Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்பேரன் தமிழ் உறவுகளின் பேரணி மீது சிங்கள காடையர்கள் கொலை வெறி தாக்குதல்! ஐவர் படுகாயம்: ஏழு வாகனங்கள் சேதம்

Featured Replies

ஐரோப்பா, கனடா, அஷ்ரேலியா, ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும், ஒன்றிணைந்து ஓர் பேரணியை அஷ்ரேலியாவில் நடத்துவதற்கு யாராவது ஒழுங்கு செய்வீர்களா? நேருக்கு நேர் சந்திப்போம்.சிங்களவனின் பிணத்தை.

  • Replies 122
  • Views 10.8k
  • Created
  • Last Reply

உணர்சிவசப்படாமல்... இப்படியான.... இன்றைய காலத்துக்கேற்ப.... மோட்டுச்சிளவன் போல் அவசரப்படாமல்.... :D அவதானித்து... அருமையாக.... புலத்து தமிழர்கள் தங்கள் போராட்டங்களை வீணடித்துவிடாமல்.... முன்னேறவேண்டும். நன்றி :lol::D

Edited by Netfriend

சகோதரா நெட்வ்ரெண்ட், நீங்கள் நீங்கள் கூறுவது சரிதான். உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன், மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையன் அவனுக்கு என்ன நடந்தாலும் நீங்கள் தான் பொறுப்பு சரியா? :D

நான் சொல்ல வந்தது அக்கா..உவன நேருக்கு நேர் மோதி கிழ அடிச்சு விழுத்துவேன் என்று..

உந்த முட்டாளை போட சொல்லி கட்டலை வந்தா போடத்தான் வேனும்.. பொறுப்பு பருப்பை ஒண்டும் பாக்க ஏலாது

Edited by kuddipaiyan26

நாங்கள் உணர்ச்சி வசப்படுவது ஆபத்தானது. சிங்கள காடையர்களின் நோக்கமே எங்களை உணர்ச்சிவசப்படச்செய்து நாங்கள் தொடர்ந்து செய்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டங்களை குழப்புவதுதான். எங்கள் கவனயீர்ப்பை காடையர்கள் நிற்கும் இடத்தில் காட்டவேண்டிய தேவை இல்லை. காடையர்களை கண்டால் நாங்கள்தான் விலகிச்செல்லவேண்டும். வேண்டுமானால் காவல்துறைக்கு அறிவிக்கலாம். எங்கள் தொடர்ச்சியான போராட்டம் சிங்கள காடையர்களுக்கு பெருத்த வலியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது எம்மவர் மீதான இன்றைய தாக்குதல் ஓர் சான்று.

நாங்கள் எங்கள் வழியில் கவனயீர்ப்பு போராட்டங்களை தொடர்வோம். இன்றும் ஸ்காபுரோவில் பாதையோர நடைபேரணி செய்தார்கள். மிகுந்த காற்று, குளிர் மத்தியில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் நாங்கள் தெருவில் நின்று, நடந்து எமது கவனயீர்ப்பை செய்தோம். வாகனங்களிலும் எங்கள் கவனயீர்ப்புக்களை அதிகரிக்கவேண்டும்.

எதிர்காலத்தில் காடையர்கள் எம்மவர் மீது தாக்குதல் நடாத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய அல்லது காடையர் தாக்குதல்களில் இருந்து நம்மவரை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞ்சன் சொல்லுவது சரி புகந்து விழையாட இதுபோர்க்களம் அல்ல நிதானமாகச்செயற்படவேண்டும்

சிறிலங்கா அரசால் நன்கு விடயங்கள் திட்டமிடப்படுகிறது என்பது நன்றாகப் புரிகிறது. முதலில் நியுசிலாந்தில் இத்தகைய சம்பவம் நடந்தது. இப்போது அவுஸ்ரேலியாவில்.

