுமே!!!.... :rolleyes: இப்பிடிச் செய்தா உலகம் புலம் பெயர் மக்களின் தாயக உணர்வுக்குத் தலைவணங்காதா?

வெண்ணெயைக் கையில வச்சுக் கொண்டு நெய்யிற்கு அலையிறமோ?......

ஆராவது அரிசியல்....சே...அரசியல் தெரிஞ்ச ஆட்கள் சொல்லுங்கப்பா. :rolleyes::o:)

256 சங்கங்கள் இருக்கலாம். உறுப்பினர்கள்??? சிலவேளைகளில் 256 சங்கங்களிலும் ஒருவர் உறுப்பினரராக இருக்கக் கூடும்.... எழுதலாம். செய்வோம் எனலாம். ஆனால், எத்தனை விடயங்களுக்கு எத்தனை பேர் உண்மையதகச் செய்கின்றார்கள் என்ற தெரியவில்லை... தமிழ்ஓபாமா என்று ஒன்றுக்குக் கையெழுத்து வைக்கச் சொல்லி மாதக்கணக்கில் செய்து கொண்டிருக்கின்றார்கள். வெறும் கையெழுத்து வைப்பதற்கே, 3000 பேர் அளவில் தான் முன்வந்திருக்கின்றார்கள்.

அப்படியே இளையோர் அமைப்புக்களும் நீங்கள் பட்ட அவலங்களை எழுத்தில் தருமாறு கேட்டும், எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியவில்லை.. என்றே அறிகின்றேன்.

தமிழர் விழாக்களுக்கு, களியாட்டங்களுக்கு கிடைக்கின்ற வரவேற்புக்கள், க திரு. கிருபாகரன் செய்கீன்ற மனிதஉரிமை விடயங்களுக்குக் கிடைப்பதில்லை..

வெறும் 4, பேர் மனுப்போட்டால் எத்தனைபேர் நம்புவான்.

1வது நம்மவர்கள் பயப்படுவது, ஏதாவது சட்டங்களுக்குள் மாட்டுப்படுவமா என்று. அதை முதலில் நீக்க வேண்டும். இங்கே நாங்கள் எம் மனிதஉரிமை பற்றியே கதைக்கின்றோம் . அதைக் காட்டித் தர்னே நாட்டில் அசலம் எடுத்தோம். அப்படியிருக்கின்றபோது, எமக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சொல்வதில் என்ன தவறு இருக்கப் போகின்றது. உலகத்தில் எந்த நாடும், மனிதஉரிமை பற்றிக் கதைக்காதே என்று சொல்ல யோக்கியம் இல்லாதவை...

2வது, அப்படி ஒரு பயம், தடை இருந்தால்,, இளையோர் முதல் யாருமே செயற்படமாட்டார்கள்...

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணெயைக் கையில வச்சுக் கொண்டு நெய்யிற்கு அலையிறமோ?......

ஆராவது அரிசியல்....சே...அரசியல் தெரிஞ்ச ஆட்கள் சொல்லுங்கப்பா. :rolleyes: :rolleyes: :o

ஆம் ஆதிவாசி நீங்க சொன்னால் சரியாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி தொடர்ந்து கதைத்துக் கொண்டிருக்காமால், நாம் இப்போது என்ன செய்ய முயற்சிக்கலாம்?

என்ன செய்யலாம் என்று கேட்டா.... முதல்ல இங்க இருந்தே ஆரம்பிச்சா என்ன?

என்ன திகைக்கிறீங்களா?.....

யாழ்நண்பர் வட்டம் அப்படி ஒன்றை முதலில தொடங்குங்க.

தம் நிலை வருத்தும் அறப்போராட்டமாக ஒரு நாள் உண்ணா நிலைப் போராட்டத்தை.... மற்றவர்கள் உங்க வழியைத் தொடர்வதற்குத் துணிவை உருவாக்குங்க. பின்பற்றி தொடரட்டும்.

அது சரி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உங்களால முடியுமோ?

சரி ஆராவது பதில் தருகினமோ எண்டு பாப்பம். இது விளையாட்டுக் கதை இல்லை சொல்லிப்போட்டன்.

