Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

BBC யின் இரட்டை அணுகுமுறை

Featured Replies

Civilians 'killed' in Sri Lanka

"Medical staff in Sri Lanka say at least 18 civilians have been killed as the military continues its offensive on the northern bases of Tamil Tiger rebels.

Hospital officials said the number killed in fighting around Kilinochchi and Mullaitivu could be much higher."

The military said Mullaitivu - the last major rebel stronghold - was now surrounded, but it denied rebel claims that civilians came under attack.

A military spokesman told the BBC that the allegation was propaganda

இப்படியான BBC யின் இரட்டைத்தனமான செய்கைகளை யாராவது சுட்டிக்காட்ட முன்வருவீர்களா..

Link: http://news.bbc.co.uk/2/hi/south_asia/7836011.stm

Edited by Yaalpaanathan

இதில என்ன இரட்டை அணுகுமுறை?

ஒரு நிகழ்வு பற்றி சர்ச்சையில் உள்ள 2 (2 parties in conflict) தரப்பின் நிலைப்பாட்டையும் சொல்கிறார்கள்.

பிபிசி தமிழரின் ஊடகம் அல்ல தனியே தமிழரது நிலைப்பாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து சிறீலங்காவின் பிரச்சாரத்தை தோலுரிப்பதற்கு.

-1- தமிழரின் நலன்களை உலகத்திற்கு முழங்க தமிழர்கள் ஊடகத்துறையில் முதலீடு செய்ய வேணும் (பொருளாதார துறைசார் மனிதவள) ரீதியில்.

-2- சர்வதேசத்திற்கும் ஊடகங்களிற்கு தமிழரின் அவலங்கள் அறிவிக்கப்படும் பொழுது அது நம்பிக்கையான முறையில் விபரங்கள் ஆதாரங்களுடன் தரமாக அறிவிக்கப்பட வேண்டியது தமிழரின் பொறுப்பு கடமை. இங்கு consistency முக்கியம். அத்தோடு presentation முக்கியம். யாருக்கும் எமது அவலங்கள் பற்றி வலிய வந்து கேள்விகள் கேட்டு தகவல்கள் விபரங்களை கிண்டி எடுத்து உலகிற்கு அறிவிக்க வேண்டி அவசியம் மற்றவருக்கு இல்லை. எமது எதிரியின் பிரச்சாரத்தை முறையடிக்க வேண்டி அவசியம் வேறு யாருக்கும் இல்லை..

நிழல் அரசு நடைமுறை அரசு இருக்கு தனிநாடு வேணும் தனிநாட்டை அங்கீகரி என்பவர்கள் தமது நிலைப்பாட்டை நலன்களை உலக அரங்கில் present பண்ண வேண்டிய defend பண்ண வேண்டிய பொறுப்பையும் திறமைகளையும் தன்னகத்தே பெற்றுக் கொள்ள வேண்டும். தனிநாடு உருவாக்குவது ஒண்டும் மற்றவரின் charity இல் அல்ல.

Edited by kurukaalapoovan

நெடுக்கு சொல்வது நூறுவீதம் சரி

1- தமிழரின் நலன்களை உலகத்திற்கு முழங்க தமிழர்கள் ஊடகத்துறையில் முதலீடு செய்ய வேணும் (பொருளாதார துறைசார் மனிதவள) ரீதியில்.

௨- சர்வதேசத்திற்கும் ஊடகங்களிற்கு தமிழரின் அவலங்கள் அறிவிக்கப்படும் பொழுது அது நம்பிக்கையான முறையில் விபரங்கள் ஆதாரங்களுடன் தரமாக அறிவிக்கப்பட வேண்டியது தமிழரின் பொறுப்பு கடமை. இங்கு cஒன்சிச்டென்cய் முக்கியம். அத்தோடு ப்ரெசென்டடிஒன் முக்கியம். யாருக்கும் எமது அவலங்கள் பற்றி வலிய வந்து கேள்விகள் கேட்டு தகவல்கள் விபரங்களை கிண்டி எடுத்து உலகிற்கு அறிவிக்க வேண்டி அவசியம் இல்லை. எமது எதிரியின் பிரச்சாரத்தை முறையடிக்க வேண்டி அவசியம் வேறு யாருக்கும் இல்லை..

நிழல் அரசு நடைமுறை அரசு இருக்கு தனிநாடு வேணும் தனிநாட்டை அங்கீகரி என்பவர்கள் தமது நிலைப்பாட்டை நலன்களை உலக அரங்கில் ப்ரெசென்ட் பண்ண வேண்டிய டெfஎன்ட் பண்ண வேண்டிய பொறுப்பையும் திறமைகளையும் தன்னகத்தே பெற்றுக் கொள்ள வேண்டும். தனிநாடு உருவாக்குவது ஒண்டும் மற்றவரின் சரிட்ய் இல் அல்ல.

