Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் எதிர்பார்ப்பும் புலிகளின் காத்திருப்பும்: ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் எதிர்பார்ப்பும் புலிகளின் காத்திருப்பும்: ஆய்வு

[ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2009, 01:42.03 PM GMT +05:30 ]

இன்று உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஒரே அங்கலாய்ப்பாய் இருப்பது விடுதலைப்புலிகளின் பதில்தாக்குதல் எப்போது? என்பதுதான். எம் உறவுகளை நாளாந்தம் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு பதிலடி கொடுக்க துடியாய் துடிக்கிறார்கள். தினந்தினம் தமிழ் உறவுகளின் கதறல்கள், மரண ஓலங்கள்,அவலங்கள், சாவுகள்,பிணங்களைப் பார்த்துப் பார்த்து உணர்வற்று இருந்தவர்கள் கூட போராட்டங்கள், பேரணிகள் என்று எழுச்சி கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

இந்த எழுச்சியுணர்வையுந்தாண்டி அவர்களுக்குள் ஒரு வெறி உருவாகி வருவதை யாருமே உணரவில்லை. ஏன் அவர்கள் கூட அதை உணர்ந்திருப்பார்களா? என்பது சந்தேகமே!

ஏனெனில், இதுவரைகாலமும் இருந்ததைவிட இப்பொழுது இலங்கையில் கொலை வெறிபிடித்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வெளிப்படையாகவும் பல இடங்களில் மறைமுகமாகவும் ஒரு இனப்படுகொலையையே நடாத்திக் கொண்டிருக்கின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது சற்று மட்டுப்படுத்துவதற்கோ எந்தவொரு சர்வதேச நாடும் முன்வரவில்லை. எதிர்மாறாக, பலநாடுகள் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று சொல்லிக்கொண்டு மகிந்த அரசு நடத்தும் கொலைவெறிப் போருக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றதோடு தோளோடு தோள் கொடுப்பதாய் ஆயுத,பண,படைபல உதவிகளை தாராளமாய் வழங்கிக் கொண்டிருக்கின்றன. தட்டிக் கேட்க வேண்டிய நாடுகள்கூட தமிழரை தனியாய் தவிக்கவிட்டுவிட்டன. ஒரு இனமே அழிவின் விளிம்பில் நிற்கின்றது. துக்கம் விசாரிக்கக்கூட ஒரு துணையில்லை.

இவற்றிற்கிடையில் ஒரேயொரு ஆறுதல் தமிழக மக்கள் உள்ளிட்ட உலகத்தமிழர்களின் பேரெழுச்சிமிக்க ஆதரவுதான் தமிழகத்தில் முத்துக்குமாரின் தியாகத்துடன் அது இன்னும் அதிகமாகி மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஏன் சாதரண மக்கள்கூட பேரெழுச்சியுடன் ஈழத்தமிழர்களுக்காக தங்களின் ஆதரவுக்குரலை மிக வீரியத்துடன் எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த எழுச்சிகளுக்கெல்லாம் தான்தோன்றித்தனமாக நடந்துவரும் இலங்கையரசு அடிபணியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆயினும் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்க ஏழுகோடி தமிழகத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இருக்கிறார்கள் என உணர்த்துவதற்கு வேண்டுமானால் அவை உதவலாம். மொத்தத்தில், புலம் பெயர் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் என அனைவரும் எழுச்சி பெற்று ஒரே குரலில், வன்னியில் அவலப்படும் மக்களுக்காகவும், தமிழகத் தீர்வுக்காகவும் குரல்வளை வலிக்க குரலெழுப்பியும் அது யார் செவியிலும் விழவில்லை. அது அனைத்துத் தமிழர்க்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தினைக் கொடுத்திருந்தது.

