Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

உண்மைகள் நிச்சயமாக வெளிக்கொணரப்பட வேண்டும். ஆயினும் புஸ்பராசா உயிருடன் இல்லாத ஒரு நிலையில் இந்த கட்டுரை எழுதப்படுவது சிறிது நெருடலாக உள்ளது. இதே முன்பே எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • Replies 468
  • Views 73.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைகளை சொல்ல உயிருடன் இருக்க வேண்டும் என்பதில்லை சபேசன்.

புஸ்பராசாவின் பொய்களை அவர் சொன்னா காலங்களில் நானும் அவர்சார்ந்த அமைப்பில்தான் இருந்தேன். ஆனால் அவர் அப்போது எதுவும் பெரிதாக செய்துவிடவில்லை. சாத்திரி அவர்கள் அவர்பற்றி எழுத எடுத்திருக்கும் முயற்சி புஸ்பராசாவின் பொய்களை சொல்லக்கூடியதாக இருக்கும் என்பதில் நம்பிக்கையிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அது நீரா? :P :P :P :lol:

என்ன நக்கலா? :lol::(

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே சாத்திரியைக் காணவில்லையே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே சாத்திரியைக் காணவில்லையே

உமக்குப் புறத்;தாலை ஒளிச்சிருக்கிறார் போலை சாத்திரி அதுதான் தெரியேல்லப்பொல கொஞ்சம் கறுப்பு தள்ளி நில்லுமன் அந்தக் கிழவனை நாங்களும் பாக்க :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீரும் உம்முடைய கறுப்புக்கண்ணாடியை கழற்றி விட்டு வெளியே வாரும்.

நீரும் உம்முடைய கறுப்புக்கண்ணாடியை கழற்றி விட்டு வெளியே வாரும்.

கறுப்பி தான் என்னகு பிடிச்ச கலரு இப்படி ஒரு பாட்டு இருக்கு தானே? :roll: :roll:

கறுப்பி தான் என்னகு பிடிச்ச கலரு இப்படி ஒரு பாட்டு இருக்கு தானே? :roll: :roll:

அது கறுப்பி இல்லை வினித் அண்ணா கறுப்பு :P :P

நீங்க என்னண்ணா கறிப்பியை பிடிக்கும் எண்டு பாடுறீங்கள் :shock: :shock:

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியை கனநாலாக காணல்லே எங்கு போட்டீர் சாத்திரி ?அவலமெங்கே ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சி. புஸ்பராசாவின் ஈழ போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 2

இந்தவாரம் தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் தோற்றம் பற்றியும் அவைகளின் நடவடிக்கைகள் பற்றியும் சிலவற்றை பார்க்கலாம். இங்கு தனது புத்தகத்தில் தானும் தான் சார்ந்த சிலரும் 1973ஆம் ஆண்டு தொடக்கிய தமிழ் இளைஞர் பேரவையே முதன் முதல் ஈழவிடுதலையை வென்றெடுக்க ஆயுதப் போராட்டத்தை அறிமுகப் படுத்தியதாக எழுதுகிறார் ஆனால் உண்மையில் அதற்கு முதலே 1970ம் ஆண்டு கார்த்திகை மாதம் 13ஆம் திகதி அந்தக் காலத்தில் யாழ்ப்பாணநகரத்தில் மசால் வடைக்குப் பெயர் போன மலயன் கபே என்கிற உணவு விடுதியின் மேல் மாடியில் உரும்பிராயை சேர்ந்த சத்திய சீலனால் அப்போது இலங்கையரசிற்கு எதிரான தீவிரவாத போக்கு கொண்ட சில இளைஞர்களை ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் கூட்டபடுகிறது அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் 1.திரு பொன். சிவகுமாரன்(உரும்பிராய்). 2.முத்துகுவார சுவாமி 3. அரியரட்ணம் ஏழாலை 4.வில்வராயா (நல்லூர்) 5 இலங்கை மன்னன் 6. மகா உத்தமன் (யாழ்.சென்யோன்ஸ் கல்லூரி மாணவன்) 7. சிவராசா(கல்வியங்காடு) 8. தவராசா(இவர்தான் இன்று ஈ.பி.டி.பி யின் முக்கிய உறுப்பினராக உள்ளவர்.).9.சேயோன் (சென்பக்றிஸ் கல்லுரி மாணவன்)10. ஆனந்தன் (சென்யோன்ஸ் மாணவன்) 11. ஞானம் அண்ணா(மண்டைதீவு .)ஆகியோரோடு இன்னும் சிலருடனும் கிட்டத்தட்ட பதினைந்து பேரளவில் அந்த கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர்.

