Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாடுக மனமே -- வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடுக மனமே

வ.ஐ.ச.ஜெயபாலன்

எரிந்த புல்வெளிகளில்

இனி வரவுள்ள மழையையும்

பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான்

கலங்காதே தாய்மண்ணே.

என் அன்னையின் திருவுடல் புதைத்த

பூமியைக் காத்து

வீழ்ந்த பெண்களின்மீது

சிங்கள பைலா பாடியும் ஆடியும்

பேய்கள் புணரும் கொடும் பொழுதினிலும்

நாளைய வசந்தப் பரணியே பாடுக மனமே.

வணக்கத்துக்குரிய நம் மூதாதையர்களின்

எலும்புகள்மீது

எந்தத் தீயும் நிலைக்காது ஆதலினால்

கருமேகமாய் விரியும் சாம்பல் வெளியில் நின்று

இனி வானவில்லாகவுள்ள பூக்களையே பாடுக மனமே.

உறவுகளின் ஓலங்களை அமுக்கும்

தோழ தோழியரின் போர்முரசுகளே

என் வசந்தப் பரனிக்கு இசையுங்கள்.

அம்மா

தமிழ் மண்ணெடுத்து

இன்பப் பொழுதொன்றில்

நீயும் எந்தையும்

அழகுற என்னை வனைந்தீர்களே.

இதோ என் ஐம்பூதங்களால்

உனக்கு வனைவேன் ஒர் அரண்.

உன்னை உதைக்கிற

அன்னியனின் காலை ஒடிக்காமல்

என்ன மசிருக்கு இந்த வாழ்வு.

வன்னிப் பெருந்தாயே

உன் கூப்பிட்ட குரலுக்கு

ஏழு சமுத்திரங்களிலும்

தமிழர் விழிக்கின்றார்.

பாஞ்சாலம் குறிச்சியும்

சிவகங்கைச் சீமையும்கூட விழிக்கிறது.

உலகக் கோடியின் கடைசித் தமிழனுக்கும்

உன் விடுதலைக் கனவுதான் தாயே.

மொழியில் வேரூன்றி

நினைவுகளில் படர்ந்து

கனவுகளில் பூக்கிற

புலம்பெயர்ந்த தமிழன்நான்.

சிறைப்பட்ட என் தாயே

தப்பி ஓடலில்லையம்மா.

ஒடுக்கப்படுகிற ஒரு இனத்தின் புலப் பெயர்வு

பின் போடப் பட்ட விடுதலைப்போர்

வீரமரணம் அல்லது

வெற்றி வாழ்வுதான் தாயே.

நினைவிருக்கிறதா தாயே

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ

பூத்துக் குலுங்கும்" என

வியட்னாம் எரிகையில் நான் பாடிய பாடல்.

என் அன்னை மண்ணில் நெருப்பிடை நின்று

அப்பாடலையே பாடுக மனசே.

Edited by poet

அருமை கவிஞரே, மொழியில் வேரூன்றி நினைவுகளில் படர்ந்து கனவுகளில் பூக்கிற கவிஞரான உங்களின் ஒவ்வொரு வரியும் மண்ணில் புதைந்து இருக்கும் எம் மூதாதையரின் எலும்புகளையும் உயிர்க்க செய்யும்.

எரிந்த புல்வெளிகளில்

இனி வரவுள்ள மழையையும்

பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான்

கலங்காதே தாய்மண்ணே.

தாய் மண் முழுதும் எதிரிகளின் காலடியில் உழழ்கின்ற நேரத்திலும் இனி வரவுள்ள மழை எரிந்து போன புல்வெளிகளை மீண்டும் மீட்டுத் தரும் என்ற நம்பிக்கையில் தான் வன்னிப் பெருந்தாயின் கூப்பிட்ட குரலுக்கு ஏழு சமுத்திரங்களிலும் தமிழர்கள் விழிக்கின்றார்கள், பாஞ்சாலம் குறிச்சியும் சிவகங்கைச் சீமையும்கூட விழிக்கிறது.. உலகக் கோடியின் கடைசித் தமிழனினதும் சுமரியாதை காப்பாற்ற வன்னி மண்தானே சிலுவை சுமக்கின்றது