வணக்கம்,

எங்களுக்கு கிலி இன்று நேற்று பிடிக்க இல்லை. எண்டைக்கு சிறீ லங்காவில இனவாதம் ஆரம்பிச்சுதோ அண்டைக்கே எல்லாவிதமான கிலியும் தோன்றிடிச்சுது. ஆக்கிரமிப்பு இராணுவங்கள் காலத்துக்கு காலம் இடங்களை பிடிக்கிறதும், விடுகிறதும் தாயகத்தில வழமையாக நடைபெறுகிற சம்பவங்கள்.

முந்தி இப்பிடித்தான் யாழ்ப்பாணம் சிறீ லங்கா இராணுவத்திண்ட கைகளில முழுமையாக போகேக்க எல்லாரும் தலையில அடிச்சு அழுதிச்சீனம். அங்கபார் ஆமி நல்லூருக்க நிக்கிறான். கோயிலுக்க போய் அர்ச்சனை எல்லாம் செய்யுறான் எண்டு எல்லாம் ஒரே புதினமாய் இருந்திச்சிது. இனவாத அரசாங்கமும் யாழ்ப்பாணம் பிடிச்சதை வைச்சு நல்லாய் படம் காட்டிச்சிது. ஆனால்.. அதுக்குபிறகு நடந்தது என்ன? யாழ்ப்பாணம் போனகையோட எல்லாம் முடிஞ்சுவிட்டதான பிரமை இருந்திச்சிது. ஆனால்... இப்ப சுமார் 13 வருசத்தால முன்பைவிட பலமடங்கு பலத்துடன் தமிழர் போராட்டம் மாபெரும் வளர்ச்சி அடைஞ்சு இருக்குதே ஒழிய வீழ்ச்சிக்கான அறிகுறியை காண இல்லை.

இந்திய இராணுவம் தாயகத்தை ஆக்கிரமிச்ச காலத்தில என்ன நடந்திச்சிது. அவங்கள் ஒட்டுமொத்தமாய் முழு தாயக நிலப்பரப்பையுமே கட்டுப்பாட்டில வச்சு இருந்தாங்கள். தாயக மக்களையும், போராட்டத்தையும் ஏறக்குறைய ஒட்டுமொத்தமாக நறுக்கி இருந்தாங்கள் - நலிவடையச்செய்து இருந்தாங்கள். ஆனால் சிறீ லங்காவைவிட்டு வெளியேறி சுமார் மூண்டு மாதத்தில - அதுக்கு பிறகு ஓர் குறுகிய காலத்தில பெருமளவு நிலப்பரப்பை தமிழர் தங்கள் வசமாக்கிக்கொண்டார்கள். வல்லாதிக்க அரசு ஒண்டு செய்துமுடிக்க ஏலாது எண்டு பலவிதமான வித்தைகளையும் பிரயோகிச்சுபார்த்து தோல்வியில கைவிட்ட தாயகத்தை, தாயக ஆக்கிரமிப்பை சிறீ லங்கா அரசு நிரந்தரமாக தனதாக்கிக்கொள்ளும், அதில நிரந்தர வெற்றி பெறும் எண்டு நினைக்கிறது ஓர் கனவு.

இஞ்ச கொஞ்சப்பேர் துடுப்பாட்டபோட்டியாக தாயக போராட்டத்தை அணுகி ஓட்டங்களை கணக்குப்பார்த்துக்கொண்டு இருந்தால் அதுக்கு ஒண்டும் செய்ய ஏலாது. முந்தி இப்பிடித்தான் யாழ் மத்திய கல்லூரி - யாழ் பரியோவான் கல்லூரிகளுக்கிடையில மாபெரும் துடுப்பாட்ட போட்டி நடக்கேக்க ஒரு அணி வெற்றிபெறேக்க தோக்கிற அணியிண்ட ஆதரவாளர்கள் மனமுடைஞ்சுபோய் கடைசியில சிலர் சோகம் தாங்க முடியாமல் தண்ணியைப் போட்டுட்டு கம் எண்டு நாலைஞ்சு நாளைக்கு வெளிக்கிடாமல் வீட்டுக்க படுத்து கிடக்கிறது. தாயகபோராட்டத்தை இப்படி போட்டியாக கண்டுகளிச்சு மகிழுற ஆக்களுக்கும் தண்ணி ஒண்டுதான் சிறந்த பரிகாரமாக இருக்கமுடியும். ஆனால்...

