Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் கோர என்ன காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லோருக்கும். தமிழர் சிங்களவர்களிடையே பிரச்சனை ஏற்பட என்ன காரணம்? எமது மூன்றாம் தலைமுறை எம்மிடம் வந்து புலிகள் எதற்காக சண்டை பிடிக்கிறார்கள் எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்? அத்தோடு வெளி நாட்டு மக்களும் வந்து இந்த பிரச்சனை உருவாகக் காரணம் என்ன எனக் கேட்டால் என்ன சொல்வது? தயவு செய்து விளையாட்டாக எடுக்க வேண்டாம்.

நாம் ஈழம் என்ற தனி நாடு கேட்பதற்கும்,சிங்களவருடனுன் தமிழன் சேர்ந்து வாழ முடியாது என்பதற்கும்,இனப் பிரச்சனை உருவாகியதிற்கும் மூல காரணம் என்ன? அதற்கு யார் காரணம்?

தனிய பல்கலைகளக வெட்டுப் புள்ளிகள் மட்டும் தான் காரணமா? அல்லது 1931ம் ஆண்டு டொனமூர் ஆனைக்குழுவினால் கொண்டு வரப்பட்ட பிரதேசவாத பிரநிதித்துவமும் பிரச்சனைக்கு தூண்டுகோலாக அமைந்தது எனக் கொள்ளலாமா.வேறு எந்த காரணங்களால் தமிழர் போராட தலைப்பட்டனர்? தயவு செய்து தெரிந்தவர் பதிலளிக்கவும்.

சில பேர் சொல்வார்கள் புலிகள் போராப் புறப்பட்ட பின்னர் தான் பிரச்சனை வந்தது அதற்கு முதல் பிரச்சனையே இல்லை என்பார்கள் இது உண்மை இல்லை என எமக்குத் தெரியும் ஆனால் என்ன காரணம் கூறி மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவது தயவு செய்து பதிலளிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடிய விடிய ராமர் கதை இ விடிந்த பின் ராமர் சீதைக்கு என்ன முறை எண்டு கேக்கிற மாதிரி இருக்கு இ ரதி அக்காட பதிவு . வாழ்க வளமுடன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Happy நீங்களே சொல்லுங்கள் என்ன காரணம் என? 58ம் ஆண்டில் இருந்து சிங்களவன் படுகொலை செய்கிறான் அதற்கு எதிராகத் போராடுகிறோம் என்றால் சிங்களவன் இனப் படுகொலை செய்யாட்டில் ஈழம் வேண்டாம் என போராடமல் இருப்பீங்களா?

உங்களுக்கான பதில் விரிவாக நாளை காலை தருகின்றேன்.

மிகச்சரியான கேள்வி . மேலும் தகுந்த ஆதாரங்களுடன் இருந்தால் இன்னும் நல்லது

சிங்கள அரசியலமைப்பு சட்டத்தின் படி புத்த சிங்களர் அல்லாதோர் உயர் பதவிக்கு வர முடியாது என்பது ஒரு காரணம் . சம உரிமை உள்ள சட்டம் மாற்றி அமைத்தால் கூட ஒரே நாளில் சட்டத்தையும் ஒரு சமர்பிக்கை மூலம் ரத்து அல்லது திரும்ப பெற ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்பது இன்னொரு காரணம் . எந்த சட்டம் ஆனாலும் சரி மூன்றில் இரண்டு மடங்கு ஆதரவு வேண்டும் சிங்கள பாராளுமன்றத்திற்கு இந்த அளவு பெரும்பான்மையோடு எவரும் வந்ததில்லை .

இவை நான் ஊடகங்கள் வாயிலாக கேள்விப்பட்டதே ஒழிய தெளிவாக தெரியாது . தெரிந்தவர்கள் விளக்கவும் . கத்த வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வகை மிருகங்களும் ஒன்றோடு ஒன்று கூடி வாழமுடியாது. இது இயற்க்கை ஏன் எல்லா வாகை மீன் இனங்களும் ஒன்றொடு ஒன்று கூடி வாழ முடியாது காரணம் ஒரு வகை மற்ற ஒன்றின் இரை. ஆகவே சரியான பதில் உங்கள் கேள்விக்குள்தான் ஒழிந்திருக்கிறது. மனித வடிவில் இருப்பதால் எல்லோரும் மனிதர் ஆகிவிட முடியாது. மனிதம் பற்றி அடிப்படை அறிவாவது மனிதனுக்கு வேண்டாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rathi akka,

pls check this out here

நூற்றோட்டம்

The Unspeakable TRUTH

ரதி அக்காவின் விளையாட்டே தனிதான் போங்கள்??????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்தம்பி நான் நூற்தோட்டத்திற்கு சென்று நூலை[unspeakable truth] வாசித்து விட்டு கூறுகிறேன்.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி அவர்களே நான் தமிழரை சிங்களவரோடு சேர்ந்து வாழச் சொல்லவில்லை அது கடைசி வரைக்கும் நடக்காது எனத் தெரியும்.நான் இதை எழுதியதுற்கு காரணம் நாம் இங்கு வேலை செய்யும்,கல்வி கற்கும் இடங்களில் எல்லாம் அடிப்படை பிரச்சனை என்ன எனக் கேட்கிறார்கள் அதற்கு தான் கேட்டேன்.எனக்குத் சொல்ல தெரியவில்லை.நான் சொன்னதெல்லாம் அவர்கள்[சிங்களவர்] பெரும்பாண்மையாக இருக்கிறார்கள் சிறுபான்மையராகிய எம்மை[தமிழரை] இனப் படுகொலை செய்கிறார்கள் என்றேன்.அதற்கு அவர்கள் கேட்கிறார்கள் ஏன் உங்களுக்கு உரிமை இல்லையா? சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாதா? என்ரென்லாம் கேட்டார்கள்.

இது பற்றி நான் மட்டும் கேட்கவில்லை யாழிலெயே வேறும் இருவர் இது பற்றி தலைப்பு தொடங்கி கேட்டுள்ளனர்.நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதியக்கா நேக்கு ஒரு சந்தேகம் கோபிக்கக்கூடாது பாருங்கோ <_<

அது என்னன்டு சொன்னா ரதி அப்ப இவ்வளவு நாளும் இதுதெரியாமலோ போய் ஊர்வலத்தில நின்டனியல் கொடியெல்லாம் We Want Tamil Eelam என்டு கத்தினியல் அதவிட யாழில வேற பல பேர் பந்தி பந்தியா எல்லாம் எழுதிச்சினம் அதெல்லாம் நீங்கள் வாசிக்கேலையே

ஈழப்பிரச்சனையென்டால் முதலில் ஆயதத்தோடு தோன்றியதல்ல நமது உரிமைகள் மறுக்கப்படும் போதுதான் அங்கே வன்முறைபிறக்கிறது தன்னுடைய உரிமைகளை தாங்கள் பெற்றெடுப்பதற்காக கையில் எடுத்ததுதான் ஆயுதம். நீங்கள் நினைக்கலாம் ஏன் ஆயுதம் இல்லாமல் போராடியிருக்கமுடியாதா என.தந்தைசெல்வா எல்லாம் என்ன ஆயுதம் ஏந்திப்போராடினாரா என்ன ? கடைசியில் அவருக்கு கிடைத்த பலன் என்ன. அதையெல்லாம் நம்பவதைவிட நாமே எங்களை ஆட்சிசெய்யவேண்டும் என போரிடபுறப்பட்டடான் ஓருதலைவன் அந்தக்காலத்தில பலபேர் புறப்பட்டவேயல் ஆனால் இப்ப அவேயல் என்ன செய்யினம் என்டு தெரியும்தானே :unsure:

அதைவிட ஒருபக்கம் தமிழரை கொண்று குவித்தது சிங்களம் அதைவிட சிங்ளம் மட்டும் என்ற சட்டத்தைகொண்டுவந்து தமிழர்களின் முதுகில் ஆப்பை இறக்கியது சிங்களம் 83 கறுப்புயுலையில என்ன நடந்தது என்று தெரியும் தானே. திருநெல்வேலியில 6 இரானுவம் செத்ததுக்காக பல்லாயிரக்கனக்கான தமிழரை அரசாங்கத்தின் உதவியோடு கொண்றும் அடித்தும் விரட்டப்பட்டனர் பென்களை பாலியல் பலாத்காரம் செய்து கொண்றுகுவித்தனர் அரக்கர்கள். இப்படி தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை இன்று வரை அடுக்குக்கொண்டே போகலாம்

இப்படிக்கொடுமைசெய்யும் சிங்களவனோடு சேர்ந்து வாழலாமா என்ன

அதைவிட நீதியே அவங்கள் சொல்லுறதத்தான் அங்க கேட்குது இதில சட்டரீதியா போராடியிருக்கமுடியாதா கேள்விவேற :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேகுவாரா நீங்கள் மேலே சொன்னது எல்லாம் எனக்கும் தெரியும்.83ம் ஆண்டு கலவரம் பற்றி எல்லாம் கேள்விப் பட்டுயிருக்கிறேன்.எனக்கு காந்தியத்தில் நம்பிக்கை இல்லை. காந்தி நாட்டிலும் நம்பிக்கை இல்லை.நான் இப்ப வரைக்கும் புலிகளின் ஆயுத பலத்தாலேயே இறுதி தீர்வு கிடக்கும் என இன்னும் நம்புகிறேன் அதற்காக உதவுவேன்.இனப் பிரச்சனை பற்றி நான் என்ன சொன்னாலும் வெள்ளையளுக்கு புரிய வைக்க முடியவில்லையே தவிர எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் எழுதவில்லை.அவர்களுக்கு எவ்வாறு புரிய வைக்கலாம் எனத் தான் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி அவர்களே நான் தமிழரை சிங்களவரோடு சேர்ந்து வாழச் சொல்லவில்லை அது கடைசி வரைக்கும் நடக்காது எனத் தெரியும்.நான் இதை எழுதியதுற்கு காரணம் நாம் இங்கு வேலை செய்யும்,கல்வி கற்கும் இடங்களில் எல்லாம் அடிப்படை பிரச்சனை என்ன எனக் கேட்கிறார்கள் அதற்கு தான் கேட்டேன்.எனக்குத் சொல்ல தெரியவில்லை.நான் சொன்னதெல்லாம் அவர்கள்[சிங்களவர்] பெரும்பாண்மையாக இருக்கிறார்கள் சிறுபான்மையராகிய எம்மை[தமிழரை] இனப் படுகொலை செய்கிறார்கள் என்றேன்.அதற்கு அவர்கள் கேட்கிறார்கள் ஏன் உங்களுக்கு உரிமை இல்லையா? சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாதா? என்ரென்லாம் கேட்டார்கள்.

இது பற்றி நான் மட்டும் கேட்கவில்லை யாழிலெயே வேறும் இருவர் இது பற்றி தலைப்பு தொடங்கி கேட்டுள்ளனர்.நன்றி

நாகரீகமாக வளாந்துவிட்ட ஒரு மனித இனம். மிருகங்களாகவே இருக்க கூடிய மனித வடிவிலான ஒரு கொலை வெறியர்களோடு எப்படி வாள முடியும்? நீங்கள் அடிப்படை அடிப்படை என்று எதை கேட்குறீர்கள் என்பது என்னால் சரியா புரிந்துகொள்ள முடியவில்லை. இங்கு எல்லாமே வெளிப்படையாகவே இருக்கிறதே ரதியக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையாக எழுதினால்

மீனுக்கும் கொக்குக்கும் உள்ள பிரச்சினை என்ன?

புழுவுக்கும் பறவைக்கும் உள்ள பிரச்சினை என்ன?

எலிக்கும் பூனைக்கும் உள்ள பிரச்சினை என்ன?

பூனைக்கும் நாய்க்கும் உள்ள பிரச்சினை என்ன?

கீரைக்கும் ஆட்டுக்கும் உள்ள பிரச்சினை என்ன?

ஆட்டுக்கும் சிங்கத்திற்கும் உள்ள பிரச்சினை என்ன?

ஏன் ஆண்மைக்கும் பெண்மைக்கும் உள்ள பிரச்சினை என்றுகூட சொல்லலாம்............

ஆனால் இவற்றையெல்லாம் இயற்கையின் நியதிதானே என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்

ஆமாம் அதனால்தான் தமிழர்கள் இவ்வளவு அழிவைச்சந்தித்தும் சர்வதேசம் வாய்திறக்காதிருக்கிறது.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஒரு விடுதலை இயக்கமும் மக்களுடைய பலத்திலதான் தங்கியிருக்கு தமிழர்கள் நாங்கள் இவ்வளவுபேரும் என்ன போரயையாவிரும்புவர்களா என்ன அதைமுதலில் புரியவையுங்கள்.

எதுக்காகக நாங்கள்போராட்டங்கள் நடத்துகின்றோம் இவ்வளவு தமிழர்களும் என்ன வேலையில்லாமலா போராட்டம் நடத்துகின்றார்கள்

நமது உரிமைகளுக்காகவும் நின்மதியான வாழ்வுக்காவும்தான்.

வெள்ளையல் கேட்கலாம் ஏன் சிங்களவரோட அதுகிடைக்காதா என்டு. இல்லை என அடித்து கூறுங்கள்.

அவர்கள் இங்கே சட்டத்தை மதிப்பதுபோல் அங்கேயும் அப்படித்தான் என்டு நினைக்கினம் போல அப்படியில்லை என விளங்கவையுங்கள்

சிங்களவர்களின் கொடுமைகளை விளங்கவையுங்கள் அதற்கு உதாரணம் இப்ப நடக்கிற இனப்படுகொலைகளே அதற்கு உதாரணமாக் கூறுங்கள்

சிங்கள அரசாங்கம் அங்கே இனப்படுகொலைகளை நடாத்திக்கொண்டு வெளியுலகிற்கு வேறுவிதமாக பரப்புரைசெய்கின்றது எவும் இறந்தவர்களின் தொகைகளை குறைத்து கூறுகின்றது எனவும் அவிழ்த்துவிடுங்கள் சகோதரியே

Edited by சேகுவாரா

ரதி அவர்களுக்கு...

