Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரீசில் உள்ள லா சப்பலில் வீதிமறிப்புப் போராட்டம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் தமிழர்கள் புரட்சி

திகதி: 28.01.2009 ஃஃ தமிழீழம் ஃஃ ஜவன்னியன்ஸ

பிரான்சில் தமிழ் மக்கள் பெரும் புரட்சிகரமான போராட்டம் ஒன்றை நடத்தி முடித்திருக்கின்றார்கள். பிரான்சில் தமிழ் மக்கள் இதுவரை நடத்திய போராட்டங்களில் இன்றைய போராட்டம் போன்று என்றுமே நடந்ததில்லை எனும் அளவிற்கு இந்தப் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றார்க

நன்றி:- சங்கதி

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

France 24 என்ற பிரபல ஊடகம் மக்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறது.

மேலும் ஆயிரக்கணக்கான மக்களை அந்த இடத்திற்கு வரவிடாமல் தடுத்த காவல்துறை

ரயில் நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியிருக்கிறது.

Edited by vasisutha

இதுதான் தேவை. தொடரவேண்டும்!! முடிவு கிட்டும்வரை தொடரவேண்டும்!! நன்றி உறவுகளே!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் உறவுகளே இன்னும் தொடரவேண்டும்

நீங்கள் பிரான்ஸ் பொது மக்களினதும் அரசினதும் எதிர்ப்பை சம்பாதிக்க போறீர்கள்.

இதில் எதிர்ப்பைச் சந்திக்க ஒன்றும் இல்லை. சிறிலங்கா சிங்களவனைவிட மனிதாபத்தில் பல மடங்கு மேலோங்கியவர்கள் பிரஞ்சு மக்கள்.

இதுவரை காலமும் பலருக்கு இந்த இனப்படுகொலை பற்றியோ, போரைப்பற்றியோ ஏன் அங்கு என்ன நடக்கிறது என்றோ தெரியாது இருந்தனர்.

ஏன் எனது நண்பர்களுக்கு கூட நான் நேற்றய தினம் எனது இணையத்தள முகவரியை அனுப்பினேன், அவர்கள் மலைத்து போய்விட்டார்கள்.

இன்று போராட்டம் நடைபெற இருந்த இடம் வேறு, ஆனால் அங்கு அனுமதி இல்லாத காரணத்தினால் காவல்த்துறையினர் கலைந்து போகும்படி கேட்டுக்கொண்டனர்.

அங்கிருந்து வந்துதான் மீண்டும் இந்த முக்கியமான இடத்தில் போராட்டத்தை ஆரம்பித்தோம்.

மக்கள் தொகையாக வந்ததால் அங்கிருந்த காவல்த்துறையினர் வீதியில் இறங்க அனுமதித்தனர்.

அந்த வீதியை முற்றாக போக்குவரத்துக்கு இடைநிறுத்தினர் காவல்த்துறையினர்.

இன்று கிட்டத்தட்ட 3 மணித்தியாலத்துக்கு மேல் அந்த வீீதியைவட்டு யாரும் போகாத பட்சத்தில், காவல்த்துறையினர் (விசேட பிரிவு) எங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தனர்.

அதன்பின்புதான் french media க்களுக்கு அங்கிருந்த மக்களே தொலைபேசி எடுத்து (தொலைக்காட்சி நிறுவனத்தினார் வியப்படைந்தனர் வந்த அழைப்புக்களை பாத்து) அவர்களை அங்கு வரவளைத்து எமது மக்களின் அவலங்களை அவர்களுக்கு தெரியப்படுத்தினோம்.

மக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடாத படியால் அங்கிருந்த காவத்துறையினரும் அமைதியாகவே இருந்தனர். அதைவிட அங்கே ஏராளமான வேற்றின மக்கள் இதை பார்வையிட்டனர். அவர்கள் இதை இடையூறாக நினைக்கவில்லை. தொடாந்து 3 மணித்தியாலங்களுக்கு மேல் அமைதியான முறையில் இங்கு வேறு எந்தப்போராட்டமும் நடைபெறுவதில்லை, ஏனென்றால் இடையில் குழப்பி வன்முறையில் ஈடுபடுவார்கள், ஆனால் எமது மக்கள் அப்படிச் செய்யவில்லை.

இதைவிட முக்கியமாக, நாளை போராட்டத்தை நடத்துவதற்கு காவல்த்துறையினர் அனுமதிப்பத்திரத்தை வழங்கினர்.

அது ஒரு முக்கியமான இடம், நாளை இதைவிட கூடுதவான மக்கள் வருவாாககள் என எதிர்பார்க்கப்படுககிறது.