------------

உங்களின் இந்த கவிதையில் ஆப்பிரிக்க கவிதைகளின் பாதிப்பு கொஞ்சம் தெரிகின்றது. உங்களின் வழக்கமான இயற்கை சார்ந்த காட்சி படிமங்களில் இருந்தும், emotional feeling இல் இருந்தும் விலகி நம்பிக்கையை அடிப்படையாக வரிகள் அமைந்து இருக்கின்றன.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

மண் மீது மழை விழும் போது அது

ஆனந்தம் அடையுமாம்

உங்கள் கவிதை இங்கு வரும் போது நாங்கள் ஆனந்த மடைகிறோம்

வாழ்த்துக்கள் அண்ணா :o

உங்களுக்கு ஒரு அறிவுரை அண்ணா

கவிதை எழுதுங்கள் - தாலாட்டாக இருக்கிறது

கதைக்காதீர்கள் - தடியெடுக்க வைக்கிறது

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஒரு அறிவுரை அண்ணா

கவிதை எழுதுங்கள் - தாலாட்டாக இருக்கிறது

கதைக்காதீர்கள் - தடியெடுக்க வைக்கிறது

Either I am blind or you are blind my dearest advaisor.

  • கருத்துக்கள உறவுகள்

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ

பூத்துக் குலுங்கும்" என

வியட்னாம் எரிகையில் நான் பாடிய பாடல்.

என் அன்னை மண்ணில் நெருப்பிடை நின்று

அப்பாடலையே பாடுக மனசே.

கவிஞரே ..... உங்கள் நம்பிக்கையூட்டும் வரிகள் தெம்பூட்டுகின்றன .

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதை பார்த்தேன்

நம்பிக்கையான வரிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதை பார்த்தேன்

நம்பிக்கையான வரிகள்

Dear Nizali, Thamisri, Thalaivan, Munivar ji, Theya.

I only shareing your anger, feelings and task with you in my own way. We shall win.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Dear Nizali, Thamisri, Thalaivan, Munivar ji, Theya.

I only shareing your anger, feelings and task with you in my own way. We shall win.

இன்று பாரதிதி ராஜா தலைமையிலான திரையுலக பேரணிக்குப் போயிருந்தேன். பேரெழுச்சியுடன் மக்கள் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டு மக்களுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறோம். என்னுடன் பேசிய திரையுலக நண்பர்களுக்கு "

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ பூத்துக் குலுங்கும்" என்பதையே சொல்லிக் கொண்டிருந்தேன். தலைவர்கள் சுற்றி வழைப்பை விட்டு வெளியேறிவிட்டதாக உறுதிப்படுத்தாத செய்தி ஒன்று கேட்டேன். நாம் விடுதலையை வென்று எப்போதும் நிலைப்போம் என்பதில் சந்தேகமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் செய்தி உண்மையாக இருந்தால் ....... :icon_mrgreen: , மிக்க நன்றி , ஜெயபாலன் . :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

""பிரபாகரன் சரணடைய 24 மணிநேரம் சிங்களம் கெடு விதித்துள்ளது. களநிலையை உள்ளுணர்வோடு யூகிக்க மட்டுமே முடிகிறது. பிரபாகரன் முல்லைத்தீவில் இல்லை என்பதே என் கணிப்பு. படையணிகளும் எதிர்காலப் போராட்டத்திற்காய் பல திசைகளிலும் பிரிந்து சென்றுள்ளார்கள்...........................

..இவ்வாறு ,,,,,,,,ஜெகத் கஸ்பார் அடிகளின் பந்தியில் கூறபட்டுள்ளது .

காலத்தின் தேவையும் அதுவே ..........தொலை நோக்கோடு சிந்திக்கும் அந்த தலைவனுக்கே வெளிச்சம்.

Edited by நிலாமதி

தோழமைக்குரிய தம்மிழ்சிறிக்கும் நிலாமதிக்கும்ம், நன்றி வரலாற்றில் பாடுக மனமே எனது முக்கியமான கவிதையாக பதிவு செய்யப் படும் என நினைக்கிறேன்.