விடிவுதேடி போராடுற மக்களுக்கு, வாழ்வியல் ஆதாரத்தை தாயகத்தில நிலைபதிச்ச மக்களுக்கு இந்த ஆக்கிரமிப்புக்கள் கிலியை ஏற்படுத்தமாட்டிது. பதிலாக, ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு விரைவில் படுகுழியை வெட்டுவதற்கு ஏற்றவகையில அவர்கள் மனதில ஆக்கிரோசத்தையும், பூகம்பத்தையும் கிளப்பிவிட்டு இருக்கும் எண்டு சொல்லலாம்.

நான் ஊர்ப்புதினம் பகுதியில உந்த அடிபாடுகள் பற்றி எழுதுறது எல்லாத்தையும் குறைச்சுப்போட்டன். தமிழ்தங்கை ஏதோ கடுமையாக ஆராய்ச்சி செய்யுறதால எனது எண்ணத்தையும் உங்களோட பகிர்ந்துகொண்டன். நன்றி!

நான் ஊர்ப்புதினம் பகுதியில உந்த அடிபாடுகள் பற்றி எழுதுறது எல்லாத்தையும் குறைச்சுப்போட்டன். தமிழ்தங்கை ஏதோ கடுமையாக ஆராய்ச்சி செய்யுறதால எனது எண்ணத்தையும் உங்களோட பகிர்ந்துகொண்டன். நன்றி!

தொடர்ந்து எழுதுங்கள் முரளி... எனக்கு மாப்புவை விட, கலைஞனை விட முரளியைத் தான் நன்கு பிடிக்கின்றது (உங்களின் பல பழைய ஆக்கங்களை அண்மையில் தான் தேடி வாசித்தேன்...).

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னங்க ஆதிவாசி இப்படி கேட்டிட்டீங்க?

இருந்தாலும் ஒரு நியாயமான கேள்விதான்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

முரளி உங்கள் கருத்துடன் நான் ஒத்து போகிறேன் ஆனால் யாழ்ப்பாணத்தை புலிகள் இழந்தவுடன் போவதற்கு வன்னி மண் இருந்தது ஆனால் இப்போது வன்னியும் போனால் புலிகளூம் மக்களூம் எங்கு போவது? திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து தொடங்வது என்றால் கஸ்டம் தானே.

நான் த‌யார் ஆதிவாசி ஆனால் என்னோடு சேர்ந்து உண்ணா நோன்பு இருக்க‌ யார‌வ‌து வ‌ர‌ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி, உண்ணாவிரதத்திலை இப்போ என்ன கோரிக்கை முன்வைக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

சரி, உண்ணாவிரதத்திலை இப்போ என்ன கோரிக்கை முன்வைக்கலாம்?

இல‌ங்கை ஆமி எங்க‌ள் சொந்த‌ இட‌ங்க‌ளை விட்டு உட‌ன‌டியாக வெளீயேற வேண்டூம்.

தமிழ் மக்களீன் பிர‌ட்ச‌னைக்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு வேண்டும்.

உணவு பற்றாகுறை,ம‌ருந்து பற்றாகுறை போன்றவ‌ற்றை நீக்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

வல்லாதிக்க அரசு ஒண்டு செய்துமுடிக்க ஏலாது எண்டு பலவிதமான வித்தைகளையும் பிரயோகிச்சுபார்த்து தோல்வியில கைவிட்ட தாயகத்தை, தாயக ஆக்கிரமிப்பை சிறீ லங்கா அரசு நிரந்தரமாக தனதாக்கிக்கொள்ளும், அதில நிரந்தர வெற்றி பெறும் எண்டு நினைக்கிறது ஓர் கனவு.

இஞ்ச கொஞ்சப்பேர் துடுப்பாட்டபோட்டியாக தாயக போராட்டத்தை அணுகி ஓட்டங்களை கணக்குப்பார்த்துக்கொண்டு இருந்தால் அதுக்கு ஒண்டும் செய்ய ஏலாது. . தாயகபோராட்டத்தை இப்படி போட்டியாக கண்டுகளிச்சு மகிழுற ஆக்களுக்கும் தண்ணி ஒண்டுதான் சிறந்த பரிகாரமாக இருக்கமுடியும். ஆனால்...

