Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்திருக்கும் பறவை

Featured Replies

எங்களது வாழ்க்கையின் அவலங்களை, அதன் வலிகளை, என்னைப்பாதிக்கும் நிகழ்வுகளை, நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன்.

1. இடப்பெயர்வு

அவசரத்தில் அவிழ்க்காமல்

விட்டு வந்த மாடு

பூட்டிய கூட்டுக்குள்

கோழியும் , குஞ்சும்

உலையில் புட்டு

வரும்போது அரையவியல்

எரிந்துபோயிருக்கும் இப்போது

யார் சோறுவைக்கப்போகிறார்கள்

பூனைக்கும் , நாய்க்கும்

வெட்டி அடுக்கியமாதிரி

வேலிக்கான கதிகால்கள்

வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள்

வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல்

பாழாய்ப்போன யுத்தம்

வீடுகூடப் பூட்டவில்லை

வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட

மிஞ்சி இருப்பது நான்மட்டும்தானே

உயிர் பிழைக்க நானும்

ஊர் பெயர்ந்தால்

வீடென்ன செய்யும்.

2. மீள்குடியமர்வு

சொல்லிலடங்காத

சோகங்களின்

தொகுப்பு

பட்டவர் அன்றி

மற்றவர் புரிந்திடா

உணர்ச்சிகளின் குவியல்

கூரைபிளந்து

வானம் பார்த்திருக்கும்

வீடு

செடிகொடி வளர்ந்து

காடாய்க் கிடக்கும்

வளவு

குதுகலத்தோடு வாழ்ந்த

குடிதனின் நிலைகண்டு

குளமாகும் கண்கள்

அடியெடுத்துவைக்கையில்

அன்னியப்படும்

பயிர் நிலங்கள்

சிறப்பாய் வாழ்ந்த நாட்கள்

சிந்தையில்

வட்டமிட்டிட

சின்னதில் செய்திட்ட

குறும்பினைச் சொல்லிடும்

சுவர்கள்

இருப்புக்கும்

இழப்புக்குமிடையில்

அல்லல்ப்படும் மனம்

சிரிப்பும், அழுகையும்

சேர்ந்தேவரும் - ஆம்

மீள்குடியமர்வென்பது எங்களுக்கு

மரணிப்புக்கு

முன்னால் கிடைக்கும்

மறுபிறப்பு.

3. சிறைவைக்கப்பட்ட வீடு

நேற்றுப்போல் இருக்கிறது

நீண்டுவளர்ந்த தென்னைகள் நின்றணிசெய்த

பாதைவழியே தொடங்கிய எம்

நெடுந்தூரப் பயணம்.

உயிர்பிரிதல் பற்றிய உறுத்தலில்

ஊர்பற்றிய உணர்வலைகள்

ஒருவரிடமும் இல்லை அப்போது

இப்போதுதான்,

எஞ்சியவர்களில் மிஞ்சியவர் இதயங்களில்

ஊர்,

உடைந்துபோன வீடு,

இழந்த போன உறவுகள்,

அவர்தம் நினைவுகள்

என்றெல்லாம் ஏக்கமாய்.

ஒன்றிரண்டாய் குடிவந்து

ஊருக்கும் உயிர் வந்து

ஒருவருடமாகிறது

நாங்கள் மட்டும்

நடைப்பிணமாய்

நண்பர்கள் வீட்டில்

நாள்தோறும் எதிர்பார்ப்பு

நனைந்து போகிறது கண்ணீரில்

பேச்சுக்கள்,

பேச்சுக்கான பேச்சுக்கள்,

அறிக்கைகள்,ஆர்ப்பாட்டம்,

வாக்குறுதிகள்

சமாதானத்துக்கான யுத்தம்

என்றனைத்துக்கும் அப்பால்

சிறைவைக்கப்பட்டிக்கிறது என் வீடு

எப்போது உடையும்

உயர் பாதுகாப்பு வலயம்.

4. இப்படியும் ஒரு வாழ்க்கை

ஏக்கம்,துக்கம் ஏன் இந்த

வாழ்வென்ற விரக்தியோடு

விடிந்துகொள்கிறது பகல்

வீதி,வேலைத்தளங்கள்,

பாடசாலை,பயணத்திலெல்லாம் –விதி

எம்மீது ஒரு விழி வைத்திருக்கிறது

சந்தோசமான சடங்குகளில்கூட

எல்லோர் மனத்திலும் –தனித்துட்காந்திருக்கிறது

எதிர்காலம் பற்றிய பயம்

கண்ணயரும் போதலெல்லாம்

துப்பாக்கிச் சத்தங்கள்

விழித்திருக்கிறது இரவு.

5. யுத்தத்தின் முடிவினைக் கண்டவர் யார்?

