Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன்; அது அவர்களின் அன்னை பூமி!: ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார் :unsure::unsure: .

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய இராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார்

என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?.

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய இராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய இராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய இராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தது.

வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை இராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை.

இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை இராணுவம் இந்திய இராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை இராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய இராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.

இந்தியாவில் இலங்கை இராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்ச.

இலங்கை இராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.

பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் இராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?.

இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?.

வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே!

எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான்.

தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம்.

இன்று அதிகாலை 4:00 மணியில் இருந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 6:00 மணி நேரம் நடைபெற்ற அந்தக் கொடூரத் தாக்குதலை இந்த உண்ணாவிரத நாடகம் உலகின் பார்வையில் இருந்து மறைத்துவிட முடியாது.

மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது.

மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சவின் இராணுவச் செயலாளர் கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார்.

இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கோத்தப்பாய ராஜபக்ச கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது.

இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னதைப் பற்றி காங்கிரஸ் மத்திய மந்திரி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில்சிபில், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார்.

கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே!

இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது. கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது.

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம்.

இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்? இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார் அவர்.

http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO2a030Mt3e

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்திய இண்டு புல்லா வாசிக்கனும் போல இருக்கு..

என்ன துனிவு என்ன துனிவு அம்மாக்கு..

தாயே நீ 100 வருசம் நல்லா இருப்பாய்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கும் ஐயாவுக்கும் நடக்கும் கலகத்தில் ..........நமக்கு நீதி கிடைத்தால் சரி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா என்ன இப்படிமாறிட்டா ஆனால் கலஞ்சரும் விடுறதில்ல எண்டு போட்டிக்கு உண்ணாவிரதம் என்டு நாடகம் ஆடிற்றார் இனி?

தமிழ்நாட்டு மக்கள் தேர்தலை புறக்கணிக்காது வாக்களித்தால் காங்கிரஸ் கூட்டணி மன்கவ்வும்......இல்லையேல் தமிழர்கள் மன்கவ்வுவார்கள்.....

பூகோள அரசியல் மாற்றங்கள் தமிழர்க்கான நல்லஒரு தீர்வை எதிர்நோக்கியுள்ளன...

நிகழும் அரசியல் மாற்றம் மற்றும் ராஜதந்திர நகர்வுகளின் அடிப்படையில் நாம் இன்று ஜெயலலிதா கூட்டணியை நம்பியே ஆக வேண்டிய சூழ்நிலையிலுள்ளோம்..... அதுவே எம்போரட்டதிர்க்கு ஒரு பக்க பலமாக இருக்கும்...

தமிழ்நாட்டு மக்களின் புலிகளுக்கான தார்மீக ஆதரவு வலுப்பெருவதையும், சர்வதேச அரங்கில் ஏற்ப்பட்டு வரும் மாற்றத்தினையும் சரியாக புரிந்து கொண்டுள்ளார் என்பதியே அவரது தமிழீழ திடீர் ஆதரவு சுட்டி நிற்கிறது....

ஜெயலலிதாவின் வாக்குறுதியை நம்பி தமிழர்கள் வாக்களிப்பர்கலேயானால், மத்திய அரசில் அவரது செல்வாக்கு நிலைகொல்லுமானால், எமக்கான ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆதரவுக்குரல் முழுமையாக எமை வந்தடையும். புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு தமிழீழத்திற்கான வரைபுகள் சுழியோடிச்செல்லும்...என்பது எனது தாழ்மையான கருத்து.

பொறுத்திருப்போம் கலைஞரின் அடுத்த நாடகம் அரங்கேறும் வரை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா சொல்லுறதில அரைவாசி செய்தாலே பெரிய புண்ணியம்....

இல்லை கேக்கிறன் தேர்தல் நாட்கத்துக்குற்ற்தான் அம்மா இப்படி சொல்லுறா எண்டு வைச்சாலும் .... யாரவது வாழ்கையில எதிர்பார்தேநீங்கள அம்மா இப்படி அறிக்கை விடுவா எண்டு.... என இன்ருந்தாலும் அம்மாவுக்கு மண்டைய கொஞ்சம் உரைக்க வச்ச ரவிசங்கர் ஐயாவுக்கு நன்றி சொல்ல வேணும்...இனி அவரை இலங்கை மண்ணில கூட 'புக்ஸா' குடும்பம் கால் பதிக்க விடாது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'ஜெ" அம்மா,

இதை நீங்கள் செய்தீர்களானால் எம்.ஜி.ஆரின் ஆத்மா உங்களை வாழ்த்தும்.

தேர்தலுக்கான வெறும் வாக்குறுதியாய் இல்லாமல் அதை செயலுறுதியிலும் காட்டினால்!!!

"ஜெயிற்கு 'ஜே! ஜே"! சொல்வோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'ஜெ" அம்மா,

இதை நீங்கள் செய்தீர்களானால் எம்.ஜி.ஆரின் ஆத்மா உங்களை வாழ்த்தும்.