பீபீசியின் ஒலிபரப்புகள் சிறீலங்காவில் ஒலி வழி தடைசெய்யப்படுகின்றன.

யாழ்பாணத்தான் உங்களைப் பொன்றவர்களது எண்ணங்களால்

பீபீசி வழி உலகத்துக்கு செல்லும் கொஞ்ச நஞ்ச செய்தி கூட நின்றுவிடுமோ என பயமாக இருக்கிறது?

எனவே அவதானமாக இருப்போம்.

அவர்கள் அனைத்து தரப்பு செய்திகளையும் தருகிறார்கள். அதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ள பகுத்தறிவு தேவை.

இரு தரப்பு வாதங்களை அல்லது செய்திகளை கொடுப்பது ஒரு பொது ஊடகத்தின் நியதி.

உதாரணத்துக்கு கமாஸ் மற்றும் இஸ்ரேல் மோதல் குறித்த இரு பக்க செய்திகளை நோக்கினால் நாம் உணர்ச்சிவசப்படப்படமாட்டோம

Edited by Thalaivan

தலைவனின் கருத்து மிகச்சரி.. புலம் பெயர்மக்களின் பரப்புரையில் உள்ள தவறுகளும் பலவீனங்களும் இக்கணம் தொடக்கம் களையப்பட்டு முடிந்தவைகளிலிருந்து திருந்தி நல்ல பலன் கிடைக்க வழி செய்வோம் எதிர்காலத்திற்கு... இதுவே ஒரு எமக்கு தேவை....உலகமெல்லாம் புலம் பெயர் ஈழத் தமிழர்கள் பரந்து வாழ்ந்தாலும் : வாழும் நாடுகளில் உள்ள மொழி அறிவை அம்மக்கள் பெற்றிருந்தாலும்

அந்த புலம் பெயர் மக்கள் ஊடாக அந்தந்த நாட்டு அரசுகளோடோ அல்லது அமைப்புகளோடோ அல்லது ஊடகங்களோடோ

உலக அரங்குக்கு நமது பிரச்சனைகளை முறையாக கொண்டு வர எந்த பணியையும் நாம் முன்னெடுத்து செய்யவில்லை.

அதனால் இன்று பாலஸ்தீனம் : ஆபிரிக்கா போன்ற நாடுகளின் பிரச்சனைகள் குறித்த அரசியல் தெளிவு அளவு கூட

நம் பிரச்சனை குறித்து உலகத்துக்கு தெரியவராமல் போய்விட்டது.

ஏதோ அங்கே சண்டை நடக்கிறது. பலர் சாகிறார்கள். பாவம்.

இதைத்தவிர அநேகமான உலகத்தவருக்கு என்ன பிரச்சனை அங்கே என்றே தெளிவில்லை.?

ஆகக் குறைந்தது பக்கத்து நாட்டு இந்திய தமிழருக்குக் கூட சரியான தெளிவு இருக்குமா என்ற சந்தேகம்

நாம பிழைக்கப் போனவங்க. நமக்கு எதுக்கு தனி நாடு என்பதிலேயே இது புரிகிறது?

ஏதோ நமது கட்சியும் நடிகர்களும் போராட்டம் நடத்துகிறார்கள் அதற்கு நாமும் போகவேணும் என்பதையே காணமுடிகிறது.

நமது பிரச்சனையை சொல்ல நமக்கே வைகோவும் : திருமாவும் : ராமதாசும் : சீமானும் தேவைப்படுகின்றனர்?

நமது பிரச்சனையை பேச நம்மில் அதுபோல் இன்று யார் இருக்கிறார்கள்?

கூட்டங்களை நடத்தி : நம்மவரை அழைத்து : நம்மவரிடமே நமது வீரத்தை காட்டுவதற்கு நாம் நமது மேடைகளை பயன்படுத்தியுள்ளோம்.

அரசியல்வாதிகள் போல் ஆட்களை கூட்டத்துக்கு அழைத்து படம் காட்டியுள்ளோம்.

இதைத்தவிர வேறு எதை செய்துள்ளோம்?.

பணம் சேர்ப்பது மட்டும் முக்கியமல்ல. அதற்கு மேலே பல தேவைகளை செய்யவேண்டியுள்ளது.

அதை நாம் செய்ய நினைக்கவே இல்லை.