இதில் ஞானம் அண்ணா என்பர் சிறீலங்கா காவல் துறையில் கடைமையாற்றியவர் இலங்கையரசின் சிங்களம் மட்டும் என்கிற சட்டத்தால் சிங்களம் படிக்க முடியாது என தனது வேலையை உதறி எறிந்து விட்டு யாழ்நகரில் உள்ள ராணி திரையரங்கில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த இளைஞர்களின் கூட்டத்திற்கும் வேறு பல திட்டங்களிற்கும் அவர்களிற்கு ஒர் உந்து சக்தியாகவும் ஊக்கம் அழிப்பவராகவும் செயற்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அந்த இளைஞர்களால் 1970ஆம் ஆண்டு இலங்கையரசின் கல்வியமைச்சர் பதியுதீன் முகமது அவர்களால் கொண்டுவரப்பட்ட கல்வி தரப்படுத்துதல் சட்டம் மற்றும் தமிழர்களை ஒடுக்குவதற்காக சிங்கள ஆட்சியாளர்களின் பல்வேறு சட்டங்களை எதிர்த்தும் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரிகளை எதிர்க்கவும் தமிழர் மத்தியில் ஒரு அமைப்பு தேவை என சத்தியசீலனால் முன்மொழியப்பட்டது.

அத்துடன் இலங்கையரசிற்கு தமிழர் மற்றும் தமிழ் மாணவர்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்காக வடக்கிலுள்ள அத்தனை பாடசாலை உயர் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவத்லைவர்களை அணுகி அந்த அரச எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவு திரட்டுவது என தீர்மானிக்கப் படுகிறது .அந்த தீர்மானத்தின் படியே அங்கிருந்தவர்கள் வடக்கிலுள்ள அத்தனை பாடசாலைகளிற்கும் சென்று மாணவர்களை சத்தித்து விழக்கம் கொடுக்கப்டுகிறது மீண்டும் அதே மாதம் 17ந் திகதி அதே இடத்தில் வடகிழக்கின் பல்வேறுபட்ட இடங்களிலில் இருந்தும் வந்திருந்த சுமார் நூற்றியம்பது இளைஞர்கள் மற்றும் உயர் வகுப்பு மாணவர்களை ஒன்றிணைத்துத் தமிழ் மாணவர் பேரவை தலைவர் செயலாளர் பொருளாளர் என்று எவரிற்கும் எவ்வித பதவிகளுமற்ற ஒரு அமைப்பாகவும் அந்த அமைப்பின் அமைப்பாளர் என்கிற ரீதியில் சத்தியசிலன் அவர்கள் இருப்பார் எனவும் முடிவுகள் எடுக்கபட்டது (முன்னைய கட்டுரையில் இந்த அமைப்பின் தலைவர் என்று நான் குறிப்பிட்டிருந்தேன் பின்னர் அது சத்தியசீலன் அவர்களால் தலைவர் என்கிற பதவி இல்லை அமைப்பாளர் மட்டுமே என்று சுட்டிக்காட்டப்பட்டது) சத்தியசீலன் அவர்களால் தமிழ் மாணவர் பேரவை என்று அந்த அமைப்பிற்கு பெயர் சூட்டப்பட்டு இனி வருங்காலங்களில் அந்த அமைப்பின் செயல்த் திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்திலேயே தமிழ் மக்கள் இனியும் சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் வாழ முடியாது என்றும் தமிழர்கள் ஒரு தனியரைசை அமைக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி அந்த தனியரசை அமைக்க வன்முறையிலான ஆயுதப் போராட்டமே ஒரேயொரு வழியென தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளான மாணவர்கள் மற்றும் பொது மக்களிற்கு தமிழ் தனியரசு பற்றிய விளக்கங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த அங்கிருந்தவர்கள் பகுதி பகுதியாகப் பிரிக்கப் பட்டு தமிழ் பிரதேசத்தின் அனைத்து கிராமங்களிற்கும் மற்றும் அனைத்து பாடசாலைகளிற்கும் செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இரண்டு கூட்டங்களிலுமே புஸ்பராசா அவர்கள் இருந்திருக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டும். அவர்கள் திட்டப்படி கார்த்திகை மாதம் 24ந்திகதி மிக குறுகிய காலத்திலேயெ ஒழுங்கு செய்யப்பட்டாலும் வடக்கின் அனைத்து பாடசாலை மாணவ மாணவியர் மற்றும் பொது மக்கள் என எதிர்பார்த்ததற்கும் மேலாக பல்லாயிரக்கணக்காணவர்கள் பங்கு பற்றி தங்கள் எதிர்ப்பை இலங்கை அரசிற்கு காட்டினர். இலங்கையில் முதலாவது மிகப்பெரும் தமிழ் மாணவர்களின் எழுச்சி என்று இந்த ஊர்வலத்தை சொல்லலாம்.இறுதியாக யாழ் முற்றவெளியில் நடந்த பொது கூட்டத்துடன் இந்த ஊர்வலம் நிறைவு பெற்றது.

இந்த மாணவர் பேரவையின் தோற்றமும் அதன் திடீர் வளர்ச்சி பெருமளவான மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே அதன் பிரச்சாரமும் செல்வாக்கும் அதிகரித்ததைக் கண்டு அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை கொஞ்சம் அதிர்ந்து போனது. இந்த இளைஞர்களின் திடீர் வழர்ச்சி தங்களின் தமிழ் மக்கள் மீதான இருப்பையே கேள்விக்குறியாக்கி பாராளுமன்ற கதிரைகளின் கால்களை முறித்துவிடுமோ என்று பயந்தனர்

http://www.orupaper.com/issue50/pages_K__Sec3_32.pdf

நன்றி சாத்திரி.........

தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மீன்டும் தொடர்வது கன்டு மகிழச்சி.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 3

சத்தியசீலன் மகாஉத்தமன் மற்றும் ஞானம் ஆகியோர் 1971ம் அண்ட ஆவவணி மாதமளவில் இந்தியா சென்று தமிழ் நாட்டில் சுயமரியாதை கொள்கையின் தந்தையும் திராவிடர் கழக தலைவருமான ஈ.வே.ரா. பெரியார் இந்தியாவின் விஞ்ஞானியும் அறிஞருமான ஜு.டி நாயுடு மற்றும் மா.பொ.சி ஆகியொரை சந்தித்து சிங்கள அரசின் ஏமாற்று வேலைகளை விளக்கி தங்கள் கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் என்பனவற்றை விளக்கியும் அதற்கான முன்னெடுப்புகளிற்கு அவர்களின் உதவியை வேண்டி நின்றனர்.அதற்கு அவர்களும் தங்களால் முடிந்த உதவிகள் வழங்குவதாக கூறி வாழ்த்தி வழியனுப்பி வைத்ததுடன் ஈ. வே.ரா. பெரியார் சத்திய சீலனிடம் சுருக்கமாக ஒரு கட்டுரையும் எழுதிவாங்கி தனது விடுதலை பத்திரிகையில் வெளியிட்டார்

. இந்த மாணவர் பேரவையின் வேகத்தை தடுத்து நிறுத்த உடனடியாகவே கூட்டணிதலைமை இதற்கான ஒரு மாற்று திட்டம் ஒன்றை தீட்ட வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டது.இளையதலைமுறையின

  • கருத்துக்கள உறவுகள்

ஒ.......கூட்டணி இவ்வளவு அட்டகாசம் செய்து இருக்கிறார்களா??

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் புட்டு வைக்கும் உண்மைகள் நாளைக்கு சமுதாயத்தில் தவறாக பதிக்கப்படவிருந்த கோமாளியின் ஏமாற்றுவித்தையைப் புட்டு வைக்கும்!

தொடர்ந்து எழுதுங்கள் சாத்திரி!!

உண்மைகளை வெளியில் கொண்டுவருவதற்கு நன்றி சாத்திரி. இப்படிக் கனபேர் பொய்சாட்சியம் சொல்லி தாங்கள் ஏதோ வல்லுனர்போல் வெட்டி விளாசுகினம். இன்று ஒரு தளம் பார்த்தேன். அதில் ஒருவர் தன்னைப்பற்றி எழுதி தன்னைப்புலிகள் கொல்லப்போகின்றார்கள் என்று ஒப்பாரி வைத்து அனுதாபம் தேடுகின்றார். நாளைக்கு இவர்கள் போன்றவர்கள் பொய்ச்சாட்சியங்கள் எழுதுவார்கள். இவர்கள் இருக்கும்போதே இவர்களின் மறுபக்கங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைய தலைமுறைகளுக்கு சாத்திரியின் இந்த (அ)வலம் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. நன்றி சாத்திரி அவர்களே!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழபோராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் பாகம் 4

சபாலிங்கம் யார்?? எதற்காக ??? எப்படி கொலை செய்ய பட்டார்??

புலத்தில் மாற்று கருத்தாளர்கள் என்றும் மனிதவுரிமை வாதிகள் சனனாயக வாதிகள் என்னும் பல போர்வைகளை போர்த்துகொண்டவர்கள் அவர்யார் ?எப்படியானவர்? எப்படி இருப்பார் ?என்று கூட தெரியாதவர்களாய் வழைமை போல தங்கள் வசதிக்கேற்றபடி சாபலிங்கம் படு கொலை புலிகளால் என்று சில தளங்களில் இன்றும் எழுதி புலம்பியபடி இருக்கிறார்கள் எனவே அவரை பற்றியும் சுருக்கமாக முடிந்தளவு விபரமாக பார்த்தால் இவர் தமிழ் மாணவர் பேரவையில் மாணவனாக இருந்த போது இணைந்து கொண்டார்.

அந்த கால கட்டத்தில் தமிழ் மாணவர் பேரவை அமைப்பாளரான சத்திய சீலன் அவர்களால் 1971ம் அண்டு கார்த்திகை மாதம் திருநெல்வேலி சந்திக்கு அருகில் மாமரவளவு என்று அழைக்கபட்ட மாமரங்கள் நிறைந்த காணி ஒன்றினுள் அதன் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு ஒரு இலட்சியத்தை அடைவதற்கான போராட்டத்தில் எப்போதும் எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் என்கிற கோட்பாட்டிற்கு இணங்க ஆயுத விடுதலை போராட்டத்திற்கான தடை கற்களாக இருக்கும் துரோகிகளை ஒழிப்பதற்கானதீர்மானம் நிறைவேற்றபட்டுசில திட்டங்களும் தீட்டப்பட்டு அதற்கான சில வேலைதிட்டங்கள் பலரிற்கும் பகிர்ந்தளிக்கபடுகிறது அதில் சபாலிங்கத்திடமும் சில பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டு அதனை அவர் சரியாக நிறை வெற்றாததாலும் .

