Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம்!

Featured Replies

இலங்கை தமிழர் பிரச்சனையை காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக திசை திருப்பி விடுவதா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

.

இலங்கையில் போராளிகளுக்கு இடையே நடைபெற்ற சகோதர யுத்தம் எப்படி அவர்களை பலவீனப்படுத்தியதோ அதைப்போல இலங்கை தமிழர்களுக்காக வாதாடும் நமக்குள்ளே ஏற்படும் சகோதர யுத்தங்களும் மொத்த பிரச்சனையையும் சிதைத்து விடுகின்றன என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, திருமாவளவன் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பயணம் மேற்கொள்ள முடியாததற்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக இது ஏதோ இலங்கை தமிழரை பாதுகாக்கும் பிரச்சனை என்று இல்லாமல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டிருப்பதாக திருமாவளவனுக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று இம்மாதம் 12ந் தேதி என்னை வந்து பாமக தலைவர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் வீரமணி, மற்றும் திருமாவளவன் ஆகியோர் வந்து சந்தித்தனர்.

ஆனால் திடீரென என்னை கலந்து பேசாமல் திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதம் அறிவித்தார். உண்ணாவிரத பந்தலில் இலங்கை அரசைவிட இங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் தான் தமக்கு போராட்டம் என்பதுபோல விரிவுரைகள் ஆற்றிய தாக திருமாவளவனை முதல்வர் சாடியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சனையின் உயிரோட்டத்தை எப்படி அங்கே போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பலவீனப்படுத்தியதோ அதைப்போலவே இலங்கை தமிழர்களுக்காக வாதாடும் நமக்குள்ளும் ஏற்படும் சகோதர யுத்தங்கள் பிரச்சனையை மூளியாக்கி விடுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.

"எப்படியோ; மூவர் கூடி முதல்வருடன் பேசினோமே, அடுத்த நாளே, இப்போது உண்ணா நோன்பு அறிவிக்கிறோமே என்று கூட எண்ணாது அரசு பேருந்துகள் பல எரிக்கப்பட்டனவே இத்துணை அவசரத்துடன் இப்போது நிறுத்திக் கொண்டிருக்கிறோமே என்பதை சற்றுக்கூட சிந்திக்காமல் ""இலங்கை தேசியக்கொடி எரிப்பு'' என்று திருமாவளவன் அறிவித்திருப்பது ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை' என்றும் கருணாநிதி அந்த மடலில் தெரிவித்துள்ளார்.

மேலும், "முதலில் மூவரும் கலந்து யோசிப்போம் அதில் ஒரு முடிவெடுப்போம்'' என்பது பின்னர் தனித்தனியே முடிவெடுத்து அறிவிப்பது அதற்கேற்ப செயல்படுவது என்னையே இறுதியாகப் பழி கூறத் திட்டமிடுவது நல்ல அரசியல் தந்திரங்களாக இருக்கலாம்.

அதற்கு நான் ஒருவன் மயங்கி பலிக்கடா ஆகத் தயாராக இருக்கலாம். ஆனால் அறிஞர் அண்ணா வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப்போன இந்த இயக்கத்தை ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணை போக நான் தயாராக இல்லை!' என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

இதன் மூலம் திருமாவளவனின் இலங்கை கொடி எரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு கிடையாது என்பதை கருணாநிதி உணர்த்தியுள்ளார்.

http://www.tamilseythi.com/tamilnaadu/kala...2009-01-19.html

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் பதவிக்கு உலை வைத்தால் கோபம் வரமால் என்ன செய்யும்?

அது தானே... என்னடா இவருக்கும் ஞானம் பிறந்து விட்டது என ஏதோ ஆர்வத்தில் வந்து செய்தியை படித்தால் இதுவா விடயம்.