சிந்தனைகளும், புரிந்துணர்வுகளும், செயற்பாடுகளும் தனிமனிதனுக்கு மனிதன் வேறுபடக்கூடியது. எனவே ஒரே கேள்விக்கு ஆயிரம் விதமான பதிகள் கிடைக்கக்கூடும் அல்லது கொடுக்கப்படக்கூடும். வேற்று நாட்டவன் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல நேரிட்டால் ஒரே ஒரு விடயத்தை மட்டும் கருவாகக் கொள்வது சிறப்பு. அது "இது பயங்கரவாதமல்ல, சுதந்திர தாகம், மக்கள் கோபம்" என்பதே. அவர்கள் புரிந்து கொள்வார்கள். எப்புள்ளியில் ஆரம்பித்தது, எதனால் ஆரம்பித்தது, எங்கே எவரால் ஆரம்பிக்கப்பட்டது என்பது போன்றவைக்கான விளக்கங்களை சாதாரண ஒரு உரையாடலில், அதுவும் குறிப்பிட்ட ஒரு குறுகிய நேரப் பகுதியில் புரியவைத்துவிடலாம் என்பது என்னைப் பொருத்தமட்டில் ???.

சுருக்கமாகச் சொல்லப்போனால், தற்போது தங்கள் மனதுள் உள்ளது ஒரு பதிலுக்கான தேடல், ஒரு தெளிவுக்கான தாகம் என்பது போல, தமிழ் மக்களின் சுதந்திரப்போராட்டத்தின் ஒட்டுமொத்த அடிப்படையே "ஓர் இனத்தின் சுதந்திர வேட்கை", "கௌரவமான வாழ்க்கை".

சற்றே நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். புரிந்து கொள்ளவும், புரியவைக்கவும், வழிகள் கண்டுகொள்ள, உங்களால் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

[ பாகம் : 1 ]

தமிழன் இல்லாத நாடில்லை. தமிழனுக்கென்று ஓரு நாடில்லை

'ஈழத்தமிழர்களாகிய நாம் இனவெறி படைத்தவர்கள் அல்ல, போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்ல. நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோக்

கருதவில்லை. சிங்களப் பண்பாட்டைக் கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அங்கீகாரத்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கெளரவத்துடன் வாழ விரும்புகிறோம்."

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இரண்டாயிரமாண்டுக்கு முன்பே, உலகத்துக்கு சகோதரத்துவத்தையும், உலக ஒற்றுமையையும் போதித்து 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனக்கூறியவர்கள் தமிழர்கள். அமைதியையும், அறிவையும், செல்வத்தையும் மட்டும் நாடி நின்ற ஈழத் தமிழர்கள், தமது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணியில் திகழ்ந்த ஈழத் தமிழர்கள், தனிநாடு வேண்டி ஆயுதமேந்திப் போராடுமளவுக்கு எவ்வாறு உந்த்ப்பட்டார்கள் என்பதற்கான விடை தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு நன்கு புரியும்.

தமிழர்களின் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும் அவர்களது வாழ்வு நிலைக்கும் இழிவு ஏற்படாத காலகட்டத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உலக சகோதரத்துவத்தைப் பேணிய நமது முன்னோர்கள், தமது மொழிக்கு இழிவு ஏற்பட்டு, தமிழ் மண் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதெல்லாம் தமக்கிடையேயுள்ள பிரிவினைகளை மறந்து ஒன்றுபட்ட தமிழர்களாக, 'நாமார்க்கும் குடியல்லோம,; நமனை அஞ்சோம்" எனப் பொங்கியெழத் தவறியதில்லை. தமிழை இழிவு படுத்திய வடநாட்டவர்களான கனக - விசயன்களை வென்று, அவர்கள் சுமந்த கல்லில் தமிழ்த்தாய்க்குச் சிலையெடுக்கவும், தமிழ் மண்ணைக் காக்க அன்னியர் மேல் படையெடுக்கவும் தயங்கியதில்லை. ஆகவே, தாயிலும் இனிய தமிழ் மொழி 1956 இல் தனிச்சிங்களம் மட்டும் சட்டத்தால் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட போது, ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகமான வடக்கு- கிழக்கு மாகாணங்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் பறிபோன போது, தமது சொந்த மண்ணில், தமது மூதாதையர் ஆயிரமாயிரம் ஆண்டு கட்டிக்காத்த ஈழத்தமிழ் மண்ணில், ஈழத்தமிழர்கள் திட்டமிட்டுச் சிறுபான்மையினராக்கப்பட்ட போது பொங்கியெழுந்ததில் வியப்பேதுமில்லை! எமது முன்னோர்கள் தமிழையும், தமிழ்

மண்ணையும் காக்கத் தவறியதில்லை அதைத் தான் ஈழத்தமிழர்களும் இன்று செய்கிறார்கள்.

ஈழத்தமிழர்களுக்குத் தனிநாடு, அதாவது தமிழீழம் மலர வேண்டும், தமிழீழத்தில் மட்டும் தான் தமிழர்கள் பாதுகாப்புடன், நிம்மதியாக வாழமுடியும் என்ற தமிழீழக் கொள்கை திடீரென பிரபாகரனின் கனவிலிருந்து உதித்ததோ அல்லது ஈழத்தமிழர்கள் குறுகிய இன, மொழி மனப்பான்மை கொண்டவர்கள் என்பதால் உருவானததுமல்ல.

ஈழத்தமிழர்கள் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தமிழீழம் மலரப் போராடவேண்டும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்த் தலைவர்கள் அனைவரும் தமது வாழ்நாள் முழுவதையும் சனநாயகத்துக்கு அர்ப்பணித்த சனநாயகவாதிகளாவார்.

ஈழத்தமிழர்களால் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் காந்தீய முறையில் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி 'ஈழத்துக்காந்தி" எனப் பெயரும் பெற்ற தந்தை செல்வநாயகம், சிங்களத் தலைவர்களால் பலமுறை ஏமாற்றப்பட்டு, எத்தனையோ இனக்கலவரங்களில் தமிழர்களின் உயிர்களும், உடைமைகளும் பறிபோனதைக் கண்டு, இனிமேல் 'கடவுள் வந்தாலும் தமிழர்களைக் காக்க முடியாது" என நொந்து இலங்கைத் தீவில், எமது மண்ணில், தமிழர்கள் பாதுகாப்பாக வாழ ஒரே வழி தமிழீழம் மலர்வது தான் எனத் தீர்மானித்து "உயிரைக் கொடுத்தும் தமிழீழம் அமைப்போம்" என ஈழத்தமிழர்களை அழைத்தார்.

([ பாகம் : 2 ]

தமிழர்களின் பாரம்பரிய மண்ணில், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் சிறுபான்மையினராக்கப் படுவதைக் கண்டு கொதித்தெழுந்த ஈழத்துக்காந்தி செல்வநாயகம் 'சுவர் இருந்தால் தான் சித்திரம் கீறலாம், முதலில் எமது மண்ணைக் காப்போம், அதற்குப் பின்னால் மற்றவற்றைப் பார்ப்போம்" என 1976 ஆம் ஆண்டு தமிழீழக் கோரிக்கையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் நிறைவேற்றி ஈழத்தமிழர்களைத் தமிழீழம் மலரப் போராடுமாறு வேண்டினார்.