தயவுசெய்து இங்கிருப்பவர்கள்அனைவரும் வாருங்கள்.

நான் ஒருவர் போகாட்டி பறவாயில்லை என்று எண்ணி நிக்காதிர்கள், உங்களைப்போல் ஒவ்வொருவரும் எண்ணினால் யாரும் வர வாய்ப்பில்லை.

நாளைய போராட்டம் அனுமதியுடன் நடக்கிறது, ஊடகத்தினர் தாங்கள் மீண்டும் நாளை வருவோம் என உறுதியளித்துள்ளனர்.

இது வெற்றிப்போராட்டமாக மாற வாய்ப்புக்ள் இருக்கிறது, அது எங்கள் ஒவ்வொருவரினதும் வருகையில்த்தான் இருக்கிறது.

அதனால் பிரான்சில் இருப்பவர்கள் தயவு செய்து நாளை வாருங்கள். இடம் : Charles De Gaulle - Metro : Ligne 2 - Charles De Gaulle

நேரம் : பி.ப 14:00 தொடக்கம் 16:00 வரை.

வேலைக்கு போகிறவர்கள் நாளை ஒருநாள் மட்டும் (2 மணித்தியாலஙங்கள்) வருவதற்கு முயற்சி செய்யுங்கள்.

தோ்த்திருவிழாவுக்கு வரும் எண்ணிக்கையில் மக்கள் இப்படியான நிகழ்வுகளுக்கு வருவதில்லை :huh: .

நாளை முயற்சியுங்கள். இது இறுதிப்போராட்டமாக இருக்கும் அளவுக்கு நாங்கள் செல்ல வேண்டும்.

சிங்களவன் கொல்லுறான், கொன்றுகொண்டே இருக்கிறான், எம்மக்களை நாங்கள்தான் காப்பாற்றவேண்டும், பக்கத்து நாட்டு பச்சோந்தி அரசியல்வாதிகளை நம்பினால் பட்டை நாமம் போட்டுவிட்டு போய்விடுவார்கள். மக்கள் புரட்சி மட்டுமே எமது மக்களை அழிவிலிருந்து காப்பாற்றும். மண்ணை மீட்டுத்தர தலைவரும், தளபதிகளும், போராளிகளும் உள்ளனர். நாங்கள் முதலில் மக்களைக் காப்பாற்றுவோம்.

திரு சத்தியமூர்த்தி அன்று ஒலிப்பதிவினூடாகச் சொல்லியிருந்தார், எமது ஆன்மம் ஏங்குகிற அந்தச் செய்தி வருகின்ற பொழுது, அதனுடைய மறுபக்கத்தை நாம் சாதித்திருக்க வேண்டும் என்று. அதற்கான தருணம் இதுதான்.

தயவுசெய்து வாருங்கள். வேடிக்கை பாாத்தது போதும், கொடுக்கும் விலை அதிகமாகிக்கொண்டு போகிறது. தடுத்து நிறுத்துவோம் இல்லையேல் தாகத்துக்கு தண்ணி கூட கிடைக்காத நிலைமைக்கு சிங்களவன் எம்மை தள்ளிவிடுவான்.

Edited by தாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் தேவை. தொடரவேண்டும்!! முடிவு கிட்டும்வரை தொடரவேண்டும்!! நன்றி உறவுகளே!!

பிரான்ஸ் தமிழ் இளையோரின் எழுச்சி மிகு விடாமுயற்சியானது ஏனைய நாடுகளில் வாழும் இளையோருக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எனவே இதனை பின்பற்றி எமது உரிமைகளை அடையத் தன்னாலான அனைத்து சனநாயக வழிமுறைகளையும் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்குக் தமது அர்ப்பணிப்பு மிகு போராட்டத்தின் மூலம் உலகுக்கு எடுத்தவரும் ஆற்றல் எமது இளைய தலைமுறையினரிடம் மையங்கொண்டுள்ளமையை அண்மைய நிகழ்வுகள் எடுத்தியம்புகின்றன. இது உங்களின் காலம். தமிழீழ இளையோரின் விடாமுயற்சியால் உலகு எம்மையும் திரும்பிப்பார்த்தது என்று வரலாறு பதிந்து கொள்ளட்டும். பதுங்கியும் ஒதுங்கியும் வாழ்ந்த காலங்கள் போனது. படுகொலையாகிடும் எம்மினம் காத்திடப் புலமெங்கும் புறப்படும் இளையோரே புதிய வரலாற்றைப் படைத்து நிமிர்வீர் என்பது திண்ணம். திசையெங்கும் தமிழினமாய் நாம் திக்கற்று எமது உறவுகளா? துடித்தெழும் நெஞ்சுடைத்தாய் துணிவுடன் கடன் முடித்தோர் எம் இளையோரே. வளர்க ! தொடர்க ! தோளில் எம் தேசம்தாங்கிடும் தேசத்துச் செல்வங்களே வெற்றி நமதே !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் எதிர்ப்பைச் சந்திக்க ஒன்றும் இல்லை. சிறிலங்கா சிங்களவனைவிட மனிதாபத்தில் பல மடங்கு மேலோங்கிறவர்கள் பிரஞ்சு மக்கள்.