மீளவும் ஆரம்பித்திருக்கிறது

அடிமுடி தேடும் படலம்

முன்னையவற்றை விடவும் சற்று மூற்கமாக

இனி யுத்த காலம்

ஒண்டிரண்டாய் உயிர்போகும்

உடமைகரியாகும்

எண்ணிக்கைபற்றிய கவலையன்றி

வேறேதும் இருக்கப்போவதில்லை

இழந்தவன் தவிர்த்து மற்றவர்க்கு

இனம்,மதம்,சாதி

இடங்களுக்கிடையே

சண்டைகள் நடக்கும்

சிலநூறுபேர் சாவார்

கர்த்தால் வரும்

கடையடைப்பு ,எரிப்பு

ஊர்வலங்கள் நிகழும்

பட்டினி மரணங்கள்

பாவையர் கதறல்கள்

பாரினை உலுக்கும் இருந்தும்

அரியணை தொடர்திடவேண்டி

அரவமின்றி இருப்பர்

அதிகாரத்தில் இருப்போர்

சண்டைகளுக்ககும், சத்தங்களுக்கும் நடுவே

சமாதானத்துக்கான போர்

சல்லடைபோட்டுத் தேடுகிறது

யுத்தத்தின் முடிவை

ஆட்சிக்கால முடிவுக்குள்

அடைந்துவிடவேண்டுமென்ற ஆவலோடு

இத்தனைக்கும் அப்பால்

உறங்கிக்கொண்டிருக்கிறது உண்மை

யுத்தத்தின் முடிவைக் கண்டவர்கள்

இறந்தவர்கள் மட்டுமே ……பிளேட்டோ

6. சுதந்திரம்....

விழிபிதுங்கி இருக்கிறேன் என்

எண்ணங்களை

எழுத்துருவாக்கும் வழி தெரியாது

சந்தங்கள், அர்த்தங்கள் தவிர்த்து

நிறைய

யோசிக்கவேண்டி இருக்கிறது

எழுதத் தொடங்கும் ஒவ்வொரு கணமும்

ஆயிரம் கண்கள் - என் எழுத்தை

வெறித்துப் பார்ப்பதாய் ஓர் பிரமை

எப்படி வரும்?

ஈட்டிகளுக்கு நடுவில்

இயல்பான கவிதை

நாட்டு நடப்புகளை

எழுதத் தொடங்கையில்

வரண்டு கொள்கிறது – நா

நெஞ்சில் பொறுத்திருக்கிறது

எழுதி முடித்ததும்

இருப்பேனா? என்ற பயம்

பக்கங்கள் நிரப்புவது தவிர்த்து

என்ன சாதித்துவிட முடியும்

இருப்பதை எழுதாமல்

வெறுத்துப் போய்

எழுந்து சென்றேன்

முடிந்திருந்தது பூசை

பூட்டிய கோயிலுக்குள் பிள்ளையார்

சலித்துப் போய் விசாரித்ததில்

திறந்திருந்தால்

திருடர் பயம் என்றார்கள்

கடவுளே என்று

எட்ட நின்று கும்பிடுகையில்

கைதாகி இருக்கும் ஒருவரிடம் - என்

ஆன்ம விடுதலைக்காய்

வேண்டுவது போல் இருக்கிறது.

எழுத்துக்கு மட்டுமல்ல –

என்னைப் பொறுத்தமட்டில்

எல்லாவற்றுக்கும்

தேவைப்படுவது போல் இருக்கிறது

சுதந்திரம்.

பகிர்கையில் குறைகிறது துன்பம்.

Edited by TJR

  • கருத்துக்கள உறவுகள்

வருக ஜீவன் வரவேற்கின்றேன். வலைப்பூவில் அறிமுகமாகி தற்போது கருத்துக்களத்திலும் தங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. காத்திருக்கும் பறவை , ஜீவநதி கவிதைகள் இன்னும் நிறைய வர வாழ்த்துக்கள்.

சாந்தி

  • கருத்துக்கள உறவுகள்

மரணிப்புக்கு

முன்னால் கிடைக்கும்

மறுபிறப்பு.

இன்று ஈழதமிழனிம் எதிர் கொண்டு நிற்பது இது

வாழ்த்துக்கள் ஜீவராஜ்

  • தொடங்கியவர்

நன்றி சாந்தி அவர்களே

உங்கள் வாழ்த்துக்கு...

கவிதை சூப்பர் ஜீவராஜ். இந்தக்கதை சரியாய் எனதும் கதைமாதிரி இருக்கிது. எனக்கு மீள்குடியமர்வு வெளிநாட்டில நடந்ததால அது பொருத்தம் இல்லை. ஆனால்.. மிச்சம் எல்லாம் எனது கதையாகவும் இருக்கிது. நிதர்சனமான வரிகள். பாராட்டுக்கள்.