வீ‌ட்டு‌க்கு‌ப் போகவு‌ம் தயா‌ர்; கா‌ட்டு‌க்கு‌ப் போகவு‌ம் தயா‌ர்: கருணா‌நி‌தி

செ‌ன்னை : தமிழ் நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை கருணாநிதி நடத்த வேண்டும் என்பதையும், காங்கிரஸ் ஆட்சிக்கு இனி இங்கே இடமே இல்லை என்று சபதம் செய்வதையும், அப்படியொரு ஒட்டு மொத்தமான அராஜகப் புரட்சி மூலமாகவாவது, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட முடியாதா என்ற கவலை மிகுந்த ஆவலால் தானே தவிர வேறல்ல எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, கருணாநிதி வீட்டுக்குப் போகவும் தயார், தமிழர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக காட்டுக்குப் போகவும் தயார். அது இலை தழை நிறைக் காடாகவும் இருக்கலாம், அல்லால் இடு காடாகவும் இருக்கலாம், எதுவாயினும் ஏற்பதில் எனக்கொரு மகிழ்ச்சியே! எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று எழுதியுள்ள கடிதத்தில், 50 ஆண்டு கால வேதனை வரலாறு கொண்ட இலங்கைத் தமிழர் பிர‌ச்சனையில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தக் கருத்து என்றும், அதே நேரத்தில் தனித்தனி கட்சிகளின் அணுகுமுறை என்றும், பல்வேறு கோணங்களில் மக்களுக்கு திசைகள் அறிவிக்கப்பட்டு, அவர்களைத் திண்டாட்டத்திலும், திகைப்பிலும் தள்ளி விடப்படுகிற செயல்களுக்குப் பஞ்சமில்லாமலே நடைபெற்று வருகின்றன.

அறப்போரில் ஒரு அத்தியாயம் முடிவுற்றது

அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து அறவழியில் எத்தனை எழுச்சியைத் தமிழ் மக்கள் வாயிலாக உணர்த்த வேண்டமோ, அந்த வழிகளில் எல்லாம் உணர்த்தி விட்டு, பிரதமரையே சந்தித்து, வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை சென்று முயற்சி மேற்கொள்வது என்ற திட்டத்துடன் இந்த அறப்போரில் ஒரு அத்தியாயம் முடிவுற்றது.

ஆனால் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாததற்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இது ஏதோ இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கும் பிரச்சனை என்றில்லாமல், காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி, வெற்றி தோல்வி, ஆட்சி மாற்றம் என்பன போன்ற அரசியல் கட்சி தத்துவப் பிரச்சனைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் ஒரு சில தலைவர்கள் இணைத்துக் குழப்புவது, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பிரச்சனையை விட்டு, வெகு தொலைவு போய் விட்டதாகவே தெரிகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று வருவதற்கு இயலாத காரணம் எதுவும் இருந்தாலும் அதனையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கலாம். அல்லது எது தக்ககாலம், நேரம் என்பதையாவது எடுத்துரைத்திருக்கலாம். அப்படியெதுவும் நடைபெறாதது, மாநில அரசைப் பொறுத்தவரையில் வேதனையான நிலையாக உணரக் கூடியதுதான்.

இப்போது வெளியுறவுத்துறைச் செயலாளர் இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்துப்பேசி விட்டு வந்துள்ளார். அதன் விபரங்களும் சரியாக வெளிவரவில்லை. ஒரு வேளை பிறகு வரக்கூடும். கடந்த காலத்து ஜெயவர்த்தனே- ராஜீவ் ஒப்பந்தம் பரிசீலிக்கப்படலாம் என்பது போன்ற செய்திகள் உள்ளனவே தவிர, அது வரையில் போர் நிறுத்தம் என்று கூட அறிவிக்கப்படவில்லை.

போ‌ர் ‌நிறு‌த்த முய‌ற்‌சியை மே‌ற்கொ‌ள்வ‌தி‌ல் பெ‌ரிய தவ‌றி‌ல்லை

போர், சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் என்ற பெயரால் அப்பாவித் தமிழர்கள் அன்றாடம் அங்கே உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெயவர்த்தனே- ராஜீவ்காந்தி உடன்பாடு பற்றிப் பேசி முடிக்கிற வரையில் போர் நிறுத்தப்படுகிற முயற்சியை மேற்கொள்வதில் பெரிய தவறு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