பாலஸ்தீன பிரச்சனை குறித்து உலகம் பேசுகிறது. அங்கே யுத்தநிறுத்தத்தை கெண்டுவர உலகம் அழுத்தங்களை கொடுக்கிறது. நமக்காக தமிழ்நாட்டில் வாழும் ஒரு சிலரைத்தவிர யாரும் இல்லாத அநாதைகளாகிவிட்டோம்.

புலம்பெயர் நாடுகளில் இருப்போரில் பலர் தம்மை வளர்த்துக்கொள்ள போராட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்களே தவிர

போராட்டத்தை வளர்க்க தம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்வில்லை என்பது மிக மிக வேதனையான உண்மை.

இதில் ஒருசிலர் விதிவிலக்காககலாம்.

Edited by KUGGOO

  • கருத்துக்கள உறவுகள்

பீபீசியின் ஒலிபரப்புகள் சிறீலங்காவில் ஒலி வழி தடைசெய்யப்படுகின்றன.

யாழ்பாணத்தான் உங்களைப் பொன்றவர்களது எண்ணங்களால்

பீபீசி வழி உலகத்துக்கு செல்லும் கொஞ்ச நஞ்ச செய்தி கூட நின்றுவிடுமோ என பயமாக இருக்கிறது?

எனவே அவதானமாக இருப்போம்.

அவர்கள் அனைத்து தரப்பு செய்திகளையும் தருகிறார்கள். அதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ள பகுத்தறிவு தேவை.

இரு தரப்பு வாதங்களை அல்லது செய்திகளை கொடுப்பது ஒரு பொது ஊடகத்தின் நியதி.

உதாரணத்துக்கு கமாஸ் மற்றும் இஸ்ரேல் மோதல் குறித்த இரு பக்க செய்திகளை நோக்கினால் நாம் உணர்ச்சிவசப்படப்படமாட்டோம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

ஒரு விசயத்தை நாங்கள் எல்லோரும் நன்றாக புரிந்து கொள்ள வேணடும். எங்கள் தரப்பில் பரப்புரைகள் மேற்கொள்ளவில்லை என்பதை விட அப்பரப்புரைகளால் எதையும் சாதிக்க முடியவில்லை என்று சொல்லுவதே சாலச்சிறந்தது.

தமிழீழப்பிரச்சினை தெரியாத அரசியல் வாதிகள் கனடாவில் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். அதே போல தமிழீழப் பிரச்சினை பற்றி தெளிவும் அறியும் இல்லாத ஊடகங்களும் இல்லை. ஆனால் அவர்கள் நமக்காக அல்ல நமது செய்திளை வெளிக்கொண்டு வருவது என்பது இதுவரை சாத்தியப்படவில்லை.

ஒரு கிளைமோர் தாக்குதலில் 15 இராணுவம் பலியாகும் போது பிரசுரமாகும் செய்தி இத்தனை ஆயிரம் மக்களின் அவலத்துக்காக வரவில்லை. நாம் ஒன்று பட்டிருக்கின்றோம்.

அதை விட நமக்குள் மேடை போட்டு பேசுவதில் எந்த தப்பும் இல்லை. நமக்குள் பல்லாயிரம் மக்கள் அரசியல் தெளிவின்றி, ஆயிரம் கேள்விக்கனைகளோடு இருக்கின்றனர். அவர்களுக்கு விளக்க வேண்டியதும் எமது கடமையே!

எம் மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை ஒன்று உண்டு. அதை தவறென்று சொல்லவில்லை நிதர்சன்.

அதற்காகவே இணைந்த மக்கள் இருக்கிறார்கள்.

பல வருடங்களாக கிளிநொச்சியை நிர்வாக தலை நகராக வைத்து ஆட்சி செய்துள்ளோம்.

தமிழ் மக்கள் மட்டுமல்ல உலகமே இதை தெரிந்தே வைத்திருந்தது.

ஆனால் ஒரு விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை

எப்போதும் ஏனைய நாடுகளிடம் பரப்புரை செய்ய வேண்டியதும் அவர்களது நன்மதிப்பை பெறவேண்டியதும்

நியாயங்களை எடுத்துரைக்க வேண்டியதுமான கடமைப்பாடு நம் தலைவர்களுக்கு உண்டு.

அது சரியாக கொண்டு வரப்படவில்லை.

செப்டம்பர் 11 க்கு பின்னர் உலக பார்வை திசை மாறியது.

விடுதலைப் போரா அல்லது பயங்கரவாதமா?

இரண்டுமே ஒன்று என்ற நிலைப்பாட்டுக்கு உலகம் தள்ளப்பட்டது.

அதன் பின்னராவது நமது வழியில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாம்.

எங்கோ வெற்றிடம் ..... எல்லாத்துக்கும் முடிவு வரும் என பொய் இணைய பரப்புரைகளை நம்பி

தவறான நம்பிக்கைகளை உருவாக்கியது நமக்கு தவறான முடிவுகளை தந்திருக்கிறது.

