Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரகுமானுக்கு ஆஸ்கார்! ஆழ்ந்த அனுதாபங்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலையை, கலையாகவே பார்க்கனும்!

  • கருத்துக்கள உறவுகள்

கலையை, கலையாகவே பார்க்கனும்!

அந்தக் கலைக்கு , அத்திவாரம் போட்டுக் கொடுத்தது தமிழர்களே தவிர ..... , வெள்ளைக்காரன் அல்ல .

நாம் , இதற்கு மேலாக ........ ,

ஒஸ்கார் ரகுமானிடம் , இன்னும் ஒரிரு வார்த்தைகள் எதிர்பார்த்தது தப்பா ...... ?

தானும் செய்யமாட்டான். செய்யிறவனையும் விடமாட்டான். இதுதான் தமிழனின் குணம். இசைத்துறையில், சினிமாவுலகில் இருக்கும் ஒரு அந்நியரிடம் எதிர்பார்ப்பதை, நம்மில் எத்தனை பேர் செய்கிறோம்???? எங்கள் தமிழினத்தின் விடிவிற்காக, நம்மில் எத்தனை பேர் எங்கள் வேலைகளை உதறிவிட்டு முழுநேரமாக வேலை செய்யத் தயாராக இருக்கிறோம்??? அல்லது, ஓரிரு நாட்களாவது மேலதிகமாக லீவு எடுக்க முன்வருகிறோம்? எங்கள் வேலைக்கு ஆப்பு வந்துவிடும் என்பதால் எத்தனை நிகழ்வுகளைத் தவிர்த்திருப்பீர்கள்???

தயவுசெய்து, இருக்கிற ஆதரவுக்கரங்ககளையும் உங்கள் விதண்டாவாதங்களால் இல்லாமல் செய்துவிடாதீர்கள். ரஹ்மானோ அல்லது மற்றவர்களோ எமக்கு ஆதரவாக இருக்கிறார்களா இல்லையா என்பது உரியவர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும். எல்லோருக்கும்தெரியவைத்துத

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கலைக்கு , அத்திவாரம் போட்டுக் கொடுத்தது தமிழர்களே தவிர ..... , வெள்ளைக்காரன் அல்ல .

நாம் , இதற்கு மேலாக ........ ,

ஒஸ்கார் ரகுமானிடம் , இன்னும் ஒரிரு வார்த்தைகள் எதிர்பார்த்தது தப்பா ...... ?

மூஸ்லீம் மதம் தான் பெரிது என்று மதம் மாறியவர் ரகுமான் அந்த முஸ்லீம் மக்களுக்கே இந்தியாவில் பல பிரச்சனைகள். பிரச்சனை பற்றி கதைத்திருக்க வேண்டும் என்றால் அவர் மூஸ்லீம் மக்களின் பிரச்சனை பற்றி தான் கதைத்திருக்க வேண்டும் அவர் அது பற்றி கூட கதைக்க இல்லை ஈழப் பிரச்சனை பற்றி கதைக்க இல்லை என கவலைப் பட்டால் எப்படி?

முத‌ல் முத‌ல் ஒஸ்கார் வேண்டியிருக்கிறார் அவருக்கு பட‌பட‌ப்பாய் இருந்திருக்கும் பொதுவாகவே அவர் கதைப்பது குறைவு .த‌மிழிலே ஒரு வார்த்தை கதைத்ததே பெரிசு.

கலைக்கு , அத்திவாரம் போட்டுக் கொடுத்தது த‌மிழர்களாய் இருக்கலாம் ஆனால் இந்த‌ விருது த‌மிழ் பட‌த்திற்காக கிடைக்கவில்லை.

வினவு இந்த‌ ஆக்கத்தை அவர் விருது வாங்க இந்தியாவை விட்டு வெளிக்கிட‌ முத‌ல் எழுதி இருந்தால் அதைப் பார்த்து விட்டு சில நேர‌ம் அவர் விரும்பி இருந்தால் பிர‌ச்ச‌னை பற்றி கதைத்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

A.R ரகுமாம் இசை அமைச்ச ஒரு ஈழ இசை தட்டு பாடல்கள்.. இசை தட்டின் பெயர் ..புயல் அடித்த தேசம்

http://www.imeem.com/people/99tNRIk/music/...SqP/track-no07/

http://www.imeem.com/people/99tNRIk/music/...U25/track-no03/

http://www.imeem.com/people/99tNRIk/music/...SWn/track-no08/

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இங்கே யார் தவறு என்று குற்றப் பத்திரிகை தயாரிக்க வரவில்லை.