தமிழகத்தில் இரவு நச்சுப்புகை அடிக்க மகிந்த அனுமதி கொடுதிருப்பதாக செய்திகள் பரவுகிறது. ஆனால் கிடைத்த சேய்திகள் எதற்க்கும்தயார் நிலையில் போர்குணம் குன்றாமல் எங்கள் பிள்ளைகள் இருக்கிறதாக சொல்கின்றன. மேல் மாகானத்தை விட்டுவிட்டு ஏனைய தென் இலங்கையை சீர்குலைக்க முடியுமானால் இன்னும் பெரிய யூத்தங்களை வன்னியில் நடத்த முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நம்பிக்கை தருகின்றன உங்கள் இறுதி வார்த்தைகள்.

பாராட்டும் அளவிற்கு வளரவில்லை. வாசிப்பில் பிடித்து போயிற்று. வழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நம்பிக்கை தருகின்றன உங்கள் இறுதி வார்த்தைகள்.

நன்றி மருதங்கேணியான். சுனாமிக்குப் ப்பின்னர் உங்கள் ஊருக்குப் போயிருந்தேன்

பாராட்டும் அளவிற்கு வளரவில்லை. வாசிப்பில் பிடித்து போயிற்று. வழ்த்துக்கள்!

எரிக் சொல்கைம் வாசிங்டன் போயிருப்பதாகத் தெரிகிறது. இந்தவாரம் பல முக்கிய வரலாற்று

. நிகழ்வுகளின் களமாகப் போகிறது என்று தெரிகிறது. நமது இளைய தலைமுறை புலம் பெயர்ந்தவர்களது ஜனனாயக ரீதியான குரல்கள் வலியது;

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் மிக நொந்த போயிருக்கிறேன். உன் நம்பிக்கை போலவே நானும் சுமந்து கொண்டு எனது பூமியில் என் மாமரத்தின் கீழ் இருந்து அந்த காற்றை சுவாசிப்பதற்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனம் மிக நொந்த போயிருக்கிறேன். உன் நம்பிக்கை போலவே நானும் சுமந்து கொண்டு எனது பூமியில் என் மாமரத்தின் கீழ் இருந்து அந்த காற்றை சுவாசிப்பதற்கு.

அனஸ், கண்ணீரரும் இரத்தமும் சிந்துகிறவர்கள் பாக்கிய வான்கள் ஏனேனில் அவர்களது கனவுள் நனவாகும். காலம் மாறும். எங்கள் மக்கள் வெற்றி பெறுவார்கள். மீண்டும் எங்கள் கோவில்களிலும் தேவாலயங்களிலும் மணிஓசையும் பள்ளிவாசல்களில் பாங்கொலியும் எங்களை துயில் எழுப்பும் காலம் விரைவில் அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் எங்கள் கோவில்களிலும் தேவாலயங்களிலும் மணிஓசையும் பள்ளிவாசல்களில் பாங்கொலியும் எங்களை துயில் எழுப்பும் காலம் விரைவில் அமையும்.

பன்சலையில்(புத்த கோயில்)பிரீத் ஒதுவதும் நாங்கள் கேட்க வேண்டுமாம் என்று சிங்களம் நினக்குது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பன்சலையில்(புத்த கோயில்)பிரீத் ஒதுவதும் நாங்கள் கேட்க வேண்டுமாம் என்று சிங்களம் நினக்குது

நன்றி புத்தன். உரிய தீவு வரும். அப்போது எங்களோடு தொடர்ந்து வாழ விரும்பும் சிங்கள சிறுபாண்மைக்கு முழு உரிமையும் உறுதிப் படுத்தப் படுமல்லவா? தீர்வுக்குப் பின்னர் பன்சாலையும் பிரித்தும் ஒரு பிரச்சினையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ

பூத்துக் குலுங்கும்"

  • கருத்துக்கள உறவுகள்

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ

பூத்துக் குலுங்கும்"...............................................

... எப்போது ? எம் இனத்துக்கு இன்னும் தாங்கும் சக்தி இல்லை........இளையர்களின் உணர்வுகள் உலகமெலாம் .

