Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெர்ந்தவர்கள் நாடு திரும்பவேண்டும்: ஜனாதிபதி அழைப்பு

Featured Replies

இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்ற மோதல்கள் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் நாடு திரும்புவதற்கான காலம் கனிந்துள்ளது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது சுதந்திரதின உரையில் தெரிவித்தார்.

உலகில் எவ்வளவு எண்ணிக்கையான தேசங்கள் இருப்பினும் ஒருவருக்கு தான் பிறந்த நாட்டைப் போன்று பாதுகாப்பான இடம் வேறொன்றும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், 20 வருடங்களுக்கு மேலாக நீடித்துச்

சென்ற துரதிர்ஷ்டவசமான மோதல்கள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய அனைத்து இலங்கையர்களும் நாடு திரும்பவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை இலங்கையின் 61வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் நிகழ்வுகள், முப்படையினரின் அணிவகுப்பு மரியாதைகள், கனரக இராணுவ வாகனங்கள், விமானப்படை விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களின் அணிவகுப்புக்களுடன் நடைபெற்றது.

காலை 9.02 அளவில் நாட்டு மக்களுக்கு மிக நீண்ட சுதந்திரதின உரையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றினார்.

"ஓன்றுசேர்க்கப்பட்ட தாய்நாட்டின் மீது, மக்களின் வாழ்த்துக்களுடனும், பிரார்த்தனைகளுடனும் இன்று நாம் தேசியக்கொடியை ஏற்றிவைத்துள்ளோம் என்பதை பெருமையுடன் உங்களுக்கு அறிவிக்கிறேன்" என்று தமது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மக்களின் அளப்பரிய தியாகங்களின் மூலம் தாய்நாட்டின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

காலத்துக்குக் காலம் பல்வேறு தரப்புக்களாலும் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புச்செய்யப்பட்ட தாய்நாட்டுக்கு 1948இல் சுதந்திரம் கிடைத்தபோதும், பல்வேறு பிரிவினைகளுடன் கையளிக்கப்பட்ட நாட்டை முன்னேற்றமடையச்செய்ய முடியவில்லை என்று ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்தபடியே இலங்கையின் சுதந்திரதினம் ஒவ்வோராண்டும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சிங்களவர்களையும், முஸ்லிம்களையும், தமிழர்களையும் கொன்றொழிக்கும் பயங்கரவாதம் நாட்டில் நிலவிவந்ததாகக் கூறினார்.

உலகிலேயே மிகவும் பலம்வாய்ந்த இந்தப் பயங்கரவாத அமைப்பு நாட்டை துண்டாடி தமிழீழ தனிநாட்டை உருவாக்கும் அளவுக்கு வளர்ச்சிகண்டிருந்தபோது, அப்போது இந்த நாட்டை நிர்வகித்த சிலர் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நாடு துண்டாடப்படுவதை அனுமதிக்கவேண்டும் என்று நிர்ப்பந்தித்தனர். நிலம், கடல், ஆகாயத்தின் மீதான அதிகாரத்தைக் கொண்டிருந்த மோசமான தற்கொலையாளிகளுடன் சமாதானம் செய்யுமாறு பல வெளிநாட்டுச் சக்திகள் எம்மை நிர்ப்பந்தித்தன.

இந்த நாட்டின் முன்னைய ஆட்சியாளர்கள் பலரும் இராணுவ வழிமுறைகளின் மூலமும், பேச்சுவார்த்தைகளின் மூலமும் பிரச்சினைக்குத் தீர்வுகாண எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

இதனால்தான் நான் 'பிரிக்கப்படாத நாடு, பொது உடன்பாடுள்ள தேசம், கௌரவமான சமாதானம்' என்பவற்றை இலக்காகக் கொண்டு ஒரு புதிய வழிமுறையைத் தேர்ந்தெடுத்தேன்.