நாம் தொடர்ந்தும் தவறு செய்யக் கூடாது என்று ஒரு கருத்தை மட்டுமே முன்வைத்திருக்கிறேன்.

அப்படியா?

அப்போ அதை அவர் தனியே எழுதிப் படிக்கட்டும்.

இங்கே ஏன் பிரசுரிக்க வேண்டும்.

அதை படிக்க எங்களுக்கு என்ன தேவை? :)

இதுதான் நமது பிரச்சனை.

ஜனநாயகம் பேசும் நாங்கள் அடுத்தவன் பேசக் கூடாது என கடும் கருத்துகளை வைக்கிறோம்.

ஆனால் நமக்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது என்று கத்துகிறோம்?

நாங்கள் சொல்லுறதை மந்தை போல கேள்.

உன் கருத்து தேவையற்றது.

இதுதான் நமது நிலைப்பாடு என்கிறோம்.

இதுதான் நமக்கும் உலக அரசியலுக்கும் உள்ள வேறுபாடு?

இதனால்தான் நாம் யாருமில்லாமல் இன்று தனியாக கையை பிசைந்து கொண்டு நிற்கிறோம்?

ஒரு மனிதனை அடித்து உதவி பெறலாம் என்று நினைக்கிறோம்.

அது வெருட்டி அடிபணிய வைப்பது. அது தொடராது.

ஒரு சாதாரண மனிதனிடமே அன்பை பெற முடியாது.

அப்படி இருக்கும் போது இவை சாத்தியமா?

நான் அந்த நாட்டில் இல்லாததால்

தொலைக்காட்சியில் பார்த்ததை வைத்தே எனது கருத்தை முன் வைத்தேன்.

அங்கு இருந்தாலும் மேடையில் ஏறி அவர்களை பேசாதே என்று சொல்ல முடியாது.

அதை ஒழுங்கு செய்வோர் என்ன வரையறைக்குள் பேசுவது

என்ன செய்வது என தெரிந்து செய்ய வேண்டும்.

அல்லது

தமிழர் விடுதலைக் கூட்டணியினர்

ஆரம்ப காலத்தில் இளைஞர்களை தவறாக வழி நடத்தி

அதே இளைஞர்களால் கொல்லப்பட்டது போன்ற ஒரு நிலை

புலம் பெயர் தேசங்களிலும் தவறாக வழிநடத்துவோருக்கு உருவாகும்.

மேலத்தேசங்களில் அரசியல் கற்றோர் அரசியலில் இருக்கின்றனர்.

கண்டவன் நின்றவன் எல்லாம் அரசியல் பண்ணுவதில்லை.

நாம் இங்கே எங்கு நிற்கிறோம்?

நம் இளைஞர்களை நமது தேவைகளுக்காக பகடைக் காய்களாக பயன்படுத்த முனைகிறோம்.

இது ஒரு நாள் ஆபத்தில் முடியும்?

அந்த அரசியல் அறிவை அல்லது ஒரு கட்டுப்பாட்டை உருவாக்காது

செய்யும் கண்மூடித்தனமான உணர்வுகள் மிக ஆபத்தானவை.

அதை இப்போதே சரி செய்ய வேண்டும்.

பெரியோர்கள் அவர்களை வழி காட்ட வேண்டும்.

இதை பேசுங்கள். இப்படி நடங்கள் என போகு முன் அறிவுரை சொல்ல வேண்டும்.

அல்லது கூட்டத்தை கண்டதும் வரும் உணர்வுகள்

பேசும் பேச்சுகள்

நடைபெறும் வன்முறைகள்

இங்கும் எம்மை பேச விடாது தடுப்பதோடு மட்டுமல்லாமல்

புலம்பெயர் தமிழரின் அழிவாகவும் அமைந்துவிடும்.

இது நிஜம்.

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் தலைமைத்துவம் ஒன்றை உடையவனாகவே இருக்கிறான்.

ஒரு கணவன் குடும்பத் தலைவனாக இருக்கிறான்.

