Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை கொல்லும்..சிறீலங்கா உணவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

food-boy.jpg

நன்றி ரூபன் அண்ணா

Edited by kuddipaiyan26

நண்பர்களே அதிலே துப்பாக்கிச் சன்னம் இடப்பட்டுள்ளதன் பின்னணியில் இருக்கும் கடலுணவு பழவகை, மற்றும் மரக்கறி வகை என்று காண்பபடும் பிரச்சுரத்துண்டிலே இந்தியப் பொருட்கள் என்று இருக்கின்றது தவறை மாற்றி உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தவறை வேறு சிலர் வேறு மாதிரிப் பார்த்திடக்கூடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இந்தியா கொடுக்கும் ரவைகள் உடலை துளையிட்டு செல்லாமல் கிச்சு கிச்சு மூட்டுகிறதோ?

ரவை துளைப்பது என்ற இடத்தில் சிறீ லங்கா உள்ளது. வடிவாகப் பாருங்கள்.

Sri Lankan & Indian Groceries....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த ரவை பிரச்சனையே வேண்டாம் மருமோன், ரவையை தூக்கிட்டு R.P.G யால போடுங்கோ எல்லாம் சரிவரும் :(

லண்டனில் 50 000 பிரதிகள் அச்சு செய்து விநியோகிக்க உள்ளனர். ஏனைய நாடுகளிலும் இதை செய்தால் நல்லது என்று நினைக்கிறேன்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம்.

எம் மக்களில் பலர் நினைக்கிறார்கள். ஸ்ரீலங்காவிலிருந்து சாமான் வாங்குவதால் என்ன பெரிய குடியா முழுகப்போகுது எண்டு. அவர்கள் நினைக்கிறார்கள் ஊரில் இருப்பவன் சாமான் வாங்குவதற்கும் நாம் வாங்குவதற்கும் என்ன பெரிய வித்தியாசம் எண்டு. அதுகளுக்கு அந்நியச் செலாவணியை பற்றி விளங்குதில்லை.

அதைவிட முக்கியமான விசயம் இந்தச் சாமான்களை கொண்டு வர ஸ்ரீலங்கன் எயர்லைன்சை பாவிக்கிறதுதான். 20% இற்கும் அதிகமான ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் பிளைட்டுகள் இதுக்காகவே ஓடுதாம்.

லண்டனில் 50000 பிரதிகளுடன், அனைத்து தமிழ் வர்த்தக ஸ்தாபனங்களுக்கு முன்பாக பெரிய அளவிலான பிரதிகளும் ஒட்டப்பட இருக்கிறதாம்!!

என்னதான் ஒட்டினாலும் .....

நாம் முதலில் உணர வேண்டும்!! எம்மக்களை எம் பணத்தைக் கொடுத்தே கொல்லச் செய்கிறோம்!! நிறுத்த வேண்டாமா?????????

நாம் தினம் செல்லும் தமிழ் கடைகளுக்கு எம்மாலான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்!! ஏற்கனவே கொள்வனவு செய்வற்றை, அவர்கள் விற்கத்தான் வேண்டும்!! இச்சாமான்கள் இலங்கையில் இருந்து கொண்டு வரப்படவில்லை என பதாதைகள் தூக்கும் நிலை ஏற்பட வேண்டும்!! ..... எம்மால் முடியும்!!

லண்டனில் ரெயினர்ஸ்லேன் பகுதியிலுள்ள "Ashley Cash & Carry" இக்கிழமையுடன் இலங்கையில் இருந்து இறக்குவதை நிறுத்துவதாக உறுதியாக கூறுகிறார்கள்!! இப்படியான எம்வர்த்தகர்கள் பகிரங்கமாக அறிவிக்க முன்வர வேண்டும்!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பொருட்களையும் மறுக்கிறதோ..?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் மேல் ஓர் இன அழிப்புப்போரை தொடுத்துள்ள சிங்களத்தின் மீது உலகத்தமிழினம் தொடுத்துள்ள மிகப்பெரியபோர் கத்தியின்றி இரத்தமின்றி........

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தக நிலையங்கள் இருக்கட்டும். தனிப்பட்ட ரீதியில் யாழ்கள உறுப்பினர்கள் சிறிலங்காப் பொருட்களை எவற்றை தற்பொழுது புறக்கணிக்கிறீர்கள்.