எழுச்சிக் கோரிக்கைளை எழுப்பி எழுப்பி களைத்துப்போய் அந்த எழுச்சிக் குரல்களின் இயலாமை இன்று தமிழர் மனதில் ஒரு வெறியாகத் தோற்றம் பெற்று நிற்கின்றது. சிங்கள அரசின் வெற்றிப் பரப்புரைகளினால் தமிழர் படை தோற்றுப் போய்விடும் என்றொரு மாயத் தோற்றப்பாடு உருவாக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழன் தோற்றுப் போகக்கூடாது; தமிழன் தோற்றுப் போனால் தமிழனின் எதிர்கால வரலாறு "அடிமை வரலாறு" ஆகவே எழுதப்படும்;

எனவே இது நடக்காமல் தடுக்க தமிழர்களின் காவலர்களான புலி மறவர்களின் பின்னால் அணி திரள்வது: தமிழர்களுக்காக போராடும் புலிகளை சர்வதேச ரீதியிலும் பலப்படுத்துவது மற்றும் சகலவழிகளிலும் அவர்களுக்கு உதவுவது, என்னவானாலும் பரவாயில்லை... இதுவொன்றுதான் தமிழன் வெற்றிபெற ஒரேவழி. இதற்காக தன்மானமிக்க தமிழனாய் இயன்றவரை போராடவேண்டும். அவ்வாறு செய்தால் நானும் ஒரு விடுதலைப் போராளிதான் என்ற எண்ணமும் என் தேசத்திற்காக அதன் விடுதலைக்காக எதையாவது செய்தாக வேண்டும் என்ற வெறியும் ஒவ்வொரு உண்மைத் தமிழனின் மனதினுள்ளும் உருவாகிவிட்டது.

இப்பொழுது அனைத்துத் தமிழரினதும் நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் அவர்கள் மத்தியில் எழும் சந்தேகங்களும் பலவழிகளில் அறியப்படும் போர்ச் செய்திகளும் அனைவரையும் ரொம்பவே குழப்பிவிட்டிருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்ன? இப்போது நடந்து கொண்டிருப்பது இறுதிப்போர். இறுதிப்போரில் தமிழன் தனியாய் நின்று போராடிக் கொண்டிருக்கின்றான். இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தால்தான் தமிழனுக்கு வாழ்வும் வரலாறும். இல்லையேல்... "அகதி" என்ற பெயரோடு "அடிமை" என்ற பெயரையும் தமிழன் தனதாக்க நேரிடும்.

உலகமே சிங்கள அரசின் பக்கமாக அணிதிரண்டு நிற்க, தமிழர்படை தனித்து தன்மானத்தோடு, உறுதியோடும். தீரத்தோடும் எதிர்த்து நிற்கின்றது. வாழ்வா? அல்லது சாவா? என்ற நிலைப்பாட்டுடனான இ;ந்த இறுதியுத்தத்தின் யாதார்த்த நிலைமைகள் என்ன? அதன் பரிமாணங்கள் என்ன? என சற்று ஆராயலாம்.

'இப்போரானது வன்னி நிலப்பரப்புக்குள் மட்டுமே நடக்கிறது" என யார் கூறினாலும், அது அவர்களின் அறியாமையே! இப்போரானது இன்று பல பரிமாணங்களில் உலகமெங்கும் வியாபித்து நிற்கின்றது. "தமிழீழப் போராளிகள்" இப்போது புலிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழனும், புலம் பெயர்தேசங்களிலுள்ள ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தமிழீழப் போராளியாக உருவாகி நிற்கின்றான். சர்வதேசத்தின் காதுகிழியக் கத்திக் கொண்டிருந்தவன், இன்று அதன் கழுத்தைப் பிடித்துக் கேட்கும் தூரத்திற்கு வந்துவிட்டான்.

சர்வதேசம் நமக்கு நீதித்தீர்வினை தந்தாகவேண்டும்! என்ற நிலைமையை உருவாக்க முனைந்துகொண்டிருக்கிறான். உருவாக்கியே ஆகவேண்டும். இதுதான் இன்றைய நிலைமையில்,போராளியாக உருமாறி நிற்கின்ற ஒவ்வொரு தமிழனினதும் கடமை. இது இவர்களின் கடமையென்றால், ஈழத்தில் புலிகள் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுகிறது.

"தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற அமைப்பின் கடந்தகால வரலாறுகள்... அவர்களின் திறமையையும், விவேகத்துடன் கூடிய வீரத்தினையும், மன உறுதியையும் கொள்கை தவறாத உளவுரத்தையும் நன்கே பறைசாற்றும். புலிகளின் அபரிதமான வளர்ச்சியினைப் பார்த்து முழு உலகமுமே அதிர்ச்சியில் உறைந்துபோய் வியந்துநிற்கின்றது. அந்த வழியில் இறுதியாக கொடுத்த அதிர்ச்சி மருந்துதான், அண்மையில் கொழும்பில் நடாத்திக் காட்டப்பட்ட வான் கரும்புலித்தாக்குதல், வான்கரும்புலிகள் விடுதலைப்புலிகளின் பலத்தினை ஒருபடியல்ல பலபடிகள் மேலே உயர்த்தியிருக்கிறார்கள்.