ஒரு தாய் தன் குழந்தைகளை தலைமை ஏற்று கவனிக்கிறாள்.

ஒரு ஆசிரியர் குழந்தைகளை நேர் வழியில் நடத்துகிறார்..............

ஒரு நிர்வாகத்தை ஒருவர் தலைமை ஏற்கிறார்.

இப்படி எத்தனை............தொடர்கிறது???????????

இதற்காக அரசியலில் மட்டும் தலைமை ஏற்போரை மட்டுமே தலைமையேற்பதாக எண்ணுவதா? :D

இது ஒன்றும் செய்தித் தளமில்லை. கருத்துக்களம்.

கருத்துகளை முன்வைக்க முடிகிறது.

தகுந்தவர் விரும்பினால் திருத்திக் கொள்ளட்டும்.

இல்லாவிட்டால் தொடரட்டும்.

அது அவரவர் விருப்பம்.

ஐயா.உங்களை யாரு படிக்க சொன்னது...பிடிகாட்டி படிக்காம விடுங்கூ..அதைவிட்டு சும்மா வேலையில்லாம குற்றங்களை சுட்டிகாட்டினால் உடன தமிழர் விடுதலை கூட்டணி..ஜனநாயகம்..கத்தரிக்க எண்டு கதைத்கான்...

சும்மா இங்க இருந்து வேலை இல்லாமல் பதில் எழுதி திருத்த முடியாததை திருத்திறதை விட..

நாலு மினன்சல் ஒரு பத்து பின்னோட்டங்கள் எழுதி எதாவது மக்களுக்கு நல்லது செய்தா நல்ல இருக்கும் எண்டு நினைகிரன்...

ஆயிரம் அண்ணை அவ்ந்தாலும் உங்களை திருத்த முடியாது...

இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் சிக்குண்டிருக்கும் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒஸ்கார் விருதுவென்ற தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

“அரசியல் விடயங்களைப் பேசுவதற்கு ஒஸ்கார் விருது மேடை இடமல்ல. எனினும், உயிரினத்துக்கு துன்பம் ஏற்படுவதை நான் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என ரஹ்மான் கூறியிருந்தார்.

இலங்கையில் அமைதியான சூழ்நிலையில் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தான் நினைப்பதாகக் குறிப்பிட்ட அவர், எனினும் தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் எனத் தெரிவித்திருந்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

A.R ரகுமாம் இசை அமைச்ச ஒரு ஈழ இசை தட்டு பாடல்கள்.. இசை தட்டின் பெயர் ..புயல் அடித்த தேசம்

http://www.imeem.com/people/99tNRIk/music/...SqP/track-no07/

http://www.imeem.com/people/99tNRIk/music/...U25/track-no03/

http://www.imeem.com/people/99tNRIk/music/...SWn/track-no08/

நன்றி குட்டி <_<

ஆயிரம் அண்ணை அவ்ந்தாலும் உங்களை திருத்த முடியாது...

உங்களையும்தான் <_<

  • கருத்துக்கள உறவுகள்

மூஸ்லீம் மதம் தான் பெரிது என்று மதம் மாறியவர் ரகுமான் அந்த முஸ்லீம் மக்களுக்கே இந்தியாவில் பல பிரச்சனைகள். பிரச்சனை பற்றி கதைத்திருக்க வேண்டும் என்றால் அவர் மூஸ்லீம் மக்களின் பிரச்சனை பற்றி தான் கதைத்திருக்க வேண்டும் அவர் அது பற்றி கூட கதைக்க இல்லை ஈழப் பிரச்சனை பற்றி கதைக்க இல்லை என கவலைப் பட்டால் எப்படி?

முத‌ல் முத‌ல் ஒஸ்கார் வேண்டியிருக்கிறார் அவருக்கு பட‌பட‌ப்பாய் இருந்திருக்கும் பொதுவாகவே அவர் கதைப்பது குறைவு .த‌மிழிலே ஒரு வார்த்தை கதைத்ததே பெரிசு.

கலைக்கு , அத்திவாரம் போட்டுக் கொடுத்தது த‌மிழர்களாய் இருக்கலாம் ஆனால் இந்த‌ விருது த‌மிழ் பட‌த்திற்காக கிடைக்கவில்லை.