அதை விட சபாலிங்கம் ஆரம்ப காலம் தொட்டேஇன்னொரு நாட்டின் இராணுவ உதவியுடனோ அல்லது இன்னொரு நாடு வந்துதான் எங்களிற்கான விடுதலையை வாங்கி தரமுடியும் என்று கனவு கண்டவர் ஆயுத விடுதலை போராட்டத்தினை எமது இளைஞர்களும் எமது மக்களாலும் சுயமாக நடத்தி வெற்றி பெற முடியாது என்று ஒரு தன்னம்பிகையற்ற போக்கினை அவர் கொண்டிருந்ததாலும் அவரின் முரண்பட்ட கருத்துகளால் தமிழ் மாணவர் பேரவையை விட்டு வெளியேற்றபட்டார். பின்னர் புஸ்பராசாவுடன் சேர்ந்து தமிழ் இளைஞர் பேரவையை தொடங்கி அதுவும் செயலற்று போக அதே புஸ்பராசாவுடன் இணைந்து ரெலோ(T.L.O ) தமிழீழ விடுதலை இயக்கம் என்கிற அமைப்பை தொடங்க முயற்சித்து அதுவும் பலனளிக்காமல் போக பின்னர் பிரான்ஸ் நாட்டில் வந்து குடியெறினார் பிரான்ஸ்நாட்டில் பின்னர் சபாரட்டணத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ( T.E.L.O ) தமிழீழ விடுதலை இயக்கம் அமைப்புடன் தொடர்புகளை எற்படுத்து கொண்டு அந்த அமைப்பிற்காக வேலைகள் செய்யது கொண்டிருந்தவர் அந்த அமைப்பும் ஈழத்தில் புலிகளால் தடை செய்ய பட்டதன் பின்னர்.

அடுத்ததாய் பிழைப்பிற்கு என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு பிரான்ஸ் நாட்டில் அகதிகள் விண்ணப்பத்திறகான சில நடைமுறை சிக்கல்கள் அவரிற்கு அருமையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பிரான்ஸ் நாட்டில் ( o.f.p.r.a ) என்றழைக்கபடும் நாடற்றவர்களிற்கும் அகதிகளிற்குமான உதவி அமைப்பு. இதுவே பிரான்ஸ் நாட்டில் அகதி அந்தஸ்த்து கோருபவர்களிற்கான விண்ணப்பங்களை முதலில் பரிசீலித்து அவர்கள் அகதிகளாக ஏற்று கொள்ள பட கூடியவர்களா இல்லையா என்பதனை முடிவு செய்யும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் சார்பில் 90 களிற்கு முதல் தமிழ் மொழியிலான மொழிபெயர்ப்பாளர்கள் யாரும் இருக்கவில்லை எனவே பிரான்ஸ் நாட்டிற்கு வரும் தமிழர்கள் தங்கள் அகதிக்கான விண்ணப்பத்தை பிரெஞ்சு மொழியிலேயோ அல்லது ஆங்கிலத்திலேயோ தான் எழுத வேண்டிய கட்டாய நிலை . இதில் பிரெஞ்சு மொழி என்பது ஈழதமிழரிற்கு பரிச்சமில்லாத மொழி ஏன் அப்படி ஒரு மொழி இருக்கிறதா என்பது கூட பிரான்ஸ் வரும்வரை பலரிற்கு அந்த நேரங்களில் தெரிந்திருக்காத ஒரு விடயம் .

எனவே ஆங்கிலத்தில் தான் எழுத வெண்டும் ஆங்கிலத்தை எழத தெரியாத பலரும் அங்கிலம் எழுத தெரிந்தவர்களை நாட பலர் அதை உதவியாகவும் சிலர் தெழிலாகவும் செய்ய தொடங்கினார்கள். அந்த சிலரில் அங்கில அறிவுகொண்ட சபாலிங்கமும் அந்த அகதிகளிற்கான விண்ணப்படிவம் நிரப்பும் பணியை தொழிலாக செய்ய தொடங்கினார் வருவாயும் பெருகதொடங்க காலப்போக்கில் தன்னை ஒரு சட்டஆலோசகராகவே பாவனை செய்து கொள்ள தொடங்கியவர் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கபட்ட தமிழர்களிடம் தான் அவர்களிற்காய் அகதி அந்தஸ்த்து பெற்று தரமுடியும் என்றுகூறி அதிகளவு பணம் கறக்க தொடங்கினார். ஆனால் அவர் செய்தது சாதாரண முத்திரை செலவுடன்அதன் மறுவிண்ணப்பம் மட்டுமே. இப்படி அவரிடம் பணமும் கொடுத்து பயனின்றி வருடகணக்கில் அலைந்தும் முறையான எதுவித வதிவிட அனுமதி பத்திரமும் கிடைக்காத இளைஞர்கள் தங்கள் பணத்தை திருப்பி கெட்டு தெந்தரவு செய்ய தொடங்கியபோதுதான் இவரது மனித நேயமும் சன நாயகமும் புலியெதிர்ப்பும் பீறிட்டு கிழம்பியது.