இடப்பெயர்வு

அவசரத்தில் அவிழ்க்காமல்

விட்டு வந்த மாடு

பூட்டிய கூட்டுக்குள்

கோழியும் , குஞ்சும்

உலையில் புட்டு

வரும்போது அரையவியல்

எரிந்துபோயிருக்கும் இப்போது

யார் சோறுவைக்கப்போகிறார்கள்

பூனைக்கும் , நாய்க்கும்

வெட்டி அடுக்கியமாதிரி

வேலிக்கான கதிகால்கள்

வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள்

வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல்

பாழாய்ப்போன யுத்தம்

வீடுகூடப் பூட்டவில்லை

வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட

மிஞ்சி இருப்பது நான்மட்டும்தானே

உயிர் பிழைக்க நானும்

ஊர் பெயர்ந்தால்

வீடென்ன செய்யும்.

சிறைவைக்கப்பட்ட வீடு

நேற்றுப்போல் இருக்கிறது

நீண்டுவளர்ந்த தென்னைகள் நின்றணிசெய்த

பாதைவழியே தொடங்கிய எம்

நெடுந்தூரப் பயணம்.

உயிர்பிரிதல் பற்றிய உறுத்தலில்

ஊர்பற்றிய உணர்வலைகள்

ஒருவரிடமும் இல்லை அப்போது

இப்போதுதான்,

எஞ்சியவர்களில் மிஞ்சியவர் இதயங்களில்

ஊர்,

உடைந்துபோன வீடு,

இழந்த போன உறவுகள்,

அவர்தம் நினைவுகள்

என்றெல்லாம் ஏக்கமாய்.

ஒன்றிரண்டாய் குடிவந்து

ஊருக்கும் உயிர் வந்து

ஒருவருடமாகிறது

நாங்கள் மட்டும்

நடைப்பிணமாய்

நண்பர்கள் வீட்டில்

நாள்தோறும் எதிர்பார்ப்பு

நனைந்து போகிறது கண்ணீரில்

பேச்சுக்கள்,

பேச்சுக்கான பேச்சுக்கள்,

அறிக்கைகள்,ஆர்ப்பாட்டம்,வாக்

குறுதிகள்

சமாதானத்துக்கான யுத்தம்

என்றனைத்துக்கும் அப்பால்

சிறைவைக்கப்பட்டிக்கிறது என் வீடு

எப்போது உடையும்

உயர் பாதுகாப்பு வலயம்.

  • தொடங்கியவர்

இன்று ஈழதமிழனிம் எதிர் கொண்டு நிற்பது இது

வாழ்த்துக்கள் ஜீவராஜ்

நன்றி உங்கள் கருத்துரைக்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை ஜீவராஜ் <_<

  • தொடங்கியவர்

கவிதை சூப்பர் ஜீவராஜ். இந்தக்கதை சரியாய் எனதும் கதைமாதிரி இருக்கிது. எனக்கு மீள்குடியமர்வு வெளிநாட்டில நடந்ததால அது பொருத்தம் இல்லை. ஆனால்.. மிச்சம் எல்லாம் எனது கதையாகவும் இருக்கிது. நிதர்சனமான வரிகள். பாராட்டுக்கள்.

மிக்க நன்றி

///மிச்சம் எல்லாம் எனது கதையாகவும் இருக்கிது///

நம்பிக்கையோடு இருப்போம் நாளைநமதாகும்..

  • தொடங்கியவர்

நல்ல கவிதை ஜீவராஜ் :)

நன்றி ..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜீவராஜ் அருமையான கவிதையை தந்தமைக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் ஜீவன்,

காத்திருக்கும் பறவை, உண்மையிலேயே ஒரு பறவை நமது தேசத்தில் தனிமையில் அமைதியாக மரக்கிளையில் காத்துக்கிடப்பது போன்று மனக்கண்ணில் வந்து நிற்கிறது. அற்புதமான, நிஜமான உண்மையான சம்வங்களை தாஙகி நிற்கும் நல்ல படைப்பு.

நன்றி.

பென்மன்

என்.வை.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் எனக்கும் பழைய நினைவுகள்

நான் இப்போதும் இரை மீட்கும் கனவுகள்

கன்னத்தில் வழிந்த கண்ணீர் உப்புக் கரிக்கிறது

வெடிக்கும் இதயமோ மலைபோல் கனக்கிறது.

நல்ல கவிதை படைத்த ஜீவராஜ் நன்றி.

தொடர வாழ்த்துகிறேன்.

