Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: பெருமளவிலான படையினர் பலி; 2 டாங்கிகள் அழிப்பு

Featured Replies

2ம்இணைப்பு)புதுக்குடியிருப்ப

ில் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: 150 படையினர் பலி; 3 டாங்கிகளும் துருப்புக்காவியும் அழிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009, 11:03 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க தயாராக இருந்த சிறிலங்கா படையினா் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் மற்றும் துருப்புக்காவி உள்ளிட்ட பெருமளவிலான வாகனங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாராக இருந்த சூழ்நிலையில் இருந்தனர்.

இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் 150-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால் 2 டாங்கிகள், துருப்புக்காவி, 2 இராணுவ ஊர்திகள் (ட்றக்) மற்றும் இராணுவ பேருந்து ஆகியன விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

வாகனங்களுக்குள் படையினர் இருந்திருந்த போதே விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்த பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டுள்ளன.

பெருமளவிலான படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.

நன்றி:புதினம்

  • Replies 84
  • Views 13.3k
  • Created
  • Last Reply

கடந்த 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது ராஜபக்சே அரசு. ஆனால் போர் நிறுத்த நேரத்திலும் தாக்குதல் நடத்தி 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களை இலங்கை ராணுவம் கொன்றதாக சொன்னது புலிகள் அமைப்பு.

போர் நிறுத்த காலத்தில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துவிடும்படி தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார் ராஜபக்சே. ஆனால் இந்த அறிவிப்புக்கு தமிழ்மக்கள் ஆதரவு தரவில்லை. ஏற்கனவே ராணுவ பாதுகாப்பு வலைய பகுதியில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள் 300 பேர் உயிரை எடுத்த ராணுவத்தை நம்பி போகமாட்டோம் என புலிகள் பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.

ராணுவத்தின் பாதுகாப்பில் உயிர் பிழைத்து சித்ரவதைகள் அனுபவிப்பதை விட புலிகளுடன் இணைந்து ராணுவத்தை எதிர்கொள்வோம் என முடிவெடுத்த பெரும்பாலான மக்கள் அதற்கு தங்களை தயார் படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முயன்றபோது விடுதலைப்புலிகள் பதிலடி கொடுத்துள்ளனர். அவர்களுடன் பயிற்சி பெற்ற பொதுமக்களில் சிலரும் ராணுவத்துடன் சண்டையிட்டனர்.

புலிகளின் இந்த பதிலடியில் 1000 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர். மேலும் பெருமளவிலான ராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். ராணுவத்தின் 3 டாங்கிகளும் அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதலை உறுதிப்படுத்தும் இலங்கை அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், “ சமீபத்தில் புலிகளுக்கு தாய்லாந்திலிருந்து பெரிய அளவு ஆயுதங்கள் வந்திறங்கியுள்ளன. அந்த ஆயுதங்களுடன் ஏற்கனவே பதுக்கி வைத்திருக்கும் ஆயுத பலத்தோடு ராணுவத்தை எதிர்கொள்கின்றனர்” என்கிறார்கள்.

புலிகளுடன் களம் இறங்கியிருக்கும் பொதுமக்களோ, 1000 பேரை கொன்றதை நாங்கள் பெரிய வெற்றியாக கருதவில்லை. இந்த பின்னடைவால் மேலும் மூர்க்கத்தனமான தாக்குதலை இலங்கை ராணுவம் நடத்தும். ஆனால் எங்களைப் பொறுத்தவரை சாவுக்குத் தயாராக இருக்கிறோம் என்கிறார்கள்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2817

2ம் இணைப்பு)புதுக்குடியிருப்பில

நக்கீரன் நிருபரும் வன்னியிலதான் நிக்கிறார் போல :icon_idea:

நக்கீரன்தான் போனமுறையும் வநந்தி செய்தியை முதலில் பரப்பியமாதிரியுள்ளது :icon_idea:

Edited by Netfriend

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த பத்திரிக்கை நண்பர்களையும் புண்படுத்தாதீர்கள் அவர்கள் தவறான செய்திகள் எதையாவது வெளியிட்டால் அதை பக்குவமாக எடுத்துசொல்லுங்கள்.இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு ஈழ ஆதரவு பத்திரிகைகளினது செய்திகளுமே காரணமாகும் அவர்களை பகைக்காமல் அவர்களை எம்மோடு அரவணைத்து செல்லவேண்டும்.தமிழகத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு பத்திரிகைகள் அவசியமாகும் எமது ஈழம் சார்ந்த செய்திகளை அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பதை நாம் வரவேற்கவேண்டும் அவர்களது ஆதரவு எமக்கு எப்பொழுதும் வேண்டும் ஆகவே நண்பர்களே தயவுசெய்து அவர்களது மனம்நோகும்படியான வார்த்தை பிரயோகங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