நான் சிறிலங்கா விமானத்தில் கடைசியாகப் பயணித்தது 1991ம் ஆண்டில் தான். அதன் பிறகு சிறிலங்காவுக்கு/ தமிழீழத்துக்கு ஒரு முறை யூத்த நிறுத்த காலத்தில் சென்றிருக்கிறேன். அப்பயணத்தில் சிங்கப்பூர் எயார்லைன்சில் தான் பயணித்தேன். இனிமேல் சிறிலங்கா விமானத்தில் பயணிக்க மாட்டேன்.

சிறிலங்கா காய்கறிகள் - நல்ல காலம் அவுஸ்திரெலியாவில் வாழ்வதினால் அவுஸ்திரெலியாவிலேயே யாழ்ப்பாணத்து மரக்கறிகளை வீட்டிலே பயிரிடக்கூடியதாக இருக்கிறது. பல தமிழர்கள் வீடுகளில் கீரை, கத்தரிக்காய், கருவெப்பமிலை, தக்காளி, மிளகாய் போன்றவற்றைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவுஸ்திரெலியாவில் வாழ்வதினால் தெரிந்தோ தெரியாமலோ சிறிலங்கா மரக்கறிகளைப் புறக்கணிக்கக்கூடியதாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நடவடிக்கை.. பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.

இலங்கையிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக.....

http://www.nsrstore.com/

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரூபன் அண்ணா

நாங்கள் எப்போதும் பல விடயங்களில் பின்தங்கிப் போனதற்கான காரணமாக இருப்பது எம்மிடையேயான ஒற்றுமையின்மையே. இது ஒரு சாபக்கேடு. ஆனால் இங்கு முதலிலே நடைபெற வேண்டிய விடயம் யாதெனில், தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்கள் முதலிலே தமக்கென ஒரு கட்டுப்பாட்டை வகுத்துக் கொள்ள வேண்டும். " பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் " என்ற போக்கு மாறவேண்டும். நான் பல தடவைகள் அவதானித்த விடயம், கதைக்கும்போது ஆமாப் போடுவதும், பின்னர் சிறீலங்காப்; பொருட்களின் கொள்வனவில் ஈடுபடுவதுமே தொடர்கிறது. கேட்டால் சொல்லுவார்கள், கடை வைத்திருப்பவரும் தமிழர்தானே என்று, கருணாக்களும் தமிழன் தானேயென எண்ணுவதில்லை.தாங்கள் பங்களிக்கிறோம் பிறகென்ன என்று சொல்பவர்களும் உண்டு. குறைந்தது நாளொன்று ஒரு யூரோவோ , பவுனோ கொடுக்கிறோம் என்றால் மாதாந்தக் கொள்வனவாகக் குறைந்தது 200 யூரோகளை எட்டுகிறது. அப்படியாயின், ஆதாயம், வரி , எனப் பலவற்றைக் கழித்துப் பார்த்தாலும் பெரும் தொகைப்பணம் சிறீலங்காவைச் சென்றடைகிறது. (200யூரோவில் குறைந்தது 40யூரோ சிறீலங்கா அரசிற்கு நேரடியாகக் கிடைக்கிறது என்பது எமது அறியாமையே, இதில் கணிசமான வேலைவாய்ப்புப் போன்ற விடயங்கள், விமானத்தில் அனுப்புதல் என்று துணை வருமானங்கள் வேறாக உள்ளது) எடுத்துக்காட்டாக 2.99 யூ. விற்கிறது எம்.டீயின் ஊறுகாய். 435 இ.ரூபாய், 1 கிலோ பனங்கிழங்கு 5.50 யூ 800.00இ.ரூபாய், என்றால் ஏனைய பொருட்களையும் ஒப்பீடு செய்தால் எவளவு பணத்தை நுகர்வென்ற போர்வையில நாம் கொடுக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டு தமிழ்ப் பாடசாலையொன்றிலே பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றபோது, சிலர் ஒரு கருத்தை முன்வைத்தார்கள் தமிழ்க்கடைகளையே, அதாவது தாயகத்தை நேசிக்காத தமிழ்க்கடைகளையே புறக்கணிக்க வேண்டுமென்ற போது, அங்கிருந்த தலையாரியே அதைவிடுங்கோ, அதை இதில கதைக்க வேண்டாமென்று சொல்லி விட்டார். பின்னர் அங்கிருந்த ஒருவர் மூலமாக அறிந்தேன். அவர்தானாம் அந்தக் கடையின்ர லீகல் அட்வைசர் என்று. இப்பிடியும் " பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் " காட்டிற சிலபேர் இருக்கினம் கண்டியளோ. இவையளையும் தோலுரிச்சுக் காட்ட வேணும். என்னைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியத்தை நிராகரிக்கும், புறக்கணிக்கும் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டியது எமது தலையாய கடனாகும். அது தனிமனிதர்களது நடவடிக்கையாயினும் சரி.சிறீலங்காவோடு, இவர்களையும் ஒதுக்கி ஓரம்கட்டுவது மட்டுமே தமிழினம் உலகிலிருந்து ஒதுக்கப்படாது, அழிக்கப்படாது இருக்க வழி செய்யும்.