ஆனால், 1977.04.27 இல் உடல்நலங்குன்றியிருந்த தந்தை செல்வநாயகம் இயற்கை எய்தினார். செல்வநாயகம் இறந்த பின்னர் அ. அமிர்தலிங்கம் த.வி.கூ தலைவரானார். 1977 யூலை மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தைக் கோரிப் போட்டியிட்டு, வடக்குக்கிழக்கு மாகாணங்களில் இருந்த 19 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். அந்தப் பொதுத்தேர்தலிலே ஈழத்தமிழர்கள் தமிழீழம் மலர்வதற்கான தமது மனதார்ந்த

ஒப்புதலை அளித்தார்கள். ஆகவே, இன்று பிரபாகரனை விமர்சனம் செய்து, வார்த்தைகளால் தாக்கும், ஈழத்தமிழர்களின் தமிழீழ போராட்ட வரலாற்றையுணராத அரைவேக்காடுகள், பிரபாகரன் சுமப்பது ஈழத்தமிழர்களின் சிலுவையைத் தான் என்பதை உணர்வதில்லை.

இன்று, ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டம் எண்ணற்ற தடைகளையும் துயர்களையும், உயிர், உடைமை இழப்புக்களையும் தாங்கிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. அரசியலைக் நன்றாகப் படித்துக் கரைத்துக் குடித்த பல அரசியல் விமர்சகர்களும், அனைத்தும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் ஆலோசகர்களுக்கும், தமக்குப் புரியாத ஈழவிடுதலையைத் திரித்து அசிங்கப்படுத்தும் அலங்கோலத்தை நாம் காணலாம். ஈழத்தமிழர்களை இல்லாதொழிக்கத் துடிக்கும் சிங்கள அரசுக்குத் துணை போகும் இந்தியாவின்

தமிழெதிர்ப்புப் பத்திரிகையாளர்களையும் ஈழவிடுதலைப் போராட்டத்தை வக்கிரப்படுத்தி, தமிழர்களை இழிவு படுத்தி, தமிழைப் பேசிக் கொண்டே, தமிழர்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டே, தமிழர்களின் முதுகில் குத்தும் வஞ்சகரையும் தமிழினம் நன்கு அறியும்.

ஈழத்தமிழர்களுக்கு விடிவு காண ஒரே வழி தமிழீழம் மலர்வது தான் என்ற முடிவு, ஈழத்தின் பல கல்விமான்களாலும் சனநாயகவாதிகளாலும், பல்வேறு சனநாயக வழிகளில் போராடித் தோற்றுப் போன பின்னர், தீர ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும். இன்று தமிழர்களின் நலன்களில் அக்கறையுள்ளவர்களும், ஈழத்தமிழர்கள் பாதுகாப்புடன் வாழவேண்டும் என விரும்புகிறவர்களும் கூடத் தமீழீழக் கோரிக்கையின் சிக்கலான பரிமாண வளர்ச்சியை உணரத்தவறி விடுவதை நாம் காண்கிறோம்.

இப்படியான குழப்பநிலைகளால் சில வேளைகளில், ஈழத்தமிழர்களின் நலன் விரும்பிகளின் தமிழீழப் போராட்டம் பற்றிய கருத்துக்கள் கூட தவறானதாகத் துன்பப்படும் தமிழர்களின் துயரம் புரியாது, 'பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது" போன்று ஈழத்தமிழர்களின் மனதைப் புண்படுத்துவதாக அமைந்து விடுவதுண்டு. அதனால் இந்தக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழர்கள் எப்படி தனிநாடு கேட்குமளவுக்குத் உந்தப்பட்டார்கள் என்பதையும், தமிழர்களின் பாதுகாப்புக்கும் நல் வாழ்வுக்கும் தமிழீழம் மலர்வது தான் ஒரேயொரு வழி

என்பதையும் ஒரளவாவது புரிய வைப்பது மட்டுமே.

இந்தியாவின் முற்போக்கான இனவெறியற்ற சில தலைவர்களின் தொலைநோக்கான நடவடிக்கைகளால், இந்தியாவின் தமிழர்கள் தமது மண்ணையும், மொழியையும்

கலாச்சாரத்தையும் காப்பதற்கு மொழிவாரி மாநிலங்கள் வழிவகுத்தன. அதனால், இந்தியத் தமிழர்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையை இந்திய ஒருமைப்பாட்டையும், இந்தியாவின் இறைமையையும் காப்பதற்காக விட்டுக் கொடுத்தார்கள். ஆனால், இலங்கையின் சிங்கள பௌத்த இனவாதிகளின், 'ஈழத்தீவு முழுவதும் தமக்குரியது" எனச் சரித்திரத்தைத் திரிக்கும் சிங்கள இனவெறியால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதையும், தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையையும் நீக்கத் தமிழீழம் மலர்வது

அவசியமாகின்றது. எனவே, தனித் தமிழீழம் உருவாகினால்தான் ஈழத்தமிழர்களின் வாழ்வில் நிம்மதியும் விடிவும் ஏற்படுமென்பதை நாற்பது ஆண்டு அறவழியில்,

அமைதியாகப் போராடிய பின்னர் தமிழர் பட்டறிந்ததன் விளைவே தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம்.

சிங்களவர்களின் தமிழருக்கெதிரான மூர்க்கத்தனமான இனவெறியைக் கண்ட சில ஈழத்தமிழ்த் தலைவர்கள் அதிலும் குறிப்பாக சேர். பொன்னம்பலம் அருணாசலம் 1924 களிலேயே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த போதும், தம்மைத் தமிழராக அன்றி, இலங்கையராக நினைத்த ஈழத்தமிழர்கள், அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை. அவ்வாறு தம்மை இலங்கையராக எண்ணி 'மாவலி சூழ் இலங்கை நாடெங்கள் நாடே" என்று கும்மியடித்த ஈழத்தமிழர்களை, அன்னியப்படுத்தி அழகிய இலங்கைத்தீவை அசிங்கமாக்கியது சிங்கள இனவாதமும், பௌத்த பிக்குகளின் இன, மத வெறியும் தான் என்பதை யாவரும் அறிவர்.

[ பாகம் : 3 ]

இலங்கையின் வரலாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் திரிக்கப்பட்டாலும், சிங்களவர்களின் சரித்திரமான மகாவம்சத்திலேயே தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என்பதற்கான ஆதாரமும், சிங்களவர்களுக்கு முன்பே தமிழர்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் உண்டு. அதனால் சிங்களவர்களுக்கு எந்தளவு உரிமை இலங்கையிலுண்டோ, அந்தளவு உரிமை ஈழத்தமிழர்களுக்குமுண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதனால், சிங்கள அரசின் இனவாதச் சட்டங்களையும், சிங்களச் சார்பு ஆதிக்கத்தையும் ஏற்றுக் கொண்டு, தமது சொந்த மண்ணில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ ஈழத்தமிழர்களின் தன்மானம் இடம் கொடுக்காது. யாழ்ப்பாண இராச்சியத்தின் இறைமையைப் போத்துக்கேயரிடம் போராடி இழந்த தமிழர்கள், ஆங்கிலேயர்கள் காலத்தில் சிங்களவர்களுடன் வலுக்கட்டாயமாக

இணைக்கப்பட்டனர். அதன்பின், 1948 பிரித்தானிய அரசால் வழங்கப்பட்ட இலங்கைக்கான அரசியல் அமைப்புக்கமையத் தேர்வுசெய்யப்பட்ட சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த அரசியலமைப்பைப் புறக்கணிக்கச் சிங்கள மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர் எனக்கூறிப் புதிய அமைப்பை உருவாக்கி, தமது இறைமையைச் சிங்களவர்கள் தாமே எடுத்துக்கொண்டனர். அப்படிப் பார்க்கும்போது, தமிழ் மக்களால் அங்கீகாரிக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களினூடாகத் தமிழர்கள் தம் இறைமையை எடுத்துக்கொள்வது தவறில்லையே!

