Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. அமைதிகாக்கும் படையை அனுப்பும் காலம் நெருங்கிவிட்டது: ஐரோப்பிய ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ் பொதுமக்களின் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா. அமைதிகாக்கும் படையை அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் றொபேர்ட் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற தலைப்பில் றொபேர்ட் இவான்ஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

அதில் றொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:-

ஐயா இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தம் ஒன்று உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எவ்வாறாயினும் பொதுக்கள் குருதிப்பெருக்கைத் தவிர்ப்பதற்கு நாட்டுக்குள் ஐ.நா. அமைதிகாக்கும் குழுவை அனுமதிக்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்துவதற்கான வேளை வந்துள்ளதாக நான் நம்புகின்றேன்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருப்பதாக நாட்டிலிருந்து வெளியாகும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தனது பக்கத்திற்கு வருமாறு இலங்கை அரசு தமிழ் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. ஆனால் அவ்வாறு வருவது தொடர்பான இயற்கையான தயக்கமும், அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளன. இதற்குச் சமாந்தரமாக தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் மக்கள் தப்பிச்செல்ல முயற்சித்தால் புலிகள் அவர்களைச் சுட்டு விடுவார்கள் என்பது தொடர்பான செய்திகளும் உள்ளன.

தமிழ் மக்கள் அதிகளவுக்கு இழப்புக்களையும் அழிவுகளையும் எதிர்கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. இலங்கைப் படையினர் மற்றும் அவர்களின் முகாம்கள் தொடர்பாக அவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் வித்தியாசமான மொழி குறித்துக் குறிப்பிடத் தேவையில்லை. சர்வதேச சமூகம் உடனடியாகச் செயற்படாவிடின் சுமார் 250,000 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பேரனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.

மேலதிகமாக ஐ.நா.வும், சர்வதேச சமூகமும் இந்த மக்களுக்கு மனிதாபிமான உதவி சென்றடைவதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துமாறு நான் அழைப்பு விடுகின்றேன். அத்துடன் சர்வதேச பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் செல்வதற்கு முழுஅளவில் அனுமதி வழங்க வேண்டும். காலம் கைநழுவிச் சென்று கொண்டிருக்கிறது. முன்னுரிமை கொடுத்து இந்த உதவியை மேற்கொள்ள வேண்டும்.

றொபேர்ட் இவான்ஸ்,

தெற்காசிய உறவுக்கான ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவின் தலைவர்

http://www.tamilwin.com/view.php?2a46QVb4b...dg2hr2cc0bj0W3e

Edited by kuddipaiyan26

இது இனி எங்கபோய் முடியுமோ?...

இருக்கிறதை விடுபோட்டு ஏன் பறக்கிறது ஆசைப்படுவான்... சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துவது.

இது இனி எங்கபோய் முடியுமோ?...

இருக்கிறதை விடுபோட்டு ஏன் பறக்கிறது ஆசைப்படுவான்... சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துவது.

எமக்குள்ள பிரச்சனையே இதுதான்

உலகம் தலையீடு செய்யவும் வேணும்

அதில் நாம் நினைப்பது மட்டும் நடக்கவும் வேணும்.

தமிழரை காக்க ஐநா தலையீடு செய்வதை விட வேறு வழி கிடையாது.

அதையும் தடுத்தால் சிறீலங்கா இழுபறி செய்து கொண்டே

அங்குள்ள அனைத்து தமிழரையும் கொன்றொழுத்து விடும்.

அவர்களது தலையீடு தேவையில்லை என்றால்

ஐநா முன் ஏன் இந்த கூக்குரல் மற்றும் தீக்குளிப்புகள்?

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா அமைதிப்படை தமிழர் தாயகத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்.. யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்கவும்.. தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறீலங்காப் படை விலகலை செய்யவும் வருமாயின் வரவேற்கலாம். இன்றேல்.. அதுவும் இந்திய அமைதிப்படை போல.. தமிழர்களின் போராட்டத்தை நசுக்க முற்படின்.. அது ஆபத்தானதாகவே அமையும்.