இன்னும்பல அதிர்ச்சிகள் காத்துக்கிடக்கின்றன. இவற்றையும் மீறி புலிகள் பலமிழந்து விட்டார்களா? என கேள்வி எழுப்புவர்களும் இருக்கிறார்கள.; அவர்கள் நினைப்பதுபோல உண்மையிலேயே புலிகள் பலமிழந்து விட்டார்களா? (!) என பார்ப்பின்… இன்று புதுக்குடியிருப்பு வாசல்வரை வந்து நிற்கின்றது சிங்கள இராணுவம். இராணுவ நடவடிக்கை கிழக்கில் ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது புதுக்குடியிருப்புவரை புலிகள் நிலத்தினை மட்டும்தான் இழந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய போராளிகளையும் ஆயுததளபாடங்களையும் அதிக இழப்புக்களின்றி நாம் திட்டமிட்டபடி பாதுகாப்பாக நகர்த்தியிருக்கின்றார்கள். புலிகளின்

பலம் அப்படியே பேணப்பட்டது மட்டுமன்றி ஓரிடத்தில் மையப்படுத்தப்பட்டு தற்பொழுது மிகவும் செறிவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் பரந்து விரிந்து கிடந்த புலிகளின் பலங்கள் இப்போது இறுதிப்போர் நடக்கப்போகும் இடத்தில் செறிவாகக் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதுவே உண்மை.

இந்நிலையில் புலிகளின் பின்வாங்கல் கிளிநொச்சியுடன் நின்றுவிடும் என்றுதான் அநேகர் நினைத்திருந்தனர். ஆனாலும் அதற்கு எதிர்மாறாக புலிகள் தங்களின் கோட்டையான முல்லைத்தீவு வரையும் இராணுவத்தினை முன்னேற அனுமதித்தது... அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பல இராணுவ ஆய்வாளர்கள் கூட தங்கள் தலைகளை பிய்க்கத் தொடங்கிவிட்டனர். 'ஏன் புலிகள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?;" என்பது அனைவரிற்கும் புரியாத புதிராகவே இற்றைவரை உள்ளது.

விடுதலைப்புலிகள் முற்றிலும் வித்தியாசமானவர்கள்... அவர்களின் திட்டமிடல் மற்றும் போர்த்தந்திரங்கள் வித்தியாசமானதாக இருக்கும்... யாரும் இலகுவாய் ஊகிக்கக்கூடிய விடயங்களை அவர்கள் செய்யமாட்டார்கள்... எதிர்பார்க்காத ஒன்றினை எதிர்பாராத தருணத்தில் செய்வார்கள்... அது அவர்களின் தனிப்பாணி. இது புலிகளை பற்றி நன்கு புரிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.

புலிகள் ஏன் காத்திருக்கிறார்கள்? அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் எதிர்பார்த்திருக்கும் தருணம் எது? எப்பொழுது அவர்களின் முழு அளவிலான பதில்த்தாக்குதல் ஆரம்பமாகும்? அவற்றின் விளைவுகள் என்னவாக இருக்கும்? இன்று இக்கேள்விகளுக்கான விடைகளைத்தான் அனைத்துத் தமிழர்களும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்...