தன்னை காப்பாற்றி கொள்ள அவர் வசித்து வந்த கோணெஸ்( gonesse ) என்கிற இடத்தின் காவல் நிலையத்தில் சென்று தான் ஒரு அதி தீவிர இடதுசாரியென்றும் தன்னை தாக்கவும் கொலை செய்யவும் புலிகள் அமைப்பு பலரை ஏவிவிடுவதாகவும் தனக்கு பாது காப்பு தரும்படியும். ஒரு (பெட்டிசத்தை )பதிவை போட்டார்.அதன்பின்னர்இவரிடம

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி தொடரட்டும் உங்கள் தொடர்..அவலப்ப்டுத்துங்கோ ஊத்தை ஜனநாயகத்தை பற்றி......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அவர்களே

சுவிசில இருக்கிற அல்லது இருந்த காங் (gangs)பற்றி எதாவது செய்திகள இருந்தால் தாருமன்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழபோராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 5

புலோலி வங்கி கொள்ளை 1976ம் ஆண்டுவைகாசி மாதம் நிகழ்த்தபட்டது இந்த வங்கி இலங்கை மக்கள் வங்கியின் ஒரு கிராமிய கிளையாகும். இது தமிழ் இளைஞர் பேரவை செயலிழந்த பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் என்று தொடங்கியவர்களாலேயே நிகழத்தபட்டதாகும். இஇந்த கொள்ளையை நடத்தியவர்களின் நோக்கம் அந்த கால கட்டத்தில் சிறீ லங்கா காவல் துறை மற்றும் புலனாய்வு தறையினரால் தேடபட்டும் மற்றும் சந்தேக வளையத்திழல் இருந்த இளுஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம் மாறியும் தலை மறைவு வாழ்க்கையும் மேற்கொண்டிருந்த படியால் அவர்களது அன்றாட செலவுகளையும் மற்றும் ஆயுத பொராட்டம் நடத்த ஆயுதங்கள் வெடி மருந்துகள் வாங்கவும் இந்த கொள்ளையை திட்டமிட்டனர் ஆனால் கொள்ளை நடந்ததின் பின்னர் நடந்த சம்பவங்களோ வேறானவை.

இந்த கொள்ளை சம்பவம் நடந்த நேரம் துரையப்பா கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் புஸ்பராசா வெலிக்கடை சிறையில் இருந்தார். ஆனால் இந்த கொள்ளையை கென்ஸ் மோகன் சந்திர மேகன் தங்கமகேந்திரன் கோவைநந்தன் போனறவர்களால் நிகழ்த்தப்பட்டது. இந்த கொள்ளைக்கான திட்டத்தை தீட்டி அதை பொறுப்பெடுத்து நிறைவேற்றியவர்களிலுள் முக்கியமானவர்கள் தங்க மகேந்திரனும் சந்திர மோகனுமே.இதில் தங்க மகேந்திரன் திருகோணமலையை சேர்ந்தவர் இவர் யாழ்ப்பாணத்திலேயே தனது நண்பர்கள் வீடுகளில் அந்த நேரம் வசித்து வந்தார் இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்ட காலங்களில் புஸ்பராசா குடும்பத்தினருடன் நல்ல உறவை கொண்டிருந்த காரணத்தால் அவர் புஸ்பராசா வீட்டிலேயே அந்த காலகட்டங்களில் வசித்தார்.

இவர்கள் திட்டமிட்டபடி கொள்ளை சம்பவம் மிகவும் கன கச்சிதமாக நிறைவேற்றபட்டது .வங்கியிலிருந்து சுமார் ஆறுலட்சம் பெறுமதியான நகைகளும் இரண்டு இலட்சம் பெறுமதியான பணமும் கொள்ளையிட பட்டதாக செய்திகள் வெளிவந்தன . அதேநேரம் அந்த வங்கியின் முகாமையாளராக பாலகுமார் அவர்களே இருந்தார். (ஈரோஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பிற்கு பின்னாளில் பொறுப்பாயிருந்தவர் இப்பொழுது புலிகள் அமைப்புடன் இணைந்து செயல் படுகிறார்) இந்த கொள்ளையில் பால குமாரிற்கும் தொடர்புகள் இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் கைதாகி பின்னர் விடுதலையானார். 76ம் ஆண்டு எட்டு இலட்சம் என்பது மிக பெரிய தொகையாகும்.

ஆனால் அந்த கொள்ளையைதிட்டமிட்டு கச்சிதமாக செய்து முடித்தவர்களிற்கு கொள்ளையிட்ட பணம் நகைகளை எங்கே கொண்டு போய் பாதுகாப்பாய் பதுக்குவது அந்த பெருந்தொகையான நகைகளை எப்படி விற்று பணமாக மாற்றுவது அதற்கடுத்த படியாக என்ன செய்வது என்கிற திட்டம் எதுவும் இருக்கவில்லை. அதே நேரம் கொள்ளை நடந்து முடிந்ததும் எப்படியும் காவல் துறையும் புலனாய்வு பிரிவினரும் ஏற்கனவே சந்தேக வளையத்தில் இருக்கும் இளைஞர்களை வளைத்து பிடிப்பார்கள் என்கிற காரணத்தால் எல்லோரும் தங்கள் தற்போதைய செலவிற்கு மட்டும் கொஞ்சம் பணத்தை எடுத்து கொண்டு மிகுதி பணம் நகைகளை எங்காவது சில காலம் மறைத்து வைத்து விட்டு சிறிது காலம் தலைமறைவாய் இருந்து விட்டு கொஞ்சம் காவல் துறையின் கெடுபிடி குறைந்ததும் அடுத்ததை யோசிக்கலாம் என்று நினைத்துதங்க மகேந்திரனின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு தனித்தனியாக பிரிந்து சென்று விட தங்க மகேந்திரனும் தனக்கு நம்பிக்கையான புஸ்பராசா வீட்டில் அந்த பணம் நகைகளை கொண்டு மறைத்து விட்டு அவரும் தலைமறைவாகி விட்டார்.