இதுவரை காலமும் பலருக்கு இந்த இனப்படுகொலை பற்றியோ, போரைப்பற்றியோ ஏன் அங்கு என்ன நடக்கிறது என்றோ தெரியாது இருந்தனர்.

ஏன் எனது நண்பர்களுக்கு கூட நான் நேற்றய தினம் எனது இணையத்தள முகவரியை அனுப்பினேன், அவர்கள் மலைத்து போய்விட்டார்கள்.

இன்று போராட்டம் நடைபெற இருந்த இடம் வேறு, ஆனால் அங்கு அனுமதி இல்லாத காரணத்தினால் காவல்த்துறையினர் கலைந்து போகும்படி கேட்டுக்கொண்டனர்.

அங்கிருந்து வந்துதான் மீண்டும் இந்த முக்கியமான இடத்தில் போராட்டத்தை ஆரம்பித்தோம்.

மக்கள் தொகையாக வந்ததால் அங்கிருந்த காவல்த்துறையினர் வீதியில் இறங்க அனுமதித்தனர்.

அந்த வீதியை முற்றாக போக்குவரத்துக்கு இடைநிறுத்தினர் காவல்த்துறையினர்.

இன்று கிட்டத்தட்ட 3 மணித்தியாலத்துக்கு மேல் அந்த வீீதியைவட்டு யாரும் போகாத பட்சத்தில், காவல்த்துறையினர் (விசேட பிரிவு) எங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தனர்.

அதன்பின்புதான் french media க்களுக்கு அங்கிருந்த மக்களே தொலைபேசி எடுத்து (தொலைக்காட்சி நிறுவனத்தினார் வியப்படைந்தனர் வந்த அழைப்புக்களை பாத்து) அவர்களை அங்கு வரவளைத்து எமது மக்களின் அவலங்களை அவர்களுக்கு தெரியப்படுத்தினோம்.

மக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடாத படியால் அங்கிருந்த காவத்துறையினரும் அமைதியாகவே இருந்தனர். அதைவிட அங்கே ஏராளமான வேற்றின மக்கள் இதை பார்வையிட்டனர். அவர்கள் இதை இடையூறாக நினைக்கவில்லை. தொடாந்து 3 மணித்தியாலங்களுக்கு மேல் அமைதியான முறையில் இங்கு வேறு எந்தப்போராட்டமும் நடைபெறுவதில்லை, ஏனென்றால் இடையில் குழப்பி வன்முறையில் ஈடுபடுவார்கள், ஆனால் எமது மக்கள் அப்படிச் செய்யவில்லை.

இதைவிட முக்கியமாக, நாளை போராட்டத்தை நடத்துவதற்கு காவல்த்துறையினர் அனுமதிப்பத்திரத்தை வழங்கினர்.

அது ஒரு முக்கியமான இடம், நாளை இதைவிட கூடுதவான மக்கள் வருவாாககள் என எதிர்பார்க்கப்படுககிறது.

தயவுசெய்து இங்கிருப்பவர்கள்அனைவரும் வாருங்கள்.

நான் ஒருவர் போகாட்டி பறவாயில்லை என்று எண்ணி நிக்காதிர்கள், உங்களைப்போல் ஒவ்வொருவரும் எண்ணினால் யாரும் வர வாய்ப்பில்லை.

நாளைய போராட்டம் அனுமதியுடன் நடக்கிறது, ஊடகத்தினர் தாங்கள் மீண்டும் நாளை வருவோம் என உறுதியளித்துள்ளனர்.

இது வெற்றிப்போராட்டமாக மாற வாய்ப்புக்ள் இருக்கிறது, அது எங்கள் ஒவ்வொருவரினதும் வருகையில்த்தான் இருக்கிறது.

அதனால் பிரான்சில் இருப்பவர்கள் தயவு செய்து நாளை வாருங்கள். இடம் : Charles De Gaulle - Metro : Ligne 2 - Charles De Gaulle

நேரம் : பி.ப 14:00 தொடக்கம் 16:00 வரை.