பலர் தம்மை காத்துக் கொள்ள

அடுத்தவனை துரோகியாகவும் எதிரியாகவும் சோடித்து

தன்னை வளர்துக் கொண்டான்.

இது நம் முன் தெரியும் நிஜம்.

அண்மையில் நான் ஒரு மாற்று இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன்.

அவர் சொன்னார்

எதிரிகள் முன் நான் புலி

ஆனால் புலிக்கு முன்னால் நான் எதிரி

வன்னியில் ஏதாவது ஒரு புதுமை நடந்தால் மகிழ்வாக இருக்கும்.

நாங்கள் வெளிநாடுகளுக்கு வந்துவிட்டோம்.

அங்குள்ளவர் நிலையை நினைத்தால் தூக்கம் வரவில்லை

அதேநேரம்

விடுதலைப்புலிகளது ஒரு ஆதரவாளர்

தனது குழந்தையின் முதலாவது பிறந்த தினத்துக்கு வருமாறு

அழைப்பு விடுத்ததாக மற்றொரு நண்பர் சொன்னார்.

(இவர்களும் என் நண்பர்கள்தான்)

இதயம் சற்று இறுகி போனதை உணர்ந்தேன்.

இங்கே ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான தமிழ் மக்கள் கலங்குகின்றனர்.

அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பேச அஞ்சுகிறார்கள்.

அல்லது ஒதுங்கிச் செல்கிறார்கள்.

இப்போதும் சிந்திக்க வேண்டியது அதுவல்ல

நாம் முட்டாள் என அரசை நிர்மாணிக்க கொண்டு வந்த ஒருவர் அதாவது

வெற்றியின் விழிம்பில் நிற்கும் ராஜபக்ஸ

உலக நாடுகளிடம்

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் எமக்கு உதவ பரப்புரை செய்யுங்கள் என்று

தமது வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு சற்று முன்னர் பணித்திருப்பது

எதைக் காட்டுகிறது என்பதை நான் சொல்லி யாரையும் உணரவைக்க வேண்டியதில்லை.

பெப்பே கதைதான் ஞாபகத்துக்கு வந்து உறுத்துகிறது.

நன்றி sagevan

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் நான் ஒரு மாற்று இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன்.

அவர் சொன்னார்

எதிரிகள் முன் நான் புலி

ஆனால் புலிக்கு முன்னால் நான் எதிரி

வன்னியில் ஏதாவது ஒரு புதுமை நடந்தால் மகிழ்வாக இருக்கும்.

நாங்கள் வெளிநாடுகளுக்கு வந்துவிட்டோம்.

அங்குள்ளவர் நிலையை நினைத்தால் தூக்கம் வரவில்லை

என்னையா மாற்றுக்கருத்து?.

எல்லோரும் ஒரே குடையின் கீழ் நின்று எமது அவலத்தை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

என்னையா மாற்றுக்கருத்து?.

எல்லோரும் ஒரே குடையின் கீழ் நின்று எமது அவலத்தை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இது ஒரு வகை வியாதி... புலிகாய்ச்சல் எண்று சொல்லலாம்... மாற்று இயக்க உறுப்பினர் மக்களுக்காக என்னதை கிளித்து இருப்பார்... பாசிசம் பணியாரம் எண்டு நாளை கடத்தினதை விட...

உவையை விட ஏதும் செய்யாமல் அக்கறையே இல்லைமல் நேரம் போக்க ரீவி பாக்கும் மக்கள் எவ்வளவோ பறவாய் இல்லை...

Edited by தயா

என்னையா மாற்றுக்கருத்து?.

எல்லோரும் ஒரே குடையின் கீழ் நின்று எமது அவலத்தை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

ஏனைய இயக்கங்கள் மாற்றுக் கருத்துக் கொண்டதால்தானே கொல்லபட்டார்கள்?

வேறு என்ன காரணம் சொல்லுங்கள்?

துரோகி...... அது இது என்று சொன்னதை விடவா?

இது ஒரு வகை வியாதி... புலிகாய்ச்சல் எண்று சொல்லலாம்... மாற்று இயக்க உறுப்பினர் மக்களுக்காக என்னதை கிளித்து இருப்பார்... பாசிசம் பணியாரம் எண்டு நாளை கடத்தினதை விட...

உவையை விட ஏதும் செய்யாமல் அக்கறையே இல்லைமல் நேரம் போக்க ரீவி பாக்கும் மக்கள் எவ்வளவோ பறவாய் இல்லை...