ஐநா அமைதிப்படையின் பல வெளிநாட்டு செயற்பாடுகள் குழப்பகரமாக அமைந்திருந்ததுடன்.. போராடும் தரப்புகளுக்கு பாதகமாக அமைந்திருந்த கடந்த கால வரலாறுகளை கருத்தில் கொண்டு ஐநா படையின் வரவையும் அதன் நோக்கையும் தெளிவாக வரையறுத்துக் கொண்டே அதனை தமிழர் தாயகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

பின்னர் வந்த பின்னர்.. ஆயுதக் களைவு.. மண்ணாங்கட்டி என்று ஆரம்பிச்சு.. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முற்றாக நசுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததுடன்.. இன்று கூவி அழைக்கும் ஐநாவை.. நாளை வெளியேறு என்று கத்தவும் சந்தர்ப்பம் அமையலாம்..! :icon_idea:

எமக்குள்ள பிரச்சனையே இதுதான்

உலகம் தலையீடு செய்யவும் வேணும்

அதில் நாம் நினைப்பது மட்டும் நடக்கவும் வேணும்.

தமிழரை காக்க ஐநா தலையீடு செய்வதை விட வேறு வழி கிடையாது.

அதையும் தடுத்தால் சிறீலங்கா இழுபறி செய்து கொண்டே

அங்குள்ள அனைத்து தமிழரையும் கொன்றொழுத்து விடும்.

அவர்களது தலையீடு தேவையில்லை என்றால்

ஐநா முன் ஏன் இந்த கூக்குரல் மற்றும் தீக்குளிப்புகள்?

இதுக்குப்பிறகு நெடுகுச்சொன்னதையும் பார்த்திருப்பீர்கள்......

முதல்ல வாற ஜ.நா நடுநிலையா இருக்கவேண்டும் ...... எல்லாத்துகு முதல்ல ஜ.நா வரவேண்டும்.

ஆட்டை முன்னம் அறுக்கவேண்டும்... அதுக்குமுன்னம் எதையும் சொல்ல ஏலாது.. இது எங்களின் படனுபவம்.

Edited by Sooravali

ஐநா நம்பகமானதில்லை என்றால்

ஐநா முற்றத்தில் ஏன் கோஸங்கள்?

நாம் எவரையும் நம்புவதில்லை

நம்மை நமே கூட

இதுவே உண்மை

இன்னும் ஒரு அமைதிப் படை...? இவர்கள் செயற்பாடுகள் பக்கச் சார்பனவையாகவே உள்ளன. இப்படை எம்மை இன்னும் நலிவுறச் செய்யாது என்பது என்ன நிச்சயம்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

அனுப்பும் படை அமைதிப்படையாக இருந்தால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா நம்பகமானதில்லை என்றால்

ஐநா முற்றத்தில் ஏன் கோஸங்கள்?

நாம் எவரையும் நம்புவதில்லை

நம்மை நமே கூட

இதுவே உண்மை

ஐநாவின் முன்னான கோசம் என்பது ஐநாவை வைச்சு.. ஜனநாயகச் சூதாட்டம் நடத்துபவர்களின் உண்மை முகத்தை உலகின் முன்னிலைப்படுத்தவே.

ஐநா நன்கு அறியும்.. இந்தப் போரை.. உலகில் யார் யார் முன்மொழிந்து சிறீலங்கா முன்னெடுக்கின்றது என்பதை. இந்தப் போரை தடுக்க நினைத்திருந்தால் 2005/6 ம் ஆண்டு சந்திரிக்கா யுத்த நிறுத்த விதிகளை மீறி சம்பூரில் மேற்கொண்ட விமானத்தாக்குதலை அடுத்து தடுத்திருக்கலாம். மிஞ்சிப் போனால் 2007 இல் சிறீலங்கா யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து தன்னிச்சையாக விலகிய போது தடுத்து நிறுத்தி இருக்கலாம்.

இன்று வன்னி பேரழிவுகளை சந்தித்த பின் தான் இந்த யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறான ஒரு நிலையில் ஐநா அமைதிப்படை என்ற கருத்து முன்வைக்கப்படும் போது அதனை இட்டு நாம் மிக அவதானமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.