ஆத்திரமூட்டல் அதனால் ஆத்திரப்படுதல் எதிரியின் பிரசாரங்களுக்கு பெரிய வெற்றியினைக் கொடுக்கும். இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு அவர்கள்மேல் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆரம்பத்தில் சிறந்த வழி. புலம்பெயர்வாழ் தமிழர்களை குழப்பம்விளைவிப்பவர்களாகக் காட்டும் முயற்சியிது. அப்பிரதேசத்தில் வாழும் செயற்பாட்டாளர்கள் இதற்கான ஒழுங்குகளைச் செய்வார்கள் என நினைக்கின்றேன். செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில்

நாம் நன்கு சிந்திக்கவேணும்

அவர்கள் ஊர்வலம்போவது போலவும்

அதற்குள் எம்மவர் கார்களில் நுழைவதுபோலவும் படங்களிலும் காணொளிகளிலும் இருக்கிறது

எனவே அவ்வாறு எம்மவர் அவர்களது அமைதியூர்வலங்களுக்குள் நுளைந்து .....

அவர்களது கோபங்களுக்கு ஆளாகியிருந்தால்.....

இது எமக்கு சார்பாக சட்டப்படி எடுபடாது

அது சரியும் அல்ல

நமது ஊர்வலங்களுக்குள் அவர்கள் நுழைந்தால் நாம் ஆத்திரப்படமாட்டோமா????????

எனவே சம்பந்தப்பட்ட எம்மவர்களே இதற்கு உண்மயை தெளிவுபடுத்தவேண்டும்

முதலிலை என்ன நடந்தது எண்டதை சரியாக விளங்கி கொண்டு கருத்து வையுங்கோ. சிங்களவர் ஒண்டும் ஊர்வலம் போக இல்லை.

(இந்த வீடியோ உண்மையை சொல்லுது முடிந்தவர்கள் எல்லாம் தரவிறக்கி வைத்து கொள்ளுங்கோ)

ஒரு இடத்தில் வீதியோரம் கூடி நிண்று போராட்டம் நடத்தி உள்ளார்கள். அந்த வீதிகளின் வளியில் வாகனங்களில் எம்மவர்கள் பேரணி போய் உள்ளார்கள்.

Edited by பொய்கை

குகதாசன் அண்ணா... எம்மவர் வாகனங்கள் மீது அவர்கள்தான் வலியச்சென்று தாக்குதல் நடாத்தி இருக்கிறீனம். நாங்கள் பேரணிகள் செய்யும்போது சிங்களக்கடையரும் போட்டியாக பக்கத்தில வந்து நிற்கும்போது நம்மவர்கள் ஒன்றும் செய்வது இல்லை. இது வழமையான நிகழ்வு. வெள்ளை மாளிகைக்கு முன்னாலையும் இப்படி போட்டியான பேரணிகள் நடந்து இருக்கிது. ஆனால்..

மெல்பேர்னில் அவர்கள் ஒரு இடத்தில் கூடி இருக்கும்போது நம்மவர்கள் வாகனங்களில் பேரணியாக போனபோது காடையர்கள்தான் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். இதற்கு அங்கு கடமையாற்றிய காவல்துறையே சாட்சி. இதுக்கு மேலால எப்படி சட்டம் எங்களுக்கு எதிராக திரும்பும்?

  • கருத்துக்கள உறவுகள்

">

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் காத்த தமிழர்களுக்கு பாராட்டுக்கள்............ஜனநாயகநாட

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வசி இப்படி சொல்லி போட்டியள் நம்மளும் திருப்பி அடித்தால் நம்மை அல்லோ இங்க குற்றம் சொல்லுவார்கள்... அவர்களை மாதிரி நம்மளும் மோடர்களா? ஆனால் அடி வாங்கி இருக்குறார்கள்.. இதுக்கு எல்லாம் சேர்த்து குடுக்காமால இருக்க போகுறார்கள்... அதை முக்கிய விடையம்.. பொறுமையே வெற்றியின் ரகசியம் என்று சொல்லுவார்கள்..

இங்க பார்டா இப்ப அடிக்காட்டா மாத்திரம் நாங்க ஜெண்டில்மேனா? தமிழன் தனக்குள்ள தான் அடிபடுவான், மற்றவனுக்கு அடிக்கமாட்டாங்களே? சுஜி பார்த்தியளோ சிங்கள குட்டி ச்சா பெண்ணு ஒண்டு அந்த காரில இருக்கிற பதாகையை என்ன லாவகமா கிழிக்கிக்கிறாள் எண்டு, நீங்க செய்வியளா அப்படி??