தேர்தலுக்கான வெறும் வாக்குறுதியாய் இல்லாமல் அதை செயலுறுதியிலும் காட்டினால்!!!

"ஜெயிற்கு 'ஜே! ஜே"! சொல்வோம்.

தமிழ்தங்கை அக்கா

அம்மாக்கு நீங்கள் 'ஜே! ஜே"! மட்டும் தான் சொல்லுவிங்கள் .. நான் அப்படி அல்ல.. அம்மாக்கு என்ர ஊரில பெரிய ஒரு சிலையே வைப்பேன்

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

jeya_20090427001.jpg

jeya_20090427002.jpg

jeya_20090427003.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எது நடக்கணுமோ

அது சரியாகவே நடந்தது

எது நடக்கணுமோ

அதுவும் சரியாகவே

நடக்கிறது

எது நடக்கவேணுமோ

அதை மட்டும் நாம் செய்வோம்

இல்லையேல்

எவர் ஆதரித்தாலும்

அழிக்கப்படுவோம் நாம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எது நடக்கணுமோ

அது சரியாகவே நடந்தது

எது நடக்கணுமோ

அதுவும் சரியாகவே

நடக்கிறது

எது நடக்கவேணுமோ

அதை மட்டும் நாம் செய்வோம்

இல்லையேல்

எவர் ஆதரித்தாலும்

அழிக்கப்படுவோம் நாம் :unsure: ......[/b]

விசுக்கு அங்கில்..

நம்பிக்கை தான் வாழ்க்கை..

அம்மா மேல நம்பிக்கை வையுங்கோ எல்லாம் நல்ல மாரி நடக்கும்.. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுக்கு அங்கில்..

நம்பிக்கை தான் வாழ்க்கை..

அம்மா மேல நம்பிக்கை வையுங்கோ எல்லாம் நல்ல மாரி நடக்கும்.. :unsure:

குட்டிப்பையா,

தலைவரைத்தவிர வேறு யார் மீதும் நம்பிக்கை இல்லை.

அனைத்துமே சாத்தியம் அரசியலில் மாத்திரம்.."கைக்கு வர முன்னே நெய்க்கு விலை பேசேல்"!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த தலைவி

மதிப்புமிக்க புரட்சித்தலைவி அவர்கள்

ஏனெனில் எதுவாக இருந்தாலும் தயங்காது சொல்லும் அந்த துணிச்சல் மக்க தலைவர்கள் இன்று இந்தியாவுக்கு தேவை.

அதேநேரம் அவர் தமிழீழம் வாங்கித்தருவார் என்றுவிட்டு நாம் தூங்குவோமானால்

அவரால் மட்டுமல்ல

இறைவனாலும் எம்மைக்காப்பாற்றமுடியாமல் போய்விடும்

ஏனெனில் எதுவாக இருந்தாலும் தயங்காது சொல்லும் அந்த துணிச்சல் மிக்க தலைவர்கள் இன்று இந்தியாவுக்கு தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கையை வாசித்து , நீங்கள் எக்கச்சக்கமாக சந்தோஷப் படுகிறதை நினைக்க எனக்கு கவலையாக கிடக்குது .

எதுக்கும் தேர்தல் முடியுமட்டும் கொஞ்சம் பொறுங்கோவன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையா,

தலைவரைத்தவிர வேறு யார் மீதும் நம்பிக்கை இல்லை.

அனைத்துமே சாத்தியம் அரசியலில் மாத்திரம்.."கைக்கு வர முன்னே நெய்க்கு விலை பேசேல்"!

எனக்கும் அம்மா மேல முந்தி நம்பிக்கை இல்லை..

இப்ப அவா தன்னை கொஞ்சம் மாற்றிட்டா..

பொறுத்து இருந்து பாப்போம் என்ன நடக்குது என்று..

குள்ள நரி யோட ஒப்பிடேக்க :unsure: இவா எவலவோ நல்லவா :unsure: ..

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தங்கை அக்கா

அம்மாக்கு நீங்கள் 'ஜே! ஜே"! மட்டும் தான் சொல்லுவிங்கள் .. நான் அப்படி அல்ல.. அம்மாக்கு என்ர ஊரில பெரிய ஒரு சிலையே வைப்பேன்

கோடான கோடி தமிழர்கள் உங்களை தெய்வமாக குப்பிடுவார்கள்.தமிழின தலைவி என்று வரலாற்றில் அடையாளம் காட்டப்படுவீர்கள்

(ஒரு தறுதலை தன்னை தானே தமிழின தலைவன் என்று அழைத்துக்கொண்டு இருக்கு,இப்ப)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அறிக்கையை வாசித்து , நீங்கள் எக்கச்சக்கமாக சந்தோஷப் படுகிறதை நினைக்க எனக்கு கவலையாக கிடக்குது .

எதுக்கும் தேர்தல் முடியுமட்டும் கொஞ்சம் பொறுங்கோவன் .

உண்மைதான் ஸ்ரீ அவர்களே!...