ஐரோப்பியர்கள் 1505 ஆம் ஆண்டு ஈழத்தீவிற்கு வந்தனர். அவர்களின் வருகையின்பின், ஈழத்தீவில் தமது இறைமையை முதலில் இழந்த சிங்களவர்கள், ஈழத்தீவில் தாம் கோட்டை அரசை இழந்தபின்னர் தமிழர்களின் யாழ்ப்பாண அரசையும் அதன்பின்னர் கண்டியரசையும் ஐரோப்பியர்கள் கைப்பற்ற உதவிசெய்த சிங்களவர்கள், இன்று ஈழத்தீவு முழுவதற்கும் உரிமை கொண்டாடி, தமிழர்களை அடிமையாக்கி ஆள நினைப்பது வேடிக்கைமேல் வேடிக்கை!

ஐரோப்பியர் ஈழத்திற்கு வந்தபோது தமிழர்கள் காலியிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, மன்னார், யாழ்ப்பாணம், அரிப்புத்துறை, கற்பிட்டி, நீர்கொழும்பு வரை வாழ்ந்து வந்தனர். இவை யாவும் தமிழர்களின் யாழ்ப்பாண அரசின்கீழ் அமைந்திருந்தது. இன்று காலியில் சிங்களவர்கள்தான் இருக்கின்றார்கள். அம்பாறையில் தமிழர்கள் தொகை மூன்றில் ஒன்றாக

மாறிவிட்டது. நீர்கொழும்பு இருக்கும் புத்தள மாவட்டத்தை சிங்களமயமாக்கி விட்டனர். மன்னார், வவுனியா, திரிகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழ் நிலங்களைச் சிங்களவர்கள் அபகரித்து அங்கிருந்த தமிழரைச் சிறுபான்மையினராக்கிவிட்டனர

எனது அறிவுக்கு எட்டிய விடயங்களை எழுதுகிறேன்.

ஈழத் தமிழர்கள் கேட்பதுதான் என்ன?

எல்லாருக்கும் புரியக் கூடிய வகையில் ஆரம்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எல்லா இயக்கங்களும் சேர்ந்து திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது மூன்று அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அ.) தாயகம் (தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பாரம்பரிய பூமி)

ஆ.) தேசியம் (ஐநாவால் வரையறுக்கப்பட்ட தமக்கான தனியான மொழி பேசுகின்ற, தமக்கென பாரம்பரியபூமியில் வாழ்ந்துவருகின்ற, தமக்கான தனியான கலசாரத்தினையுடைய ஒரு தேசிய இனத்துக்கான சகல தகுதியுடையவர்கள் தமிழர்கள்)

இ.) சுயநிர்ணயம் (மேற்கூறியவற்றின் அடிப்படையில் தமது தலைவிதியை, பிரிந்து செல்லும் உரிமை உட்பட தாமே தீர்மானிக்கும் உரித்துடையவர்கள்.)

2. ஈழத்தமிழர்கள் இந்த முடிவுக்கு வருவதற்க்கான காரணிகள் என்ன?

உடனடிக் காரணங்கள் அடிப்படைக் காரணங்கள் என வகைப்படுத்தலாம்.

உடனடிக் காரணங்களாக இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஆட்ச்சிக்கு வந்த சிங்கள இனவாத அரசுகள் தமிழர்களை பாரபட்சமாக நடத்தி அவர்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தொடர் அடக்குமுறைகள் உதாரணமாக தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களால் சொந்த தாயக நிலத்திலேயே இன விகிதசாரத்தினை மாற்றியமை, தமிழர் பிரதேசங்களை துண்டாடியமை, அரசகரும மொழியாக சிங்கலம் மட்டும் சட்டம் கொண்டு வந்தமை, தமிழருக்கெதிரான சிங்கள அரசாங்கங்களின் அநீதியான சட்டங்களை பிரித்தானியாவிடம் முறையிடலம் என்ற உரிமையையும் இல்லாதொழித்தமை, தமிழ் மாணவர்களுக்கெதிரான பல்கலைகழக தரப்படுத்தலைக் கொண்டுவந்தமை, அரச பாதுகாப்பில் அப்பாவித் தமிழர்களுக்கெதிராக மேற்க்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பு வன்முறைகள் உட்பட பல காரணிகள். இவற்றோடு தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட அமைதி வழிப் போராட்டங்களை ஆயுதப் படைகளைக் கொண்டு அடக்கியமை, தமிழ் தலைமைகளோடு மேற்கொள்ளாப்பட்ட அமைதித் தீர்வு ஒப்பந்தங்கள் அத்தனையுமே கிழ்த்தெறியப்பட்டமை பொன்றவைகளையும் குறிப்பிடலாம்.

அடிப்படைக் காரணிகளாக தமிழரும் சிங்களவரும் ஆண்டாண்டு காலமாக தமக்கென்ற சொந்த அரசுகளால் தம்மைத்தாமே ஆண்டு வந்த இனங்கள். இடையில் வந்த அந்நியப் படைகள் அதிலும் பிரித்தானியாதான் தமிழரும் சிங்களவரும் வாழ்ந்த பிரதேசங்களை தமது நிர்வாக தேவைக்காக ஒன்றுசேர்த்து ஆட்சி செய்தது. இதனைவிடவும் சிங்களவர் அனைவரும் தமிழர்களுக்கெதிராக விஷத்தைக் கக்குகின்ற கற்பனையில் எழுதப்பட்ட மகாவம்ச சிந்தனையில் வாழுகிற ஒரு இனம்.

இலங்கை முழுவதும் பெளத்த சிங்களவருக்கே சொந்தம் பொளத்தர்கள் அல்லாத தமிழர்கள் அனைவரும் அரை மனிதர்கள் உயிரோடு வாழ்வதற்க்கு தகுதியற்றவர்கள் என்று பச்சையாக இனவாதம் பேசும் பெளத்தர்களின் 'பைபிள்' எனப்படும் இந்த மகாவம்சம் சிங்கள இனத்தவர்களுக்கு சிறு பராயத்திலிருந்தே போதிக்கப் படுகிறது. தங்களின் மூதாதையர்கள் ஒரு சிங்கத்தின் வழித் தோன்றல் எனவும், ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரனும் சகோதரியும் குடும்ப்ப வாழ்வில் ஈடுபட்டுத் தோன்றிய மகோன்னதமான இனம் சிங்கள இனம் என்றும் பெருமை பேசும் மகாவம்சத்தினை புனித நூலாக போற்றிவரும் ஒரு இனத்தோடு தமிழர் உரிமையை பேரம் பேசுவது இயலாது என்ற முடிவுக்கு வந்தோம்.