"இந்த நாட்டை பல தசாப்தங்களாக அச்சுறுத்தலுக்குள்ளாக்கிவந

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏன் சிறிலங்காவுக்கு வர வேண்டும்? சிறிலங்கா நாங்கள் பிறந்த இடம் இல்லையே? :icon_mrgreen:

அது சரி சுதந்திர நாடு ஒன்றில் கோழி கூட்டுக்குள் நின்று கொக்கரிப்பது போல் மக்களுக்கு முன் கூட்டோடு நின்று பேச வெட்கமாயில்லை. :wub:

  • கருத்துக்கள உறவுகள்
உலகில் எவ்வளவு எண்ணிக்கையான தேசங்கள் இருப்பினும் ஒருவருக்கு தான் பிறந்த நாட்டைப் போன்று பாதுகாப்பான இடம் வேறொன்றும் கிடையாது
:icon_mrgreen::wub::unsure:

ஏன்? சிறிலங்கன் எயார்லைனுக்கு வருமானம் குறைஞ்சுட்டுதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுங்கோ அண்ணே nhபறுங்கோ அடுத்த சுகந்திர தினத்தில சந்திப்பம்

"எமது படையினர் இந்த வெற்றியை தமது சொந்த அறிவு, திறன்கள் என்பவற்றின் மூலமே பெற்றுள்ளனர். எந்தவொரு வெளிநாட்டு வல்லுநர்களின் ஆதரவுடனும் இந்த வெற்றியை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை" என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,

அப்ப கொஞ்ச நாளுக்கு முன்னம் வந்து இரணை மடு குளக்கட்டிலை ஏறி நிண்டு கொட்டாவி விட்ட அந்த வெள்ளைத்தோல், மஞ்சள் தோல், கறுத்த தோல் எல்லாம்...????? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"எமது படையினர் இந்த வெற்றியை தமது சொந்த அறிவு, திறன்கள் என்பவற்றின் மூலமே பெற்றுள்ளனர். எந்தவொரு வெளிநாட்டு வல்லுநர்களின் ஆதரவுடனும் இந்த வெற்றியை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை" என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,

அப்ப கொஞ்ச நாளுக்கு முன்னம் வந்து இரணை மடு குளக்கட்டிலை ஏறி நிண்டு கொட்டாவி விட்ட அந்த வெள்ளைத்தோல், மஞ்சள் தோல், கறுத்த தோல் எல்லாம்...????? :icon_mrgreen:

உதைத்தான் எங்கட அப்பன் குதிருக்குள்ள இல்லை எண்டு சொல்லுறது"...ஒரு பொய்யை திரும்பத்திரும்பச் சொன்னால் 'உண்மையாகாது பாருங்கோ" ..

வெளுக்கும் சாயம் விரைவில்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்டைக்கும் சிறிலங்கன் என்று சொன்னது இல்லை.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லாரையும் கூப்பிட்டு வைச்சு கூட்டோண்ட அனுப்பவோ...??!

மகிந்த மேல்லோகத்துக்கு அனுப்பிய எங்கள் உறவுகளை மீண்டும் கூட்டிக் கொண்டு வந்தார் என்றால்.. தமிழர்கள் வருவார்கள்.. சிறீலங்காவுக்கு..!

வன்னில இருக்கிற மக்களைக் காக்க வக்கில்ல.. வந்திட்டார்யா.. புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விட..! :unsure:

மகிந்த நீங்க எவ்வளவுக்கு வேசம் போட்டாலும்.. பேரினவாத பூதம் உங்க மூஞ்சில அப்படியே ஒட்டி இருக்கிறது தெரியுது.

அமெரிக்காவும்.. ஐரோப்பாவும்.. இந்தியாவும்.. சீனாவும்.. பாகிஸ்தானும்.. இஸ்ரேலும்.. 1987 ஒப்பரேசன் லிபரேசன் காலத்தில இருந்துதான் எமக்கு எதிராக செயற்படுகின்றன. அவை எப்போதும் எமக்கு ஆதரவாக செயற்பட்டதில்லை.

