Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோதல் பிரதேசத்தில் மனிதாபிமான அவலங்கள் தீர்க்கப்படும் வரை அரசுடன் பேச்சு இல்லை - தமிழ் தேசிய கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA leader R. Sampanthan says his party has decided not to meet the President for talks until the military operations in the North are suspended.

thanks daily mirror

  • கருத்துக்கள உறவுகள்

Immediate ceasefire, humanitarian access before political engagement - TNA MP

[TamilNet, Thursday, 26 March 2009, 07:48 GMT]

S. Jeyananthamoorthy, the Tamil National Alliance (TNA) parliamentarian from Batticaloa district on Thursday said that the TNA had decided not to engage in talks with the Sri Lankan President or anyone representing the SL state before a conducive environment for such political engagement is created by an immediate ceasefire and unhindered humanitarian access to the suffering people of Vanni. The TNA would clarify the reasons in detail in a press meet in Colombo, he further said, condemning the abduction of the brother of Jaffna district MP Kajendran, barely 48 hours before the TNA was to decide its position on accepting an invitation for a meeting with Sri Lankan President Mahinda Rajapaksa.

The TNA was invited by the Sri Lankan President Mahinda Rajapaksa to participate in a meeting to be chaired by him Thursday evening at 6:30 p.m. and the TNA had discussed the issue in an internal meeting on Wednesday.

Meanwhile, the fate of Mr. Raveendran Selvarajah, a lecturer of the Jaffna University and the brother of MP Kajendran, was not known. Raveendran was abducted Tuesday night in the high security area behind the parliament.

Family members of TNA parliamentarians have earlier been harassed, especially during the time of budget voting.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரிப்பு ‐ கொழும்பில் ஊடக மாகாநாடு தொடர்கிறது:

வடக்கில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியை சந்திப்பதில்லை என தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று மாலை சந்திப்பதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தாம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாமை தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் மரியாதைக்குரிய அழைப்புக்கு இணங்க அவரை தற்போது சந்திப்பதில்லை என தாம் தீர்மானித்துள்ளமை குறித்து, ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் எதிர்காலத்தில் ஜனாதிபதியை சந்திக்க மாட்டோம் என்ற அர்த்தமாகாது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடக மாநாடு மூலம் தெளிவுப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் அழைப்புத் தொடர்பாக தீர்மானிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் தீர்மானம் குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஊடக மாநாடு எங்கு நடைபெறுகிறது என்பதை கூற முடியாது எனவும் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....=7644&cat=1

வீரகேசரி இணையம் - முல்லைத்தீவில் மோதல்களில் சிக்கியுள்ள மக்களின் மனிதாபிமான அவலங்கள் தீர்க்கப்படும் வரை ஜனாதிபதியை சந்திப்பதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். சமபந்தன் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு ஜானகி ஹொட்டலில் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி இதனை தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 300,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். மோதல் இடம்பெறும் பகுதிகளில் ஷெல் தாக்குதல்களினாலும், விமானத் தாக்குதல்களினாலும் தினமும் பல பொது மக்கள் உயிரிழக்கின்றனர்.காயமடைகின்

இது சரியான முடிவா?...அரசோடு பேசி அந்த வதை முகாம்களில் இருந்தாவது மக்களை வெளியேற்ற முயற்சி எடுத்திருக்கலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சரியான முடிவா?...அரசோடு பேசி அந்த வதை முகாம்களில் இருந்தாவது மக்களை வெளியேற்ற முயற்சி எடுத்திருக்கலாமே?

"அரசோடு பேசி ........" !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்னப்பா நீ என்ன EPDP யில் இருந்து நிமலரயனை கொன்ற நெப்போலியனா ??? உனது பதில் சந்தேகத்தை உண்டாக்குது ?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சரியானதுதான் என நான் கருதுகின்றேன். ஊடகவியலாளர் மகாநாட்டில் அரசின் கபடத்தனத்தை சம்பந்தன் ஐயா வெளிப்படுத்தியுள்ளார். நன்றிகள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சரியானதுதான் என நான் கருதுகின்றேன். ஊடகவியலாளர் மகாநாட்டில் அரசின் கபடத்தனத்தை சம்பந்தன் ஐயா வெளிப்படுத்தியுள்ளார். நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு சர்வதேசத்திற்கும் பல செய்திகள் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கின்றது......

  • கருத்துக்கள உறவுகள்

மோதல் பிரதேசத்தில் மனிதாபிமான அவலங்கள் தீர்க்கப்படும் வரை அரசுடன் பேச்சு இல்லை .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு வரவேற்கத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

இது இவர்கள் எடுத்த முடிவு! இனி அ"றோ"கரா வின் நிகழ்சி நிரல் என்ன என்பதை பொறுத்தே முடிவான முடிவு அறிவிக்க படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான முடிவு!