இன்று உலக நாடுகளில் பெரும்பாலானவை, இலங்கை அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு நிற்கின்றன. புலிகள் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என புராணம் பாடிக்கொண்டு நிற்கின்றன. ஐ.நா சபை கூட இதற்கு விதிவிலக்கல்ல இன்னும் சில நாடுகளுக்கு புலிகளின் அபரிதமான வளர்ச்சியினைப் பார்த்து வியந்துபோய், இது தொடர்ந்தால் என்னவாகும் என்ற பயம் உருவாகிவிட்டது. எதிர்காலத் தமிழீழ தனியரசு பற்றி நினைப்பே, அவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது போலும்! அதனைத் தடுப்பதற்காக இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி புலிகளை முற்று முழுதாக ஒழித்துக் கட்டலாம,; அதன்மூலம் தமிழீழம் என்கிற தனிநாடு உருவாவதை தவிர்க்கலாம் என்ற கனவில் இலங்கை அரசிற்கு சகல வழிகளிலும் முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் புலிகள் தனித்தே நிற்கின்றார்கள். அவர்களுக்கான ஒரேயொரு ஆதரவு உலகம் பூராவும் பரவிவாழும் தமிழ் மக்கள்தான் மட்டும்தான். ஆதலால்தான் புலிகள் தங்களது முதற்கட்ட காய்நகர்த்தல் நடவடிக்கையாக 'உலகத்தமிழ் மக்களைக்கொண்டு சர்வதேசம் நோக்கிய வேண்டுகோள்" என்ற ரீதியான காய்நகர்த்தலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு ஆய்வு.. எல்லாம் நல்ல மாரி நடந்தா சந்தோசம்.. புலிகளின் கையை பல படுத்துவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் களத்தில் தமது பலத்தினை நிரூபிக்கும்பொழுது அதற்கு உலகநாடுகளை தலைவணங்கவைத்து எமது இறுதி மீட்புப்போரின் வெற்றியால், 'தமிழீழம்" எனும் தனிநாடு உருவாவதனை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு புலத்தில் வாழும் உலகத்தமிழர்களான எங்களின் தலையாய கடமை. இது சர்வதேசத்தினை நோக்கியதான எங்களனைவரினதும் ஒன்றுதிரண்ட பேரெழுச்சியிலேயே தங்கியுள்ளது. புலிகள் உண்மையிலேயே காத்திருப்பது உலகத்தமிழர் அனைவரினதும் ஒன்று திரண்ட பெரெழுச்சிக்காகத்தான். எங்களது எழுச்சிகளும் போராட்டங்களும்தான் பெருமாற்றங்களை கொண்டு வரப்போகிறது. ஆதலினால்... எமது எழுச்சிகளையும் போராட்டங்களையும் ஓயாத அலைகாளாய் ஓய விடாமல் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்...! எம் தேசத்தின் விடிவுவரை.......!

Edited by சேகுவாரா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் எதிர்பார்ப்பும் புலிகளின் காத்திருப்பும்: ஆய்வு

இலங்கை அரசும், இராணுவமும் சொல்வதனைப் போலல்லாது, உண்மையிலேயே சிங்கள இராணுவம் மிகவும் பலமிழந்து, ஆளணியிழந்து, களைப்படைந்து உளவுறுதியில்லாமல் மிகவும் சோர்வடைந்து வந்து நிற்கிறது. வாசல்வரை வந்துவிட்டோம்... கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற நப்பாசையில்தான் இராணுவம் இருக்கின்றது. ஆனால் புலிகளோ...! பாதுகாப்பாக பதுங்கி வந்தவர்கள் இப்பொழுது எதிரிமீது பாய்வதற்குத் தயாராகிவிட்டார்கள். புலிகள் பாயவேண்டிய தருணம் மிகமிக நெருங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆயினும் அவர்கள் பாய்வது உலகத் தமிழரினது எழுச்சியில்தான் தங்கியுள்ளது என்பதனை உலகத் தமிழர்களாகிய நாம் கருத்தில் கொள்ளவேண்டியது மிக மிக அவசியம். ஏனெனில்

இது உண்மை தான்...

Edited by kuddipaiyan26

நடப்பது எல்லாம் போடப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் தான் நடக்கிறது என்டால் 2000 பொதுமக்கள் சாவதும் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் எதிர்பார்ப்பும் புலிகளின் காத்திருப்பும்: ஆய்வு

பலம் அப்படியே பேணப்பட்டது மட்டுமன்றி ஓரிடத்தில் மையப்படுத்தப்பட்டு தற்பொழுது மிகவும் செறிவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் பரந்து விரிந்து கிடந்த புலிகளின் பலங்கள் இப்போது இறுதிப்போர் நடக்கப்போகும் இடத்தில் செறிவாகக் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதுவே உண்மை.

இந்நிலையில் புலிகளின் பின்வாங்கல் கிளிநொச்சியுடன் நின்றுவிடும் என்றுதான் அநேகர் நினைத்திருந்தனர். ஆனாலும் அதற்கு எதிர்மாறாக புலிகள் தங்களின் கோட்டையான முல்லைத்தீவு வரையும் இராணுவத்தினை முன்னேற அனுமதித்தது... அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பல இராணுவ ஆய்வாளர்கள் கூட தங்கள் தலைகளை பிய்க்கத் தொடங்கிவிட்டனர். 'ஏன் புலிகள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?;" என்பது அனைவரிற்கும் புரியாத புதிராகவே இற்றைவரை உள்ளது.