வேலைக்கு போகிறவர்கள் நாளை ஒருநாள் மட்டும் (2 மணித்தியாலஙங்கள்) வருவதற்கு முயற்சி செய்யுங்கள்.

தோ்த்திருவிழாவுக்கு வரும் எண்ணிக்கையில் மக்கள் இப்படியான நிகழ்வுகளுக்கு வருவதில்லை :huh: .

நாளை முயற்சியுங்கள். இது இறுதிப்போராட்டமாக இருக்கும் அளவுக்கு நாங்கள் செல்ல வேண்டும்.

சிங்களவன் கொல்லுறான், கொன்றுகொண்டே இருக்கிறான், எம்மக்களை நாங்கள்தான் காப்பாற்றவேண்டும், பக்கத்து நாட்டு பச்சோந்தி அரசியல்வாதிகளை நம்பினால் பட்டை நாமம் போட்டுவிட்டு போய்விடுவார்கள். மக்கள் புரட்சி மட்டுமே எமது மக்களை அழிவிலிருந்து காப்பாற்றும். மண்ணை மீட்டுத்தர தலைவரும், தளபதிகளும், போராளிகளும் உள்ளனர். நாங்கள் முதலில் மக்களைக் காப்பாற்றுவோம்.

திரு சத்தியமூர்த்தி அன்று ஒலிப்பதிவினூடாகச் சொல்லியிருந்தார், எமது ஆன்மம் ஏங்குகிற அந்தச் செய்தி வருகின்ற பொழுது, அதனுடைய மறுபக்கத்தை நாம் சாதித்திருக்க வேண்டும் என்று. அதற்கான தருணம் இதுதான்.

தயவுசெய்து வாருங்கள். வேடிக்கை பாாத்தது போதும், கொடுக்கும் விலை அதிகமாகிக்கொண்டு போகிறது. தடுத்து நிறுத்துவோம் இல்லையேல் தாகத்துக்கு தண்ணி கூட கிடைக்காத நிலைமைக்கு சிங்களவன் எம்மை தள்ளிவிடுவான்.

தாயகன் கேட்கவே சந்தொசமாய் இருக்கிறது பாராட்டுக்கள் நாளை இதைவிட அனைவரும் வந்து போராட்டத்தை நல்ல முறையில் நடத்திக்காட்டவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாயகன்

தங்களின் முயற்சிக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாயகன்

தங்களின் முயற்சிக்கு

நல்ல விடயம். அரசின் தடைகளைத் தகர்க்க சில வேலைத் திட்டங்களை செய்வதில் தவறில்லை. ஆனால் முடிந்தவரை பொதுமக்களுக்கு இடையூறில்லாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

லாச்சப்பலின் பிரதான வீதியின் நடுவே புலிக் கொடிகளுடன் அமர்ந்த தமிழ்மக்கள் மூன்று மணி நேர அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். காவல் துறையினர் இப் போராட்டத்திற்கு அனுமதியளிக்காவிடினும் மூன்று மணி நேரமாக சுற்றிநின்று வீதிப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். எந்தவித முன்நேற்பாடும் செய்யாது அங்கு மக்கள் படிப்படியாகக் கூட ஆரம்பித்ததாகவே பேசிக் கொண்டனர். இதனால் பிரதான வீதி முற்றாக காவல் துறையினரால் மூடப்பட்டது.

பிரதான வீதிக்குக் குறுக்காக தொடரூர்திகள் (Metro) செல்லும் பாலத்திற்கு எதிராக மக்கள் அமர்ந்திருந்ததால் அவ்வழியே மெதுவாகச் சென்ற தொடரூர்திகளில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்துச் சென்றனர்.

கடைசியில் ஊடகத் துறையினரின் வருகையின்பின் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைப் புரியவைத்தபின்னர் எல்லோரும் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பிரான்ஸ் பொது மக்களினதும் அரசினதும் எதிர்ப்பை சம்பாதிக்க போறீர்கள்.

பிரான்ஸ்சில் இன்று நடந்த இந்தப் போராட்டம் மாபெரும் வெற்றியைத் தந்து நாளை மிக முக்கியமான இடமொன்றில் போராட்டமொன்றை நடத்துவதற்கு பிரான்ஸ் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. மக்கள் காவல்துறை அனுமதியையும் மீறி அமைதியான வீதி மறிப்புப் போராட்டத்தை நடத்தி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது மக்கள் எழுச்சியின் வெற்றியை நிரூபித்திருக்கிறார்கள்.