பார்ப்பம் வார 11 திகதி சோமாலியா தலை நகரில பெரிய ஆர்ப்பாட்ட பேரணி, யாழ் தலைகள் கட்டாயம் போவினம், வாலாட்டடுமே... :D

இந்த நேரத்தில விமானத்திலையும் பதாதை கட்டி இழுத்து கவனயீர்ப்பு செய்ததாய் சொன்னார்கள். அதை செய்தது நம்மவரா இல்லாட்டிக்கு சிங்களவரா? இப்பிடியான நேரத்தில, சமயங்களில நம்மவர் விமானம் மூலம் பதாதையை இழுக்கிறது இன்னும் வலிமையான பிரச்சாரமாய் இருக்கும். டொரண்டோவில இப்பிடி செய்து இருந்திச்சீனம். அப்பிடிச்செய்தால் காடையரால் கல்லு எறிவதைவிட வேறு ஒண்டும் செய்ய ஏலாது.

நான் அப்படி சொல்ல வில்லை டாக்கிளஸ் நம்மளும் அவர்களை போல மோட்டு தனமாய் ஏன் இறங்கணும் புத்திசாலித்தனமாய் உணர்ச்சி வச படமால் இருப்பது இப்பதை நிலைக்கு நல்லம்... நான் தமிழன் தமிழனுக்கு உள்ளதான் அடிபடுவான் என்று சொன்னனா>? வடிவாய் பாருங்கோ.... இது ஒரு நல்ல சந்தர்ப்பம் புத்திசலித்தன்மாய் செயல் பட்டால் எங்கள் பக்கம்தான் வெற்றி நிச்சையம்... அவர்கள்தான் பண்ணுவார்கள் என்று இல்லை எங்கள்ள பெண்களும் பண்ணுவார்கள்.. ஏன் நான் மற்றவர்களை சொல்லணும் நான் பண்ணுவன்... அதுதான் லண்டனில் நடக்கிற கூட்டத்துக்கு வந்து பாக்கட்டும் தோலு உரிந்துதான் போகும்... பெண்கள் நாங்களே சமாதி கட்டி விடுவம்...

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பம் வார 11 திகதி சோமாலியா தலை நகரில பெரிய ஆர்ப்பாட்ட பேரணி, யாழ் தலைகள் கட்டாயம் போவினம், வாலாட்டடுமே... :D

என்ன சொல்ல வாறிங்கள்

இந்த வீடியோவில் தாக்குதலுக்கு உட்பட்ட கார் எனது நண்பருடையது.தாயாரும் அதில் இருந்தார்.இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது ஆனால் இதுவெல்லாம் நமது நன்மைக்கே ஏன் எனில் வேற்றின மக்களிடம் யார் வன்முறையாளர்கள் என சிங்களவர்கள் காட்டிவிட்டார்கள்.

நாம் முதல் தொகுதியில் சென்றமையால் தாக்குதலுக்கு உள்ளாக வில்லை ஆனால் எமது இந்த மகிழூந்து போராட்டம் முழு வெற்றியை தந்தது.சிங்கள பேரினவாதிகளின் முகத்திரையை கிழித்தது அவுஸ்திரேலியர்கள் கையசைத்தும் கோர்ன் அடித்தும் எமக்கு முழு ஆதரவை தந்தார்கள்.ஏமது செய்தி சாதாரண அவுஸ்திரேலியருக்கு போய் சேர்ந்தது மட்டுமல்ல சிங்கள காடையரின் முகத்திரையும் கிழிக்கப்பட்டது.