விடுதலைப்புலிகள் முற்றிலும் வித்தியாசமானவர்கள்... அவர்களின் திட்டமிடல் மற்றும் போர்த்தந்திரங்கள் வித்தியாசமானதாக இருக்கும்... யாரும் இலகுவாய் ஊகிக்கக்கூடிய விடயங்களை அவர்கள் செய்யமாட்டார்கள்... எதிர்பார்க்காத ஒன்றினை எதிர்பாராத தருணத்தில் செய்வார்கள்... அது அவர்களின் தனிப்பாணி. இது புலிகளை பற்றி நன்கு புரிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.

உலகத்தமிழ்மக்களே! உச்சக்கட்டத்திற்கு செல்லும் உங்களது ஓயாத பேரெழுச்சிதான் அந்த மீட்புப்போரை ஆரம்பித்துவைக்கும். அதை வெற்றப்பாதைக்கும் இட்டுச்செல்லும். புலிகள் காத்திருந்த காலம்போய்... இப்பொழுது எதிர்பார்த்திருக்கிறார்கள் பாய்வதற்கு. தொடக்கிவைப்பதும் வெற்றிகரமாக முடித்துவைப்பதும் உங்கள் கைகளில்தான். எனவே... ஓயவிடாதீர்கள் உங்கள் பேரெழுச்சியை. தமிழ்படையாம் நம் புலிப்படையின் தீரமிகு பாய்ச்சலினாலும் உலகத்தமிழர் நம்மனைவரினதும் வீறுகொண்ட பேரெழுச்சியினாலும் சிங்களத்தின் வெற்றிக்கனவை தகர்த்தெறிந்து வெற்றியை எமதாக்கி இழந்த நம் நிலங்களை மீட்டெடுத்து தமிழீழ தேசத்தினை உருவாக்குவோம். எம் மாவீரர்களின் கனவை நனவாக்குவோம். இது உறுதி![/size]பருத்தியன்

நன்றி - தமிழ்வின்

குழப்பத்திலிருக்கும் புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு ஓர் தெளிவை ஏற்படுத்தக்கூடியதும் அவர்கள் செய்ய வேண்டியதும் அவர்களின் கைகளில் வைக்கப்பட்டிருக்கும் ஓர் பொறுப்புமிக்க கடப்பாட்டின் முக்கியத்துவத்தையும் சொல்லும் ஓர் நல்ல ஆய்வு....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறைச்சாத்தியமான ஆய்வு, இணைப்புக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலைப்போருக்கு எப்போதும் ஒரு முட்டுகட்டையாக விளங்கும் இந்தியாவை இலகுவில் புறந்தள்ள முடியாது அப்படி புறந்தள்ளினால் தமிழர் தரப்பு வருத்தப்படவேண்டி நேரிடும் எது எவ்வாறெனினும் தமிழக உறவுகளின் காத்திரமான பங்களிப்பே தமிழீழத்தைப்பெற்றுத்தரும் என நம்புகிறேன் ஏதோ ஒரு வகையில் இந்திய லோக் சபா தேர்தல் முடிவுகள் எமது போராட்டத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது

1987 வடமராட்சியை சிங்களம் ஆக்கிரமிக்க முன்னர் தமிழர் தரப்பிற்கு சிங்களம் வலிக்கமத்தை மீட்கவுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவான றோ வினால் கூறப்பட்டு திசை திருப்பப்பட்டது,அதே வேளை இந்திய இலங்கை ஒப்பந்தத்தை சிங்களப்பொதுமக்கள் எதிர்த்தபோது அப்போதிருந்த ஜெயவர்த்தனே அரசு இந்தியாவின் திடுக்கிடும் திரை மறைவு நடவடிக்கையை அக்கொர்டிங் அன்ட் வித்ட்ரோவல் என்ற விவரணத்தின் மூலம் வெளிக்கொணர்ந்ததுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலமே இலங்கையின் இறையாண்மை காப்பற்றப்பட்டதாக தனது செயலுக்கு சிங்கள மக்களிடம் நியாயம் கற்பித்தது

புலேந்திரன் குமரப்பா முதல் கிட்டு வரையும் இந்தியாவின் கையிர்ந்ததையும் மாத்தையா,கருணா விவகாரம் என்பன தமிழர் தரப்பு விரும்பியோ விரும்பாமலோ இந்தியாவின் ஆதிக்கத்தை தடுக்க முடியாதுள்ளது.இந்திய ஆளும் வர்க்கத்திடமிருந்து தமிழ் மக்களையும் போராட்டத்தையும் தமிழக உறவுகளாலேயே காப்பாற்ற முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பது எல்லாம் போடப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் தான் நடக்கிறது என்டால் 2000 பொதுமக்கள் சாவதும் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதா??