Edited by vanangaamudi

அன்று ஓருசிலர்தான் இழப்புகளை சந்தித்தார்கள் ஓருசிலர்தான் அழுதார்கள் இன்று உலகத்தமிழினமே அழுகின்றது காரணம் இழப்பு அனைவரையும் சூழ்ந்து நிற்கின்றது

நாள்தோறும் எதிர்பார்ப்பு

நனைந்து போகிறது கண்ணீரில்

  • தொடங்கியவர்

நன்றி ஜீவராஜ் அருமையான கவிதையை தந்தமைக்கு.

நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

இடப்பெயர்வின் வலியை அப்படியே சொன்ன கவிதை வரிகள் சூப்பர்

- தியா -

Edited by theeya

  • தொடங்கியவர்

அன்புடன் ஜீவன்,

காத்திருக்கும் பறவை, உண்மையிலேயே ஒரு பறவை நமது தேசத்தில் தனிமையில் அமைதியாக மரக்கிளையில் காத்துக்கிடப்பது போன்று மனக்கண்ணில் வந்து நிற்கிறது. அற்புதமான, நிஜமான உண்மையான சம்வங்களை தாஙகி நிற்கும் நல்ல படைப்பு.

நன்றி.

பென்மன்

என்.வை.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான மண் வாசனையை அள்ளித்தெளித்த வரிகள்.

  • தொடங்கியவர்

இதுதான் எனக்கும் பழைய நினைவுகள்

நான் இப்போதும் இரை மீட்கும் கனவுகள்

கன்னத்தில் வழிந்த கண்ணீர் உப்புக் கரிக்கிறது

வெடிக்கும் இதயமோ மலைபோல் கனக்கிறது.

நல்ல கவிதை படைத்த ஜீவராஜ் நன்றி.

தொடர வாழ்த்துகிறேன்.

நன்றி உங்கள் கருத்துரைக்கு...

  • தொடங்கியவர்

நன்றிகள் ...Paranee , sagevan , theeya உங்கள் கருத்துரைகளுக்கு

Edited by TJR

  • 1 month later...
  • தொடங்கியவர்

7. எல்லாமே முடிந்துபோயிருந்தது…..

எல்லாமே

முடிந்து போயிருந்தது

ஊர்த்தொடக்கமே

உதிரத்தால் உறைந்திருக்க

வாழ்விழந்த மக்களது

மரண ஓலம்

வழியெல்லாம் ஒலித்துக்கொண்டேயிருந்தது

நீண்டு வளர்ந்த எத்தனையோ

தென்னைகள் ஏற்றிருந்தன

‘செல்’ விழுப்புண்களை - இருந்து

இலக்கின்றி விழுந்தவையெல்லாம்

எதையாவது அழித்திருந்தன.

‘மாலா’ அக்காவின்

மண்வீட்டுக் கூரைபிளந்து

கொழுவி இருந்த ‘தொட்டில்க் குஞ்சு’

தரையில் சிதறியிருந்தது

அவசோகமாற்ற யாருக்கும் திரணியில்ல

கண்ணன் மாமா

விமலன் அத்தான்

பக்கத்து வீட்டுப் பரிமளம் புரிசன்

இன்னும் எத்தனையோ

இளசுகளெல்லாம் - கிராமத்தெல்லையிலேயே

எமலோகம் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்

பிணங்கள்கூட இன்னும் வயலில்தானாம்

சசி அக்கா

குண்டு மாமி

குஞ்சி மகள் என்று

நீண்ட வரிசைக்கப்பால்

என் கிராமமும் சேர்ந்து

கற்பிந்து போயிருந்தது.

பாதைகளில் ‘ரயர்’ குவியல்

வீடுகளில் இரத்தக்கறைகள்

வயல்வெளியில் பிணக்குவியல்

இன்னும் எல்லாம்

அப்படியே இருக்கிறது.

சிற்றூர் பிரளயத்தில்

நாங்கள் மட்டுமல்ல

கோணேசரும் தப்பவில்லை

கோயிலெல்லாம் குண்டுதுளைத்து

குற்றுயிராய் இருந்தது

எங்கோ ஏதோவோர்

சண்டை நடந்ததற்காய்

இங்குநாங்கள்

சாம்பலாக்கப்பட்டிருக்கிறோம

Edited by TJR

ஊர் அவலங்களை கவிதையாக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

சிறிய திருத்தம்...நீங்கள் ஈழத்திலேயே பிறந்து வளந்தவரெல்லோ....

சசி அக்கா

குண்டு மாமி

குஞ்சி மகள் என்று

நீண்ட வரிசைக்கப்பால்

என் கிராமமும் சேர்ந்து

கற்பிளந்து போயிருந்தது.

கற்பிழந்த...

  • 3 years later...

நன்றாக இருக்கிறது ... உங்கள் கவிதை எல்லாம் .... வாழ்த்துக்கள் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.