வினவு இந்த‌ ஆக்கத்தை அவர் விருது வாங்க இந்தியாவை விட்டு வெளிக்கிட‌ முத‌ல் எழுதி இருந்தால் அதைப் பார்த்து விட்டு சில நேர‌ம் அவர் விரும்பி இருந்தால் பிர‌ச்ச‌னை பற்றி கதைத்திருப்பார்.

ரதி ... தங்கச்சி ,

இதனை பற்றி மேலும் கருத்தாட விரும்பவில்லை .

என்னை மன்னிக்கவும் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்து தேசியவெறியும்

இசுலாமியர் எதிர்ப்பு வெறியும்

பூத்துக்குலுங்கும் ‘ரோஜாவின்’

பார்ப்பன மணம் பரப்பி,

சிவசேனையின் செய்திப்படம்

மணிரத்தினத்தின் கரசேவை

பம்(பா)பொய்க்கு ஒத்து ஊதி,

இந்தியச் சுதந்திரத்தின் பொன்விழாவில்

வந்தே மாதிரத்தை

காந்தியின் கைராட்டை சுதியிலிருந்து

கழற்றி வீசி

சோனி இசைத்தட்டில் சுதேசி கீதம் முழக்கி,

ஒரு வழியாக இசைப்புயல்

அமொரிக்க கைப்பாவைக்குள் அடங்கிற்று.

மும்பைக் குடிசைகளின் இதய ஒலியை

ரகுமான் “ஜெய் ஹோ! ஜெய் ஹோ!” என பிய்த்து உதறிவிட்டார் என

தெருவில் வந்து கூத்தாடும் தேசமே!

பீகார் தொழிலாளிகளை ராஜ்தாக்ரே கும்பல்

பிய்த்து உரித்தபோது.. ” அய்யகோ..!” என்று அலறியபோது

எங்கே போனது இந்தியப் பாசம்?

அல்லா ரக்கா ரகுமானின்

ஆர்மோனிய சுரப்புகளை அலசி ஆராய்ந்து

உள்நுணுகி உருகி விவாதிக்கும் அன்பர்களே,

இசுலாமியர்களின்

ஹார்மோன் சுரப்பிகளையும் கருவறையிலேயே தாலாட்டுகளையும்

திரிசூலங்கள் குதறி எடுத்தபோது,

இந்த அளவு இறங்கி வந்து விவாதித்ததுண்டோ நீங்கள்?

இசையிலே கொண்டுவந்து ஏன்

அரசியலை நுழைக்கிறீர்கள் என்று ஆதங்கப்படுகிறீர்களோ!

ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் பாடலுக்கு மட்டுமல்ல

அவர் மௌனம் காக்கும் அரசியலுக்கும் சேர்த்தே

ஆடுகிறது உங்கள் தலை.

மழலைச் சொல்லை தீய்த்த எறிகணை…

கருச்சிதைந்த பெண்ணோடு தெறித்த கரும்பனை..

இறந்த பின்னாலும் பெண்னை புணர்ந்திடும் இனவெறி…

ஈழத்தின் துயரத்தை இசைக்க முடியாமல்

காற்றும் மூர்ச்சையாகும்…. இந்தச் சூழலில்

ஒரு தமிழனென்ற முறையில் தமிழில் பேசிய இசைப்புயல்

ஈழமக்கள் எரியுமிந்த வேளையில்

விருது வேண்டாமென்று கூட அல்ல…

வருத்தத்தோடு வாங்கிக்கொள்கிறேன் என்றாவது

பேசியிருக்கலாம்தானே!

“எல்லா புகழும் இறைவனுக்கே” என்பவர்

ஆஸ்கார் புகழுக்காக அடக்கி வாசிக்காமல்

“வராக நதிக்கரையோரம்” உருகும் இசைப்புயல்

இசுரேல் இனவெறியால் மேற்கு கரையில்

உயிர் உருகி உருக்குலையும் பாலஸ்தீன மக்களுக்காக

அமெரிக்க மேலாதிக்கத்தால்

நரம்புகள் அறுக்கப்பட்ட இசைக்கருவிகளாய்

தமது மூச்சையும் இசைக்கமுடியாமல் பலியாகும்

ஈராக்கிய மக்களுக்காக….. ஒரு இசுலாமியன் எனுமடிப்படையில்

ஆஸ்கர் விருதை வேண்டாம் என்று கூட அல்ல…

ஆழ்ந்த சோகத்தோடு ஏற்கிறேன் என்றாவது

சொல்லலாம் தானே?