அந்த ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களையும், உடன்பாடு பற்றிய எண்ணங்களையும், ஒப்புதலையும் இலங்கைத் தமிழர்கள் மீது இங்கிருந்து நாம் திணித்திடவும் முனைவதில்லை என்ற நிபந்தனையுடன் அணுகுவதே ஆரோக்யமானது மட்டுமல்ல, அமைதி வழியும், அமைதி நிலையும் இலங்கையில் "மறு பிறவி'' எடுப்பதற்கு ஏற்றதுமாகும். இது எப்படி உருவாகும்? எப்படித் தீர்வாகும் என்ற வினாக்களுக்கு விடை கிடைப்பதற்கு முன்னர் இப்போது நம்மைப் பொறுத்தவரையில் நமது தமிழ் மாநில அரசைப் பொறுத்தவரையில்- இதனை மையமாக வைத்து ஏதேனும் விஷப் பரிசோதனைகளில் இறங்கி இதனை வீழ்த்தி விட்டுத் தாங்கள் ஆட்சிக்கு வந்து விடலாமா என்றும் அவர்களோடு சேர்ந்து நாமும் பலன் பெற முடியுமா என்றும் சில மூளைகள் யோசனையில் ஈடுபட்டிருக்கின்றன.

அம்மையார் ஜெயலலிதாவின் அறிக்கைகளில் இந்த ஆண்டு முடிவதற்குள் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்றும், சட்டமன்றத்துக்கும் எப்படியாவது தேர்தல் வரவழைக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பம் என்றும், விரைவில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கும் அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருப்பதாக தனது தொண்டர்களுக்கு உறுதி அளிப்பது எதற்காக என்று எல்லோர்க்கும் புரியுமென நம்புகிறேன்.

மூன்றாவது முறையாக ஆட்சியை இழக்க நேரிடலா‌ம்

மாநிலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திட வேண்டிய கழக ஆட்சியை, இது போன்ற பிரச்சனைகளில் வன்முறை அராஜகம் போன்ற கிளர்ச்சிகளை உசுப்பி விட்டு, கலைத்து விடலாம் என்று அவர் கருதுகின்றார். அப்படிக் கலைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக, நாம் மூன்றாவது முறையாக ஆட்சியை இழக்க நேரிடலாம்.

திட்டமிட்டு, இந்த அம்மையார் நடத்திட முனையும் 'அரக்கு மாளிகை சதி'யை நாம் புரிந்து கொண்டுதானிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நாம் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜனவரி 12-ம் நாள் என்னிடம் விவரித்து முடிவெடுக்க வேண்டுமென்று என் வீட்டுக்கு வந்த டாக்டர். ராமதாசு, கி.வீரமணி, தொல். திருமாவளவன் ஆகிய மூவரும், 'முதல்வர் எடுக்கிற முடிவை ஏற்று அவ்வாறு திட்டம் வகுப்போம்'' என்று தான் உறுதி அளித்தனர்.

உடனடியாக டெல்லியுடன் பேசுமாறு வேண்டினர். நானும் அன்று திருமங்கலம் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைக் கூட கவனிக்க நேரமில்லை. அந்த மூவருடனும் அந்தச் சமயத்திலும் ஒரு மணி நேரம் என்கிற அளவுக்கு பேசி, அனுப்பி வைத்தேன். ஆனால் என்னைக் கலந்தே எதுவும் நடவடிக்கை என்று சென்றவர்கள், என்னைக் கலந்து பேசாமலே அந்த மூவரில் ஒருவர், நண்பர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதப் பந்தலில், சிங்கள அரசை விட இங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் தான் தமக்குப் போராட்டம் என்பது போல விரிவுரைகள் ஆற்றிக் கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உயிரோட்டத்தை எப்படி அங்கே போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பலவீனப்படுத்தியதோ, அதைப் போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடிடும் நமக்குள்ளேயும் ''சகோதர யுத்தங்கள்'' எல்லாம் மொத்தப் பிரச்சனையை மூளியாக்கி விடுகிற கதை நடப்பதற்குத்தான் காரணமாகி வருகின்றன.