3. தமிழர்கள் பிரிந்து செல்வதை சிங்களவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

பயம்தான் காரணம். இலங்கை முழுவதும் பெளத்த சிங்களவருக்கு சொந்தம் என்பதைவிடவும் தமிழர் கல்வி அறிவு, இயல்பான திறமை சிங்களவரை பொதுவாகவே பொறாமை கொள்ள வைத்திருக்கிறது. எவருடைய உதவியில்லாமலே தனது சொந்தக்க் காலில் முன்னுக்கு வருபவர்கள். இன்றுள்ள நிலையில் தமிழர்க்கு தனிநாடு கிடைத்தால் தம்மை யாரும் கணக்கில் எடுக்க மாட்டார்கள் என்ற பயந்தான்.

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியில் தரப்படுத்தல் முறை

By: நம்முள் கவீரன்

Courtesy: தினக்குரல் - மே 20, 2007

பதியுதீன் மகமூட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதில் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இரண்டு நன்மைகள் இருந்தன. ஒன்று தமிழர்கள் உயர் கல்விக்குப் பெருவாரியாகத் தெரிவு செய்யப்படுவதைத் தடுத்து மற்றைய மக்கள் அவர்களின் இடங்களைப் பெறச் செய்வது. மற்றையது ஒரு முஸ்லிம் அமைச்சர் ஊடாக இந்த நாடகத்தை நடாத்தி முஸ்லிம்களுக்கு நன்மை செய்வது போல் காட்டி தமிழர்- முஸ்லிம்கள் ஒற்றுமையைக் குலைப்பது. இரண்டிலும் அரசாங்கம் வெற்றி கண்டது. இலங்கைப் பல்கலைக்கழகத் தேர்வில் முக்கியமாக, விஞ்ஞான பீடங்களுக்கான தேர்வில் கூடியளவு தமிழ் மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது ஒரு பிரச்சினையாக தேசிய அரசியல் மட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. அதாவது கொழும்பு மாவட்ட மாணவ மாணவியருக்கும் யாழ். மாவட்ட மாணவ மாணவியருக்கும் கூடிய கல்வி வசதிகள் இருந்தன என்றும் பின்தங்கிய மற்றைய மாவட்ட மாணவர்களுக்கு அது கிடைக்கவில்லை என்றும் இதனால் கூடிய தமிழ் மாணவர்களுக்கே கல்வி வசதி கிடைத்து வருவதாகவும் அது மற்றவர்களுக்குக் கிடைக்காமல் போயிருப்பதாகவும் பெரிதாக அரசாங்கத் தரப்பில் எடுத்தியம்பப்பட்டது. ஆனால், உண்மையில் 1948- 1956 வரையிலான காலகட்டத்தில் ஆங்கில மொழியாட்சி இருந்து வந்தபோது, எந்த இன மக்கள் எந்தத் துறையில் போட்டி போட்டாலும் கொழும்பில் தமிழ் மாணவ மாணவிகளே மற்றவர்களை விட அவற்றில் சிறப்பாகச் செய்து வந்தனர். பொது மொழியான ஆங்கிலம் சுதந்திரம் கிடைத்த பின்னர் ஆட்சி மொழியாக இருந்தபோது தமிழர்கள் தகைமையின் நிமித்தமே தலை நிமிர்ந்து தரமாக வாழ்ந்து வந்தார்கள் என்பது இதிலிருந்து புலப்படுகிறது. ஆகவே, தமிழர்களுக்குக் கல்வி மீதிருந்த பற்றையும் திறமையையும் குறைக்கவே நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டன என்று கொள்ளலாம். "சிங்களம் மட்டும்" கொண்டு வந்தால் தமிழர்களால் வேற்று மொழியில் அம்மொழி மாணவ மாணவியருடன் போட்டிபோட முடியாதிருக்கும் என்று பெரும்பான்மையினர் கணித்தனர். அதனால் "24 மணித்தியாலங்களில் சிங்களம்" என்று கூறி சட்டத்தையும் இயற்றினர்.

ஆனால், தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியிலேயே கற்க வேண்டும் என்ற கல்விக் கொள்கையை அரசாங்கம் ஏற்க வேண்டியிருந்தது. ஆனாலும், தமிழ் மொழியில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்று பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறினால் அவர்களுக்கு அரசாங்க அலுவலகங்களில் வேலை கிடைப்பது அரிதாகிவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், வட மாகாணத் தமிழ் பேசும் மாணவ மாணவியர் அவர்களின் பாரம்பரிய அறிவியல் சிரத்தையின் பொருட்டு தொடர்ந்து உயர்கல்வியில் பிரகாசித்து வந்தனர். சட்டப்படி சிங்களத் தேர்ச்சியும் பெறத் தொடங்கினர். இதன் பொருட்டு முளையில் கிள்ளி எறியும் நடவடிக்கையாகவே தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிமாவட்ட மாணவர்களுக்குக் கல்வி வசதிகள் குறைவென்று கூறி அதனால்தன் தரப்படுத்தல் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. வெளிமாவட்ட மாணவ மாணவியர் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்திருந்தார்களேயானால் அம்மாவட்டக் கல்லூரிகளுக்குச் சிறந்த ஆசிரியர்களை அனுப்பி உபகரணங்களை வழங்கி அக்கல்லூரி மாணவ மாணவியரின் தரத்தை மேம்படுத்தியிருக்க வேண்டும் அல்லது புலமைப்பரிசில்களை அம்மாவட்ட மாணவ மாணவியருக்கு நல்கி சிறந்த கல்லூரிகளினூடு அவர்களைப் பல்கலைக்கழகம் உள்நுழைய வசதி செய்து கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் கல்வித்தரம் இன்று குன்றியிருக்காது. நாடானது சிறந்த அறிவாளிகளையும் அதிகாரிகளையும் அலுவலர்களையும் பெற்றிருக்கும். தொழிற்றுறைகளில் திறமையான உண்மையான நிபுணர்கள் பிரகாசித்திருப்பார்கள்.

அதற்குப் பதிலாகத் தமிழ் மாணவ மாணவியரின் பல்கலைக்கழக அனுமதித் தொகையைக் குறைப்பதற்காகத் தரப்படுத்தல் எனப்படும் இந்த முறையை அறிமுகம் செய்தது ஷ்ரீமாவோ அரசு. இந்த முறை பற்றி சுருக்கமாகக் கூறுவதாகில் ஒரு மாவட்டத்தில் பெறப்பட்ட ஆகக் கூடிய புள்ளிகள் 75 ஆகவும் இன்னொரு மாவட்டத்தில் கிடைத்த ஆகக்கூடிய புள்ளிகள் 60 ஆகவும் இருந்தால் 75 யும் 60 யும் சமநிலைப்படுத்தி 60 புள்ளிகளுக்குக் கீழ் கிடைத்த புள்ளிகளையும் விகிதாசாரப்படி மேலேற்றுவதே இந்த முறை . எனவே 75 புள்ளிகள் பெற்ற ஒரு மாவட்ட மாணவருடன் 60 புள்ளிகள் பெற்ற இன்னொரு மாவட்ட மாணவர் சமநிலைப்படுத்தப்பட்டு அவருக்கும் 75 புள்ளிகள் கிடைத்தது போல் பாசாங்கு செய்து அவரைப் பல்கலைக்கழகத்திற்குத் தேர்ந்தெடுப்பதே இந்தத் தரப்படுத்தல் முறை .