பெரும்பாலன பத்திரிக்கைகள் ஊடகங்கள் கனக்கச்சிதமாக செய்திகளை புறக்கணிக்கின்றன. சில வருடங்களுக்கு முன் ஈழச்செய்திகளை முன்னிலைப்படுத்த காட்சி ஊடகமும் பத்திரிக்கையும் ஆரம்பித்திருந்தால் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கமுடியும். இணையத் தொடர்பு வழி மட்டுமே செய்திகளை அறிய முடிகிறது.

இனி இந்த நிலை மாற நமக்கென்ற ஊடகம் தமிழகத்தில் அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்

3ம் இணைப்பு)புதுக்குடியிருப்பில?? விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: 150 படையினர் பலி; 350 பேர் படுகாயம்; 3 டாங்கிகளும் துருப்புக்காவியும் அழிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க தயாராக இருந்த சிறிலங்கா படையினா் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் மற்றும் துருப்புக்காவி உள்ளிட்ட பெருமளவிலான வாகனங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாரான சூழ்நிலையில் இருந்தனர்.

இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் 150-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால் 2 டாங்கிகள், துருப்புக்காவி, 2 இராணுவ ஊர்திகள் (ட்றக்) மற்றும் இராணுவ பேருந்து, 2 இராணுவ உழுபொறிகள் ஆகியன இதுவரை விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

வாகனங்களுக்குள் படையினர் இருந்திருந்த போதே விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்த பெருமளவிலான படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இந்த தொடர் தாக்குதலில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீராவேசமான தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர் என விடுதலைப் புலிகள் தெரிவிதுள்ளனர்

http://www.puthinam.com/full.php?2beDD6Meb...A4cad0e0We1fDde

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பத்திரிக்கை நண்பர்களையும் புண்படுத்தாதீர்கள் அவர்கள் தவறான செய்திகள் எதையாவது வெளியிட்டால் அதை பக்குவமாக எடுத்துசொல்லுங்கள்.இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு ஈழ ஆதரவு பத்திரிகைகளினது செய்திகளுமே காரணமாகும் அவர்களை பகைக்காமல் அவர்களை எம்மோடு அரவணைத்து செல்லவேண்டும்.தமிழகத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு பத்திரிகைகள் அவசியமாகும் எமது ஈழம் சார்ந்த செய்திகளை அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பதை நாம் வரவேற்கவேண்டும் அவர்களது ஆதரவு எமக்கு எப்பொழுதும் வேண்டும் ஆகவே நண்பர்களே தயவுசெய்து அவர்களது மனம்நோகும்படியான வார்த்தை பிரயோகங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

தமிழநாட்டுப் பத்திரிகையாளர்கள் சிலர் தம் மனம்போன போக்கில் செய்திகளை உள் நோக்கோடு வெளியிடுவதை இத்தகைய களங்களில் பிரசுரித்து அவற்றிற்குரிய மறப்பறிக்கைகளை வெளியிட வேண்டியது அவசியமாகும்.

புலிகளுக்கு அமெரிக்க ஆயுதங்கள் கிடைக்க விருப்பதாக இன்று களத்தில் வந்த செய்தியில் தேசியத்தலைவரையும் நாசூக்காகக் களங்கப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். அதனைச் சுட்டிக்காட்டி விமர்சித்தபோது அந்தச் செய்தி தூக்கப்பட்டுவிட்டது. அப்படிச் செய்யும்போது விகடன் நிருபர் சொல்வதே சரியென்றாகிவிடும். மறுப்பறிக்கைகள் வரும்போதுதான் உலகம் உண்மையைப் புரிந்து கொள்ளும்.

நாம் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களை வேறுபடுத்தி அவர்கள் ஏதோ எங்களுக்குச் சலுகை செய்கிறார்கள் என்ற பாங்கில் பார்க்க வேண்டியதில்லை. அவர்களும் தமிழர்களே.

எழுதுபவரின் உள்நோக்கம் மிகத் தெளிவாகப் புலப்படுமாயின் உடடினயாகத் தக்க விதத்தில் அந்தச் செய்தியின் கபடநோக்கத்தை வெளிக்கொணரவேண்டும். அல்லாவிட்டால் அவர்கள் சொல்வதே சரியாகிவிடும்.