இன்றைய தமிழர் படையின் பின்னடைவு.. தற்காலிகமானது. தமிழர் படை வீறு கொண்டெழும். அது புலம்பெயர்ந்த தமிழர்களாலும் நடக்கும். அப்ப தெரியும்.. மகிந்தவின் முழக்கங்களின் விளைவுகள்...! :icon_mrgreen:

என்னைப் பொறுத்தவரை நான் சாதாரண சிங்கள மக்களுக்கு எதிரானவனல்ல. சிங்கள தேசத்தையும் நான் வெறுக்கவில்லை. ஆனால் சிங்களப் பேரினவாதத்தையும் அதன் அரசையும் அதனை ஆதரிக்கும் அந்நிய சக்திகளையும் மிக மோசமாக வெறுக்கிறேன்..! :wub:

Edited by nedukkalapoovan

நாங்கள் போனால் .......... கருணா, டக்கிலசு, பிள்ளையான், சித்தாத்தன் பாடு கொண்டாட்டம் தான்!! ரஜபக்ஸ பிரதர்ஸோடு போட்டி போட்டு கடத்தலாம், அறவிடலாம், போடலாம் ... ம்ம்ம்ம்ம்ம்ம் ..... நாங்களும் போவம் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காமெடி பன்னுறார்

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே பார்த்தன் புலிகளுக்கு உள்ள ஒரே ஒரு பொருளாதார வளத்தையும் இல்லாமல் செய்யிற யோசனையோ? கொஞ்சம் பொறுங்கோ தலைவர் ஆப்பு இறுக்கிற நேரம் வெகுதொலைவில் இல்லை.இப்ப நீ பேசிற நேரம் நாங்கள் கேட்கிற நேரம்.நாங்கள் பேசிற நேரமும் வரம்.

மதியாதார் வீட்டு வாசல் மிதியாதே - ஆயினினும்

நம் மூதாதயர் வீட்டுக்கும் வாசல் அதுதானே!!!

தோணவில்லையெனில் பேசாதிருத்தல் மேல் - அஃதினில்

தோன்றியதெனில் போய் சாதிப்பது நன்றேல்.

நம் சகோதர இரத்தங்கள் சாவின் அனுதாபங்கள் - ஆனால்

நம் இன்னுயிர்கள் போகுமெனின் பல வாதங்கள்....!!!!

நெடுக்கு சரியாக சொல்லியிருக்கிறார்....

ம்கிந்தாவிற்கு இப்போதுள்ள பிரச்சனை புலம்பெயர்மக்கள் தனது போலி முகத்திரையை கிழித்துகொண்டு இருப்பதுதான்..

வெளி நாடுகளுக்கு ஒரு நடிப்பில் இலங்கை முழுவதும் அரசின் கையில் வந்துவிட்டது.. இனி வெளி நாட்டில் இருக்கும் தமிழர்களை அனுப்புங்கள் என்று சொல்லி பணமும் வாங்கி, தமிழரையும் எடுத்து பரலோகம் அனுப்பி வெளி நாடுகளிலும் பிரச்சனையில்லை, இலங்கையிலும் பிரச்சனை இல்லை..

அதாவது ஒரு கல்லில் பல மாங்காய்.. எப்படி?

எனவே புலம் பெயர் தமிழ்மக்களே அதி உசாராக இருந்து செயல் திட்டங்களை செய்து.. நிரந்தர தமிழர்விடிவிற்கு செயல்படுங்கள்...

உலகம் இலங்கையின் நடிப்பில் மயங்கி இருந்து வருகிறது..

காலதாமதம் தமிழின அழிப்பு நிச்சயம்..

ஒற்றுமை, செயல் எதிரியின் கனவை உடைத்து எம்கனவை செயலாக்கும்..

அல்லது உலகம் முழுதும் உங்களை துக்கி ஏற்றி இலங்கையின் கையில் கொடுத்து வேடிக்கை பார்க்கும்..

இனி தீர்மானியுங்கள் எது உங்கள் தேர்வு?