மறு நாள் இலங்கையின் எல்லா பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்தியாக வங்கி கொள்ளை செய்திதான் முதல் இடத்தில் இடம்பிடித்தது. வழைமை போல காவல்துறையும் புலனாய்வு துறையும் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.அந்த காலகட்டத்தில்புலனாய்வு பிரிவிலும் காவல் தறையிலும் தமிழர்கள் அதிகமாக இருந்த கால கட்டம் . எனவே இந்த வங்கி கொள்ளையை பிடிப்பதற்கான அதிகாரியாய் இங்ஸ்பெக்ரர் பத்மநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கபட்டு யாழில் பிரபலமான நகைகடைகள் மற்றும் அடைவுகடைகள் என்பன யாராவது நகைகள் விற்கிறார்களா? என்று கண்காணித்தும் சந்தேகத்தின் பெயரில் பலர்கைது செய்து விசாரிக்கபட்டுகொண்டும் இருந்தனர். ஆனால் அவர்களிற்கு சரியான ஆதாரம் எதவும் கிடைக்கவில்லை.

ஆனாலும் அவர்களதுசந்தேகமும் விசாரணைகளும் அன்றை காலகட்டத்தில் அரசிற்கு எதிராய் இருந்தஇளைஞர்கள் மீதே இருந்ததாலும் பாலகுமாரிடமும் காவல் துறையின் தீவிர விசாரணைகள் தடந்ததாலும். தங்கள் மீது காவல் துறையின் சந்தேகம் விழுந்து விட்டதை உணர்ந்த தங்க மகேந்திரன் தாங்கள் எந்த நேரமும் கைது செய்யபடாலாம் என்று நினைத்ததால் புஸ்பராசா வீட்டிலிருந்த நகைகளை பாதுகாப்பாக வேறிடம் மாற்ற திட்டம் தீட்டினார் ஆனால் அந்த கொள்ளையை நடத்தியவர்களிற்கு அந்த நேரம் இந்தியாவுடனான தொடர்புகள் ஏதும் இருக்காத காரணத்தால் அவர்களிற்கு இந்தியாவிற்கு தப்பிசெல்லும் யோசனை தோன்றவில்லை எனவே மற்றைய மாவட்டங்களில் அவ்வளவு நகைகளை கொண்டு சென்று விற்க முடியாது பிடிபட்டு விடவார்கள்.எனவே கொழும்பில் அவர்களிற்கு உறவினர்கள் நண்பர்கள் இருந்ததால் கொழும்பிற்கு கொண்டு போவது என்று முடிவு செய்யபட்டு புஸ்பராசாவின் சகோதரி புஸ்பராணி மூலமாக மூண்று நான்கு தடைவைகளாக சூட்கேசுகளில் துணிகளில் மறைத்து கொழும்பிற்கு இரயில் மூலம் நகைகள் கொண்டு செல்லபட்டது.

அங்கு முன்னர் தமிழ் மாணவர் பேரவையிலும் பின்னர் இளைஞர் பேரவையிலும் இருந்த தவராசாவின்(இவர்தான் இன்று ஈ.பி.டி.பி.அமைப்பின் முக்கிய உறுப்பினர் தவராசா)உதவியுடன் களவு பொருளை பொலிஸ்காரன் வீட்டிலேயே ஒளித்து வைத்தால் காவல்துறைக்கு சந்தேகம் வராது என்று சித்தாந்தத்தின் அடிப்டையில் மருதானையில் இருந்த தவராசாவின் காவல் தறையில் இருந்த ஒரு உறவினர் விட்டில் நகைகள் பதுக்கபட்டன. ஆனால் வேகமாய் புலளாய்வில் இருந்த பத்மநாதன் குழுவினரோ ஒரளவு கொள்ளையரை நெருங்கிவிட்டிருந்தனர். அவர்கள் பரந்தன் இரசாயன் தெரழிற்சாலையில் பொறியியலாளராய் இருந்த தவராசாவின் மூத்த சகோதரன் தங்கராசாவை கைது செய்து விசாரணைக்காய் கொண்டு சென்றதும் அடுத்ததாய் தானும் எந்த நேரமும் கைது செய்ய படலாம் என்று பதறிப்போன தவராசா காவல்துறையிடம் ஓடொடி சென்று தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை தனக்கு நகைகள் இருக்கிற இடம் தெரியும் காட்டித்தரலாம் ஆனால் அதற்கு மாற்றீடாக சகோதரனை விடுதலை செய்வதோடு தன்னையும் கைது செய்ய வேண்டாம் எனகேட்டு கொண்டு நகைகள் இருந்த இடத்தையும் யாரால் எப்படி எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்றும் விலாவாரியாக சொல்லி காட்டிகொடுத்து விட்டார்.