இளங்கவி

நன்றி தாயகன் இணையவன்.

மேலதிக படங்கள் இருந்தால் போட்டுவிடுங்கள்.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா படையினரால் ஒரே நாளில் பல நூறு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து பிரான்ஸ் வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் திடீரென போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முற்றாக எல்லாவற்றையும் தடை செய்து விட்டால் என்ன செய்வீங்க அதற்கு பிறகு?

இப்ப மட்டும் என்னத்தை தடை செய்யாமல் விட்டிருக்கினம்? உப்பிடியே சொல்லிக்கொண்டு வீட்டை படுத்திருங்கோ எல்லாரும். வெள்ளைக்காரன் கொண்டுவந்து தருவான் தமிழீழம்!!

5 பேர் செய்தால் ரவுடிதனம்.. 5000 பேர் செய்தால் உணர்வு ரீதியான் போராட்டம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திக் காட்டிய பிரான்சில் பிரஞ்சுப்புரட்சி 2 எல்லா நாடுகளிலும் இது நடைபெற வேண்டும். முக்கியமாக இலண்டனில் நடைபெற வேண்டும். அவர்களால்த்தான் எமக்கு இந்த நிலை.அவர்களின் பாராளுமன்ற்தின் முன்னால் உள்ள வீதியின் குறுக்காக எல்லோரும் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அப்பதான் இங்கு உள்ளவர்கள் விழிப்படைவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சில படங்களும்

பதாதைகளும் வந்துள்ளன

அவை ஒவ்வொன்றையும்5 தடவை பிரின்ற் எடுத்து கொண்டு வருவேன்

எனக்கு பிரெஞ்சிலும் சில பதாதைகள் அனுப்பமுடியுமா????

பிரெஞ்சு மக்கள் அதை நிச்சயம் கேட்பார்கள் தமது மொழியில் இல்லாவிடத்து......

vskugan5@hotmail.com

எனக்கு பிரெஞ்சிலும் சில பதாதைகள் அனுப்பமுடியுமா????

பிரெஞ்சு மக்கள் அதை நிச்சயம் கேட்பார்கள் தமது மொழியில் இல்லாவிடத்து......

வணக்கம் அண்ணா.

மோகன் அண்ணா இணைத்தவற்றில் சிலதை french ல் மாற்றியுள்ளேன்.

இவை அளவில் சிறியவை, அதனால் print செய்யும்போது நன்றாக இருக்குமா தெரியாது.

முயற்சித்துப் பாருங்கள்.

banner1_fr.jpg

banner2_fr.jpg

banner3_fr.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை வேறொருவர் அனுப்பியிருந்தார்?

ஆனால் இது போதாது

பிரெஞ்சு, ஐரோப்பிய, தமிழீழக் கொடிகளுடன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை நோக்கிச் சென்றவண்ணம் உள்ளனர்.

dsc00657bfp2.jpg

dsc00659bvv5.jpg

dsc00662bxu3.jpg

திருத்தம் : இவை இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகள் அனைவரின் எழுச்சியில் மகிழ்ச்சி. உலகின் விழிகள் திறக்கப்படட்டும்.

என்ன சொல்வதென்று தெரியவில்லை பல மக்கள் மிக உணர்ச்சியோடு மீண்டெழுந்ததைக்காணக்கூடியத

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான போராட்டாம்.இதை வாசிக்கவே மெய் சிலிர்க்குது.இனி ஊடகங்களின் கவனத்ததைப்பெற இது போன்ற வித்தியாசமான செயற்பாடுகள் தான்அவசியம்.இதை முன் நின்று நடத்தியவர்களுக்கு கோடி நன்றிகளும் பாரட்டுக்களும்.

பெரும் வெற்றி நன்றி உறவுகளே தொடருங்கள்.. மக்கள் சக்தி மகாசக்தி..

சர்வதேச பத்திரிகையாளர்களே உங்கள் இலக்காக இருக்கவேணும் தேவையான ஆதாரங்களை சிடிக்கள், ஆங்கில் இணைய விலாசங்கள், சரியான் விளக்கங்கள் சிறிலாங்கவின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் தமிழர்களை அழிவிலிருந்து காக்கும்

உங்கள் வெளினாடுகளின் இருப்பையும் உறுதியாக்கும்..அல்லது அடுத்து புலம் பெயர்மக்களிலும் இலங்கை கைவைக்கும்.. ஏற்கனவே எவ்வளவோ காரியஙகள் பொய்பிரச்சாரம் செய்து கொச்சைப்படுத்துகிறது.. ..தொடரட்டும்..வாழ்த்துகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.