தகவல் தொடர்புச் சாதனங்கள் இன்டர் நெற்றினூடாக வளர்ச்சியடைந்துள்ள இந்தக்காலகட்டத்தில் இத்தகைய வஞ்சக நோக்கங்களை உடனடியாக இனங்கண்டு தாக்கியழிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரத்துடன் உரிய தரப்புகள் செய்தி வெளியிடும் வரைக்கும் தனிப்பட்ட ரீதியில் எனக்கு இதுவும் ஒரு வதந்தியே <_< . செய்தி உண்மையாயின் நிச்சயமாக உறுதிப் படுத்த வேண்டியது உரிய தரப்புக்களின் பொறுப்பு. சில ஊடகங்கள் புலம் பெயர் தமிழர்களை எப்பவுமே அருட்டப்பட்ட நிலையிலேயே வைத்திருக்க விரும்புகின்றன :rolleyes: . இச்செய்திகள் பொய் எனின் அவர்களின் மனநிலை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இதுவும் ஒருவகைப் பிரச்சாரத் தந்திரமே... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: 150 படையினர் பலி; 350 பேர் படுகாயம்; 3 டாங்கிகளும் துருப்புக்காவியும் அழிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009, 11:03 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க தயாராக இருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் மற்றும் துருப்புக்காவி உள்ளிட்ட பெருமளவிலான வாகனங்கள் விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாரான சூழ்நிலையில் இருந்தனர்.

இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர்.

இதில் 150-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால்

டாங்கிகள் - 02

துருப்புக்காவி - 01

இராணுவ ஊர்திகள் (ட்றக்) - 02

இராணுவ பேருந்து - 01

இராணுவ உழுபொறிகள் - 02

ஆகியன இதுவரை விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

வாகனங்களுக்குள் படையினர் இருந்த போதே விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்த பெருமளவிலான படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இந்த தொடர் தாக்குதலில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்ட வண்ணம் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர் என விடுதலைப் புலிகள் தெரிவிதுள்ளனர்.

puthinam.com

சந்தோசமான செய்தி.... ஆனால் தயவு செய்து, உறுதிப்படுத்தாத எந்த செய்திகளையும் பரப்பாதீர்கள். புதினம் அல்லது தமிழ்நெட் செய்திகள் மட்டுமே உறுதிப் படுத்த கூடிய புலிகளின் பக்கம் இருந்து வரக் கூடிய செய்திகள் என்பதை மறவாதீர்கள்

கட்டுக்குள உடைப்பில் பட்ட அனுபவத்தினை மறக்காதீர்கள்

இப:படிச் செய்திகளை மிகைப்படுத்திச் சொல்வதால் உண்மையான இராணுவ இழப்பைக் கூட சந்தேகக் கண்ணாகவே பலர் பார்க்க நினைப்பார்கள் என்பதை இப்படியான ஊடகங்களும் உணர்வதில்லை. ஏதோ செய்திகளை மிகைப்படுத்தி தங்கள் பத்திரிகை விற்றால் போதுமென்பதும் தமது இணையத்தளத்திற்கு பலர் வந்தார்கள் என்பதைக் கணக்குக் காட்டுவதுமே பல ஊடகங்களின் நிலைப்பாடும். இப்படியான மிகைப்படுத்தல் செய்திகளை இணைப்போரும் இது பற்றிச் சிந்திப்பதும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனித்தான் இருக்கு

இனித்தான் இருக்கு

நாங்கள் எங்கட பொறுப்புகளை செய்து முடிக்கும் மட்டும் அப்படி எல்லாம் எதிர்பார்க்க முடியாது...

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவவெற்றிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மக்கள் அவலங்களுக்கே முக்கியத்துவம் கொடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா? போனகிழமை சனிக்கிழமை.... இந்த முறை ஞாயிறா??

ஈழம் வெல்லும் என்பது உண்மை. ஆனால் சிங்கள இராணுவத்தில் இருந்து நாம் மக்களைக் காப்பாற்றினால் தான் மேலும் இலகுவாகும்...

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எங்கட பொறுப்புகளை செய்து முடிக்கும் மட்டும் அப்படி எல்லாம் எதிர்பார்க்க முடியாது...