இதனால் 60 க்கு மேல் 75 வரையில் புள்ளிகள் பெற்ற முக்கியமாக வடமாகாண மேல்மாகாணத் தமிழ் பேசும் மாணவ, மாணவியர் அனைவரும் பாதிக்கப்பட்டனர். பிற மாகாணங்களில் 50 புள்ளிகள் பெற்றவர் சுமார் 65- 70 புள்ளிகள் வரை பெற்றவர் போல் கணிக்கப்பட்டு பல்கலைக்கழகம் புக இந்த முறை உதவி செய்தது.

இதனால் பொதுவாகவே சகல துறைகளிலும் தரம் குறைந்தது. வட மாகாண' மேல் மாகாணத் தமிழ் மாணாக்கர்களின் உயர்கல்வி சார் உந்துசக்தி மழுங்க வைக்கப்பட்டது. "நான் எவ்வளவு தான் நன்றாகச் செய்தாலும் எங்கோ இருக்கும் ஒருவர் குறைந்த புள்ளிகள் பெற்று என்னை விரட்டி விட்டு பல்கலைக்கழக உள்நுழைவைப் பெறமுடிகிறதே" என்று மனம் வெந்தார்கள் தமிழ் மாணவ, மாணவிகள். இதனால் ,சிங்கள மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்டார்கள் என்பதில் அர்த்தமில்லை. பொதுவாக அதிகப்படியாகத் தமிழ் மாணவ மாணவியரே பாதிக்கப்பட்டார்கள் என்பது தான் உண்மை. அத்துடன் மாற்று உயர் கல்விக்கூடங்களைத் தேடிப் பிடிக்க மற்றவர்களுக்கு இருந்த வசதிகள் வடமாகாண மாணவ மாணவியருக்கு இருக்கவில்லை.

1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் பாடசாலை பகிஷ்கரிப்புகளுடன் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் ஆரம்பித்தன. தொடர்ந்து மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றன. அதுவரையில் கல்வியில் சிரத்தை காட்டி வந்த சாதுவாய் பயபக்தியுடன் நடந்து கொண்ட தமிழ் மாணவர்கள் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களை எதிர்க்குங் காலம் பிறந்தது.

இதேபோல் தெற்கிலும் அரசாங்க எதிர்ப்புச் சக்திகள் மாணவரிடையே எழுந்தன. ஜனதா விமுக்தி பெரமுன கடுமைமிக்க இடதுசாரிக் கொள்கைகளைப்பரப்பி கிளர்ச்சியில் ஈடுபட்டது. தொடர்ந்து வந்த சிங்கள அரசாங்கங்களே இவற்றின் காரண கர்த்தாக்கள்.

தரப்படுத்தல் முறை பற்றி சிங்களவரான பேராசிரியர் இ.கீ. டி சில்வா அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்.

"சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள வேற்றுமைப்படுத்தும் பக்கச்சார்பான நடவடிக்கைகளினால் ஏற்பட்ட சேதம் கணிசமானது. .... ஆனால், பல்கலைக்கழக நுழைவு சம்பந்தமாக (அரசாங்கத்தால்) எடுக்கப்பட்ட தீர்மானங்கள் யாழ்ப்பாண இளைஞர்களை ஒன்றுபடுத்தவும் அவர்களின் நெருக்குதல்களால் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவத்தை தனிநாடு கோரும் நிலைக்குத் தள்ளவும் உறுதுணையாக அமைந்தன." உண்மையில் தமிழ் மாணவ, மாணவியரின் பல்கலைக்கழக நுழைவுடன் ஷ்ரீமாவோ அரசு விளையாடத் தொடங்கியதே எழுந்து வந்த இளைஞர் மனவெறுப்புக்கு உரத்தையும் வெறியையும் ஊட்டியது என்று கூறினால் அது மிகையாகாது. "காந்தீய முறைகளைக் கடைப்பிடித்து, சத்தியாக்கிரகங்கள் செய்து எதனைக் கண்டுவிட்டீர்கள்? தொடர்ந்து சிங்கள அரசாங்கங்கள் தமிழரின் தனித்துவத்தை இல்லாததாக்கவே பாடுபடுகிறார்கள். ஆகவே, அநியாயமாக எங்கள் உரித்துகளைப் பறிக்கும் அவர்களை ஆயுதம் கொண்டு போராடியே வெற்றி கொள்ள வேண்டும்" என்ற முடிவுக்கு வரத் தொடங்கினர் இளைஞர்கள். பல இயக்கங்கள் முளைத்தன.

பண்டைய சோழக்கொடி புலிக்கொடி. அக்கொடியை நினைவுபடுத்துவதாகவும் சோழர் காலத்து மேம்பட்ட உயர்வை நினைவுபடுத்துவதாகவும் சிங்கக் கொடிக்கு எதிர்க் கொடியாகவும் புலிக்கொடி சின்னத்துடன் எழுந்தது தமிழர் புதிய புலிகள் இயக்கம். 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி அவ்வியக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் பெற்றது. சில இயக்கங்கள் காலக்கிரமத்தில் தடம்மாறின. சட்டத்துக்குட்பட்டோர் என்று இந்த நாட்டின் சட்டம் சுட்டிக்காட்டும் இயக்கங்கள் தமது சபதங்களையும் குறிக்கோள்களையும் மறந்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் என்றுதான் கூற வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்கள் எனப்படுவோர் இலட்சியங்களை மறக்காது இன்றும் இயங்கி வருபவர்கள் போல்த் தெரிகிறது. இதிலிருந்து சட்டம் பற்றி ஒரு விடயம் புலப்படுகிறது அல்லவா? பெரும்பான்மையினத்தோர் தம் நலம் விரும்பி இயற்றுவதே சட்டம். அதற்கு ஒவ்வ சிறுபான்மையோர் நடந்து கொண்டால் அவர்கள் சட்டத்திற்குட்பட்டவர்கள். தவறின் சட்டத்திற்கு வெளிப்பட்டவர்கள். ஆகவே, சட்டமானது ஜனநாயக அரசொன்றின் கீழ் பெரும்பான்மையினரின் தன்னிச்சையின் பிரத்தியேக ஆயுதமாக மாறக்கூடிய நிலை ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் அரச பயங்கரவாதம் அசல் நாட்டுப்பற்றாக நாமம் மாற்றப்படுகிறது. இளைஞர்களின் குரல் ஓங்க முதிய அரசியல்த் தலைவர்கள் அவற்றைப் பொருட்படுத்த வேண்டிய காலம் வந்தது. அதுபற்றி அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

http://www.tamilcanadian.com/tamil/?cat=8&id=247

  • கருத்துக்கள உறவுகள்

பலராலும் கேட்க்கப்படும் கேள்வி.