இது சரியான முடிவா?...அரசோடு பேசி அந்த வதை முகாம்களில் இருந்தாவது மக்களை வெளியேற்ற முயற்சி எடுத்திருக்கலாமே?

என்ன பேச கூப்பிட்டு இருபான்?

புலிகளை விட்டு விட்டு எனக்கு ஆதரவு தாங்கோ கருணாவை கலைச்சு போட்டு உங்களள கவனிக்கிரேன் என்று.

"அரசோடு பேசி ........" !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்னப்பா நீ என்ன EPDP யில் இருந்து நிமலரயனை கொன்ற நெப்போலியனா ??? உனது பதில் சந்தேகத்தை உண்டாக்குது ?

அப்படிதான் சொல்லுவான் என்டு அனைவருக்கும் தெரியும்...ஆனால் மகிந்தவுடன் மக்களை வெளியே விடும்படி கேட்டு அதை மகிந்த மறுக்கும் போது..நாங்கள் விட்ட மனிதாபிமான கோரிக்கையை சிங்கள அரசு நிராகரித்து விட்டது என்று செய்யும் பரப்புரை என்னும் பலமாக இருக்கும் அல்லவா?

இப்ப அரசியல் அமைப்பு பற்றி பேசுங்கள் என்று கூறும் நாடுகளிடம் சிங்களவன் என்ன சொல்வான்?..நாங்கள் பேச அழைத்தும் அவர்கள் வரவில்லை என்பான்..இல்லாட்டி சங்கரி டக்லஸ் போன்ற தலையாட்டி பொம்மைகளிடம் ஏதாவது அடிவருடி ஒப்பந்தம் போடுவான்.

"அரசோடு பேசி ........" !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்னப்பா நீ என்ன EPDP யில் இருந்து நிமலரயனை கொன்ற நெப்போலியனா ??? உனது பதில் சந்தேகத்தை உண்டாக்குது ?

இப்படி தொட்டதுக்கெல்லாம் துரோகி பட்டம் கொடுத்ததால தான் இப்ப இவ்வளவு மாற்று கருத்து மாணிக்கங்கள் சிங்களவனுக்கு *** கழுவி விடுறாங்கள்..இன்னுமா??

  • கருத்துக்கள உறவுகள்

EPDPயில் இருந்து நிமலரயனை கொன்ற நெப்போலியனா ???

இப்படி தொட்டதுக்கெல்லாம் துரோகி பட்டம் கொடுத்ததால தான் இப்ப இவ்வளவு மாற்று கருத்து மாணிக்கங்கள் சிங்களவனுக்கு .... கழுவி விடுறாங்கள்..இன்னுமா??

அப்போ

நிமலராஐனைக்கொன்றவனுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என்று கொஞ்சம் சொல்லமுடியுமா????

கூட்டமைப்பு போய்ப்பேசினா அதையும் தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வெளிநாடுகளிடம் பிச்சை எடுப்பான் ராசப்க்ச.

ஏற்கனவே பஸ் போக அனுமதில்லலத ஏ9 க்கு யாழ்தேவி விட தண்டவாளம் போட போகிறான் இந்த ந்எபோலியன் வித்தியசமாக தீங் பன்னுகிரராம்.

அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழ்த்தேசிய அமைப்புக்கு அனுமதியில்லை கூப்பிடவும் இல்லை இப்ப யுத்தம் நடத்த காசு பிரச்சனை தமமிழ்த்தேஇச்ய கூட்டமமப்பப கூப்பிட்டு வெருட்டி காசு பறிக்கத்தான்.

EPDPயில் இருந்து நிமலரயனை கொன்ற நெப்போலியனா ???

இப்படி தொட்டதுக்கெல்லாம் துரோகி பட்டம் கொடுத்ததால தான் இப்ப இவ்வளவு மாற்று கருத்து மாணிக்கங்கள் சிங்களவனுக்கு .... கழுவி விடுறாங்கள்..இன்னுமா??

அப்போ

நிமலராஐனைக்கொன்றவனுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என்று கொஞ்சம் சொல்லமுடியுமா????

அந்த நெப்போலியனைப்பற்றி நான் சொல்லவில்லை....நான் அரசோடு பேசலாமே என்று சொன்னதும் என்னை அந்த நெப்போலியனுடன் ஒப்பிட்டட்டு நானும் அவர்களின் கூட்டமா என்ற கேள்விக்கு தான் நான் அப்படி கூறினேன்.

இது சரியான முடிவா?...அரசோடு பேசி அந்த வதை முகாம்களில் இருந்தாவது மக்களை வெளியேற்ற முயற்சி எடுத்திருக்கலாமே?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மகிந்த திடீர் அழைப்பு: நோக்கம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் ஐயம்

ஜதிங்கட்கிழமைஇ 23 மார்ச் 2009இ 07:38 பி.ப ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ

தற்போதைய நிலைமைகள் குறித்து பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். எந்த விதவிதமான முன் அறிவிப்பு எதுவும் இன்றி கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்புக் கடிதங்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் வியாழக்கிழமை (26.03.09) மாலை 6:30 நிமிடத்தில் சந்திப்பு நடைபெறும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பு குறித்து எதிர்வரும் 25 ஆம் நாள் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி ஆராயும் என்றும் அதன் பின்னரே சந்திப்பில் கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனவும் மாவை சேனாதிராஜா மேலும் கூறினார்.

இதேவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் பிரபலமான ஆங்கில பத்திரிகையான 'த ரைம்ஸ்' இதழுக்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் நிபந்தனையின்றி பேசுவதற்கு தயார் என அறிவித்துள்ளதை பிரித்தானியா வரவேற்றுள்ளதுடன் உடனடியாக பேச்சுக்கு செல்ல வேண்டும் என சிறிலங்கா அரசுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது.

இதனைச் சமாளிப்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்றும் அவர்களுடன் இனிமேல் பேச வேண்டிய தேவைகள் எதுவும் இல்லை எனவும் மகிந்த அரசாங்கம் கூறியிருந்தது. அத்துடன் கிளிநொச்சிஇ முல்லைத்தீவு போன்ற நகரங்களை கைப்பற்றிய பின்னர் தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைகளை கேலி பண்ணும் வகையிலும் மூத்த அமைச்சர்கள் கருத்துக்களை கூறியிருந்தனர்.

இந்த நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டமை குறித்து தமிழ்த் தேசியக் கூடடமைப்பு நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அரசியல் அவதானிகள் வலியுறுத்துகின்றனர்.

இதேவேளையில் முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் கடந்த சில நாட்களாக கடுமையான தாக்குதல்களை படையினருக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றனர்.

போரில் ஏற்பட்டுள்ள இந்த தற்போதைய நெருக்கடி நிலைமைகளை சமாளிப்பதற்காகவும் இந்த சந்திப்பை மகிந்த அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கலாம் என கொழும்பில் அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதே சமயம்இ தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போருக்காக 1.6 பில்லியன்களை செலவு செய்து விட்டுஇ மேலும் 1.9 பில்லியன்களை அனைத்துலக நாணய நிதியத்திடம் மகிந்த அரசாங்கம் கடன் கோரியுள்ளது.

ஆனால்இ அவ்வளவு தொகையை வழங்குவதா இல்லையா என்பது குறித்து அனைத்துலக நாணய நிதியம் தற்போது ஆராய்ந்து வருகின்றது. இதன் பின்னணியிலும் கூட்டமைப்புக்கான அழைப்பு தொடர்பில் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளையில் ஐரோப்பிய ஒன்றியம்இ அமெரிக்காஇ பிரித்தானியா போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் தமிழர் விவகாரத்தை போசுவதற்கு இணக்கம் தெரிவித்து ஏனைய நாடுகளின் ஆதரவுகளையும் கோரி வருகின்றனர்.

அனைத்துலக நாடுகளின் இவ்வாறான வேகத்தை தடுப்பதற்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கான ஒரு நாடகத்தை மகிந்த அரசாங்கம் தற்போதைக்கு ஒழுங்கு செய்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"குறிப்பாக - இனப் பிரச்சினை தீர்வு முயற்சிகளை மேற்கொள்வதற்காக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒருபோதும் அழைப்பு விடுக்கப்பட்டதில்லை என்ற விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

அத்துடன்இ கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட கட்சியும் அல்ல என்றும் மகிந்த அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே தமிழ் மக்களுக்கு எதிரான போர் தீவிரமாக முடக்கி விடப்பட்டது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் வடக்கு - கிழக்கு மற்றும் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிரான கடத்தல்இ காணாமல் போதல் போன்ற மனித உரிமை மீறல்களும்இ படையினரின் எறிகனைஇ பீரங்கி தாக்குதல்கள்இ மற்றும் வான் தாக்குதல்கள் மூலமான இன அழிப்பு நடவடிக்கைகளும் தீவிரமமைடந்து வரும் நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட காரணம் என்ன என்ற கேள்வியையும் அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பியுள்ளனர்.

அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு 107 தடவைகள் கூடியும் இன்னமும் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா படைகளுக்கு வெற்றி என்ற மாயையில் அந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு தயாரித்த அரை குறை தீர்வுத் திட்டத்தையும் மகிந்த அரசாங்கம் கைவிட்டிருந்தது என்பதையும் அரசியல் ஆய்வாளர்கள் கோடிட்டு காட்டியுள்ளனர்.

இந்த நிலையில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு மகிந்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதை சமாதான பேச்சுக்கான ஒரு ஆரம்பமாகவோ அல்லது போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களைச் செய்வதற்கான ஒரு முயற்சியாகவோ கருத முடியாது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவேஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்இ இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டுஇ நிதானமாகவும் காலத்தின் பொறுப்பு உணர்ந்தும் செயற்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர் .

நன்றி புதினம்

Edited by Senthamilalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.