எப்படியோ, மூவர் கூடி முதல்வருடன் பேசினோமே, அடுத்த நாளே, இப்போது உண்ணா நோன்பு அறிவிக்கிறோமே என்று கூட எண்ணாது, அரசு பேருந்துகள் பல எரிக்கப்பட்டனவே இத்துணை அவசரத்துடன், இப்போது நிறுத்திக் கொண்டிருக்கிறோமே என்பதை சற்றுக் கூட சிந்திக்காமல் 'இலங்கை தேசியக்கொடி எரிப்பு' என்று திருமாவளவன் அறிவித்திருப்பது ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அவருக்குப் புரிகிறதோ இல்லையோ, இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுகிறவர்களுக்கு ஒன்று புரிகிறது. தமிழ் நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை கருணாநிதி நடத்த வேண்டும் என்பதையும், காங்கிரஸ் ஆட்சிக்கு இனி இங்கே இடமே இல்லை என்று சபதம் செய்வதையும், அப்படியொரு ஒட்டு மொத்தமான அராஜகப் புரட்சி மூலமாகவாவது, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட முடியாதா என்ற கவலை மிகுந்த ஆவலால் தானே தவிர வேறல்ல உடன் பிறப்பே கேரளத்துமாவலி மன்னனை வீழ்த்தியோர் கதையை மறந்து விட முடியுமா?

காடாகவும் இருக்கலாம், இடு காடாகவும் இருக்கலாம்

கருணாநிதி வீட்டுக்குப் போகவும் தயார், தமிழர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக காட்டுக்குப் போகவும் தயார். அது இலை தழை நிறைக் காடாகவும் இருக்கலாம், அல்லால் இடு காடாகவும் இருக்கலாம், எதுவாயினும் ஏற்பதில் எனக்கொரு மகிழ்ச்சியே! அதுவும் என் நாட்டுக்காக- நண்பர்களினால் கிடைத்தால், இரட்டிப்பு மகிழ்ச்சியே!

முதலில் மூவரும் கலந்து யோசிப்போம்- அதில் ஒரு முடிவெடுப்போம் என்பது பின்னர் தனித்தனியே முடிவெடுத்து அறிவித்து அதற்கேற்ப செயல்படுவது, என்னையே இறுதியாகப் பழி கூறத்திட்டமிடுவது நல்ல அரசியல் தந்திரங்களாக இருக்கலாம். அதற்கு நான் ஒருவன் மயங்கி பலிக்கடா ஆகத்தயாராக இருக்கலாம். ஆனால் அறிஞர் அண்ணா வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப் போன இந்த இயக்கத்தை ஆம், ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணைபோக நான் தயாராக இல்லை எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com/

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணவீடெண்டாலும் மாலை விழுபவனாக இருக்கவேண்டும்

செத்தவீடென்றாலும் மாலை எனக்கே.............

இதையாராவது தட்டிப்பறிக்க நினைத்தால் .............

கோபம்வராதா என்ன?????????

திருமாவளவன் ஏன் உண்ணா விரதம் இருந்தார்

அதனால் கிடைத்த பயன் தான் என்ன

உண்ணா விரதம் இருந்தவர் ஏதாவது ஆக்கபூர்வமான முடிவு வரும் வரை உண்ணாவிரத்தை முடித்திருக்கக் கூடாது

இவர் உண்ணாவிரத்தை ஆரம்பித நாள் அன்றே நான் இவரது உண்மைத்தன்மை பற்றி வினவியிருந்தேன் , அப்போது எந்து கருத்து கண்டிக்கப்பட்டது, ஆனால் அது இபோது உண்மை என்பது புலனாகும்.

இவர் திலீபன் போன்று உண்ணா விரதம் இருந்து உயிர் நீக்கத் தயரா ?????

இது வெரும் அரசியல் STUNT !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழரைக் காப்பதென்பதும், காங்கிரஸை எதிர்ப்பதென்பதும் ஒன்றுதான். ஏனென்றால் ஈழத் தமிழரை அழிப்பது காங்கிரஸ் கட்சிதானே? ஆகவே அக்கட்சியை எதிர்ப்பதென்பது ஈழத் தமிழரைக் காப்பாற்றும் நடவடிக்கையில் முதற்படி.