நாம் இன்னும் உலகம் புரியாமல் பேசுவது வேதனைதான்.

இன்றைக்கு யோசிக்கிற குடை அன்றைக்கே புரிந்திருந்தால் எவ்வளவோ நல்லாயிருந்துருக்குமே?

என்று மனது வெதும்புகிறது.

என்னையா மாற்றுக்கருத்து?.

எல்லோரும் ஒரே குடையின் கீழ் நின்று எமது அவலத்தை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

உங்கடை ஒரே குடையிக்க கூப்பிட்டு போட்டு சூரியதேவன் புராணம் முருகனே வடிவானவன் எண்டு தேவாரம் எல்லாம் பாடச் சொல்ல மாட்டியள் தானே? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

ஒரு விசயத்தை நாங்கள் எல்லோரும் நன்றாக புரிந்து கொள்ள வேணடும். எங்கள் தரப்பில் பரப்புரைகள் மேற்கொள்ளவில்லை என்பதை விட அப்பரப்புரைகளால் எதையும் சாதிக்க முடியவில்லை என்று சொல்லுவதே சாலச்சிறந்தது.

தமிழீழப்பிரச்சினை தெரியாத அரசியல் வாதிகள் கனடாவில் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். அதே போல தமிழீழப் பிரச்சினை பற்றி தெளிவும் அறியும் இல்லாத ஊடகங்களும் இல்லை. ஆனால் அவர்கள் நமக்காக அல்ல நமது செய்திளை வெளிக்கொண்டு வருவது என்பது இதுவரை சாத்தியப்படவில்லை.

ஒரு கிளைமோர் தாக்குதலில் 15 இராணுவம் பலியாகும் போது பிரசுரமாகும் செய்தி இத்தனை ஆயிரம் மக்களின் அவலத்துக்காக வரவில்லை. நாம் ஒன்று பட்டிருக்கின்றோம்.

அதை விட நமக்குள் மேடை போட்டு பேசுவதில் எந்த தப்பும் இல்லை. நமக்குள் பல்லாயிரம் மக்கள் அரசியல் தெளிவின்றி, ஆயிரம் கேள்விக்கனைகளோடு இருக்கின்றனர். அவர்களுக்கு விளக்க வேண்டியதும் எமது கடமையே!

இதைத்தான் நான் ஏற்கெனவே வேறொரு பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். அதாவது நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஒவ்வொரு விழிப்புக்குக்குழுக்களை உருவாக்கி எமது மக்களிற்கு தனிப்பட்ட முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

எங்களது இனத்தின் நீண்டகால தேவையினை தெளிவுபடுத்தவேண்டும், ஆனால் எங்களது அணுகுமுறையில் அனுபவமும், மாற்றமும் அவசியம் தேவை.

இதில் முக்கியமாக விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ள நாடுகளின் சட்டத்தினால் எமது மக்களுக்கு ஏற்படும் சாதகம், பாதகம் இரண்டையும் தெளிவுபடுத்தவேண்டும்.

எமது தலைமை விடுதலைப்புலிகள்தான் என்றும், எங்களது பிரச்சினைக்குரிய தீர்க்கமான தீர்வு தனியரசு தான் என்பதையும் மக்களின் மனங்களில் நிலைநிறுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் மக்க‌ளை இவ்வாறு பிரிக்க‌லாம்.

புலிகளுக்கும் த‌மிழ் தேசியத்திற்கும் ஆத‌ர‌வானவர்க‌ள்.

தாயகத்திலிருந்து வந்த‌விட‌ன் தான், தன் குடும்ப‌ம் என்று இருப்ப‌வ‌ர்க‌ள் இவர்க‌ள் ஒன்றீலும் த‌லையிட‌ மாட்டார்க‌ள்.இவர்களை விழிப்புணர்வு மூலம் தேசியத்திற்கு ஆதரவாக மாற்றுவது.

மாற்றுக் கருத்து தோழர்க‌ள் இவர்க‌ள் பெரும்பாலும் புலிகளால் பாதிக்கப்பட்டவர்க‌ள் சொந்த‌ சுய நலத்திற்காக புலிகளை பலி வாங்க வேண்டும் என்ற‌ கார‌ணத்தால் த‌மிழ் தேசியத்தை எதிர்ப்பவ‌ர்க‌ள்.இவ‌ர்க‌ளை மாற்றுவது கஸ்ட‌ம் என்றாலும் முயற்சி செய்ய வேண்டும்.