நாகரீகமாக சொல்வதானால் அரசுதரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.பிறகென்ன ஆத்திலை போட்டு குளத்திலை எடுத்தது மாதிரி அடுத்தநாள் பத்திரிகைகளில் புலோலியில் காணாமல் போன நகைகள் மருதானையில் மீட்கப்பட்டது என்று தலைப்பு செய்திகளில் வெளிவந்தது.அதுமட்டுமல்ல அந்த கொள்ளையில் சம்பந்த பட்ட அனைவரும் பாலகுமாரும் கைதாகி சிறைகளில் அடைக்கபட்டனர்.ஆனாலும் கொள்ளை போன நகைகளில் அரைவாசியே நகைகளே மீட்கப்பட்டது. கொழும்பிற்கு கொண்டுவரும்போது புஸ்பராசாவீட்டிலே கொஞ்சம் காணாமல் போனதாகவும் பின்னர் தவராசாவின் பொறுப்பில் இருந்தசமயம் கொஞ்சம் காணாமல் போனதாகவும் கொள்ளையில் சம்பந்நத பட்டவர்கள்பின்னர் குற்றம் சாட்டினர்

.ஆனால் அதற்கும் தங்களிற்கும் சம்பந்தமில்லை காவல்துறை அதிகாரிகளே பாதியை அள்ளிவிட்டு மீதியை நீதிமனறத்தில் ஒப்படைத்தனர் என்று புஸ்பராசா குடும்பத்தினரும் தவராசாவும் தங்கள் மீதான குற்றசாட்டை மறுத்தனர்.ஆனால் இங்கு யார் எவ்வளவு எடுத்தனர் என்று ஆராய்வது இந்த கட்டுரையின் நோக்கம் இல்லையென்பதால் அடுத்த தொடரில் புஸ்பராசா தனது புத்தகத்திலும் மற்றும் புலத்திலும் மாற்று கருத்தாளர்கள் என்று தங்களை இனங்காட்டுபவர்களும் இன்னொரு முக்கிய கொலைசம்பவத்தையும் திருப்ப திருப்ப புலியின் வாலில் கட்டிவிட துடிக்கின்றனர் அது யாழ்பல்கலை கழக விரிவுரையாளர் ரயனி திரணகம. எனவே அடுத்த பாகத்தில் ரயனியையும் திரணகமவையும் பார்ப்போம்.....................

உண்மைகள் பல சுமந்த கட்டுரையைத் தொடர்ந்து தருகிறீர்கள். பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கட்டுரையை எதிர்பார்க்கின்றேன் சாத்திரி! எல்லா இயக்கங்களும் இருந்த காலப்பகுதியில், எல்லா இயக்கங்களையும், முக்கியமாக இந்தியா உற்பட, அனைவரையும் கண்டித்திருந்த ரஜனி திரணகமவை, புலிகள் தான் கொன்றனர் என்ற வழமையான பாணியில், கதை விட்ட, திரைகளைக் கிழித்து எறிவீர்கள் என நம்புகின்றேன்.

நிகழ்காலத்தைப் பார்த்தாலே தெரியும். இதுவரைக்கும், முக்கியமாகப் பேனா முனைகளை உடைத்தவர்கள் யார் என்பது? இந்தக் கருத்துச் சுதந்திரம் பற்றிக் கதைப்பவர்கள் தான், நிமலராஜன், நடேசன், சிவராம் என்று தொடர்கதையாகக் கொலை செய்தவர்கள் என்பதை காலங்கள் காட்டி நிற்கின்றன.

தொடரட்டும். உங்களின் சிறப்பான வெளிக்கொண்டுவரல் பணி!!

மிச்சத்தயும் எழுதுங்கோ சாத்திரியார் எழுதேக்கை JVP யின் சிங்கள பெடியளுக்கு பயிற்ச்சி குடுத்தவை, பாம்புக்கு பால்வாக்கிற மாதிரி அவைக்கு சாப்பாடும் குடுத்து பாதுகாப்பாய் தங்க வைச்சு வளர்த்தவையை பற்றியும் மறந்திடாதேங்கோ...!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழபோராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் பாகம் 6

படுகொலைகளை கண்டிப்போம் படுகொலைகளை கண்டிப்போம் இது இலங்கை அரசு புலிகள் ஒப்பந்தத்திற்கு வந்ததன் பின்னர் புலத்தில் மாற்று கருத்தாளர் என்றும் மனிதவுரிமைவாதிகள் உஎன்றும் சொல்லிகொண்டு ஒரு குழுவினரின் குரல் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்க ஆரம்பித்துள்ளது.இவர்கள் படுகொலைசெய்யபட்ட சிலரின் பெயர்களை வைத்துகொண்டு தங்கள் சுய நலங்களிற்காக புலிகள்தான் இந்த கொலைகளை செய்தார்கள் என்று திருப்ப திருப்ப சொல்லியும் எழுதியும் வருகின்றனர். அப்படி அவர்களின் பட்டியலில் படுகொலைசெய்யபட்ட ஒருவரான சபாலிங்கத்தை பற்றிய உண்மையான விபரத்தை இதேதொடரில் முதலில் பார்த்தோம். அடுத்ததாக முக்கியமான இன்னொருத்தர் ரயனிதிரணகம. இவரது பெயர் ரயனி அல்ல ராஜினி என்பதே உண்மையான பெயர் ராஜினி எப்படி ரயனியானார் என்று தெரியாது.