ஈழத்தில் இருந்த தமிழர்களை கொன்றுகுவித்து வருகிறார் அது போதாதென்று வெளிநாட்டில் பாதுகாப்பாக இருக்கும் தமிழர்களையும் கூப்பிட்டு கொன்றுகுவிக்க முடிவெடுத்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை போனா சுடலைக்கு போன மாரி தான்..கண் கெட்டு போவன் நல்லா தான் நடிக்கிறான் வெளி உலகத்துக்கு.... உவனுக்கு கிட்டடில ஆப்பு வைக்கனும்.. இவர் எப்ப பாத்தாலும் நாய் மாரி வல் வல் என்று குலைக்கிறார்.. உவட்ட வாய் கொழுப்ப அடக்கனும்.. ..ஒரு உயிர் ஆயுதம் தானோ :icon_mrgreen:

நான் இப்பவே ஓடி வரத் தயார், ஆனால் மகிந்த மட்டும்தான் என்னை வரவேற்க தனியாக வரவேண்டும்... :icon_mrgreen:

எல்லாம் நேரம்...

சனங்கள் போகேக்க எயாப்போட்டுக்கு போய் வழியனுப்பிவைச்சவர் கூப்புடுறார் போங்கோ.

அங்கேருந்து சனம் போகப்பட்டபாடு.. அந்த நாய்ப்பட்டடை எயாபோட்டில அவங்கல் செய்த அனியாயங்கள் கொஞ்சமா நஞ்சமா?...

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணாக்கு ஒரு சபாஷ் ...........நீண்ட காலத்தின் பின் அர்த்தமான பாட்டு ." ஒரு காலம் உருவாகும் உண்மையே "...........நீங்க இப்பயெல்லாம் ரசிபீங்க்களா. ? பொருத்தமான் இடத்தில பொருத்தமான நேரத்தில , அங்க தான் நம்ம நெடுக்ஸ நிக்கிறார். .பாடல் கேட்டுள்ளேன் காட்சியுடன் இன்று ....மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணாக்கு ஒரு சபாஷ் ...........நீண்ட காலத்தின் பின் அர்த்தமான பாட்டு ." ஒரு காலம் உருவாகும் உண்மையே "...........நீங்க இப்பயெல்லாம் ரசிபீங்க்களா. ? பொருத்தமான் இடத்தில பொருத்தமான நேரத்தில , அங்க தான் நம்ம நெடுக்ஸ நிக்கிறார். .பாடல் கேட்டுள்ளேன் காட்சியுடன் இன்று ....மிக்க நன்றி.

தாயகத்தில் தமிழீழ வானொலியில் 90 களில் இப்பாடலை கேட்டிருக்கிறேன். தமிழீழ வானொலி விடுதலை கானங்களோடு இவ்வகையான தெரிந்தெடுத்த சமூக விழிப்புணர்ச்சியூட்டும் சினிமாப் பாடல்களை நேயர்களுக்குத் தர தவறுவதில்லை. நிச்சயம் தமிழீழ வானொலிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்ததே இது... என்னைப் பொறுத்தவரை..!

நாங்கள் பள்ளிக்குப் போற காலத்திலேயே பள்ளிப் பையினுள்.. மில்லர் அண்ணா.. திலீபன் அண்ணாவின் துண்டுப்பிரசுரங்களோடு.. கொக்குவில் பக்கம் இந்திய இராணுவத்துக்கு தண்ணி காட்டியவர்கள்.. (சின்னப் பையன்கள் என்ற படியால எங்களை சோதனை செய்வதில்லை. நாம் தேவையானவற்றை அண்ணாமாருக்கு சென்றி தாண்டி எடுத்துக் கொண்டு போய் கொடுப்போம்.).. அப்படி போராடிய எனது நண்பர்களில் ஒருவர் மணலாறில் வீரச்சாவடைந்து விட்டார்...! ஆனால் அன்றிருந்த யாழ்ப்பாணம் இன்றில்லை. இன்று பலரும்.. அச்சுறுத்தலுக்கு அடி பணிந்து போய் விட்டார்கள்...! சுய நலமும் வெளிநாட்டு மோகமும் கூடிட்டுது..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

Edited by தாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

"உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை (தமிழ் ஈழ ) மறக்கலாமா ?

நல்லதொரு புத்துணர்ச்சி யூட்டும் பாடல் .......நன்றி தாயகன்.

Edited by nillamathy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.