இந்;தக் குடைக்கள்ள வந்திருந்து கொண்டு, அங்கால கடிதம் எழுதிப்போடுற வேலையச் செய்யமாட்டீங்களென்றால் வாங்க. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்;தக் குடைக்கள்ள வந்திருந்து கொண்டு, அங்கால கடிதம் எழுதிப்போடுற வேலையச் செய்யமாட்டீங்களென்றால் வாங்க. :o

நான் ஏற்கனவே வந்து விட்டேன். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் மக்க‌ளை இவ்வாறு பிரிக்க‌லாம்.

புலிகளுக்கும் த‌மிழ் தேசியத்திற்கும் ஆத‌ர‌வானவர்க‌ள்.

தாயகத்திலிருந்து வந்த‌விட‌ன் தான், தன் குடும்ப‌ம் என்று இருப்ப‌வ‌ர்க‌ள் இவர்க‌ள் ஒன்றீலும் த‌லையிட‌ மாட்டார்க‌ள்.இவர்களை விழிப்புணர்வு மூலம் தேசியத்திற்கு ஆதரவாக மாற்றுவது.

மாற்றுக் கருத்து தோழர்க‌ள் இவர்க‌ள் பெரும்பாலும் புலிகளால் பாதிக்கப்பட்டவர்க‌ள் சொந்த‌ சுய நலத்திற்காக புலிகளை பலி வாங்க வேண்டும் என்ற‌ கார‌ணத்தால் த‌மிழ் தேசியத்தை எதிர்ப்பவ‌ர்க‌ள்.இவ‌ர்க‌ளை மாற்றுவது கஸ்ட‌ம் என்றாலும் முயற்சி செய்ய வேண்டும்.

எனக்கு தெரிந்து புலிகளின் பின்வாங்கலால் நடந்த முக்கியநிகழ்வாக

நீங்கள் குறிப்பிடும் இப்பகுதியினர் மும்மரமாக எமக்காக வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர்

இப்போது அவர்களுக்கும் புரிகிறது

1-புலிகள் இருக்கும் வரையே அவர்கட்கு வாழ்வு என்பதும்

2-புலிகள் இல்லையென்றால் தமிழனுக்கு எதுவுமில்லை என்பதும்

3-ஸ்ரீலங்கா பூரண பௌத்த சிங்கள நாடாகும் என்பதும்

நேற்று பரீசில் நடந்த பேரணியில் பலர் எம்முடன் நின்றனர்

உங்கடை ஒரே குடையிக்க கூப்பிட்டு போட்டு சூரியதேவன் புராணம் முருகனே வடிவானவன் எண்டு தேவாரம் எல்லாம் பாடச் சொல்ல மாட்டியள் தானே? :wub:

திருந்தவே மாட்டியளே???????

வேறுயாராவது இருந்தால் அறிமுகப்படுத்தலாமே........

எனக்கு தெரிந்து புலிகளின் பின்வாங்கலால் நடந்த முக்கியநிகழ்வாக

நீங்கள் குறிப்பிடும் இப்பகுதியினர் மும்மரமாக எமக்காக வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர்

இப்போது அவர்களுக்கும் புரிகிறது

1-புலிகள் இருக்கும் வரையே அவர்கட்கு வாழ்வு என்பதும்

2-புலிகள் இல்லையென்றால் தமிழனுக்கு எதுவுமில்லை என்பதும்

3-ஸ்ரீலங்கா பூரண பௌத்த சிங்கள நாடாகும் என்பதும்

நேற்று பரீசில் நடந்த பேரணியில் பலர் எம்முடன் நின்றனர்

இன்னும் நாம் திருந்தவில்லை. இன்னும் காலம் எடுக்கும்.

மன்னிக்கவும் சொல்வதற்கு

வெளியில் நிற்பவனை வா என்று அழைக்கிறோம்

வராதவனை விட்டு விடுங்கள்

வந்தவனையும் வாய் கூசாமல் திட்டுகிறோம்?

நாம் தமிழராக ஒன்றுபடுவதை விடுத்து

தமிழரை எதிரிகளாக்குவதிலேயே மும்முரமாக இருக்கிறோம்.

பொது எதிரிக்கு அதிக நலன்களை நாம்தான் முன்னின்று செய்துள்ளோம்.

தொடர்ந்தும்.....

இன்று அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஒபாவின் பேச்சிலிருந்து சில துளிகள்

அனைவரையும் ஒன்றிணைக்கும் மந்திரம்

obama-200_9.jpg

""இன்றைக்கு நம் முன்னால் இருக்கின்ற சவால்கள் அத்தனையும் நிஜம்.

நம்மை அச்சுறுத்தும் சவால்கள் பல.

அவைகளை ஒரு குறுகிய காலத்தில் வெல்லுவது கடினம்.