இந்திய அரசியல் வாதிகளை எப்படி நம்புவது?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோடான கோடி தமிழர்கள் உங்களை தெய்வமாக குப்பிடுவார்கள்.தமிழின தலைவி என்று வரலாற்றில் அடையாளம் காட்டப்படுவீர்கள்

(ஒரு தறுதலை தன்னை தானே தமிழின தலைவன் என்று அழைத்துக்கொண்டு இருக்கு,இப்ப)

அது பழைய கதை..

அவர் தமிழினத் தலைவர் இல்லை. தமிழ் இனத்தை அழிக்க வந்த கொலைக்காரன் :unsure:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ கொள்கையை புலிகள் இனி கைவிட்டாலும். ஜெயலலிதாவும் கருணாநிதியும் விடமாட்டார்கள் போல் உள்ளதே?

என்ன அரசியல் சாணக்கியமப்பா? உட்கார்ந்திருந்து யோசிப்பாங்களோ?

ஒவ்வொரு நாளும் நாம் மட்டும் உறவுகளை பறிகொடுத்து கொண்டிருக்கிறோம். மரணங்களுக்கு அழுவதையே மறந்துவிட்டோம். உலகத்தில் புரிந்து கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் எத்தனை இருக்கின்றது?

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் என்பார்கள். நாம் எமது பலத்தை நிர்ணயிக்க ஒன்று கூட மறுத்துவிட்டோம். சுனாமிக்கு 22 000 ஆயிரம் பேரை அள்ளி கொடுத்த நாங்கள். போராட்டம் என்றவுடன் ஓடி ஒளித்துவிட்டோம்.

சுயநலம் தலைக்கேறியதால் எங்களின் பிள்ளைகளின் காலத்து வாழ்வும் ஏக்கத்துடன்தான் என்பதே தெளிவு. இப்போது வீதியில் இறங்கியிருக்கும் இளையவருடன் கூடி முன்பு விட்ட தவறை உணாந்து இளையவருக்கும் அதை உணர்த்தி நாம் ஒன்று கூடி போராடினால் மட்டுமே. எமது பிள்ளைகளின் பிள்ளைகளாவது வாழ்வது பற்றி சிந்திக்க முடியும்.

அது பழைய கதை..

அவர் தமிழினத் தலைவர் இல்லை. தமிழ் இனத்தை அழிக்க வந்த கொலைக்காரன் :unsure:

ஜெயை ரொம்ப புகளாதீங்க. காங்கிரஸ் கருணாநிதியுடன் கூட்டை முறித்து ஜெயுடன் கூட நாளை ஒட்டலாம்.

அந்த நிலைமை எண்ணியும் பார்க்க முடியாது. இந்திய அரசியலில் மனிதர்கள் பேசுவதில்லை. பணம் மட்டுமே பேசும் திறன் உடையது.

தமிழரால் தொடங்கப்பட்ட போராட்டம் எங்கெல்லாம் சிதறடிக்கப்படுகிறது. எங்கள் சிந்தனைகள் எங்கோ நோக்கி இழுக்கப்படுகிறது. தமிழீழத்திற்கு ஆதரவான சக்திகள் தேவை. அதற்காக அவர்களே தமிழீழத்தை அமைத்துத்தருவேன் என்ற விடயத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது.

ஜெயலலிதாவின் மாற்றம் தேவையானதுதான். அதுவே எல்லாம் என்றாகிவிடக்கூடாது.

மறுபடியும் அம்மா வாழ்க!! :unsure:

என்ன கொடுமை ஐயா இது....நாங்க என்னுமா தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை நம்பிறம்....ஒரு தேச விடுதலை என்பது என்ன chocolate ஆ? சின்ன பிள்ளைகள் மாதிரி அப்பா (கருநாநிதி) வாங்கி தராட்டி அம்மா (ஜெயா) வாங்கி தருவா என்டு இப்படி துள்ளுறிங்கள்..........தலைவர் இவ்வளவு கஸ்டப்பட்டது எங்கட மரமண்டைகளுக்கு அரசியல் அறிவு வரவேண்டும் என்டுதானே?...ஏன் என்னும் நாங்கள் அடி முட்டாளா இருக்கிறம்????...நினைக்கவே கவலையா இருக்கு....

ஜெயா chocolate (ஈழம்) வாங்கி தருவா என்டு கனவு காணாம எங்கட தலைவரின் கரத்தை பலப்படுத்துவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுபடியும் அம்மா வாழ்க!! :o

வசி நீங்க உங்கட அம்மாவை தானே சொன்னிங்க :(

ஜெயாலலிதா அவர்கள் இப்ப சொல்வதெல்லாம் செய்வாரா என்று கூறமுடியவில்லை ஆனால் எமது போராட்டத்தில் அவரின் பங்கு குறிப்பிடத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்

நம்புங்கோ அல்லது நம்பாமல் விடுங்கோ.ஆனால் இது ஒரு நல்ல திருப்புமுனை தயவு செய்து அதை கெடுத்துப்போடாதையுங்கோ.

இதுதான் கலிகாலமா? அல்ல து கிலி காலமா?

அம்மா ஒரு புரட்சி தலைவியென்று முன்னர் சொன்ன போது நான் நம்பவில்லை... இதை அம்மா செய்வாராக இருந்தால் ஆயிசுக்கும் அம்மாவை யாரும் அசைக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.