.பிரவாகமெடுக்கிறது ........தாக்குதல் உடனே நிறுத்தப்படவேண்டும் ...

கவிதாயினி நிலாமதி அவர்களுக்கு,

வரலாறு நைல் நதி போல. பாலை வாழ்வென்று நொந்தபோது நுங்கும் நுரையுமாக பொங்கிவரும். நாங்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்கலாகாது. எனது கவிதை சிறுபராயத்துச் சிங்கள நண்பனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு என்னுடைய நேர்காணலுடன் சிபிசி வானொலியில் இடம்பெற்றது. கவிதை மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் செல்வநாயகத்தால் வாசிக்கப் பட்டது. இத்துடன் இணைத்துள்ளேன். உங்கள் கருத்தை வரவேற்க்கிறேன்.

http://www.cbc.ca/thecurrent/2009/200905/20090514.html

[]

புதைந்துபோன எமது ஆன்மாவுக்கு நம்பிக்கைதான் மழை, நம்பிக்கைதான் புது வசந்தம். இந்த கவிதையின் முன்னம் எழுதிய கவிதையில் எதிரியின் ராங்கிகளைப் பிடிக்க, வரண்ட ஆறுகள் என்ற கைத்தறியில் மழைநீரால் வலை பின்னுகிறாள் என் வன்னித் தாய் என்று எழுதினேன். நேரடி யுத்த உபாயத்தில் பெருமழையில் எதிரியின் வாகனங்கள் முடங்கிக் கிடக்கும் குறுங்காலத்தில் தெற்க்கை சீர்குலைத்துக் கொண்டு முற்றுகையை அடித்து உடப்பது மட்டுமே சாத்தியமான உபாயமாக இருந்தது. அதையே நானும் போராளிகளுக்கு இடித்துரைத்து வந்தேன். இறுதியில் இறைவன் கொடுத்த வரம்போல வளமைக்கு மாறாக தை மாதத்திலும் மழை வெள்ளம் போட்டது. அப்பொழுது இதுதான் இறுதிச் சந்தர்ப்பம் என்பதை வலியுறுத்தினேன். 1996ல் இருந்து போராளிகளுடன் இடித்துரைத்து விவாதித்து வந்ததால் ஊடகங்களுக்கு அரசிய இராணுவ ஆய்வுகள் எழுதுவதில்லை என முடிவு செய்திருந்தேன். இனி அந்த முடிவைத் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்கிறேன்.

தைமாதமே முடிவு தெளிவாகிவிட்டது. எதிரியின் முற்றுகை இறுக முன்னம் இந்தியாவுடன் அல்லது அமரிக்காவுடன் இறங்கிப் போவது ஒன்றே இருந்த ஒரே மார்க்கமாக இருந்தது. இந்தியாவில் இருந்து ஏற்றுக்கொள்ள சற்றுக் கடினமான அவர்களது நிபந்தனை பரிமாறப் பட்டது. அமரிக்காவின் கடைசி நிபந்தனைபோல மூன்றாவது தரப்பிடம் ஆயுதத்தைக் கையளியுங்கள் என்கிற கோரிக்கை வந்தது. துர் அதிஸ்டவசமாக அந்தச் சந்தர்ப்பமும் நழுவிப் போனது. அதன் பின்னர் யார் தலையிட்டாலும் களமுனையில் உள்ள சிங்களத் தளபதிகள் தங்களது இறுதி நோக்கத்தைக் கைவிட ஒப்ப மாட்டார்கள் என்கிற சூழல் உருவானது. இறுதிக் கட்டத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு எதுவும் நடக்காத சூழல். ஜனாதிபதியின் தம்பி அழிப்பு என்பதில் ஒற்றைக் காலில் நின்றதாகச் சேதிகள் சொல்கின்றன. இறுதி தருண இயலாமைக்காக சர்வதேச சமூகத்தைக் கடிந்து கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தற்காப்பு யுத்தம் தற்கொலை யுத்தம் என்கிறது அடிப்படை இராணுவ கோட்பாடாகும். இரண்டு நாடுகளின் படைகளை நம் போராளிகள் வெற்றிபெற்றது எத்தனை பலமான இராணுவமாக இருந்தாலும் மக்கள் ஆதரவு உள்ளவரை விரும்பி யுத்தத்துக்கு வந்த தேர்ந்த கெரிலாக்களை ஒருபோதும் வென்றுவிட முடியாது என்பதை வரலாற்றில் பொறித்து விட்டது. 4வது ஈழப்போரின் முடிவு மகத்தான கெரிலா போராளிகளானாலும் கெரிலா உத்திகள் முதன்மைபெறாத ஒரு தந்திரோபாயத்தைக் கொண்டு நேரடி இராணுவத்தை தொடர்ந்து வெற்றி பெற முடியாது என்பதை ஒரு கொட்ப்பாடாகவே பொறித்துவிட்டது.