அது முக்கியம் அல்ல இங்கு இவரின் சகோதரி தான் இன்று இங்கிலாந்தில் மாற்று கருத்தாளர் என்று மனிதவுரிமை பேசிகொண்டிருக்கும் சிலரிற்குள் முக்கியமான நிர்மலா நித்தியானந்தன் ஆவார். இவரை விட ராஜினிக்கு இன்னும் இரு சகோதரிகள் உள்ளனர்.ராஜினி ஆரம்ப காலங்களில் ஈழவிடுதலையை ஆயுதபோராட்டம் மூலமே பெற்று கொள்ள முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார் அத்துடன் கூட்டணியினரையும் கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவர்.இவர் தனது பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற காலத்திலேயே திரணகம என்ற சிங்கள இனத்தவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். பின்னர் 85 களில் மேற் படிப்பிற்காக இங்கிலாந்து வந்திருந்த சமயம் இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக வேலைத்திட்டங்கள் பலவற்றையும் செய்தவராவார்

.இப்படி இங்கிலாந்தில் இருந்த காலகட்டத்தில் ராஜினிக்கும் அவரது விரிவுரையாளர் ஒருவருக்கும் எற்பட்ட காதலினால் திரணகம ராஜினியை பிரிந்துவிட அத்துடன் இருவருக்குமான தொடர்புகள் இல்லாது போய்விட்டது. தான் ராஜினியை பிரிந்ததற்கான காரணங்கள் ராஜினியின் இயக்க தொடர்புகள் மற்றும் விரிவுரையாளருடனான தொடர்புகளே காரணம் என்று திரணகம பகிரங்கமாகவே பல இடங்களில் கூறியிருக்கிறார் இதில் இரகசியம் ஏதும் இல்லை.

பின்னர் 86 களின் ஆரம்பத்தில் இவரது சகோதரி நிர்மலா புலிகளிற்கு ஆதரவாய் தமிழ்நாட்டில் இருந்தபடி புலிகளின் களத்தில் என்கிற பத்திரிகையை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தபோது இவர் புலிகளுடன் முரண்பட்டுகொண்டு வெளியேறியதால்(இதன் விபரத்தை இன்னொருமுறை விரிவாய் பார்ப்போம்)ராஜினியும் இங்கிலாந்தில்புலிகளிற்கு ஆதரவான வேலைகளை நிறுத்தி கொண்டார்.பின்னர் இலங்கை திரும்பிய இவரிற்கு யாழ்பல்கலை கழகத்தில் மருத்துவபீட விரிவுரையாளர் பணி கிடைத்தது.

அப்போதுதான் ஈழ விடுதலை போராட்டததின் இன்னொரு அத்தியாயத்தின் திறப்பிற்கு வழி கோலிய இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்து இந்திய இராணுவத்தின் வருகையும் அதை தொடர்ந்து இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்குமான மோதல் வெடித்திருந்த கால கட்டம். இந்திய இராணுவத்தின் கண்மூடித்தனமான பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் வெறியாட்டங்களும் நடந்துகொண்டிருந்த வேளை எல்லாவற்றிற்கும் மேலான மோசமான யுத்தகால சர்வதேச விதிகள் அத்னையையும் மீறிய யாழ்வைத்தியசாலை படுகொலையை 21ம் திகதி ஒக்ரோபர் மாதம் 1987ம் ஆண்டு இந்திய இராணுவம் மேற்கொண்டது.இந்த காலகட்டங்களில்தான் ராஜினியும் சகமருத்துவபீட விரிவுரையாளரான சண்டிலிப்பாயை சேர்ந்த கோபாலசிங்கம் சிறீதரன் என்பரால் மேலும் அங்கு கணணித்துறையில் இருந்த ராயன்கூல்மற்றும் கலைப்பீட ராஜமோகன்ஆகியொரை இணைத்து யாழ்பல்கலைகழகமட்டத்தில் ஒரு மனிதவுரிமை அமைப்பை தோற்றுவித்து இந்திய இராணுவ மற்றும் இந்தியபடைகளுடன் சேர்ந்தியங்கி ஒட்டுக்குளுக்கள் முக்கியமாக ஈ.பி.ஆர்.எல். எவ் பின் மனிதவுரிமை மீறல்களையும் அவர்களின் பொதுமக்கள் மீதான படுகொலைகளையும் ஆதாரங்களுடன் தொகுத்து முறிந்தபனை என்னும் ஒரு புத்தகத்தை வெளியிட்டனர்.

இந்த புத்தகத்தை எழுதியதில் அதாவது யாழ்வைத்தியசாலை படுகொலைபற்றிய விபரங்களை ராஜினியே எழுதினார்.இதனால் சர்வதேசத்திற்கு இந்திய இராணுவத்தின் கோரமான பக்ககங்களை காட்டிநின்றது உண்மையே.இதனால் இந்திய இராணுவ அதிகாரிகள் இந்திய உளவுபிரிவு மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பினரிற்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.