நிச்சயமாக

'Tigers in pitched battle against genocidal military' - LTTE

[TamilNet, Sunday, 01 February 2009, 13:48 GMT]

"The defensive formations of the Liberation Tigers are courageously facing the Sri Lanka Army, which has been engaged by Colombo in a genocidal war against Tamils," said S. Puleedevan from LTTE's Political office in Vanni Sunday evening. The offensive units of the SLA were dumped near Puthukkudiyiruppu (PTK) in full strength, with tanks and all preparedness in their craving to capture PTK in the next one or two days, but are now pushed back beyond their forward lines, he said. The fighting, which began in the early hours of Sunday was still continuing.

Three battle tanks, two troop carriers, a military bus and two tractors were fully destroyed in the fighting so far, Mr. Puleedevan said.

150 SLA soldiers were killed and more than 350 have been wounded. The Tigers have been seizing heavy military hardware and recovering dead bodies of the SLA soldiers, who were killed in action, he further said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28253

அடப்பாவிகளா? போனகிழமை சனிக்கிழமை.... இந்த முறை ஞாயிறா??

ஈழம் வெல்லும் என்பது உண்மை. ஆனால் சிங்கள இராணுவத்தில் இருந்து நாம் மக்களைக் காப்பாற்றினால் தான் மேலும் இலகுவாகும்...

இதில் இருந்து என்ன தெரிகீறதுச் அனி ஞாயிறுகளிலும் வேலை வெட்டிக்கு போகனும் :icon_idea:

இதில் இருந்து என்ன தெரிகீறதுச் அனி ஞாயிறுகளிலும் வேலை வெட்டிக்கு போகனும் :icon_idea:

:rolleyes:<_<:D

சும்மா இருக்கும் மனமே சாத்தானின் உறைவிடம்...

:icon_idea::rolleyes:<_<

சும்மா இருக்கும் மனமே சாத்தானின் உறைவிடம்...

அன்று அண்ணன் திலீபன் சொன்னது போல

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்"

"விடுதலை வேண்டும் தமிழினமே

விடுதலை சும்மா விளைவதில்லை"

இன்னும் பிந்தவில்லை இனியும் வெல்லலாம் ,இன்றே தொடங்குங்கள்

அவன் செய்வான் இவன் செய்வான் என்று ஆறி இருக்காமல்

நான் செய்வேன் என்று நகருங்கள் முன்னே

இதற்காக மக்கள் மீது நடத்தப்படப் போகும் பதிலடித் தாக்குதலை எதிர்கொள்ள முற்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்!

எதற்காக 58ம் ஆண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்?

புலிகள் தாக்கினாலோ தாக்காவிட்டாலோ, சிங்களவரின் கீழ்வாழும் தமிழர்கள்மீதான தொடர்ந்துகொண்டேதானிருக்கும

இப:படிச் செய்திகளை மிகைப்படுத்திச் சொல்வதால் உண்மையான இராணுவ இழப்பைக் கூட சந்தேகக் கண்ணாகவே பலர் பார்க்க நினைப்பார்கள் என்பதை இப்படியான ஊடகங்களும் உணர்வதில்லை. ஏதோ செய்திகளை மிகைப்படுத்தி தங்கள் பத்திரிகை விற்றால் போதுமென்பதும் தமது இணையத்தளத்திற்கு பலர் வந்தார்கள் என்பதைக் கணக்குக் காட்டுவதுமே பல ஊடகங்களின் நிலைப்பாடும். இப்படியான மிகைப்படுத்தல் செய்திகளை இணைப்போரும் இது பற்றிச் சிந்திப்பதும் இல்லை.

முதல் நாள் வந்த பத்திரிகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையை அடுத்தநாளே வாசகர்கள் மறத்துவிடுவதால் எந்த கூச்சமுமின்றி தொடர்ந்து அதே தவறை செய்ய உட்சாகமடைகின்றனர் இந்த பத்திரிகையாளர்கள்.

வாசகர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினால் ஒழிய, இவ்வாறான இடைநிலை பத்திரிகைகள் பொறுப்புணர்வை கடைப்பிடிக்க மாட்டாது.

இன்றைக்கு என்று பார்த்து தலைநகரின் வீதிகளில் ஒரு மருத்துவண்டியை கூட காணக்கிடைக்கவில்லை!

எதற்காக 58ம் ஆண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்?

புலிகள் தாக்கினாலோ தாக்காவிட்டாலோ, சிங்களவரின் கீழ்வாழும் தமிழர்கள்மீதான தொடர்ந்துகொண்டேதானிருக்கும

இதற்கான ஒரே தீர்வு புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளிலேயே சிறிய மாதிரித்தமிழீத்தை அமைத்து தங்கள் போராட்டங்களை தங்கள் வீட்டுக் கொல்லை வரை விஸ்தரிப்பதேயாகும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.