url="http://www.cbc.ca/thecurrent/2009/200905/20090514.html"]http://www.cbc.ca/thecurrent/2009/200905/20090514.html[/url

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதைந்துபோன எமது ஆன்மாவுக்கு நம்பிக்கைதான் மழை, நம்பிக்கைதான் புது வசந்தம். இந்த கவிதையின் முன்னம் எழுதிய கவிதையில் எதிரியின் ராங்கிகளைப் பிடிக்க, வரண்ட ஆறுகள் என்ற கைத்தறியில் மழைநீரால் வலை பின்னுகிறாள் என் வன்னித் தாய் என்று எழுதினேன். நேரடி யுத்த உபாயத்தில் பெருமழையில் எதிரியின் வாகனங்கள் முடங்கிக் கிடக்கும் குறுங்காலத்தில் தெற்க்கை சீர்குலைத்துக் கொண்டு முற்றுகையை அடித்து உடப்பது மட்டுமே சாத்தியமான உபாயமாக இருந்தது. அதையே நானும் போராளிகளுக்கு இடித்துரைத்து வந்தேன். இறுதியில் இறைவன் கொடுத்த வரம்போல வளமைக்கு மாறாக தை மாதத்திலும் மழை வெள்ளம் போட்டது. அப்பொழுது இதுதான் இறுதிச் சந்தர்ப்பம் என்பதை வலியுறுத்தினேன். 1996ல் இருந்து போராளிகளுடன் இடித்துரைத்து விவாதித்து வந்ததால் ஊடகங்களுக்கு அரசிய இராணுவ ஆய்வுகள் எழுதுவதில்லை என முடிவு செய்திருந்தேன். இனி அந்த முடிவைத் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்கிறேன்.