போராளிகள் தமக்குள் மோதியதால் பலவீனப்படவில்லை. அப்படிப் பலவீனப்படவேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய அரசினால் போராளிகள் பிரித்தாளப்பட்டு மோதவிடப்பட்டார்கள். முடிந்தவர்கள் அடிமை கொள்ளப்பட்டார்கள். அடங்காதவர்களை அடிமைகளாக்கத்தான் இன்றைய இந்திய யுத்தம் நடக்கிறது. இது தெரியாமல் "உலகத் தமிழினத்தின் தலைவர்" பீற்றுவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. கடைந்தெடுத்த கருனாநிதியின் கபடத்தனம்.

பிரணாப் முகர்ஜியின் இலங்கை விஜயம் ஏன் காலதாமதமாகியது என்று இவருக்குத் தெரிந்தால் சொல்ல வேண்டியதுதானே? ஏன் மவுனம் காத்தார்? முடிந்தவரை தமிழர்கள் அழியட்டும், புலிகளின் பலமெல்லாம் முடியட்டும், அப்போது சிங்களவனுக்கு வாழ்த்துச் செய்தி கொண்டுபோகலாம் என்று இருந்தவனை காப்பற்றும் நோக்கில் ஏதோ "ஈழத் தமிழரைக் காப்பாற்றும் "தீர்வொன்றுக்காகத்தான் முகர்ஜி காலதாமதம் ஆனதாக புழுகுகிறது! இதைவிட வேறு என்ன கேவலம் வேண்டும்?

இலங்கைக் கொடியை எரித்தால் அது தப்பா? அது எப்படி? ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படுவது தப்பில்லை, சிறுவர்களும் குழந்தைகளும் குடலறுந்து தலை பிளந்து எலும்பெல்லாம் வெளித்தெரியச் செத்துக்கிடப்பது தப்பில்லை, ஆனால் அதைச் செய்தவனின் கொடியை எரித்தால் இவருக்குக் கோபம் வருகிறது. உடனேயே தனது கண்டனத்தை கவிதையாகக் கொட்டி விடுவார்.

காங்கிரசைத் தமிழ்நாட்டில் காப்பாற்றவும், ஈழத்தில் நடக்கும் இந்தியப்போரை நியாயப்படுத்தவும் காங்கிரஸ் மேலிடத்துக்குக் கிடைத்த சரியான ஆள் கருனாநிதி! நாற்காலி ஆசைக்காக இந்தப் பிறவி என்ன சொன்னாலும் செய்யும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது !

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன் ஏன் உண்ணா விரதம் இருந்தார்

அதனால் கிடைத்த பயன் தான் என்ன

உண்ணா விரதம் இருந்தவர் ஏதாவது ஆக்கபூர்வமான முடிவு வரும் வரை உண்ணாவிரத்தை முடித்திருக்கக் கூடாது

இவர் உண்ணாவிரத்தை ஆரம்பித நாள் அன்றே நான் இவரது உண்மைத்தன்மை பற்றி வினவியிருந்தேன் , அப்போது எந்து கருத்து கண்டிக்கப்பட்டது, ஆனால் அது இபோது உண்மை என்பது புலனாகும்.

இவர் திலீபன் போன்று உண்ணா விரதம் இருந்து உயிர் நீக்கத் தயரா ?????

இது வெரும் அரசியல் STUNT !!!!!

திருமா எங்களுக்காக ஏன் உயிர் நீக்க வேண்டும் ? அவர் என்ன எங்களுக்குக் கடமைப்பட்டவரா? உணர்ச்சியால் உந்தப்பட்டுத் , தமிழர் அழிவது கண்டு மனம் நொந்து அவர் உண்ணாவிரதம் இருந்தார்.அதைக் கேள்வி கேட்கும் உரிமை எவருக்குமில்லை. முக்கியமாக உங்களுக்கில்லை. அவரை விடுங்கள், நீங்கள் என்ன செய்தீர்கள்? அடையாளத்துக்காவது உண்ணாவிரதம் இருந்தீர்களா ?