melbourne_20090404009.jpg

மேலே இருக்கும் வாகனத்தில் இருக்கும் படத்தினை அச்சடிக்க சென்றபோது அச்சக உரிமையாளரான அவுஸ்திரேலியர் எம்மிடம் விடயங்களை வினாவினார்.நாமும் விளக்கங்களை கொடுத்து மெல்பேர்ன் தமிழ் இளையோர் அமைப்பு தயாரித்த இறுவட்டீனையும் போட்டு காட்டினோம்.அதனை பார்த்து மனம் வெந்த அந்த நல்லவுள்ளம்.தனது முழு வேலையையும் தள்ளி வைத்து தனித்தனியாக கொடுத்த படங்களை ஒன்றாக்கி மக்களை கவரும் வண்ணம் மேலுள்ள பனரினை வடிவமைத்து இரவோடு இரவாக அச்சடித்து தந்தது மட்டுமல்ல தன்னாலான உதவியாக 100 டொலர்களை ஈழத்தில் அவலப்படும்குழந்தைகள் நலனுக்காக செலவளிக்க அனுப்பி வைக்குமாறு கையளித்தார்.

வானில் படுகொலையை நிறுத்து என்ற வாசகத்துடன் விமானம் வலம் வந்து புற நகர் மக்களையும் நகர் மக்களையும் கவனிக்க வைத்தது அதுமட்டுமல்ல நான் முன்பின் அறியாத ஒருவர் வேலைத்தளத்தில் என்னை இலங்கையை சேர்ந்தவனா என கேட்டு தான் விமானத்தையும் பார்த்ததாகவும் வாகன தொடரணியையும் பார்த்ததாகவும் கூறி எமக்கு நியாயம் கிடைக்க தன் சமூகமாகிய அல்பேனிய சமூகம் ஊடாக அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.இது எமது போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதுகின்றேன்

100 கார்களுக்கு மட்டும் அனுமதிகிடைத்திருந்தது நாம் தாக்கப்பட்டிருகின்றோம் என அறிந்த எமது உறவுகள் பெருமளவில் நாம் ஊர்வலம் முடிக்கும் இடத்தில் கூடி கரகோசம் செய்து எம்மை வரவேற்றபோது எமது தொடரணி தாக்கப்பட்டதை மறந்து உணர்சிவசப்பட்டு இளையோரான எமக்கு எமது உறவுகள் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் கண்டு பேரானந்தமடைந்தோம்

இந்த வன்முறை சம்பவம் எம்மை நிறுத்தி விடப்போவதில்லை எம்மை மேன்மேலும் உற்சாகமூட்டி இருகின்றது.எம் உறவுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி எம்மை மேன்மேலும் ஒற்றுமை படுத்தி இருகின்றது.இனி மெல்பேன் வாழ் தமிழ் இளையோராகிய நாம் இன்னும் வீறு கொண்டு எழுவோம்.பல்சமூகத்தையும் ஒருங்கிணைத்து தொடர்போராட்டங்களை நடத்தி எமது மக்களின் விடுதலைக்கான முழு வேலைப்பாடுகளையும் செய்வோம் என்பது மட்டும் உறுதி.

யாரும் நாம் தாக்கப்பட்டதை அறிந்து கவலைபடவோ கோவப்படவொ தேவையில்லை ஏன் எனின் இந்த தாக்குதலானது எமக்கு சாதகமான விடயங்களையே பெரும்பாலும் உருவாக்கி இருகின்றது.நாம் அணுகியும் திரும்பி பார்காத ஊடகங்கள் இந்த தாக்குதலின் பின்னர் எம்மை தாமாகவே அணுகி இருகின்றது.இந்த தாக்குதல் ஊடகங்களையும் எம்மையும் வலுவாக ஒன்றாக்கி இருகின்றதை மட்டும் எம்மால் உணர முடிகின்றது

இந்த நேரத்தில விமானத்திலையும் பதாதை கட்டி இழுத்து கவனயீர்ப்பு செய்ததாய் சொன்னார்கள். அதை செய்தது நம்மவரா இல்லாட்டிக்கு சிங்களவரா? இப்பிடியான நேரத்தில, சமயங்களில நம்மவர் விமானம் மூலம் பதாதையை இழுக்கிறது இன்னும் வலிமையான பிரச்சாரமாய் இருக்கும். டொரண்டோவில இப்பிடி செய்து இருந்திச்சீனம். அப்பிடிச்செய்தால் காடையரால் கல்லு எறிவதைவிட வேறு ஒண்டும் செய்ய ஏலாது.