தைமாதமே முடிவு தெளிவாகிவிட்டது. எதிரியின் முற்றுகை இறுக முன்னம் இந்தியாவுடன் அல்லது அமரிக்காவுடன் இறங்கிப் போவது ஒன்றே இருந்த ஒரே மார்க்கமாக இருந்தது. இந்தியாவில் இருந்து ஏற்றுக்கொள்ள சற்றுக் கடினமான அவர்களது நிபந்தனை பரிமாறப் பட்டது. அமரிக்காவின் கடைசி நிபந்தனைபோல மூன்றாவது தரப்பிடம் ஆயுதத்தைக் கையளியுங்கள் என்கிற கோரிக்கை வந்தது. துர் அதிஸ்டவசமாக அந்தச் சந்தர்ப்பமும் நழுவிப் போனது. அதன் பின்னர் யார் தலையிட்டாலும் களமுனையில் உள்ள சிங்களத் தளபதிகள் தங்களது இறுதி நோக்கத்தைக் கைவிட ஒப்ப மாட்டார்கள் என்கிற சூழல் உருவானது. இறுதிக் கட்டத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு எதுவும் நடக்காத சூழல். ஜனாதிபதியின் தம்பி அழிப்பு என்பதில் ஒற்றைக் காலில் நின்றதாகச் சேதிகள் சொல்கின்றன. இறுதி தருண இயலாமைக்காக சர்வதேச சமூகத்தைக் கடிந்து கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தற்காப்பு யுத்தம் தற்கொலை யுத்தம் என்கிறது அடிப்படை இராணுவ கோட்பாடாகும். இரண்டு நாடுகளின் படைகளை நம் போராளிகள் வெற்றிபெற்றது எத்தனை பலமான இராணுவமாக இருந்தாலும் மக்கள் ஆதரவு உள்ளவரை விரும்பி யுத்தத்துக்கு வந்த தேர்ந்த கெரிலாக்களை ஒருபோதும் வென்றுவிட முடியாது என்பதை வரலாற்றில் பொறித்து விட்டது. 4வது ஈழப்போரின் முடிவு மகத்தான கெரிலா போராளிகளானாலும் கெரிலா உத்திகள் முதன்மைபெறாத ஒரு தந்திரோபாயத்தைக் கொண்டு நேரடி இராணுவத்தை தொடர்ந்து வெற்றி பெற முடியாது என்பதை இராணுவக் கோட்ப்பாடாகவே பொறித்துவிட்டது. சர்வதேசத்தை விமர்சிப்பதோ அவர்களுக்கு வெறுப்பேற்றுவதோ எந்தவகையிலும் மீழ் எழிற்ச்சிக்கு உதவாது. சீனா தவிர்ந்த சர்வதேச அணிகளுடன் நல்லுறவும் ஒரு அணிக்குப் பின்னே உறுதியாக நிற்பதையும்தவிர வேறு மார்க்கமில்லை. விடுதலைக்கான ஜனநாயகமும் சுயவிமர்சனமும் இல்லாவிட்டால் பழைய தோல்வியின் பாதைளையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்போம். நாம் மிக சின்னம் சிறிய குறுணி இனம். மேற்குலகத்துக்கோ அமரிக்காவுக்கோ முன்னர் கொடுக்கத் தவறிய விலைகளில் எதையாவது கொடுத்துத்தான் எங்களால் மீண்டு எழ முடியும். என்ன விலை கொடுத்தும் களத்தில் கொலையுண்ணக் காத்திருக்கும் இளையவர்கலைக் காப்பாற்றுவதும் சரணாகதியை தடுப்பதுதான் இன்றைய தேவை. என்னுடய பாடுக மனஏ நேரவுள்ள அனர்த்தத்தை முன்னுணர்ந்தே எழுதப் பட்ட கவிதை. இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வழி தவறி நிற்க்கும் எங்களுக்கு வரலாறு வழிகாட்டும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=58867

http://www.cbc.ca/thecurrent/2009/200905/20090514.html

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எரிந்த புல்வெளிகளில்

இனி வரவுள்ள மழையையும்

பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான்

கலங்காதே தாய்மண்ணே.

கடவுள் தந்த கடைசிச் சந்தர்ப்பம்போல தைமாதத்தில் பெரும் வெள்ளம்போட்டு எதிரியின் வாகனங்கள் கனரக ஆயுதங்கள் முடக்கப் பட்டது. தென்னிலங்கையைச் சீர்குலைத்தபடி முற்றுகையை உடைத்து போராளிகள் காடுகளை மீண்டும் கைப்பற்றி வெளியேறுவார்களென நான் நம்பினேன். எனது கடைசி அறிக்கையை நான் எழுதினேன். மார்ச் மாதமளவில் போராளிகள் காடுகளைவிட்டு கடற்கரை வெளியை நோக்கி பின்வாங்கிச் செல்ல ஆரம்பித்தபோது மனமுடைந்துபோனேன். சென்னைப் பல்கலைக் களக விருந்தினர் விடுதியில் என்னைச் சந்தித்த கவிஞர் அறிமதி தை இதழுக்கு கவிதை கேட்டார். பாடுகமனமே கவிதையை அவருக்குக் கொடுத்தேன். கடந்தவாரம் குமுதம் ஆசிரியர் குழுவினர் மேற்படி கவிதையை "கலங்காதே தாய் மண்ணே" என்ற கவிதையின் நாலாவது அடியை தலைப்பாக இட்டு வெளியிட அனுமதி கேட்டனர். இவ்வாரக் குமுதத்தில் மேற்படி கவிதை வெளிவருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.