மக்கள் அழிவு தவிர்க்க முடியாதது. ஆனால் குறைக்கலாம். ருவண்டாவில் 5 மில்லியன் மக்கள் இறந்தார்கள்.

புலம் பெயர்ந்த மக்களின் மக்களின் பங்களிப்பு இன்னும் கூடுடலாக இருக்கும் போது விமானத்தை சுடும் கலங்கள் கூட வாங்கியிருக்க முடியும். எவ்வளவோ கரும்புலிகளை காப்பாற்றியிருக்கலாம். இன்னும் புலம்பெயர்ந்த மக்கள் சிலர் மதில் மேல் பூனையாக தான் இருக்கிறார்கள்.

தமிழர் விடுதலைப்போருக்கு எப்போதும் ஒரு முட்டுகட்டையாக விளங்கும் இந்தியாவை இலகுவில் புறந்தள்ள முடியாது அப்படி புறந்தள்ளினால் தமிழர் தரப்பு வருத்தப்படவேண்டி நேரிடும் எது எவ்வாறெனினும் தமிழக உறவுகளின் காத்திரமான பங்களிப்பே தமிழீழத்தைப்பெற்றுத்தரும் என நம்புகிறேன் ஏதோ ஒரு வகையில் இந்திய லோக் சபா தேர்தல் முடிவுகள் எமது போராட்டத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது

1987 வடமராட்சியை சிங்களம் ஆக்கிரமிக்க முன்னர் தமிழர் தரப்பிற்கு சிங்களம் வலிக்கமத்தை மீட்கவுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவான றோ வினால் கூறப்பட்டு திசை திருப்பப்பட்டது,அதே வேளை இந்திய இலங்கை ஒப்பந்தத்தை சிங்களப்பொதுமக்கள் எதிர்த்தபோது அப்போதிருந்த ஜெயவர்த்தனே அரசு இந்தியாவின் திடுக்கிடும் திரை மறைவு நடவடிக்கையை அக்கொர்டிங் அன்ட் வித்ட்ரோவல் என்ற விவரணத்தின் மூலம் வெளிக்கொணர்ந்ததுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலமே இலங்கையின் இறையாண்மை காப்பற்றப்பட்டதாக தனது செயலுக்கு சிங்கள மக்களிடம் நியாயம் கற்பித்தது

புலேந்திரன் குமரப்பா முதல் கிட்டு வரையும் இந்தியாவின் கையிர்ந்ததையும் மாத்தையா,கருணா விவகாரம் என்பன தமிழர் தரப்பு விரும்பியோ விரும்பாமலோ இந்தியாவின் ஆதிக்கத்தை தடுக்க முடியாதுள்ளது.இந்திய ஆளும் வர்க்கத்திடமிருந்து தமிழ் மக்களையும் போராட்டத்தையும் தமிழக உறவுகளாலேயே காப்பாற்ற முடியும்

நீங்கள் ஒரு திருக்குறள்மாதி

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

போராட்டம் , கவனம் , களத்தில் எழுதுதல் இவற்றோடு சேர்ந்து கொஞ்சம் கடவுளை , ஆண்டவனை , இறைவனை , பகவானை கூட வேண்டுங்கள் . நம்மவர் வெல்ல வேண்டும் என்று . ஏனெனில் பிரார்த்தனைக்கும் வலு உண்டு என்பது நிருபிக்கப்பட்ட உண்மை . நினைவு அலைகளே சக்தியாக உருவெடுக்கிறது . பிரார்த்தனைகள் நமது நம்பிக்கைகள் வலுப்பெறசெய்யும் . வலுபெற்ற நம்பிக்கையே வெற்றிக்கான சக்தியை உருவாக்கும். நாளை நமதே . வெற்றி நம்முடனே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.