இன்று தமிழ் மக்கள் உதவி கேட்டு அபயக்குரல் எடுப்பும் நிலையை உருவாக்கியதும்.. இதே ஐநாவும் அதன் பின்னால் அதனை இயக்கும் பலமிக்க நாடுகளுமே..! எனவே.. மனித உரிமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே மனித அழிவாயுதங்களையும் அவற்றை பாவித்தற்கான பயிற்சிகளையும் வழங்கும் சக்திகளின் முன்னால் தான் நாம் அவர்களின் வேசத்தைக் கலைக்க குரல் கொடுக்கனும். அன்றி.. இப்போர்களை மக்கள் அழிவுகளை தடுத்து நிறுத்த முடியாது.

ஐநாவின் முன்னான குரலும்.. இத்தகைய ஒன்றே. ஆனால் நிச்சயமாக தமிழ் மக்களின் அபயக்குரலை.. குள்ள நரிகள் தங்கள் வேட்டைக்கான தருணமாகவே பாவிக்க முயலும். அதை நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு நரிகளின் தந்திரங்களை சாமர்த்தியமாக எதிர்கொண்டபடி.. எம்மைச் சுற்றி எழுப்பபட்டுள்ள தடைகளை சவால்களை தாண்டி.. எமது மக்களின் அபயக்குரலை தனிக்க முற்படுவதே சாதுரியமாக இருக்கும். அதன் ஒரு பகுதியாகவே உலகெங்கும் நிகழும் எமது மக்களின் அவலம் சொல்லும் அபய குரல் ஒலிப்புக்கள். அவை இந்த உலகின் மனச்சாட்சியை தட்டுவது மட்டுமல்ல.. குள்ள நரிகளின் வேசத்தையும் கலைக்க உதவும்..!

ஐநா அமைதிப்ப்படை என்பது.. இரண்டு வகையில் கையாளப்பட்டக் கூடியது. ஒன்று எமக்கு ஆதரவானது போல வெளித்தோற்றத்துக்கு தெரிய நுழைந்து எம்மை அழிப்பது. இரண்டு உண்மையாகவே எமது மக்கள் மீதான கரிசணையின் பால் கையாளப்படுவது. இதில் இரண்டாவதை உறுதி செய்து கொள்ள வேண்டியது எம் பொறுப்பு. இன்றேல்.. இன்றைய இந்த அபயக் குரல்கள் ஓயாமல் தொடரவே செய்யும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா நம்பகமானதில்லை என்றால்

ஐநா முற்றத்தில் ஏன் கோஸங்கள்?

நாம் எவரையும் நம்புவதில்லை

நம்மை நமே கூட

இதுவே உண்மை

அந்த அளவுக்கு நாம் பட்ட கசப்பான அனுபவங்கள் தான் எம்மை சந்தேகப்பட வைக்கிறது. ஐ. நா படை வரவேண்டும் . அவர்கள் நடுநிலையாளர்களாக வரவேண்டும் என்றே முருகதாசன் தன்னை தானே எரித்துக்கொண்டார். நான் நினைக்கவில்லை ஐ. நா வந்து எமது போராட்டத்தை சின்னாபின்னமாக்குவதற்காக அவர் தன் இனிய உயிரை அர்ப்பணிக்கவில்லை.

எப்படி இலகுவில் மற்றவர்களை நம்புவது? உதாரணம்: இந்தியராணுவத்தின் துரோகம், கருணா போன்றோரின் துரோகம்.

எதற்கும் நாம் எச்சரிக்கையாக இருப்பது எமக்கு தான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா நம்பகமானதில்லை என்றால்

ஐநா முற்றத்தில் ஏன் கோஸங்கள்?

நாம் எவரையும் நம்புவதில்லை

நம்மை நமே கூட

இதுவே உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

இவரது கேள்வியே எம்மைக்குறிவைப்பதுபோலுள்ளத

நெடுக்கு சொல்வதில் பல உண்மைகள் உண்டு.. ஆனால் தமிழ்மக்கள் படுகொலைகளை நிறுத்துவதற்கு சில வழிகளில் இலங்கையை நெருக்கலாம்

1. இலங்கை உடனடியாக உலகனாடுகளுக்கு கட்டுப்படாவிட்டால் உடனடியாக புலிகளின் மீதுள்ள தடையை உடன் எடுத்துவிடுவதாக அறிவித்தால் உடன் மிரளும்.. இந்த சிந்தனையை இங்கிலாந்தின் ஐரோப்பிய பிரதினிதிக்கு எடுத்துக்கொடுத்தல் நன்று..