நாம்தான் செய்திருந்தோம்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நடந்திருக்கு, நான் இப்போதுதான் பார்த்தேன். இந்தத் தாக்குதல் சம்பவம் எமக்கு நல்லதுதான். சிங்களக் காடையர்களின் சுயரூபத்தைக் காட்ட எமக்குக் கிடைத்த நல்ல ஒரு சந்தர்ப்பம். இதில் நாமும் திருப்பித் தாக்கியிருந்தால் எம்மையும் அந்த காட்டேறிகளைப்போலத்தான் பார்த்திருப்பார்கள். ஆனால் காயப்பட்ட சகோதரர்களுக்கு எனது அனுதாபங்கள்.

சிறிது சிறிதாக புலம்பெயர் நாடுகளில் தமிழர் கட்டிவரும் எமது போராட்டம் தொடர்பான நியாயம் இதுபோன்ற தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பதன் மூலம் இல்லாமல்ப் போய்விடக்கூடாது. ஏனென்றால் சிங்களவன் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.

ஆகவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் இந்தத் தாக்குதல் சம்பந்தமான செய்திகளையும், படங்களையும் முடிந்தவரை எல்லோரும் அறியும்படி செய்வதுதான்.

தாக்குதலுக்கான பதிலடியை தனித் தனியாகப் பார்த்துக்கொள்ளலாம். தாக்கியவர்கள் யாரென்று தெரிந்தால் தனியே மாட்டுப்படும்போது சாத்த வேண்டியதுதான். அது வெளியே தெரிய வாய்ப்பில்லை.

இதில்

நாம் நன்கு சிந்திக்கவேணும்

அவர்கள் ஊர்வலம்போவது போலவும்

அதற்குள் எம்மவர் கார்களில் நுழைவதுபோலவும் படங்களிலும் காணொளிகளிலும் இருக்கிறது

எனவே அவ்வாறு எம்மவர் அவர்களது அமைதியூர்வலங்களுக்குள் நுளைந்து .....

அவர்களது கோபங்களுக்கு ஆளாகியிருந்தால்.....

இது எமக்கு சார்பாக சட்டப்படி எடுபடாது

அது சரியும் அல்ல

நமது ஊர்வலங்களுக்குள் அவர்கள் நுழைந்தால் நாம் ஆத்திரப்படமாட்டோமா????????

எனவே சம்பந்தப்பட்ட எம்மவர்களே இதற்கு உண்மயை தெளிவுபடுத்தவேண்டும்

எமது இந்த ஊர்வலம் 2 மாதங்களுக்கு முன்னம் தீர்மாணிக்கப்பட்டு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டது நாம் அவர்களின் ஊர்வலத்துகுள் செல்லவில்லை அவர்களே நமது ஊர்வலத்துக்குள் வந்தார்கள் விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி ஈழவன். உங்கள் செயற்பாடுகள் பாராட்டுதலுக்குறியவை. நீங்கள் பொறுமை காத்தது நல்ல விடயம் தான். எமக்குச் சாதகமான வழியில் இந்தத் தாக்குதலைத் திருப்பியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சி வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சிங்களக் காடைத்தனத்தை நாடே அறியச் செய்தமைக்கு நன்றி !!

இதில் என்ன பகிடி... எண்டா அந்த சிங்களகாடயர் எடுத்த ஒளிக்காட்சிகளே.... அவர்களது அறிவுக்கு வைத்துவிட்டது ஆப்பு :D:wub::lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அரசு எவ்வழி! குடிகள் அவ்வழி! No Comments

வீடியோ இணைப்புக்கு

Edited by forlov

தகவல்களுக்கு நன்றி ஈழவன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெற்றியின் பின்னணியில் உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்!

மோட்டுச்சிங்களவனின் திட்டங்கள் தமிழ் இளைஞோரின் பொறுமையினால் சிதறிக்கப்பட்டுள்ளது.

நாம் காடையர்களாக மாறினால் அதன் பிரதிபலிப்பு எப்படியென்று ஏதோவொரு காலகட்டத்தில் சிங்களவனுக்கு தெரிவிக்கவேண்டும்.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.