திலீபன் போலவும், பூபதி போலவும் திருமாவும் சாகவேண்டும் என்றுதான் இந்தியா எதிர்பார்க்கிறது. திருமா உண்ணாவிரதம் இருந்தால் சாவு நிச்சயம். ஏனென்றால் தமிழர் நலன் சார்பாக எவர் உண்ணாவிரதமிருந்தாலும் அவர் 100 % சாகடிக்கப்படுவார் என்பது இந்தியாவின் வரலாறு சொல்லும் செய்தி. அதைத்தானே நீங்களூம் எதிர்பார்த்தீர்கள்? அவர் செத்தபிறகு என்ன? எல்லாம் கிடைத்து விடுமா? அவர் தொடர்ந்து உயிருடன் இருப்பதுதான் எமக்குத்தேவை. அரசியல் நோக்கமின்றி தமிழர்க்காக அயராது குரல் கொடுத்துவரும் திருமா போன்ற நல்ல உள்ளங்கள் சாகவேண்டும் என்பதில் இந்தியாவுக்கு ஆசை இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் நீங்கள் ஆசைப்படுவது எனக்குச் சந்தேகத்தைத்தான் தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தொடர்ந்து உயிருடன் இருப்பதுதான் எமக்குத்தேவை. அரசியல் நோக்கமின்றி தமிழர்க்காக அயராது குரல் கொடுத்துவரும் திருமா போன்ற நல்ல உள்ளங்கள் சாகவேண்டும் என்பதில் இந்தியாவுக்கு ஆசை இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்இ ஆனால் நீங்கள் ஆசைப்படுவது எனக்குச் சந்தேகத்தைத்தான் தருகிறது.

இதுகூட புரியாதவர்களாய் எம்மில் பலர்

நன்றி தங்கள் கருத்துக்கு

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்க ரகு, "கீறு" (டாஷ் என்றால் கீறு தானே தமிழ்?) தரவழியளுக்கு காகிதத்தில ரத்தக் கண்ணீர் வடிக்கிற ஆக்கள் தான் தமிழின ஆதரவாளர்கள். திருமா எல்லாம் சும்மா என்பார்கள் (தாங்கள் வயிறு முட்டத் திண்ட பிறகு தான்). இதைப் பிழை எண்டால் மாற்றுக் கருத்துக்கு இடமில்லையா குய்யோ முறையோ எண்டு ஊரக் கூட்டுவினம்.

பாவம் உது!

"காடு வா வா, வீடு போ போ" என்னும் காலத்திலும், குடும்பத்துக்காக .............. என்னாவா........ பாடுபடுகுது! கட்டையிலை போன பின்னும், உந்தப் பதவி, பதவி என்ற சொல் ........ வேகவும் விடாது,!!!!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன் ஏன் உண்ணா விரதம் இருந்தார்

அதனால் கிடைத்த பயன் தான் என்ன

உண்ணா விரதம் இருந்தவர் ஏதாவது ஆக்கபூர்வமான முடிவு வரும் வரை உண்ணாவிரத்தை முடித்திருக்கக் கூடாது

இவர் உண்ணாவிரத்தை ஆரம்பித நாள் அன்றே நான் இவரது உண்மைத்தன்மை பற்றி வினவியிருந்தேன் , அப்போது எந்து கருத்து கண்டிக்கப்பட்டது, ஆனால் அது இபோது உண்மை என்பது புலனாகும்.

இவர் திலீபன் போன்று உண்ணா விரதம் இருந்து உயிர் நீக்கத் தயரா ?????

இது வெரும் அரசியல் STUNT !!!!!

தயவு செய்து எங்களுக்கு ஆதரவு தருபவர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

மரணத்தின் பின்பும் வாழ்பவர்கள் உலகிலே குறைவு.

கலைஞரைப் பொறுதத்த வரை தமிழர்களின் மனதில் இவர் வாழ்வார் என்பது சந்தேகம்....

இவர் திலீபன் போன்று உண்ணா விரதம் இருந்து உயிர் நீக்கத் தயரா ?????

இன்னொருவரை எமக்காக உயிர் நீக்க சொல்ல உங்களால் எப்படி முடிகிறது எண்டு தெரியவில்லை??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.