ஆனால், இது அமெரிக்கா. சவால்கள் தோற்கடிக்கப்படும்

"இந்த அரசு பெரியதா சிறியதா என்பது முக்கியமல்ல.

இந்த அரசு செயல் படுமா?

இதுதான் இன்று உள்ள மிக முக்கியமான கேள்வி.

இந்த அரசு நல்ல சம்பளத்துடன் வேலை தந்து குடும்பங்களை வாழ வைக்குமா?

வயதான காலத்தில் நல்ல ஓய்வூதியம் தருமா?"

இந்த கேள்விகளுக்கு விடைதருவதுதான் நமது செயல் திட்டம்

அமெரிக்காவை பொறுத்த வரையில் உலகிலுள்ள சகல நாடுகளுக்கும் நண்பன் என்பதுடன்

நாமும் அவர்களுக்கு துணையாகவே இருப்போம்"

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஒபாவின் பேச்சிலிருந்து சில துளிகள்

அனைவரையும் ஒன்றிணைக்கும் மந்திரம்

obama-200_9.jpg

[

அமெரிக்காவை பொறுத்த வரையில் உலகிலுள்ள சகல நாடுகளுக்கும் நண்பன் என்பதுடன்

நாமும் அவர்களுக்கு துணையாகவே இருப்போம்"

:wub: இப்போ நீங்கள் சொல்ல வேனும், நாங்கள் கேட்க வேனும் அதுதான் விதி. :o

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் நிற்பவனை வா என்று அழைக்கிறோம்

வராதவனை விட்டு விடுங்கள்

வந்தவனையும் வாய் கூசாமல் திட்டுகிறோம்?

முன்பு வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்த பலர் இப்பொழுது ஒன்றாக ஒரே குரல் கொடுக்கவில்லையா?. புளட்டில் இருந்த மாமனிதர் தராக்கி, ஈபிஆர் எல் எவ்வைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோவில் சிறிகாந்தலிங்கம், அடைக்கலநாதன்... போன்றவர்கள் இப்பொழுது ஒன்றாகக் குரல் கொடுக்கிறார்கள் தானே. அவர்களை யார் வாய் கூசாமல் திட்டுகிறார்கள்.

வன்னியில் எமது மக்கள் கொடிய அரக்கன் இராசபக்சையினால் தினமும் கொல்லப்பட்டிருக்கும் போது, அது பற்றிக் கவலைப்படாமல் புலி அழிந்தால் நல்லது என்ற வகையில் சிங்களம் செய்வது சரி என்று சில ஈனப்பிறவிகள் இப்பொழுதும் கதைக்கிறார்களே. இதுவா மாற்றுக் கருத்து?

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கு தெறிந்து என்னத்தை பெரிசாக செய்ய போகினம்,பலஸ்தீனரின் பிரச்சனையை காசா பிரச்சனையாக சுருக்கி,பலஸ்தீன விடுதலை இயக்கத்தை (பி.எல்.ஒ) இல்லாது ஒழித்து.,காசவையும் கமாசையும் பிரபல மாக்கி முன்னிலைப்படுத்தினது இவர்கள் செய்த வேலை.

அதே மாதிரி கிழக்கே கருணாவையும்,வடக்கே டக்கிளசையும் பிரபலப்படுத்தி. ஈழத்தையும் அதற்காக போராடும் புலிகள் இயக்கத்தயும் ஒரம் கட்டுவதற்க்கு இவர்கள் நல்லா பாடுப்டுகிறார்கள் ...பி.பி.சி......

பிபிசி இக்கு ஈழத்தையோ ஈழத்திற்காக உண்மையாகப் போராடும் புலிகளை மாத்திரம் முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? கருணாவையும் டக்கிளசையும் பின்னுக்கு தள்ளி புலிகளைப் பிரபலப்படுத்த பிபிசி என்ன தமிழரின் முதலீட்டிலும் வரியிலும் விளம்பரப் பணத்திலும் இயங்கும் ஊடகமா?

உலகம் பலஸ்தீனப்பிரச்சனையை காசாப்பிரச்சனையாக சுருக்கிப் போட்டுது பில்ஓ அய் இல்லாது அழித்துப்போட்டுது. ஆனபடியால் இந்த உலகத்துக்கு அறிவித்து பயன் இல்லை வேறு உலகத்துக்கு ஒட்டு மொத்தமாக குடி பெயர்ந்து போய் தமிழீழத்தை அமைத்துக் கொள்வமா?