இந்த… சாதி, , இனம், அரசியலுக்கெல்லாம்

அப்பாற்பட்டது ரகுமானின் இசை அனுபவம் என்போரே!

சரிதான்!

இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு

உலகமயத்தின் சரக்காக இசைப்புயல்…

சரக்கு சந்தையைப் பற்றியல்லாமல்

வேறு எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை

உண்மைதான்!

வினவு தளத்திலிருந்து: http://vinavu.wordpress.com/2009/02/26/arrahman1/

இதன் மறுமொழிகள்: http://vinavu.wordpress.com/2009/02/26/arrahman1/#respond

தொடர்புடைய பதிவுகள்

காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !

முற்றாக உடன்படுகிறேன் !!!!

இவ்வளவு பேசும் நாம், மாயா அருள்பிரகாசத்திற்குப் பிரச்சனைகள் ஏற்பட்டபோது, குரல் கொடுத்தோமா??? முதலில் நாங்கள் முழுமையாகச் செய்வோம். பின்னர் மற்றவர்களைப் பற்றிப் பேசுவோம்.
:wub: பிரபலமான பிரமுகர்கள் குரல் கொடுக்கிறதுக்கும் ,நாங்கள் குரல் கொடுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குதல்லோ?

பாதிக்க பட்ட சமுகத்திற்க்காக பிரபலமான ஒருவர் குரல் கொடுத்தால் அது உலகில் எடுபடும் என்ற ஆசையில் இங்கு பலர் கருத்து கூறியதில் தப்பில்லைதானே.

இங்கு சிலர் ,,உங்களை திறுத்து மற்றவன் திறுந்துவான்.

எதிரியை உருவாக்குதிலும் பார்க்க நன்பர்களை உருவாக்கு

என்று எவ்வளவு காலத்திற்க்கு டயலாக் எழுதப்போகினம் சகல கருத்துகளுக்கும். <_<

Edited by Jil

ஒன்றுமே தப்பில்லை.

ஆனால் அவ்வாறு கூறி அவருடைய எதிர்காலத்தினை பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு பழியை நீங்கள் அந்த தருணத்தில் ஏற்கமாட்டீர்கள்...

எல்லாப்புகழும் இறைவருக்கே என்ற வரியை முஸ்லீம்களின் பாணியில் சுஃபான் அல்லாஹ் என்று அவர் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்???? அவர் ஏன் அதை சொல்லவில்லை..? பின்னர் அவரை ஒரு முஸ்லீமாக கருதியே மேற்கத்தைய சினிமா-இசை உலகம் ஒதுக்கிவிட சந்தர்ப்பம் உண்டு...

எதிர்பார்ப்பது தவறென்று கூறவில்லை. ஆனால் அதற்கான சந்தர்ப்ப சமயங்களை ஆராயவேண்டும்... நான் கேட்ட கேள்வி அதை அண்டியே... நாம் என்ன செய்தோம்? ரகுமானுக்கு என்று அல்ல. பொதுவாக பிரபலங்களின் வாழ்க்கையில் எதிர்ப்புக்கள் - பிரச்சனைகள் கிளம்பிய தருணங்களில்???

இதே MIA இற்கு ஒஸ்க்கார் கிடைத்து நீங்கள் குறைகண்டிருந்தால் ஓரளவுக்காவது நியாயம் இருக்கலாம்..............

ஒன்றுமே தப்பில்லை.

பொதுவாக பிரபலங்களின் வாழ்க்கையில் எதிர்ப்புக்கள் - பிரச்சனைகள் கிளம்பிய தருணங்களில்???

இதே MIA இற்கு ஒஸ்க்கார் கிடைத்து நீங்கள் குறைகண்டிருந்தால் ஓரளவுக்காவது நியாயம் இருக்கலாம்..............

பிரபலங்களுக்கு பிரச்சனை வரும் பொழுது எங்கள் குரல்கள் செல்லாகாசு,ஒரு சமுகத்தின் குரலே எடுபடவில்லை எப்படி எங்களின் குரல் எடுபடும்.