வர்த்தக நிலையங்கள் இருக்கட்டும். தனிப்பட்ட ரீதியில் யாழ்கள உறுப்பினர்கள் சிறிலங்காப் பொருட்களை எவற்றை தற்பொழுது புறக்கணிக்கிறீர்கள்.

நான் வசிக்கும் இடத்தில் தமிழ்க்கடைகள் இல்லை. இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் எந்த பொருளையும் வாங்குவதும் இல்லை. அன்றாட தேவைகளுக்கான அனைத்துப் பொருட்களும் தாய்லாந் வியட்நாம் கடைகளில் கிடைக்கின்றது. எமது ஊரில் இருக்கும் அனைத்து காய்கறி பழவகைகள் மீன்வகைகள் எல்லமே கிடைக்கின்றது. தேனீர் குடிப்பது விருப்பமாகையில் ஆரம்பத்தில் இலங்கை தேயிலையை வாங்கினேன் தற்போது சில மாதங்களாக ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பச்சைத் தேனீருக்கு மாறிவிட்டேன். திட்டமிட்டு புறக்கணிப்பு செய்யாமல் புறக்கணிக்கும் படியாக சூழல் அமைந்து விட்டது. எமக்கு பழக்கப்பட்ட உணவு வகைகள் அனைத்தும் வியட்நாம் தாய்லாந்் பங்காளதேஷ் போன்ற நாடுகளில் இருந்து தாராளமாக கிடைக்கும் போது இலங்கை பொருட்களை வாங்கி அப்பணம் எம்மவரை கொல்வதற்கு ஏன் துணை போக வேண்டும்? இறக்குமதியாளர்கள் இந் நாடுகளில் இருந்தே பொருட்களை இறக்குமதி செய்யலாம். நிச்சயம் இலங்கையை விட குறைந்த விலைக்கே இறக்குமதி செய்யலாம். வியாபாரிகள் நொண்டி சாட்டு சொல்வதும் நியாயப்படுத்துவதும் தொடர்ந்து நடக்கின்றது. வாங்குபவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் நான் இறக்குமதியாளர்களுடன் தனிப்பட்ட ரீதியில் விளங்கப்படுத்தி கதைத்ததபோது பலர் தாம் ஆவன செய்வதாகவும் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தினர். ஒரு சிலர் வியாக்கியானம் கதைத்தார்கள்....

உறுதிப்படுத்தியவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை (கடைகளை) தொடர்பு கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளர் நேரடியாக கடைகளுக்கு சென்று இந் நடவடிக்கை தொடர்பாக கதைத்ததை காணக்கூடியதாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் நான் இறக்குமதியாளர்களுடன் தனிப்பட்ட ரீதியில் விளங்கப்படுத்தி கதைத்ததபோது பலர் தாம் ஆவன செய்வதாகவும் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தினர். ஒரு சிலர் வியாக்கியானம் கதைத்தார்கள்....

உறுதிப்படுத்தியவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை (கடைகளை) தொடர்பு கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளர் நேரடியாக கடைகளுக்கு சென்று இந் நடவடிக்கை தொடர்பாக கதைத்ததை காணக்கூடியதாக இருந்தது.

நல்ல விடயம் செய்துள்ளீர்கள். பாராட்டுகள். நான் கூடத் தமிழ்கடை உரிமையாளர் ஒருவரோடு கதைத்தபோது நொண்டிச்சாட்டுச் சொன்னார். உண்மையிலேயே இறக்குமதியாளர்களது நடவடிக்கையூடாக இவற்றுக்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பது பயனளிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.