உடன் கொலைகள் நிறுத்த சந்தர்ப்பம் உண்டு.

2. இலங்கையை எல்லா நாடுகளும் பயங்கரவாத நாடக அறிவித்தல்

3. இலங்கை மீது உடன் பொருளாதார தடை ஏற்படுத்த போவதாக அறிவித்தல்.

உலகில் உள்ள தமிழ்மக்கள் சரியான அணுகுமுறையில் அணுகி சரியான தகவல்களை சரியான இடங்களுக்கு வழஙினால், அவர்களும் சரியான விளக்கத்தைபெற்று எம்மை விட திறமையாக கையாளுவார்கள்.

புலம் பெயர் தமிழ்மக்கள் ஒரு நடைமுறையில் இல்லாத அரசாக தங்களுக்குள் குழு அமைத்து பின் ஊக்கிகளாக செயல்படவேண்டும்..

இது பின் போட்டுவதற்கு உரிய காலம் இல்லை. உடன் எல்லோரும் செயல் படவேண்டும்..

நல்ல ஒரு தொடர்புகளை நல்ல புரிந்டுணர்வும் ஏற்பட்டால் எப்போதும் நல்ல பலன் கிடைக்கும்..

தமிழர்தரப்பில் சரியாக முன் எடுத்து செல்லக்கூடிய தூதுக்குழு மிக பலமனதாக மைத்தல், செயல்படுதல், உலக தகவல் மையம்,ஆங்கிலத்தில் செய்திதாபனம் 24மணி சேவை இவை எல்லாம் காலத்தின் தேவைகள்..

இலங்கையரசை கட்டுப்படுத்த நாங்கள் பின் இருந்து வெளீ அமைப்புகளை இயக்கவேண்டும்..

இது ஒரு தொடக்கமே..

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்கள் கருத்து முற்று முழுதாகவே ஏற்றுக்கொள்ள வேண்டியவை. இன்று ஜ.நாவுக்கே ஈழத்தமிழரின் எழுச்சியினால் தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் தமிழ்மக்களின் எதிர்பார்ப்புக்கு தக்கமாதிரியாக இவர்கள் செயல்பட மாட்டார்கள் என்பதை நாம் முதலில் கருத்தில் கொள்ளவேண்டும்.

இருந்தாலும் வன்னியில் எமது மக்களின் இன்றைய அவல நிலைக்கு தற்காலிக விமோர்சனம் ஏற்படலாம்.

ஆனால் இந்த தற்காலிக விமோர்சனத்திற்காகவா நாம் இவ்வளவு துன்பங்களை தாங்கிக் கொண்டிருக்கின்றோம்?

இவங்க அங்கே கால்பதிக்கிறதாலை மீண்டுமொரு பயங்கர அசம்பாவிதம் இடம்பெறப்போகுறதா என்ற ஜயம் ஏற்படுகின்றது, அப்போது அந்த அவலத்தை யாரிடம் முறையிடுவது?

Edited by Valvai Mainthan

விசுகு உங்கள் கருத்து 100% சரி. கட்டை அவிழுங்கள், பிறகு நடப்படதை பார்க்களாம்!!!!!!!!!

நீங்கள் சொல்வது சரி...ஐ.நா படை என்கின்ற பெயரில் இந்திய பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற காட்டுமிராண்டி ராணுவங்கள் உள்ளே நுளைந்தால் பின் நிலமை தற்போது இருப்பதை விட பலமடங்கு மோசமாக போய்விடும்

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா நம்பகமானதில்லை என்றால்

ஐநா முற்றத்தில் ஏன் கோஸங்கள்?

நாம் எவரையும் நம்புவதில்லை

நம்மை நமே கூட

இதுவே உண்மை

பயங்கரவாதிகள் யார் என்பதை உலகமக்களும்.... தொடரும் வரலாறும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.