விடிவுதேடி போராடுற மக்களுக்கு, வாழ்வியல் ஆதாரத்தை தாயகத்தில நிலைபதிச்ச மக்களுக்கு இந்த ஆக்கிரமிப்புக்கள் கிலியை ஏற்படுத்தமாட்டிது. பதிலாக, ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு விரைவில் படுகுழியை வெட்டுவதற்கு ஏற்றவகையில அவர்கள் மனதில ஆக்கிரோசத்தையும், பூகம்பத்தையும் கிளப்பிவிட்டு இருக்கும் எண்டு சொல்லலாம்.

நான் ஊர்ப்புதினம் பகுதியில உந்த அடிபாடுகள் பற்றி எழுதுறது எல்லாத்தையும் குறைச்சுப்போட்டன். தமிழ்தங்கை ஏதோ கடுமையாக ஆராய்ச்சி செய்யுறதால எனது எண்ணத்தையும் உங்களோட பகிர்ந்துகொண்டன். நன்றி!

முரளி,

சின்னப்பிள்ளைக்கும் விளங்கக்கூடிய மாதிரி உங்கள் கருத்துக்களை உங்களுக்கேயுரிய தனிப்பாணியில் அருமையான கருத்துக்களை முன் வைத்திருக்கின்றீர்கள். சோர்ந்து போனவர்களுக்கு உங்கள் உற்சாக வரிகள் மருந்தாகட்டும்; அதேவேளை நாம் எத்தகைய செயற்பாட்டை முன்னெடுக்கப்போகிறோம்? ஆதி சொன்னது போல் 'உண்ணாவிரதப்போராட்டம்" /அமைதிப்பேரணி ஏதேனும் ஒன்றை தற்போது செய்தே ஆகவேண்டிய தேவை உள்ளது. இதைப்பற்றிய கருத்துக்கள் என்ன?!

நிழலி அண்ணா, ரதி, நிலாமதி அக்கா,நுணாவிலான்,, தூயவன், நெடுக்ஸ் அண்ணன், இவற்றோடு சிந்திக்கும் கருத்துக்களை தெளித்த வல்வை அண்ணா, நக்கீரன்,சகாரா அக்கா, விதுஷா, முரளி அனைவருக்கும் என் நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள எல்லோருமே ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள். முக்கியமாக இந்த நண்பர்வட்டம் சார்பாக உடனடியாக செயலில் இறங்கலாமோ என்பது சரியாக எனக்குத் தென்படவில்லை.

அதாவது நண்பர்வட்டம் என்றால் என்ன? இவர்கள் யார்? நோக்கம் என்ன?போன்ற விடயங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

இதற்காக சில சட்ட வேலைத்திட்டங்களும் செய்யவேண்டியுள்ளது, ஆகவே உண்ணாவிரதம் இருப்பதில் எனக்கு எந்தவிதமான பிரச்சினையுமில்லை, ஆனால் நண்பர்வட்டம் என்ற பெயரை பயன்படுத்தாது முதலில் செயலில் இறங்குவோம்.

இந்தப்போராட்டத்திலை வேறு தரப்பினரையும் இணைக்கவேண்டும், அதற்காக சில ஊடகங்களின் உதவியையும் நாடவேண்டும்.

இப்படி பல விடயங்களை உள்வாங்க வேண்டியிருப்பதால் நாம் நினைப்பதுபோல் இன்றோ நாளையோ உடனடியாக செய்வது சாத்தியமானதல்ல.

நல்லாக திட்டமிட்டு எவ்வளவு விரைவில் செயல்படமுடியுமோ அவ்வளவுக்கு முயற்சி பண்ணிப்பார்ப்போம்.

முக்கியமாக ஊடகம், அனுமதி போன்ற விடயங்களில் எனது அதிகப்படியான பங்களிப்பை செய்ய ஆர்வமாகவுள்ளேன்.

ஆனால் எவ்வளவுக்கு அதிகமான உங்களது பங்களிப்பு இருக்கும் என்பதைப்பொறுத்து தான் எதையும் தீர்மானமாக கூறலாம்.

அடுத்ததாக தமிழ் புதுவருடம் நெருங்கும் வேளை தாயகத்தில் இருந்து திடீர் திருப்பங்களுக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே வருடப்பிறப்பைத் தொடர்ந்து எங்களது வேலைத்திட்டங்களையும் முன்னகர்த்தலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

தொடர்வோம் எங்களது ஆக்கபூர்வமான விவாதங்களை.

வாருங்கள் இணைவோம் தமிழராய்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.