பிரபலங்கள் நடந்தால் ,சிரித்தால்,அழுதால்,காதலித்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபலங்களுக்கு பிரச்சனை வரும் பொழுது எங்கள் குரல்கள் செல்லாகாசு,ஒரு சமுகத்தின் குரலே எடுபடவில்லை எப்படி எங்களின் குரல் எடுபடும்.

பிரபலங்கள் நடந்தால் ,சிரித்தால்,அழுதால்,காதலித்த

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே எமக்கு ஏற்கனவே இருக்கும் எதிரிகள் கானாதா.ஏன் இப்படி போட்டிக்கு எதிரிகளை உருவாக்க நினைக்கிறீர்கள்.நாங்கள் ஊட்டி வளர்த்ததுகளே எதிரியின் மடியில் தவழது.மற்றதுகள் என்ன எல்லாம் செய்யுதுகள் என்று உங்களுக்கே தெரியும்.எமமவர்ளின் பலருக்கே அங்கு என்ன நடக்குது என்ற விபரம் ஒழுங்கா தெரிவது இல்லை.இப்ப அனாதையாக நின்று கேட்டப்பார்இன்றி அடி வாங்கிறோம்.இனியாவது கொஞ்சம் சிந்திப்போம். மற்றும்படி நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை.

செய்தீர்களா என்பது தான் கேள்வி... அது மற்றவர்களுக்கு போய்ச்சேர்கிறதோ இல்லையோ நீங்கள் ஆதங்கமடையும் பிரபலங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.

நீங்கள் செய்துவிட்டு பலனை எதிர்பார்த்திருந்தால் அதில் தப்பேது........... இன்று அனைத்திற்கும் அறிக்கை விடுபவர்கள் அன்றும் விட்டார்களா??? ஒரு நாடு ஒரு சமுதாயம் என்றால் போராட்டம் மட்டும் ஒரு அங்கம் இல்லை. அரசியல் தவிர்ந்த ஏனைய விடையங்களுக்கும் முகம் கொடுத்தாகவேண்டும். அவற்றில் விளையாட்டு சினிமா போன்றவையும் அடக்கமே........எல்லாவற்றிற்கும் Down Down பொருத்தமல்ல... வெற்றிக்கு கைதட்டுவதிலும் தோல்விகளில் தேற்றுவதற்கு முன்னிற்கவேண்டும். அதை நாம் செய்வது குறைவு...

அன்பன் நீங்களோ அல்லது நானோ காட்டுக் கத்தல் கத்தினாலும் சிலருக்கு ஏறாது. எவர் எக்கேடு கெட்டாலும், தமக்கு மட்டும் நல்லது நடக்க வேண்டுமென்ற <_< உயரிய :wub: மனப்பான்மை கொண்டவர்கள் இவர்கள். அதனால்த் தான் இவர்களால் அடுத்தவர்களின் கருத்துகளுக்கு பதில் கூற முடியாது நக்கல், நையாண்டி மூலம் திருப்தியடைய முனைகின்றார்கள். இதனால் பகைவர்களைத் தான் சம்பாதித்துக் கொள்கின்றோமென்ற உண்மையும் இவர்களுக்கு புரியப் போவதுமில்லை, புரிய முயற்சிப்பதுமில்லை.

அன்பன்.தூயவன்.தலைவன்.வல்வை மைந்தன்.தமிழச்சி.மற்றும் வசம்பண்ணை,எல்லோருமே நிகழ்வுகளின் யுதார்த்ததை புரிந்து எழுதியுள்ளீர்கள்.ம்ம்ம் என்ன பயன் விதண்டாவாதங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

A.R ரகுமாம் இசை அமைச்ச ஒரு ஈழ இசை தட்டு பாடல்கள்.. இசை தட்டின் பெயர் ..புயல் அடித்த தேசம்

http://www.imeem.com/people/99tNRIk/music/...SqP/track-no07/

http://www.imeem.com/people/99tNRIk/music/...U25/track-no03/

http://www.imeem.com/people/99tNRIk/music/...SWn/track-no08/

குட்டிப்பையன்! ஒருசிறுவனுக்கு!? தெரிந்தவிடயம் கூடதெரியாமல்?? எங்கே போய் முட்டுவது???

Edited by r.raja

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.