கல்வி தரப்படுத்தல் முழு தமிழர்களுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தவில்லை. இது யாழ்ப்பாணத்து தமிழருக்கே பாதகமாக அமைந்தது. இப்பொது கல்வி தரப்படுத்தல் காரணமாகதான் மலையக, கொழும்பு, கிழக்கு தமிழர்களுக்கு பல்கலைகழகங்களில் கூடியளவில் இடம் கிடைக்கின்றது. இல்லாவிடில் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களுக்கே கிடைக்கும்.

தரப்படுத்தல் முறை முழுத்தமிழர்களுக்கும் பெரும் பாதகத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடவில்லை. இலங்கையில் இன முரண்பாடுகளின் வளர்ச்சிக்குத் தரப்படுத்தலும் ஒரு காரணம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்கத் தரப்படுத்தல் இல்லாவிடில் இலங்கையின் ஏனைய பகுதித் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்தவருக்கே கிடைக்கும் என்ற பொருள்படும் கூற்றுத் தரப்படுத்தல் முறையின் அடிப்படை பற்றிய விளக்கக் குறைவையே காட்டுகிறது. தரப்படுத்தல் முறை அறிமுகப் படுத்தப்பட முன் பல்கலைக் கழகங்களுக்கான மாணவர் தெரிவு முற்றுமுழுதாகத் திறமை அடிப்படையிலேயே நடைபெற்றது. தமிழ் மாணவர்களுக்கு இவ்வளவு இடங்கள் என்று கோட்டா முறையும் கிடையாது. எனவே ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றை யாழ்ப்பாண மாணவர் தட்டிப் பறித்தார்கள் என்று சொல்வது சரியாகாது. 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அறிமுகப் படுத்தப்பட்ட மாணவர் தெரிவு முறை தரப்படுத்தல் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அது இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று மொழி அடிப்படையிலான தரப்படுத்தல். மற்றது மாவட்ட வாரியான கோட்டா முறை. மொழி அடிப்படையிலான தரப்படுத்தல் என்பது தமிழ் மொழி மூலமும், சிங்கள மொழி மூலமும் பரீட்சை எழுதிய மாணவர்களின் மொத்தப்புள்ளிகளைத் தனித் தனியாக வரிசைப் படுத்தி, இரண்டு பட்டியல்களினதும் இடைப் (mean) புள்ளிகள் சமமாக இருக்கும்படி ஒரு பட்டியலிலுள்ள எல்லாப் புள்ளிகளையும் ஒரு குறிப்பிட்ட எண்ணால் பெருக்கிப் புள்ளிகளை மாற்றுவதாகும். எப்பொழுதுமே தமிழ் மாணவர்கள் பெறும் புள்ளிகளின் இடை (mean)சிங்கள மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் இடையிலும் கூடுதலாகவே இருந்து வந்ததால். மேற் சொன்ன முறை எல்லாச் சிங்கள மாணவர்களதும் புள்ளிகளை எல்லாத்தமிழ் மாணவர்களினதும் புள்ளிகளுக்கு எதிராக அதிகரிக்கச் செய்தது. இவ்வாறு மாற்றப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலேயே பல்கலைக் கழகங்களுக்கு மாணவர் தெரிவு செய்யப் பட்டனர். இது எல்லாத் தமிழ் மாணவர்களையுமே பிரதேச வேறுபாடின்றி ஒரே வகையில் பாதித்ததென்பது சொல்லாமலே விளங்கும். தகுதி அடிப்படையில் பெருமளவு மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவந்த யாழ்ப்பாணமே பெருமளவில் பாதிக்கப்பட்டது. இவ்வாறு யாழ்ப்பாண மாணவர்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட இடங்களில் ஒன்றேனும் மலையக அல்லது கிழக்கு மாகாண மாணவனுக்குக் கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பேதும் இல்லை. எனவே தகுதி அடிப்படையில் யாழ்ப்பாண மாணவர் இழந்த இடங்கள் அனைத்துமே சிங்கள மாணவர்களுக்கே கிடைத்தன. ஆனால் மாவட்ட வாரியான கோட்டா முறைப்படி, இலங்கையிலிருந்த 22 மாவட்டங்களினதும் குடித்தொகை விகிதாசார அடிப்படையில், ஒரு பகுதி பல்கலைக் கழக இடங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டன. இதன்படி, கிழக்கு மாகாண மாவட்டங்களுக்கும், மலையக மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒருபகுதியையே அப்பகுதித் தமிழ் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். கிழக்குமாகாணத்தில் குடித்தொகை மிகவும் குறைவு இதனால் அம்மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களும் குறைவுதான். அத்துடன் அங்கு மூன்றிலொருபங்கு அளவுக்கு உள்ள சிங்களவருடன் போட்டியிட்டுத்தான் கிடைக்கக் கூடியதைப் பெற வேண்டும். எனவே பிற பகுதித் தமிழர்கள் முன்பு 10 இடங்களைப் பெற்றவர்கள் இப்பொழுது 30 இடங்களைப் பெற்றிருக்கக் கூடும் இதற்காகவே தரப்படுத்தலினால் தமிழ் மாணவர்கள் நூற்றுக்கணக்கான இடங்களை இழந்ததை நியாயப் படுத்த முயல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%...%AE%95%E0%AF%88

Edited by nunavilan

ஒன்றைப் பற்றி அறவே தெரியாதவர்களுக்கு விளங்கப் படுத்துவதற்கு கைகொள்ளும் முறை அவர்கள் நன்கு அறிந்த ஒன்றை உதாரணம் காட்டுவதன் மூலமாகும்.

வெள்ளையர்களுக்கும் ஏனய மேற்கு நாட்டவர்களுக்கும் நன்கு அறிந்த விடயம் ஜேர்மனியின் நாஸிஸக் கொடூரங்கள்.

நாஸிகள் இனவெறிபிடித்தவர்கள். பண்டைய இதிகாஸங்களை புதுப்பிக்க நினைப்பவர்கள். மண்ணாசையும் ஏனய இனத்தோரை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற வெறியும் பிடித்தவர்கள். மற்ற இனத்தவர் மேல் அளவற்ற கொடூரங்களைச் செய்தவர்கள்.

சிங்களவர்களும் நாஸிகள் போலவே பண்டைய இதிகாஸங்களை நம்பி, தாம் ஒரு விசேட இனம் என நினைத்து எமது நிலங்களை அபகரித்து ஐந்து தசாப்தங்களிற்கு மேலாக எம்மைத் துரத்துவதற்காக இனப் படுகொலைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். நாஸிகளைப் போல இவர்களும் ஈவு இரக்கம் அற்றவர்கள். இளம் பிஞ்சுகளைக் கூட மிருகங்களைப் போல தூக்கில் இட்டுக் கொன்றுள்ளார்கள். நாஸிகளைப் போலவே சட்டதிட்டங்களையும் , இனப்படுகொலைக்குரிய இராணுவ அரசியற் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளார்கள்.

இவர்களிடம் இருந்து எம்மை பாதுகாப்பதற்குரிய இறுதி முயற்சி தான் இந்த ஆயுதப் போராட்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவினை விளங்கிக் கொண்டு கருத்தினை எழுதிய ப்ராமஸ்மி,சேகுவாரா,ஈசன் மற்றும் விரிவான விளக்க இணைப்பினை தந்த small point நூனாவிலான்,காட்டாறு ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.