எதுக் எடுத்தாலும் உலகம் முழுக்க எங்களுக்கு எதிராக நிக்குது உலகம் முழுக்க எங்களை அழிக்க நிக்குது எண்டு சலிச்சுக் கொள்வதைப் பார்த்தால் வேறு கிரகத்தில இடம் பாத்து வைச்சிட்டு இருக்கிறவை மாதிரிக் கிடக்கு. இல்லாட்டி புலம்பெயர்ந்த நாடுகளில இருக்கிறவைக்கு வன்னியில் இருப்பவர்களின் உயிர் ஊசலாடும் நிலை இல்லைத்தானே. முன்பு புலிகள் இந்தா அந்தா எந்த நேரமும் பாயலாம் பொறி வைச்சிருக்கிறார்கள் நறுக்கப் போகிறார்கள் புடுங்கப்போகிறார்கள் எண்ட மாதிரி முழு உலகத்தையும் சலித்துக் கொள்வது தற்காலத்திற்கு ஏற்ற பொழுது போக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி இக்கு ஈழத்தையோ ஈழத்திற்காக உண்மையாகப் போராடும் புலிகளை மாத்திரம் முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? கருணாவையும் டக்கிளசையும் பின்னுக்கு தள்ளி புலிகளைப் பிரபலப்படுத்த பிபிசி என்ன தமிழரின் முதலீட்டிலும் வரியிலும் விளம்பரப் பணத்திலும் இயங்கும் ஊடகமா?

உலகம் பலஸ்தீனப்பிரச்சனையை காசாப்பிரச்சனையாக சுருக்கிப் போட்டுது பில்ஓ அய் இல்லாது அழித்துப்போட்டுது. ஆனபடியால் இந்த உலகத்துக்கு அறிவித்து பயன் இல்லை வேறு உலகத்துக்கு ஒட்டு மொத்தமாக குடி பெயர்ந்து போய் தமிழீழத்தை அமைத்துக் கொள்வமா?

நடு நிலமை யாக இருக்கலாமல்லோ? துரையப்பாவுக்கு வெடி விழுந்த நாள் முதலாய் பெடியள் எதாவது செய்வாங்கள் என்ற ஆசையும் ,தேவையும் வந்திட்டுது.அதற்காக நான் கொடுத்த விலையிலும் பார்க்க சக உறவுகள் கொடுத்த விலை அதிகம் தான். ஆசைப்படுவதில் தப்பில்லைத்தானே.

பி. பி.சி தமிழ் ஒசையை பொறுத்தவரை இலங்கையை ஒரு சர்வதேச நடாக கண்டு கொள்வதில்லை ஏன்?இந்தியா வை சூழவுள்ள பாகிஸ்தான் ,பங்காளதேஷ், மாலைதீவு, நேபாளம் எல்லாம் சர்வதேச கண்ணொட்டத்திற்க்குள் வரும் ,.செய்தி வாசிப்பவர்கள் அதிகமாக இலங்கை செய்திகள், இந்தியா செய்திகளென்று சொன்னபின்பு இனி சர்வதேச செய்திகள் என்று வாசிப்பார்கள். தமிழர்கள் இருப்பதால் தான் என்று சொல்லமுடியாது காரணம் மலேசியாவிலும் தமிழர்கள் இருக்கினம் ஆனால் மலேசியாவை சர்வதேசம் என்றுதான் சொல்வார்கள்.

கருத்து விலங்கிட்டு மனித மனங்களை சிறை கொள்வது ஒரு நுட்பமான அடக்குமுறை யுக்தி.உலகெங்கும் அடக்குறையாளர்கள் இந்த்க் கருத்தாதிக்க யுக்தியையே கடைபிடிகின்றார்கள்.மனிதர்கள

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரி,டக்கிளஸ்,சித்தாத்தன் தமிழின தூரோகிகள்.அவர்கள் தங்கள் சுய லாப நோக்கிற்காக செயற்பட்டார்களே தவிர மக்கள் நலனுக்காக அல்ல ஆனால் சர்வதேச அரங்கில் அவர்களது பேச்சை தானே சர்வதேச சமூகம் கேட்கிறது.அவர்களை விடுங்கள்.

அவர்களை தவிர உள்ளூரிலும் புலத்திலிருக்கும் மாற்று இயக்கத்தை சேர்ந்த போராளிகள்.புலத்தில் அவர்கள் தான் தங்கள் சுய நலத்திற்காக புலிக்கெதிராக மிகப் பெரிய அளவு பிரச்சாரம் செய்கிறார்கள்.அவர்களது நோக்கம் அரசுக்கு ஆதரவு அளிப்பதை பார்க்கிலும் புலியெதிர்ப்பை மட்டும் நோக்காக கொண்டது.அவர்களை ஏன் எமக்கு ஆதரவாக மாற்ற முடியாது? போராட்டத்தின் நீண்ட கால நோக்கை அடிப்படையாக கொண்டு செயற்படுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.